செவ்வாய், 28 ஜூலை, 2020

ஹீரோயின் துங்கா - கறுஞ்சிறுத்தை - அக்கம் பக்கம் - 2

இன்றைய பொழுது எல்லோருக்கும் இனிதாக அமையட்டும்!
சென்ற பதிவில் மருத்துவக் குறிப்புகள் சொல்லப்படும் காணொளிகள் பற்றிச் சொல்லியிருந்தேன். 

பயணங்கள், அழகான இடங்கள், பாடல்கள், சமையல் குறிப்புகள், நல்ல குறும்படங்கள், வழிகாட்டல்கள், என்று எத்தனை எத்தனையோ தரமான காணொளிகள் கொட்டிக் கிடக்க மாஸ் சைக்காலஜிப்படி முன்னில் நிற்கும் மிக மிகத்  தரக் குறைவான, தனிநபரை விமர்சித்து, வாயில் உச்சரிக்கக் கூடாத வார்த்தைகளைச் சொல்லி சண்டை போடும் காணொளி/லிகள் 3 ஆம் தரம் என்று சொல்லுவதை விடப் படு கேவலமான காணொளிகள்..... என்ன சொல்ல? .  

என் மிக நெருங்கிய உறவினர் ஒருவருக்குத் தற்போது வீட்டிலிருந்து வேலை. அத்தனை வேலை இல்லை போலும் எனக்குக் கேடுகெட்ட ஒரு காணொளியை அனுப்பி (குழாயடிச்சண்டை) “இதைப் பாத்தியா? நீ ஃப்ரீயா? என்று வேறு கேட்டிருந்தார். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியம்! எனக்கு நேரமில்லை என்று வாட்சப்பினேன்.

இதுவரை மிக மிக பிசியாக இருந்தவர்கள் எல்லாம் சமீப கால ஊரடங்கினால்  இப்போது வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது! உதாரணம்தான் மேலே சொன்ன உதாரணத்தைப் போன்றவர்களும் சரி அவர் அனுப்பியிருந்ததைப் போன்ற காணொளிகளைப் பதிவு செய்தவர்களும், செய்பவர்களும் சரி. இத்தகையக் காணொளிகள் அதிகம் லைக்ஸும், சப்ஸ்க்ரைபர்ஸும் பெற்று அவற்றை முன்னுக்குத் தள்ளி மூளையை மழுங்கடிப்பதாகத் தெரிகிறது. வைரலாம். இப்போதைய வைரஸை விட ஆபத்தான வைரஸ்!  வைரல் நோய்.

பலரும் தங்கள் மதிப்பை இழந்து கொண்டிருப்பது ஒரு புறம், மற்றொருபுறம் வீட்டில், அதுவும் தற்போது வேலை இல்லாமல் சும்மா இருக்கும், மற்றவரின் விஷயத்திற்குள் எட்டிப் பார்க்கும் ஆர்வமுடைய, மாஸ் சைக்காலஜி வட்டத்திற்குள் வரும் மக்களும் தங்கள் மூளையை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது! 

யுட்யூபிற்கு பாலிசிஸ் எதுவும் கிடையாதோ? எதை வேண்டுமானாலும் பேசலாம், போடலாம் அதனால் தரம்கெட்டுப் போகிறதோ? மீண்டும் சொல்வது இதற்குக் கவனிப்பு தேவை.

 An idle mind is devil’s paradise. 

சரி கொஞ்சம் நல்ல நியூஸ் பார்ப்போமா வாங்க நம்ம பங்களூருக்கு.

இவள் துங்கா. டாபர்மென் வகை. வயது 9. கர்நாடக போலீஸ் ஹீரோயின். சமீபத்தில் தவனகரெ பகுதியில் நடந்த ஒரு கொலைக் கேஸில் கொலையாளியைக் கண்டுபிடிக்கத் துப்பு கிடைக்காமல் போலீஸ் 5 நாட்களாகக் கஷ்டப்படுக் கொண்டிருக்க, கொலை நடந்த இடத்திற்கு துங்காவைக் கூட்டிக் கொண்டு சென்று மோப்பம் பிடிக்க வைத்திருக்கிறார்கள்.

மோப்பம் பிடித்த நம்ம குழந்தை ஹீரோயின் ஓடிருக்கா பாருங்க 12 கிமீ அதுவும் இடையில் நிக்காமத் தொடர்ந்து ஓடி சரியா கொலையாளி தங்கியிருந்த வீட்டினைச் சுற்றி வந்து இங்கதான்னு காமிச்சு கொலையாளியை மடக்க உதவியிருக்கா. பொதுவா பயிற்சிகொடுக்கப்பட்ட மோப்ப பைரவர்கள், குற்றம் நடந்த இடத்திலிருந்து 4,5 கிமீ தூரம்தான் மோப்பம் பிடிப்பாங்க. துங்கா 12 கிமீ தூரம் வரை போனது அதுவும் 3 மணி நேரத்துல கண்டுபிடிச்சுருக்கா. 

Karnataka Police Sniffer Dog Runs 12 km To Track Down Murder Accused
Karnataka police canine who traced 60 cases including 30 murders ...
ஒரே பாராட்டு மழை அவளுக்கு! இது வரை 60 கேஸ் டீல் செய்திருக்கா அதுல 30 கொலைக்கேஸாம்! நம்ம சமத்து செல்லக் குட்டிய எல்லாரும் பாராட்டி வாழ்த்துங்க! குடோஸ் துங்கா! 

சரி அப்படியே காட்டுக்குள்ள போவோம். 

தி ஜங்கிள் புக் என்பது ருட்யார்ட் கிப்ளிங்கால் 1894ல் எழுதப்பட்ட ஒரு கதைத் தொகுப்பு என்பது நாம் அறிந்ததே. இவர் இந்தியாவில் பிறந்தவர். இப்புத்தகம் பற்றியும் எழுதியவர் பற்றியும் வேறொரு சமயம் பேசலாம். காட்டில்,  மௌக்ளீ எனும் சிறுவன் ஓநாய், கரடி, கறுஞ்சிறுத்தை இவற்றினால் வளர்க்கப்படுகிறான். கரடியின் பெயர் Bபல்லூ, கருஞ்சிறுத்தையின் பெயர் bhaபகீரா. இவர்களைச் சுற்றித்தான் கதைகள் அத்தொகுப்பில். இது எதற்கு இப்போது? என்றுதானே யோசிக்கறீங்க. இதோ கீழே.

இந்தக் கருஞ்சிறுத்தை செய்தியை மகனுக்கு அனுப்பியிருந்தேன். அவன் பார்த்துவிட்டு நானும் அவனும் திங்கள் காலை பேசிக் கொண்டதுதான் மேலே சொன்ன ஜங்கிள்புக் பற்றியது. நான் அவனுக்கு ஜங்கிள் புக் அறிமுகப்படுத்தி நானும் அவனும் வாசித்து, அப்புறம் சேர்ந்து படம் பார்த்ததையும் சொல்லிப் பேசினோம்.

நம் நாட்டுக் காடுகளில் கறுஞ்சிறுத்தைகள் இருந்தாலும் அவர்கள் நம் கண்ணில் படுவது அரிது. சமீபத்தில் கர்நாடகா நகரஹோலே தேசியப்பூங்காவில் உள்ள கபினி காட்டுப் பிரிவில் புலிகள் சரணாலயத்தில் இந்தக் கறுஞ்சிறுத்தை சமீபத்தில் கண்ணில் பட்டதாம். அதை, வைல்ட்லைஃப் புகைப்படக் கலைஞருர் ஷாஸ் ஜங்க், தான் க்ளிக்கியதை டிவிட்டரில் போட்டாராம். வன அதிகாரியு தான் பார்த்ததை க்ளிக்கிய  இரு புகைப்படங்களைச் செய்திக்குப் பகிர்வதற்கு இரூ நாட்கள் முன்னரே ஷாஸ் ஜங்க் பகிர்ந்துவிட்டாராம். ஷாஸ் ஜங்க் தான் எடுத்த படங்களை ஷேர் செய்தால் க்ரெடிட்ஸ் கொடுக்க்கும்படி சொல்லியிருக்கிறார்.  அது சரிதானே!

Black Panther spotted in Karnataka
Meet Shaaz Jung, The Genius Behind The Stunning Clicks Of Saya ...
Rare Black Panther spotted in Karnataka forest. (Photo: Shaaz Jung, tweeted by Earth) 

Black panther spotted by forest officer in Karnataka
இது வனச்சரக அதிகாரி எடுத்த புகைப்படம். அவர் ஷாஸ் ஜங்க் எடுத்த புகைப்படங்களில் இருப்பவை இவர் பார்த்த அதே கறுஞ்சிறுத்தைதானா என்று உறுதியாகக் கூற இயலாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் வைல்ட் லைஃப் புகைப்படக் கலைஞர் ஷாஸ் ஜங்க் இக்காட்டிற்கு வழக்கமாக வருபவர்தான் என்றும் சொல்லியிருக்கிறார். எப்படியோ நாம் படங்களைப் பார்த்து ரசிப்போம்.



மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் அது வரை Bye Bye Wave GIF - ByeBye Wave - Discover & Share GIFs

------கீதா

48 கருத்துகள்:

  1. வாட்ஸாப்பில் இந்தப் பயனற்ற காணொளிகளை நான் டவுன்லோட் ஆகாமல் இருக்கும் வண்ணம் செட் செய்திருக்கிறேன்.  எனவே நானாக விரும்பினாலொழிய அவை என்னை சேராது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Fb ல் அந்த மாதிரி செய்ய இயலுமா!..
      ரகசியத்தைச் சொல்லுங்களேன்...

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் நானும் செய்து வைத்திருக்கிறேன். ஆனால் வாட்சப்பிற்கு வந்துவிடும். டவுன்லோட்தான் ஆவதில்லை. நான் எனக்கு வேண்டப்பட்டவர்கள் அனுப்புவதை மட்டுமே அது மிகச் சிறிய வட்டம், அதை மட்டுமே ஓப்பன் செய்து பார்ப்பது. இல்லை என்றால் அப்படியே டெலிட் தான்.

      நம் எண்ணிற்கு வராமல் இருக்கும் ஆப்ஷனும் உண்டா? ஸ்ரீராம்?

      நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    3. துரை அண்ணா உங்களுக்குத் தேவையில்லாத எஃப்பி அக்கவுண்டுகளை முடக்க முடியாதோ (ப்ளாக் செய்யறதுனு வாட்சப்ல இருக்கே அது போல) அல்லது ம்யூட் செய்வது போல!

      கீதா

      நீக்கு
  2. துங்கா பற்றி படித்து, பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.  கருஞ்சிறுத்தை படம் அழகு.  அதுவும் எட்டிப்பாப்பார்க்கும் முதல் படமும், மரக்கிளையைப் பற்றிக்கொண்டு நிற்கும் நான்காவது க்ளோசப் படமும் ரொம்பவே அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நினைத்தேன் ஸ்ரீராம் துங்கா பத்தி உங்களுக்கும் தெரியவந்திருக்கலாம் என்று. ஆமாம் நீங்கள் சொல்லியிருக்கும் இரு படங்களும் செம இல்லையா?

      இன்னொரு படம் ஷாஸ் ஜங்க் 2017 ல் எடுத்தது என்று சொல்லி ஒரு க்ளோசப் படம் இருக்கு. ஹையோ அதைப் பாத்தா இன்னும் அழகு. அந்தப் படத்தை வைத்துதான் நேஷன்ல் ஜியோகிராஃபிக் சானலில் இந்தியாவில் கருஞ்சிறுத்தை இருப்பதைப் பற்றி பேசினாங்களாம். அடுத்த பதிவில் சொல்கிறேன்

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. டிக்டாக் என்ற என்று வந்ததோ அப்போதிலிருந்து இந்தவகை குழாயடிச் சண்டை வந்து விட்டது.

    முதலில் இதை தடை செய்யவேண்டும். பல குடும்ப பெண்களின் வாழ்க்கை சீரழிந்து விட்டது. தற்கொலைவரை போய் விட்டது.

    இதை தடை செய்ய சொல்பவர்களைவிட லைக் செய்பவர்களே அதிகள் என்ன செய்வது ?

    12 கி.மீ. ஓடிய துங்கா... பாவம் கூடவே ஓடிய பயிற்சியாளர்.

    கருப்பனை புகைப்படம் எடுத்த கோணங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை தடை செய்ய சொல்பவர்களைவிட லைக் செய்பவர்களே அதிகள் என்ன செய்வது ?//

      ஆமாம் ஆமாம் கில்லர்ஜி அதனால்தான் இப்படியானவை நல்லதைப் புறம் தள்ளி முன்னில் நிற்கிறது.
      இப்போ டிக்டாக் தடை செய்தாச்சுன்னு சொன்னாங்களே. இல்லையா?

      //12 கி.மீ. ஓடிய துங்கா... பாவம் கூடவே ஓடிய பயிற்சியாளர்.//

      நானும் மகனும் பேசிய போதும் இதைப் பத்தி பேசினோம்..கில்லர்ஜி...எப்படி ஒடினாரோ என்று. ஆனா கண்டுபிடிச்சாகணுமே.

      கருப்பனா/பியா?!! ஆமாம் ரொம்ப நல்லா எடுத்துருக்காங்க. அழகா இருக்கு அதுவும்!

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா


      நீக்கு
    2. //..நானும் மகனும் பேசிய போதும் இதைப் பத்தி பேசினோம்...எப்படி ஒடினாரோ என்று.

      ஓடியிருக்கமாட்டார் ‘தொப்பை’ போலீஸ்காரர். அரசாங்க புல்லட்டை நாய்க்குப்பின் ஓட்டியிருப்பார். புகைப்படம் எடுத்துக்கொண்டார். நாய்க்கு மாலை. இவருக்கு ப்ரொமோஷன்.. நமக்குப் படிக்கப் பதிவு..

      ‘எப்படி ஓடினாரோ..’ என்கிறீர்களே.. சுத்தானந்த பாரதி ஞாபகம் வரவில்லையா:

      எப்படிப் பாடினரோ—அடியார்
      அப்படிப் பாட நான் ஆசை கொண்டேன்.. சிவனே

      நீக்கு
    3. அரசாங்க புல்லட்டை நாய்க்குப்பின் ஓட்டியிருப்பார். புகைப்படம் எடுத்துக்கொண்டார். //

      ஓ புல்லட்டில் தான் தொடர்ந்திருப்பாரா?!!! யோசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்...ஹா ஹா

      //‘எப்படி ஓடினாரோ..’ என்கிறீர்களே.. சுத்தானந்த பாரதி ஞாபகம் வரவில்லையா://

      ஹா ஹா அந்தப் பாட்டு இப்ப நீங்க சொன்னதும் நினைவு வந்துவிட்டது

      சரி அப்ப நான் இப்படிப் பாடினாலோ

      எப்படி ஓடினாரோ-போலீஸ்காரர்
      அப்படி ஓடிட தொப்பையைக் கரைத்திட ஆசை கொண்டேன் இறைவா
      ஹிஹிஹிஹி

      மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

      கீதா

      நீக்கு
  4. புறங்கூறுதல் என்பார்கள்..

    நீதி நூல்கள் பலவும் இதை வலியுறுத்துகின்றன... இருந்தும் புறங்கூறுதலைப் பிடித்துக் கொண்டு அலைபவர்கள் அனைவரும் தமிழ் அறியாதவர்கள்...

    தமிழுக்கும் தமிழருக்கும் இழுக்கைத் தேடித்தரும் அழுக்கு மனிதர்கள்...

    ஹாய் பிரண்ட்ஸ்.. என்று வரும் காணொளிகளை முற்றாகத் தவிர்த்து விடுகிறேன்..

    இவர்களும் இவர்களது தமிழ்ப் பேச்சும்... சீ!..

    உள்ளூர் கருப்பாயி கத்தரிக்காய் குழம்பு பற்றி காணொளி போட்டால் கூட அதில் தலை தெறிக்கும்படியான ஆங்கில வார்த்தைகள்...

    எதைப் பற்றியதாக இருந்தாலும் இவர்களே எல்லாவற்றையும் கண்டு பிடித்த மாதிரி அலப்பறை...

    கந்த சஷ்டிக் கவசம் பற்றி ஒருவர் எழுதியிருந்த கருத்துக்களை ஆங்காங்கே நறுக்கி விட்டு தன் பெயரில் வெளியிட்டுக் கொள்ளும் அவலம்...

    ஒருவன் எழுதியிருக்கிறான் -
    கந்தசஷ்டிக் கவசத்தில் தெய்வானையைப் பற்றிச் சொல்ல வில்லை.. முருகன் வேறு.. சுப்ரமணியன் வேறு.. என்று..

    கந்த சஷ்டி கவசத்தில் எந்த இடத்தில் தெய்வானை சொல்லப்படுகின்றாள் என்பதை அவன் அறிய மாட்டான்...

    கந்த சஷ்டிக் கவசத்தைப் பற்றி ஏதும் தெரியாமலேயே அதைப் பற்றி புறச் சமயத்தவர்கள் பேசுவது தான் விந்தை..

    எந்த ஒரு காணொளியியும் காணாது இருப்பதே மனதுக்கு நிம்மதி..

    நவீன தொழில்நுட்பத்தால் மதியிழந்து விட்ட் மனிதர்கள் பலர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இவர்களும் இவர்களது தமிழ்ப் பேச்சும்... சீ!..// - சரியான அவதானிப்பு. பாதி கழிசடைகளுக்கு தமிழே எழுதத் தெரியவில்லை. ழ போடும் இடத்தில் ல என்பதுபோல ஏகப்பட்ட மொழித் தவறுகள். சீன ஆப்ஸுக்கு விளம்பரம் பண்ணறது, தமிழே எழுதத் தெரியாதவனெல்லாம், ஆரோக்கிய உணவு, கொரோனாவுக்கு மருத்துவம், அட்வைஸ் மழைன்னு பொழுதப் போக்கறாங்க.

      நீக்கு
    2. துரை அண்ணா ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க.

      உண்மையிலேயே தாங்கள்தான் உத்த்ரவாதி போலக் காணொளிகள் போடுவது ஆமாம் அண்ணா. //எதைப் பற்றியதாக இருந்தாலும் இவர்களே எல்லாவற்றையும் கண்டு பிடித்த மாதிரி அலப்பறை.//

      //எந்த ஒரு காணொளியியும் காணாது இருப்பதே மனதுக்கு நிம்மதி..//

      அதே அதே துரை அண்னா. தமிழ்த் தெரியாமல் உச்சரிப்பது பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனது அனுபவத்தையே சொல்லலாம். நாகர்கோவில் வானொலி நிலையத்தில் பாராட்டப்பட்ட என் தமிழ் உச்சரிப்பு சமீபத்தில் 3 வருடங்களுக்கு முன் என்று கொள்ளலாமா...அப்போது தொகுத்து வழங்கும் பேச்சு வேண்டும் என்று ஒருவர் சொன்னார் சென்னையில். நான் செய்து கொடுத்ததையும் எடுத்துக் கொண்டார். ஆனால் என் குரல் நன்றாக இருக்கு ஆனால் உச்சரிப்பு சரியில்லை!!!!!!!! இப்போது டிவியில் பேசுபவர்கள் போல வேண்டும் என்று சொன்னார். ஹா ஹா ஹா ஹா நம்மால் அது முடியாது என்பதால் கொடுக்க முடியவில்லை. வாய்ப்பு போச்சு. அதற்கு முன் விளம்பரத்திற்குக் குரல் கேட்டு வந்தது அதுவும் நழுவிப் பொச்சு. இப்போது பேசுபவர்கள் போல உச்சரித்து எனக்குப் பேச வரவில்லை.

      மிக்க நன்றி துரை அண்ணா

      கீதா

      நீக்கு
    3. ஆரோக்கிய உணவு, கொரோனாவுக்கு மருத்துவம், அட்வைஸ் மழைன்னு பொழுதப் போக்கறாங்க.//

      ஹா ஹா ஹா ஹா நெல்லை...

      கீதா

      நீக்கு
  5. அண்மைக்கால குறிப்பிடச்செய்திகளைப் பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  6. கருஞ்சிறுத்தை - நான் சர்க்கஸ்களில்தான் பார்த்திருக்கிறேன். காட்டில் பார்த்தவருக்கு த்ரில் அனுபவமாக இருக்கும்.

    துப்புத்துலக்கும் நாய் - எனக்கு நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது நிகழ்ந்தவை தினைவுக்கு வருகின்றன. எங்க அப்பா எப்போதும் வித்தியாசமானவர்களை ஸ்கூலுக்குக் கூட்டிவந்து மாணவர்களிடையே நிகழ்ச்சி நடத்தச் சொல்லுவார். நான் அவர் ஹெட்மாஸ்டராக இருந்த பள்ளியில்தான் படித்தேன்.ஒரு தடவை எக்ஸ் மிலிடரி மேன் வந்து அவர் அனுபவங்களைச் சொன்னார் (சீனப் போரில் ஒரு கால் இழந்தவர்). இன்னொரு தடவை மோப்ப நாயைக் கூட்டிவந்து இரு காவலர்கள் செயல் விளக்கம் கொடுத்தனர். அரை கிலோமீட்டர் தள்ளி மரத்தின்மேல் ஏறி பதுங்கி இருந்தவரை அவரது துணி ஒன்றின் வாசனையை ஸ்கூலில் முகர்ந்து, ஓடிச் சென்று மரத்தின்கீழ் நின்று மேலே பார்த்து குரைத்தது.

    இன்னொரு முறை அந்த ஊரிலேயே களவு ஒன்றிர்க்காக மோப்பநாய் வைத்து கொலைகாரனைத் தேடி நாய் பின்னால் காவலர்கள் சென்றார்கள். நாங்கள் சிறுவர்கள் அவர்களுடன் ஓடி, காலடித் தடத்தை ஏதோ வெள்ளை பேஸ்ட் போட்டு எடுத்துக் கொள்வதைப் பார்த்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்டில் பார்த்தவருக்கு த்ரில் அனுபவமாக இருக்கும்.//

      ஆமாம் நெல்லை கண்டிப்பாக. நான் சர்க்கஸில் கூடப் பார்த்ததில்லை. நேஷனல் ஜியோக்ரஃபிக் சானலில் எப்போதோ பார்த்தததுதான்.

      நெல்லை உங்கள் அனுபவம் செம. ராணுவ வீரர்கள் ராணுவ மோப்ப நாய்களுக்குப் பயிற்சி கொடுப்பதும் அவை ஃபிட்டாக இருக்கின்றனவா என்று சோதிப்பது எல்லாம் அருமையா இருக்கும்.

      மோப்பம் பத்தி இன்னொன்றில் சொல்கிறேன்

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  7. வாட்சப் காணொளிகளில் டிக்டாக் என்று அசட்டுத்தனமாக லேடீஸ் காணொளி எடுத்து பரவச் செய்வது, பலவித அசட்டு காணொளிகள் போன்றவை வெறுப்படைய வைக்கின்றன.

    வாட்சப் வெட்டி மெசேஜுகள் பற்றி ரொம்பவே எழுதலாம். எரிச்சலூட்டுபவை அவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பவே அசட்டுத்தனம் நெல்லை. படு கேவலமாகவும் இருக்கிறது. அதில் என்னவோ காமெடி செய்வதாக நினைத்து அச்சு பிச்சுனு அசிங்கமா பேசி எல்லாம் போடுறாங்க. நான் என் உறவுகள் எல்லாரிடமும் சொல்லிட்டேன் இப்படியானவை எனக்கு அனுப்பக் கூடாதுன்னு.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  8. அனைத்து தகவல்களும் அருமை! துங்கா- ஆறறிவு படைத்த மனிதனை விட ஐந்தறிவு கொண்ட மிருகம் எத்தனை புத்திசாலியாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மனோக்கா.

      ஆமாம் துங்கா என்ன புத்திசாலி இல்லையா

      கீதா

      நீக்கு
  9. வைரலாம். இப்போதைய வைரஸை விட ஆபத்தான வைரஸ்! வைரல் நோய்.//

    வைரலாக பரவுகிறது என்று சொல்லி சொல்லியே வைரலை வரவழைத்து விட்டார்கள்.
    இப்படி புதிய வார்த்தையை எல்லா தொலைக்காட்சியும் , வாட்சப் செய்திகளும் சொல்லி சொல்லி .

    நல்ல விஷயங்களை அதிகம் சொல்ல மாட்டார்கள், இந்த மாதிரி வேண்டாத செய்திகளை திரும்ப திரும்ப போட்டு காட்டுவார்கள் தொலைக்காட்சியில்.

    அது போல் யுட்யூபில் நல்லதை மட்டும் பார்க்க வேண்டும் வேண்டாதவைகளை பார்ப்பது நின்று போனால் அதை ஊக்கப்படுத்தாமல் இருந்தால் அது தேய்ந்து அழிந்து போகும்.

    துங்காவை பற்றி ஸ்ரீராம் முகநூலில் போட்டதை படித்தேன், அப்புறம் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

    1974ல் பூம்புகார் கல்லூரி நூலகத்திலிருந்து எடுத்து வந்தார்கள் நான் படிக்க என் கணவர் ஆங்கிலத்தில் என்பதால் பல நாட்கள் படித்தேன். படங்களும், கதையும் வியப்பை அளித்தன அப்போது.

    அப்புறம் அது படமாய், குழந்தைகள் கார்டூன் சித்திரமாக எல்லாம் பார்த்தேன்.
    இப்போது பேரன் அடிக்கடி அந்த படங்களை போட்டு கதை சொல்வான்.

    கறுஞ்சிறுத்தை படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைரலாக பரவுகிறது என்று சொல்லி சொல்லியே வைரலை வரவழைத்து விட்டார்கள்.
      இப்படி புதிய வார்த்தையை எல்லா தொலைக்காட்சியும் , வாட்சப் செய்திகளும் சொல்லி சொல்லி .

      நல்ல விஷயங்களை அதிகம் சொல்ல மாட்டார்கள், இந்த மாதிரி வேண்டாத செய்திகளை திரும்ப திரும்ப போட்டு காட்டுவார்கள் தொலைக்காட்சியில்.//

      ஆமாம் கோமதிக்கா எப்பவுமே எதிர்மறையைத் திரும்ப திரும்பப் போட்டாத்தானே டி ஆர் பி ஏறும்.

      ஸ்ரீராம் முகநூலில் துங்கா பற்றி பகிர்ந்திருந்தேன் என்று சொல்லியிருந்ததைப் பார்த்ததும் அங்கு எல்லோரும் பார்த்திருப்பீங்கனு நினைத்தேன். சமத்து இல்லையா11

      நீங்களும் ஜங்கிள் புக் படிச்சிருப்பீங்கனு எதிர்பார்த்தேன். ரொம்ப சுவாரசியாக இருக்கும் இல்லையா அக்கா. இப்பக் கூட மீண்டும் படிக்க வேண்டும் போல் தோன்றியது.

      ஆமாம் நாங்களும் படமும் கார்ர்ட்டூன் சித்திரமும் பார்த்திருக்கிறோம் எல்லாருமே பார்த்திருப்பாங்கனு நினைக்கிறேன். பெரியவர்கள் கூட சிறு குழந்தைகளாக மாறிவிடலாம் பார்க்கும் போது.

      கறுஞ்சிறுத்தை அழகா இருக்கு இல்லையா அக்கா.

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  10. சில YouTube-வற்றை கண்டு கொள்ளாமல் கடந்து விடுவதே நல்லது...

    சூப்பர் துங்கா...!

    உரிமை கொண்டாடும் இருவரையும் கறுஞ்சிறுத்தையிடம் சண்டை போடச் சொல்ல வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டிடி யுட்யூப் சிலதைக் கண்டுக்காம போவதுதான் நல்லது.

      ஆம் துங்கா சூப்பர்.

      //உரிமை கொண்டாடும் இருவரையும் கறுஞ்சிறுத்தையிடம் சண்டை போடச் சொல்ல வேண்டும்...//

      ஹா ஹா ஹா ஹா! கரெக்டா பாயிண்டை பிடிச்சிட்டீங்க. அதே தான் ரெண்டு பேருமே...

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  11. துங்காவைத் தொலைக்காட்சியிலும் பார்த்தேன். அது செய்த சாகசங்கள் பற்றி தினசரிகளிலும் போட்டிருந்தது. கருஞ்சிறுத்தை பற்றிப் படித்தேன்/பார்த்தேன். மோக்ளி (ஜங்கிள் புக்) வெகுகாலம் முன்னால் தூர்தர்ஷனில் வந்து கொண்டிருந்தப்போவே பார்த்திருக்கோம். இப்போப் பையர் வீட்டில் தொலைக்காட்சியில் படமாகவும் பார்த்தேன். பையர், மருமகள் எல்லாம் கேலி செய்தாங்க! இஃகி,இஃகி, அவங்களுக்கு நான் இன்னமும் சின்னக் குழந்தைதான் என்பது புரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா துங்கா பற்றி தமிழ்த்தொலைக்காட்சி, செய்தித்தாள்களிலும் வந்திருக்கு என்று கூகுளில் படங்கள் தேடிய போது தெரிந்து கொண்டேன்.

      ஆமாம் மோக்ளி ரொம்ப வருஷம் முன் ஜங்கிள் புக் வந்தது. தூர்தர்ஷனில்தான். அப்புறம் படமாக வந்தது நானும் மகனும் படம் பார்த்தோம்

      //பையர், மருமகள் எல்லாம் கேலி செய்தாங்க! இஃகி,இஃகி, அவங்களுக்கு நான் இன்னமும் சின்னக் குழந்தைதான் என்பது புரியவில்லை.//

      ஹா ஹா ஹா ஹா ஹா அதானே!!!! இப்ப பார்த்தாலும் அத்தனை ரசனையாக இருக்கும் இல்லையா கீதாக்கா எங்க வீட்டிலும் இப்படிக் குழந்தைகள் உண்டு இப்பவும். நான் உங்கள் ஜூனியர் தானே!!!(குழந்தை) ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  12. ஶ்ரீராம் துங்காவைப் பற்றி முகநூலில் போட்டிருந்தாரா? அவருடையது அதிகமாய் எனக்கு வருவதில்லை. எப்போதாவது வரும். அவர் மாமாவுடையது அவர் அண்ணாவுடையது எல்லாம் உடனே வந்துடும். :))))

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரி

    இந்த மாதிரி வாட்சப் வீடியோக்கள் எனக்கு இதுவரை வந்ததில்லை. உறவுகள் குரூப்பில் தெய்வம் சம்பந்தபட்ட செய்திகள், நகைச்சுவைகள், தெய்வ படங்கள் என வரும். இந்த மாதிரி மருத்துவம் சார்ந்த பிற செய்திகள் வந்தால் கூட நான் அதை எடுத்துப் படிப்பதேயில்லை.

    துப்பறியும் சிங்கம் துங்காவின் செயல் போற்றக்கூடியது. மனித துப்பறியும் புலியை விட இந்த சிங்கம் நிறைய சாதனை செய்திருக்கும் விஷயங்களை தங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன்.

    கருமைநிறச் சிறுத்தை எவ்வளவு அழகாக இருக்கிறது. "என்னை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்!" என முதல் படத்தில் மரத்தின் பின்னிருந்து எட்டிப்பார்ப்பது மிக அருமை. க்ளோசப் படமாக பக்கத்தில் போய் எடுத்தும் "இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன் என்பது போல் உருட்டும் விழிகளால் ஒரு பார்வை பார்க்கிறேதே அதுவும் அதை விட அருமை. இந்த செய்திகளெல்லாம் தங்களுக்கு வாட்சப் மூலமாக வந்ததுவா? படங்கள் நன்றாக உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி. என் பதிவாக சிட்டுக்குருவியைப் பற்றி.. . உங்களுக்கு நேரம் இருக்கும் போது வாருங்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு கீதாமா. அற்புதமான பதிவு.
      பாடல், உபன்யாசம் கேட்க யூ டியூபைத் திறந்தால் கண்டதும் வரதேமா.
      எப்படி ப்ளாக் செய்யறது.

      கீழ்த்தரமான வார்த்தைகள் கண்ணில் படும்போதே
      சினம் வருகிறது.என்ன செய்ய என்றுதான் புரியவில்லை.

      துங்காப் பெண்ணைப் பற்றி படித்தேன். நாளிதழில்.
      அருமை அருமை அருமை.
      எப்பொழுதோ உங்கள் நண்பன் என்று ஒரு படம் வந்தது.
      பாவம் 12 கிலோமீட்டர் அதுவும் ஓடி காவலரும் ஓடி இருக்கிறாரே.
      கண்டுபிடித்தது மஹா பெருமை.
      நீண்ட ஆயுளுடன் இருக்கட்டும்.

      மௌக்ளி எங்கள் வீட்டில் பரம்பரையாக வலம் வருகிறான்.
      கீதா சாம்பசிவம் சொன்ன மாதிரி தூர்தர்ஷனில்
      பார்த்து, புஸ்தகம் வாங்கி,படம் பசங்களோடு,
      பேரன் பேத்திகளோடு பார்த்தாச்சு.
      இன்னும் அந்தப் பரட்டத் தலை மனதில்.
      அன்பு வாழ்த்துகள்.
      பகீராவும்,பாலுவும் Bare Nessacities பாடலும் மறக்கவே முடியாது.
      கரும் சிறுத்தை படங்கள் சூப்பரோ சூப்பர்.
      நன்றி கீதாமா,.

      நீக்கு
    2. அன்பு கீதாமா. அற்புதமான பதிவு.
      பாடல், உபன்யாசம் கேட்க யூ டியூபைத் திறந்தால் கண்டதும் வரதேமா.
      எப்படி ப்ளாக் செய்யறது.

      கீழ்த்தரமான வார்த்தைகள் கண்ணில் படும்போதே
      சினம் வருகிறது.என்ன செய்ய என்றுதான் புரியவில்லை.

      துங்காப் பெண்ணைப் பற்றி படித்தேன். நாளிதழில்.
      அருமை அருமை அருமை.
      எப்பொழுதோ உங்கள் நண்பன் என்று ஒரு படம் வந்தது.
      பாவம் 12 கிலோமீட்டர் அதுவும் ஓடி காவலரும் ஓடி இருக்கிறாரே.
      கண்டுபிடித்தது மஹா பெருமை.
      நீண்ட ஆயுளுடன் இருக்கட்டும்.

      மௌக்ளி எங்கள் வீட்டில் பரம்பரையாக வலம் வருகிறான்.
      கீதா சாம்பசிவம் சொன்ன மாதிரி தூர்தர்ஷனில்
      பார்த்து, புஸ்தகம் வாங்கி,படம் பசங்களோடு,
      பேரன் பேத்திகளோடு பார்த்தாச்சு.
      இன்னும் அந்தப் பரட்டத் தலை மனதில்.
      அன்பு வாழ்த்துகள்.
      பகீராவும்,பாலுவும் Bare Nessacities பாடலும் மறக்கவே முடியாது.
      கரும் சிறுத்தை படங்கள் சூப்பரோ சூப்பர்.
      நன்றி கீதாமா,.

      நீக்கு
    3. கருமைநிறச் சிறுத்தை எவ்வளவு அழகாக இருக்கிறது. "என்னை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்!" என முதல் படத்தில் மரத்தின் பின்னிருந்து எட்டிப்பார்ப்பது மிக அருமை. //

      //க்ளோசப் படமாக பக்கத்தில் போய் எடுத்தும் "இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன் என்பது போல் உருட்டும் விழிகளால் ஒரு பார்வை பார்க்கிறேதே அதுவும் அதை விட அருமை. //

      ஆஹா கமலா அக்கா உங்கள் வர்ணனை சூப்பர் மிகவும் ரசித்தேன்

      கமலாக்கா இதெல்லாம் துங்கா, கருஞ்சிறுத்தை செய்திகள் எல்லாம் எனக்குக் கூகுள் வழியாக வந்துவிடும். அப்புறம் அதை நெட்டில் அச்செய்திகள் பற்றித் தேடிப் படங்களை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்வேன். விலங்குகள் குறித்த செய்திகள் நிறைய இருக்கின்றன. பகிரவில்லை இனிதான் மெதுவாகப் பகிர வேண்டும். கொஞ்சம் லேட் செய்திகள்தான் அவை...

      நானும் தேவையற்ற செய்திகள் பார்ப்பதில்லை. கூகுள் செய்திகள் எல்லாமும் கலந்து கட்டி வருவதால் அதில் சில சமயம் தேவையற்றவை டாப்பில் தற்போது வைரல் எனப்படும் செய்திகளும் வந்துவிடும்.

      பொதுவாக எங்கள் வீட்டிலும் நட்பு உறவுகளிடம் பேசுவது விலங்குகள் பற்றியது இசை, நல்ல படங்கள் பற்றிய செய்திகள்தான்.

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா




      நீக்கு
    4. பாடல், உபன்யாசம் கேட்க யூ டியூபைத் திறந்தால் கண்டதும் வரதேமா.
      எப்படி ப்ளாக் செய்யறது.//

      வல்லிம்மா பொதுவாக நாம் எந்த வீடியோக்கள் பார்க்கிறோமோ அவைதான் அதிகம் வரும். ஆனால் அப்படிப் பார்க்கும் காணொளிகள் வரும் போது கூடவே கீழே இவையும் வரும். கை தெரியாமல் க்ளிக்கிவிட்டால் அடுத்த முறை திறக்கும் போது இவையும் வரும் ஹா ஹா ஹா

      நாம் கடந்து சென்று விட வேண்டியதுதான்.

      //பாவம் 12 கிலோமீட்டர் அதுவும் ஓடி காவலரும் ஓடி இருக்கிறாரே.
      கண்டுபிடித்தது மஹா பெருமை.
      நீண்ட ஆயுளுடன் இருக்கட்டும்.//

      ஆமாம் அம்மா....சமத்துக் குட்டி அது

      மௌக்ளி எங்கள் வீட்டில் பரம்பரையாக வலம் வருகிறான்.//

      ஆமாம் பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் வருவான் என்று நினைக்கிறேன்.

      //பகீராவும்,பாலுவும் Bare Nessacities பாடலும் மறக்கவே முடியாது.//

      ஆமாம் ஆமாம்

      மிக்க நன்றி வல்லிம்மா

      கீதா

      நீக்கு
  14. துங்கா மனம் கவர்கிறான்
    கருஞ்சிறுத்தைப் படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ உங்கள் கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  15. துங்கா..சூப்பர்



    இந்த தேவை அற்ற செய்திகள் எதையுமே நான் காண்பது இல்லை கீதா அக்கா ...

    நாம் என்ன பார்க்கிறோமோ அதை பற்றிய காணொளிகளே அதிகம் வரும்...எனது பார்வைகளில் அதிகமாக வேளுக்குடி ஸ்வாமியின் உபன்யாசமும் இன்னும் சில நல்ல காணொளிகள் எனவும் செல்கிறது ...

    கருஞ்சிறுத்தை படங்கள் ...ஆஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துங்கா சூப்பர் இல்லையா அனு!!

      நானும் குப்பைகளைப் பார்ப்பதில்லை அனு. அறிய வந்த போது பதிவு எழுதத் தோன்றியது.

      // நாம் என்ன பார்க்கிறோமோ அதை பற்றிய காணொளிகளே அதிகம் வரும்..//

      ஆம் அதே தான். நான் பெரும்பாலும் இசை பேக்கிங்க் பார்ப்பதுண்டு. நல்ல நல்ல குறும்படங்கள் இருக்கின்றன அவற்றைபப் பார்ப்பதாலோ என்னவோ இப்படியானவை சிலது எட்டிப் பார்க்கும் ஆனால் கடந்து சென்று விடுவேன். அது உறவினர் பெண் அனுப்பியதால் சில செவி வழி வந்ததால் பதிவு. நான் மருத்துவம் பற்றிய சிலது பார்க்கும் போது அந்த வகையில் வரும் சில பற்றித்தான் சென்ற பதிவு.

      //கருஞ்சிறுத்தை படங்கள் ...ஆஹா//

      நல்லாருக்குல்ல. நேரில் காணும் அனுபவம் கிடைத்தால்?!!

      மிக்க நன்றி அனு

      கீதா

      நீக்கு
  16. துங்கா பற்றி நானும் படித்தேன் . வேண்டாததுகள் பல கொட்டிக் கிடக்கு . நாம்தான் ஒதுங்கிப் போகணும் பாலிசி பெஸ்ட்கருஞ்சிறுத்தை படம்சூப்பர் .ஒரு கதம்ப சாப்பாடு சாப்பிட்ட திருப்தி பதிவில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா துங்கா பத்தில் எல்லா செய்தியிலும் வந்தது போல..

      ஆமாம் அருணா நிறைய வேண்டாதது நாமதான் ஒதுங்கிப் போகணும்...

      நானும் பார்ப்பதில்லை.

      //ஒரு கதம்ப சாப்பாடு சாப்பிட்ட திருப்தி பதிவில்//

      நன்றி அருணா

      கீதா

      நீக்கு
  17. வாட்ஸப்/முகநூல் காணொளிகளில் பலவும் பார்க்க முடியாத ரகமே! நான் பெரும்பாலும் பார்ப்பதில்லை. தேடித்தேடி பார்க்கும்போது சில நல்ல காணொளிகள் கிடைக்கும் - அதை மட்டுமே எனது காஃபி வித் கிட்டு பதிவில் பகிர்வேன்!

    துங்கா - வாவ்.

    கறுஞ்சிறுத்தை - படம் நன்று. கஷ்டப்பட்டு எடுத்த படத்தினை அடுத்தவர்கள், க்ரெடிட் கொடுக்காமல் பயன்படுத்துவது வலி தரும் விஷயம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடித்தேடி பார்க்கும்போது சில நல்ல காணொளிகள் கிடைக்கும் - //

      ஆமா வெங்கட்ஜி.

      மிக்க நன்றி ஜி

      கீதா

      நீக்கு
  18. சுவையான பல்சுவை பகுதி. கருப்பு சிறுத்தையின் வித்தியாசமான படங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. துங்கவைப் பற்றி, பல இடங்களை படித்தாகி விட்டது. ஃபான்டையும் மாற்றி இருக்கிறீர்கள்.   

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துங்காவைப் பற்றி நிறைய வந்திருக்குன்னு தெரிஞ்சது பானுக்கா

      ஃபான்ட் மாற்றவில்லையே பானுக்கா. முயற்சி செய்தேன். செய்கிறென்..

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  19. நீங்கள் சொல்வது மிகவும் சரி. இன்று கொரோனா காலத்தில் கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி பல நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டோம் என்பதை விட இரண்டாம் தர மூன்றாம் தர சண்டைகளை நமது சோசியல் மீடியாக்கள் உயர்த்தி பிடிக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். கருஞ்சிறுத்தை படம் மிக அருமை. உங்கள் தொகுப்பு அருமை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு