வரி
உட்பட ஒரு கிலோ தங்கத்திற்கு அரபு நாடான யு
எ இ ல் 27 லட்சம் ரூபாய். அதை இந்தியாவுக்கு
15% வரி கூடாமல் கொண்டு வந்து அணிகலன்கள் ஆக்கி விற்றால் ஏறத்தாழ 7 லட்சம் ரூபாய் லாபம்
கிடைக்கும் ஒரு வருடத்தில் 4000 டன் தங்க நகைகள் விற்பனை செய்யப்படும் நாட்டில்
800 டன் மட்டுமே நேரான வழியில் வரி கட்டப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படியானால்
பாக்கி 3200 டன் குருவிகளும் திமிங்கலங்களும் தான் கொண்டு வந்து சேர்க்கின்றன என்பது
தெள்ளத் தெளிவாகிறது. இடையிடையே ஒவ்வொரு விமான நிலையத்திலும் ஒரு கிலோ, இரண்டு கிலோ
என்று பிடிக்கப்படுவதெல்லாம் கடத்தப்படும் தங்கத்தில் ஒன்றோ இரண்டோ சதவீதம் மட்டும்
தான்.
கடந்த
30 ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த எமிரெட்ஸ் விமானத்தில் திருவனந்தபுரத்திலுள்ள
யு,ஏ.இ தூதரகத்திற்கான ஒரு பேகேஜ் வருகிறது. இப்படி வரும் பொருட்களில் அதிகமாக இருப்பது
உணவுப் பொருட்களாகத்தான் இருக்கும். ‘டிப்ள்மாட்டிக்
பேட்’ என்றழைக்கப்படும் இத்தகைய பேகுகளை விடுமுறை நாட்களானாலும் சம்பந்தப்பட்டவர்களுக்குக்
கொடுக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் அன்று வந்த அந்த பேகேஜில் கோடிக்கணக்கான ரூபாய்
விலைமதிப்புள்ள தங்கம் இருக்கிறது என்ற ரகசிய செய்தி விமான சுங்க சரக்கு அதிகாரி ராமமூர்த்திக்கு
வருகிறது. அதைப் பரிசோதிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவை. அதற்காக ஐந்து
நாட்கள் காத்திருக்க வேண்டியதானது.
இடையே
யு.ஏ.இ. தூதரகத்தினின்றும் பேகேஜை தரக் கோரி அழைக்கவில்லை. ஆனால் பல இடங்களிலிருந்து
பல கோரிக்கைகள் வந்த வண்ணமிருந்தன. மத்திய அமைச்சகத்தின் உத்தரவு கிடைத்தது. யு.ஏ.இ.
தூதரக அதிகாரிகளின் முன்னிலையில் பேகேஜ் பரிசோதிக்கப்பட்டது. ஸ்டீல் கப்புகள், டோர்
லாக்குகள், ஏர் கம்ப்ரெசர் போன்றவற்றில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 30.25 கிலோ தங்கம்
தங்களுக்கு அனுப்பப்பட வேண்டியவை அல்ல என்று யு.ஏ.இ. தூதரக அதிகாரிகள் உறுதியளித்ததால்
பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணை
செய்த போது தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியான, எப்போதும் யு.ஏ.இ. தூதரகத்தின்
பேகேஜ் வாங்க வரும் சரித் என்பவர் கைது செய்யபட்டார். அவரை விசாரணை செய்த போது கேரள
அரசின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் செயற்பாட்டு முகமையாளர் (operational
manager) ஸ்வப்னா சுரேஷின் பங்கும் வெளியானது. அவருடன் தொடர்புள்ள தகவல்தொழில்நுட்ப
செயலாளர் சிவசங்கரை அப்பதவியிலிருந்து நீக்கவும் செய்திருக்கிறார். சந்தீப்நாயர் ரமீஸ்
என்பவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படி அது ஒரு காட்டுத்தீயாய் படர்கிறது.
யாரெல்லாம் அகப்படுவார்கள் என்று சொல்ல முடியாது. இப்படிப் பிடிக்கப்படுவது ஒன்றோ இரண்டோ
சதவீதம். பிடிக்கப்படாமலிருப்பது 98% அல்லது 99%.
1950
களில் ஹாஜி மஸ்தான்-னில் தொடங்கிய தங்கக் கடத்தல்கள் இப்போதும் தொடர்கிறது. கடந்த
70 ஆண்டுகளில் 1% வரி விதிக்கப்பட்ட 2011-2012 ல் மட்டும்தான் 42 மில்லியன் டாலர் மதிப்புள்ள
தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. மூன்று மடங்கு விலை உயர்ந்த தங்கம்,
12.5% வரி விதிக்கப்பட்ட 2019ல் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் ஏறத்தாழ 20 மில்லியன்
டாலர் மதிப்புள்ளது மட்டும்தான்.
இதிலிருந்து
ஒரு உண்மை வெளிப்படுகிறது. இறக்குமதி வரியைக் குறைத்து நேரான வழிகளில் தங்கத்தை இறக்குமதி
செய்ய வழி வகுக்க வேண்டும். நம் நாட்டில் விவசாயம் செய்யப்படும் பல பொருட்களை, வெளிநாட்டிலிருந்து
இறக்குமதி செய்யும் வியாபாரிகளின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து வரியைக் குறைத்து
இறக்குமதி வாய்ப்புகள் கொடுக்கும் அரசு, அதே போல் தங்கத்தின் இறக்குமதிக்கும் வரியைக்
குறைத்தால் தங்கத்தை கடத்த வேண்டிய சூழல் ஒழியுமே? கடந்த சில மாதங்களில் தங்கத்தின்
விலை 40%க்கும் மேல் உயர்ந்து, மேலும் உயர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் அதைச் செய்யாமலிருந்தால்
இது போல் பொன்னாசை படர்ந்து வேலியே பயிரை மேயும் நிலையை உருவாக்கி விடும் அல்லவா?
----துளசிதரன்
இந்தச் சம்பவம் பற்றி செய்தித் தாள்களில் படித்தேன். அரசின் பெருந்தலைகளுக்கே சம்பந்தம் இருக்கும் போலவே...
பதிலளிநீக்குசெய்தித்தாள்களுக்குக் கட்சி சார்ந்தும், கூட்டத்தோடு சேர்ந்தும் கூக்குரலிடுவது தவிர்க்கமுடியாத ஒன்று என்றாலும், ஐ ஏ எஸ் அதிகாரியும், முதல்வரின் மிகவும் நெருக்கமானவரும் இதில் சிக்கியது எதிர்பாராதது. இப்படியானவர்களில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை! யாரை விட்டது?
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
நீங்கள் என்னதான் வரியைக் குறைத்தாலும் திருடர்கள் குறுக்கு வழி செல்வதை நிறுத்த மாட்டார்கள்! எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள்... எவ்வளவு புத்திசாலித்தனமாக செய்தாலும் ஒருநாள் மாட்டிக்கொண்டு விடுகிறார்கள்..
பதிலளிநீக்கு1 % வரி விதிக்கப்பட்ட 2011 ல் கடத்தல் இல்லவே இல்லையாம். அது போல் 5%, 7% வரி உள்ள நாடுகளுக்கு இது போல் கடத்தப்படுவதே இல்லையாம். அங்கெல்லாம் நம் நாட்டவரைப் போல் இவ்வளவு தங்கம் பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் நாம் அறிந்ததுதான். பிடிபடுகிறார்கள் ஆனால் மிகக் குறைந்த அளவே. அதுவும் பல முறை கடத்தி வெற்றி பெற்றபின்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
ஒரு பாடல் வரி நினைவுக்கு வருகிறது..
பதிலளிநீக்கு"திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..."
ஆம்! அவர்களாகப்ப் பார்த்து திருந்த வேண்டும். ஒருவன் திருந்த முடிவு செய்துவிட்டால், அடுத்து பத்து பேர் புதிதாகக் கடத்தல் தொழிலைத் தழுவ வந்து விடுகிறார்களே!
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி
துளசிதரன்
நியாயமான கருத்துகள்...
பதிலளிநீக்குபயிரை மேயும் வேலிகள் அழிக்கப்படுவதற்கு அரசு கடுமையான நடவடிக்கை வேண்டும்...
அதே நேரம் மக்களும் தங்கத்தின் மீதுள்ள மோகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும்...
ஆம்! துரை செல்வராஜு சார், நம் நாட்டினரின் மனநிலை மாற வேண்டும். எப்படி மாறும்? பொன்னுக்கு வீங்கி எனும் இவ்வுலகில் எங்குமில்லாத நோயைக் கண்டுபிடித்து அதற்கு மருந்து தங்கநகையே என்று கண்டுபிடித்தவர்களிடையே நம்மவர்கள், பின் அரசு வேலை என்பது லஞ்சம் வாங்க எனும் மனநிலையை வேறு வளர்த்துக் கொண்டிருக்கும் நாடு. என்று? எப்போது? மாறுமோ?
நீக்குமிக்க நன்றி சார் உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
எங்கும் லஞ்சம் நிரம்பி வழியும்போது யார்தான், யாரை குற்றம் சொல்வது ?
பதிலளிநீக்குதனி மனித நல்லொழுக்கம் வராதவரை இவைகளை நிறுத்த இயலாது.
முடிவில் சொன்ன தங்களது யோசனை நன்று.
தனிமனித நல்லொழுக்கத்தின் அவசியத்தைக் கற்பிக்கிறோம், பேசுகிறோம், போற்றுகிறோம். விழலுக்கு இரைத்த நீராகிறதே ஒழிய ஒரு பலனும் இல்லையே!
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
இதுதான் கேரளாவிலிருந்து ஏகப்பட்ட ஜுவல்லரீஸ் கடையை விரிக்கும் ரகசியமா?
பதிலளிநீக்குதூதரக மட்டத்திலேயே இத்தகைய கடத்தல் இருப்பது அதிர்ச்சிதான். அதிலும் இவர்கள் தொடர்பு முதலமைச்சர் வரை செல்வது இன்னும் அதிர்ச்சிதான்.
ஒவ்வொரு திருமணப் பெண்ணிற்கும் 100 கிராம் முதல் 1 கி வரை நகைகள் வேண்டுமே. அதெல்லாம் வங்கி லாக்கர்களில். இப்படி வாழ்நாள் முழுக்க உழைத்த உழைப்பை நகையாக்கி எங்கேனும் வைத்து விட்டு, வாயையும் வயிற்றையும் கட்டி வாழ்வதுதான் வாழ்க்கை என்றாகிவிட்டது. இப்படிச் சேமித்த முன்னோர்களின் நகைகள் திருவனந்தபுரம் கோவிலில் அடைபட்டுக் கிடக்கிறது. அதன் மதிப்பு ஏறத்தாழ 1 லட்சம் கோடியாம்.இளைஞர்களில் நல்ல சதவீதம் பேர் காரியர்களாகப் பணியாற்றும் இங்கு தூதரகம் மட்டும் தூய்மையாக இருக்கக் கடத்தல்காரர்கள் விடுவார்களா என்ன?
நீக்குமிக்க நன்றி நெல்லைத்தமிழன் உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
வேலியே பயிரை மேயும் கதை - :) அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.
பதிலளிநீக்குதகவல்கள் சிறப்பு.
ஆம் வெங்கட்ஜி! கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் தான் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல். பல ஊழல்களிலும் நாம் கேள்விப்படுவதுதானே. இதிலும் இன்னும் நிறைய வெளிவரலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நீக்குமிக்க நன்றி உங்களின் கருத்திற்கு
துளசிதரன்
சிந்திப்பதையே மறந்துட்ட ஆட்சியாளர்களை கொண்டுள்ள நாம் புலம்பிதான் மனசை தேத்திக்க வேண்டியதா இருக்கு.
பதிலளிநீக்குகாக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது பொல் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் அவர்களது தொண்டர்களும் ஆதரவாளர்களும் என்ன தவறு செய்தாலும் அவர்களைக் காக்க முயலும் நிலை. நம் நாட்டின் பழைய நல்ல நேர்மையான தலைவர்களின் பெயரை மட்டும் அவ்வப்போது சொல்வார்களே தவிர அவர்ககளின் நேர்மையைக் கடைப்பிடிக்கும் ஒரு தலைவனும் இல்லாத நிலை.
நீக்குமிக்க நன்றி சகோதரி ராஜி உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
சதவீத தகவல்கள் மயக்கத்தை வரவழைக்கின்றன...
பதிலளிநீக்குமுடிவில் உள்ள யோசனை சரியானது தான்... வேலியே பயிரை மேய்வதென்றால்...?
ஆம் மனிதன் அதிக லாபம் தரும் தொழிலைத்தான் செய்கிறான். தங்கத்தை விட லாபம் கஞ்சா, போதை மருந்து என்பதால் அதைக் கடத்துபவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம். கடமை, கண்ணியம் கட்டுப்பாடு எல்லாம் காற்றில் கரைந்தே போனது.
நீக்குமிக்க நன்றி டிடி உங்களின் கருத்திற்கு
துளசிதரன்
நல்ல கட்டுரை
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி கோமதி அரசு உங்களின் கருத்திற்கு
நீக்குதுளசிதரன்
வழக்கம் போல் தங்க கடத்தல் கேசைத் தோண்ட, பல விஷயங்கள் வெளி வருகின்றன. நீங்கள் சொல்லியிருக்கும் ஆலோசனை சிறப்பானதுதான்,என்றாலும் மக்கள் முழுமையாக திருந்தி விடுவார்கள் என்று சொல்லி விட முடியாது.
பதிலளிநீக்குஇக்கேஸிலும் இன்னும் பல வெளிவரலாம் ஆனால் அவை எல்லாம் அமுக்கப்பட்டுவிடும் என்றே தோன்றுகிறது.
நீக்கு1 % வரி விதிக்கப்பட்ட 2011 ல் கடத்தல் இல்லவே இல்லையாம். அதனால்தான் அப்படிச் சொன்னேன். ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் மக்கள் முழுமையாகத் திருந்திவிடுவார்கள் என்று சொல்ல முடியாதுதான்.
மிக்க நன்றி சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
அப்படி தங்கத்தின் மீது என்னதான் மோகமோ இனி விட்ச் ஹண்டிங் தொடரும்
பதிலளிநீக்குதங்கத்தின் மீதான மோகம் குறையுமா ஜிஎம்பி சார்? ஆமாம் இன்னும் எத்தனை பேர்களின் பெயர்கள் வெளிவருமோ? இப்போதே அமைச்சர் ஒருவரின் பெயர் பேசப்படுகிறது
நீக்குமிக்க நன்றி சார் உங்களின் கருத்திற்கு
துளசிதரன்
இவற்றையெல்லாம் படிக்கும் போது மனம் கனக்கிறது . நாம் செய்யக்கூடியது முடிந்தவரை தங்கம் வாங்குவதைக் குறைப்பது
பதிலளிநீக்குதங்கம் வாங்குவது குறையுமா? அது பலருக்கும் பல சமயங்களில் கை கொடுக்கவும் செய்கிறது என்பதால் குறையாது என்றே தோன்றுகிறது. இன்வெஸ்ட்மென்ட் கூட அதில் செய்கிறார்கள்தானே
நீக்குமிக்க நன்றி சகோதரி அபயாஅருணா உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
ஸ்ரீராம் சொல்லும் சினிமா பாடல்தான் எனக்கும் நினைவிற்கு வருகிறது.
பதிலளிநீக்குவரியை குறைப்பதோடு தங்கத்தின் விலையையும் சீரான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் கடத்தல்கள் குறைய வாய்ப்பாக இருக்குமோ?
ஆம்! உங்கள் கருத்து சரிதான் கோயில்பிள்ளை!
நீக்குமிக்க நன்றி உங்களின் கருத்திற்கு
துளசிதரன்
சரியான கருத்துகள். அரசாங்கம் தங்கத்தின் வரி விகிதத்தைக்குறைத்தால் அரசுக்கும் லாபம், மக்களுக்கும் லாபம்! அரசு யோசிக்க வேண்டும்.
பதிலளிநீக்குஆம்! சரிதான் உங்கள் கருத்து சகோதரி கீதாசாம்பசிவம்.
நீக்குகோயில்பிள்ளையும் கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் சொல்லியிருக்கிறார்.
அதிலும் கோல்மால் செய்ய நினைப்பார்களோ இப்படிப் பழகியவர்கள்?
மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
இந்த உலகத்துல கசப்பான விஷயமே நேர்மைதான். அதைக் கடைப்பிடிக்கச் சொன்னால் எப்படி. இவர்களைப் போன்றவர்களுக்கு தப்பு உணவுல கலக்குற உப்புப்போல.
பதிலளிநீக்குகசப்பான விஷயம் என்பதால்தான் இப்படியான தவறான செயல்களை இனிப்பு என்று நினைத்து செய்து மாட்டியும் கொள்கிறார்கள் அதுவும் அவர்களுக்கு இனிமைதான் போலும். பெரிய இடத்து தொடர்புகள் என்பதால் தப்பித்துவிடலாம் என்ற தைரியமாகவும் இருக்கலாம்.
நீக்குமிக்க நன்றி அபிநயா உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
சுரங்கம் போலவே நீள்கிறதோ பட்டியல்! இறக்குமதி வரியைக் குறைப்பது நல்ல ஆலோசனை அண்ணா.
பதிலளிநீக்குஆமாம் பட்டியல் நீள்கிறதுதான்! இன்னும் யாரெல்லாம் உள்ளனரோ!
நீக்குமிக்க நன்றி சகோதரி கிரேஸ் உங்கள் கருத்திற்கு.
துளசிதரன்
சமீபத்திய நடத்தையை பதிவாக்கி உள்ளீர்கள்.
பதிலளிநீக்குநீங்கள் சொன்னது போல் தங்கத்திற்கான இறக்குமதி வரியை குறைத்தால் இந்தக் கடத்தலும் குறையும் என்பது உண்மையே!
நன்றி நண்பரே!
சமீபத்த நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருக்கிறதுதான்.
நீக்குஅரசு கவனிக்க வேண்டிய விஷயம்.
மிக்க நன்றி நண்பர் செந்தில்குமார்
துளசிதரன்
கேரளத்து சொப்பன சுந்தரிகள் இன்னும் எந்தெந்த வழிகளில் எல்லாம் இந்திய இறையாண்மைக்குக் குந்தகம் விளைக்க முற்பட்டிருக்கிறார்களோ! மத்திய கிழக்கு ஷேக்குகளுக்கே வெளிச்சம்!
பதிலளிநீக்குஇன்னும் நிறைய வெளிவர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பார்ப்போம்.
நீக்குமிக்க நன்றி இராய செல்லப்பா சார் உங்களின் கருத்திற்கு
துளசிதரன்