கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க
அனுமதி இல்லை.
இந்த ஊரைப் பற்றி: நாராயண-வனம்
என்ற பெயரே உங்களுக்கு உணர்த்தியிருக்கும். காடுகள் சூழ் ஊர் என்பதாலும் வெங்கடேசப்
பெருமாளின் திருமணம் இங்கு நடந்ததாலும், நாராயணவனம். (இப்போது காடுகள் வெகு தொலைவில்!!!)
புராணங்களில் – நாராயண புரம். பல்லவர்கள் காலத்திலும் நாராயணபுரம். சோழர்கள் காலத்தில் இது நாராயணவனம் என்று சொல்லப்பட்டதாகவும், விஜயநகர அரசின் காலத்தில் நாராயணவரம் என்றும் அழைக்கப்பட்டதாம்.
இந்த ஊர் மற்றும் கோயிலின் விசேஷம் – பத்மாவதி தாயாருக்கும், திருப்பதி பெருமாளுக்கும் திருமணம் நடந்த ஊர். அதனால் இக்கோயிலில் பெருமாளின் பெயர் கல்யாண வெங்கடேசப் பெருமாள்.
முன்னொரு காலத்தில் இந்த ஊரை ஆண்டு வந்த ஆகாச ராஜா என்பவரின் மகளாகப் பத்மாவதி தாயார் பிறந்தார். இப்பகுதி முழுவதும் வனமாக இருந்ததுதானே! வேட்டையாட வந்த பெருமாள் (இதற்கும் ஒரு புராணக் கதை உண்டு. இதைப் பற்றிய திரைப்படமும் உண்டு. உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும் என்பதால் கதைகளைத் தவிர்க்கிறேன்) பத்மாவதித் தாயாரிடம் மையல் கொள்ள, தாயாரின் பிறந்த ஊர் இது என்பதால் இங்கு திருமணம் நடந்தது.
பெருமாள் கல்யாணக் கோலத்தில். தாயாருக்குத் தனி சன்னதி இருக்கிறது. தாயாரின் அழகு சொல்லி முடியாது. சன்னதியின் முன்னில், ஒரு பெரிய கல் இயந்திரம் இருக்கிறது. கல்யாணத்திற்கு மஞ்சள் அரைத்த இயந்திரம் என்று சொல்லப்படுகிறது. பலகையில் தமிழிலும் இதை எழுதி வைத்திருக்கிறார்கள்.
திருமணம் தடைபட்டால் இங்கு வேண்டிக் கொண்டால் நடக்கும் என்ற நம்பிக்கை. திருமணம் நடந்ததும் இங்கு கல்யாண் உத்சவம் செய்கிறார்கள்.
மற்றபடியும் இக்கோயிலிலும் திருப்பதி பெருமாள் கோயிலில் நடைபெறுவது போல் பெருமாளின் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. தினமுமா என்றால், எனக்குத் தெரியவில்லை. ஆனால் திருப்பதி கோயிலில் நடைபெறுவது போன்ற தினப்படி வழிபாடுகள் நடக்கிறதாகத் தெரிகிறது.
நாங்கள் சென்ற ஒவ்வொரு முறையும் எந்தவிதத் தடையும் இல்லாமல் ஜருகண்டி இல்லாமல் தரிசிக்க முடிந்தது. ஒரே ஒரு முறை ஏதோ ஒரு உத்சவ தினத்தில் சென்றதால் கொஞ்சம் காத்திருந்து தரிசித்தோம். மற்றபடி இக்கோயிலில் கூட்டமே இருந்ததில்லை. நினைத்தால் கிளம்பிச் சென்று டக்கென்று தரிசித்து வந்துவிடலாம் என்றுதான் இருந்தது. இப்போது எப்படி என்று தெரியவில்லை.
முதன் முதலில் ஆகாசராஜாதான் இக்கோயிலை எழுப்பியதாகச் சொல்லப்படுகிறது. அப்போது பெருமாள் மட்டுமே. அதன் பின் வந்த பல்லவ, சோழ, விஜயநகர சாம்ராஜ்யங்களில் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது என்றும் அதன் பின் மற்ற சன்னதிகள் உருவாக்கப்பட்டன என்றும் சொல்லப்படுகிறது.
ராஜகோபுரம், கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது என்றும் உள்ளில் இருக்கும் இரண்டாவது கோபுரம் வீரநரசிம்ம தேவயாதவராயரால் எழுப்பப்பட்டது என்றும் சில வரலாறுகள்.
இக்கோயிலும் திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ளது.
கோயிலின் நேர் எதிரில் ஆஞ்சநேயர் சன்னதி. (அரை நிமிடத்தில்) இடப்புறம் செல்லும் தெருவில் புகழ் பெற்ற சுரைக்காய் சித்தரின் சமாதி மண்டம் இருக்கிறது. வலது புறம் வீரபத்திரர் கோயில். (நாங்கள் சென்றாலும் புகைப்படம் எடுக்கமுடியவில்லை. என் மூன்றாவது விழி கோபித்துக் கொண்டதால்)
கோயிலில் இருந்து சற்று தூரத்தில் இருக்கிறது கோயிலுக்கான புஷ்கரணி என்று சொன்னார்கள். நாங்கள் சென்று பார்க்கவில்லை. அங்கு தெப்போத்சவம் நடக்குமாம்.
இந்த ஊரைச் சுற்றி ஆறு ஓடுகிறது. பெயர் அருணா. எடுத்த படம் சரியாக வரவில்லை. இவ்வூரின் மிக அருகில் கோனே அருவி உள்ளது. கைலாசநாதர் கோயிலும் இருக்கிறது. எனவே கைலாச கோனா என்றும் பெயர். (வெங்கடேசப் பெருமாள் பத்மாவதித் தாயார் திருமணத்திற்கு வந்த சிவனுக்கு நதிகள் ஓடும் ஊர்கள் பிடித்துப் போனதால் இந்த ஊர், ராமகிரி, சுருட்டப்பள்ளி என்று வாசம் செய்கிறார் என்றும் ஒரு கதை இருக்கிறது)
நம் பதிவர் நண்பர் திருப்பதி மகேஷின் குடும்ப ஊர் நாராயணவனம் அருகில் 2 கிமீ தூரத்திற்குள் இருக்கும் சமுதாயம் கிராமம்.
ரயில் நிலையம் அருகில் காய்கறிச் சந்தை இருக்கிறது. விலை மிக மிகக் குறைவாக இருந்தது அப்போது. நாங்கள் காய்களும் வாங்கி வந்ததுண்டு.
பேருந்தில் சென்றால் புத்தூரில் இறங்கிக் கொண்டு ஆட்டோவில் கோயிலுக்குச் சென்றுவிடலாம்.
ராமகிரியிலிருந்து நாராயணவனம் தோராயமாக 22-23 கிமீ. ஊத்துக்கோட்டை, புத்தூர் வழி திருப்பதி செல்லும் சாலையில் புத்தூர் செல்லும் முன்பே வலது புறம் கோயிலுக்குச் செல்லும் பாதை என்று பெயருடன் வளைவு இருப்பது தெரியும். அதன் வழி கிராமத்திற்குள் சென்று கோயிலுக்குச் சென்றுவிடலாம்.
ரயிலில் சென்றால் - இக்கோயில் மட்டும் தரிசனம் செய்யச் சென்றால் ரயில் மிகவும் வசதி. 1 ½ - 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம். புத்தூர் நிலையத்தில் இறங்கிக் கொண்டால் அங்கிருந்து 5 கிமீ தூரம்தான் நாராயணவனம். ஆட்டோவில் சென்றுவிடலாம். (அப்போது ரூ60)
இத்தொடரில் சொல்லபட்டிருக்கும் நான்கு கோயில்களுக்கும் நம் வாகனத்தில் செல்வதென்றால் நன்றாகத் திட்டமிட்டால் கோயில்களையும் கோனே அருவியையும் ரசித்துவிட்டு வரலாம்.
இக்கோயில் மட்டும் என்றால் கோனே அருவி, கோயில் தரிசனம், அங்கு Shopping என்று ஒரு சுற்றுலாவாகவும் சென்றுவரலாம்.
இத்துடன் இத்தொடர் முடிவடைந்தது. மீண்டும் வேறு ஒரு பதிவில் பார்ப்போம். அடுத்து துளசியின் பதிவு.
(கொஞ்சம் வேலைப் பளு. அதனால் வலைப்பக்கம் வர முடியவில்லை. கருத்துகளுக்குப் பதில் தர கொஞ்சம் தாமதமாகலாம். பொறுத்துக்கோங்க ப்ளீஸ்.)
----கீதா
எனக்கும் வெள்ளை வண்னம் பூசிய கோபுரங்கள் பிடிக்கவில்லை. நமக்குத் பிடித்து யார் என்ன செய்யப் போகிறார்கள்?!! அமெரிக்காவில் இருப்பது போல இருக்கு!
பதிலளிநீக்குஎனக்கும் அதேதான் ஸ்ரீராம்.
நீக்கு//எனக்கும் வெள்ளை வண்னம் பூசிய கோபுரங்கள் பிடிக்கவில்லை//
இது எதிர்பார்த்தேன் என்று நான் சொல்ல மாட்டேனாக்கும்!
// நமக்குத் பிடித்து யார் என்ன செய்யப் போகிறார்கள்?!! //
அதானே!!!
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
கோவில் பற்றிய விவரங்களும் படங்களும் சிறப்பு. புகைப்படங்கள் அழகாய் எடுக்கிறீர்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்கு//புகைப்படங்கள் அழகாய் எடுக்கிறீர்கள். //
கோமதிக்கா, ராமலஷ்மி, வெங்கட்ஜி, கீதா மதிவாணன் இவங்க எல்லாம் எடுப்பதை விடவா....ஸ்ரீராம். அவங்க எடுக்கும் படங்கள் எல்லாம் செமை..
மிக்க நன்றி ஸ்ரீராம்
கீதா
வேலைப்பளு - வேலைகளை கவனியுங்கள் கீதா.. மெதுவா வாங்க...
பதிலளிநீக்குமுடித்துவிட்டேன்....அதான் வந்துவிட்டேன்...
நீக்குநன்றி ஸ்ரீராம்
கீதா
தலவரலாறு சொன்ன விதம் சிறப்பாக இருந்தது.
பதிலளிநீக்குவாழ்த்துகள் அடுத்த பயணம் தொடரட்டும்....
மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஅடுத்த என்னுடைய பயணக் குறிப்புகள் இடையில் போடப் பார்க்கிறேன்..
மிக்க நன்றி கில்லர்ஜி
கீதா
அனைத்து தகவல்களும் தொகுத்து கொடுத்தது அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி.
நீக்குகீதா
அவசரம் அவசரமாக முடிக்கவேண்டி முடித்து விட்டீர்கள். பரவாயில்லை. விவரங்கள் தேவையான அளவு மட்டும் உள்ளது. யார் மெனக்கெட்டு இந்த கோவிலுக்கு செல்ல விரும்புவர் என்பதே கேள்விக்குறி.
பதிலளிநீக்குJayakumar
அவசரம் அவசரமாக முடிக்கவேண்டி முடித்து விட்டீர்கள். பரவாயில்லை. //
நீக்குஹாஹாஹா ஆமாம்,
//விவரங்கள் தேவையான அளவு மட்டும் உள்ளது.//
மிக்க நன்றி ஜெகே அண்ணா
கீதா
தேவையான விபரங்கள் கொடுத்திருக்கீங்க. இந்தக் கோயிலும் போகவில்லை. ஆந்திராவின் கோயில்களின் கோபுரங்கள் வெள்ளையாகத் தான் காண முடியும். கேரளா, கர்நாடகாவில் வேறே மாதிரி. தமிழ் நாட்டில் நாகர் கோயில் தவிர்த்த மற்ற ஊர்களில் ஒரு மாதிரி. நாகர்கோயில், கன்யாகுமரி, திருவட்டார் ஆகிய இடங்களில் வேறே மாதிரி
பதிலளிநீக்குஆந்திராவின் கோயில்களின் கோபுரங்கள் வெள்ளையாகத் தான் காண முடியும்//
நீக்குஆமாம் கீதாக்கா...பெரும்பாலும்..
கேரளா, கர்நாடகாவில் வேறே மாதிரி. //
ஆமாம் ஆனால் கேரளத்தில் பத்மநாபஸ்வாமி கோயில் கோபுரத்தில் வண்ணம் அடித்திருப்பது தெரிகிறது...
தமிழ் நாட்டில் நாகர் கோயில் தவிர்த்த மற்ற ஊர்களில் ஒரு மாதிரி. //
ஆமாம். நாகர்கோவிலில் சுசீந்திரம் கோயில் கோபுரம் புதுப்பிக்கப்படாமல் ஒருமாதிரி இருக்கிறது புகைப்படம் எடுத்திருக்கிறேன் இன்னும் பகிரவில்லை.
மிக்க நன்றி கீதாக்கா
கீதா
கோயில், அந்த ஊரின் கைதொழில் மற்றும் பல விவரங்களுடன் விரிவான பதிவு அருமை.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
நராயணவனம் பேரே நன்றாக இருக்கிறது.
கலம்காரி டிசைன் மிகவும் நன்றாக இருக்கும்.
அந்த ஊரின் எனக்குப் பிடித்தது இதுதான் அவர்கள் நெய்து விற்கும் துணிகள், கோமதிக்கா
நீக்குஆமாம் நாரானயணவனம் பேரே அழகு,
எனக்கு கலம்காரி டிசைன் ரொம்பப் பிடிக்கும் கோமதிக்கா
மிக்க நன்றி கோமதிக்கா
கீதா
வணக்கம் சகோதரி
பதிலளிநீக்குகோவில் பதிவு அருமை. கோவிலைப் பற்றி விபரமாக பதிவிட்டு உள்ளீர்கள். ஸ்தல வரலாறும் அறிந்து கொண்டேன். இதன் பின்புதான் சிலைகளாக மாறி இறைவனும், இறைவியும் திருப்பதியை உறைவிடமாக்கி கொண்டார்களோ ?
எப்போது இந்த கோவிலுக்கு செல்ல வாய்ப்புக்கள் வருமோ தெரியாது. ஆனால் தங்கள் பதிவின் வாயிலாக, உங்களுடனேயே வந்த உணர்வோடு இதுவரை பதிவிட்ட அனைத்து அருமையான கோவில் தரிசனங்களையும் திருப்தியுடன் பெற்றுக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
அங்கு தினமும் நடைபெறும் நெசவு தொழிலைப்பற்றி விலா வாரியாக பகிர்ந்தமைக்கும் நன்றி. படங்களும் நன்றாக உள்ளது.
நான் பதிவுக்கு தாமதமாக வந்துள்ளேன். மன்னிக்கவும். மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதன் பின்புதான் சிலைகளாக மாறி இறைவனும், இறைவியும் திருப்பதியை உறைவிடமாக்கி கொண்டார்களோ ?//
நீக்குஅதற்கு முன் ஸ்ரீனிவாச மங்கலாபுரம் ல கல்யாண மஞ்சள் வேஷ்டியோடயே போனதாக புராணம் சொல்கிறது...மலைல அவர் மட்டும்தானே!!! கீழே தானே இறைவி!!
அக்கா உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் கமலாக்கா..தாமதம் எல்லாம் இல்லை எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் அக்கா. நானுமே தாமதமாகத்தான் பதில் கொடுக்கிறேன் இங்கு
மிக்க நன்றி கமலாக்கா
கீதா
வெள்ளை வண்ணம் பூசிய கோபுரம் - திருவரங்கத்திலும் உண்டு... மற்ற எல்லா கோபுரங்களும் வண்ணம் பூசியிருக்க, ஒரு கோபுரம் மட்டும் வெள்ளை....
பதிலளிநீக்குபயணத் தொடர் வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தும் நன்று. இந்தப் பக்கம் சென்று கோவில்களை பார்க்க நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
அடுத்த பயணத் தொடருக்கான காத்திருப்பில் - மற்ற வாசகர்களுடன் நானும்!
வெள்ளை வண்ணம் பூசிய கோபுரம் - திருவரங்கத்திலும் உண்டு..//
நீக்குஆமாம் ஜி. படம் எடுத்திருந்தேன். ஸ்ரீராங்கம் கோயில் கோபுரங்கள் பதிவில் போட்ட நினைவு.
ஆமாம் ஜி போக நினைப்பவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால்தான்..
மிக்க நன்றி வெங்கட்ஜி
கீதா
ஆன்மிகப் பயணக் கட்டுரையும் படங்களும் அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் கோவிந்தராஜு ஐயா
நீக்குகீதா
ஆஹா!... முதல் நான்கு படங்களில் கோவில் கோபுரத்தை மட்டுமே தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்த எனக்கு... அந்த 5 வது படத்தில்தான் தெய்வத்தையே காணும் வாய்ப்பு கிடைத்தது. பரவசமடைந்தேன். ஆம்!... "செய்யும் தொழிலே தெய்வம்" என்கிறார்கள் அல்லவா!!... அந்த "கட்டுத்தறி" என்னை கடவுளிடம் இட்டுச்சென்றது... நன்றி!
பதிலளிநீக்குசிரித்துவிட்டேன் முதலில் ஆனால் கருத்தை ரசித்தேன், சிவா.
நீக்குமிக்க நன்றி சிவா.
கீதா