ஞாயிறு, 7 டிசம்பர், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2025

எழுத்தாளர் இராய செல்லப்பா சார் குடும்பத்தினர் நடத்தும் அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி- 2025 இந்த வருடமும் மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. தன் அன்னையின் நினைவில் தொடங்கி, எழுத்தாளர்களின் படைப்பாற்றலைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் எளிய முயற்சியாக சென்ற வருடத்திலிருந்து நடத்திவருகிறார், திரு செல்லப்பா சார்.

இந்த வருடம் போட்டியில் நானும் பங்கெடுத்தேன். பரிசளிப்பு விழா டிசம்பர் 2 - 2025 ஆம் தேதி சென்னையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. நான் செல்வதாக இருந்தது. ஆனால் இறுதியில் பயணத்தை ரத்து செய்ய வேண்டிய சூழல்.

நண்பேண்டா! நான் கேட்டுக் கொள்ளாமலேயே, நம்ம நட்பு எபி ஸ்‌ரீராம் தானாக அன்புடன் முன்வந்து, என் சார்பில் பரிசைப் பெற்று வருகிறேன் என்றார். மகிழ்ச்சியாக இருந்தாலும், மனம் சஞ்சலப்பட்டது. யாரிடமும்  இப்படியான Obligations கேட்கும் வழக்கம் இல்லாததும், சென்னையில் புயல் மழை என்றிருந்த சமயம் அவர் சிரமப்பட வேண்டாமே என்ற எண்ணமும் காரணங்கள்.

ஆனால் அவர் மகிழ்ச்சியாகச் சென்று பரிசைப் பெற்றுக் கொண்டு, எனக்கு நிகழ்வின் படங்களும் அனுப்பி, பரிசாக அளிக்கப்பட்ட சான்றிதழ், பரிசு பெற்றக் கதைகளின் தொகுப்புப் புத்தங்களையும் எனக்கு உடனேயே அனுப்பியும் கொடுத்துவிட்டார். ஸ்ரீராமிற்கு என் மனமார்ந்த நன்றி. படங்கள் உபயம், நம்ம ஸ்ரீராம்.

செல்லப்பா சாருடன் எழுத்தாளர் (சுபா)- பாலா எனும் பாலகிருஷ்ணன் அவர்கள், முன்னாடி நிற்பவர் கண்ணாடி அணிந்திருப்பவர் திரு வ வெ சு அவர்கள்.

விருட்சம் இணைய நாளிதழின் திரு அழகியசிங்கர், வலப்பக்கம் லேடீஸ் ஸ்பெஷல் இதழின் ஆசிரியர் கிரிஜா ராகவன் அவர்கள், திரு அழகியசிங்கர், நடுவில் மருத்துவர் ஜெ பாஸ்கரன் மற்றும் திரு மந்திரமூர்த்தி அழகு

லேடீஸ் ஸ்பெஷல் இதழின் ஆசிரியர் கிரிஜா ராகவன் அவர்கள், திரு மந்திரமூர்த்தி அழகு அவர்கள், மருத்துவர், எழுத்தாளர் ஜெ பாஸ்கரன் அவர்கள் மற்றும் திரு செல்லப்பா சார்

செல்லப்பா சார், பரிசுத் தொகையை முந்தைய தினமே அனுப்பிக் கொடுத்துவிட்டார். சான்றிதழ்,  மற்றும் புத்தகங்களுக்கு செல்லப்பா சார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நிகழ்விற்குச் சென்றிருந்த ஸ்ரீராம், அங்கு பரிசு பெற்றவர்களின் பின்புலத்தையும், பேசியவர்கள் எவ்வளவு அழகாகப் பேசினார்கள் என்பதையும் ஏற்கனவே என்னிடம் தொகுத்துவிட்டார்! அவர்களின் சாதனைகள், ஏற்கனவே எழுத்துலகில் அவர்களின் படைப்புகள் அவர்கள் வென்ற பரிசுகள் என்று சொல்லி வியந்தார்.

நிகழ்வை வீடியோ எடுத்திருந்த ஷ்ருதிடிவி இலக்கிய சானல் லிங்கை செல்லப்பா சார், குழுவிலும் பகிர்ந்திருந்தார். ஸ்ரீராமும், செல்லப்பா சாரும் எனக்குத் தனியாகவும் அனுப்பிவைத்தனர்.

ஸ்ரீராம் ஏற்கனவே எனக்குச் சொல்லியது போலவே, பரிசு பெற்றவர்கள் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தது என்னைப் பிரமிக்க வைத்தது.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவர்களைப் பற்றி செல்லப்பா சார் வாசித்த போது, என்னைப் பற்றிச் சொல்ல ஒரு வரி கூட இல்லை. 20 வயது இளைஞர் முதல் (எங்கள் ஊர் நாரோயில்காரர். அவர் அம்மாவும் பரிசு பெற்ரிருந்தார்!) வயதான வாலிபர்கள் வரை பெற்றிருந்த பரிசுகளும் அவர்கள் செய்திருந்த சாதனைகளும்.... அதுவும் முதல் முறையாகக் கதை எழுதிப் பரிசு பெறும் இளைஞர் உட்பட.

இப்படியானவர்களின் நடுவில் நானுமா என்றே வியந்தேன்.

அதையும் செல்லப்பா சாரிடம் சொன்னேன். அதற்கு அவருடைய அவருக்கே உரித்தான நகைச்சுவையுடனான பதில் இது.

"தன் தகுதி தெரியாமல் நோபல் பரிசு கேட்கிறார் அந்த ஆள்! தன் தகுதியை தெரிந்து கொள்ள விரும்பாமல் ஆவென்று வாய் பிளக்கிறார் இந்த பெங்களூர்ப் பெண்மணி!"

நடுவர்களாக இருந்த பெரிய எழுத்தாளர்கள் பரிசிற்குத் தேர்ந்தெடுத்த கதைகளுள் எனதும் இருந்தததை அறிந்ததும் என்னவோ என் மனதில் ஒரு கேள்வி சுற்றிக் கொண்டே இருந்தது/இருக்கிறது.

என் எழுத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தாலும், பொதுவெளி என்று வரும் போது எத்தனை ஜாம்பவான்கள், அந்த ஜாம்பவான்களோடு போட்டியிடும் போது அப்போது தவறாமல் வரும் கேள்வி!

நேரில் சென்றிருந்தால், கண்டிப்பாகக் கூச்சத்துடன் இருந்திருப்பேன். கூச்சமாக உணர்ந்திருப்பேன். அத்தனை திறமைகளும் பெருமைகளுடம் உடையவர்கள் பரிசு பெற்றவர்கள் அனைவரும்!

பரிசுத் தொகையை செல்லப்பா சாரின் ஆசிர்வாதமாகவே எடுத்துக் கொள்கிறேன் என்று சாரிடமே சொல்லியும் விட்டேன்.

செல்லப்பா சார், இந்த முறை புதுமை ஒன்றைச் சேர்த்திருந்தார். பரிசு பெற்றவர்களில் ஒருவர் கதையை மற்றொருவர் விமர்சித்து வாசிக்க 5 நிமிடங்கள் என்று ஒதுக்கியிருந்தார்.

அப்படி என் கதையை விமர்சித்திருந்தவர் எழுத்தாளர் பானுமதி கண்ணன் அவர்கள். ஆனால், சென்னையில் அன்று பெய்த தொடர் மழையின் காரணமாக, பானுமதி கண்ணன் அவர்கள் நிகழ்ச்சிக்கு நேரில் சென்று இந்த உரையை வழங்க இயலவில்லை. செல்லப்பா சார் அவர்கள் எனக்கு விமர்சனத்தை அனுப்பியிருந்தார். தற்போது பானுமதி கண்ணன் எடிட்டட் வெர்ஷனை அனுப்பியிருந்தார்கள்.

 எழுத்தாளர் பானுமதி கண்ணன் அவர்கள்

சிறப்பான விமர்சனம். சிறந்த எழுத்தாளர் என்பது பளிச்சென்று தெரிந்துவிடும் நடை. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவரது விமர்சனம் இதோ. ஸ்க்ரோலிங் பிடிஎஃப் வடிவத்தில்.

கூகுள் ட்ரைவ் லிங்   இது ஒரு குப்பைக்கதை

பானுமதி கண்ணன் அவர்களின் எழுத்து எனக்கு ஏற்கனவே பரிச்சயம். சஹானா இணைய இதழில் அம்மாவும் அபியும் என்ற இவரது அருமையான சிறுகதை ஒன்றை வாசித்திருக்கிறேன்.

அதோடு, நம் பானுக்காவிற்கும் பானுமதி கண்ணன் அவர்கள் பரிச்சயம் என்பதால் பானுமதி கண்ணன் எழுதி வெளியிட்ட விண்ணோடும் முகிலோடும் எனும் நாவல் அவர் கையெழுத்திட்ட பிரதி பானுக்காவிடம் இருந்திட, பானுக்கா, என்னிடம், கதை ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறார் என்று வாசிக்கக் கொடுத்தார். நானும் வாசித்தேன். வித்தியாசமான கதைக்களம். அவர் தேர்ந்தெடுத்திருந்த கதைக்களத்தைப் பற்றிய தகவல்களுடன் மிக நன்றாக எழுதியிருக்கிறார். வாழ்த்துகள்! பானுமதி கண்ணன் அவர்களுக்கு. 

என் கதைக்கான கருத்தை தனிப்பட்ட முறையில் திரு அர்ஜுனன். எஸ் அவர்கள் என் மெயிலுக்கு அனுப்பியிருந்தார். அது இதோ.

வணக்கம்.

"அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் - 2025" புத்தகத்தில் இருந்து தங்களின் "குப்பை" என்ற சிறுகதையை இன்று படித்தேன்.

சிறுகதை என்றால் உரையாடலின் பங்கு அதிகமாகவும், விவரிப்பு குறைவாகவும் இருக்க வேண்டும் என்ற எனது சிந்தனை தகர்ந்தது.

வீட்டில் பழைய குப்பைகளை கிளறாமல் இருப்பதே நல்லது எனத் தோன்றியது.

வாழ்த்துகள்.

----------

செல்லப்பா சார், அவருக்குத் தனிப்பட்ட வகையில் பல யதார்த்த சிரமங்கள்  தற்போது இருந்தும், அதற்கிடையிலும், தான் முன்னெடுத்த இந்த நல்ல விஷயத்தை எந்தவித சிரமமும் பாராமல், தயக்கமும் இல்லாமல் மகிழ்ச்சியோடு எல்லோரையும் ஊக்கப்படுத்திச் செய்வதும் அதற்கு அவரது குடும்பத்தினர் முழு ஆதரவு கொடுப்பதும் மிகவும் பாராட்டிற்குரியது. நிகழ்வுக்கு அவரது பேரனும் பேத்தியும் வந்திருந்து அவருக்கு உதவினர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். தாத்தாவின் மீது எத்தனை மரியாதையும் அன்பும்! தாத்தாவும் குழந்தைகளிடம் அப்படியே!

செல்லப்பா சாரும் அவரது குடும்பமும் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் இருந்திட இறைவன் துணை இருப்பார்.

நிகழ்வின் சுட்டிகள் இதோ

மந்திரமூர்த்தி அழகு அவர்களின் உரை

மருத்துவர் ஜெ பாஸ்கரன் அவர்களின் உரை

என் எஸ் பிரேமா அவர்களின் உரை

இராஜலக்ஷ்மி அவர்களின் உரை

மஞ்சுளா ஸ்வாமிநாதன் அவர்கள்

அனுராதா ஜெய்சங்கர் அவர்கள்

ரத்னமாலா புரூஸ் அவர்கள்

கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அழகாக எழுதப்பட்ட கதைகள். கதைகளைப் பற்றி பதிவுகள் வரும். தலக்காடு பற்றிய பதிவுகள் வர வேண்டுமே. எனவே இடையில் கதைகளைப் பற்றி...

நான் எழுதிய கதை பின்னர் நல்ல நாள் முகூர்த்த நேரம் பார்த்து எபியில் வரும்.


----கீதா


21 கருத்துகள்:

  1. அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள் கீதா.
    செல்லப்பா சார் உங்களைப்பற்றி சரியாக சொல்லி இருக்கிறார்.
    பன்முக திறமையாளர் நீங்கள்.
    நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தால் பல எழுத்தாளர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கும் உங்களுக்கு. மீண்டும் வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா.

      வேறு வாய்ப்பு கிடைக்கும் நீங்கள் சொல்லியிருப்பது போல்

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  2. எழுத்தாளர் பானுமதி கண்ணன் அவர்கள் உங்கள் கதையை நன்றாக விமர்சனம் செய்து இருக்கிறார். அமைதியான வீட்டைப்பற்றி அவர் சொன்னது சரியே. சின்ன சின்ன சண்டைகளும், அப்புறம் சமாதானம் ஆவதும் தான் வாழ்க்கை .
    மலர் படுக்கையில் படுத்து இருக்கும் எலி குஞ்சுகள் நல்ல ரோஸ் கலரில் இருக்கும். நானும் பார்த்து இருக்கிறேன்.

    திரு அர்ஜுனன். எஸ் அவர்கள் சொன்னது போல வீட்டில் பல குப்பைகளை கிளறாமல் இருப்பது நல்லதுதான்.

    நாம் சேமித்து வைத்தவை பின் வருபவர்களுக்கு குப்பைகளாக தெரியலாம். அதை தூக்கி வீசவும் முடியாமல் , பத்திரபடுத்தவும் முடியாமல் சுமையாகி போவதும் உண்டு.

    ஸ்ரீராம் உங்களுக்கு உதவியது மகிழ்ச்சி.


    //செல்லப்பா சாரும் அவரது குடும்பமும் எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் இருந்திட இறைவன் துணை இருப்பார்.//

    கண்டிப்பாய் இறைவன் துணை இருப்பார்.நானும் பிரார்த்தனை செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், கோமதிக்கா, ஸ்ரீராம் சென்று பரிசு வாங்கி வந்து அனுப்பியது எல்லாமே நெகிழ்ச்சியடைய வைத்தது.

      அக்கா ஆமாம் குட்டி குஞ்சு எலிகள் நல்ல ரோஸ் கலரில் இருக்கும். பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும்.

      சின்ன சண்டைகள்/ அது சரிதான் வாழ்க்கைக்கும் கொஞ்சம் மசாலா தேவைய்ல்லையா......ஆனா அக்கா சண்டைகள் பெரிதாகும் போதும் மனம் புண்படும் போதும் சுயமரியாதை சீண்டப்படும் போதும்தான் வாழ்க்கை வேதனையாகிப் போகிறது.

      நாம் சேமித்து வைத்தவை பின் வருபவர்களுக்கு குப்பைகளாக தெரியலாம். அதை தூக்கி வீசவும் முடியாமல் , பத்திரபடுத்தவும் முடியாமல் சுமையாகி போவதும் உண்டு.//

      ஆமாம் அக்கா. இதோ எங்க வீட்டில் கூட சிலதை தூரப் போட முடியாமல்....சொல்லிக்கிட்டே இருக்கோம் அடுத்த வீடு மாறும் போதாவது சிலதை தூக்கிப் போடணும் என்று.

      வீட்டில் குப்பைகளைக் கிளறினால், மனக்குப்பை அதிகமாகவும் வாய்ப்புகள் உண்டு!

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டியில் வெற்றிப் பெற்றதற்கு முதலில் என் அன்பான வாழ்த்துகள். விபரங்களை படித்தேன். மிகவும் சந்தோஷமாக. இருந்தது. பரிசளிப்பு விழாவில், நம் சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் பங்களிப்பு மிக மன மகிழ்வை தந்தது. மீண்டும் பதிவுக்கு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலாக்கா.

      ஆமாம் நம் ஸ்ரீராம் சென்று வாங்கி வந்து அனுப்பிக் கொடுத்து மகிழ்ச்சியடையச் செய்துவிட்டார்.

      நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
  4. கதைப் போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் .

    தங்களது கதை வரட்டும் படிக்க ஆவல்.

    சுட்டிகளுக்கு பிறகு செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கில்லர்ஜி.

      வந்ததும் படித்துச் சொல்லுங்கள்.

      நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு

  5. ​கதையின் நீதி: குப்பையை பொக்கிஷமாக வைத்திருந்தால் பொக்கிஷம் குப்பையாக மாறும்.
    எலியாரின் உபத்திரவங்கள் எங்களுக்கு உண்டு. வாஷிங் மெசின் அவுட். வேறே வாங்கினோம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா, அது சரிதான், பொக்கிஷம் பொக்கிஷம் தானே மனதிற்கு எப்பவுமே!

      எலியாரின் சேட்டைகள் திருவனந்தபுரத்தில் அடுக்குமாடிக்குப் போகும் வரை இருந்தது. அப்புறம் சென்னையில் ஒரு வீட்டில் இருந்தது. அதன் பின் இல்லை. இப்போது இங்கு மாடி வீட்டில் பூனைகள் வளர்ப்பதாலும், எங்கள் வீட்டிற்கும் அவை வருவதாலும் எலிகள் இல்லை. தரை வீடு. முந்தைய தரை வீட்டில் எலியார் வருவார்.

      நன்றி ஜே கே அண்ணா.

      கீதா

      நீக்கு

  6. ​கதையின் நீதி: குப்பையை பொக்கிஷமாக வைத்திருந்தால் பொக்கிஷம் குப்பையாக மாறும்.
    எலியாரின் உபத்திரவங்கள் எங்களுக்கு உண்டு. வாஷிங் மெசின் அவுட். வேறே வாங்கினோம்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. கீதா..  வாழ்த்துகள்.  செல்லப்பா சார் சொன்னாற்போல உங்கள் உயரம் உங்களுக்குத் தெரியவில்லை என்பது நிஜம்.  உங்கள் படைப்பு அருமையான படைப்பு.  நெகிழ்வான படைப்பு.  நத்தையின் உடம்பு போல உள்ளத்தின் மென்மையான பகுதியை அசைக்கும் படைப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நன்றி ஸ்ரீராம்.

      //உங்கள் உயரம் உங்களுக்குத் தெரியவில்லை என்பது நிஜம்//

      இருக்கலாம் ஸ்ரீராம். அதற்குக் காரணங்கள், குட்டுப்பட்டே 'குட்டை'யாகிப் போனதால் ஹிஹிஹிஹி...

      அதிலிருந்து மீண்டு வந்தாலும் அவ்வப்போது வந்துவிடுகிறது.

      மிக்க நன்றி மீண்டும் உங்களின் ஊக்கமான வார்த்தைகளுக்கும் என்னை எப்போதும் ஊக்கப்படுத்துவதற்கும்...பாராட்டிற்கும்...எல்லாத்துக்கும்...

      கீதா

      நீக்கு
  8. மன்னிக்கவும்..  சில வேலைகள், வெளியூர்ப் பயணங்கள்..  எனவே தாமதம்.  உங்களுக்கும் தெரியும்,  இன்றுமே உடனே வரமுடியாத சூழல்.  பதிவின் அமைப்பிலேயே ஒரு நேர்த்தி தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயையையே!!!!!! கமலாக்காவுக்குச் சொல்வது போல உங்களுக்கும் சொல்லணுமா...நண்பேண்டா!!! எனக்கு உங்கள் யதார்த்தப் பிரச்சனைகள் தெரியுமே. கூடவே தெரியலைனாலும், காரணம் இருக்கும் என்பதும் புரிந்து கொள்ள முடியும் நண்பா!!!!

      பதிவின் அமைப்பிலேயே ஒரு நேர்த்தி தெரிகிறது.//

      நன்றி ஸ்ரீராம்.

      கீதா

      நீக்கு
  9. அப்புறம் ஒரு விஷயம்.  இந்த தடவை புதுமையாக என்று செல்லப்பா சார் ஒருவர் கதையை இன்னொருவர் விமர்சித்தது என்று சொல்லி இருக்கிறீர்கள்.  அது சென்ற தடவையும் இருந்தது.  இது மாதிரி விழாக்கள் நடத்துவதில் அவர் ஜித்தராக இருக்கிறார்.  சென்ற தடவையே முதல் முறையான விழா என்பதே தெரியாத அளவுக்கு சிறப்பாக நடத்தி இருந்தார்.  இந்த முறை இன்னும் முன்னேற்றம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தடவை புதுமையாக என்று செல்லப்பா சார் ஒருவர் கதையை இன்னொருவர் விமர்சித்தது என்று சொல்லி இருக்கிறீர்கள். அது சென்ற தடவையும் இருந்தது. //

      ஓ அப்படியா....அவர் அவரது பேச்சில் சொல்லியிருந்ததால் அப்படி எடுத்துக் கொண்டேன், ஸ்ரீராம்.

      அவர் நிஜமாகவே ஜித்தர்தான். எத்தனைக் கவியரங்குகள் இலக்கியக் கூட்டங்களில் பங்கெடுத்தும் தலைமை தாங்கியும் இருந்திருக்கிறார். அதுவும் தில்லியில் இருந்தப்ப. நிறைய அனுபவங்கள் பெற்றவர்.

      சென்னையில் இருந்தப்ப, என் வீட்டிற்கு வந்த போதெல்லாம் அவர் நிறைய தகவல்கள், எழுத்தாளர்கள் பற்றிச் சொல்லுவார். தகவல் களஞ்சியமும் கூட. சின்ன சின்ன விஷயத்தைக் கூடக் கூர்ந்து கவனிப்பார். அதை அவருடைய கட்டுரைகள் கதைகளில் காணலாம்.

      நேர்த்தியாகவும் செய்வார்...

      கீதா


      நீக்கு
  10. இன்னும் சொல்லப்போனால் மனைவியின் உடல்நிலை சரியில்லாதபோதும் விழாவிலோ, அதன் நிகழ்வுகளிலோ, அனைவரையும் மரியாதை செய்வதிலோ எந்தக் குறையும் வைக்கவில்லை செல்லப்பா ஸார்.  அதிசய, அற்புத மனிதர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஸ்ரீராம் அதைவெளிக்காட்டிக் கொள்ளவும் இல்லை.

      அவர் ஆன்மீகத்திலும் உட்படுபவர் இல்லையா அது அவருக்கு பலம் சேர்க்கிறது என்று நினைப்பேன், ஸ்ரீராம்.

      ஆமாம் அதிசய அறுபுத மனிதர்...

      கீதா

      நீக்கு
  11. பரிசுபெற்ற எழுத்தாளர்கள் ஒவ்வொருவரும் பற்பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்கள்.  புகைப்படத்தில் இருந்த விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ் வளர்ச்சியில் முக்கியமானவருமான திரு வ வே சு பெயரைக் குறிப்பிட விட்டு விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜமாகவே ஸ்ரீராம் நீங்க சொன்னதோடு அந்த நிகழ்வுகளைப் பார்த்தப்ப ரொம்பவே நான் பிரமிச்சுப்போனேன்.

      திரு வ வே சு அவர்களின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டேன், ஸ்ரீராம்.

      மிக்க நன்றி சுட்டிச் சொன்னதற்கு, ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு