வியாழன், 26 ஜனவரி, 2017

மக்களால், மக்களுக்காக......!!


நம் நாடு குடியரசு நாடாகி, சனநாயக நாடு என்ற பெருமை பெற்று இன்றோடு 68 வருடங்கள் ஆகிறது. எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்! இப்படிச் சொன்னாலும், மனதினில் பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருக்கின்றது. சுதந்திரம் பெற்று, குடியரசு நாடாகி நாம் என்ன சாதித்தோம்? என்பதை நினைத்துப் பார்த்தால், முதலில் தோன்றுவது எதிர்மறைதான் என்றாலும் நேர்மறை என்று முதலில் தோன்றுவது நாம் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்திருப்பதுதான். அடைந்திருந்தாலும், நாம் இன்றும் வளர்ந்துவரும் நாடுகளின் பட்டியலில்தான் இருக்கின்றோமே அல்லாமல் வளர்ந்த நாடுகள் பட்டியலில் இடம்பெறவில்லை.

ஆங்கிலேய ஆட்சியை விரட்டியடிக்க சுதந்திரப் போராட்டம் நடத்தப்பட்டது.. சுதந்திரம் பெற்றோம் என்று சொல்லிக் கொண்டோம். நம் நாட்டின் சொத்தை எல்லாம், அரிய பொக்கிஷங்களை எல்லாம் ஆங்கிலேயர்கள் சுரண்டி, களவாடிச் சென்றுவிட்டார்கள் என்று அவ்வப்போது குறைபட்டுக் கொள்கின்றோம். சுதந்திரம் பெற்ற பின் இதையேதானே நம்மை இப்போது ஆள்பவர்களும் செய்கிறார்கள்? அப்போது ஆங்கிலேயக் கொடி பறந்தது. இப்போது நம் இந்தியக் கொடி பறக்கிறது அவ்வளவுதான். வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்போது அந்நியர்கள். இப்போது நம்மவர்களே நம்மைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றார்கள். அப்போது நம்மை அடிமைகள் என்று சொல்லிக் கொண்டோம். அதே அடிமைத்தனம்தான் மறைமுகமாக இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அன்று வெள்ளையர் ஆண்ட போது நமது உரிமைக்காகப் போராடினோம், சரி. இப்போது நம்மவர்கள் ஆளும் போதும் நமது அடிப்படைத் தேவைகளைக் கூடப் போராடித்தான் பெற வேண்டியுள்ளது. மக்களுக்காக என்று சொல்லிக் கொண்டு ஆட்சி செய்பவர்கள் மக்களைக் கருத்திற் கொண்டிருந்தால் நாம் போராட வேண்டியத் தேவையே இருந்திருக்காதுதான். நம் ஒவ்வொரு நாள் வாழ்வியலிலும் ஊடறக் கலந்துள்ள ஊழலையும், கலப்படத்தையும் கூடக் கேள்வி கேட்காமல், உரிமைக் குரல் எழுப்பாமல் அதையும் கடந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

அப்போது சுதந்திரம் வேண்டும் என்று போராடினோம். அந்நியர்கள் ஓடினார்கள். இப்போது நம்மை ஆள்பவர்களை எங்கு துரத்துவது? என்னெல்லாம் சுரண்டப்படுகிறது, என்னவெல்லாம் நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குக் கறுப்புச் சந்தையில் கைமாறுகின்றது என்பதெல்லாம் நமக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், நாம் கேள்விகள் எழுப்புவதில்லை.

அன்று நேரடியாக ஆங்கிலேயர் ஆண்டார்கள். இன்று பல பன்னாட்டுக் கம்பெனிகள் நமது உணவிலிருந்து, விவசாயம், மருத்துவம் என்று எல்லாத்துறைகளிலும் ஆண்டு கொண்டிருக்கின்றன. அன்று ஆங்கிலேயன் பிரித்தாளும் சதியாகச் சாதியைத் தூண்டினான் என்றோம். இப்போது அது இன்னும் வலுவாகியிருக்கிறது. சுதந்திரம் பெற்று, குடியரசாகி என்ன மாற்றம் நிகழ்ந்தது?

குண்டூசியிலிருந்து நாம் உடுத்தும் ஆடைகள் வரை, கணினி எல்லாமே அந்நியப் பொருட்கள் கலந்தவைதான். குடிக்கும் பால் கலப்பினப்பாலாகிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆழமாக ஊடுருவியிருக்கும் இதனை ஒரே நாளில் களைந்திட இயலாது. அதுவும் கலப்பினப் பாலை மீண்டும் நம் நாட்டுப் பாலாக்க வருடங்கள் ஆகலாம். பேசுவது போல் நடைமுறைப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல. நம் நாடு அந்தளவிற்குத் தன்நிறைவு அடையவில்லை, ஏனென்றால் நாம் சுயசார்புப் பொருளாதாரத்தைக் கொஞ்சமேனும் கூட நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை.

இப்போது அதன் விழிப்புணர்வு வந்திருக்கிறது. இப்போது அதையும் உட்படுத்தித்தான் மக்கள் முழக்கமிட்டார்கள். முழக்கமிட்ட இளைஞர்களும் சரி, மக்களும் சரி வெளிநாட்டுப் பானங்களை, உணவுப் பொருட்களை புறம்தள்ளுவார்களா என்பது கேள்விக்குறியே! பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுநாள் வரை கேட்கவேண்டும், குரல் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கேட்க முடியாமல் உள்ளத்தில் புதைந்து கிடந்துப் புழுங்கியவைதான் வெடித்துள்ளது. அதன் காரணமாக மக்கள் விழிப்படைந்துள்ளார்கள், இனி ஏமாற மாட்டார்கள், ஊழல்களுக்கு எதிராகக் கேள்விகள், குரல்கள் எழுப்புவார்கள் என்ற நம்பிக்கை துளிர்த்தாலும், இனியும் அனுமதிக்கப்படுமா? இல்லை அதிகாரத்தின் கை ஓங்கியிருக்குமா? மக்களுக்காக என்று சொல்லும் அரசியல்வாதிகள் மக்களின் கொந்தளிப்பையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டால் நல்லது.

நாம் மாற்றம் வர வேண்டும் என்று சொல்லுகின்றோம். நாமும், தனிநபராகத் தினமும் சந்திக்கும் சில ஏமாற்றங்களுக்கோ, அநீதிக்கோ கூட கேள்விகள் கேட்பதில்லை. அப்போது எப்படி மாற்றம் மலரும்? 

இந்தக் குடியரசுதின நாளில் நமது குடியுரிமையை நிலைநாட்ட சிந்திக்கத் தொடங்குவோம்! எல்லோருக்கும் எங்கள் குடியரசு தின வாழ்த்துக்கள்!

(இன்று சாக்லேட்டுகளுக்குப் பதில் நம் நாட்டு இனிப்புகளாகிய கடலைமிட்டாய், கடலை உருண்டை, எள்ளுருண்டை, எள்ளு மிட்டாய்களைக் குழந்தைகளுக்கு வழங்கலாம் என்று நல்லதொரு பரிந்துரையை முத்துநிலவன் அண்ணா வாட்சப்பில் பகிர்ந்திருந்தார். நல்லதொரு தொடக்கம், இனிதே மலரட்டும்!)

-----கீதா





43 கருத்துகள்:

  1. நன்றி மேடம்! எனது இனிய இந்திய குடியரசுதின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தமிழிளங்கோ சகோ! தங்கள் கருத்திர்கும் வாழ்த்திற்கும்...தங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்!

      நீக்கு
  2. நீங்கள் சொல்வது போல், ஒவ்வொரு தனிமனிதரும் மாறினால் தான், சிறப்பான முன்னேற்றம் வரும்...

    ஜெய் ஹிந்த்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! டிடி மிக்க் நன்றி டிடி தங்களின் கருத்திற்கு..

      நீக்கு
  3. நல்லதொரு பதிவு..
    அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா தங்களின் வாழ்த்துகளுக்கு. தங்களுக்கும் எங்கள் குடியரசு தின வாழ்த்துகள்

      நீக்கு
  4. //அதே அடிமைத்தனம்தான் மறைமுகமாக இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது//

    உண்மை அக்மார்க உண்மை

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு

      இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

      நீக்கு
  5. மிட்டாய்க்கு வெயிட்டிங்க்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மதுரை சகோ...சுகர் ஃப்ரீ கடலை மிட்டாய் தேடினேன்...கிடைக்கலை...பரவாயில்லைனு இந்தாங்க உங்களுக்கு அனுப்பிருக்கேன் எடுத்துக்கோங்க..http://www.kadalaimittai.com
      எங்க ஊர்ல இப்ப எல்லாமே கேஷ்லெஸ்தான் அதனால இதுவும் ஆன்லைன்லதான் ஹிஹிஹி

      நீக்கு
    2. நம்மூர் பக்கம் கோவில்பட்டி கடலைமிட்டாயாக்கும்...

      நீக்கு
  6. நல்லதொரு பகிர்வு....

    இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி ! உங்கள் பதிவை விடவா?

      இனிய குடியரசு தின வாழ்த்துகள்!

      நீக்கு
  7. இது தனிமனித சிந்தனைகள் நேருபட்டால் நாம் நினைக்கும் மாற்றங்கள் வரலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கும்மாச்சி ரொம்ப நாளாச்சு பார்த்து. ஆம் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்...மிக்க நன்றி கும்மாச்சி

      நீக்கு
  8. பதில்கள்
    1. இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு நண்டு நொரண்டு..

      நீக்கு
  9. அடிப்படையில் நாம் அடிமைகளே யாருக்கு என்பதே கேள்வி நம் சிந்தனைகளில் நம்மைப் பற்றி மறந்து விடுகிறோம் எல்லாவற்றுக்கு ம்பிறரே காரணம் என்கிறோம் நம் கலாச்சாரமே ஊழலானது எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்கும் கௌஇயூட்டு வழங்க முயலுகிறோம் ஆனால் பதிவுலகில் எல்லாம் சகஜம் என்று நினைத்து நகைச்சுவையாக்குவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான் சார்.ஏதேனும் ஒன்றிற்கு அடிமையாகத்தான் இருக்கிறோம்...யாருக்கு என்றும் எதற்கு என்றும் கூட சேர்த்துக் கொள்ளலாம் தான் இல்லையா..மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  10. வணக்கம் சகோ. எல்லோருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்! ஆட்சியாளர்கள் தான் மாறியிருக்கிறார்களே தவிர, சுரண்டல் ஒழிந்தபாடில்லை என்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள். மறுபடியும் சுதேசி இயக்கம் நடத்தித் தான் வெளிநாட்டுக்கம்பெனிகளை விரட்ட வேண்டும் போலிருக்கிறது. முக்கியமாக சீனாவின் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும். பிளாஸ்டிக் அரிசி, போலி முட்டை எனத் தரமற்ற பொருட்களை மிகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்து, இந்திய சந்தையில் விற்றுக் கொள்ளை லாபம் அடிக்கும் சீனப்பொருட்களை வாங்கக் கூடாது என ஓர் இயக்கம் நடத்தினால் தேவலாம். சிந்திக்க வைக்கும் பதிவு! பகிர்வுக்குப் பாராட்டும் வாழ்த்தும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்! கலையரசி! வாருங்கள். ஆம் சீனப்பொருட்கள் ஊடுருவி இருப்பதாகச் சொல்லுகிறார்கள் அதுவும் கோஸ் கூட நமக்கு அடையாளமே தெரியாத அளவில் இருக்குமாம்..பிளாஸ்டிக் என்று சொல்லுகிறார்கள் அப்போ அடுப்பில்வைத்தால் உருகிவிடுமா இல்லை எப்படி என்று தெரியவில்லை...ஆனால் அச்சமாகத்தான் இருக்கிறது. நாம் சுதேசி இயக்கம் கொண்டு வரலாம் அதைத்தான் நான் எனது பதிவுகளில் காந்தியின் பொருளாதாரம் பற்றி எல்லாவற்றிலும் இல்லை என்றாலும் ஒரு சிலவற்றில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சிந்தித்து உட்படுத்த வேண்டும் என்று சொல்லிவருகிறேன். அப்போது ஆங்கிலேயர்கள் ஆண்டார்கள் அதனால் சுதேசி இயக்கம் சரி இப்போது நம்மை ஆள்பவர்கள் நம் நாட்டவர்தானே அவர்கள் நினைத்தால் உறுதியாகச் செயல்படுத்த முடியும் பார்ப்போம்.. சகோ..
      மிக்க நன்று நல்ல விரிவான கருத்தை முன்வைத்தமைக்கு

      நீக்கு
  11. பதில்கள்
    1. வாங்க அதிரா/ஆதிரா!! தங்களுக்கும் வாழ்த்துக்கள். மிக்க நன்றி தங்களின் வருகைக்கு..

      நீக்கு
  12. பதில்கள்
    1. மாற்றம் விரைவில் வரும் முனைவர் ஐயா! மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு. இனிய குடியரசு தினநாள் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  13. அருமையான பகிர்வு.
    மாற்றங்கள் மலரட்டும்.
    குடியரசு தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதியக்கா தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும். தங்களுக்கும் எங்கள் குடியரசு தின வாழ்த்துக்கள்!

      நீக்கு
  14. நல்ல பதிவு. ஆனால் மாற்றங்கள் என்பது நம் மனதில் உருவாக வேண்டும். மீண்டும் ஓர் சுதேசி இயக்கம் உருவாக வேண்டும். என்றாலும் மாடுகளைப் பொறுத்த அளவில் அவற்றை அழித்ததில் நமக்கும் பங்கு உண்டு என்பதை மறுக்கவே முடியாது! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதாக்கா. ஆம் மாற்றங்கள் நம்மிடமே உருவாக வேண்டும். நாம் பலவற்றை உறுதியாக மறுக்க வேண்டும். மாடுகளை அழித்ததில் நமக்கும் பங்கு உண்டுதான். என் மகனும் அதை அடிக்கடிச் சொல்லுவான். ஆனால் அதே சமயம் அவன் சொல்லுவது கலப்பினம் நிகழ்ந்ததற்கு முக்கியக் காரணம் நமது அரசு. மட்டுமல்ல விவசாயிகளுக்குப் பல வகையில் உதவியிருக்க வேண்டும் என்பதையும் சொல்லுவான். மக்களுக்கும் அதில் சிறிய பங்குண்டு.
      மிக்க நன்றி கீதாக்கா

      நீக்கு
  15. என் மனதில், இல்லை, எல்லோர் மனதிலும் இருக்கும் எண்ணங்களைப் பிரதிபலித்திருக்கிறீர்கள். மாற்றத்துக்கான ஒரு ஆரம்பமாவது இருந்தால் சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்...மாற்றத்துக்கான ஆரம்பம் இருக்க வேண்டும். பூனைக்கு மணிகட்டுவதுயார் என்பது போல் இருந்த நிலைமை மாறி இப்போது பூனை பாய்ந்தாலும் எப்படியோ மணி கட்டியாகிவிட்டது. அடுத்து பார்ப்போம் மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது...

      நீக்கு
  16. மாறுவது மனிதனா? சமூகமா.?.என்ற கேள்வி எழுகிறது.. அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதன் மாறினால் சமூகம் மாறுமே வலிப்போக்கன் இல்லையா மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  17. இனிய இந்தியக் குடியரசு நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் வாழ்த்திற்கு

      நீக்கு
  18. "சாதி மத பேதமைகள் சாக்கடைக்குள் போகட்டும் - நாடு
    சரித்திரங்கள் புகழ்மணக்கும் பூக்கடைகளாகட்டும்.
    சாதனைகள் விண் கடந்து வீறு நடை போடட்டும் - இந்தியன்
    சாமான்யன் இல்லை எனும் சங்கொலிகள் கூடட்டும்".

    குடியரசு நாள் வாழ்த்துகள்.

    கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான தமிழில்கவி வரிகளில் கொடுத்திருக்கும் கருத்திற்கு மிக்க நன்றி கோ..

      நீக்கு
  19. உலகமயமாகிவிட்ட இன்றைய பொருளாதாரத்தில் எடுத்ததற்கெல்லாம் 'கொக்கோ கோலாவை ஒழிப்போம், வேர்க்கடலையை உண்போம் என்றெல்லாம் பொங்கி எழுவது எவ்வளவுதூரம் சரி என்று தெரியவில்லை. எந்த நாடும் இன்னொரு நாட்டுடன் அறவே விலகி இருப்பது எவ்வாறு முடியாதோ, அதேபோலத்தான், ஒரு நாட்டின் உற்பத்திப்பொருளை இன்னொருநாடு பயன்படுத்தாமல் இருப்பதும் முடியாத காரியமே. மெரீனா இளைஞர்களின் போராட்டத்தை அன்புகூர்ந்து கொச்சைப்படுத்தவேண்டாம் . - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் மன்னிக்கவும். போராட்டத்தை கொச்சைப்படுத்தவே இல்லையே சார். அக்கருத்து மனதை வேதனைப்படுத்தியது. ஒரு வேளை எனக்கு அறிவின்மையால் சரியாக வெளிப்படுத்த தெரியாமல் எழுதியுள்ளேன் போலும் என்று நினைத்துச் சமாதானப்படுத்திக் கொண்டேன். உங்கள் அறிவு அனுபவத்திற்கு நிகராக எனக்குச் சொல்லவோ எழுதவோ தெரியவில்லைதான்.

      க்ளோஸ்ட் எக்கானமி நல்லதே இல்லை என்பதும் தெரியும் சார். ஆனால் ப்ரைமரி செக்டரில் இத்தனை தாராளமயமாக்கல் என்பது நல்லதே இல்லை அதுவும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை உள்ளே விடுவது நல்லதே இல்லை சார். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிற்கும். ஏன் சார் அமெரிக்காவிற்கு நீங்கள் எத்தனையோ முறை பயணித்திருக்கிறீர்கள். இங்கிருந்து கொண்டு செல்லும் பொருட்களில் விதைகள், கறிவேப்பிலை செடி போன்ற பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் இங்கு? மருத்துவ உலகிலும் அதுதான் நடக்கிறது. உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த எழுச்சி மிகவும் அவசியம் விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்பதே. அதைத்தான் எனது முந்தைய இரு கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருந்தேன்.

      நான் இங்கு பொருளாதாரத்தைப் பற்றித்தான் பேசியிருக்கிறேன். கோக், பெப்சி ஒழிக்க வேண்டும் என்பதெல்லாம் இப்போது எழுந்ததல்ல சார் எனக்குத் தெரிந்து என் மகன் 3 ஆம் வகுப்பு அதாவது 25 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அவரது ஆர்ட் ஆஃப் லிவ்விங்க் வகுப்பில் சொல்லத் தொடங்கியது. மகன் அப்போதிலிருந்தே இவற்றை எல்லாம் ஒதுக்கத் தொடங்கியவன். அது போன்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரும் இதைத்தான் சொல்லி வந்தார். பல வருடங்களாக இதற்கு அவ்வப்போது போராட்டங்கள் எழத்தான் செய்தது. திருனெல்வேலியில் தாமிரபரணி கரையில் கோக் கம்பெனி நுழைவதை மக்கள் போராடி த்டுத்தனர். ப்ரைமரி செக்டாரில் இத்தனை தாராளமயமாக்கல் எந்த ஒரு நாட்டிற்கும் நல்லதல்ல என்பது என் தாழ்மையான கருத்து. குடிசைத் தொழில்கள் மேலேழும்பி வர வேண்டும் என்பதையும் நான் உறுதியாகச் சொல்லுவேன் சார். ஆனால் எழுச்சியை நான் கொச்சைபடுத்தவே இல்லை சார். அவர்களும் நாம் எழுதுபவற்றைக் கூர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே நாம் எழுதுபவை அவர்களைச் சிந்திக்க வைக்குமே என்றுதான் அவர்கள் குரல் எழுப்பினாலும் அதைப் பின்பற்றுவார்களா முடியுமா என்பதைச் சொல்லியிருந்தேன். இன்னும் எழுதலாம் பதிவாகிவிடுமோ என்பதால் எழுத வில்லை...

      மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு.

      நீக்கு
    2. செல்லப்பா சார் //இளைஞர்களின் போராட்டத்தை அன்புகூர்ந்து கொச்சைப்படுத்தவேண்டாம்// இப்படிச் சொல்லி என்னை வயதானவள் என்று காட்டிக் கொடுத்துவிட்டீர்களே!!! ..நானும் இளைஞிதான் சார்!! ஹிஹிஹிஹிஹ்

      நீக்கு
  20. இந்த முறை நான் ஏனோ குடியரசு தின வாழ்த்தும் பதியலை... பிறரின் பதிவுக்கும் கருத்திடலை....

    நாட்டின் மீதான கோபமில்லை... அரசின் மீதான் கோபமே...

    சோறு கொடுத்தான் என்பதற்காக அந்த நடுக்குப்பத்து மக்களை... சை....

    ரொம்ப வலி... இதில் என்ன குடியரசு வேண்டிக்கிடக்கு என்ற மனநிலை....
    நல்ல பகிர்வு கீதா மேடம்.

    பதிலளிநீக்கு
  21. இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்,கடலை மிட்டாயுடன்,,/

    பதிலளிநீக்கு