வெள்ளி, 20 ஜனவரி, 2017

மவுஸ் தழுவுபவர்களும் ஏறு தழுவும் போராட்டக் களத்தில்!!!

என் வீட்டிற்கு அருகில் டைடல் பார்க்கின் முன்பு மென்பொருளாளர்கள் போராட்டத்தில்

இந்தியாவின் தென் கோடி மாநிங்களில் ஒன்றான நம் தமிழ்நாட்டை இன்று உலகமே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்று சொல்லலாம். இதுவரை நம் மாணவர்களோ, மக்களோ இப்படி ஒரு தொடர் போராட்டத்தை மாநிலமே இணையும் வகையில் போராடியிருக்குமா என்று என் சிறிய அறிவிற்குத் தெரியவில்லை. இந்தப் போராட்டத்தை ஜல்லிக்கட்டிற்கு மட்டுமான போராட்டமாக என்னால் பார்க்க முடியவில்லை. தமிழர் அனைவரும் தமிழ் உணர்வுடன் ஒருங்கிணைந்து, சமூகவலைத்தளங்களும் இணைந்து அரசியல்வாதிகளையும், ஜிகினாக்காரர்களையும் புறம்தள்ளி, அரசியல்வாதிகளுக்குச் சவால் விட்டு அவர்களையும் சற்று மிரட்டும் ஒரு போராட்டமாகத்தான் தெரிகிறது.


இல்லை என்றால் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள், கணினியுடன் ஒட்டி உறவாடி, பின்னிப் பிணைந்து, தங்கள் வேலையே கதியென்று, உழவர் குடும்பத்து இளைஞர்களும் கூட சுண்டெலியையே தழுவிக் கிடந்தவர்கள் ஏறுதழுவும் போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் அதுதானே!


இந்த ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாளர்கள் ஒரு புறம், எதிர்ப்பவர்கள் மறு புறம். எதிர்ப்பாளர்களில் இருவகை. ஒன்று இதனை விலங்கு வதை என்று சொல்பவர்கள். மற்றொருவகை மனித உயிர்கள் பறி போகிறது என்று ஆதங்கப்படும் வகை. இரு வகையையும் குற்றம் சொல்லுவதற்கில்லைதான். ஒரு காலத்தில் வீர விளையாட்டாக இருந்த ஏறுதழுவுதல் என்பது இடைக்காலத்தில் சற்று விபரீத விளையாட்டாகத்தான் மாறியிருக்கிறது என்று சொல்லலாம். ஒரு சில இடங்களில் காளைகளுக்குச் சாராயம் கொடுத்ததுண்டு. வாலை முறுக்கி அவற்றைத் தூண்டிவிடுதல் என்ற துன்புறுத்தல்கள் நடந்ததுண்டுதான். அதற்கு அரசு தடை விதித்து சட்டம் கொண்டு வந்துவிட்டது. அதே போன்று பலரும் உயிர் இழத்தல் அல்லது, குற்றுயிராய் அடிபடுதல் என்பதும் நடக்கிறதுதான். இரு வகையினருக்கும் தீர்வுகள் உண்டு. 

அதற்கு முன்.....

நட்சத்திர ஆமைகளைக் கடத்துவதற்குத் தடையை அரசு கொண்டுவந்த போதிலும் கறுப்புச் சந்தையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வகை ஆமைகள் மட்டுமின்றி, நம் நாட்டிலிருக்கும் அரிய இனவகைப் பறவைகள், அவற்றின் குஞ்சுகள், இறகுகள், காட்டு விலங்குகளின் நகங்கள், கொம்புகள், தோல்கள் என்று பலதும் கறுப்புச் சந்தையில் இந்தியாவிற்குள்ளும், வெளிநாட்டிற்கும் கடத்தப்படுகின்றன. இதற்கு அரசியல் ரீதியாகப் பின்புலம் இல்லாமல் நடப்பதற்கு வழி இல்லை. 

போக்குவரத்திற்கு எந்தவிதத் தொந்தரவும் கொடுக்காமல் அமைதியாக நடத்தினார்கள்

நாய் கறிக்காக நாய்கள் கொல்லப்படுவது, முயல்கள் கொல்லப்படுவது மான் கறிக்காக மான்கள் கொல்லப்படுவது? 

விலங்குகளுக்குப் பொதுவாகச் சத்தம் என்பதே கூடாது. அதுவும் பட்டாசு சத்தம் போன்றவை அவற்றிற்கு ஆகாது. யானைகளைக் கோயில்களில் குறிப்பாகக் கேரளத்தில் கொட்டுச் சத்தங்களுக்கிடையில் தானே திருவிழாக்களில் பயன்படுத்துகிறார்கள்.?? 

ஜல்லிக்கட்டு மிருகவதையா என்ற பதிவில் ஒட்டகங்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி நம் நண்பர் வெங்கட்ஜி பதிந்திருந்தார், மனதை வேதனைப்படுத்திய பதிவு. இந்தக் கொடுமை எந்தவகையில் சேரும்?

மாடுகளை வண்டியில் ஏற்றி வேறு இடத்திற்கு, அது வெட்டுவதற்கோ அல்லது விற்பதற்கோ எதுவாக இருந்தாலும், அனுப்புவதற்கு என சில வரம்புகள் விதிகள் உண்டு. அதைப் பின்பற்றாமல், கால்களைக் கூட ஒடித்து, நெருக்கி ஏற்றி, ஒன்றின் கொம்பு மற்றொன்றின் மீது பட்டு கண் பார்வை இழப்பதும், காயம் ஏற்படுவதும் ஏன் பேசப்படுவதில்லை?

ஸ்பெயினில் விளையாடும் காளைச் சண்டை, அதன் பெயர் டாரோமாக்கியா என்று நினைவு...அதைப் போன்ற ஒரு குரூரமான விளையாட்டை யாரும் இவ்வுலகில் பார்த்திருக்க முடியாது. அப்படியான சண்டைகள், விளையாட்டு என்ற பெயரில் நடத்தப்படுகிறது. நாலுகால் பிரியர்கள் அமைப்புகள் இதற்கு என்ன சொல்லுகின்றன?

விலங்குகளை வைத்துக் கோடிக்கோடியாகக் கறுப்புச் சந்தையில் பண வர்த்தகம் நடைபெறுகிறது. அவை எல்லாம் விலங்குகள் இல்லையோ?! தெரியவில்லை. அகராதியில் பார்க்க வேண்டும். பீட்டாவின் அகராதியிலா, பொதுவான அகராதியிலா? ஏனென்றால் பீட்டாவிற்கு என்று ஒரு தனி அகராதி இருக்கிறது. 98 ஆம் வருடத்திலிருந்து அது கொன்ற விலங்குகளின் எண்ணிக்கை 34,000.

செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ், அல்லது தொற்றக் கூடிய கொடிய நோய்கள் வந்தால் அவற்றைக் கருணைக் கொலை செய்வது என்பது தவிர்க்க முடியாதுதான். ஆனால், விலங்குகள் காப்பகம் என்று ஆரம்பிக்கப்பட்ட பீட்டா அமைப்பு தன் பெயரில் Ethical Treatment of Animals என்று வைத்துக் கொண்டு தெருவில் அலையும் நாலுகால் செல்லங்களைப் பிடித்துக் கொண்டு சென்றுவிட்டு அவற்றைத் தேடி யாரும் வரவில்லை என்றால் அதனைக் கொன்றுவிடுகிறது. இதை நான் சொல்லவில்லை. இதோ இந்தச் சுட்டி ஆதாரங்களுடன் சொல்லுகிறது. https://www.petakillsanimals.com

எப்படி குழந்தை வளர்ப்பில் அவர்களின் உளவியல்படி வளர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறதோ, எப்படி ஒரு குழந்தையை அதன் திறமையை, சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய குழந்தையை முடக்கி வளர்த்தால் அதன் குணநலன் மாறி மன நலம் பாதிக்கப்படுமோ அப்படித்தான் விலங்குகளும். விலங்குகளுக்கும் உளவியல் உண்டு.

விலங்குகளுக்குச் சில திறன்கள் உண்டு. வீட்டில் வளர்த்தாலும் அந்தத் திறன்படி வளர்த்தால்தான் அவற்றிற்கு நல்லது. எடுத்துக்காட்டாக, லேப்ரடார் எனும் வகை நாய்களை 4, 5 மைல் தூரம்  நடக்க வைக்க வேண்டும். இல்லை என்றால் அவற்றின் எடை கூடி சில உடல் உபாதைகள் வரும்.

குதிரைக்கும், யானைக்கும் முதுகெலும்பு நல்ல உறுதியாக இருப்பதால்தான் அதன் மீது மனிதர்களை ஏற்றி உலா வரச் செய்வது நடக்கிறது. அவர்களுக்கு நாம் அமர்ந்தால் புத்தகப்பையின் சுமை போலத்தான் இருக்கும். அவற்றிற்கு என்று சில பணிகள் உண்டு. அவற்றைச் செய்ய வைத்தால்தான் அவற்றிற்கு நல்லது. ஹார்ஸ் பவர் என்று நாம் சொல்லுவோம் இல்லையா அதற்கேற்ப குதிரைகள் மிகவும் வேகமாக ஓடும் திறன் உடையவை அதனால் குதிரைகள் ஒட்டம் (பந்தையம்) சட்டத்திற்குள் உள்ளதுதான். அதற்காக அதற்கு வளரூட்டிகள், ஊசிகள் கொடுக்கப்படுகிறதே! அதற்குத் தடை இல்லை. யானைகள் ஒட்டம்(பந்தையம்) கேரளாவில் நடத்தப்படுகிறது. தடை இல்லையே!

விலங்கியல் பூங்கா என்று மக்களுக்குக் காட்சிப் பொருட்களாக கூண்டிற்குள் வைக்கப்பட்டிருக்கும் விலங்குகள், விலங்குகள்  இல்லை போலும். அவற்றிற்கு நடக்கும் அநீதிகள் எல்லாம் அநீதிகள் இல்லை போலும்,  சுத்தமாக, துர்நாற்றம் இல்லாத நீருடன், கூண்டுகளுடன் எத்தனைப் பூங்காக்கள் இருக்கின்றன? ஏழு மாநில சகோதரிகள் பயணக் கட்டுரையில் கூட, விலங்கியல் பூங்கா பற்றி வேதனையுடன் வெங்கட்ஜி சொல்லியிருந்தார்

காட்டில் இருக்க வேண்டிய  சிங்கம் புலிகளைக் கூட்டில் அடைப்பதால் எப்படி அவற்றின் இயல்பான வீரம் முடக்கப்படுகிறதோ அப்படித்தான் ஜல்லிக்கட்டுக் காளைகளும். காளைகளை வளர்ப்பதே இனவிருத்திக்காகவும், வீர விளையாட்டிற்காகவும்தான். பண்டையக் காலத்தில் காளைகளை இனவிருத்தி செய்வதற்கு சோதிப்பார்களாம். காளைகளை தூரத்திலிருந்து அழைக்கும் போது, அது ஓடி வரும் போது அதனை வளர்ப்பவர்கள் ஓடிச் சென்று அதன் திமிலைப் பிடித்து அடக்குவார்களாம். காளை மடிந்து உட்கார்ந்துவிட்டால் அதனை மாட்டுடன் இணைவதற்கு அனுப்ப மாட்டார்களாம். அதே சமயம் ஓடி வரும் காளை திமிலைப் பிடிப்பவரையும் தள்ளிவிட்டு ஓடிச் சென்றால் அதனைத்தான் இணைவதற்கு ஏற்ற காளை என்பார்களாம். இப்படியாகக் காளைகளை வளர்த்துவந்த காலம் உண்டு.

இப்போது காளைகள் மிகவும் குறைவு! வட இந்தியாவில் ஒரே காளையை வைத்துப் பல மாடுகளுக்கு செயற்கை முறையில் கருத்தரிக்க வியாபார ரீதியில் விந்து கொடுத்து பல லட்சங்கள் ஈட்டுபவரைப் பற்றி வெங்கட்ஜி தனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இப்போதெல்லாம், பெரும்பாலும் செயற்கை முறையில்தான் மாடுகளுக்கு விந்து செலுத்தப்படுகிறது. அந்த மாடுகளுள் எவ்வளவு பெரிய குழாய் போன்ற ஊசியை செலுத்துவார்கள் என்பதை நான் நேரில் கண்டதுண்டு. கொடுமை. இயற்கைக்கு எதிராகத்தான் எல்லாமே நடக்கிறது. இணைவதில் கூட சுதந்திரம் இல்லை. கால்நடை மருத்துவனான என் மகன் காளை வளர்க்க வேண்டும் என்பான். 

இப்படிக் காளைகள் ஒழிக்கப்படுவதால் நமது நாட்டு மாடுகளும் குறைந்து வரும் வேதனையான நிலைமை. கீதாசாம்பசிவம் அக்கா கூட அடிக்கடிச் சொல்லுவதுண்டு, இப்போதெல்லாம் பசும் பால் நன்றாகவே இல்லை என்று. இந்தச் சந்தையை அறிந்து கொள்ள, கறுப்புச் சந்தையாக மாறிய வியாபார உலகில் பாலிலும் அரசியல் புகுந்து விளையாடுவதை இதோ இந்தச் சுட்டியில் பாருங்கள். விகடன்.காம் தளத்தில் வெளியாகியிருக்கும் கட்டுரை யூரியா, சவுக்காரத்தூள் கலந்த பாலை குடிக்கத்தான்... ஜல்லிக்கட்டுக்கு தடையா...? http://www.vikatan.com/news/coverstory/77967-milk-politics-behind-the-ban-on-jallikattu--justiceforjallikattu.art அதிர்ச்சித் தகவல்கள்! இந்தச் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு இந்தக் காரணங்களும் உண்டு என்பதை இக்கட்டுரை மிக அழகாக விளக்குகிறது.

சரி உயிர் பலியாவதனால் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு: உலக அளவில் நடக்கும் குத்துச்சண்டை, கராதே போட்டிகளில் இல்லாத ஆபத்தா? பைக் ரேஸ், கார் ரேஸ் விளையாட்டுக்களில் இல்லாத ஆபத்தா? அதற்கெல்லாம் அவர்கள் முறையான பாதுகாப்புக் கவசங்கள் அணிய வேண்டும், முறையான பயிற்சி பெற்றவர்கள்தான் ஈடுபட வேண்டும் என்ற விதிமுறைகள் இல்லையா? அது போன்று ஜல்லிக்கட்டையே தடை செய்வதற்குப் பதிலாக….

ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாக, இதற்கு அரசியல் சாயம் பூசாதவர்களாக இருந்தால் போராட்டக் களத்திற்கு வந்திருக்க வேண்டும். வந்து ஆதரவாளர்கள் மற்றும் அதனை எதிர்ப்பவர்கள் தரப்பிலிருந்து குழுவையோ, இல்லை பிரதிநிகளையோ அழைத்து இரு தரப்பினரிடமும் பேசி, விலங்கு வதையோ, உயிர்பலியோ இல்லாமல் முறையான பாதுகாப்பு முறைகளுடன், விதி முறைகளுக்கு உட்பட்டு, மேற் சொன்ன விளையாட்டுகளுக்கு அணிவது போன்று தற்காப்புக் கவசங்கள் அணிந்து, காளைகளின் கொம்புகளிலும் அப்படியான கவசம் அணிவித்து, உடனடி மருத்துவ முதலுதவிகள் ஏற்பாடுகளுடன் அரசின் ஆதரவுடன் நடத்தலாம் என்று பேசியிருந்தால் இரு தரப்பினருக்கும் நன்றாக இருந்திருக்கும். அதை விட்டு இப்படி மேலும் மேலும் அரசியலாக்கிக் கொண்டு செல்வது என்ன நியாயம் என்று தெரியவில்லை. நம் அரசுகள் மக்கள் அரசாக இல்லாமல், வியாபார உலகு சார்ந்த அரசாக இருப்பது வேதனையளிக்கிறது!

இது போன்று ஒன்றுபட்டு, மக்கள் பொதுப் பிரச்சனைகளுக்குத் திரளுவார்கள் என்றால், ஆட்சியாளர்களுக்கு மக்களின் மேல் ஒரு வித பயம் வரும். மக்களின் நலனில் நாட்டம் இல்லை என்றாலும் பயந்தேனும் நல்லாட்சி புரிவார்கள்தானே!

------கீதா


45 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  2. இந்தப் போராட்டம் மற்ற அனைத்து விசயங்களிலும் தொடர வேண்டும் என்று அனைவரின் விருப்பமும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் டிடி! அப்படி நடந்தால் நம்ம ஆட்சியாளர்கள் ஒழுங்காக இருப்பாங்கல்ல அதான் மிக்க் நன்றி டிடி

      நீக்கு
  3. டாஸ்மாக் எதிராகவும் இப்படி ஒரு போராட்டம் வந்தால் நல்லது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி வரலாம் ஜி! வரும் என்றே தோன்றுகிறது பார்ப்போம்...

      மிக்க நன்றி ஜி

      நீக்கு
    2. ஜி இப்படிப் போராடி போராடித்தான் எல்லாம் பெற வேண்டும் என்றால் அப்புறம் எல்லாரும் எப்பவுமே வெளிலதான் கூட்டமா இருக்கணும்!!!!! வீட்டுக்கே போக முடியாது பின்ன அத்தனைப் பிரச்சனைகள் இருக்கின்றனவே...எதையும் இம்மி அளவு கூட மக்களுக்காக என்று சொல்லும் அரசியல் தலைவர்கள் செயல்படாமல் இருக்கும் போது என்னத்த சொல்லறது...

      நீக்கு
  4. வித்தியாசமான கண்ணோட்டம்....

    நம் மக்களின் எழுச்சியை காணும் போதே மனம் மகிழ்கிறது...இந்தகைய உணர்வுள் இத்தனை நாள் எங்கு ஒளிந்து இருந்ததோ...

    வெல்லட்டும் உணர்வு போராட்டம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனு மிக்க நன்றி...இதை எழுதி வைத்து, அதாவது குறிப்புகள் இந்தப் போராட்டம் வெடிக்கும் முன்னரே விலங்குகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், விலங்குகள் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அமைப்புகளின் ஹிப்பொக்ரெட்டிக் செயல்கள் குறித்தும், எழுதி வைத்து முடிக்காமல் பல நாட்கள் ஆகிவிட்டன....முடிக்காமல் வைத்திருப்பதே எனது வழக்கமாகிவிட்டது. அது போல இந்தப் போராட்டம் தொடங்கியதும் எழுதியிருந்த தீர்வு...அதையும் கட்டுரை சரியாக வராதது போல ஒரு எண்ணம் மனதில் இருக்க அப்படியே வைத்துவிட்டேன்....பின்னர் இரண்டையும் இணைத்து இதோ...அதுவும் டைடல் பார்க்கில் பார்த்துப் புகைப்படம் எடுத்ததும் சூடாக வெளியிட வேண்டுமென்று நினைத்து ஆனால் கணினி தகராறு செய்ய இப்பவும் ஆறிப்போய்....பல சமயங்களில் இப்படித்தான் மூளை வேலை செய்யாமல், எழுத இயலாமல் பாதியில் கிடக்கின்றன நிறைய...ஹிஹிஹி...

      துளசி ஊரிலிருந்திருந்தால் உடனடியாக எல்லாம் வெளியில் வந்திருக்கும்...இப்போது இது வெளிவர என்னை ஊக்கப்படுத்திய நண்பர் இபுவுக்கு எனது நன்றிகள். அவரது கட்டுரைக்கு நான் கொடுத்த கருத்துக்களை வைத்து என்னை ஊக்கப்படுத்தி வெளியிடக் காரணமாக அமைந்தவர்!

      ஆம் அனு வெல்லட்டும் உணர்வுப் போராட்டம்...

      நீக்கு
    2. நம் மக்களின் எழுச்சியை காணும் போதே மனம் மகிழ்கிறது...இந்தகைய உணர்வுள் இத்தனை நாள் எங்கு ஒளிந்து இருந்ததோ...// ஆம் எனக்கும் தோன்றியது இது. சரி இப்பவாவது தொடங்கியதே என்று தோன்றியது. இங்கு விவாதிக்கப்படும் கருத்துக்கள் யாவும் பல வருடங்களாக நடந்து கொண்டிருப்பவையே...இங்கு எழுதினால் பதிவாகிவிடும்..

      மிக்க நன்றி அனு

      நீக்கு
  5. நல்ல விரிவான கட்டுரை. நண்பர் திண்டுக்கல் தனபாலன் சொல்வதைப் போல “ இந்தப் போராட்டம் மற்ற அனைத்து விசயங்களிலும் தொடர வேண்டும்”

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோ அதைப் பதிவிலும் சொல்லியிருக்கிறேன்...ஆனால் நம் பிரச்சனைகள் பலவற்றிற்கும் நாம் போராடித்தான் பெற வேண்டும் என்றால் ...என்ன ஒரு வேதனை...

      மிக்க நன்றி இளங்கோ சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  6. ஆட்சியாளர்கள் இம்மாதிரி மாணவர், இளைஞர்களின் கட்சி சாராத போராட்டங்களை அதிக நாட்களுக்கு அனுமதிப்பார்கள் என்று தோன்றவில்லை. ஏனெனில், அப்படி அனுமதிக்கும் ஒவ்வொரு நாளும், தமது ஆட்சியின் ஆயுளில் ஒருநாள் குறைந்துவிடும் என்று அவர்களுக்குத் தெரியாதா? போராட்டக்கார்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லுவது சரிதான் என்றாலும் இதில் எவ்வளவு தூரம் நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் இது தமிழ்நாடு முழுவதும் அல்லாமல் உலகத் தமிழர்களும் கையிலெடுத்து ஆதரவு தருகிறார்கள். எல்லா அரசியல்வாதிகளுக்கும் இது ஓர் எச்சரிக்கை மணியாகவே தோன்றுகிறது சார். மிக்க நன்றி ராயசெல்லப்பா சார் தங்கள் கருத்திற்கு.

      மிக்க நன்ற்

      நீக்கு
  7. நடக்கக் கூடாதவைகள் நடக்கின்றன என்னும் பட்டியலில் கருப்புப் பணம் ஈட்டுவதையும் சொல்லி இருக்கலாமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லியிருக்கலாம்தான் சார் ஆனால் அதைப் பற்றி இந்தத் தலைப்பில் வேண்டாம் என்பதும், பதிவு இன்னும் நீண்டு போகுமே. பால் அரசியலிலேயே அதுதான் நடக்கிறது.

      மிக்க நன்றி ஜிஎம்பி சார்

      நீக்கு
  8. இந்த போராட்டம் எழுச்சி விழிப்புணர்வு எல்லா விஷயத்திலும் தொடர்வது நல்லதே .எனது வேண்டுதல்கள் எந்த குள்ள நரியும் குட்டை கலக்காமல் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதே ..

    குள்ளநரி .... சாதீ மதம் இனம் இவற்றோடு அரசியல் வியாதிகள்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்து மிகவும் சரிதான் ஏஞ்சல். ஆமாம். மற்றொரு கருத்தைச்சொல்ல நினைத்து பதிவில் விட்டது, நீண்டு விட்டதால்...நாலுகால் பிரியர்கள் பாதுகாவலர் என்று இருக்கும் அமைப்புக்களை விட நம் ஸ்ரீராம் பாசிட்டிவ் செய்திகளில் சொல்லும் தனிமனித இயற்கை மற்றும், விலங்குப் பிரியர்கள் செய்யும் சேவைகளும், பணிகளும் அளப்பற்கரியது!!! ஏன் நீங்கள் செய்யும் சேவை உட்பட!! ஸ்ரீராமும் உண்டு அதில். இன்னும் நம் நண்பர்கள் பலர் உள்ளனர். இருக்கலாம்.. எந்தவித அரசியலும் இல்லை இந்தச் சேவையில்.சத்தமில்லாமல் நடக்கிறது!

      மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு

      நீக்கு
  9. பதில்கள்
    1. மிக்க நன்றி கோவிந்தராஜு ஐயா, தங்களின் கருத்திற்கும், முதல் வருகைக்கும்.

      நீக்கு
  10. என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இதனால் அதிகப் பாதிப்பு இளைஞர்களுக்குத் தான்! எல்லா வகையிலும்! அதோடு நீதிமன்றங்களுக்கு அரசு உத்தரவிட முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அந்த கிராமப் பஞ்சாயத்துக்கள் கூடி முடிவெடுத்து ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்று புதிய தலைமுறையில் வழக்கறிஞர் ஒருவர் கருத்துக் கூறி இருக்கிறார். நடத்தி விட்டுப் பின்னர் வரும் விளைவுகளை சட்டப்படி சந்தித்திருக்கலாமோ! ஏனெனில் பாரம்பரியம் என்பதை நீதிமன்றங்களால் மறுக்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா இதைக் கேள்விப்பட்டேன்....இப்படியும் செய்திருக்கலாம்தான்...மிக்க நன்றி கீதாக்கா...கருத்திற்கு

      நீக்கு
  11. மற்றபடி ஒரு காலத்தில் கோயில் திருவிழாக்களோடு இணைந்திருந்த மஞ்சு விரட்டு தான் பின்னாட்களில் ஜல்லிக்கட்டு என்று மாறி இருக்கிறதோ என்று தோன்றுகிறது!மஞ்சு விரட்டு என்பது வேறு! இன விருத்திக்குப் பயன்படும் காளைகளில் முதலானது கோயில்களுக்கு என நேர்ந்து விடப்படும் கோயில்காளைகள் எனப்படும் பொலி காளைகள் தான். ஜல்லிக்கட்டுக் காளைகள் இனவிருத்திக்குப் பயன்படுத்த மாட்டார்கள். பின்னர் அந்தக் காளைகளை ஜல்லிக்கட்டிற்குப் பயன்படுத்த முடியாது. அவற்றின் வீரமும், கோபமும் அடங்கி விடும். ஆகவே இன விருத்திக்கான காளைகள் தனி, இவை தனி! இவை ஆரம்பம் முதலே போர்க்குணத்துடன் வளர்க்கப்படுபவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா அப்படியும் சொல்லப்படுகிறதுதான். மஞ்சு விரட்டு என்பது வேறு. ஏறுதழுவுதல் தான் ஜல்லிக்கட்டு என்று மாறியிருப்பதாகத் தெரிகிறது. ஏறு தழுவுதலைத்தான் நான் இங்கு சொல்லியிருப்பது. கோயில் காளையையும், பொலியையும் தனித்தனியாகச் சொல்லாமல் விட்டதால் வந்துவிட்ட குழப்பம். ஆமாம், இனவிருத்திக்குப் பயன்படுபவை வீரத்திற்கு ஒவ்வாது என்பதும் உண்டு. மகன் எல்லாம் பிரித்துப் பிரித்துச் சொல்லியிருக்கிறான். இங்கு அதனைச் சொல்லாமல் வந்ததால் வந்த வினை. பால் உற்பத்தியில் நடக்கும் மோசடிகள் என்று லைட்டாகச் சொல்லவந்ததால் ஜல்லிக் கட்டுக் காளைகளைப் பற்றிப் பிரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

      மிக்க நன்றிக்கா விரிவாகச் சொன்னதற்கு...

      நீக்கு
  12. வணக்கம்
    தமழ்இனத்தின் எழுச்சி வெல்லட்டும் விரிவாக விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  13. விகடன் தனது தளத்தில் வெளியிட்டிருக்கும் யூரியா, சவுக்காரத்தூள் கலந்த பால் பற்றிய விஷயங்கள் எல்லாம் - ஏழாண்டுகளுக்கு முன்பே அறிந்தது தான்..

    அப்போதெல்லாம் ஊடகங்கள் நாலரைப் பாலுக்கு ஆலவட்டம் சுற்றிக் கொண்டிருந்தன.. அர்ஜூனுடைய அம்மா யார் என மக்களைத் தூண்டிக் கொண்டிருந்தன..

    புத்திசாலி ....கள் எல்லாம் இதற்கு மாறி விட்டார்கள்.. நீங்கள் இன்னும் மாறவில்லையா?... என ஏளனம் செய்து கொண்டிருந்தன....

    இன்றைக்கு நல்லவர்கள் போல வேடங்கட்டிக் கொண்டு ஆடுகின்றன..

    பாலைப் பயன்படுத்துவோர்க்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கொஞ்சமல்ல...

    அந்த கால கட்டத்தில் தஞ்சையிலேயே நல்ல பால் கிடைப்பது அரிதாக இருந்தது..
    நாட்டு மாடு வளர்த்தோரை நசுக்கின - அன்றைய பிரச்னைகள்..

    நல்ல பாலுக்காக தினமும் ஐந்து கி.மீ.. தூரம் பயணித்திருக்கின்றேன்..

    இருந்தாலும் இன்றைய வேகம் எல்லாம் -
    எப்படியோ நம்முடைய அடையாளங்களாகி விட்ட சிலவற்றை இழக்க மனம் இல்லாததால் தான்..

    ஜல்லிக்கட்டுக் காளைகளை பொதுவெளியில் சினையூட்டத்துக்கு பயன்படுத்துவது இல்லை.. அவை போர்க்குணத்துடன் வளர்ந்தாலும் வளர்ப்பவரிடத்தில் அன்பு கொண்டவை.. சாதுவானவை..

    செயற்கை சினையூட்டத்தால் கிராமங்களில் சர்வ சாதாரணமாக வளர்க்கப்பட்ட பொலி காளைகளும் அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டன..

    காவிரியின் பிரச்னை தீர்ந்து விடக்கூடும்.. மனிதர்களுக்கு நல்ல குணங்கள் அமைந்து விட்டால் ஒழுங்கினங்கள் தொலைந்து விடும்..

    காளைகள் பசுக்கள் எருமைகள் இவற்றை அழிவின் விளிம்புக்குத் தள்ளி விட்டால் நம்மால் என்றைக்குமே மீட்டெடுக்க இயலாமல் போய்விடும்..

    அந்த உணர்வு தான் வெடித்துக் கிளம்பியிருக்கின்றது..

    இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சி இனியும் தொடரும்..
    அடக்க முற்பட்டால் அவர்களுக்கே அழிவு.. அவ்வளவுதான்..

    இன்னும் சொல்லலாம்.. இருப்பினும் நல்ல கருத்துகளைக் கண்டு மகிழ்ச்சி..

    (தங்களுடைய சில பதிவுகள் கடந்த நாட்களில் திறக்கவேயில்லை.. எனவே கருத்துரை செய்ய இயலவில்லை.. எனவே பிழையாக எண்ண வேண்டாம்..)

    அன்புடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா தங்களை எதற்காகப் பிழையாக எண்ணப் போகிறோம். நிச்சயமாக இல்லை ஐயா.எங்கள் தளம்ப திறக்க நேரம் ஆவதும் முடியாமல் போனதையும் இப்போது நன் நண்பர் சகோ டிடி அவர்கள் சரிசெய்துவிட்டார். இனி திறக்க முடியும் என்று நினைக்கிறோம்...

      விவசாயமும் கால்நடையும் பின்னிப்பிணைந்த ஒன்று ஒன்று இல்லையே மற்றொன்று இல்லை அழிவை நோக்கி என்று சொல்லலாம். ஆமாம் செயற்கைச் சினையூட்டம்...என் மகன் கால்நடை மருத்துவன் என்பதால் பல நேரில் கண்டதுண்டு. ஜல்லிக் காளைகளைப் பொதுவாக சினையூட்டத்துக்குப் பயன்படுத்துவது இல்லைதான். தங்கள் அனுபவங்களின் வாயிலாகப் பல நல்ல கருத்துக்களை முன்வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

      எங்கள் அடுத்த பதிவு இந்தப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின்னால் அடுத்த கட்டமாக நம் சிந்தனை என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி என்பதால் இங்கு பால் அரசியல் பற்றி அதிகம் பேசவில்லை பதிவு நீண்டு விட்டதும் காரனம்...

      மிக்க நன்றி ஐயா தங்களின் அழகான கருத்திற்கு

      நீக்கு
  14. நல்லதொரு தொடக்கம். எனது பதிவுகள் பற்றி கட்டுரையில் சொன்னதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  15. மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட நல்லதொருபதிவு டாக்டரின் அம்மாவிற்கு பல விஷயங்கள் தெரிந்து இருக்கின்றன் ஆமாம் நீங்க பாதி டாக்கராக ஆகிவீட்டிங்க போல இருக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ அதெல்லாம் இல்லை மதுரை சகோ...மகனும் நானும் பேசுவதுதான். ஆனால் இதில் பேசுவதற்கு இன்னும் நிறைய உள்ளன...மகன் நிறைய நடைமுறையில் நடப்பதை மருத்துவனாகச் சொல்லியிருக்கிறான். கிராமங்களில் மாடு வளர்ப்போரின் மனநிலை உட்பட....ஆனால் அதை எல்லாம் இப்போது பேச முடியாது.....அவன் சொல்லுவதும், நான் அவனுக்குப் போதித்ததும், என் சிந்தனைகளும் தான் அடுத்த பதிவு. சல்லிக்காட்டையும் தாண்டி நாம் யோசிக்க வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன என்று...

      மிக்க நன்றி மதுரை சகோ தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும்.

      நீக்கு
  16. அரசியலில் இறங்காது
    தமிழனின் முதலீடான
    கல்வியை மேம்படுத்தியவாறு
    ஒழுக்கம், பண்பாடு பேணி
    எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான
    எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு
    மாணவர்களே தமிழ்நாட்டை மேம்படுத்தலாம்!
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி
    எதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

      நீக்கு
  17. ராகவா லோரன்ஸ் அவர்களைப் பாராட்டுவோம் - அவரது உதவியும்
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவியதே!

    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய
    தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக அவரைப் பாராட்ட வேண்டும்! மிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ!

      நீக்கு
  18. நான் எழுத நினைத்த விசயங்கள், பதிவேற்ற நினைத்த காணொலிக் காட்சிகள், படங்கள் என அனைத்தும் கருத்துக்களாக உங்கள் பதிவில் கண்டதில் மகிழ்ச்சி. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜோதிஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  19. இந்தப் பதிவை மொபைல் வழியாகப் படித்தேன். ஏனோ அன்று என்னால் அதன்வழியாகக் கருத்திட முடியவில்லை. அதுவும் நல்லதுதான். தம வாக்களித்து விட்டேன்.

    இளைஞர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தூண்டி விடுவது எளிதாகத்தான் இருக்கிறது. மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது எனக்கு ஏற்புடையது அல்ல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ரீராம் எனக்கும் ஏற்புடையது இல்லை ஆனால் இப்போது போகிற போக்கில் ஏதேனும் ஒரு புரட்சி மாற்றம் வரும் என்ற் நோக்கில் நல்லத் என்று நினைத்தேன் இப்போது அது சரியான வழிநடத்தல் இல்லாமல் திணறுவதைப் பார்க்கும் போது வேதனையாகத்தான் இருக்கிறது..

      நீக்கு