புதன், 1 ஜூலை, 2020

அக்கம் பக்கம்

அமெரிக்காவில் இருக்கும் என் புகுந்த வீட்டுச் சித்தப்பா மகளுக்கு அரை செஞ்சுரி பிறந்த நாள். அதற்காக அவளுக்குத் தெரியாமல் எங்கள் வட்டத்தில் (எங்கள் குழுதான் எங்கள் புகுந்த வீட்டு ஜாலி பயணக் குழு) உள்ளவர்கள் மற்றும் அவள் பெற்றோர் அனைவரையும் ஜூம் வீடியோவில் அவளை வாழ்த்த ஏற்பாடு செய்தார் குழுவில் ஒருவர். அமெரிக்கா நேரம் இரவு 12க்கு அதாவது இங்கு நமக்கு காலை 9.30க்கு. என்னால் பங்கு கொள்ள முடியவில்லை. அந்த வீடியோ முடிந்ததும் அவள் என்னை அழைக்க

செஞ்சுரி அடிக்க வாழ்த்துகள். வாட் ஸ்பெஷல்

அதை ஏன் கேக்கறீங்க.  அவங்கவங்க வீட்டில என் பேர் சொல்லி கேக், ஸ்வீட்டுன்னு செஞ்சு ஜூம்ல காட்டி இந்தா எடுத்துக்கோன்னு அலப்பறை”  

ஹா ஹா ஹா….சாமிக்குப் படைச்சு எல்லாம் உமக்குன்னு சொல்லி, ஆவி உமக்கு அமுது எமக்குன்னு சாப்பிடறா மாதிரி

ஹிஹிஹிஹி

இப்ப ஆட்டிப் படைக்கற மாயாவிக்கும் ஒரு வேண்டுதல் போட்ரலாமா”  

Dear God, thank you for my family. I pray for all the homeless ...

உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். எல்லாருக்கும் விளையாட்டா போச்சு...... எல்லோருக்கும் நல்ல புத்தியும், நல்ல மனதும் வேண்டும்.

மார்ச் இரண்டாவது வாரத்திலிருந்தே நாங்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வந்தோம். முன் ஜாக்கிரதை முத்து! அதன் பின் ஊரடங்கு. கடந்த வெள்ளி வரை எங்குமே செல்லவில்லை.

துரித அஞ்சல் அனுப்ப வேண்டி இருந்ததால், 2 கிமீ தூரத்தில் இருக்கும் எலஹங்கா பழைய டவுன் துணை அஞ்சல் அலுவலகத்திற்கு முக உறை போட்டுக் கொண்டு, ஆட்கள் அதிகம் நடந்து செல்லாத, கடைகள் இருக்கும் சாலை வழியே நடந்து சென்றேன். 

கொகிலு க்ராஸ் ஜங்க்ஷனில் ராணுவ உடை போன்று அணிந்திருந்த காவலர்கள் ஆங்காங்கே நின்று கொண்டு முக உறை அணியாமல் வருபவர்களை நிறுத்தி அபராதம் போட்டுக் கொண்டிருந்தனர். சாமியோவ் நான் தப்பித்தேன்! நான் நல்ல பிள்ளையாக்கும்!

சாலையைக் கடக்க அங்கிருந்த உடுப்பி உணவகத்தின் ஓரம் நின்று கொண்டிருந்த போது (உள்ளே நுழைஞ்சு சாப்பிட்டிருப்பேன்னு நினைக்காதீங்க. மீ இப்ப மாயாவி விரதம்!) வண்டியுடன்  என்னைக் கடந்தவர் முக உறை அணியாமல் சென்றதைப் பார்த்ததும் ஹையோ மாட்டிக்குவாரே என்று நினைத்த போதே (மனதில் வடிவேலு ஸ்டைலில் அவரை எச்சரிக்கை செய்வது போல்) ஒரு காவலர் ஓடி வந்து வண்டியைப் பிடித்து விட்டார். அவரிடம் அபராதம் கட்டச் சொல்லி ஹிந்தியில் மாத்தாடினார். வண்டி எண்ணை அலைபேசியில் பிடித்துக் கொண்டார். அபராதம் 1000 ரூபாயாம்! பின்னர் அறிந்து கொண்டேன். ஆத்தாடி! தப்பித்தேன்.

அஞ்சலகத்தில் யாரையும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை. எல்லோருமே அலுவலகம் இருக்கும் குறுக்குச் சந்தில் வெளியில் நிற்க வேண்டும். அங்கு குறுக்குச் சாலையும் சரி பிரதான சாலையும் சரி நல்ல பெரிதாக அகலமாக இருக்கும். ஓரமாக நடைபாதையில் சிலர் அமர்ந்து கொண்டிருந்தனர். 

அலுவலகத்தின் வெளியே ஒரு ஊழியர் நின்று கொண்டு குழுவாக இருக்கக் கூடாது, தள்ளி தள்ளி இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான் ரொம்ப கேர்ஃபுல்லாக்கும்! யார் யாருக்கு என்னென்ன சேவை தேவை என்பதை தள்ளி நின்று சொல்ல வேண்டும். அதற்கு ஏற்ப அவர் ஒவ்வொருவராக உள்ளே அனுமதிப்பார். ஒரே சமயத்தில் ஓரிருவர்தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் ஒருவர் உள்ளே சென்ற பின் தான் அடுத்தவர்.

சேமிப்பு கணக்கு, ஓய்வூதியம், இன்ன பிற சேவைகளுக்கு அவர்களுக்கான அஞ்சலக பாஸ் புக்கை ஒரு பெட்டியில் வாங்கிக் கொள்கிறார். அந்த ஊழியரே அதை உள்ளே கொடுத்து சேவையைப் பூர்த்தி செய்து அதே பெட்டியில் வைத்து ஒவ்வொருவராக வந்து எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். நேரில் செல்ல வேண்டும் என்றால் ஒருவர் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்.

எனக்கு துரித அஞ்சல் அனுப்ப வேண்டிய வேலை என்பதால் என்னை உள்ளே அனுமதித்து கையில் சுத்தம் செய்து கொள்ளும் திரவத்தை தெளித்தார். சுத்தம் செய்து கொண்டு உள்ளே சென்று கவுன்டரிலிருந்து எட்ட நின்று நம் வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் வெளியே வரும் போது வாயிலில் யாரும் கூடி நிற்காதபடியும் பார்த்துக் கொண்டார்.

மற்றொருவரும் அடுத்த கவுன்டரில் அனுமதிக்கப்பட்டார். எங்கள் இருவருக்கிடையில் 4 நாற்காலிகள் இருந்தன. உட்காரன்னு நினைக்காதீங்க. சும்மா இடைவெளியாம்! அங்கிருந்த ஊழியர்களும் கையை அவ்வப்போது துடைத்துக் கொள்கின்றனர். மிகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள். இப்படித்தான் இங்கிருக்கும் எல்லா அஞ்சலகங்களிலுமா என்று தெரியவில்லை.

அதன் அருகில் இருக்கும் மோர் (More) சூப்பர் மார்க்கெட்டிலும் உள்ளே ஒரே சமயத்தில் அதிகம் பேர் அனுமதிக்கப்படவில்லை. அவர்களும் வெப்பநிலை பரிசோதித்து, சுத்திகரிப்பு திரவம் கொடுத்து கைகளைச் சுத்தம் செய்த பின்தான் உள்ளே அனுமதிக்கிறார்கள். நான் உள்ளே செல்லவில்லை. எனக்குத் தேவையான சிலோன் சுருள் பட்டை இருக்கிறதா என்று வெளியில் இருந்தே கேட்டு இல்லை என்றதும் வீடு நோக்கி நடை.

திரும்பும் போது இரு இளைஞர்கள் முக உறை அணியாமல் வண்டியில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்த காவலர் ஓடிச் சென்றார். அதற்குள் பின்னால் அமர்ந்திருந்தவர் தப்பித்து ஓடிச் செல்ல, வண்டி ஓட்டியவர் பிடிபட, காவலர் வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டுவிட்டார்.  வண்டி எண்ணை மொபைலில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார். ஓடிச் சென்றவரும் வந்து காவலரைப் பார்த்து இருவரும் அபராதம் கட்டினால் தான் வண்டிச்சாவியைத் திரும்பக் கொடுப்பேன் என்று ஹிந்தியில் சொல்லிக் கொண்டிருந்தார்.

இவங்களுக்கெல்லாம் விளையாட்டா போச்சு. கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்லாம…. என்று என்னைப் பார்த்துக் கொண்டே சிரித்தாரா அல்லது சலித்துக் கொண்டாரா தெரியவில்லை. சிரித்தார் என்று நினைத்து நானும் புன்சிரித்தேன். கடந்தேன்.

ஒரு நல்லது நடக்கறதப் பார்த்தா அதைச் சொல்லணுமில்லையா!

ஹிஹிஹிஹி

எங்கள் தொட்டடுத்த வீட்டின் வெளியில் நின்று கொண்டிருக்கிறார் மாயாவி. எல்லாம் கூட்டம் அடிக்கடி போட்டதால். அவர்கள் கூட்டம் போட்டுத் தலைவரின் பிறந்த நாளைக் கொண்டாடி, அத்தலைவரும் அவருடைய உதவியாளரும் மூன்று நாட்கள் முன்பு வரை வந்துகொண்டிருந்தனர். நம் வீட்டின் மதிலை ஒட்டித்தான் அவரது கார் நிற்கும். என்னடா காணவில்லையே என்று பார்த்தால், அவரையும் மாயாவி பிடித்துக்கொண்டுவிட்டாராம். தொட்டடுத்த வீட்டின் நிலை பற்றி தெரியவில்லை. இத்தனைக்கும் நம் வீட்டையும் அவர்கள் வீட்டையும் பிரிப்பது மிகச் சிறிய குட்டை மதில்தான் கால் போட்டு இறங்கிவிடலாம். முன்பே படமும் போட்டிருக்கிறேன். நல்லதே நடந்திடட்டும். நல்லதே நினைப்போம்.

 வாட்சப்பில் வந்ததுதான் நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீகள்

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்!

-----கீதா

55 கருத்துகள்:

  1. நீங்க இழுத்துக்கிட்டு போறது நம்ம பையன்....நகைச்சுவை மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா நகைச்சுவையை ரசித்தமைக்கு.

      கீதா

      நீக்கு
  2. கைப்பேசியில் தான் எல்லாமே என்றாகி விட்டது...

    முன் ஜாக்கிரதை முத்து நீங்கள் மட்டுமல்ல... ஊரும் இப்படி இருப்பது வியப்பு தான்... ஏன்னென்றால் இங்கு மு.ஜா.மு-வுக்கு யாரும் மாறவில்லை... முஜாமு அனைவரும் தொடர்ந்தால் தான் அனைவருக்குமே நல்லது... ம்...

    காணொளி பலமுறை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கைப்பேசியில் தான் எல்லாமே என்றாகி விட்டது...//

      ஆமாம், ஆனால் கைப்பேசியில் என்னால் அதிகம் செய்ய முடிவதில்லை டிடி.

      ஆமா இப்ப எல்லாருமே ஜாக்கிரதையாகத்தான் இருக்காங்க. ஆனாலும் நிறையப்பேர் ரொம்ப கேர்லெல்லா இருக்காங்க. ஆமாம் முஜாமுவுக்கு யாரும் மாறவில்லை. நீங்கள் சொல்வது போல் எல்லாரும் தொடர்ந்தால் நல்லது.

      காணொளி பல முறை ரசித்தமைக்கு மிக்க நன்றி டிடி. நானும் இதை அடிக்கடி பார்ப்பதுண்டு.

      மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  3. முன் ஜாக்கிரதை முத்தாக இருப்பது இன்று நல்லதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கரந்தை சகோ. மிக்க நன்றி கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  4. விதிமுறைகளை பெங்களூர் இவ்வளவு கடைபிடிப்பது மகிழ்ச்சி. மீறுபவர்கள் எங்கும் இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரவிந்த் இங்கு கடைபிடிக்கிறாங்கதான் ஆனால் மக்களும் இன்னும் கவனமாக ஒத்துழைக்க வேண்டும். மீறுபவர்கள் அதிகமாக இருக்காங்களே.

      மிக்க நன்றி அரவிந்த்

      கீதா

      நீக்கு
  5. //செஞ்சுரி அடிக்க வாழ்த்துகள்// - எப்போவும் நீங்க இப்படி வாழ்த்தக்கூடாது. நல்ல ஆரோக்கியமா நீண்டகாலம் வாழணும் என்றே வாழ்த்தணும்.

    80ஐத் தாண்டினவங்ககிட்ட நீங்க நூறாண்டு வாழணும்னு சொன்னா நிச்சயமா அடிக்கவே வந்துடுவாங்க..ஹா ஹா. என் சித்தப்பா கிட்ட நான், எனக்கு வர்ற ப்ரபந்த மற்ற சந்தேகங்களை சட்னு போக்கிடறீங்க. நீங்க நூறாண்டு வாழணும்னு சொன்னதுக்கு அவர் சொன்னார், எனக்கு நல்லது பண்ணணும்னு நீ நினைத்தால் நான் உடனே போயிடணும்னு வேண்டிக்கோ என்றார் (80+).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை நல்ல ஆரோக்கியத்துடன் என்பதும் சொல்வதுண்டே! அப்படித்தான் வாழ்த்துவதும். நீங்கள் சொல்றது சரிதான்.

      ஆமாம் என் பாட்டி அபப்டித்தான் "அம்மா நீ நிறைய நாள் இருக்கணும் " என்று சொன்னால் "போறும் போ ரொம்ப முக்கியம்...எல்லாரையும் பறிகொடுத்துட்டு நான் இருந்த என்ன வாழ்ந்துது" என்பார்.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  6. மோர் போன்ற சூப்பர்மார்க்கெட்ல பாதுகாப்புக்காக மெனெக்கெட்டாலும் உள்ள வரும் கஸ்டமர்கள் அவ்வளவு ஜாக்கிரதையா இருப்பதில்லை.

    அஞ்சலலுவலகத்தில் அவங்களோட பாதுகாப்புக்காகவாவது இப்படி ஸ்டிரிக்டா இருக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோர் போன்ற சூப்பர்மார்க்கெட்ல பாதுகாப்புக்காக மெனெக்கெட்டாலும் உள்ள வரும் கஸ்டமர்கள் அவ்வளவு ஜாக்கிரதையா இருப்பதில்லை.//

      ஆமாம் நெல்லை அதனாலதானே நான் உள்ளேயே போகலை!! ஹா ஹா ஹா.

      //அஞ்சலலுவலகத்தில் அவங்களோட பாதுகாப்புக்காகவாவது இப்படி ஸ்டிரிக்டா இருக்கணும்.//

      கண்டிப்பா. இது வின் வின் சிச்சுவேஷன். நானும் நல்லாருக்கேன் நீயும் நல்லாரு நு இருக்கணும் ஆனா மக்கள்?

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
  7. முன் ஜாக்கிரதை முத்து வெரி போர். சீக்கிரம் வெளிய போகனும். என் க்ரிஷ்ணர் சுவாமி என் வருகைக்காக கோவிலுக்குள்ள வெயிட் பன்றார். அருமையான பதிவு மேடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அபி. ரொம்ப போர் தான் ஆனால் இதுவும் கடந்து போகும்னு பொறுமையா இருக்க வேண்டியதுதான். நம்மால் ஒன்றும் செய்ய முடியாத போது நம்மைத் தற்காத்துக் கொண்டு அமைதியாக இருப்பதே நம் மனதிற்கு நல்லது.

      உங்கள் கிருஷணர் வீட்டிலும் இருப்பாரே ஏன் உங்கள் மனதிலும்!! அப்புறம் என்ன கவலை!!! உன் மனதில்தான் இருக்கிறேன் அங்கு தேடாதே என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

      மிக்க நன்றி அபி!

      கீதா

      நீக்கு
  8. ஜூம் வீடியோவில் பேரனின் பிறந்த நாளை காட்டினான் மகன்.
    மருமகள் செய்த கேக் கொடுத்தாள் கற்பனையாக வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தேன். இந்த கற்பனை உலகில் தான் இப்போது மகிழ வேண்டும் வேறு என்ன செய்வது!

    //உலகம் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். எல்லாருக்கும் விளையாட்டா போச்சு...... எல்லோருக்கும் நல்ல புத்தியும், நல்ல மனதும் வேண்டும்.//

    கண்ணழகி பிரார்த்தனை அருமை.

    விதிமுறைகளை மதித்து எங்கும் போகவில்லை.
    நெருங்கிய உறவு ஒருவரின் இறப்புக்கு நான் மட்டும் போய் வந்தேன்.

    எங்கள் குடியிருப்பிலும் ஒரு பையனுக்கு வந்து விட்டது. அதனால் மேலும் கெடுபிடிகள் அதைகாமய் இருக்கிறது. இந்த மாதம் ஆரம்பித்திலிருந்து குழந்தைகள் விளையாட ஆரம்பித்தார்கள். இப்போது அந்த பையனுக்கு வந்து விட்டதால் எல்லோரும் வீட்டுக்குள் குழந்தைகளைப் போட்டு கப் சிப் என்று வெளியே தலைகாட்டாமல் இருக்கிறார்கள்.

    அந்த பையன் உடல் நலம் பெற்று வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கிறேன்.
    உங்கள் அனுபவ பகிர்வு , பகிர்ந்த சிரிப்பு, காணொளி மிக எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜூம் வீடியோவில் பேரனின் பிறந்த நாளை காட்டினான் மகன்.
      மருமகள் செய்த கேக் கொடுத்தாள் கற்பனையாக வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தேன். இந்த கற்பனை உலகில் தான் இப்போது மகிழ வேண்டும் வேறு என்ன செய்வது!//

      ஆமாம் கோமதிக்கா...இப்ப எல்லாமே ஜூம் தான். அட பேரனின் பிறந்தநாள் காட்டி நீங்கள் மகிழ்ந்ததது சந்தோஷமாக இருந்திருக்குமே. அட்லீஸ்ட் இதுவேனும் முடிகிறதே இல்லையா?

      என் மகனிடம் நான் செபியைக் காட்டுடா என்று சொன்னால்தான் வாட்சப்பில் வீடியோ ஆன் செய்வான். அவ்னாக வீடியோ கால் செய்யவே மாட்டான். தன்னைக் காட்டவும் வீடியோ போட மாட்டான். நான் தான் சொல்லுவேன் டேய் உன்னை பார்த்து ரொம்பநாளாச்சுடா கொஞ்சம் வீடியோல வான்னு.

      ஓ உங்க குடியிருப்பிலும் வந்துவிட்டதா? அந்தப் பையன் நலமுடன் திரும்ப வேண்டும் அக்கா. அக்கா நீங்கள் மாமா எல்லோரும் கவனமுடன் இருங்கள்.

      இங்கு எங்கள் தொட்டடுத்த தெருவில் ரொம்பக் கிட்டத்தில் அதுவும் நாங்கள் செல்லும் கடையின் அடுத்த வீடு மாயாவி தொற்றிக் கொண்டுவிட்டார். இருவர். கணவன் மனைவி. இன்று வண்டி வந்து அவர்களை அழைத்துக் கொண்டு சென்று, அருகில் இருக்கும் கடைகள் எல்லாம் அடைத்து டேப் போட்டுவிட்டார்கள். அந்தத் தெரு அந்த வீடு எல்லாமும் ஃப்யுமிகேட் செய்தார்கள்.

      எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். நல்லது நடந்திடும்.

      காணொளி ஜோக் ரசித்தமைக்கு நன்றி கோமதிக்கா

      மிக்க நன்றி அக்கா

      கீதா

      நீக்கு
  9. முடிந்தவரை பெரிய கடைகளுக்கு போவதை தவிர்ப்பது நல்லது காரணம் அலைபேசி எண் வாங்குகிறார்கள் மறுநாள் ஆம்புலன்ஸ் வீட்டுக்கு வரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கில்லர்ஜி. பெரிய கடைகளுக்குச் செல்வதே இல்லை. இந்தக் கடையில் கூட சும்மா எப்படி பாதுகாப்பு என்று அறிய எட்டிப் பார்த்து அப்படியே பதிவில் சொல்லியிருப்பதைக் கேட்டு இல்லை என்றதும் அப்படியே திரும்பிவிட்டேன் உள்ளே கூடச் செல்லவில்லை.

      //காரணம் அலைபேசி எண் வாங்குகிறார்கள் மறுநாள் ஆம்புலன்ஸ் வீட்டுக்கு வரலாம்.//

      ஓ! அப்படியுமா நடக்கிறது? டெஸ்ட் செய்யவா?

      மிக்க நன்றி கில்லர்ஜி

      கீதா

      நீக்கு
  10. இப்போதெல்லாம் உறவினர்களை ஜூமிலும் கூகுள் மீட்டிலும் பார்ப்பதே வழக்கமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். எவ்வளவு நாளோ? மாதங்களோ? விரைவில் நல்லது நடக்கும் ஸ்ரீராம். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு வரத்தானே செய்யும்?

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  11. போஸ்ட் ஆபீஸ் சம்பவம் ஏற்கெனவே என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள்...  நல்ல ஏற்பாடு,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! ஆமாம் ல! ஆமாம் ஸ்ரீராம் நல்லா ஏற்பாடு செஞ்சுருககாங்க. நிறைய கடைகளிலும் செஞ்சுருக்காங்கந்தான் ஆனா மக்களை போஸ்ட் ஆபீஸ் போல கன்ட்ரோல் பண்ணமாட்டேன்றாங்க.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  12. வணக்கம் சகோதரி

    உங்கள் அனுபவ பதிவு அருமை. உங்கள் புகுந்த வீட்டு சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். இந்தியாவிலிருக்கும் உறவுகளை இப்படித்தான் இனி பார்க்க முடியுமோ என நினைக்கையில், சற்று கஸ்டமாக உள்ளது. வெளி நாட்டிலிருக்கும் என் மகனையும், மருமகளையும் இப்படித்தான் கண்டு பேசி வருகிறோம். எப்போது நேரில் பார்ப்போம் என உள்ளது.

    இங்கும் வெளியில் செல்லவே பயமாக உள்ளது. இங்கும் அருகில் ஒரு கேஸ் வந்ததால், கெடுபிடிகள் அதிகம் உள்ளதாலும், வீட்டிலும் சின்னக் குழந்தைகள் உள்ளதாலும் வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்த்தே விட்டோம். வீட்டுச்சிறை எனக்கு பழக்கம்தான் எனினும், குழந்தைகள் அடைந்து கிடக்கிறார்கள். வாரம் ஒரு முறை பார்க்கில் விளையாட அழைத்துப் போவோம். இப்போது நான்கு மாதங்களாக எதுவுமில்லை.

    ஆட்டிப் படைக்கும் மாயாவிக்கு வேண்டுதல் போடுவது தங்கள் கண்ணழகியா? அழகான வேண்டுதல். விரைவில் பலிக்க வேண்டும்.

    நகைச்சுவையை ரசித்தேன்.

    அக்கம் பக்கம் பார்க்காதே...!
    ஆளைக் கண்டு மிரளாதே...!
    இந்தப் பாடலை இப்போது மாற்றிப் பாட வேண்டிய சூழ்நிலை...! ஹா.ஹா.ஹா.

    இந்நோயை கட்டுப்படுத்தும் மருந்துகள் விரைவில் கண்டுபிடிக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன்./வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவ பதிவு அருமை. உங்கள் புகுந்த வீட்டு சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.//

      மிக்க நன்றி கமலாக்கா.

      வெளி நாட்டிலிருக்கும் என் மகனையும், மருமகளையும் இப்படித்தான் கண்டு பேசி வருகிறோம். எப்போது நேரில் பார்ப்போம் என உள்ளது.//

      ஓ உங்கள் மகன் வெளிநாட்டில் இருக்கிறாரா! கஷ்டமாகத்தான் இருக்கும் சரிதான் ஆனால் விரைவில் எல்லாம் நலமாகும் கமலாக்கா. நிச்சயமாய் சரியாகும்.

      இல்லை அக்கா அது கண்ணழகி இல்லை அக்கா. எல்லாமே இணையம் தான்.

      நகைச்சுவையை ரசித்தமைக்கு மிக்க நன்றி கமலாக்கா

      அக்கம் பக்கம் பார்க்காதே...!
      ஆளைக் கண்டு மிரளாதே...!
      இந்தப் பாடலை இப்போது மாற்றிப் பாட வேண்டிய சூழ்நிலை...! ஹா.ஹா.ஹா.//

      இப்படி ஒரு பாட்டு இருப்பதே தெரியவில்லை...ஆனால் சிரித்துவிட்டேன் மாற்றிப் பாட வேண்டிய சூழல்னு சொல்லியிருப்பதைப்ப் ஆர்த்து

      நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் கமலாக்கா.

      மிக்க நன்றி விரிவான கருத்துகளுக்கு

      கீதா

      நீக்கு
  13. நல்லது அக்கா ..

    இங்க கடையில் எல்லாம் மாஸ்க் , social distance எல்லாத்தையும் நல்லா கடைபிடிக்கிறாங்க ...

    ஆனா இந்த வண்டில போறவங்க ...நடந்து போறவங்க மட்டும் எல்லாரும் மாஸ்க் போடுறது இல்ல...எங்க வீட்டு வாசலில் நிற்கும் போது எத்தனை பேர் மாஸ்க் போடாம போறாங்க ன்னு பார்க்குறது தான் இப்போ எனக்கு வேடிக்கையே .....

    ம்ம்ம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அனு உங்க ஏரியாவிலும் கடைகளில் நல்லா கடைபிடிக்கிறாங்களா சூப்பர்.

      ஆமா, வண்டில போறவங்க, ந்டக்கற்வங்க போடுறதே இல்லை. கடைகள்ல சில கடைகள்ல கஸ்டமர்ஸையும் மாஸ்க் இல்லைனா உள்ளெ விடறது இல்லை.

      //எங்க வீட்டு வாசலில் நிற்கும் போது எத்தனை பேர் மாஸ்க் போடாம போறாங்க ன்னு பார்க்குறது தான் இப்போ எனக்கு வேடிக்கையே .....
      //

      ஹா ஹா ஹா

      மிக்க நன்றி அனு

      கீதா

      நீக்கு
  14. கார்டூன் வீடியோ ரொம்பவே சூப்பர்
    "நல்லதே நடந்திடட்டும். நல்லதே நினைப்போம். " ஆம் சீக்கிரம் இந்த நிலைமை மாறி பழைய நிலை திரும்ப வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அருணா அந்த வீடியோ ரொம்ப ரசிப்பேன் நான். நீங்களும் ரசித்தமைக்கு மிக்க நன்றி

      ஆமாம் சீக்கிரம் இந்த நிலைமை மாற வேண்டும்..

      மிக்க நன்றி அருணா

      கீதா

      நீக்கு
  15. நல்லது நடந்தா நாலுபேருக்கு சொல்லணும் சரிதான்.

    பிறந்தநாள் காணும் உங்களின் உறவினருக்கு வாழ்த்த வயதில்லை (அரை சதம் என்றுதானே சொன்னீர்கள்), எனவே பாராட்டுகிறேன்.

    மகனை சலூனுக்கு அழைத்து செல்லும் தோப்பனாரை மாமி ஏன் இடை மறிக்கிறாள்? காணொளி சிறப்பு.நல்ல அனுபவ பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறந்தநாள் காணும் உங்களின் உறவினருக்கு வாழ்த்த வயதில்லை (அரை சதம் என்றுதானே சொன்னீர்கள்)//

      கோ!! அம்புட்டு சின்னவரா நீங்க? விசுவுக்கு அம்புட்டு ஜூனியரா?!!! ஹா ஹா ஹா

      /மகனை சலூனுக்கு அழைத்து செல்லும் தோப்பனாரை மாமி ஏன் இடை மறிக்கிறாள்? /

      ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரித்து முடிலப்பா....நல்ல நகைச்சுவை!!

      மிக்க நன்றி கோ

      கீதா

      நீக்கு
    2. "பல்" தேய்ந்து மண்தேயாக்காலத்து முன் முளைத்த மூத்த பல் தேய்ந்தவர் விசு என்பது அவரது பல்லெல்லாம்...பதிவிலிருந்தே தெரிந்துகொள்ளுங்கள். நான் எத்தனை சிறியவனென்று இப்போது புரியும்.

      நீக்கு

  16. அர்சாங்க கஜானா காலியாக இருக்கும் போது இப்படிமு.ஜா.மு-வாக் இருந்தால் அரசாங்கத்திற்கு வருமானம் எப்படி கிடைக்கும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா...ஆஆஆ அப்ப என்ன சொல்ல வரீங்க!!!

      மிக்க நன்றி மதுரை.

      கீதா

      நீக்கு
  17. மு.ஜா.மு - நல்லதே.... பலருக்கும் ஒரு அலட்சியப் போக்கு தான் இங்கே. இன்றைய எனது பதிவில் கூட அப்படி ஒருவரைப் பற்றிச் சொல்லி இருக்கிறேன்.

    காணொளி - ஆஹா.... ரொம்பவே அழகு அந்த குட்டிச் செல்லம் - பின்னாலே நடந்து போவது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி நாமும் ஜாக்கிரதையா இருப்போம் அப்ப மற்றவர்களுக்கும் நல்லதுதானே..

      ஆமாம் உங்கள் பதிவிலும் பார்த்தேன் அலட்சியப் போக்கு பற்றி அது டூஊஊஊஊஊ மச்.

      காணொளி ஆமாம் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது..!

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  18. ஜூன் 21 என் மருமகனுக்கு பிறந்த நாள்.. மகள் துபாயில்... நாங்க ஆரணியில்.. சம்பந்தி குடும்பம் காஞ்சிபுரத்தில்... கேக் வெட்டி, பாட்டுப்பாடி, வாழ்த்து சொல்லி.. எல்லாமே ஸ்கைப்பில் நடந்து முடிந்தது...

    நாய்க்குட்டி சாமி கும்பிடும் காணொலியை ஐஞ்சுவை அவியலில் எப்பவோ பதிட்ட நினைவு.. ஆனா, நல்லா சாமி கும்பிடுது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ உங்கள் மகளும் மருமகனும் துபாயில் இருக்காங்களா!! பிலேட்டட் வாழ்த்துகள் உங்கள் மருமகனுக்கு. அங்கு எல்லாம் சேஃப் தானே?! நலமுடன் இருக்காங்க இல்லையா.

      ஸ்கைப்பில் கொண்டாடியது சூப்பர். இனி கொஞ்ச நாள் இப்படித்தான் இருக்கும் போல. இப்ப கல்யாணமே ஆன்லைனில்தான்!!! அப்படியான சூழல்.

      நீங்க பகிர்ந்திருந்தீங்க இல்லையா? நாய்க்குட்டி சாமி கும்பிடுவது..இப்ப நினைவு வருது..எனக்கு வாட்சப்பில் வந்ததை வைத்திருந்தேன்.. ஆனால் அது யூட்யூபிலும் இருப்பதைத்தான் வாட்சப்பில் இப்படி அனுப்பறாங்கனு தெரிந்தது. அப்படியே இங்கு பகிர்ந்தேன்.

      மிக்க நன்றி ராஜி.

      கீதா

      நீக்கு
  19. //www.youtube.com’s server IP address could not be found.// எல்லோருக்கும் வந்தது எனக்கு மட்டும் வராதது. மற்றபடி உங்கள் மன ஓட்டங்களை எழுதி இருப்பதைப் படித்தேன். உங்கள் ஒன்றுவிட்ட சகோதரிக்கும், இன்று திருமணம் ஆகி இருக்கும் மைத்துனர் பெண்ணுக்கும் வாழ்த்துகள், ஆசிகள். நாங்களும் வாட்சப், ஸ்கைப் வழியாகவே எல்லோரையும் பார்க்கும்படி ஆகிவிட்டது! அலட்சியமாக இருந்து தான் இப்படிப் பரவி விட்டது என்கின்றனர். என்னவோ! ஒண்ணும் புரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க்ள் வாழ்த்துகளுக்கு நன்றி கீதாக்கா...

      ஆமாம் எல்லாமே இப்ப வீடியோவில்தான் கீதாக்கா

      அலட்சியமாக இருப்பதால்தான் இப்போது நிறைய. ஒன்னும் புரியலைதான் அக்கா

      விரைவில் எல்லாம் நலம் விளையணும்

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
    2. யூ ட்யூப் இப்போவானும் தெரியுதானு பார்க்க வந்தேன். நீங்களும் ஒண்ணுமே சொல்லலை. கடைசியில் இப்போச் சரியா வந்திருக்கு. ஆனால் இந்த வீடியோ பார்த்துட்டேன். இஃகி,இஃகி,இஃகி!

      நீக்கு
    3. ஹையோ அக்கா ரொம்ப ஸாரி அப்போ வேக வேகமா அடிச்சுட்டுப் போனேன். இது விட்டுப் போச்சு...ஸாரிக்கா

      அப்போ சொல்ல வந்தது பூஸாருக்கே வந்திருக்கே என்று...

      ஹப்பா இப்போ வந்திருச்சு இல்லையா ஆமாம் கீதாக்கா பெரும்பாலும் எல்லாரும் பார்த்திருப்பாங்க....

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  20. அருமையான நகைச்சுவையான பதிவு மேடம். மாயாவி உவமை அழகு. நிச்சயமாக முன்ஜாக்கிரதை அவசியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தான்.

      அது இருப்பதும் தெரியவில்லை ஆனால் மறைந்திருந்து தாக்குவதால் மாயாவி என்று நான் சொல்வது ஹா ஹா ஹா

      மிக்க நன்றி ஃபெர்னாண்டோ

      கீதா

      நீக்கு
  21. ஆவ்வ்வ்வ் கீதாவும் புதுப்போஸ்ட்.. முதல்ல செல்லத்துக்கு நானும் இருகரம் கூப்பி வணக்கம் சொல்லிட்டு ஓடிப்போய்ப் பின்பு வாறேன் கீதா.. இப்போ முடியாமல் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நீங்களும்பிஸிதான் இல்லையா அதிரா...எனக்கும் ஒரு சில வேலைகள் என்று கொஞ்சம் எல்லாம் செய்ய நேரம் போதவில்லைதான்

      நன்றி அதிர

      கீதா

      நீக்கு
  22. மாயாபஜாரில் வருமே, 'நீ தானா என்னை அழைத்தது?' என்ற பாடல், அது இப்போது நிஜமாகிவிட்டது. மாயத்திரை வழியேதான் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடிகிறது. அதாவது முடிகிறதே என்று மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்! மற்றப்படி, 'மாயாவி'யிடம் விலகியே இருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா செல்லப்பா சார் அதே. ஆமாம் இதுவானும் முடிகிறதே என்று மகிழ்ச்சியடைந்து கொள்ள வேண்டியதுதான்.

      மாயாவியிடம் இருந்து விலகித்தான் இருக்கிறோம் ஆனால் அது எங்கிருக்கு என்பதுதான் புரிவதில்லை ஹா ஹா ஹாஹ் ஆ

      மிக்க நன்றி சார்

      கீதா

      நீக்கு
  23. சித்தப்பா மகளுக்கு வாழ்த்துக்கள் கீதா... இனி மொய்ப்பணமும் வட்சப்பிலும் யூம் இலும் படமாக அனுப்பி வைப்பார்கள் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அதிரா.

      ஹா ஹா ஹா அதே அதே. பணத்தை ஆட்டி ஆட்டிக் காட்டி காசு மேல காசு வந்து என்று சொல்லி காட்டி வெர்ச்சுவலாக்கிவிடுவாங்க!!!

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  24. போனமா நம் வேலையைப் பார்த்தமா, ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் வந்து சேர்ந்தமா என இல்லாமல்:), ஊரெல்லாம் விடுப்ஸ் பார்த்து வந்திருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

    கோயில் திருவிளாவில் நடக்கும் நேரடி வர்ணனை போல நன்றாக சொல்லியிருக்கிறீங்கள் கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரித்துவிட்டேன் அதிரா....போற வழில பார்த்ததுதான் பூசாரே!!! டிவியேட் பண்ணி எலலம் போய் எட்டிப் பார்க்கலையாக்கும்!!! ஹையோ மீக்கு பயம்!!

      கோயில் திருவிளாவில் நடக்கும் நேரடி வர்ணனை போல நன்றாக சொல்லியிருக்கிறீங்கள் கீதா.//

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  25. ஜோக் முன்பு எங்கோ பார்த்திருக்கிறேன்ன்.. மீண்டும் பார்க்கலாம்.

    ஹையோ அந்தப் பப்பியை நான் பார்க்கவில்லை, இப்போதான் பார்க்கிறேன்ன் ச்ச்சோ சுவீட் கீதா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோக் பழசுதான்..

      ஆமா ஆமா அதிரா அந்த பப்பியைப் பார்த்து நான் ரொம்ப மகிழ்ச்சியடைவேன் பார்த்து பார்த்து க்யூட் இல்லையா

      மிக்க நன்றி பிஞ்சு

      கீதா

      நீக்கு
  26. மாயாவி, நல்ல பெயர். சமீபத்தில் எங்கள் உறவில் கூட ஒரு பெண்ணுக்கு நடந்த திருமணத்தை யூ டியூபில் பார்த்தோம். அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் திருமணத்தில் நேரிடையாக கலந்து கொள்வதைப் போல புத்தாடை அணிந்து கொண்டு, திருமணத்தை பார்த்து விட்டு பின்னர் வீட்டில் பாயசம்,வடையொடு சாப்பிட்டர்களாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாயாவி, நல்ல பெயர்.//

      நன்றி பானுக்கா. எனக்கு இப்பெயர் என்னவோ ரொம்பப் பிடித்துவிட்டது இந்த தொற்றிற்கு.

      //அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் திருமணத்தில் நேரிடையாக கலந்து கொள்வதைப் போல புத்தாடை அணிந்து கொண்டு, திருமணத்தை பார்த்து விட்டு பின்னர் வீட்டில் பாயசம்,வடையொடு சாப்பிட்டர்களாம்.//

      ஹா ஹா ஹா என்னைக் கூட கேலி செய்தார்கள். என்ன புடவை கட்டிக் கொண்டாயா என்று...ஹிஹிஹிஹி மீ செய்யாத ஒன்றை எல்லாம் கேட்டு....

      மிக்க நன்றி பானுக்கா.

      கீதா

      நீக்கு