முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா? தலக்காடு கோவில்கள் காவிரி நதிக்கரையில் மணல் மூடி புதைந்து கிடந்தவற்றை மீட்டெடுத்தனர் என்று அப்படியான கோவில்களில் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்களில் ஒன்றான பாதாளே/ளீஸ்வரர் கோயிலைச் சென்றடைந்தோம் என்று சொல்லியிருந்தேன். இப்ப அந்தக் கோவிலைப் பற்றி.....
இப்படித்தான் இறங்கிச் செல்ல வேண்டும்....அதோ கீழே நம்ம சின்னப் பையன் தெரிகிறாரா!!!
இங்கு ஒரு அறிவிப்பு தெரிகிறதா? குனிந்து
வாருங்கள் என்று (நீங்களும் குனிஞ்சு உத்துப் பாருங்க!!!!!!....நிலைப்படி மிகவும் சிறியது. (குகைக்கோவில் என்றும் கூடச்
சொல்லப்படுகிறது. ராஷ்டிரக்கூடர்கள் பாறையில் குகைக் கோவிலாக நிர்மாணித்ததாகவும்
சொல்லப்படுகிறது.
பஞ்சலிங்கேஸ்வரர்களில் இதுவும் முக்கியமான கோயில்.
இதன் சிறப்பு இங்குள்ள லிங்கம் காலையில் சிவப்பு,
மதியம் கருப்பு, இரவில் வெள்ளை நிறமாக மாறும் என்று சொல்லப்படுகிறது. நாங்கள்
பார்த்த போது எல்லா சிவலிங்கங்களும் இருப்பது போன்றுதான் இருந்தார் இறைவன்.
ஒரு வேளை நாங்கள் சென்ற சமயம் மதிய நேரம் என்பதால் கருப்பு நிறத்தில்
இருந்திருக்கலாம். காலையில் அல்லது இரவு சென்று பார்த்தால்தான் தெரியும்.
திருச்சுற்றில் சுற்றிக் கொண்டே க்ளிக்ஸ்
எடுத்துக் கொண்டே....விமானம் எல்லாம் பின்னாடி கட்டியதாகத் தெரிகிறது.
8 ஆம் நூற்றாண்டில் ராஷ்டிரகூடர்களால் ஒரு பழைய
பாறையில் செதுக்கிக் கட்டப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் 10 ஆம் நூற்றாண்டில் மேலை கங்கர்களால்
கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அதன்பின்தானே தலக்காடு மணல் மேடுகளில் புதைந்து சமீப வருடங்களில் மீட்கப்பட்டிருக்கின்றன. 30 அடி கீழே பாதாளத்தில் இருப்பதால் 'பாதாளேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறதாகச் சொல்லப்படுகிறது.
மேலும் வாசுகி (பாம்பு) சிவனை இங்கு பூஜித்து
வழிபட்டதால் வாசுகீஸ்வரர் என்றும் இக்கோயில் சொல்லப்படுகிறது.
கருவறை ஆகமவிதிப்படி எளிமையாக
உருவாக்கப்பட்டிருக்கிறதாம். உள்ளே படம் எடுக்க அனுமதிக்கவில்லை.
மிகச் சிறிய கோயில். கிழக்கு நோக்கிய கோயில்.
பாரம்பரியப்படி ஒவ்வொரு 12 வருடங்களுக்கு ஒருமுறை
பஞ்சலிங்க தரிசனம் என்று திருவிழா நடைபெற்று வந்தது என்றாலும் சில சமயங்களில் 4-5
வருடங்களுக்கு ஒரு முறையும் கொண்டாடப்படுமாம். கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தில்,
குஹ யோகமும் விசாக நட்சத்திரமும் சேரும் சமயத்தில். ஒரே சமயத்தில் ஐந்து கோவில்களிலும்
திருவிழா. அப்படி சென்ற 2020ல் கொண்டாடப்பட்டதாம். அடுத்தது எப்போது என்று
கர்நாடகா சுற்றுலாத் துறை அல்லது அங்கிருக்கும் கோவில் நிர்வாகிகள்
அறிவிப்பார்களாம்.
கோயிலின் உள்ளே தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை மற்றும் பைரவர் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. கருவறைக் கற்களில் ஒன்றில் சோழர் கால கல்வெட்டுகள் உள்ளனவாம். மேலைகங்கர்களைச் சோழர்கள் வென்ற போது இங்கு பொறிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
வெளியில் சுவற்றில் இந்த இரு கற்களில் சில எழுத்துகளைப் பார்க்க முடிந்தது.
இதோ எழுத்துகள் வாசிக்க முடியுதா என்ன? தமிழ் எழுத்துகள். சோழர்கள் இங்கு இருந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்று
படியிறங்கும் போது இடப்புறம், ஏறும் போது
வலப்புறம் இருக்கும் லிங்கங்கள்
தலக்காடு பகுதி கங்கர்கள், சோழர்கள், ஹோய்சாலர்கள்
மற்றும் விஜயநகரப் பேரரசுகளால் ஆளப்பட்டது என்பதால் இப்பகுதியில் இருக்கும் பழமையான கோயில்கள் இன்றும்
அந்த வரலாற்றை பறைசாற்றுகின்றன எனலாம்.
அப்படியாக இங்கு தரிசனம் செய்து ஃபோட்டோ ஷூட்
முடித்துவிட்டு அடுத்த கோவிலான மாரளீஸ்வரர் கோவிலை நோக்கி, மீண்டும் மணலில்
கால்கள் புதையப் புதைய நடக்கத் தொடங்கினோம்.
----கீதா
காலை வணக்கம்..... சிறப்பான சிவன் கோவில் தரிசனம் இந்த காலை வேளையில்......
பதிலளிநீக்குதிருச்சி நகரிலும் பஞ்ச வர்ணேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கம் நிறம் மாறுவதாக நம்பிக்கை. இந்த ஆலயம் குறித்து என் பக்கத்திலும் எழுதிய நினைவு.
படங்கள் அனைத்தும் நன்று. பாராட்டுகளும் வாழ்த்துகளும். தொடரட்டும் உங்கள் சிறப்பான பதிவுகள்.
வாங்க வெங்கட்ஜி!
நீக்குதிருச்சி நகரிலும் பஞ்ச வர்ணேஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சிவலிங்கம் நிறம் மாறுவதாக நம்பிக்கை. //
ஓ!. இன்னும் சில கோவில்களில் சொல்வதுண்டு. ஸ்ரீராம் அவர் சென்ற கோவிலில் என்ற நினைவும்...
நன்றி வெங்கட்ஜி!
கீதா
இந்த பாதாளேஸ்வரர் பெயர் எனக்கு பாடலீஸ்வரர் என்றே படிக்க வருகிறது! சர்வம் ஈஸ்வரமயம் ஜெகத்!
பதிலளிநீக்குஸ்ரீராம் ஹைஃபைவ்! நானும் முதலில் பாடலீஸ்வரர் என்றே எழுதிவிட்டேன் அதன் பின் தான் ஹையோ தப்பா எழுதியிருக்கிறோமே என்று தமிழிலும் கொடுத்தேன். ஆங்கிலத்தில் t போடுவதால் வந்த குழப்பம்.
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
E- Hundi ... அங்கு அறநிலையத்துறை எப்படியோ தெரியவில்லை. நம்மூரில் அறிமுகமானால் அவர்களுக்கு கோவிலுக்கு வந்து உண்டியைத் திறந்து காசு எடுக்கும் சிரமம் குறைவு. நேராக அவர்கள் பாக்கெட்டுக்கே சென்று விடும்!
பதிலளிநீக்குநினைச்சேன், நான் படத்தின் கீழ் சொல்ல நினைத்து வேண்டாம்னு தவிர்த்தேன் சபாஷ்டா ஸ்ரீராம் வந்து சொல்லக் கூடும்னு நினைத்தேன் வந்துவிட்டது!
நீக்குகீதா
யாராவது குறும்புக்காரர் அந்த இடத்தில் சில நேரங்களில் மட்டும் தங்கள் சொந்த Q R Code ஐ ஒட்டி வைத்தால் அவர்கள் கணக்குக்கு சென்று விடும்!
பதிலளிநீக்குசீச்சீ... தப்பு... தப்பு.. கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன். சிவன் சொத்து குலநாசம்.
ஹாஹாஹா இதுவும் எனக்கு வந்தது அன்று பார்த்தப்ப. வேண்டாம் எல்லாம் நெகட்டிவா நினைக்கக் கூடாதுன்னு ...
நீக்கு//சீச்சீ... தப்பு... தப்பு.. கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன். சிவன் சொத்து குலநாசம்.//
சிரித்துவிட்டேன்...ஸ்ரீராம்
கீதா
சின்னப்பையன்..! இது சம்பந்தமாக எனக்கு நினைவுக்கு வரும் ஒரு விஷயம்.. சேச்சே... ஒன்றுமில்லை..
பதிலளிநீக்குஹாஹாஹாஹா..,, மண்டை குடையுது அது என்னன்னு!
நீக்குநெல்லை ரொம்ப பிஸி போல...ரேஷன் போல கருத்து கொடுக்கிறார்!!
இதைப் பார்த்திருப்பார்ன்னு நினைக்கிறேன்
கீதா
நானாவது படத்தை வெளியிட்டு சின்னப்பையன் என்ற பெயரை வாங்கியிருக்கேன் அக்காக்கள் கிட்ட இருந்து. ஆனால் நீங்க உங்க படத்தையே வெளியிடமாட்டீங்கறீங்க. நானும் படத்திலாவது உங்களைப் பார்க்கலாம்னு நினைக்கிறேன். வெளியிடலாமில்லையா?
நீக்குஹாஹாஹா நெல்லை, நான் சொல்லியிருக்கறது என்னன்னா எங்கண்ணன் நெல்லை சின்னை பையன் தான்னு... !!!
நீக்குநீங்கதான், ஸ்ரீராமை நேர்ல பார்த்திருக்கீங்களே நெல்லை அப்புறம் எதுக்கு ஃபோட்டோ?
கீதா
// நானும் படத்திலாவது உங்களைப் பார்க்கலாம்னு நினைக்கிறேன். வெளியிடலாமில்லையா? //
நீக்குயாராவது ஒரு தயாரிப்பாளரோ, இயக்குனரோ முன்வந்து என்னை வைத்து படம் எடுத்தால் நான் நடித்தால் நீங்கள் பார்க்கலாம்!! ஹிஹிஹி...
இந்த இடத்தில் நான் ஒரு விளக்கம் தர கடமைப்பட்டிருக்கிறேன்! நான் 'சின்னப்பையன்னு சொன்னதும் நினைவுக்கு வருகிறது' என்று சொன்ன விஷயம் 'நெல்லை'யோடு சம்பந்தப்பட்டதில்லை. ஆனால் மதுரையோடு சமபந்தம் உண்டு!
நீக்குஅறிவிப்பு எதையும் என்னால் படிக்க முடியவில்லை. என்ன என்று சொல்லவும்!
பதிலளிநீக்குஸ்ரீராம் அது படத்தைப் பெரிசுப்படுத்திப் பார்த்தால்தான் தெரியும். அதுவும் சின்ன எழுத்துகள்தான்.
நீக்குஅது வேறு ஒன்றுமில்லை பதிவில் சொல்லியிருக்கிறேனே அதே தான் தலையைக் குனிந்து வரவும் நு ஆங்கிலத்தில். நிலைப்படி உயரம் ரொம்பக் கம்மி. எனக்கே இடிச்சிருமோன்னு கொஞ்சம் குனிந்து போனேன் அப்ப நெல்லைய நினைச்சுப் பாருங்க!!!
நன்றி ஸ்ரீராம்
// நாங்கள் பார்த்த போது எல்லா சிவலிங்கங்களும் இருப்பது போன்றுதான் இருந்தார் இறைவன். //
பதிலளிநீக்குஒருவேளை அன்று வாராந்திர விடுப்போ
மதியம் கருப்பு நிறம்தான்! நாங்க போன சமயமும் அந்த நேரம்தானெ அப்ப வித்தியாசம் தெரியாதே!!
நீக்குஒருவேளை அன்று வாராந்திர விடுப்போ//
சிரிப்பு வந்துவிட்டது!
காலையில்னா எப்பன்னு தெரியலை...அது போல இரவுனா எப்பன்னு தெரியலை...
நன்றி ஸ்ரீராம்
கீதா
மரங்கள் சூழ விமானத்தின் படம் அழகு. ஆமாம், அதை ஏன் விமானம் என்று சொல்கிறோம்?
பதிலளிநீக்குவரவர எனக்கு அறிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்துக் கொண்டே போகிறது... சபாஷ்டா ஸ்ரீராமா...
இறைவனின் கருவறைக்கு மேலே தானே இருக்கும் இல்லையா வானோடு தொடர்புடையது என்பதைக் குறிப்பதால் இருக்குமோ?
நீக்குநான் இதைப் பற்றி பதிவில் சொல்ல நினைத்து விட்டுவிட்டேன்....
சில வருடங்கள் முன் எனக்கும் இந்தச் சந்தேகம் வந்து இணையத்தில் அறிந்தது இதுதான்...
ன்
அதாவது அது சின்ன கோபுரம் போன்று கூம்பு ஷேப்ல இருக்கும் இல்லையா அது உயரே வானை நோக்கி, தெய்வ சக்தியை ஈர்த்து, பூமியை விட்டு மேலே செல்வதைப் போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துவதால் என்றும், 'விமானம்' னா 'விண்' (ஆகாயம்) மற்றும் 'மனம்' (செலுத்துதல்) ...இதை வாசிச்சப்ப எனக்குத் தோன்றியது கீழ் வரி
மாபெரும் பிரபஞ்ச சக்தியோடு நம் மனதை இணைத்தல் அதை நோக்கிச் செலுத்துதல்...
கீதா
புகைப்பட பதிவுகள், சென்ற இடங்களை பற்றி பதிவு போடுகையில் வரலாற்றையும் படிக்க வேண்டி இருக்கிறது இல்லை?
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம். ஆனால் அதில் எது உண்மை எது கட்டுக் கதை செருகல் என்பது நாம் authentic புத்தகங்கள் வாசித்தால்தான் தெரியும்.
நீக்குகீதா
கற்களில் இருக்கும் எழுத்துகளை பார்க்க முடிகிறது.. படிக்க முடியவில்லை!!
பதிலளிநீக்குஎனக்கும்....ஒரு சில எழுத்துகள் மட்டும் புரிந்தது தமிழ் எழுத்துகள் க...மு...ஆனால் சேர்த்து புரியவில்லை
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
வணக்கம் கீதா, துளசி அண்ணா. நலமா?
பதிலளிநீக்குகாவிரி நதிக்கரையில் அகழ்ந்த கோயில் பற்றிய படங்களும் பதிவும் அருமை.
வாங்க கிரேஸ் ரொம்ப நாளாச்சுல்ல?
நீக்குநலம் கிரேஸ். நீங்களும் நலம் என்று நினைக்கிறோம். துளசியும் தன் விசாரிப்பை உங்களுக்குச் சொல்லச் சொன்னார்.
//காவிரி நதிக்கரையில் அகழ்ந்த கோயில் பற்றிய படங்களும் பதிவும் அருமை.//
நன்றி கிரேஸ்!
கீதா
இந்தக் கோயில் சென்ற நினைவுகளை பதிவு மீட்டெடுக்க உதவியது.
பதிலளிநீக்குBias மனதில் இருப்பதால் உண்மையான வரலாற்றை அரசுகள் பாதுகாப்பதில்லை.
ஆமாம் ல நெல்லை? எனக்கும் இதை எழுதினப்ப நினைவுகள் வந்தன.
நீக்கு//Bias மனதில் இருப்பதால் உண்மையான வரலாற்றை அரசுகள் பாதுகாப்பதில்லை//
உண்மைதான். அதுக்கான புத்தகங்கள் இருக்குமே அதைப் பார்த்தால் அல்லது நாம் தேடினால் கிடைக்கும். கல்வெட்டுகளை நாமே போய் ஆராய்ந்தால் தான்...
நன்றி நெல்லை.
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குபதிவு அருமை. பாதளீஸ்வரர் கோவில் பற்றி விளக்கங்களை படித்தறிந்து கொண்டேன். கோவில் படங்கள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது. (சின்னப்பையன் உட்பட..) விமான தரிசனம் பெற்றுக் கொண்டேன். விமானம் குறித்து நீங்கள் கருத்தில் சொன்ன விபரம் சிறப்பு.
மூன்று வேளைகளிலும் நிறம் மாறும் ஈஸ்வரர் செய்தி வியப்பாகத்தான் உள்ளது. இதற்கு நாம் நாள் முழுவதும் அங்கிருந்து தரிசனம் செய்ய வேண்டும்.கோவிலைப் பற்றிய சரித்திர செய்திகளை அறிந்து கொண்டேன்.
அதற்கேற்ப கோவில் நாள் முழுவதும் திறந்திருக்குமா ? இல்லை மதியம் நடை சாத்தி மாலையில்தான் திறக்குமா? இறைவனை குனிந்து (பணிவுடன்) சென்று தரிசிக்கும் வாய்ப்புடன் இருப்பது நல்லதுதான். நானும் அவ்வண்ணமே சென்று இறைவனை மானசீகமாக தரிசித்துக் கொண்டேன். அடுத்து வரும் கோவிலைப் பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கோவில் தரிசனத்தோடு, சின்னப்பையனையும் பார்த்துக் கொண்டீங்களா!!!
நீக்குஇல்லை கமலாக்கா மதியம் நடை அடைப்பதில்லை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை. பொதுவாக இந்த நேரம் தான்..
உங்கள் குழந்தைகளிடம் சொல்லி ஒரு நாள் போய் வாருங்கக்கா. ஆனால் இந்த மாதங்களில் செல்வது நல்லது. மார்ச்சில் வேண்டாம். நவம்பரிலிருந்து ஃபெப்ருவரிக்குள்.
நன்றி கமலாக்கா எல்லாக் கருத்துகளுக்கும்.
கீதா
கோவில் விமானம் பழுது பார்த்தால் சிறப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குபழமையை பாதுகாக்க தவறி வருவது அரசு மட்டுமல்ல, மனிதர்களும்தான்....
இப்பதான் ஏதோ புதுசா கலர் அடிச்சாப்ல இருக்கு கில்லர்ஜி. ஆனால் பொதுவாகவே கொஞ்சம் பழுதுபட்டுத்தான் இருக்கின்றன எல்லாமே ..
நீக்கு//பழமையை பாதுகாக்க தவறி வருவது அரசு மட்டுமல்ல, மனிதர்களும்தான்....//
ஆமாம் கில்லர்ஜி
நன்றி கில்லர்ஜி
கீதா
பாதாளே/ளீஸ்வரர் கோயிலை உங்களுடன் வந்து நானும் பார்த்து விட்டேன்.
பதிலளிநீக்குஉள்ளே இருப்பவரை மனகண்ணில் வணங்கி கொண்டேன்.
படங்களெல்லாம் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதிக்கா...உள்ளே நம் மனதுள்தானே இருக்கிறார்!!!
நீக்கு//படங்களெல்லாம் நன்றாக இருக்கிறது.//
நன்றி கோமதிக்கா
கீதா
12 வருடங்களுக்கு ஒருமுறை பஞ்சலிங்க தரிசனம் மற்றும் கோயிலை பற்றிய விவரங்கள் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குதமிழ் எழுத்துக்கள் தெரிகிறது.
பஞ்ச லிங்க தரிசனம் ஆச்சு.
//மாரளீஸ்வரர் கோவிலை நோக்கி, மீண்டும் மணலில் கால்கள் புதையப் புதைய நடக்கத் தொடங்கினோம்.//
மாரளீஸ்வரர் கோயிலை பார்க்க தொடர்கிறேன்.
2 வருடங்களுக்கு ஒருமுறை பஞ்சலிங்க தரிசனம் மற்றும் கோயிலை பற்றிய விவரங்கள் தெரிந்து கொண்டேன்.
நீக்குதமிழ் எழுத்துக்கள் தெரிகிறது.
பஞ்ச லிங்க தரிசனம் ஆச்சு.//
நன்றி கோமதிக்கா.
மாரளீஸ்வரர் கோயிலை பார்க்க தொடர்கிறேன்.//
வாங்க கோமதிக்கா. அது எழுதணுமே இன்னும் ஓரிரு தினங்கள் ஆகும்.
நன்றி கோமதிக்கா
கீதா