நானும், எனது நண்பர் பிஜுவும், மம்மூட்டியின் "இம்மானுவல்" எனும் படத்தை டி.வியில் பார்த்துக் கொண்டிருந்த போது அருணும், சரவணவினாயக்கும் பதட்டத்துடன் "போலீஸ்" "போலீஸ்" என்று சொல்லியபடி வரவேற்பறைக்குள் ஓடி வந்தார்கள். புட்டுக்க்கான காம்பினேஷன் பழம் வாங்க கடைக்குப் போனவர்கள். 15 வயது அண்ணனும், 13 வயது தம்பியும் அவர்களது சைக்கிளை எடுக்காமல், என் பைக்கை எடுத்து ஓட்டிக்கொண்டுப் போயிருந்திருக்கிறார்கள்.
இப்படி, நான் யாருடனாவது பேசிக்கொண்டோ, டி.வி. பார்த்துக் கொண்டோ இருக்கும் போது, என் கவனம் அவர்கள் மேல் அதிகம் பதியாது என்பது உறுதியானால், எனக்குத் தெரியாமல், 1/2 கி.மீ. தொலைவிலுள்ள கடைக்கு பைக் எடுத்துக் கொண்டு போய்விடுவது வழக்கம். (வீட்டின் முகப்பிலிருந்து (போர்ச்), வாயிற் கதவு வரை பைக்கைத் தள்ளிக் கொண்டு போய்)

பள்ளி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டி விபத்துக்கள் இடையிடையெ ஏற்படுவதால், காவல் துறையினர் எப்போதும் அப்பகுதியைக் கண்காணிப்பது உண்டு. உரிமம் இல்லாமல் பைக் ஓட்டும் மாணவர்கள் பிடிபட்டால், அவர்களது பெற்றோர்களுக்குக், குறிப்பாக அப்பாவுக்கு, அவருடைய உருவம், தகுதி, வயதுக் கேற்ப திட்டும், அபராதமும் உண்டு. எனவே, காவலர்களை எதிர்பார்த்து பரிதாபகரமாக மாறிப் போன முகத்தை வைத்துக் கொண்டு காவலர்களின் திட்டுக்களை வாங்கத் தயாராகி சிட் அவுட்டைத் தாண்டி வாயில் முகப்பில் இறங்கி நடந்தேன்.
வாயிற் கதவிற்கு வெளியே, சாலையில் ஒரு காவலர் ஜீப் நிறுத்தப்பட்டிருந்தது. இரண்டு போலீஸார் நிற்க, இருவர் - ஒரு பெண் காவலதிகாரி முன்னே வர அவர் பின்னே ஒரு ஆண் காவலரும் வாயிற் கதவைத் தாண்டி உள்ளெ வந்து கொண்டிருந்தனர். அருண், கேட்டுக்கும், வீட்டின் முகப்புக்கும் இடையே நிறுத்தியிருந்த பைக்குக்கு அருகே வந்திருந்தார்கள்.
"ஹெல்மெட்டும், லைசன்சும் இல்லாம, 2 பேரு பைக்குல வந்தானுங்களே, எங்க அவனுங்க?" என்று சிரித்துக் கொண்டே நடந்து வரும் அந்தப் பெண் காவலர் யார்?.....சுதாவா?.....
"ஆம், சுதாவேதான்"! கோபால் அண்ணனின் (என் பெரியப்பா மகன்) மனைவி விமலாவின் தங்கை சுதா. எர்ணாகுளம், ஆலுவாவில் சர்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தவர்.
நிலம்பூருக்கு மாற்றலாகி 2 நாட்கள்தான் ஆகிறதாம். அமைச்சரவையில் வரும் மாற்றங்கள் இது போன்ற இடமாற்றங்களைக் காவல் துறையில் ஏற்படுத்துமாம். உள்துறை, திருவஞ்சியூர் ராதாகிருஷ்ணன் கையிலிருந்து, ரமேஷ் சென்னித்தலையின் கையில் வந்ததுதான் காரணமாம். சுதாவின் குடும்பம் எர்ணாகுளத்தில். மகனுக்குத் துபாயில் வேலை. மகள் எர்ணாகுளத்தில் படித்துக் கொண்டிருப்பதால், எர்ணாகுளம் ஜில்லாவில் எங்கேனும் மாற்றலாகிப் போக முயல்வதாகவும், விரைவில் போக வாய்ப்புண்டு என்றும் சொன்னார்.
கோபால் அண்ணனின் ஆரோக்கிய நிலை பற்றியும், குமுளி அருகே உள்ள உறவினர் பற்றியும் பேசியபின், பேச்சு நிலம்பூரில் சில நாட்களுக்கு முன் அமைச்சரான திரு ஆரியாடன் முகம்மதுவின், உதவியாளரான கே.எம்.பிஜு என்பவர், கட்சி அலுவலகத்தில் பணி புரிந்த ஸ்வீப்பர் சிறக்கல் ராதா என்பவரைக் கொன்று சாக்கில் கட்டிக் குளத்தில் இட்ட சம்பவத்திற்குத் திரும்பியது.
கொலைக்குப் பின் கொல்லப்பட்ட பெண்ணின் உடலை அப்புறப்படுத்த கொலையாளிகளுக்கு, மோஹன்லால் நடித்த "த்ருஷ்யம்" என்னும் படம் உதவியாக இருந்ததாம்.
கொடுமையைப் பாருங்கள்! நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரஜினி சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயில் கவ்வி, இளைஞர்களை ஒரு காலத்தில் ஈர்த்து சிகரெட் பிடிக்கக் காரணாமானது போல், மோஹன்லால் கொலைகாரர்கள் உருவாகக் காரணமாகிறாராம், எப்படிப் போகிறது கதை!

மிகவும் சாமர்த்தியமாகக் கொல்லப்பட்ட உடலை மறைத்து, கொலைக் குற்றத்திலிருந்து தன் மகளைக் காப்பாற்றுவதுதான் படத்தின் கதை. (அருமையான படம்!. மோஹன்லாலின் அற்புதமான நடிப்பு! அழகாகச் சொல்லப்பட்டத் திரைக்கதை! எடிட்டிங்க்!-இதைச் சொல்லியே ஆக வேண்டும்...சொல்லாவிட்டால் என் தலை வெடித்துவிடும் என்பதால் சொல்கிறேன்! மன்னிக்கவும்!)
இந்த நிலம்பூர் கொலை காரணமாக, தான் நிலம்பூரில் எப்போதும் இருக்க வேண்டிய நிர்பந்தம் என்றார். அரசியல் தலைவர்களும், மேலதிகாரிகளும், எப்போதும் நேரில் வரவும், தொலைபேசியில் அழைக்கவும் வாய்ப்புண்டாம். இதை, அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, இடையிடையே தொலைபேசி அழைப்பு வந்து கொண்டிருந்தது. 1/2 மணி நேரம் இப்படிக் கதைகளைப் பேசிய பின், சுதா, அருண் மற்றும் வினாயக்கிடம்,
"ரெண்டு பேரும் முதல்ல க்ரவுண்டுல ஓட்டிப் பழகுங்க, போதும். லைசன்ஸ் எடுத்தப்புறம்தான் ரோட்ல ஓட்டணும். அப்புறம் ஹெல்மெட் போட்டுட்டுத்தான் ஓட்டணும்...புரிஞ்சுச்சா" என்று அறிவுரை சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.
இதற்கிடையில், என்னுடன் படம் பார்த்துக் கொண்டிருந்த நண்பர் பிஜு எப்போதோ கிளம்பிச் சென்றிருந்திருக்கிறார். எனக்கும் ஆர்வம் போய்விட்டதால், என் மனத்திரையில் 27 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் ஃப்ளஷ்பேக்காக ஓடத் தொடங்கியது (வெறும் வாயை மெல்லும் எனக்கு அவல் கிடைத்தால் எப்படி இருக்கும்!)
1986-ல் நான் "மாதவன் மாமாவின்"(இடுகை-) மகன் "இஸபெல்லா விஜயன்" எர்ணாகுளத்தில் நிறுவிய நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த காலம். ஒரு நாள் மாலை நான் இந்து அக்காவின் வீட்டை அடைந்த போது, அங்கே கோபால் அண்ணன் சுதாவுடன் வந்திருந்தார். அப்போது சுதாவின் திருமணம் நடந்து 8 மாதங்களே ஆகியிருந்தது! கணவன் குடியும், கூட்டாளிகளுடன் கூத்தும், சீட்டாட்டமுமாம். இடையிடையே கோபம் வரும் போதும், சந்தோஷம் கூடும் போதும் சுதாவுக்கு, அடி, உதை உறுதியாம். சுதா சொன்னதிலிருந்து, பெண்களை வேதனைப் படுத்தி இன்பம் காணும் ஒரு ஜென்மம் போலத் தெரிந்தது!
"எனக்கு அவரப் பாத்தாலே பயமாருக்குது", என்று சுதா சொன்னதை முதலில் பொருட்படுத்தாத சுதாவின் வீட்டார், விரைவிலேயே சுதாவின் துயர வாழ்க்கையை நேரில் கண்டு, புரிந்து கொண்டு, சுதாவைத் தங்கள் வீட்டிற்கு அழத்துக் கொண்டு வந்து விட்டார்களாம். விவாகரத்து வாங்கியபின், சுதாவை M.A. படிக்க வைக்க முடிவும் செய்திருந்தார்களாம். வீட்டுத் தொலைபேசிக்கு அந்த குடிகாரக் கணவனின் மிரட்டல்கள் இடையிடையே வந்து சுதாவை நிம்மதி இழக்கச் செய்ததாம். அதனால் சுதா பயந்து எங்கும் வெளியில் தனியே போவதைத் தவிர்த்திருந்திருக்கிறார்.
இடையே ஒரு நாள் தன் தோழியின் குழந்தையைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றுத் திரும்பும் போது, திரைப்படத்தில் காட்டப்படும் சம்பவம் போல், ஒரு ஜீப், நடந்து சென்று கொண்டிருந்த சுதா அருகே நிற்க, அதிலிருந்து இறங்கிய கயவனானக் கணவன் சுதாவைத் தூக்கி ஜீப்பில் போட, சுதாவின் கூச்சல் கேட்டு, நடந்து சென்ற சிலர் உதவிக்கு வரும் முன் ஜீப் பறந்திருக்கிறது. எப்படியோ இடையே ஒரு பஸ் எதிரே வர, ஜீப்பின் வேகம் குறைய, சுதா கூச்சலிட்டுக் கொண்டே ஜீப்பிலிருந்து வெளியே குதித்து ஓட, பேருந்தும், எதிரே வந்த வாகனங்களும் நின்றிருந்திருக்கின்றன. இரையைத் தன் பிடியிலிருந்துத் தவற விட்ட வேட்டை மிருகத்தைப் போல் ஆன கணவன் திகைத்துச் சிறிது நேரம் நின்று, பின்னர் வேறு வழியின்றி அங்கிருந்து போக, மரணத்தின் பிடியிலிருந்து தப்பி உயிர் பிழைத்த மானைப் போல் சுதா ஓடி அருகில் நின்றிருந்த பேருந்தில் ஏறி அந்த மனித மிருகத்திடமிருந்து தப்பியிருந்திருக்கிறார்.
இந்தச் சம்பவம் சுதாவையும், அவர் குடும்பதினரையும் உலுக்கிவிட்டிருந்திருக்கிறது. இனி எப்படி அங்கு நிம்மதியாக வாழ்வது என்ற பயம் அவர்களுக்கு வந்திருக்கிறது. போலீசார் கயவனானக் கணவனை எச்சரித்திருந்தாலும், சுதாவைச் சற்றுத் தொலை தூர இடத்தில் எங்கேனும் சில நாட்கள் தங்க வைக்க முடிவு செய்திருந்திருக்கிறார்கள். அப்படித்தான், எர்ணாகுளத்தில் உள்ள திரு. விஜயனின் நிறுவனத்தில் வேலையும், நிறுவனத்தின் அருகிலிருந்த ஒரு பெண்கள் விடுதியில் தங்கவும் ஏற்பாடு செய்வதற்காக கோபால் அண்ணனும், சுதாவும், நான் அன்று இந்து அக்காவின் வீட்டிற்குச் சென்றிருந்த சமயம், அங்கு வந்திருந்தார்கள்.
சுதாவின் பிரச்சினைகளை அறிந்த விஜயன், எர்ணாகுளத்திலுள்ளத் தன் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சுதாவுக்கு வேலை கொடுக்க, சுதாவும் அதன் அடுத்திருந்த விடுதியில் தங்கிப் பணிபுரியத் தொடங்கினார். ஆனால், 6 மாதங்களுக்குப் பின் விஜயன் தன் நிறுவனத்தின் நஷ்டங்களைக் குறைக்க பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவ்வேளையில் சுதாவுக்கு மிகவும் ஆறுதலாக இருந்த வேலை அவரது கைவிட்டுப் போனது. அதை அறிந்து அதிர்ந்த நான், அன்று மாலை சுதாவைக் காண அவரது விடுதிக்குப் போன போது, கதறி அழுத சுதாவின் முகம் என் மனத்திரையில் இப்போதும் அழியாமல் நிலைத்திருக்கிறது!
மறுநாளே, கோபால் அண்ணன் சுதாவை குமுளிக்குக் கூட்டிப் போனார். இதற்கிடையில், சுதாவின் நிலைமையைப் புரிந்து கொண்டு, சுதாவுக்கு மறுவாழ்வு கொடுக்கத் தயாராக, தயாநந்தன் என்னும் ஒரு இளைஞர் முன்வந்தார். மறுமணச் சடங்குகள் நடத்த குமுளியை விட எர்ணாகுளமே ஏற்றது என்பதால் (கயவன் கணவன் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுத்த வாய்ப்புண்டு என்பதால்) சுதாவின் மறுமணம் வைக்கம் அருகே உள்ள ஒரு கோயிலில் நடத்தப்பட்டது. இருவரும் இந்து அக்காவின் வீட்டருகே ஒரு வாடகை வீட்டில் தங்கி, தங்கள் புது வாழ்வைத் தொடங்கினார்கள். வாழ்வில் நேர்ந்த துன்பங்களும், துயரங்களும், சுதாவிற்கு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடக் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். தனக்குத் தன் சொந்தக் காலில் நிற்க ஒரு வேலை அவசியம் என்று புரிந்து கொண்டு, அதற்கானத் தீவிர முயற்சியை மேற் கொண்டார்.
கேரள அரசு காவல்துறையில் மகளிர் காவல்துறைப் பிரிவு ஆரம்பிக்க தீர்மானித்திருந்த நேரம் அது. "Where There is a will there is a Way". சாதிக்க வேண்டும் என்ற மனம் இருந்தால், அதற்கான வழி உண்டு என்பது போல், சுதாவின் முயற்சி வீண் போகவில்லை. பெண் கவலராகப் பதவியேற்று, அவர் விரைவிலேயே (முதல் Batch ஆனதாலும், சுதா ஒரு க்ராஜுவேட் என்பதாலும்) பதவி உயர்வு கிடைக்கப் பெற்று, சர்கிள் இன்ஸ்பெக்டராகப் பணி புரிகிறார். 48 வயதாகும் அவருக்கு இனி 8 வருட சேவை பாக்கி உள்ளது. எப்படியும் ஒரு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதால் DSP ஆகி ஓய்வு பெறக் காத்திருக்கிறார் சுதா.
அவரது மூத்த மகன் துபாயில் மென்பொருள் பொறியாளராகப் பணி புரிகின்றார். இளைய மகள் கல்லூரி மாணவி. கணவன் தயாநந்தன் ஒரு ஹார்ட்வேர் கடை நடத்துகிறார். மாஜி கணவன் குமுளிக்குக் "குட்பை" சொல்லிவிட்டு, கர்நாடகாவில், உடுப்பி அருகே உள்ள எங்கோ ஓரிடத்திற்குப் போய்விட்டதாகக் கேள்வி. (போலீஸ் அதிகாரியான மாஜி மனைவி தன்னை அடிக்கவும், உதைக்கவும் வாய்ப்புண்டு என்ற பயத்தாலோ என்னவோ!).
சுதாவை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது! பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும். துன்பம் வரும் வேளையில் தளர்ந்து விடக் கூடாது. தன் எதிர்காலத்தைத் தகர்க்க எவரையும் அனுமதிக்கவும் கூடாது.

வாழ்க்கை என்றால் இப்படித்தான். கல்லும், முள்ளும் நிறைந்த காட்டுப் பாதை போல் சிலசமயங்களில் மாறிவிடும். எதிர்பாராமல் ஏற்படும் துன்பங்களையும், துயரங்களையும் கண்டு துவளாமல், சிந்தித்து செயல்பட்டு எதிர்நீச்சல் போட்டுப் போராடினால் சுதா வாழ்வது போல் சுகமான வாழ்க்கை வாழலாம்.
வாழ நினைத்தால் வாழலாம்.......வழிகளா இல்லை பூமியில்?!!!?!