பால் கறந்து விற்பதற்காக கழுதைகளுடன் திருச்சி தெருக்களில் சுற்றும் நாடோடிக்
கூட்டம்
“பொதி சுமக்கும் கழுதை”, “அறிவு கெட்டக் கழுதை”, “கழுதைக்குத்
தெரியுமா கற்பூர வாசனை?”, “கழுதை கெட்டால் குட்டிச் சுவரு” என்றெல்லாம் கழுதைகளை ஏளனமாகப் பேசி, ஒரு
காலத்தில் எள்ளி நகையாடிய பலரும், இப்போது, ஆந்திரா, கர்நாடகா மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில், நெல்லை, திருச்சி, கடலூர், விருத்தாச்சலம், போன்ற இடங்களிலும், ஏன் சென்னையிலும் கூட
கழுதையின் பால் வேண்டி அலைகின்றார்களாம். கோவை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் கழுதைப்பால்
வேண்டி அதிகாலை 5 மணிக்கு 100/200 ருபாய் (ஒரு லிட்டர் ரூ 200, ரூ 300, 100மில்லி பால் ரூ 20) பணத்தையும், பாத்திரத்தையும் கையில்
பிடித்துக் கொண்டு கழுதையின் வரவுக்காக வழி மேல் விழி வைத்துக்
காத்திருக்கின்றார்களாம். காலை, மாலை இரு வேளைகளிலும் கிராக்கியாம்!
என்
சிறு வயதில், கிராமத்தில், துணி மூட்டைகளைச் சுமந்து செல்லும் கழுதைகளைக்
கண்டிருக்கின்றேன். பள்ளிக்குச் செல்லும்
போதும், திரும்ப வரும்போதும் காது செவிடாகும் விதம் கத்தும் (முன் அல்லது பின்
கால்கள் கட்டப்பட்ட) கழுதைகளைக் கண்டிருக்கின்றேன். மாடுகளுக்கு அருகே சென்றால் கொம்பால் குத்தும்
என்பதால், மாடுகளைக் கண்டால் தூர விலகுவேன். அது போல கழுதைகளுக்கு அருகே சென்றால்
பின் கால்களால் உதைக்கும் என்று சொல்லிக் கேட்டதால், கழுதைகளின் பக்கமே
சென்றதில்லை.
ஆனால், கழுதைகளைக் காணும் போது ஏதோ ஒரு அருவறுப்பு. அதன் முகத்தைப் பார்த்தால் எப்போதும் ஒரு சோக
மயம். (இந்த இடுகையை நான் கீதாவிடம் டிக்டேட் செய்யும் போது, இப்படி நான் கழுதையைப்
பற்றிச் சொன்னவுடன் கீதாவுக்கு வந்ததே கோபம். நான், “கீழே வரும் வரிகளைப்
பார்த்துவிட்டுச் சொல்” என்பதைக் காதில் வாங்காமலேயே என்னுடன் மோதாத குறைதான்.....அதெப்படி கழுதையை இழிவாகச் சொல்லுவாய் என்று!....கீதாவின்
மகன் ஆதித்யா கேட்டிருந்தால் கண்டிப்பாகச் சண்டைக்கே வந்திருப்பான். கீதாவும், 'ஆதித்யாவிடம் போட்டுக் கொடுக்கின்றேன்' என்ற வசனம் வேறு! கீதாவிடமிருந்து சூடான
பதில் உறுதி! ஆதியும் அங்கு, அங்கிள் ஓவரா
போறீங்க என்று சொல்லக்கூடும்!) மற்ற
மிருகங்களைப் போல் சுறு சுறுப்பு இல்லாத ஒரு மிருகம் கழுதை என்பதால்தானோ என்னவோ,
ஆசிரியர்களும், படிக்காத, சுறுசுறுப்பு இல்லாத மாணவர்களைக் கழுதை என்று சொல்லும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருப்பார்கள் போல் தெரிகின்றது. ஆனால், உண்மையில்
கழுதைகள் மிகவும் புத்திசாலியானவை, மட்டுமல்ல கழுதைக்கு ஞாபக சக்தி மிகவும்
அதிகம். கழுதை பிடிவாதம் மிக்கவை. அதை
எளிதாகப் பயமுறுத்த முடியாது. எச்சரிக்கை உணர்வுமிக்கவை என்பதுதான் உண்மை! ஒரு முறை சபரிமலை சென்றபோதுதான், கழுதைகளின்
உழைப்பு எத்தனைப் பாராட்டிற்குரியது என்பதை உணர்ந்தேன். (ஹப்பாடா, கீதாவுக்கு இதைக் கேட்டதும் மகிழ்ச்சி! ஆதித்யாவும் இதை வாசிக்கும் போது மிகவும் மகிழ்வான்!).
பம்பையிலிருந்து எல்லாப் பொருட்களையும் சில
வருடங்களுக்கு முன்பு வரை சபரி மலைக்கு சுமந்து சென்றவைகள் கழுதைகள் தான். ஆனால், யாருமே கழுதைகளின் உழைப்பைக் கண்டு
கொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான், “மாடாய் உழைக்கிறான்” என்பவர்கள், “நீயெல்லாம்
கழுதை மாதிரி பொதி சுமக்கத்தான் லாயக்கு” என்று, ஈவு இரக்கமின்றியும், சிந்திக்காமலும்
சொல்கின்றார்கள். இருப்பினும், சிலர்
கழுதைகளின் இந்தத் துயரத்தை புரிந்து கொண்டதால்தானோ என்னவோ கழுதைகளுக்காக வாதிட்டு,
சபரி மலை ஏறும் கழுதைகளை அந்தக் கடினமான பணியில் இருந்துக் காப்பாற்றி
இருக்கின்றார்கள். இப்போது கழுதைகளுக்குப் பதிலாக சபரி மலைக்கு பொருட்களை ஏற்றிச்
செல்ல, ட்ராக்டர்கள் உபயோகிக்கப்படுகின்றன.
அப்படி வேலை வாய்ப்பு இழந்த கழுதைகளில்
பெண் கழுதைகளுக்கு நல்ல காலம் பிறந்திருக்கின்றது. மருத்துவ குணம் உள்ள கழுதைப்
பால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் நல்லது என்ற உண்மை திடீரென
எல்லோருக்கும் தெரிய வந்தது தான் காரணம். உலகப் பேரழகி ஆன கிளியோபாட்ரா கழுதைப் பாலில்தான்
குளிப்பாராம். கழுதைப் பால் சொறி, சிரங்கு, பொடுகு, தேமல், இருமல்,
சளி, மஞ்சள் காமாலை போன்ற பல்வேறு வியாதிகள்
வராமல் தடுக்கும் என்றும், குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வயிறு மந்தம், சூடு, ஜுரம், சளி, இருமல், ஆஸ்துமா போன்ற வியாதிகள் கழுதைப் பாலால்
குணமாகும். பிறந்த குழந்தைக்கு ஒரு பாலாடை கழுதைப் பால் கொடுத்தால் அதன் எதிர்ப்பு
சக்தி வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்று சொல்லப்படுவதாலும், நம்பப்படுவதாலும் அது
பிரபலமாகியுள்ளது.
கழுதைப்பால் கறந்தவுடன் ஒரு நிமிடத்திற்குள்
குடித்துவிட வேண்டுமாம். அதனால்தானோ
என்னவோ, கழுதைப் பால் என்று சொல்லி
ஏதேனும் பாலைக் குடிக்க விரும்பாத, ஏமாறத் தயாராக இல்லாதவர்கள் அதிகாலை 5 மணிக்குக்
கையில் பணம் மற்றும் பாத்திரத்துடன், தன் கண் முன்னால் கழுதையைக் கொண்டுவந்து
நிறுத்திப் பால் கறந்து தரும் கழுதை உரிமைக்காரர்களுக்காகக் காத்திருக்கின்றார்கள்.
இப்படிக் கழுதைகளுக்கு நல்ல காலம் பிறந்ததை நினைக்கையில் “Every Dog has its day” என்பதற்குப்
பதிலாக “Every donkey has its day- JENNEY/JENNET NOT JACK” என்று சொல்ல
வேண்டும் என்பது போல் தோன்றுகிறது. எனவே, இனி கழுதையை இழிவு செய்யும்
கண்மூடித்தனத்தை ஒழிப்போம்!
நன்றி : படங்கள் - தி ஹிண்டு, தினகரன், கூகுள்
எங்களுக்கும் காலம் வரும்
பதிலளிநீக்குகாலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே....
நிறைய தகவல்கள் அறிந்து கொண்டோம்....நன்றி சகோஸ்
மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!
நீக்குதுளசி சார், தலைப்பைப் பார்க்த்தவுடன், ஏதோ ஒரு அனுபவ பகிர்வை தான் சொல்லப்போகிறீர்கள் என்று நினைத்தேன்.
பதிலளிநீக்குசிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று சொல்கிற மாதிரி, கழுதைகளாலும் நிறைய பயன் இருக்கு. உண்மை தான் - அது தன்னால் முடிந்த வேலையை செய்கிறது. அப்படியிருக்க ஒன்றுக்கும் பிரியோஜனம் இல்லாதவர்களை கழுதைகளோடு ஒப்பிட்டு திட்டி அவைகளை கேவலப்படுத்துகிறார்கள்.
ஆம்! நண்பரே! கழுதைகளும் மிக நல்லவையே நாம்தான் அதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றோம்! மிக்க நன்றி!
நீக்குபல வருடங்களுக்கு முன்னரே கழுதைப் பால் தமிழக கிராமங்களில் குழந்தைகளுக்குக் கொண்டுக்கப் பட்டதுண்டு. அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன் - எனது அக்கா கிராமத்தில் பிறந்ததால் அவருக்கு கழுதைப் பால் கொடுத்ததாகச் சொல்லி இருக்கிறார்! :)
பதிலளிநீக்குகாலம் என்றாவது மாறும் என்ற நம்பிக்கையோடு கழுதைகளும் இருந்திருக்கும்!
ஹாஹாஹஹஹ் கழுதைகளும் காத்திருந்திருக்கலாம்....கிராமங்களில் கொடுப்பதுண்டு என்று கேட்டதுண்டு!
நீக்குமிக்க நன்றி வெங்கட் ஜி!
p
பதிலளிநீக்குபடியுங்கள் ஏற்கனவே கழுதைகளின் நாள் வரலாற்றில் உள்ளது ...தோழர் சிரித்துக்கொண்டே படித்தேன்...
ஒருகாலத்தில் நிறய கழுதைகள் அலையும் இனி ...
மீண்டும் அக்காலம் வரும் என்று தோன்றுகிறது..
p
கொஞ்சம் புதிய அறிவியல்(5) ...
மிக்க நன்றி நண்பரே! ஆம் கழுதைகள் அலையும் காலம் நெருங்கிவிட்டதோ!!!
நீக்குஉங்களில் யாரு கழுதைப்பாலில் குளித்தது உண்மையை சொல்லுங்க
பதிலளிநீக்குதமிழா ஹாஹ்ஹஹஹஹஹ் கழுதைப் பால் விற்கும் விலையில் நாங்கள் குளிப்பதாவது!!!! ஆனா தண்ணி கூட அந்த விலை தானோ??!!!! குளிச்சதெலாம் கிளியோபாட்ரா தான்...நாங்க கிளியோபாட்ரா இல்லையே.....!!ஹஹஹ்
நீக்குஉங்களுக்கு வேணுமா சொல்லுங்க தமிழா! அனுப்பி வைக்கிறோம்.....
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
கழுதைப்பாலின் மகின்மையை மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்... அதிலும் இறுதியில் சொல்லிய கருத்து சூப்பர்
///பிறந்த குழந்தைக்கு ஒரு பாலாடை கழுதைப் பால் கொடுத்தால் அதன் எதிர்ப்பு சக்தி வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்று சொல்லப்படுவதாலும், நம்பப்படுவதாலும் ///
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்கள் கருத்திற்கு!
நீக்குSuper Super Super
பதிலளிநீக்குfrom Devakottai
நன்றி நன்றி நன்றி ஃபார் தேவக்கோட்டையாருக்கு!!
நீக்கு1953 என்று நினைவு/ என் சித்திக்கு (தந்தையின் இரண்டாம் தாரம் )கூனூர் லாலி ஆஸ்பத்திரியில் பிரசவம் பிறந்தது பெண்குழந்தை. உடலெங்கும் நீல நிறம் பரவி இருக்க. அங்குள்ளோர் கழுதைப்பால் கொடுத்தால் குணமாகும் என்று கூற , என் தந்தை அங்குமிங்கும் தேடி அலைந்து கடைசியில் மேட்டுப்பாளையம் வரை சென்று கழுதைப் பால் வாங்கி வந்தார். குழந்தை தங்கவில்லை. கழுதைப்பாலின் பதிவு என் எண்ண ஓட்டங்களை துரிதப் படுத்தியது. ஆகிறது அறுபது வருடங்கள்....!
பதிலளிநீக்கும்ம்ம் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார்! கழுதைப் பாலிற்கு உண்மைய்லேயே மருத்துவ குணங்கள் இருக்கின்றதா என்று இன்னும் முழுமையாக யாரும் சொல்லவில்லை.....வழக்கம் போல்...
நீக்குகழுதைப் பால் மருத்துவ குணம் கொண்டது என்பது உண்மைதானா என்பதில் சிறு ஐயம் உள்ளது சார்.. எனக்கு கழுதைகளை பார்த்து ரசிப்பது பிடிக்கும்... கன்றுகளிலேயே மிகவும் அழகானது பசுங்கன்றோ இல்லை ஆட்டுக்குட்டியோ இல்லை. கழுதைக்குட்டி தான் மிக அழகாக இருக்கும், நீங்களும் பார்த்திருப்பீர்கள்.. உங்களின் படத்திலும் இருக்கிறது பாருங்கள்.... எவ்ளோ க்யூட்டாக இருக்கும் தெரியுமா???
பதிலளிநீக்குவாங்க சீலன்.தம்பி......மருத்துவ குணம் உள்ளதா ....ம்ம்ம்ம் இன்னும் அது நிரூபிக்கப்படவில்லை என்றே தோன்றுகின்றது.....அப்படிப் பார்த்தால் பல விஷயங்கள் இன்னும்நிரூபிக்கப்படவில்லைதான்...செவி வழி கேட்டதுதான்.....
நீக்குஆம் கழுதைக் குட்டி அழகோ அழகுதான்.....ஸோ க்யூட்!
வெள்ளையர் கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற மலைப்பகுதிகளின் உயரே செல்லச் சாலை அமைக்க வழிகாட்டியாகக் கழுதைகளையே பயன்படுத்தினர் எனப் படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குஅவற்றை முன்னே செல்ல விட்டு அவை மலையேறும் தடங்களைக் குறித்துக் கொண்டு சாலையை அமைத்தனராம்.
அவை சரிவு குறைந்த பகுதிகளைத் தேர்ந்து ஏறும் போலும்.
இன்றும் இந்திய ராணுவத்தில் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மலைப்பகுதிகளில் கழுதைகளின் சேவை மிகப்பெரிது.
பல தகவல்களின் ஊடே சில சிந்தனைகளும்...!
வழக்கம் போலவே எந்தக் கழுதையைப் பற்றியும் கூட அசத்தலாக எழுத எம்மால் முடியும் என்று இந்தக் கழுதையைப் பற்றி எழுதிவிட்டீர்கள்!
எனக்குக் “கற்பூர வாசனை“ தெரிகிறது.
நல்ல அருமையான தகவள்கள் ஆசானே! நீங்கள் வந்தாலே தகவலுடந்தான் வருவீர்கள் என்று தெரியும்....நாங்கள் கூட நேற்று அப்படித்தான் பேசிக் கொண்டோம்.....
நீக்குகடைசி வரிகள்...ஹஹஹ்ஹ
மிக்க நன்றி! ஆசானே!
அருமை நண்பரே
பதிலளிநீக்குதம 1
எல்லா உயிரினங்களுக்கும் ஒரு சிறப்பு உண்டு என்று புரிகிறது! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஆம் மிக மிகச் சரியே! மிக்க நன்றி சுரேஷ்!
நீக்குஅட கழுத ...உன் பாலிலே இவ்வளவு மருத்துவக் குணம் இருக்குன்னு மனுஷனுக்கு தெரிஞ்சு போச்சா ..இனி உன் குட்டிக்கு ஒரு சொட்டு கிடைக்காது .இந்த பாழாய்போன மனுஷன் காசுக்கு ஆசைப் பட்டு ஓட்டக் கறந்து விடுவானே )
பதிலளிநீக்குத ம 2
இது இது இதுதான் ஜோக்காளின்றது! ஹஹஹஹ மிக மிக ஒரு உண்மை அதான் இந்த மனுஷனோட சுயநலத்தை உரிச்சு வைச்சுட்டீங்களே! நையாண்டியாய்! மிக்க நன்றி ஜி!
நீக்குசுவாரஸ்யமான தகவல்கள்.
பதிலளிநீக்கு"அழுத மூஞ்சி சிரிச்சுதாம்... கழுதைப் பாலைக் குடிச்சுதாம்..." என்று சிறுவயதில் அழுது கொண்டிருப்பவர்களைச் சிரிக்க வைக்கச் சொல்வார்கள். அல்லது அழுகை முடிந்ததும் அப்படிச் சொல்லிக் கிண்டல் செய்வார்கள்.
காந்தி கழுதைப் பால் அருமை தெரியாமல் ஆட்டுப் பால் குடித்தார்!
கமல் விக்ரம் திரைப்படத்தில் என்று நினைக்கிறேன். ஒட்டகப் பால் பற்றி சொல்வார். சுஜாதா கூட ஒட்டகத்தின் பால் பற்றி நகைச்சுவையாக எழுதி இருப்பார். ஸ்டூல் போட்டுக் கறப்பார்கள். முடியாக இருக்கும். வடிகட்டிவிட்டுக் குடிப்பார்கள் என்று வர்ணனை வேறு செய்திருப்பார்!
ஏதோ நானும் என்னென்னவோ சொல்லி பின்னூட்டமிட்டு விட்டேன்! :)))))
ஹஹ்ஹஹ்ஹ இல்லை நண்பரே! மிக அருமையான பின்னூட்டம்...நாங்கள் மிகவும் ரசித்தோம்! சுஜாதா வாசித்திருக்கின்றோம்! ஆம் அழுத மூஞ்சி சிரிச்சுதாம்....அக்ழுதைப் பாலைக் குடிச்சுதாம்.....கேட்டிருக்கோம்......
நீக்குகழுதைக்கு(ம்) வந்த வாழ்வு!
பதிலளிநீக்குமிக அருமை! அறியாத தகவல்கள் அறியத்தந்தீர்கள்! மிக்க நன்றி!
இங்கு சகோதரர் மது சொன்னதை..
//ஒருகாலத்தில் நிறய கழுதைகள் அலையும் இனி ...
மீண்டும் அக்காலம் வரும் என்று தோன்றுகிறது..//
நினைத்துப் பார்த்துச் சிரித்தேன்!. அருமை!..:)))
மிக்க நன்றி சகோதரி! தங்கள் கருத்திற்கு! ஆமாம் நாங்களும் அதை நினைத்துச் சிரித்தோம்!
நீக்குஏழு கழுதை வயசாகியும் இன்னும் ஒன்னும் தெரியலை அப்பிடியும் சொல்லுவாங்க இல்ல சகோ ஹா ஹா களுதைக்கு வந்த மவுசை பாருங்களேன். மருத்துவக் குணம் கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. அதிலும் குழந்தைகட்கு ஒரு தடவை கொடுத்தாலே போதும் ம்...ம்..ம்...இப்போ கழுதையை எங்கே தேடிப் பிடிப்பது ...... நானும் குடித்து ஆரோக்கியமாக இருக்கத் தான் சகோ. என்ன கீதாவை சிரிக்க வேண்டாம் என்று சொல்லுகள் சகோ. பதிவுக்கு.மிக்க நன்றி! சகோ வாழத்துக்கள் ...!
பதிலளிநீக்குஆஹா! ஏழு கழுதை வயசு யாருக்கு??!!!! ஹஹ்ஹ்ஹஹ!!
நீக்குஎதற்கு கீதா சிரிக்கக் கூடாது.!!?....எப்போதுமே ஹாஹாஹாஹ் தான்....போதுமா இனியா...!!அது போகட்டும் வருகின்றீர்களா? நாம் கழுதைப் பாலில் குளிக்கலாம்!! ஹாஹஹஹ்ஹ.....ஏழு கழுதை வயசு குறைந்து விடுமாம்.....கிளியோபாட்ரா சொன்னாங்க......-கீதா
கழுதை மட்டுமல்ல, எதைப் பற்றி எழுதினாலும் சுவை குன்றாமல் எழுதுகிறீர்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!
நீக்குகழுதைப் பற்றிய தங்கள் ஆய்வு அருமை! தலைப்பும் நன்று!
பதிலளிநீக்குமிக்க நன்றி புலவர் ஐயா! தங்களது கருத்திற்கும் பாராட்டிற்கும்!
நீக்குwhere is my comment????????? I've posted some thing:(( sorry:(( once again
பதிலளிநீக்குமகிகுட்டிக்கு கூட ஒரு முறை என் அத்தை கழுதை பால் வாங்கி புகட்டி இருக்கிறார்:))
துடைப்பம், செருப்பு, கழுதை போன்றவை கீழானவை என ஒரு சிந்தனை தோன்றவே ஆரிய வருகை தான் காரணம் என ஞாநி ஒரு முறை சொல்லியிருக்கிறார், சரி தான் போலும்:)
எங்க போச்சு உங்க கமென்ட்? சரி இனி ஒரு வலைத்தள ஆய்வாளர் வைச்சா போச்சு நாம போட ற கமென்ட் எங்க போகுதுனு தேடிக் கண்டுபிடிக்க....
நீக்குஆம்! ஞானி எழுதியதை வாசித்திருக்கின்றோம்! கிராமத்தில் குழந்தைகளுக்கு கழுதைப்பால் கொடுப்பது வழக்கமாகத்தான் இருக்கின்றது! எப்படியோ அவைகளுக்கும் காலம் வந்தால் சரிதானே!
துடைப்பம், செருப்பு போன்றவை கீழானவை என்று சொல்ல முடியாதே....மேபி அவை அழுக்காவதால் வெளியில் வைக்கப்படுவதால்....அப்படி ஒரு எண்ணம் வந்ததோ இருக்கலாம்....
கழுதைகளை பற்றிய " மிகவும் உருப்படியான " ஒரு பதிவு ! மிக சுவாரஸ்யமாக !
பதிலளிநீக்குமனிதனுக்கு உழைக்கும் விலங்குகளுக்கு பொங்கலிடும் தமிழ் கலாச்சாரத்தில் கழுதைகளுக்கு மட்டும் ஏனோ மரியாதையில்லை !
இந்த பதிவை படிக்கும் போது எப்போதோ படித்த தகவல் ஒன்று ஞாபகம் வருகிறது...
எகிப்திய மகாராணி கிளியோபாட்ரா தன் மேனி அழகை பாதுகாப்பதற்க்காக கழுதை பாலில் குளிப்பாளாம் ! ( இந்த தகவலின் நம்பகத்தனிமை தெரியவில்லை ! )
நன்றி
சாமானியன்
மிக்க நன்றி நண்பரே! கழுதையும் உழைக்கத்தான் செய்கின்றாது ஆனால் நீங்கள் சொல்லுவது போல் எனோ அதை யாரும் கொண்டாட்வுஅதில்லை....ஆச்சரியம்தான்
நீக்குகிளியோபாட்ரா பற்றி எழுதி உள்ளோமே! கழுதைப்பாலில் குளிப்பதாக....ஆனால் அத்தனைக் கழுதைப்பால் கிடைத்திருக்குமா என்ன? ஆம் நீங்கள் சொல்லுவது போல் நம்பகத்தன்மை தெரியவில்லைதான்....
மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கு!
மிக்க ந்னறி ஐயா! தங்கள் வாழ்த்துகளுக்கு! தங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
தலைப்பை பார்த்தவுடன் நான் நினைத்தேன் ஏதோ சிறு கதை என்று நினைத்தேன் கழுதை பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் இறுதியில் கொடுத்த ஆங்கில வார்த்தை சூப்பர்... பகிர்வுக்கு நன்றி
த.ம-6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-