ஞாயிறு, 29 ஜனவரி, 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 5 - தெய்வத்திண்டெ ஸ்வந்தம் நாட்டினிலே!!

தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும் - ரிதம் படப் பாடல் நதியே நதியே - கவிஞர் வைரமுத்து
வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு - ரிதம் படப் பாடல் நதியே நதியே - கவிஞர் வைரமுத்து
நாங்கள் பிஞ்சில் பழுத்தவர்கள் அல்லர்
 உன்னை மறைத்துக் கொண்டாலும் நாங்கள் கண்டு விடுவோமே
"கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே இந்த வேரில் பழுத்த பலா" (பாரதிதாசன்), "வேரோடு பலாக்கனி பழுத்துத் தொங்கும் வெள்ளாடு அதன் மீது முதுகு தேய்க்கும்" (காசி ஆனந்தன்)
பூவே செம்பூவே என் வாசல் உன் பூங்காவனம் - கவிஞர் வாலி

இயற்கை எனும் இந்த இளைய கன்னி இல்லாமல் வாழ்ந்திட இயலுமோ
போகும் பாதை தூரமில்லை - (பாடல் - தமிழச்சி தங்க பாண்டியன்)
மேகம் கருக்குது மழை வர பாக்குது வீசுது தென்றல் காத்து - (பஞ்சு அருணாச்சலம்)
மழை வருது மழை வருது குடை கொண்டுவா - (புலமைப் பித்தன்)
என்னை உண்ணுங்கள் உங்கள் நரம்புகள் வலுவடையும்
என் பெயர்தான் ஜாதிக்காய்...தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிர நோய் ஓது சுவா சங்காசம் உட்கிரணி-வேதோ டிலக்காய் வரும் பிணி போம் ஏற்ற மயல் பித்தங் குலக்கா யருந்துவர்க்குக் கூறு - பழம் பெரும் பாடல்
நாங்கள் ரெடி! தோட்டத்திற்குச் செல்வதற்கு
நடந்தால் நதி, வீழ்ந்தால் அருவி
என்னுள் மருதாணி வைத்தது யார்!!

பூவ பூவ பூவ பூவ பூவே(கவிஞர் பழனிபாரதி) - ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்துக் குலுங்குகிறாய்


வானுயர ...எங்கள் உயரம் உங்கள் கோன் உயர்வாரா?!



வெள்ளை ராணிகள்

என்னைப் போல் எல்லோரும் எப்போதும் இருங்கள் - வாடா மல்லியாய்
உன் அழகை வர்ணித்திட முடியுமோ?! வார்த்தைகள் இல்லையே! நான் கவிஞனும் இல்லை
விண்ணிலிருந்து மண்ணிற்கு வரும் லயம் தவறா தாளத்துடன் மழை எனும் இசை
மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு...(கவிஞர் வைரமுத்து)

---------கீதா
(கேரளத்தில் பயணித்த போது எடுத்த படங்கள். ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!தொடரும்.. மை க்ளிக்ஸ்)




57 கருத்துகள்:

  1. வாவ் படங்களும் அதனுடன் கலகலக்கும் கவிதைவரிகளுமாக ரசிக்க சிந்திக்க வைக்கும் பதிவு.

    முதல் படம் பார்த்து விட்டு நீர்ச்சேகரிப்பு பற்றிய பதிவோ என தொடர்ந்தால்... அடுத்து வந்த படமும் வரிகளும் அசத்தலாய்... அடுத்து படத்துடன் எந்த வசனம் அல்லது பாடல் கோர்த்திருப்பீர்கள் எனும் ஆர்வம் வந்தது. சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா நிஷா வாங்க வாங்க...வெகுநாள் கழித்து உங்களைப் பார்ப்பதற்கு...முதல் இரு படங்களின் வரிகள் நதியே நதியே நீயும் பெண்தானே ரிதம் படல் பாடலிலிருந்து...ஓ அதைச் சொல்லியிருக்க வேண்டும் இல்லையா....இனி அப்படிக் கோர்க்கும் போது சொல்லி விடுகிறேன்..ஆம் அதுதானே மரியாதை இல்லையா....

      மிக்க நன்றி நிஷா கருத்திற்கு...

      நீக்கு
  2. மழையையும், இயற்கை அழகையும் ரசிக்காமல் இருக்க முடியுமா? அதுவும் காய்ந்து போன தமிழகத்தில் இருப்பவர்கள்? எல்லாப் படங்களும் அழகு. போலவே அதற்குத் தரப்பட்டிருக்கும் வரிகளும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கு. ஒரு சில வரிகள் திரைப்படப் பாடல் வரிகள்...

      நீக்கு
    2. ஆமா ஸ்ரீராம் தமிழகம் காய்ந்துதான் போயிருக்கிறது. இம்முறை மழை இல்லாததால் இப்போதே தண்ணீர் பிரச்சினை தொடங்கிவிட்டதே! விளைச்சலும் இல்லை...அதனால் நான் ஒவ்வொரு முறை கேரளம் அதுவும் மழைக்காலத்தில் செல்லும் போது ரசிப்பதுண்டு. அதுவும் மலைப்பகுதியில் மழைக்காலத்தில் அது அத்தனை அருமையாக இருக்கும்...மட்டுமல்லஅங்கு நகரங்களில் வசிப்பவர்கள் கூட வீட்டில் தோட்டங்கள் இல்லாமல் இருப்பவர்கள் குறைவுதான்....எனவே பச்சைக்குக் குறைவு இல்லை அதுவும் திருவனந்தபுரம் கடந்தாலே பச்சைதான். இப்போது அங்கும் நகரங்களில் குடியிருப்புகள் வரத் தொடங்கிவிட்டது. ஹைவேஸ் போட்டாச்சு.. எர்ணாகுளத்திற்கு அப்புறம் உள்ள வட கேரளம் இன்னும் குடியிருப்புகளுக்கு ஆளாகவில்லை...மலப்பாங்கு என்பதால் அதுவும் துளசி இருக்கும் பகுதி எல்லாம் அழகோ அழகு!! ஊட்டியைத் தொட்டடுத்து...

      நீக்கு
  3. God's own country என சும்மாவா சொன்னார்கள்.,.. மிகவும் அழகிய படங்கள்... வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கும் வருகைக்கும்...தங்கள் படங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவை உற்சாகப்படுத்தி ஒரு உத்வேகம்அ, ஊக்கம் அளிக்கும் என்பதற்காகவும் உங்களுக்குப் பல நன்றிகள் ஜி!

      நீக்கு
    2. வெங்கட்ஜி உங்கள் பயணத்தில் கேரளத்தின் வடக்குப் பகுதியைச் சேர்த்துக் கொள்ளூங்கள் துளசியின் வீட்டில் தங்கிக் கொண்டு அவர் இருக்கும் இடத்தைச் சுற்றியே நிறைய இடங்கள் இருக்கின்றன சுற்றிப் பார்ப்பதற்கு...

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி நண்டு@ நொரண்டு, ராஜசேகரன் சகோ ரசித்தமைக்கு.

      நீக்கு
  5. ஆகா...!

    வாடா மல்லி மிகவும் கவர்ந்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாடாமல்லி கற்றுத் தரும் பாடம் நல்லாருக்குல்ல டிடி?!!!இயற்கையில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடத்தைக் கற்றுத் தருகிறது!! மிக்க நன்றி டிடி தங்களின் கருத்திற்கும் ரசனைக்கும்

      நீக்கு
  6. படங்களும், வசனங்களும் என்ன பொருத்தமா ஆஹா..... இந்தப் பொருத்தம் ஸூப்பர்

    தெய்வத்திண்டெ ஸ்வந்தம் நாட்டினிலே!!
    அப்ப தமிழ்நாடு யாருக்கு சொந்தம் ?

    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி முதலில் நன்றி ரசித்தமைக்கு!!

      ஹஹஹஹ் உங்கள் கேள்வி மிகவும் சரியே எல்லா ஊர்களும் இயற்கை எனும் நம்மை மீறிய அந்தச் சக்திக்கே சொந்தம்! அவங்க அவங்க ஊர்ல இப்படி எல்லா இடத்துலயும் போர்டு வைத்திருப்பதால் எனக்கும் தொற்றிக் கொண்டுவிட்டதோ...இருந்தாலும் நாம் ஒன்றை பாராட்டியே தீர வேண்டும்...அவர்கள் ஊரில் இன்னும் ஃப்ளாட் கல்சர் படையெடுக்கவில்லை. எல்லா வீடுகளும் சிறிய வீடாக இருந்தாலும் சிறிய தோட்டத்துடந்தான் இருக்கிறார்கள். இங்கு எங்கள் ஃப்ளாட்டில் கீழே இருக்கும் மலையாள குடும்பங்கள் இருவரும் தங்கள் வீட்டின் பின்னால் மிகச் சிறிய நடைபாதையில் கிடைக்கும் வீணாகும் பாத்திரங்கள், பக்கெட்டுகள், ஏன் சிரட்டைகளில் கூட தொட்டி தொட்டியாக பல பூக்கள், கீரைகள், காய்கள் என்று வைத்திருப்பது பார்க்க எவ்வளவு ரம்மியமாக இருக்கிறது தெரியுமா ஜி. அவர்களூரில் குப்பையை வெளியில் எரிவதில்லை. கொஞ்சம் க்ளோஸ்ட் சமூகமாக இருந்தாலும் அதுவும் சரியோ என்று சில சமயங்களில் தோன்றுகிறது. நம்மூரில் என்ன செய்கிறார்கள் கொஞ்சம் நாம் யோசிக்க வேண்டும்...உங்களுக்கே தெரியும் நீங்கள் பதிவு பதிவாக எழுதுவதும் அதைத்தானே ஜி....

      பொருத்திருங்கள் நம் தாயகமும் வரும்....

      மிக்க நன்றி ஜி

      நீக்கு
  7. சகோ துளசி & கீதா,

    மூன்றாவது கண் சூப்ப்பரா வேல செய்ய ஆரம்பிச்சாச்சுபோல :) பசுமையான இடங்கள், படத்திற்கேற்றார்போல் பாடல்கள் தெரிவு என எல்லாமும் சூப்பர்.

    முத்தின பலாவைத் திருகி விட்டால் சீக்கிரமே பழுத்துவிடும், பழுத்ததும் மறக்காம எனக்கு ஒன்னு அனுப்பிவிடுங்க. வாடாமல்லியைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆச்சு !

    இப்போலாம் ப்ளாகை ஓபன் பண்ணியதுமே கருத்துரைப் பெட்டியும் கூடவே வந்துவிடுகிறதே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி ஆமாம் முன்றாவது கண் சிலசமயம் இந்த கீதாவைப் போல அவ்வப்போது மக்கர் செய்யும்....ஆம் பலா தகவல் எங்கள் வீட்டில் முன்பு நாகர்கோவிலில் இருந்த போது அப்படித்தான் செய்வதுண்டு...இப்ப சென்னைல..அதனால பீஸ்தான் அனுப்பிவிடறோம். துளசி வீட்டில் மரமே உண்டு மிக மிக இனிப்பாக இருக்கும். இம்முறை காய்க்கும் போது அனுப்பிவிடுகிறோம்...!!!

      ஆ!!! ப்ளாக் ஓபன் ஆகுதுல!!!! டிடி ரொம்ப தாங்கஸ்....நான் வேண்டாததை விலக்க முயற்சி செய்து முதலில் ஃபெயிலாகி டிடி என்றேன்...உடனே எல்லாம் நீங்கி விட்டது அவரின் உதவியால்....ஸோ க்ரெடிட் கோஸ் டு டிடி....மிக்க நன்றி...சித்ரா...

      நீக்கு
  8. ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன..
    படங்களும் பாடல்களும் அருமை.. அருமை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு சகோ! கருத்திற்கும் வருகைக்கும் ரசித்தமைக்கும்

      நீக்கு
  9. இந்த பலா கோரிக்கையற்று கிடக்கவில்லை என்பதே உண்மை !பூக்கள் சிரிப்பதைப் பார்த்தால் ,மனதுக்குள் மகிழ்ச்சி உண்டாகிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான் ஜி இங்கு தான் பலா அரிது, பண்ருட்டி, கடலூர், நெய்வேலி மற்றும் கேரளத்தில் கொட்டிக் கிடக்கும்..கோரிக்கையற்று...அதைத்தான் பாரதிதாசன் புதுச்சேரி என்பதால் எழுதியிருப்பாரோ? ஆம் ஜி பூக்கள் எப்போதுமே அழகுதான் ..மகிழ்ச்சிதான்..காட்டுப்பூ கூட அழகுதான் இல்லையா..மிக்க நன்றி ஜி கருத்திற்கு

      நீக்கு
  10. பதில்கள்
    1. மிக்க நன்றி நாகேந்திரபாரதி சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  11. படங்கள் எல்லாம் வெகு அழகு.
    இயற்கையை ரசித்துக் கொண்டே இருக்கலாம். கண்கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோமதிக்கா ஆமாம் இயற்கையை ரசித்துக் கொண்டே இருக்கலாம் தான்...மட்டுமல்ல இந்தக் கண்கள் பல வருடங்கள் நன்றாக இருக்கணும் என்றும் பிரார்த்திப்பதுண்டு. கண்க்கள் இருந்தாலும் மூளை வேலை செய்யணுமே அதற்கும் பிரார்த்தனை உண்டு...வேறு எதுவும் வேண்டாம் இவ்வுலகை இறைவனின் படைப்பை ரசிக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு...மிக்க நன்றி கோமதிக்கா.

      நீக்கு
  12. பேசும் படங்கள் அனத்தும் அருமை வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  13. கடவுளின் பூமி எப்போதுமே அழகுதான் உங்கள் பதிவும் படங்களும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன இம்மாதிரி பதிவிட திரை இசைப் பாடல்கள் தெரிந்திருக்க வேண்டுமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் ஊக்கத்திற்கும்

      நீக்கு
  14. அருமை அருமை! மிக அழகான படங்கள்! மிக மிக அருமையான வரிகள்! பலவும் திரைப்பாடல் வரிகள்தாமே எனவெல்லாம் சொல்லிப் பாராட்டிலிருந்து தப்பிக்கப் பார்க்க வேண்டா! கச்சிதமாக அவற்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களே, அதற்காகவே நீங்கள் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டே ஆக வேண்டும்! குறிப்பாக, "வானுயர ...எங்கள் உயரம் உங்கள் கோன் உயர்வாரா?!" படமும் அந்த வரியும் உச்சம்! (இத்தனை படங்களும் வரிகளும் இருக்கும்பொழுது அரசியல் மணம் வீசும் அந்தப் படம்தான் இவனுக்குப் பிடித்திருக்கிறதாம்! இவன் திருந்த மாட்டான் ஓய்!) படக்கலையில் நல்ல தேர்ச்சி அடைந்து வருகிறீர்கள். துறைசார் வல்லுநர்களிடமும் நிறையக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்! கண்டிப்பாக நீங்கள் இன்னும் உயரம் தொட முடியும்.

    //என்னுள் மருதாணி வைத்தது யார்!!// - எல்லாம் இந்த கீதா சகோ வேலையாகத்தான் இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இபுஞா சகா. தங்களின் பாராட்டிற்கு!! கோன் உயர்வாரா அந்த வரிகளை நானும் அரசியல் நெடியுடன் தான் கொடுத்தேன் சகா..நீங்களும் அதைப் பிடித்துவிட்டீர்கள்!!!! எனவே நானும் திருந்த மாட்டேன் ஹஹஹ...

      படக் கலையில் தேர்ச்சி பற்றி நீங்கள் பாராட்டியிருப்பதற்கு நன்றி. இன்னும் நிறைய கற்க வேண்டும். இப்போது எடுப்பவை எல்லாமே நான் ஒரு சில யோசித்து எடுத்தாலும் சில நன்றாக வருகின்றது சில வருவதில்லை. நான் தற்போது கூகுளில்தான் பார்த்துக் கற்கிறேன். ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் வல்லுநர்களிடம் கற்க வேண்டும்! முயற்சி செய்கிறேன் சகா!
      மிக்க நன்றி தாங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கு.

      எல்லாம் இந்த கீதா சகோ வேலையாகத்தான் இருக்கும்!//ஹஹஹஹ்

      நீக்கு
  15. அழகான படங்கள் ..பொருத்தமான வரிகள் . கேரளா மழை காலத்தில் சொர்க்கம் , மற்ற காலங்களில் சொர்க்கத்தின் வாசல் படி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அது ஒரு கனாக் காலம் நண்பரே! முதல் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  16. படங்கள் எல்லாம் அழகு! அதிலும் அந்தச் செம்பருத்திக்கு நடுவில் வண்ணக்கோலமும் அந்தப் பூவின் விளிம்புகளில் கட்டி இருக்கும் பார்டரும்! இறைவன் எவ்வளவு சிறந்த கலைஞன் என்பதைக் காட்டுகிறது. இங்கேயும் தென் தமிழ் நாட்டுக்குச் சென்றால் அழகிய காட்சிகள் காணக்கிடைக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையோர ஊர்கள் அனைத்துமே கண்ணுக்கும், மனதுக்கும் இனிய காட்சிகளைக் கொண்டவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா...எங்கள் ஊரில் நல்ல இயற்கைக் காட்சிகள் மலர்கள் எல்லாம் உண்டு. எங்கள் ஊர்ப்பகுதி தென் தமிழ்நாடுதானே! இனியும் வரும்...மேற்குத் தொடர்ச்சி மலையின் இந்தப் பகுதி தமிழ்நாட்டுப் பகுதி அத்தனை அருமையாக இருக்கும். அப்போது என்னிடம் கேமரா இல்லாததால் எடுக்க முடியவில்லை..அக்கா...அதுவும் ஒவ்வொன்றாக வரும்...மிக்க நன்றி கீதாக்கா

      நீக்கு
  17. ஆஹா !! எத்தனை அழகு ..எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா மலர்களிலும் இயற்கையிலும்னு பாடத்தோன்றியது உங்கள் பதிவை பார்த்ததும் ..
    படங்கள் அத்தனை அழகு அதோடு ரசித்து பாடல்களையும் வரிகளையும் முணுமுணுக்கவைத்துவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா மலர்களிலும் இயற்கையிலும்னு பாடத்தோன்றியது // யெஸ் ஏஞ்சல் நானும் இதை எப்போதும் பாடுவதுண்டு மனதினில்...அதுவும் ஒவ்வொரு முறையும் ..மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு

      நீக்கு
  18. கமெண்ட் போட்டேன் என்டர் அழுத்தினேனா தெரியல ..மூன்றாவது கண் வழியே நீங்கள் பார்த்தவை அனைத்தையும் நானும் ரசித்தேன் ..
    கொள்ளை அழகு ..என்ன விலை அழகேன்னு பாட தோன்றியது ..
    ஒவ்வொரு படமும் அதற்கான பாடல் வரிகளும் முணுமுணுக்க வைத்தன :)என்ன நம்ம பாட்டை கேட்டு ஜெசி முறைக்குது குரல் வளம் அப்படி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சல் உங்கள் கமென்ட் வந்துவிட்டதே!.ஹஹாஹ் ஜெசி முறைக்குது ஹஹ்ஹ தனக்குப் போட்டினு நினைக்குது போல ஏஞ்சல்..ஹிஹி ரசித்தேன் உங்க கருத்தை..

      நீக்கு
  19. அட ஒவ்வொரு படமும் தனிக்கதை சொல்லுகின்றது! பலாப்பழம் படம் நானும் இந்தாண்டு கேரளாவில் சுட்டேன் அதை விரைவில் பகிர்கின்றேன்[[

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தனிமரம்! நீங்கள் எடுத்த படத்தைப் பகிருங்கள். காண்பதற்குக் காத்திருக்கிறோம்... மிக்க நன்றி தனிமரம். ரொம்ப நாளாயிற்றே தங்கள் பதிவுகளைக் காணவில்லையே!

      நீக்கு

  20. ஒவ்வொரு படமும், வரிகளும்...ஆஹா..ஓஹோ

    அதிலும்
    என்னுள் மருதாணி வைத்தது யார்!! ..அருமை..

    இயற்கை கொட்டி கிடக்குது ...படம் எடுக்கவா பஞ்சம்..நிறைய எடுங்க ...பார்க்க நாங்க காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு தங்களின் ரசிப்பிற்கும் கருத்திற்கும். ஆம் நான் செல்லும் இடமெல்லாம் இந்தக் கேமரா அவ்வப்போது தொல்லை செய்தாலும் இயற்கையை இதில் சேமிக்க விடுவதில்லை. நீங்களும் நம்ம கட்சிதான் என்பது தெரியுமே அனு...மிக்க நன்றி

      நீக்கு
  21. ஆஹா... ஆஹா... எழில் கொஞ்சும் அற்புதமான படங்கள்... பார்த்த இடங்களின் அழகை அப்படியே படம்பிடித்தக் கரங்களுக்குப் பாராட்டுகள். கூடுதல் அழகுக்கு அழகு சேர்க்கும் வர்ணனைகள்.. செலவில்லாமல் கேரளா சென்றுவந்தேன் நானும். நன்றியும் பாராட்டுகளும் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதமதிவாணன் அக்கா. தங்கள் படங்களை விடவா! தாங்கள் பகிரும் ஒவ்வொரு படத்தையும் மிகவும் ரசிப்பதுண்டு. நீங்கள் பரிசுகள் கூட வென்றதுண்டு இல்லையா...நீங்கள், வெங்கட்ஜி எல்லோரும் ரசித்து ரசித்து மிகவும் அழகாக எடுப்பதைக் கண்டு எனக்கு மேலும் ஊக்கம் கிடைத்தது என்பதை மறுக்க இயலாது. மிகையும் அல்ல. மிக்க நன்றி அக்கா

      நீக்கு
  22. ஆஹா என்ன ஒரு அழகு... பார்க்க பார்க்க எனக்கும் ஊருக்குப் போகோணும் போல இருக்கு. செம்பூ எனப் போட்டிருக்கும் பூவை இதுவரை நான் பார்த்ததில்லை.

    அவை தென்னை மரங்களோ? பாக்கு மரங்களோ? ஊசிபோல எழும்பி நிக்குதே... பொதுவாக பாக்கு மரங்கள்தான் இப்படி மெல்லிசா இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா....செம்பூ என்றால் அதன் நிறத்தை வைத்து அப்படிக் கொடுத்தேன் அல்லாமல் இது செம்பூ அல்ல. பாக்கு மரங்கள்தான் குச்சியாக இருப்பவை....மிக்க நன்றி அதிரா...இலங்கையும் கிட்டத்தட்ட கேரளா போலத்தானே இருக்கும் !!! அழகு எழில் கொஞ்சும் ஊர்!

      நீக்கு
  23. மிகவும் ரசித்துப் பார்க்கத் தூண்டுது படங்கள்.. மலைக்கு அருகே இருக்கும் அந்த வீடு மழையில் நனைந்த ஈரத்தோடு பார்க்க அழகா இருக்குது.. என் வாயிலயே கவிதை எல்லாம் வந்திடும்போல இருக்கே:)).

    வாடா மல்லி:), நித்திய கல்யாணி அத்தனையும் எங்கட ஊர் வீட்டை நினைவுபடுத்திவிட்டதூஊஊஊஊஊஊ... ஓ ஐ ஆம் சோஓஓஓ சாட்ட்ட்ட்ட்:))... இன்னும் படங்கள் இருப்பின் போடுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசிப்பதற்கு மிக்க நன்றி அதிரா. மலைக்கு அருகே இருக்கும் வீடு போல இலங்கையிலும் பார்க்கலாமே..கவிதை ஆஹா எழுதுங்கள் அதிரா...நித்தியகல்யாணி அல்ல அதிரா அது நந்தியாவட்டை. இன்னும் படங்கள் இருக்கின்றன போடுவேன்...வந்து கொண்டே இருக்கும்...
      மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  24. ஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது.... புகைப்படங்களுக்கு ஏற்ற பாடல்களா? பாடல்களுக்கு ஏற்ற படங்களா? தங்களின் ரசனையை ரசித்தேன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு! தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வாருங்கள் ஐயா! போட்டியில் கலந்து கொள்வதற்கு தங்களுக்கு வாழ்த்துகள்!

      நீக்கு
  25. காமிரா கிடைத்துவிட்டால் போதுமே, படமாக சுட்டுத்தள்ளி விடுவீர்களே! இன்னும் மிச்சம் ஏதும் இருக்கிறதா?
    -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹாஹ் ஆமாம் சார். உண்மைதான் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகமே! இன்னும் இருக்கிறது சார். வரும்..தொடரும்...

      மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  26. பதில்கள்
    1. மிக்க நன்றி முதல் வருகைக்கும் கருத்திற்கும் திரு மொஹமத் அல்தஃப்

      நீக்கு
  27. மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ கருத்திற்கு

    பதிலளிநீக்கு