நாங்களும் கடலில் குளிப்போமே!
ஹப்பா! அடிக்கிற வெயிலுக்கு என்ன சுகமா இருக்கு!!
இது ஃபீனிக்ஸ் மால் சென்ற போது இதனைத் தாங்கி நான் நிற்பது போல் எடுக்க முயற்சி. ஆனால் கூட்டம். மக்கள் இடையில் புகுந்து அப்படியும், இப்படியுமாகச் சென்றதால் இன்னும் நன்றாக எடுக்க முடியாமல் போயிற்று. கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் இப்படி எல்லாம் எடுக்க ரொம்பவே பொறுமை வேண்டும். முதலில் நின்று எடுத்தேன். பின்னர் நடப்பது போல் ஒரு கால் முன் வைத்து எடுத்தேன். என்னுடன் வந்த நபர் ரொம்பவே டென்ஷன் பார்ட்டி என்பதால் அதிகம் முயற்சி செய்ய இயலவில்லை. இப்படி நிழற்படம் எடுக்க முயற்சி செய்வது மிகவும் பிடிக்கும்
நான் சென்னைக்குள் தான் இருக்கிறேன் என்னைத் தெரிகிறதா? நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் இல்ல? ஹும் ஆனால் நீங்கள் எல்லோரும் என் அழகைக் கெடுக்கிறீர்களே!
சிறிய இடத்திலும் பசுமை விடியல்!!!?
வெண்டைப் பூவும், வெண்டைப் பிஞ்சுகளும்
சிறிய இடத்து பசுமை விடியலில் முளைக்கீரை அறுவடை!!!
--------------------------------------------------------------------------------------------------------------------------
நான் எடுத்த போது காய்க்கத் தொடங்கியிருந்தது. இப்போது கூடை கூடையாகக் காய்கள். பழுக்க வைத்து......அருமையான மணம், இனிப்பு, சுவை என்று இப்பழத்தைச் சுவைத்துவிட்டால், வெளியில் மாம்பழம் வாங்கவே தோன்றாது. நாங்கள் வாங்குவதும் இல்லை. ஜூஸ் அடித்தால் சர்க்கரையே தேவை இல்லை. மிகவும் செழுமையாக இருக்கும். அணில்கள் கூட்டம் அள்ளும்!!
இது சப்போட்டா காய்ப்பதற்கு முன். இப்படி நிறைய இருக்கின்றன.
சப்போட்டா மிகவும் இனிப்பாகச் சுவையோடு இருக்கும். எங்களுக்கு கிடைப்பது அரிது. அணில்கள் புகுந்து விளையாடும். நாங்களும் விட்டுவிடுவோம்.
வீழ்ந்துவிட்டதால், வீட்டவர்கள் வெட்ட எண்ணினார்கள். என் மனம் மிகவும் வேதனை அடைந்தது. ஆனால், அங்கிருக்கும், கணவரின் தம்பியும் இயற்கை ஆர்வலர். எனவே, நான் அருகில் சென்று பார்த்த போது, "வீழ்வேனா நான்! உயிர்த்தெழுவேன்" என்பது போல் முறிந்த பகுதியில் இன்னும் மரம் ஒட்டிக் கொண்டிருப்பது தெரிய, பச்சையமும் காயாமல் இருப்பதைக் கண்டதும், வெட்டிவிடாதீர்கள், மரத்திற்கு உயிர் இருக்கிறது. முயன்று பார்ப்போம் என்று நான் கெஞ்சிட....இதோ அம்மரத்தில் காய்த்த கொய்யாக்கள்!!! இப்போது அணில்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்!! அணில்கள் மட்டுமல்ல கிளிகளும் வந்து புகுந்து விளையாடும்! கொய்யா கிடைக்கவே கிடைக்காது! போனால் போகிறது. இவ்வுயிரினங்களின் நிலம் தானே! கொண்டாடட்டும்!
-------கீதா
(தலைமையகத்தில் இணையம் பிரச்சனை பண்ணுகிறது. வரும்...வராது என்ற நிலையில். எனவே பதிவுகள் வெளியிடுவதும், அலைபேசியில் வாசித்தாலும் கருத்துகளைப் பதிவதும் தளங்களுக்கு வருவதும், சற்று சிரமமாக இருக்கிறது. பயணமும் மேற்கொள்ள இருப்பதால், இனி மே 5 ஆம் தேதிக்குப் பிறகுதான். இடையில் முடிந்தால் தளங்கள் வந்து வாசித்துக் கருத்திட முயற்சி செய்கிறோம்.)