தோல்வி கண்டு துவளாத மனம் வேண்டும்”. தோல்வியே வெற்றிக்கு வழிகாட்டும்”. என்பதை எல்லோரும் பெரும்பாலும் உதட்டளவில் உறக்கச் சொல்லுவதுதான். ஆனால் 98% பேரும் தேறிய தேர்வில் தோற்ற 2% த்தில் ஒரிரு மாணவ மாணவியர்கள் உயிர் துறந்ததைக் கடந்த சில மாதங்களில் கண்ட நாம் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறோம். தோல்வியையே ஏற்றுக் கொள்ளாத ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறதொ? என்ற வருத்தம் நம் எல்லோர் மனதிலும் பாலைவனமாய் பறந்து விரியத் தொடங்கிய வேளையில், பாலைவனச் சோலையாய் ஃபயாஸ் எனும், தோல்வி கண்டு துவளாத, 4 ஆம் வகுப்பு மாணவனின் களங்கமில்லா, உண்மையான, உணர்வு பூர்வமானத் தன்னம்பிக்கை தளும்பும் வார்த்தைகள் நம் மனதில் பூ மழையாய்ப் பெய்கிறது.
மொபைலில் ‘லைவாக’ எல்லோரும் அவரவர் திறமைகளைப் பேசியும், பாடியும், வரைந்தும் காண்பிப்பதைக் காணும் நம் நாயகனான ஒன்பது வயதான முகம்மது ஃபயாஸுக்கும் ஓர் ஆசை. காகிதத்தில் பூ செய்யத் தெரிந்த தானும் தன் திறமையை எல்லோருக்கும் காண்பித்து “லைக்” வாங்க வேண்டும், பெற்றோர்களும் சகோதரிகளுக்கும் தெரியாமல் அறையின் கதவைத் தாளிட்டு, மொபைலின் முன் “லைவாக” ஒரு காகிதத்தை எடுத்து அதைக் காட்டி இப்படி ஒரு காகிதத்தை எடுத்து, அதை இப்படி மடக்கி…..” என்று விவரித்த வண்ணம் பூவை உருவாக்க முயற்சி செய்கிறான்.
பல
முறை தவறின்றி செய்தவன்தான் என்றாலும் அன்று காணொளியில் காண்பிக்க, அதுவும் “லைவாக”
செய்த பொது சரியாகச் செய்ய முடியவில்லை! தோல்வி! தோல்வி கண்ட அவன் மனம் துவளவில்லை.
“இப்படிச் செய்யும் போது சிலருக்கு நல்லா வரும். சிலருக்கு நல்லா வராது. எனக்குச் சரியா
வரலை. பரவாயில்ல. அப்படித்தான் சில நேரத்தில் சரியா வராது” என்று சொல்லி தன் “லைவ்வை”
முடித்து அதைp பகிராமல் விட்டுவிட்டான். ஆனால் எப்படியோ அவனது மூத்த சகோதரியின் கண்ணில்
அது பட, அவர்கள் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்ப, ஃபயாஸின் தோல்வி கண்டு துவளாத
தெளிவான தன்னம்பிக்கை தளும்பும் வார்த்தைகளும் செயலும் வைரலாகிவிட்டது.
கேரள
“மில்மா” (ஆவின் போல) அவனது வார்த்தைகளைத் தங்கள் விளம்பரத்திற்குப் பயன்படுத்தியது.
பரிசாக அவனுக்குப் பணத்துடன் தொலைக்காட்சிப் பெட்டியும் வழங்கியது. கிடைத்த பணத்தை
முதல்வரின் கோவிட் நிதிக்கு வழங்கியதோடு மீதத்தை அவன் வீட்டருகே உள்ள ஓர் ஏழைப் பெண்ணின்
திருமணத்திற்கான செலவிற்கும் வழங்க முடிவும் செய்திருக்கிறான். அப்படி ஃபயாஸை நாயகனாக்க
உதவிய குடும்பத்தினர் எல்லோராலும் பாராட்டப்படுகின்றனர்.
தோல்வி
கண்டு துவளாமல் தன்னம்பிக்கையோடு போராட வேண்டும் எனும் உண்மையை உணர்த்திய ஃபயாஸின் செயலும் வாக்குகளும் எல்லோருக்கும் தன்னம்பிக்கையூட்டும் ஒன்றாக நிலைபெற்றிருக்க வாழ்த்துவோம்.
-----துளசிதரன்
முகம்மது ஃபயாஸ் இவ்வயதிலேயே பெரிய எண்ணங்கள் வாழ்த்துவோம் நாமும்...
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி உங்கள் கருத்திற்கு
நீக்குதுளசிதரன்
முதல்வரின் கோவிட் நிதிக்கு உதவி, ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கான செலவு - இந்த இரக்கமுள்ள மனதை விட முயற்சியும் தோல்வியும் எனக்கு பெரிதாக தெரியவில்லை... கண்டிப்பாக ஒருநாள் பலருக்கும் வழிகாட்டியாக வாழ்வான்... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநல்ல கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் டிடி
நீக்குமிக்க நன்றி டிடி உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
வாழ்த்துகள் அந்தச் சிறுவனுக்கு! அவனுக்கு மனம் தளராமல் உதவிகள் செய்த அவனது சகோதரிக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி உங்கள் கருத்திற்கு சகோதரி கீதா சாம்பசிவம்
நீக்குதுளசிதரன்
இந்த சிறுவனும் அவந்து குடும்பத்தாரும் நீண்ட நாட்கள் வாழ் பிரார்த்திக்கின்றேன்.. இது போல உள்ள குடும்பங்களால்தான் மனிதநேயம் இன்னும் இந்தியாவில் உயிர் வாந்து கொண்டு இருக்கிறது
பதிலளிநீக்குமிக்க நன்றி மதுரை தமிழன் உங்கள் கருத்திற்கு
நீக்குதுளசிதரன்
நல்ல விஷயத்தைத் தெரியப்படுத்திய இனிய பதிவு...
பதிலளிநீக்குநலமே வாழ்க..
மிக்க நன்றி துரை செல்வராஜு சார் உங்கள் கருத்திற்கு
நீக்குதுளசிதரன்
பாராட்டப்பட வேண்டிய சிறுவன். அவன் தன்னம்பிக்கையாகட்டும், பெருந்தன்மையாகட்டும்....
பதிலளிநீக்குஉயர்ந்து விட்டான்.
ஆம் உயர்ந்துவிட்டான்.
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்ஜி உங்கள் கருத்திற்கு
துள்சிதரன்
மிக அருமையான செய்தி! இந்தச் சின்ன வயதில் இத்தனை காருண்யமா? நம் நாட்டில் மனித நேயம் இன்னும் இந்த மாதிரி மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தச் சிறுவனே உதாரணம்! மனமார்ந்த வாழ்த்துக்கள் இவனுக்கு!
பதிலளிநீக்குஆம் சகோதரி
நீக்குமிக்க நன்றி சகோதரி மனோ சாமிநாதன் தங்கள் கருத்திற்கு
துளசிதரன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல பதிவு. சிறுவன் ஃபயாஸின் தன்னம்பிக்கையின் எண்ணங்களும், ஈகைத்திறனும் வியக்க வைக்கிறது. புகழில் அவர் நிறைய தூரங்களை விரைவில் கடப்பார். அவருக்கும், அவருடைய குடும்பத்தார்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இந்த நல்ல செய்தியினை பகிர்ந்த உங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் உங்கள் கருத்திற்கு
நீக்குதுளசிதரன்
சிறுவன் முஹம்மது ஃபயாஸ் கூறும் அந்த வாக்கியம், தோல்வி பெறும் எல்லோருக்கும் ஓர் உந்துகோல் போல அமையும்!
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பர் முஹம்மது நிஜாமுத்தீன் உங்கள் கருத்திற்கு
நீக்குதுளசிதரன்
சிறுவன் முஹம்மது ஃபயாஸ் கூறும் அந்த வாக்கியம், தோல்வி பெறும் எல்லோருக்கும் ஓர் உந்துகோல் போல அமையும்!
பதிலளிநீக்குஅன்பு துளசிதரன்., நல்ல தொருசெயலைப் பதிவிட்டதில் மனம் மகிழ்கிறது. சிறுவன் ஃபயஸ் இத்தனை கருணையோடு செயல் பட்டிருக்கிறஆன் அன்பன் அக்கறையான குடும்பம் வாழ்வில் நல் வெற்றி பெறுவான். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆம் வல்லிம்மா
நீக்குமிக்க நன்றி வல்லிம்மா உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
நிறைய விஷயங்கள் குழந்தைகள் நமக்கு கற்றுக் கொடுக்கின்றனர்.ரெண்டு தடவை முயன்று கிட்டாமல் போனால் கடவுள் நம்மள ஏன் இப்படி சோதிக்கிறாரோ என்று புலம்பல்.அழகான முயற்சி.எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்று புலம்பகிறோம் . ஆனால் பெற்ற பரிசை பிறருக்கு உதவும் அழகான மனம் . நல்ல நேரத்தில் நல்ல பதிவு.
பதிலளிநீக்குஆம். மிக்க நன்றி சகோதரி நுஸ்ரத் சலீம் உங்கள் கருத்திற்கு
நீக்குதுளசிதரன்
வாழ்த்துகள் அந்த சிறுவனுக்கு. இரக்க குணமும், தோல்வி கண்டு துவளா மனமும் என்றும் அவனை வெற்றிப்பாதைக்கு இட்டுச்செல்லும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி அபிநயா உங்கள் கருத்திற்கு
நீக்குதுளசிதரன்
//அப்படித்தான் சில நேரங்களில் சரியா வராது // - இந்த மாதிரி நல்ல குணம்/மனம் குடும்பத்திலிருந்துதான் வரும். அந்தக் குடும்பத்தைப் பாராட்டுகிறேன். அந்த குணத்தை சட் என்று பிடித்துக்கொண்ட அந்தச் சிறுவனும் பாராட்டுக்குரியவனாகிறான்.
பதிலளிநீக்குஆம் . மிக்க நன்றி நெல்லைத்தமிழன் உங்கள் கருத்திற்கு
நீக்குதுளசிதரன்
வாவ் !! மிகவும் பாசிட்டிவான ஒரு அழகிய செய்தி பகிர்வுக்கு நன்றி .கூகிள் ஆன்ட்டிகிட்ட கேட்டு அக்காணொலியும் பார்த்தேன் fayas பார்க்கவே அப்படியே சந்தோசம் பாசிட்டிவ் எண்ணங்கள் நம்மக்கு பரவுது .இனிவருங்காலம் இப்படி பட்ட நல்லுள்ளம் கொண்ட குழந்தைகளால் முன்னேறட்டும் .
பதிலளிநீக்குஆம் சகோதரி ஏஞ்சல் மிக்க நன்றி உங்கள் கருத்திற்கு
நீக்குதுளசிதரன்
தோல்வி கண்டு துவளாமல் தன்னம்பிக்கையோடு போராட வேண்டும் எனும் உண்மையை உணர்த்திய ஃபயாஸின் செயலும் வாக்குகளும் எல்லோருக்கும் தன்னம்பிக்கையூட்டும் ஒன்றாக நிலைபெற்றிருக்க வாழ்த்துவோம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பர் கரந்தையார் உங்கள் கருத்திற்கு
நீக்குதுளசிதரன்
எதிர்பார்த்தது நடக்காவிட்டாலும் அதை ஏற்றுக்கொண்ட சிறுவன் Fayas எதிர்காலத்திலும் இதே பாசிட்டிவ் மனப்பான்மையோடு இருக்கட்டும்.
பதிலளிநீக்குஆம்!
நீக்குமிக்க நன்றி சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
நல்ல கருத்து அடங்கிய பதிவு. நம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டியது இதைத்தான். மனித வாழ்வில் தோல்வி கண்டு துவளாத தன்னம்பிக்கை அனைவருக்கும் நிச்சயம் வேண்டும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பர் எம் ஞானசேகரன் உங்களின் கருத்திற்கு.
நீக்குஇதுதான் உங்களின் முதல் கருத்து எங்கள் தளத்தில் என்று நினைக்கிறேன். மிக்க நன்றி
துளசிதரன்
மொபைலை சிறுவர்களிடம் தரவேண்டாம் என்கிறார்கள். தந்ததால் தானே இந்தச் சிறுவனின் வார்த்தைகளை நாம் அறிந்து கொள்ள முடிந்தது!
பதிலளிநீக்குமிக்க நன்றி இராய செல்லப்பா சார். அப்பையன் தன் தந்தைக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு சென்றுதான் வீடியோ எடுத்திருக்கிறான்.
நீக்குஉங்கள் கருத்தும் சரிதான். ஆக்கப்பூர்வமாகச் செய்யும் வரை தவறில்லைதான்
மிக்க நன்றி சார் உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
கூகிளில் தேடித் பார்த்தேன் அண்ணா. எவ்வளவு தன்னம்பிக்கையுடன் அழகாகக் குறிப்புகள் சொல்லிச் செய்கிறான். ஒரு வினாடி கூட சரியாக வரவில்லையே என்று துவண்டு
பதிலளிநீக்குபோகாமல் அழகாக வாழ்க்கைப் பாடம் சொல்லிவிட்டானே குட்டிப்பையன்!! நலமுடன் வாழ்க ஃபயாஸ்!
பகிர்விற்கு நன்றி அண்ணா.
ஆமாம். அந்த காணொளி முழுமையாகக் கிடைக்காததாலும், கிடைத்ததையும் இங்குப் பகிர இயலவில்லை என்பதாலும் பகிரவில்லை. நீங்கள் தேடி எடுத்துப் பார்த்ததற்கு மிக்க நன்றி.
நீக்குஅந்த வயதிற்கு தன்னம்பிக்கையும் உதவும் மனமும் இருக்கிறது
மிக்க நன்றி சகோதரி கிரேஸ் உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
இந்தக்காலக் குழந்தைகளுக்கு இந்த ‘தோல்வி’ எனும் சங்கதியை சரியாக அறிமுகம் செய்யவேண்டும். பயப்படுவதற்காக அல்ல, அதை கேஷுவலாகப் புறந்தள்ளி முன்னேறுவதற்காக. ஆனால் ஆசிரியர்களோ, பெற்றோர்களோ பொதுவாக இதைச் செய்வதில்லை. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் தோல்வியைக் கண்டு பம்முபவர்கள், சிதைபவர்கள் ! என்ன செய்வது?
பதிலளிநீக்குமிக அருமையான கருத்து ஏகாந்தன் சார். உண்மைதான். பல குழந்தைகளும் தோல்வியை ஏற்கமுடியாதவர்களாக இருக்கிறார்கள். அதற்கு பெற்றோரும், பள்ளிகளும் கொடுக்கும் மன அழுத்தமும் ஒரு காரணம்தான்.
நீக்குஇப்பையன் தைரியமாகப் பேசுவதுதான் எல்லோரையும் ஈர்த்தது. இதே போன்று தன்னம்பிக்கையுடன் அவன் இருக்க வேண்டும்
மிக்க நன்றி ஏகாந்தன் சார் உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய சிறுவன். எல்லாவிதத்திலும் ..அவன் எதிர்காலம் நன்றாக இருக்க வாழ்த்துகிறேன்
பதிலளிநீக்குஆமாம் சகோதரி அபயாஅருணா. அவன் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்
நீக்குமிக்க நன்றி உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
இத்தகு பரந்த சிந்தனையும் தோல்விகண்டு துவளாத மன வலிமையையும், உதவும் சிந்தனையும்,எடுத்த காரியம் ஜெயமாகவில்லை என்றாலும் அதனை அவன் சர்வ சாதாரணமாக கடந்துபோகும் பக்குவமும் அவனது வாழ்வில் வெற்றிமீது வெற்றி வந்து சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. நெகிழ்ச்சியான நிகழ்வை பகிர்ந்தமைக்கு நன்றிகளும் ஃபயாசுக்கு வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குமுகமது பயஸ் மிக முக்கியமான ஆளுமைதான்
பதிலளிநீக்குநலமா?
சகோ கீதா நலமா?
முகம்மது ஃபயாஸ் பற்றிய செய்தி அருமை .... காணொளியை இங்கு பகிர்ந்திருந்தால் எங்களுக்கு உதவிய புண்ணியம் உங்களுக்கு கிடைத்திருக்கும்.
பதிலளிநீக்குLion story in tamil
பதிலளிநீக்குHi, I find this post really nice... Thanks for the info, Sir. I'll save it for sharing with others.
பதிலளிநீக்குHow To Reverse The Irregular Menstrual Cycle And Pain Naturally
Thank you very much for your valuable opinion.....and for your deciding to save it for sharing with others....such incidents are worthy enough to be considered like this,sir.
நீக்கு