கேரளாவில்
மழைக்காலத்திற்கு முன் விறகுகள் சேமிப்பது, மிளகு, மல்லி, மஞ்சள், காய வைத்து பொடி
செய்வது, தேங்காய் கொப்பரைகளைக் காய வைத்து எண்ணெய் ஆட்டுவது, வீட்டில் கூரை ஓடுகளைச்
சரி செய்வது, மாற்றுவது, கிணற்றைச் சுத்தம் செய்வது இப்படிப்பட்ட பல வேலைகள் செய்வதுடன்
பழைய குடையைப் பழுது பார்த்து வைப்பது அல்லது புதிய குடை வாங்குவது, மழைக்கான கோட்
வாங்குவது போன்ற வேலைகள் அவசர அவசரமாக நடக்கும்தான். கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில்
பல இடங்களில் ஐந்தோ, ஆறோ பேர் பயணம் செய்யத் தகுந்த படகுகள் விற்கும் கடைகள் முளைத்திருக்கிறது.
இதுவரை பத்திற்கும் மேலான படகுகள் விற்பனையாகியும் இருக்கிறதாம். வாசிக்கும் போது வியப்பாக
இருக்கலாம். ஆனால் கடந்த இரண்டு வருடமாகத் துன்புறுத்தும் வெள்ளம்! அதுதான் இந்தத்
தற்காப்பு! ஆம்! மனிதன் இனி மிகவும் கவனமாகச் சிந்தித்து செயல்பட்டு வாழத்தான் வேண்டும்
போலான சூழல்கள். கொரோனாவிலிருந்து தப்ப “முகக்கவசம்”! வெள்ளத்திலிருந்து தப்ப “படகு”!
இப்படி காலம் செய்யும் விளையாட்டைச் சாமர்த்தியமாகத்தான் விளையாடிக் கடக்க வேண்டும்!
-------துளசிதரன்
(நட்புகளுக்கு எல்லாருக்கும் ஸாரி சொல்லிக் கொள்கிறேன்/றோம், இங்கு லாக்டவுன் இம்மாதம் 22 ஆம் தேதி வரை என்பதால் கணினி எனக்குக் கிடைக்க இரவு ஆகிவிடும். கூடவே சில வீட்டுப் பணிகள் என்பதால் அதன் பின் என்னால் பதிவுகளுக்கு வர இயலவில்லை. துளசியின் கருத்துகளையும் பதிய முடியவில்லை. என் வழியாகத்தானே அவரது பதிவுகள், பதில்கள், கருத்துகள் எல்லாம் வருகின்றன. அதனால் அதற்கும் ஸாரி சொல்லிக் கொள்கிறேன். துளசி அவர் பதிவுகளை பேப்பரில் எழுதி அனுப்பிட அதை தட்டச்சு செய்து இங்கு ஷெட்யூல் செய்ய, அப்புறம் அதற்கு அவர் அனுப்பும் கருத்துகள் போட மட்டுமே முடிகிறது. அதுவே கூட நான் போட தாமதமாகிவிடுகிறது. இங்கு பதிவுகள் வெளியாகிறது ஆனால் உங்கள் எல்லோரது பதிவுகளுக்கும் வரலையே என்று நீங்கள் யாரும் குறையாக எடுத்துக்க மாட்டீங்க இருந்தாலும் நாங்கள் ஸாரி சொல்ல வேண்டுமில்லையா. அதான் மீண்டும் ஸாரி எல்லோருக்கும். 23 ஆம் தேதியிலிருந்து வலைக்கு வர முடியும் என்று நினைக்கிறேன்.
---கீதா )
தேவைக்கேற்ப வியாபாரங்கள் மாறுகின்றன. வாழ்க்கை முறையே மாறுகிறது. நிறைய ஷேர் ஆட்டோக்கள் இங்கு நடமாடும் பழ, காய்கறி கடைகளாக மாறியது போல.. அங்கும் வெல்லத்தை உத்தேசித்து பொதுப்போக்குவரத்தை நம்பாமல் படகு வாங்குவதும் கட்டாயம்தான். அதை வாங்க முடியாமல் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்? என்ன விலை இருக்கும் படகுகள்?
பதிலளிநீக்குஆம் ஸ்ரீராம் ஜி! அதுவும் இப்போதைய சூழலே நம் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டதே.
நீக்கு//நிறைய ஷேர் ஆட்டோக்கள் இங்கு நடமாடும் பழ, காய்கறி கடைகளாக மாறியது போல.//
ஓ அங்கும் மாறுகிறதுதான் இல்லையா அவர்களும் பிழைக்க வேண்டுமே.
இங்கு நதிகளும் அதிகம், சிறிய சிறிய ஆறுகளும்.
ஒரு படகின் விலை 42000 முதல் 82000 ரூபாய் வரை. மெஷினும் பொருத்திக் கொள்ளலாம்.
எல்லாம் சென்ற இரு வருட வெள்ள அனுபவங்களினால் விளந்த தற்காப்பு நடவடிக்கைகள்.
மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
அருமையான பதிவு துளசிதரன் சார். பரவாயில்லை கீதா மேடம். நீங்க பத்திரமா இருங்க. பதிவு எப்பவேணாலும் படிக்கலாம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி அபிநயா உங்கள் கருத்திற்கு
நீக்குதுளசிதரன்
நன்றி அபிநயா பத்திரமா இருக்கிறேன். நீங்களும் பத்திரமா இருங்க அபிநயா
கீதா
லாக்டவுன் என்பதால் கணிணி உங்களுக்குக் கிடைப்பதில்லையா? மதியம் இரண்டு மணி நேரம் தூங்கும் நேரம், உங்களுக்கு கணிணி கிடைப்பதில்லையா? ஹா ஹா
பதிலளிநீக்குஹா ஹா ஹா நெல்லை, காலேஜ் ப்ராஜெக்ட், கன்சல்டன்சி வேலை என்று செல்கிறதால் கணினி பிஸி. நானும் தான். மகனுக்கு அனுப்ப வேண்டியவை எல்லாம் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.
நீக்குகீதா
கேரளா மழைக் காலம்... நினைக்கவே மகிழ்ச்சி பொங்குது.
பதிலளிநீக்குஆனா பாருங்க.... இந்த ஊர்ல எப்போப் பாத்தாலும் குளிர், மந்தமான காலநிலை போரடிக்குது. வெயில் இருந்தாலும் சென்னை தேவலையோன்னு தோணுது. இப்படித்தான், என்ன எப்பப்பாத்தாலும் நச நசன்னு மழை என அவர்களுக்கும் தோணுமோ?
இங்கு அப்படி எல்லாம் தோன்றுவதில்லை. மழை எல்லோருக்கும் பழகிவிட்டது. நிலச்சரிவு, வெள்ளம் இவைதான் பிரச்சனைகள்.
நீக்குசென்னை வெயில் அங்கிருக்கும் போக்குவரத்தினால் எங்களுக்குச் சிரமம். இங்கும் வெயில் உண்டுதானே. போக்குவரத்து மிகவும் குறைவு. எங்கள் பகுதி மலைப்பகுதி என்பதால் சமாளித்துவிடலாம்.
மிக்க நன்றி நெல்லைத்தமிழன் உங்களின் கருத்திற்கு
துளசிதரன்
மழைக்கு முன்னால் வீட்டுக்கு ஓடு மாற்றுவது, கிணற்றில் தூர் வாருவது, வீட்டின் சுற்றுப்புறங்களைச் சுத்தம் செய்வது, மழைக்காலத்துக்காகச் சிறப்பு உணவு வகைகளான, வத்தல், வடாம் போட்டு வைத்துக்கொள்வது என்று இங்கே தமிழகத்திலும் உண்டு. இங்கேயும் ஐப்பசி, கார்த்திகை அடைமழை பெய்கிறதே! (திருச்சியைத் தவிர்த்து) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குஆம் தமிழ்நாட்டிலும் நீங்கள் சொல்லியிருபது உண்டு. நானும் அங்குதானே பிறந்து வளர்ந்தவன். கல்லூரி வரை அங்குதான். பொதுவாகவே எல்லா ஊர்களிலும் உண்டுதான் இல்லையா?
நீக்குதமிழ்நாட்டில் மழைக்காலத்தில் பல இடங்களிலும் பெய்யும் திருச்சியில் கொஞ்சம் குறைவுதான். அங்கு வெயிலும் அதிகம்தான் இல்லையா?
மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம் உங்களின் கருத்திற்கு
துளசிதரன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமனிதன் இயற்கைக்கும் பயந்து பணிவுடன்தான் இருக்க வேண்டும் என்பதை தங்கள் பதிவு வெளிப்படுத்துகிறது. பருவம் தப்பாது வரும் மழை காலத்திற்காக குடைகளை அப்போது (அம்மா வீட்டில் இருந்த போது) நாங்களும் புதுப்பித்துக் கொண்ட காலங்கள் நினைவுக்கு வருகின்றன. அதன் பின் பருவம் தப்பிய எத்தனையோ மழை காலங்கள் எதையும் பொருட்படுத்தாத சூழ்நிலைகளையும் உருவாக்கியது. கடந்த இரண்டாண்டுகளாய் வரலாறு காணாத வெள்ளங்கள் இப்போது படகையும் குடையுடன் வாங்கி வைக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது வேதனைதான்...! இயற்கையின் உள் மனதை யாரறிவார்.?
சேதம் விளைவிக்காத சீரான உணவுக்கு பயனாக உள்ள மட்டும் மழை பெய்ய வேண்டுவோம். கூடவே இந்த தொற்று பரவாமல், அதன் வீரியத்தை முழுதும் குறைத்துக் கொள்ள வேண்டுமாயும் பிரார்த்திப்போம்.
கீதா சகோதரி.. தங்களுக்கும் வெகு விரைவில் வலைத்தளம் உலா வந்து பதிவுகளுக்கு நீங்கள் கருத்து மழைகளை பொழியும் காலகட்டங்கள் நல்லபடியாக வர வேண்டுமெனவும பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஆம்! இயற்கையின் முன் நாம் மனிதர்கள் எம்மாத்திரம்?
நீக்கு//பருவம் தப்பாது வரும் மழை காலத்திற்காக குடைகளை அப்போது (அம்மா வீட்டில் இருந்த போது) நாங்களும் புதுப்பித்துக் கொண்ட காலங்கள் நினைவுக்கு வருகின்றன.//
எல்லாருக்குமே அவரவர் அனுபவங்கள் நினைவுக்கு வரும்.
//கடந்த இரண்டாண்டுகளாய் வரலாறு காணாத வெள்ளங்கள் இப்போது படகையும் குடையுடன் வாங்கி வைக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது வேதனைதான்...!//
என்ன செய்ய சென்ற இரு வருடங்கள் தந்த அனுபவம். ஆம் சகோதரி பிரார்த்திப்போம்.
மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் உங்களின் கருத்திற்கு
துளசிதரன்
கீதா சகோதரி.. தங்களுக்கும் வெகு விரைவில் வலைத்தளம் உலா வந்து பதிவுகளுக்கு நீங்கள் கருத்து மழைகளை பொழியும் காலகட்டங்கள் நல்லபடியாக வர வேண்டுமெனவும பிரார்த்தித்துக் கொள்கிறேன். //
நீக்குஹா ஹா ஹா கமலாக்கா கணினியோடு சேர்ந்து நானும் இப்ப பிஸியாக்கும் ஹா ஹா
வந்திருவேன் கமலாக்க..
மிக்க ந்னறி கமலாக்கா
கீதா
கொரோனாவிலிருந்து தப்ப “முகக்கவசம்”!
பதிலளிநீக்குவெள்ளத்திலிருந்து தப்ப “படகு”!..
ம்ம்ம் ...அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம் ..
பரவாயில்லை கீதா அக்கா ...
மெதுவாக வாருங்கள் ...காத்திருக்கிறோம்
ஆமாம் சகோதரி அனுபிரேம் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் அப்படியான சுழல்கள் உருவாகின்றன.
நீக்குமிக்க நன்றி சகோதரி
துளசிதரன்
வரேன் வரேன் அனு...வந்திருவேன்/வோம்
மிக்க நன்றி அனு
கீதா
இனி வரும் காலம் வாழ்வது மட்டுமல்ல உயிரை காப்பாற்றிக் கொள்வதும் அவனவன் செயலாகத்தான் இருக்க முடியும்.
பதிலளிநீக்குமிகவும் சரியாகச் சொன்னீர்கள் கில்லர்ஜி. அவனவன் செயல்தான். இறைவன் தான் வழிகாட்ட வேண்டும். நாம் நமது முயற்சியை செய்வோம் அதன் பின் நடப்பது நம் கையில் இல்லையே.
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி உங்களின் கருத்திற்கு
துளசிதரன்
சொர்க்க பூமியிலும் சிரமம்...!
பதிலளிநீக்குஉங்கள் கருத்துரைகளை எதிர்ப் பார்ப்பதில் அடியேனும் ஒருவன்...!
ஆமாம் டிடி இங்கும் சிரமங்கள் உண்டுதான். இந்த மழை இல்லை என்றால் கேரளம் பச்சையாக இருக்காது. ஆனால் இந்த மழை அதிகமானால் வெள்ளம். பல வகை நீர்நிலைகள் இருப்பதால்.
நீக்குமிக்க நன்றி டிடி உங்களின் கருத்திற்கு
துளசிதரன்
டிடி மிக்க நன்றி, வந்திடுவேன்.
கீதா
காலச்சூழலே நம் தேவைகளைத் தீர்மானிக்கிறது..அதற்கேற்ப தகவமைத்துக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்...
பதிலளிநீக்குகண்டிப்பாக, உங்கள் கருத்து மிகவும் சரியே. இயற்கையோடு இணைந்து அதன் சொற்படி நாம் சென்றால்தான் நாம் வாழ இயலும்
நீக்குமிக்க நன்றி ரமணி சார் உங்களின் கருத்திற்கு
துளசிதரன்
//கொரோனாவிலிருந்து தப்ப “முகக்கவசம்”! வெள்ளத்திலிருந்து தப்ப “படகு”! இப்படி காலம் செய்யும் விளையாட்டைச் சாமர்த்தியமாகத்தான் விளையாடிக் கடக்க வேண்டும்!//
பதிலளிநீக்குசாமர்த்தியமாய் கடக்க இறைவன் என்ற துடுப்பு வேண்டும். இறைவன் அருள்புரிய வேண்டும்.
ஒவ்வொரு இடத்திலும் வெள்ளம், டெல்லியில் மழையில் கட்டிடம் இடைந்து விழுவதை பார்த்தேன் செய்தியில்.
நீங்கள் நேரம் கிடைக்கும் போது வாருங்கள் கீதா. நானும் நேரா நேரத்திற்கு இணையம் பக்கம் வர முடியவில்லை. நேரம் கிடைக்கும் போது தான் வ்ருகிறேன்.
சாமர்த்தியமாய் கடக்க இறைவன் என்ற துடுப்பு வேண்டும். இறைவன் அருள்புரிய வேண்டும்.
நீக்குஒவ்வொரு இடத்திலும் வெள்ளம், டெல்லியில் மழையில் கட்டிடம் இடைந்து விழுவதை பார்த்தேன் செய்தியில்.//
ஆமாம் சகோதரி. இறைவனின் இயற்கையின் செயலை நம்மால் எதிர்க்க இயலுமா? நானும் செய்தி பார்த்தேன். முடிந்தவரை நாம் நம்மைத் தற்காத்துக் கொள்வோம் மிச்சம் அவன் கையில்.
மிக்க நன்றி சகோதரி கோமதி அரசு உங்களின் கருத்திற்கு
துளசிதரன்
எல்லா வலைதளங்களுக்கும் தினசரி செல்லா நமக்கு நேரம் கிடைப்பதில்லை அது மட்டுமல்ல எல்லா பதிவுகளையும் படிக்க நமக்கு நேரமும் இல்லை ஆனாலும் அதற்கும் வருத்தம் தெரிவித்து பதிவு இடும் நீங்கள் இருவரும் கிரேட்
பதிலளிநீக்குஇதில் என்ன இருக்கிறது மதுரைதமிழன். இதற்கும் பாராட்டா!!
நீக்குமிக்க நன்றி மதுரைதமிழன்!
துளசிதரன்
கீதா
மழைக்கால ஏற்பாடுகள் ஒவ்வொரு வருடமும்! இதேபோல படகுகளும் வாங்கி வைப்பது புதிய தகவல். இயற்கைக்கு எதிராக நாம் எம்மாத்திரம்? பதிவுகள் எங்கே போய்விடப் போகின்றன. பொறுமையாக முடிந்தபோது வாருங்கள்.
பதிலளிநீக்குஎங்களுக்குமே இது புதியதாகத்தான் இருந்தது. சென்னையில் வெள்ளம் வந்த போது படகு பற்றி பல ஜோக்குகள் வந்தன. இப்போது இங்கும் அப்படியான நிலை. சென்ற இரு வருடங்களின் தொடர் அனுபவங்களினால் வந்த முன்ஜாக்கிரதை.
நீக்குஇயற்கையின் முன் நாம் எம்மாத்திரம்//
ஆம் நாம் எம்மாத்திரம்?!
மிக்க நன்றி வெங்கட்ஜி உங்களின் கருத்திற்கு
துளசிதரன்
ஆமாம் வெங்கட்ஜி. வந்துவிடுவோம். மிக்க நன்றி
கீதா
அனைத்தையும் கடந்துபோக வேண்டிய சூழல். உலகம் இயல்புநிலைக்குத் திரும்பும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்.
பதிலளிநீக்குஆமாம் முனைவர் ஐயா.
நீக்குமிக்க நன்றி உங்களின் கருத்திற்கு
துளசிதரன்
கீதா மேடம் நீங்கள் வராவிட்டாலும் நான் பிளாக்கில் பண்ணும் குளறுபடிகளை எப்படி சரி செய்வது என்று ஆலோசனை தரும்சூப்பர் வெர்ச்சுவல் டெக்கினிக்கல் இன்ஜினீயர் . மொள்ள வாங்க. துளசி சார் உங்க சொந்த வேலையைப் பாருங்க .எனக்கும் அது மாதிரி பல தடவை ஆகி அப்பப்ப ரெஸ்ட் எடுத்துக்கறேன்
பதிலளிநீக்குஅட! அருணா நான் ஒன்றும் டெக்னிக்கல் ஆள் எல்லாம் இல்லை நான் செய்வதை உங்களுக்குச் சொன்னேன். இங்கு வலையில் டெக்னிக்கல் கில்லாடிகள் பலர் இருக்கின்றனர்.
நீக்குமிக்க நன்றி அருணா
கீதா
பதிலளிநீக்குவருமுன் காப்பது சரிதானே, அதிலும் பழைய குடையை சரிசெய்வததை பெரும்பாலும் மக்கள் கவனத்தில் கொள்வதில்லை, அப்படி செய்பவர்கள் பாராட்டத்தக்கவர்கள் அவர்களை உஷார் பார்ட்டிகள் என்றுகூட புகழலாம். படகு வாங்குவது என்பது கொஞ்சம் வித்தியாசமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரிகிறது.
நமக்குள் என்னங்க சாரி , நேற்று முடியலைன்னா என்ன இன்றைக்கு வாசித்து கருத்துப்போட போறீங்க… அதுக்குப்போய்… பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு…. கண்ண கசக்கிக்கிட்டு….
ஆமாம் கோயில்பிள்ள. குடைகளைச் சரி செய்து வைப்பவர்கள் இப்போது மிகவும் குறைவுதான் இங்கும்.
நீக்கு//படகு வாங்குவது என்பது கொஞ்சம் வித்தியாசமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெரிகிறது.//
அது எல்லாம் பட்ட அனுபவத்தினால் என்றே தோன்றுகிறது.
மிக்க நன்றி கோயில் பிள்லை உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
ஹா ஹா ஹா கோ உங்க கருத்தை வாசிச்சு சிரித்துவிட்டேன். ஸாரி பெரிய வார்த்தையா?!! தமிழ்ல ரென்டே எழுத்து...ஆங்கிலத்தில் 5 தானே!!!
நீக்குமிக்க நன்றி
கீதா
எப்படி இருக்கின்றீர்கள்,கருத்துக்களை நோக்கி காத்திருக்கின்றேன்.
நீக்குகோ வந்துவிடோமே உங்கள் பதிவுகளுக்கும்!!!
நீக்குகீதா
என்னது டிவிஎஸ் 50 மாதிரி வீட்டுக்கு ஒரு படகா. வித்யாசமான தகவல். நேரம் கிடைக்கும்போது வாங்க கீத்ஸ் & துளசி. பத்ரமா இருங்க. :)
பதிலளிநீக்குஅப்படி ஒரு செய்தி வந்தது. எனக்குமே ஆச்சரியம்தான். ஆனால் இங்கு தண்ணீர் நிலைஅள் அதிகமாயிற்றே. ஆனால் எல்லாராலும் வாங்க இயலுமா என்று சொல்ல முடியாதுதான்.
நீக்குமிக்க நன்றி தேனம்மை சகோதரி உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
பத்திரமாக இருக்கிறோம் தேனு. மீண்டும் வந்தாச்சு
கீதா
அன்பு துளசிதரன்,
பதிலளிநீக்குவருமுன் காப்போனாக நீங்கள் எல்லோரும் செயல்படுவது
மகிழ்ச்சி.
இந்த வருடம் நல்ல மழை இருக்கப் போவதாகத் தான் பேச்சு.
மும்பையில் கூட இது போல முன்னேற்பாடுகள் செய்வதாகக்
கேள்விப்பட்டேன்.
மழை சிலருக்கு லாபம். எல்லோருக்கும் நன்மை விளைய பிரார்த்திப்போம்.
பொதுவாகவே இப்போது அனைவருக்கும் வேலை அதிகரித்து விட்டது.
படிப்பய்ஹு குறைகிறது.
நீங்களும்
அன்பு கீதாவும் இதற்காக வருந்த வேண்டாம்.
உரிய நேரத்தில் அனைத்தும் சரியாகட்டும்.
ஆம் வல்லிம்மா. இங்கு கேரளத்தில் இரு வருடமாகத் தொடர்ந்து பல இடங்கள் மழையில் கொஞ்சம் அவதிப்பட்டதால் இப்போது முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன. சேதத்தைக் குறைப்பதற்காக. இந்த வருடம் இங்கு அதிகம் இல்லை.
நீக்குஆமாம் மும்பையில், மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் மழை அதிகமாகப் பெய்ததே. வெள்ளம் வேறு வந்ததே.
//மழை சிலருக்கு லாபம். எல்லோருக்கும் நன்மை விளைய பிரார்த்திப்போம்.//
ஆமாம் எல்லோருக்கும் நன்மை பயத்திடப் பிரார்த்திப்போம்.
துளசிதரன்