வெள்ளி, 18 ஏப்ரல், 2025

ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் - ஸ்ரீரங்கப்பட்டினம் கோயில் - பயணம் - 5

படகில் சென்ற போது எடுத்த சில படங்களை முந்தைய பதிவில் பகிர்ந்திருந்தேன் இல்லையா? இப்ப மிச்சம் மீதியையும் பகிரணுமே! இல்லைனா எனக்குத் தூக்கம் வராதே! பறவைகள் எல்லாம் தூக்கத்துல வந்து சண்டை போடும்! திட்டும். மிரட்டும். அந்த மரத்துல இருந்தவங்களை காட்டின நீ, இந்த மரத்துல நாங்க இருக்கோம் காட்ட மாட்டியா அப்ப எதுக்குப் படம் புடிச்சேன்னு....

இந்தப் பதிவில் அதிகம் வாசிக்க இருக்காது. பார்ப்பது மட்டும்தான்.

Red Wattled Lapwing Bird - செம்மூக்கு ஆட்காட்டி பறவை

https://youtu.be/TVQEMCZ9hGQ

அன்றில் பறவைகள்/அறிவாள் மூக்கன்

நான் அங்கு அப்பெண் அருகில் நின்று தூரத்தில் தெரியும் பறவைகளை கேமராவில் எடுக்க முடியுமா என்று ஆராய்ந்த போது என் கணவர் என் மொபைலில் தூரத்தில் தெரிந்த பறவைகளை க்ளிக் செய்திருக்கிறார். என் கேமராவில் மிஸ் ஆன காட்சி. அப்பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். 
இந்த மரத்தில் உச்சியிலும் நத்தை குத்தி நாரை மரத்தில் வந்து இறங்கிவிட்டது

இந்த மரத்தில் நத்தை குத்தி நாரை இறங்கப் போகிறது

இவை கேமராவில் முந்தைய பதிவிலும், இங்கு கீழேயும்....ஜூம் செய்து எடுத்தவை

Cormorant - நீர்க்காகம்


*******************************
ஆறுவித்தியாசங்கள் கண்டுபிடிங்கன்னு குமுதம் ஸ்டைலில்...

இதே காட்சியை இன்னும் கொஞ்சம் ஜூம் செய்தேன்....கீழே...

அதே காட்சியை இன்னும் கொஞ்சம் கூட ஜூம் செய்து எடுத்தேன்... கீழே

ஜூம் செய்ததில் பெலிக்கன்ஸ் வந்தன....இடப்புறம் இருந்த நீர்க்காகங்கள் வரவில்லை. மூன்று படங்களுக்கும் வித்தியாசங்கள் தெரிகின்றன இல்லையா? படகு நகர....நான் ஜூம் செய்ய...

இது, மேலே இதுக்கு முந்தைய படத்தில் உள்ள மரம் இல்லைங்க...இது வேற மரம். வித்தியாசம் தெரியும் பாருங்க

நின்று கொண்டிருந்த நாரையை கேமராவில் பிடிக்க முயன்ற போது, அலகில் குச்சியை எடுத்துக் கொண்டு பறக்க சிறகை விரித்து சில அடிகள் உயரே எழுந்தது. அதன் அசைவில் படம் இப்படி ஆகிவிட்டது. எதிர்பார்க்கவில்லை.

இதுதான் கடைசிப் படம். 1/2 மணி நேரம் படகு சவாரி முடிந்து கரைக்கு வந்தாச்சு படகு நிற்கப் போகிறது. படத்தில் வலப்புறம் ஓரமாக பெரிய படகுகள் இருப்பது தெரிகிறதா? 18 பேர் செல்லும் துடுப்புப் படகு. இந்தப் படத்தில் ஒரு நாரை நிற்பது தெரிகிறதா? நம்மவர் அதை க்ளிக் செய்திருக்கிறார் ஜூம் செய்யாமல்...

இறங்கியதும் படகுத் துறைக்கு நேர் எதிரே இந்தக் கடை, இங்கு டீ காஃபி, ஏதோ கொறிக்கவும் கிடைக்கிறது. இடப்புறம் கோக்கோகோலா. கடைய சும்மா வேடிக்கை பார்த்துவிட்டு டீ காஃபி,  கோக் ஏதாச்சும் குடிக்கணும்னா குடித்துவிட்டு...அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது அடுத்த பதிவில்.

 


------கீதா

19 கருத்துகள்:

  1. அம்மாடி.நிறைய படங்கள்.  எல்லாமே ரசிக்க வைத்தன.காணொளி பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா....ஆமாம் ஸ்ரீராம் கொஞ்சம் நிறைய படங்கள்தான். இல்லைனா இதை இன்னொன்றாகப் போட வேண்டும். இல்லைனா எனக்கு ஆசை தீராது!!!!

      காணொளி பார்த்ததற்கும் நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  2. ஆமாம். அந்தப் பெண் நேர்பார்வையாய் உங்களை நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், ஸ்ரீராம். அந்தப் பொண்ணு வேற காலை நீட்டிக் கொண்டு இருந்தது. அங்கு இரண்டு பெண்மணிகள் நின்று கொண்டிருந்தாங்க. ஸோ கையை நீட்டியும் படம் எடுக்க முடியவில்லை. இப்படி நிறைய மிஸ் ஆச்சு.....எனக்குத் தோன்றியது ரயில் போன்ற நீண்ட மிகக்கும் படகு. ஒருவர் அமர்வது போன்ற இருக்கைகள் நீண்டு இருபக்கமும் ஜன்னல்கள். அப்ப இங்கும் அங்கும் எடுக்க முடியும் பாருங்க,....என் கற்பனைய பாருங்க!!!ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் விளக்கமான வருணனையோடு மிக அழகாக இருக்கிறது.

    நத்தை குத்தி நாரை தரையிறங்கும் விமானம் போல சர்ரென மரத்தில் இறங்குவதை படமெடுத்திருப்பது அருமை. அதுபோல் இறுதி படத்துல அலகில் குச்சியுடன் நாரை மேலெழும்பி பறக்க முயற்சிப்பதையும் ரசித்தேன்.

    நிறைய பறவைகளின் பெயர்களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். எல்லா படங்களும் நன்றாக உள்ளது. அதனால்தான் அந்தப் பெண்ணும் என்னை மாதிரி தங்களை வியந்து நோக்குகிறார் போலும். ஹா ஹா ஹா. காணொளி கண்டு விட்டு மீண்டும் வருவேன். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கமலாக்கா. பறப்பவற்றை படம் எடுப்பதும். காணொளி எடுப்பதும் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். அதுவும் காணொளியில் அவ்வளவு தெளிவாக இல்லை ஜூம் செய்தப்ப. ஒன்றிரண்டு பரவாயில்லாமல் வந்தன.

      பறவைகளின் பெயர்கள் - அது ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதியதை தெரிந்து கொள்ள விரும்புவேன். படம் எடுத்திருந்தால் நெட்டில் போட்டு கூகுள் பிக்சர்ஸில் போட்டுப் பார்த்து தெரிந்து கொள்வதுதான்.

      //அதனால்தான் அந்தப் பெண்ணும் என்னை மாதிரி தங்களை வியந்து நோக்குகிறார் போலும்.//

      ஹாஹாஹாஹா....அக்கா நான் அங்கிட்டும் இங்கிட்டும் திரும்பி திரும்பி...போட் அசைவில் அவள் காலில் தட்டி த் தடுமாறி...இங்க எடுக்கவா அங்க எடுக்கவான்னு ஹிஹிஹிஹி....அதான் ஏன் இந்தப் பொண்ணு இப்படி அங்கும் இங்கு அல்லாடுதுன்னு பார்த்திருப்பார் அப்பெண்!!!!

      வாங்க கமலாக்கா

      மிக்க நன்றி

      கீதா


      நீக்கு
  4. அனைத்தும் அருமையாக இருக்கிறது.
    காணொளி அருமை.
    நத்தை குத்தி மரத்தில் இறங்குவது எல்லாம் அழகு.
    நாரை கீழே இறங்கி குச்சி எடுத்து பறக்க மேலே எழும்புவது அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா, வெகு சுமாராக வந்திருந்தாலும் படங்களையும் காணொளியையும் ரசித்ததற்கு

      கீதா

      நீக்கு
  5. பாறை அருகே முதலை பற்களை காட்டிக் கொண்டு நிற்பது இறையை பிடிக்க .
    பாறையோடு பாறையாக ஏமாந்து போகலாம் பறவைகள்.

    அகலவாயன், கரண்டி வாயன் நிற்கும் படம் அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலை அப்படிப் படுத்திருப்பது ஒரு வகையான ஓய்வு "Gaping" என்று சொல்லப்படும் உடல் வெப்பத்தை சீராக்குதல். நம்மைப் போல வேறு சில விலங்குகளைப் போல அவற்றிற்கு உடல் வியர்க்காது இல்லையா, அப்ப உடல் வெப்பத்தை வெளியேற்றி உடலைக் குளிர்வித்து வெப்பத்தை சமநிலைப்படுத்திக் கொள்ளவே இப்படி வாயை விரித்து ரொம்ப நேரம் கிடக்கும்.

      அகலவாயன், கரண்டி வாயன் நிற்கும் படம் அழகு//

      படகு அங்கு கொஞ்ச நேரம் நிற்காதா என்றும் தோன்றியது ஆனால் நகர்ந்து கொண்டேதானே இருக்கும் அரை மணி நேரம் தானே நேரம், பிரயாணம்.

      நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  6. ஒரு நாரை நிற்பது தெரிகிறதா?//

    தெரிகிறது கீதா. மரங்களில் உச்சிக்கிளையில் நிற்கும் பறவைகள் பார்க்க பார்க்க அழகு. கூழைகடா, நீர்காகம் எல்லாம் பார்க்க மகிழ்ச்சி.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்க முடிந்தது இல்லையா? பறவைகளைப் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.

      நன்றி கோமதிக்கா.

      கீதா

      நீக்கு
  7. படங்களும் நாரைகளும் அழகு, வீடியோவும் பார்த்தேன் ஆனா அதில பெரிதாக தெரியவில்லை உருவம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா வீடியோவில் அவ்வளவு வராதுதான். என் கேமராவானாலும் சரி மொபைலானாலும் சரி ரொம்ப நல்ல ஃபோக்கல் லெங்த் உள்ளவை அல்ல. அதான் சொல்லியிருக்கிறேன் பதிவில். எனவே கேமராவில் ஜூம் செய்யறப்ப சரியா வராதுதான். இருந்தாலும் ஒரு ஆர்வம் ...புகைப்படக் கலை ஆர்வம். இதில் கற்றுக் கொண்டால் வேறு நல்ல கேமரா எடுக்கும் போது இந்த அனுபவம் உதவும் தானே இல்லையா...

      நன்றி அதிரா.

      கீதா

      நீக்கு
  8. பெயர்கள்தான்... திட்டுவதுபோல இருக்கு ஹா ஹா ஹா .. கரண்டிவாயன்... அகல வாயல்... நத்தைகுத்திநாரை:)... எப்படிக் கண்டுபிடிக்கிறீங்க பெயர்களை எல்லாம்..
    நீங்கள் சொல்றீங்க நாங்க நம்புறோம் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா....அதிரா எல்லாம் பறவைகள் பற்றிய தகவல்களை அறிய முயற்சி செய்யறப்பதான்.

      என் மகன் வாங்கி வைத்திருக்கும் சலீம் அலி புத்தகம் ஒன்று சிறியது ஒன்று இருக்கிறது. அதிலிருந்தும், நான் எடுக்கும் படங்களை கூகுளில் போட்டுப் பார்த்து என்ன பறவை என்று அது சொன்னாலும் கூட அதன் உருவம் பற்றிய தகவல்கள் சரியா இருக்கான்னும், தமிழில் என்ன என்றும் அறிந்து கொள்வதுதான், அதிரா.

      நான் கூடியவரை சரி பார்த்துதான் சொல்கிறேன். பார்க்கும் அனுபவங்களை வைத்து. ஒரு வேளை பறவைகள் வல்லுநர்கள் இதைப் பார்க்க நேர்ந்தால் திருத்திச் சொன்னால் தெரிந்து கொள்ளலாம்தான்.

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
    2. ஹாஹாஹாஹா அதிரா எல்லாம் பறவைகள் பற்றி தெரிந்து கொள்ள முயற்சி செய்யறப்பதான்.

      சலீம் அலி எழுதிய பறவைகள் புத்தகம் வீட்டில் உண்டு. அதிலிருந்து தெரிந்து கொள்வதையும், நான் எடுக்கும் படங்களில் கொஞ்சம் தெளிவா உள்ளதை கூகுளில் போட்டுப் பார்த்து எடுக்கும் தகவல்கள் அது சரியா என்றும் கொஞ்சம் பார்த்து தமிழில் என்ன சொல்றாங்கன்னும் பார்த்துப் போடுவதுதான்.

      இங்கு வீட்டு அருகில் முந்தைய வீட்டருகில் இருக்கும் ஏரிகளில் எடுத்தவை நிறைய இருக்கு. இப்போதைய பகுதியில் இருக்கும் ஏரிகளை விட முந்தைய வீட்டருகில் இருக்கும் ஏரியில் நிறைய வகைகள் பார்க்கலாம் அது உள்ளடங்கி இருக்கும் ஏரி என்பதால். அதை எல்லாம் போடணும் ஆனால் ஒரு சிலதுக்குப் படங்கள் தெளிவா இல்லை என் கேமரா அப்படி.

      //நீங்கள் சொல்றீங்க நாங்க நம்புறோம் ஹா ஹா ஹா.//

      ஹாஹாஹாஹா,.....

      நான் இங்கு சொல்வதை ஏதேனும் பறவை வல்லுநர்கள் பார்க்க நேர்ந்து தவறைச் சுட்டிக் காட்டினால் நல்லதுதான். நாமும் தெரிந்துகொள்ளலாமே.

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  9. ///அன்றில் பறவைகள்/அறிவாள் மூக்கன்
    /// இது அரிவாள் என வருமோ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா அரிவாள் என்றுதான் வர வேண்டும் டைப்போ. தட்டும் போது ஏற்பட்ட பிழை. நன்றி இங்கு சொன்னதற்கு. இப்பலாம் எழுத்துப் பிழை சரி செய்ய விட்டுப் போகுது. நேரமின்மை கவனமின்மை பல வேலைகளாள் வரும் ஒரு அலுப்பு! ஹஹாஹஹாஅ

      நன்றி அதிரா

      கீதா

      நீக்கு