வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

சில்லு சில்லாய் - 6 - வைரல் பாய்ஸ், பாட்டி, திரு சைலேந்திர பாபு

 

இப்போதைய பெரும்பான்மை இளைஞர்கள், பெண்கள் பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள், செலவு செய்கிறார்கள், அப்பா அம்மாவின் கஷ்டம் புரிந்து கொள்வதில்லை என்ற பரவலான பொதுவான கருத்துகள் எங்கும், வலைத்தளங்களிலும் சொல்லப்படுகிறது. விதிவிலக்குகளை நான் சொல்லவில்லை.

சமீபத்தில் ஒரு வைரஸ் பற்றிய தகவல்கள் தேடப் போக தேவையில்லாத காணொளி ஒன்று வந்து கொண்டே இருந்தது. இப்படித்தான், நம் விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பவர் போல இந்தக் கொடை வள்ளல் கூகுள் நாம் தேடும் விஷயங்களில் உள்ள ஒரு சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு அதற்கான விஷயங்களை, காணொளிகளைக் காட்டிக் கொண்டே இருக்கும்.

சரி பார்ப்போம் நமக்கும் எழுத ஒரு மேட்டர் கிடைச்சா நல்லதுதானே! பார்த்தேன். அடக் கடவுளே! இந்த நீயா நானாவில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பையன்களின் பேச்சு பிராபல்யமாகி, அவர்களுக்கு வைரல் பாய்ஸ்னு ஒரு பட்டம்! விழா எடுக்காத குறையாக அதை வேறொரு யுட்யூப் சானல்  பேட்டி வேறு கண்ட காணொளி!!!

கடலை போடும் பெண்ணுடன் ஊர் சுற்றுவது, செலவழிப்பது, வீட்டிற்குத் தெரியாமல், அதற்குத் துணை போகும் நண்பர்களாம்,…. 7,8 பேர் கொண்ட குழு.

அந்தப் பையன் அப்பெண்ணுடன் ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருப்பானாம், திடீரென்று நண்பர்கள் குழுவுக்குப் ஃபோன் செய்து ரகசியக் குரலில் 900 என்பானாம். அது மட்டும்தான் சொல்லுவானாம். மீண்டும் அவனை அழைத்தால் அது மட்டும் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிடுவானாம்.

அப்போது இவர்களுக்குப் புரியுமாம், பையனுக்குப் பணம் வேண்டும் அங்கு திண்டாட்டம் என்று. உடனே குழு பரபரப்பாக அதைத் திரட்டிக் கொண்டு சென்று கொடுப்பார்களாம். இப்படி அவர்களது சாகசங்களை எல்லாம் நீயா நானாவில் பேசிட, அது வைரலாகி, வைரல் பாய்ஸ் பட்டம்!!!

 யுட்யூப்ல சென்சார் கொண்டுவாங்க சுந்தர் பிச்சை!

சரி….எனக்கு ஒரு டவுட். இந்தப் பெற்றோர் என்னதான் செஞ்சுட்டுருக்காங்க? ஜஸ்ட் கடலை போட நண்பர்களிடம் கடன் வாங்கி எப்போது அதைக் கொடுப்பான் எப்படிக் கொடுப்பான்? இதுக்கெல்லாம் கடன் வாங்கறோமே என்ற உணர்வு இருக்காதோ? அப்படி ஒன்றும் பெரிய பணக்காரப் பையன்களாகவும் தெரியவில்லை.

அப்புறம் ஏன் தங்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்று கூப்பாடு போடுறாங்கப்பா? போட்டி உலகில்  முன்னேறும் மாணவர்களைக் கண்டு, அவர்கள் ஏதோ இவர்களுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது போல் பேச்சு வேறு. இவர்கள் பொறுப்பில்லாமல் செய்வது ஏன் அவர்கள் கண்ணில் படுவதில்லை?

கொஞ்சம் ஃப்ளாஷ் பேக்

பாட்டிகள் படு சிக்கனம். பாட்டிகளின் பொருளாதாரக் கொள்கைகள் வீட்டிற்கு மட்டுமல்ல ஒரு நாட்டிற்கே அடிப்படையாக எடுத்துக் கொள்ளலாம். 

இதப் பாரு… உன் குழந்தைகளுக்கு நீ ஒண்ணும் சொத்து ஒண்ணும் சேத்து கொடுக்க வேண்டாம். (இதை அப்படியே நாட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம், மக்களுக்கு எந்த இலவசமும் கொடுக்க வேண்டாம்) பிள்ளையோ பொண்ணோ நன்னா படிக்க வைச்சு அவா சொந்தக் கால்ல நின்னா போறும். (இலவசம் கொடுக்கறதுக்குப் பதிலா படிக்கத் தரமான அரசுப் பள்ளிகளை உருவாக்கி ஊக்குவித்து முன்னேற்ற வேண்டும்). அவா படிக்கறதுக்கு செலவானா லோன் போட்டுடலாம். அதை அவா அப்புறமா உனக்கு அடைக்கட்டும். (இதையும் அரசுக்குப் பொருத்திப் பார்க்கலாம். நான் அப்படித்தான் படித்தேன்.) அவாளுக்குப் பொறுப்பு வரணும் இந்தக் காசு ஒண்ணும் சும்மா வரலைன்னு. அப்போதான் அவா சம்பாதிக்கறப்ப செட்டா குடித்தனம் பண்ணி அவா குழந்தைகளுக்கும் இந்தப் பொறுப்பு வரும்.”

படிக்கற குழந்தைக்கு போக வர பஸ் காசு தவிர - அது கூட நடந்து போய் படிச்சுட்டு வரலாம் - வேறு எதுக்குக் காசு? காசு என்ன மரத்துல விளையறதா?”

ப்படியான காலத்தில் வளர்ந்த குழந்தைகள் பெற்றோராகும் போது தாத்தா பாட்டிகளாகும் போது, “நாங்கள் வறுமைல கஷ்டப்பட்டது போல் நீங்களும் கஷ்டப்பட வேண்டாம்" என்று எப்படியோ கஷ்டப்பட்டேனும் அவர்கள் கேட்பதை வாங்கிக் கொடுத்துவிடுகிறோம்.

அப்படி வளரும் குழந்தைகளுக்கு நாம் எது கேட்டாலும் கிடைக்கும் என்று தெரிகிறது. கிடைக்காவிட்டால் அதை எப்படிப் பெறுவது என்ற வழிமுறைகளும் தெரிகிறது. இப்படி இருக்கும் போது எப்படிக் கஷ்டம் தெரியும்?

ஆனால் குழந்தைகளுக்குக் கஷ்டங்கள் உங்கள் அனுபவங்கள் தெரிந்திருக்க வேண்டும். மாறி வரும் காலத்திற்கேற்ப நாம் வாழ்ந்தாலும் குழந்தைகளுக்குப் பொறுப்பு வருவதில் நாமும் உதாரணமாக இருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்டக் கருத்து.

நாம் கஷ்டப்பட்டோம் நம் குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது என்று எள்ளு என்றால் எண்ணையாய் நிற்கிறோம். தவறில்லை. ஆனால் அதுதான் காரணம் எல்லாம் எளிதாக அடைந்துவிட முடியும் என்ற எண்ணம் அவர்களுக்கு வருவது.

பொருட்களை வாங்கிக் கொடுப்பதை விட குழந்தைகளின் படிப்பிற்கு, குழந்தைகள் நிஜமாகவே விருப்பப்படும் படிப்பைக்  கஷ்டப்பட்டேனும் படிக்க வைக்கலாம். ஆனால் அந்தக் கஷ்டம் குழந்தைகளுக்குப் புரிய வேண்டும். பொறுப்புடன் படிக்க வேண்டும். தன் பெற்றோர் செலவழிப்பதை அவர்களுக்குத், தாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம் என்ற பொறுப்பு வர வேண்டும்.

இப்போதைய குழந்தைகள் பிறக்கும் போதே Born with mobile.  

நல்ல பெற்றோர், நல்ல குழந்தைகள் விதிவிலக்குகள் பட்டியலில்.

இப்போதைய காலகட்டத்திலும் கூட கூலி வேலை, சிறு சிறு வேலைகள் பார்த்து உழைக்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை எப்படியேனும் படிக்க வைக்க வேண்டும் என்று பாடுபடுகிறார்கள். ஆனால் பிள்ளைகளோ? 

கில்லர்ஜி, சமீபத்துல வீடியோஸ் போட்டாரே… வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் இவங்களுக்குக் கிடையாதோ?


எனக்குப் பிடித்த ஆளுமை, எங்கள் ஊர்க்காரர் (எனக்கு இதில் கொஞ்சம் பெருமை உண்டு) திரு சைலேந்திரபாபு சமீபத்தில் உடல் & மன வளம் மிக்க சமுதாயம் உருவாக்க என்ற தலைப்பில் டாக்டர் அஸ்வின் விஜய் அவர்களுடன் உரையாடிய போது சொன்னது நினைவில் வருகிறது.

நேர மேலாண்மை என்பது ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் பயன்படுத்துவதுதான். ஆனா நான் என்ன நினைக்கிறேன் நாம தேவையில்லாத விஷயங்களுக்கு நிறைய நேரம் செலவழிக்கிறோமோன்னு. சரி தேவையில்லாத என்றால் என்னங்க? வெட்டிப் பேச்சு பேசுவது, தேவையில்லாததைச் செய்வது. ஸோ வாழ்க்கைல ஒரு செயல்திட்டத்தில் இருக்கும் ஆள், ஒரு கனவு இருக்கும் ஆள், அல்லது ஏதாவது சாதிக்க நினைக்கும் மனிதன் அவங்களுக்கு நேரத்தை வீணாக்குவதற்கு நேரமே கிடையாது.

நம்ம சமுதாயமே ஒரு பொழுது போக்கு சமுதாயம்தான்னு சொல்லுவேன். வெட்டியா பேச்சு பேசிட்டிருப்பாங்க. ஆனா இளைய சமுதாயத்தைப் பொருத்தவரைக்கும் அவங்களுடைய நேரம் ரொம்ப ப்ரிசியஸ் ரொம்ப ப்ரிசியஸ் (அழுத்தமாகச் சொல்கிறார்).

அவங்க ஒரு மொழி கத்துக்கணும். நம்ம தாய்மொழி கத்துக்கணும். இங்கிலிஷ் கத்துக்கணும். கணக்கு கத்துக்கணும்ங்க. இந்த பூமி எப்படி இருக்கு எங்க, எங்க எல்லாம் என்ன ஊர் இருக்கு. இந்த ஊருக்கு எப்படி போவது. எங்க மலை இருக்கு. எங்க ஆறு இருக்கு. இதுவும் தெரிஞ்சுக்கணும். மனிதனுடைய சரித்திரம் தெரிஞ்சுருக்கணும். சயின்ஸ் ரொம்ப ரொம்பத் தெரிஞ்சுருக்கணும். சயின்ஸ் இல்லாம உலகத்துல எதுவுமே கிடையாது.

நாங்கள்லாம் வளரும் போது சைபர் க்ரைம்ன்றதே கிடையாது. இப்ப சைபர் க்ரைம்ன்றாங்க. சைபர் க்ரைம்னா என்ன? அதை நாம தெரிஞ்சுக்கிட்டே ஆகணும். இப்படி சில வித்தைகளை நாம தெரிஞ்சுக்கிடறதுக்குத்தான் நமக்கு நேரம் இருக்கு.

பொழுது போக்கு வேண்டாவே வேண்டாம்னு நான் சொல்லலை. ஆனா, ஏதோ நம்ம இளைஞர்கள் இந்தப் பொழுது போக்குக்குத் தேவைக்கும் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கறீங்களோ அப்படீன்ற ஒரு எண்ணம் எனக்கு இருக்கு. நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது  ஸ்கில் செட் – Skill set.  

நேரமேலாண்மையோடு prioritisation – அதாவது முன்னுரிமை கொடுத்தல். முன்னுரிமை கொடுக்க வேண்டியவற்றை முதலில் செய்தல். Eat the frog. இது ஒரு நேர மேலாண்மை பற்றிய புத்தகம். இதன் பொருள் என்னவென்றால் அன்றைய தினத்தின் உங்கள் பணிகளில் மிகக் கடினம் என்று எதை நினைக்கிறீர்களோ அதை முதலில் செய்து முடிப்பது.

வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாமல் சுற்றும் வைரல் பாய்ஸ் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், இளைஞர்கள் இதைக் கவனியுங்கள். அவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருமே மனதில் கொள்ள வேண்டிய விஷயம்.

 

-----கீதா

(உடற்பயிற்சி தொடரே போட்டா போரடிக்குமோ என்று இடையில் சில்லு சில்லாய். அடுத்து தொடர் வரும். சென்ற பதிவை வாசித்த, கருத்திட்ட அனைவருக்கும் நன்றி)

 

 

 

 


38 கருத்துகள்:

  1. கற்ற வித்தையெல்லாம் ஒரே சமயத்தில் காடுவது போல உங்களுக்கு தெரிந்த எல்லா விஷயங்களையும் ஒரே பதிவில் போட்டுவிட்டீங்க போல இருக்ககே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை மதுரை, கொஞ்சம் பாருங்க ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. முதலில் இப்போதைய பசங்க வாழ்க்கையை வாழும் விதம்.....அது எனக்கு என் இளம் வயதை நினைவுபடுத்தியது என் பாட்டியின் அறிவுரைகள், அதையே இக்காலத்துக்கு ஊக்கம் கொடுக்கும் உரையாடல்களை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அவர்களை நல்வழிப்படுத்த அவ்வப்போது உரையாற்றும் சைலேந்திர பாபு அவர்களின் கருத்துகள். இரு காணொளிகளையும் கேட்டால் தெரியும். அவர் சொல்வதில் கொஞ்சம்தான் நான் தொகுத்து எழுத்தில் கொடுத்திருக்கேன்... இன்னும் அதில் சொல்கிறார்.

      வேறொரு காணொளியில் அவர் சொல்வது, என் பாட்டி சொன்னவை, என் கருத்தும் அதுதான் அதாவது அவர் சொன்னது - என் அம்மா எங்களுக்கு எந்த சொத்தும் சேர்த்து வைச்சு தரலை ஆனால் மிகப் பெரிய சொத்து கொடுத்திருக்காங்க அதுதான் கல்வி ன்னு...

      இதைப் பிரித்துக் கொடுத்தால் தொடர்பற்றுப் போய்விடும் என்பதால் இப்படி...காணொளிக் கருத்துகளைத் தொகுக்காமல் கொடுத்திருந்தால் சின்னதா முடிஞ்சுருக்கும் ஆனால் எத்தனைப் பேர் காணொளி பார்க்க முடியும்? எனவே எழுத்தாய் கொடுத்தேன்...

      மிக்க நன்றி மதுரை

      கீதா

      நீக்கு
  2. சிறப்பான கட்டுரை இந்த இழிவான நிலைக்கு பெற்றோர்கள்தான் காரணம்.

    சமூக பொருப்பு என்பது எல்லோருக்கும் வேண்டும்.

    முதலில் அரசுக்கு, அவர்களை தேர்ந்தெடுக்கும் அறிவு மக்களுக்கு தேவை.

    காணொளி கண்டேன். பதிவில் என்னை குறிப்பிட்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி, பெற்றோர் முதல் காரணம்...வீட்டில் சீரியல்கள் ஓடுகின்றன..(சைலேந்திர பாபு இதைச் சொல்கிறார். சீரியல்கள் அவசியமில்லை என்று) அடுத்து பள்ளிகள், கல்லூரிகள்.

      ஆமாம் சமூகப் பொறுப்பு எல்லோருக்கும் வேண்டும்.

      முதல் காணொளி - நீங்கள் வெளியிட்டிருந்த காணொளிகள்.

      சைலேந்திர பாபு அவர்களின் காணொளிகளைக் கண்டு கொண்டிருந்த போது அவர் பேசிய அந்தக் காணொளியும் கண்டேன். அதனால்தான் அதையும் கொடுத்தேன்...அந்த மாணவர்களுக்கு அவர் கொடுத்த அறிவுரை.

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  3. கூகுள் காட்டும் குப்பைகளை பார்க்காமல் இருப்பதே நல்லது என தெரிகிறது. ஊருக்கு தெரிந்திருந்தாலும் உறவுக்கு தெரியாமலா இருக்கும்? இந்தக் கர்மங்களை எல்லாம் அவரவர் பெற்றோர் அறியாமலா இருப்பார்? அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் குமைந்து கொண்டு இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம், கூகுள் பல சமயங்களில் குப்பைகளைத்தான் காட்டுகிறது. இதுவும் குப்பை என்றாலும் இணைத்துப் பார்க்கும் மேட்டர் ஏற்கனவே பாட்டி, சைலேந்திர பாபு பேசிய உரை எல்லாம் எடுத்து வைத்திருந்ததால் பொருத்தி எழுத ஒரு மேட்டர்!!!

      ஆமாம் பெற்றோர் ஒன்று குமைந்து கொண்டிருப்பார்கள்....நீங்கள் சொல்வது போல் இல்லைனா...சிலர் தங்கள் பிள்ளைகள் டிவியில் யுட்யூப் சானல்களில் வருவதைப் பெருமையாகவும் நினைக்கிறாங்க இல்லை இதைச் சொல்லி நகைச்சுவையாகப் பேசுற பெற்றோர்களும் இருக்காங்க ஸ்ரீராம் நான் பார்க்கிறேன். என்ன சொல்ல

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  4. அந்தக் காலம் போல இந்தக் காலம் இல்லை என்பது முற்றிலும் நிஜம்.  மேலும் இந்தக் காலத்தில் கூட்டுக்குடும்பம் இருந்தால்தானே பாட்டிகள் பேரன் பேத்திகளுக்கு வழிகாட்ட முடியும்?  தப்பித்தவறி இருந்து விட்டாலும் அவர்களை எங்காவது கொண்டுபோய் கோவிலில் கண்காணாத ஊரில் விட்டு விடுகிறார்கள்  (வெங்கட் பதிவு பாருங்கள்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் காலம் போல இந்தக் காலம் இல்லை என்பது முற்றிலும் நிஜம்.//

      அது சரிதான், ஸ்ரீராம் ஆனால் எனக்கு என்ன தோன்றும் என்றால் அப்போது மீடியா டெக்னாலஜி இவ்வளவு இல்லாததால் அதிகம் தெரியவில்லையோ என்னவோ என்று.

      கூட்டுக் குடும்பம் இல்லாதது ரொம்ப வருத்தமான விஷயம். ஆனால் ஒரு விஷயம் அப்போது பாட்டிகள் பேரன் பேத்திகளோடு நேரம் செலவழித்தார்கள். ஆனால் அதன் பின்னான பாட்டிகள் எப்போது டிவி வீட்டிற்குள் வந்து சீரியல்கள் வந்ததோ அப்போதிலிருந்து அவர்கள் அதில் ஒன்றிப் போனார்கள் ஸ்ரீராம். நான் பார்க்கிறேன்...நிறையபேர் தாங்கள் தனியாக இருக்கிறோம் தங்கள் சுதந்திரம் என்றே இருக்காங்க...!!!! ஆனால் தன்னால் நடக்கக் கூட முடியாத போது தன் குழந்தைகள் தன்னோடு இருக்க வேண்டும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாங்க...நம் கால பாட்டி தாத்தாக்களின் கூட்டுக்குடும்ப சிந்தனைகள் இப்போதைய தாத்தா பாட்டிகளிடமும் இல்லை, இளையவர்களிடமும் இல்லை. விதிவிலக்குகள் உண்டு.

      //தப்பித்தவறி இருந்து விட்டாலும் அவர்களை எங்காவது கொண்டுபோய் கோவிலில் கண்காணாத ஊரில் விட்டு விடுகிறார்கள் (வெங்கட் பதிவு பாருங்கள்)//

      இது மிக மிக வேதனையான விஷயம் ஸ்ரீராம். நான் இப்படி நிறைய பேரை இங்கு பார்க்கிறென் மனம் வேதனையாக இருக்கு.

      வெங்கட்ஜி பதிவு வாசித்து விட்டேன். மனம் என்னவோ செய்தது.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. //எங்காவது கொண்டுபோய் கோவிலில் கண்காணாத ஊரில் விட்டு // இதெல்லாம் அபூர்வம். நமக்குத் தெரிந்து யாராவது இப்படிப் பண்ணியிருக்காங்களா? வடநாட்டில் இப்படிப் பண்றாங்கன்னா அதுக்கு நாம என்ன பண்ணறது?

      எத்தனை வீட்டுல ஹஸ்பண்ட் ஒயிஃப் பேசிக்கறாங்க, மொபைல்ல அல்லது சீரியல்ல மூழ்காம? எல்லாமே தனித்தீவுகள். இதுல தாத்தா பாட்டி வேறயா?

      நீக்கு
    3. இதெல்லாம் அபூர்வம். நமக்குத் தெரிந்து யாராவது இப்படிப் பண்ணியிருக்காங்களா?//

      நெல்லை இங்க பங்களூர்லியே பார்க்கலாமே....தவிர சென்னைல நான் யோகா வகுப்பு போனப்ப அதாவது 16 17வருஷம் முன்னயே எங்க வகுப்புல இருந்தவங்க இப்படியானவங்களுக்கான Rehabilitation செய்ய நிறைய முயற்சி எடுத்து செய்தாங்க. அது போல அடையார் கான்சர் மருத்துவமனையில இப்படி வயசானவங்க, குழந்தைகளை பலர் விட்டுட்டு அப்புரம் வந்து கூட்டிட்டுப் போக மாட்டாங்க அதுல மனைவிகள் கணவன்மார்கள் எல்லாரும் அடக்கம். அவங்க அப்புறம் நிராதரவா என்ன பண்ணறதுன்னு முழிச்சவங்கள நிறைய தன்னார்வலர்கள், அப்புறம் த்ரிஷா, விஜய் எல்லாரையும் தொடர்பு கொண்டு மறுவாழ்வு கொடுக்க முயற்சி எடுத்தாங்க. தொடர்ந்து செய்யறாங்க...

      கீதா

      நீக்கு
    4. நெல்லை நம்மைச் சுத்திக் கொஞ்சம் கூர்ந்து கவனிச்சா நிறைய பார்க்கலாம்...தெரியவரும்...

      கீதா

      நீக்கு
  5. பலநாட்டு பொருளாதாரங்கள் ஆடிப்போனபோதும் நம் நாட்டுப் பொருளாதாரம் ஸ்டெடியாய் நின்றதற்கு நம் கிச்சன் கேபினெட் முறையும் காரணம் என்று தண்ணீர் விட்டா வளர்த்தோம் கட்டுரையில் குருமூர்த்தி சொல்லி இருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக நம் கிச்சன் கேபினெட் அருமையான முறை என்பேன். இப்போதும் எனக்கு இந்தப் பழக்கம் உண்டு! அது போல என் கையில் பணம் கொடுத்தால் வீட்டில் இருக்கும் பர்ஸ்களில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் பதுக்கு வைப்பேன். நமக்குத்தான் மறதி யாச்சே....அப்புறம் தேவைப்படும் நேரத்தில் "ஏதாச்சும் பதுக்கியிருப்பியே கிச்சன், பர்ஸ் இப்படி.....எடுத்துப் பாரு" என்று நினைவுபடுத்த அது உதவிய நேரங்கள் நிறைய.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. ஹல்லோ...கிச்சன் கேபினட் முறை கிடையாது. பொதுவா நாம இந்தியர்கள், 100 ரூ சம்பாதிச்சா 30 ரூபாயாவது சேர்க்க முயற்சிப்போம். நம்ம தேவைகளும் குறைவு. அதனாலதான் சேமிப்புல ரூபாய் எடுத்துத் தப்பித்தோம்.

      நீக்கு
    3. நெல்லை என் பிறந்த வீட்டில், (அது போல எனக்குத் தெரிந்த குடும்பங்களில் என் புகுந்தவீடு உட்பட) என் பாட்டி தான் கிச்சன் கேபினெட் ப்ளஸ் இன்டெர்னல் அட்வைசர். அவங்க கைலதான் நிர்வாகம் முழுக்க. நீங்கள் சொல்வது போல இரண்டும் கலந்தும் என்று சொல்லலாம்.

      பாட்டி, அட்வைசராவும் இருந்துருக்காங்க!!!

      கீதா

      நீக்கு
  6. பொழுது போக்கு என்று இன்றைய குழந்தைகளுக்கு / இளைஞர்களுக்கு என்னென்ன இருக்கிறது என்று லிஸ்ட் போட்டு பாருங்கள்...  ஏதாவது நல்ல விஷயமாய் இருந்தால் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் நீங்க சொல்றது சரிதான் ஆனா. அதற்குத்தான் மோட்டிவேஷனல் காரங்க சொல்றது, வாசிக்கும் பழக்கம், உடற்பயிற்சி, பீச்சுக்குப் போய் விளையாடச் சொல்றாங்க....மக்களுக்கு உதவும் தன்னார்வச் செயல்களில் பங்கெடுக்கச் சொல்றாங்க.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. //வாசிக்கும் பழக்கம், உடற்பயிற்சி, பீச்சுக்குப் போய் விளையாடச் சொல்றாங்க....மக்களுக்கு உதவும் தன்னார்வச் செயல்களில் பங்கெடுக்கச் சொல்றாங்க.// - வாசிக்கறதுக்குப் பதில் மொபைல்ல வாசிக்கறாங்க. பீச்சுக்கா? சரி சரி..பெங்களூர்ல பீச்சைத் தேடுகிறேன். 'தன்னார்வச் செயல்'-வயசானவங்களே இதனைச் செய்யறதில்லை, குழந்தைங்க தலைல இதைக் கட்டறீங்களே.... உடற்பயிற்சி-இதெல்லாம் பொழுதுபோக்கா?

      நீக்கு
    3. பெங்களூர்ல தான் எவ்வளவு ஏரிகள் இருக்கு..பீச்சுக்குப் பதிலா...ஆனா என்னன்னா இந்த மெயின் ரோட்டுக்குப் பக்கத்துல இருக்கற ஏரிகளைச் சுத்தி ஒரே வண்டி ஓட்டமா பாவம் இத்தனை வருஷம் வந்த பறவைகள் எல்லாம் இப்ப வரதே இல்லை...கூடு கட்டி அவங்க வாழ்க்கைய வாழ கொஞ்சம் உட்பக்கமா இருக்கற ஏரிகளை நோக்கிப் போறாங்க....

      //'தன்னார்வச் செயல்'-வயசானவங்களே இதனைச் செய்யறதில்லை, குழந்தைங்க தலைல இதைக் கட்டறீங்களே//

      ஹாஹாஹாஹா.....வயசானவங்க செய்யலைன்றதுக்காகத்தான் சின்னவங்களை மோட்டிவேட் பண்ணறாங்க...சும்மா வெட்டியா இல்லாம இது நல்ல விஷயமாச்சே..

      நெல்லை பொழுது போக்குன்னு சொல்லித்தான் சினிமா....அது தியேட்டரோட விட்டு வந்தா ஓகே ஆனா நடிகர்கள் பின்னாடி அலையுதே இளையவட்டம்...அதுக்குத்தான்...இன்னொனு, பொழுதுபோக்கு என்பது நேரம் விரையமாக்காம செய்யறதும் உண்டு அதில் அடக்கம். ஹாபிஸ்னு சொல்றதில்லையா...உடற்பயிற்சி கூட அதில் அடங்கும் நேரத்தை நல்லவிதமா செலவிடுதல்ன்றமாதிரி...விவேகானந்தர் சொன்னதும் அதுதான்...

      மிக்க நன்றி நெல்லை...

      கீதா

      நீக்கு
  7. நல்ல கட்டுரை , நன்றாக இருக்கிறது.திரு சைலேந்திர பாபு காணொளி, மற்றும்

    டாக்டர் அஸ்வின் விஜய் அவர்களுடன் உரையாடிய காணொளி இரண்டும் கேட்டேன்.
    உரையாடலை அருமையாக ஒன்று விடாமல் தொகுத்து கொடுத்தது அருமை.பெற்றோர்களுக்கு நேரம் ஒதுக்கி பேசுங்கள் இரவு நேர உணவை குடும்பத்துடன் சாப்பிடுங்கள். கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள். தோல்வியை கண்டு துவண்டு போகாமல் எந்த ஒரு தவறான முடிவும் எடுக்கமால் தோல்வியை வெற்றியாக மாற்றுங்கள் என்று சொன்னது பிடித்து இருந்தது.
    உடல் நலம், மன நலம் காத்துக் கொள்வது நல்லது என்று சொன்னது மிக முக்கியமானது.
    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா உரையாடலை முழுவதும் தொகுத்தேன்....பதிவு நீண்டுவிட்டதால் மீதியை அப்படியே வேறு ஒரு பதிவுக்கு போட்டுவிட்டேன். ..

      அட நீங்களும் கேட்டுத் தொகுத்துவிட்டீங்களே...ஆமாம் மிக நல்ல கருத்துகள். இப்போது அவர் பல கல்லூர்கள் பள்ளிகளில் குழந்தைகளை இளைஞர்களை உத்வேகப்படுத்தும் உரைகள் நிகழ்த்துகிறார். (கொஞ்சம் லெஸ் ப்ரௌன் ஸ்டைலில் - அவருக்குப் பிடித்த மோட்டிவேஷனல் உரையாளர்...) ஆனால் அப்படி உரத்துப் பேசுவது உணர்வுபூர்வமாகப் பேசுவது பதியும்.

      ஆமாம் கோ௳திக்கா அவர் உடல் நலமும் பேண வேண்டும் என்று உடற்பயிற்சி செய்யவும் சொல்கிறார்.

      விவேகானந்தர் சொன்னது....உடல்நலம் ஆரோக்கியமா வைச்சுக்கணும் மனந்லம் என்று இளைஞர்களுக்குச் சொல்லியிருக்கிறாரே....அது போல இவரும் உரையாற்றுகிறார்.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  8. சிறப்பான கருத்துகள்... சிந்தனைக்கு உரியவை..

    அவர் சொன்னார் இவர் சொன்னார்..

    என்றெல்லாம் வேண்டாம்...

    யாருடைய செயல்பாடுகள் நன்றாக இருக்கின்றன?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை அண்ணா.

      சொல்லும் கருத்துகளில் நல்லதை எடுத்துக் கொள்வோமே. சொல்பவரைப் பற்றிக் கருத்துக் கொள்ளாமல்,. ஆனால் இவர் பல குழந்தைகளை படிக்க வைக்கிறார், கல்வி எவ்வளவு முக்கியம் என்று உரையாற்றுகிறார் பெற்றோரை மதிக்க வேண்டும் என்றும் .....

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  9. அவனும் இவளும் எங்கேயாவது கூடி கடலை போடுவார்களாம்.. 900 என்று வந்தால் மற்ற கழிசடைகள் ஒன்று சேர்ந்து செலவுக்கு பணம் கொடுப்பார்களாம்..

    பணம்
    எங்கேயிருந்து கிடைக்கும்?..

    அதுதான் ஹெல்மெட்டு இருக்கிறதே.. தலையில் கவிழ்த்துக் கொண்டு வழிப்பறிக் கொள்ளை அடிக்க வேண்டியது தான்..

    கடலை விஷயம் என்றாலே அவ்வளவு தான் மரியாதை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுதான் ஹெல்மெட்டு இருக்கிறதே.. தலையில் கவிழ்த்துக் கொண்டு வழிப்பறிக் கொள்ளை அடிக்க வேண்டியது தான்..//

      ஓ இப்படியும் நடக்கிறதா ...இப்படிச் செலவுக்காக? உருப்பட்டாப்லதான்!!

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
  10. இன்றைய இளைஞர்களின் போக்கு மிகவும் கவலைக்கு உரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கரந்தை ஜெயக்குமார்..

      // இன்றைய இளைஞர்களின் போக்கு மிகவும் கவலைக்கு உரியது.. //

      இன்றைய கல்வி முறையின் பெருமை..

      நீக்கு
    2. ஆம் கரந்தை சகோ..

      மிக்க நன்றி கரந்தை சகோ

      கீதா

      நீக்கு
  11. எப்போதும் இளமை ஊஞ்சலாடும் உற்சாகத்துடன் பயணம், உடற்பயிற்சி என்று பதிவு எழுதுபவர் நீங்கள். ஆனால் திடீரென்று பெரிசு ரேஞ்சுக்கு வைரல் பாய்ஸ், பிள்ளைகளை சிக்கனம் ஆக வளர்ப்பது, மொபைல் கொடிது என்று எல்லாம் புலம்ப ஆரம்பித்து விட்டீர்கள். 

    பதிவை எந்த இளம் வயதினரும் பார்க்கப் போவதில்லை. இங்கு வருபவர்கள் எல்லோரும் 'பெருசு' தான். படிப்பார்கள். அப்படித்தான் என்று  ஆமோதிப்பார்கள்.அதோடு சரி. 

    ஓகே ஓகே பதிவு மிகச் சரி. ஆனால் அறிய வேண்டியவர்கள் படிக்க மாட்டார்கள். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும் இளமை ஊஞ்சலாடும் உற்சாகத்துடன் பயணம், உடற்பயிற்சி என்று பதிவு எழுதுபவர் நீங்கள். ஆனால் திடீரென்று பெரிசு ரேஞ்சுக்கு வைரல் பாய்ஸ், பிள்ளைகளை சிக்கனம் ஆக வளர்ப்பது, மொபைல் கொடிது என்று எல்லாம் புலம்ப ஆரம்பித்து விட்டீர்கள். //

      ஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன், ஜெகே அண்ணா....ஹையோ நெல்லை இதைப் பார்க்காம இருக்கணுமே ...ஒன்னுமில்லை பெரிசு ன்னு சொல்லிட்டீங்களேன்னு ஹிஹிஹிஹி...

      இங்கு வருபவர்கள் எல்லோரும் 'பெருசு' தான். படிப்பார்கள்//

      ஆஹா அதான் நெல்லைய காணலியோ....ஹாஹாஹாஹா

      பரவால்ல அண்னா போட்டு வைப்போம் ...

      மிக்க நன்றி ஜெ கெ அண்ணா

      கீதா

      நீக்கு
  12. சிறப்பான கட்டுரை... நுண்ணிய கவனிப்பு...

    பதிலளிநீக்கு
  13. திரு சைலேந்திரபாபு அவர்கள் அடிக்கடி சைக்கிள் பயணம், ட்ரெக்கிங் என்று செல்லுவதுடன் நல்ல கருத்துக்களையும் பகிர்வார் ..முக நூலில் அவரை தொடர்வதால் கொஞ்சம் தெரியும் ..

    இந்த பசங்களை பற்றி என்ன சொல்லுவது ...இது சமூகத்தின் ஒரு முகம் ...

    மற்றோரு முகம் உண்டு மிக பொறுப்பாக கடின உழைப்போடு படிக்கும் பசங்கள் 12வது படிக்கும் போதே இரவு 1 மணி வரை படிப்பதும் , வெளியே எங்கும் செல்லாமல் குறிக்கோள் கொண்டு உழைப்பதும் அப்பா பிரமிப்பாக உள்ளது..

    அப்படி பட்ட மாணவர்களை கண்டு வருவதால் இவர்களை பற்றி கூற ஒன்றும் இல்லை ..

    நமக்கு என்ன வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை அவர்கள் கையில் ... ம் ..அப்படி தீர்மானிக்கும் வழியை காண்பிக்கும் பொறுப்பு பெற்றவர்களுக்கு உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அனு, அவர் சைக்கிள் பயணம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை சென்றிருக்கிறார். மாரத்தான் சென்னையில் ஒருங்கிணைப்பதுண்டு. இப்ப பல பள்ளிகளில் கல்லூரிகளில் அவர் நிறைய மோட்டிவேஷனல் உரையாற்றி வருகிறார். சில வருடங்களாக. இளைஞர்களோடு நல்ல நட்புடன் பழகுவார். அவரை அணுகுவதும் மிக எளிது அதாவது குறைகள், கல்வி என்று பயனுள்ள விஷயங்களுக்கு அவரை அணுகுவது மிக எளிது. அவர் நிறைய குழந்தைகள் படிப்பதற்கும் உதவி வருகிறார்.

      ஆமாம் நல்ல பொறுப்போடு உழைக்கும் மாணவர்களும் உண்டு, அவர்களைப் பற்றி எபி சனிக்கிழமை பதிவில் வந்துவிடும் பெரும்பாலும்.

      நான் இரு வகையோரையும் கண்டு வருகிறேன், அனு.

      நீங்கள் சொல்வது போல் அவர்கள் தீர்மானிக்கலாம் அதற்கு அடிப்படை வழியைக் காட்டி விடும் பொறுப்பு பெற்றோருக்கு உண்டு.

      மிக்க நன்றி அனு

      கீதா

      நீக்கு
  14. அருமையான விழிப்புணர்வு பதிவு கீதா!
    நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுப்பதில் பெற்றோரின் பங்கு தான் 90 சதவிகிதம் இருக்கிறது. அப்படி வளர்க்கப்பட்ட பிள்ளைகள் வழி தவறுவதில்லை. அதிலும் பெண்கள், வறுமைக்கோட்டில் இருப்பவர்கள் பொறுப்பாகவே செயல்படுகிறார்கள். மேல் தட்டில் இருக்கும் பெண்கள் தான் வழி மாறுகிறார்கள். பசங்களைப்பற்றி கேட்கவே வேண்டாம்! ஒரு முறை சென்னையில் ஏர்ப்போர்ட்டிற்கு சென்ற போது காரின் சில பாகங்கள் உடைந்து கிடந்ததைப்பற்றி பேசிய போது, முதல் நாள் தான் 5 கல்லூரிப்பெண்களை பாண்டிச்சேரி வரை அழைத்துச் சென்றதாயும் நன்றாக மது அருந்தி விட்டு, அவரையும் குடிக்கச் சொல்லி அந்த பெண்கள் வற்புறுத்தியதாயும் அந்த கார் ஓட்டுனர் சொன்னார்.
    என் சகோதரின் மருமகள் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியை. தஞ்சையில் வெளிப்படையாக போதை மருந்துகள் கிடைப்பதாயும் அதை விழுங்கி விட்டு வரும் 13,14 வயது மாணவர்களைப்பற்றியும் வருந்தி பல முறை பேசியிருக்கிறார்.
    அதே சமயம், என் சகோதரி வீட்டில் என் தாயாரைப்பார்த்துக்கொள்ள வரும் பெண்ணைப்பற்றி அறிந்த போது அசந்து விட்டேன். தந்தையை இழந்து, தாயை கவனித்துக்கொள்வதற்காக இந்த வேலைக்கு வரும் அந்தப்பெண், இரவு 7 மணிக்கு பஸ்ஸைப்பிடித்து தஞ்சையிலிருந்து 20 கிலோ மீட்டர் வரை இருட்டில் சென்று நடுவில் இறங்கி அவள் கிராமத்திற்கு 10 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்றடையும்போது இரவு 9 மணிக்கு மேல் ஆகி விடுகிறது. அப்படியே அம்மாவின் மடியில் தூங்கி மறுபடியும் காலை ஏழு மணி பஸ்ஸைப்பிடித்து இதே ஒட்டம் தான்! ' அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ளணும் மேடம்" என்று அந்தப்பெண் சொன்ன போது மனம் கலங்கியது. இந்த மாதிரியும் பொறுப்பு நிறைந்த பெண்கள் இருக்கிறார்கள். நான் முன்பே சொன்னது போல அடித்தளம் தான் காரணம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ அக்கா விரிவான அருமையான கருத்து. ஆமா பொறுப்புள்ளவர்களும் இருக்கிறார்கள்...அந்த ஓட்டுநர் சொன்ன அவர் அனுபவம் ரொம்ப மோசமான அனுபவம்...அப்பெண்களின் பெற்றோர் மேல்தட்டாக இருக்கும்...

      தஞ்சை செய்தியும் மனதை வேதனைப்படுத்தும் விஷயம்.

      உங்கள் அம்மாவைப் பார்த்துக் கொள்ளும் பெண் - என்ன பொறுப்புணர்வு!!! ஆமாம் அடித்தளம்தான் காரணம். அடித்தளம் பெற்றோர்தான்...

      மிக்க நன்றி மனோ அக்கா

      கீதா

      நீக்கு
  15. என்ன...ரொம்ப வயசானவங்களுக்கான பதிவாகப் போயிட்டுது... எங்களை மாதிரி இளைஞர்களுக்கும் பதிவு போடுங்க. எப்போப் பாத்தாலும் உங்க Age Groupக்கே பதிவு போடலாமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹா நினச்சேன்...எதிர்பார்த்தேன்!!! அதுல ஜெ கெ அண்ணா வேற எடுத்துச் சொல்லிட்டாங்க!!! ஹாஹாஹாஹாஹா...

      உங்களை மாதிரி இளைஞர்களுக்குன்னா...வாங்க வாங்க அப்படி வாங்க.......தமன்னா படம் தானே!! ஹாஹாஹா சரியாத்தான் சொல்லிருக்கீங்க, நெல்லை!!!

      நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு