புதன், 18 ஜனவரி, 2017

விண்ணிலிருந்து வீழ்ந்த நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சி

11.01.2017 அன்றைய மாலைப் பொழுது, இந்தப் புதுவருடத்தில் எனக்கு மிகவும் இனிமையான முதல் மாலைப்பொழுது என்றால் அது மிகையல்ல. அரசியல் இல்லை. வம்பு இல்லை. கள்ளம், கபடம் இல்லை. பொறாமை இல்லை. சூதுவாது இல்லை. வெள்ளை மனம். பொய் சொல்லத் தெரியாத மனம். யாரையும் குற்றம் சொல்லத் தெரியாத மனம். எத்தனை வயதானாலும் குழந்தை உள்ளம் படைத்த நட்சத்திரக் குழந்தைகள்! நடிப்பு இல்லை. அன்பு மட்டுமே அறிந்த, அன்பிற்குக் கட்டுப்படும் குழந்தைகள். அப்படியான நட்சத்திரக் குழந்தைகளுடன் தான் எனது இனிய மாலைப்பொழுது! என் மாலைப் பொழுதை இனிதாக்கிய அந்தச் சிறப்பு நட்சத்திரக் குழந்தைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்.

எல்லா அறிவுத் திறனும் உள்ள குழந்தைகளைப் பெற்றவர்கள், தங்கள் குழந்தைகள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை என்றாலும் குழந்தைகளைத் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப ஆட வேண்டும் என்றும், தங்கள் குழந்தைகளின் திறனை அறியாமல், உள்வாங்காமல் அவர்கள் என்னவாக வேண்டும் என்ற தங்கள் குறிக்கோளை அவர்கள் மீது திணித்து மூச்சுத் திணற வைத்து குழந்தைகளையும் தங்களையும் மன உளைச்சல்களுக்கு உட்படுத்தும் நிகழ்வுகள் எல்லாம், இக்குழந்தைகளைக் காணும் போதெல்லாம் என் மனதில் நிழலாடும்.

தங்கள் குழந்தைகளைக் குறித்து, அவர்கள் சரியாகப் படிப்பது இல்லை, வெற்றி பெறுவது இல்லை, எந்தத் திறனும் இல்லை என்று எப்போதும் வருத்தத்துடன் பேசும் பெற்றோர் வகை ஒரு புறம் என்றால், ஒரே அடியாகத் தன் குழந்தையைப் போல் யாரும் அறிவு படைத்தவர் இல்லை என்ற அதீத பெருமையில் உலவும் பெற்றோர் மறுபுறம்.

இந்த நட்சத்திரக் குழந்தைகளிடம் நாம் கற்க வேண்டியவை பல. மூளைவளர்ச்சி குன்றியிருந்தாலும், அவர்களது சில செயல்கள் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது. அவர்களையும் தங்கள் தேவைகளைத் தாங்களே பார்த்துக் கொள்ளும்படி அவர்கள் பெற்றோரும், சிறப்புப் பயிற்சியாளர்களும், இதற்கான சிறப்புக் கல்விப் பயிற்சி பெற்ற ஒரு சிலரும் தன்னலம் பாராமல், சேவை மனப்பான்மையுடன் ஆற்றும் சேவையும், உழைப்பும் அளப்பற்கரியது.

பொறுமை நிறையவே வேண்டும்
  
இக்குழந்தைகள் தற்சார்பு நிலையை ஓரளவேனும் அடையும் வரை அவர்களுக்காக நேரம் நிறைய செலவிட வேண்டும். சில சமயம் வாழ்நாள் முழுவதும் கூட வேண்டிவரலாம்.

நமக்கு இப்படி ஒரு குழந்தை பிறந்துவிட்டதே என்ற வருத்தமோ, சோர்வோ இல்லாமல், அண்டை அயலார் மற்றும் இச்சமூகத்தின் பார்வை, பேச்சுக்களை ஏற்கும் மன நிலையும், தங்கள் குழந்தைகளின் குறையை ஏற்கும் மனப்பக்குவம் இருந்தால்தான் அக்குழந்தைகளின் உடன் பிறந்தவர்களிடமும், உறவினர்களிடமும், சமூகத்திலும் அவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும், அவர்களுடன் உறவாடும் மனநிலையையும் ஏற்படுத்த முடியும்.

சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்குக் கழிவிரக்கம் என்பது கூடவே கூடாது. யாரேனும் இரக்கத்துடன் பார்த்தாலும் மனக்கலக்கம் அடையாமல் அதைப் புறம்தள்ளி, இச்சமூகத்தில் சாதாரணக் குழந்தைகளைப் பெற்றவர்கள் தங்கள் குழந்தைகளுடன் எப்படி உறவாடி வருகிறார்களோ அப்படியே உறவாடி வரலாம், வர வேண்டும்.

என் மகனின் கற்றல் குறைபாட்டைச் சமாளிக்கவே நான் பல முயற்சிகள் எடுக்க வேண்டியிருந்தது. நானும் பல விமர்சனங்களை எதிர்கொண்டவள். (அது + சில தகவல்கள் தனி பதிவு) அப்படியிருக்க இக்குழந்தைகளை வளர்ப்பதற்கு எவ்வளவு பொறுமையும், மனப்பக்குவமும் வேண்டும் என்பதை நான் ஒவ்வொரு முறை சிறப்புக் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் போது நினைத்துக் கொள்வது உண்டு. 

நான் இங்கு சொல்லும் மூளை வளர்ச்சிக் குன்றிய சிறப்புக் குழந்தைகளை, இக்குழந்தைகளைப் போன்றே வளர்ப்பதற்குக் கஷ்டமான ஆனால், சற்று வித்தியாசமான, ஆட்டிசம், ஹைப்பர், செரிப்ரல் பால்சி, என்ற வகையிலான குறைபாடுகளுடன் உடைய குழந்தைகள் வகையில் சேர்க்க முடியாதென்றாலும், இவர்களிலும் மூளை வளர்ச்சியைப் பொருத்து, மேற் சொன்ன பிற வகைகளில் இருக்கும் குழந்தைகளிடம் காணப்படும் திறமைகள் போல,  தனித்துவம் மிக்க குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் பல வேறுபாடுகள் உள்ளன. படிநிலைகள் உள்ளன. திறன்களும் வேறுபடும்.  






ஸ்ரீ சக்தி கணபதி டிரஸ்ட்
ராகம் கண்டு பிடிக்கும் திறன் பெற்ற துர்கா
விஜி, சுதா புரியும் திறன் குறைவு சொன்னதைச் செய்கிறார்கள்
ரேணுராஜ், கிருஷ்ணன், புரியும் திறன் குறைவு சொன்னதைச் செய்கிறார்கள்
அனீஷ் நார்மல் போன்று தோற்றம் ஆனால் சொன்னதைச் செய்பவர்
பிரார்த்தனைப் பாடல்
சுதா பாடுகிறார்
கலை நிகழ்ச்சி
கும்மி 1
கும்மி 2
கும்மி 3
விருந்தினருடன் முழு யூனிட்



உதாரணத்திற்கு, நான் அன்று கண்ட குழந்தைகளில் துர்கா என்ற குழந்தை ராகம் கண்டுபிடிப்பதில் திறன் பெற்றவளாக இருக்கிறாள்! அவளது வீட்டுச் சூழல் அப்படி! அவள் பேசுவது நமக்குப் புரியவில்லை என்றாலும், மழலை மொழி பேசினாலும், அதற்குத் தனி அகராதி உண்டு. அவளது பெற்றோருக்கும், பயிற்சியாளர்களுக்கும் அவள் மொழி புரிகிறது. அவளுடன் சிறிது நேரம் பேசியதில் எனக்கும் அவளது மொழி புரியத் தொடங்கிவிட்டது! அன்பிற்கு மொழி வேண்டாம்தான்!

அன்று கண்ட குழந்தைகளில் ஆண்களும், பெண்களும் இருக்கிறார்கள். 4 பேர் ஓரளவிற்குத் தற்சார்புப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்; தனியே சென்று வருகிறார்கள்; ஆனால் குறிப்பிட்ட பேருந்தில், குறிப்பிட்ட நேரத்தில் என்று அவர்கள் ஒரு கணக்கு வைத்திருக்கிறார்கள் அதில் மட்டுமே செல்ல முடியும். நேரமோ, சூழ்நிலையோ மாறினால் அதற்கு ஏற்றபடி அவர்களால் அதனைச் சமாளிக்க முடியாது. எனவே, ஒரு சில சமயங்களில் பெற்றோர் துணை நின்றுதான் ஆக வேண்டும்.

சில குழந்தைகள் திறன் பெற்றிருந்தாலும் பெற்றோர் துணையின்றி எதுவும் செய்ய இயலாத நிலை. இன்னும் சிலர் பெற்றோர் துணையின்றி எதுவுமே செய்ய இயலாத நிலை. நடப்பதற்குப் பயிற்சி பெற்றிருந்தாலும், பெற்றோரின் உதவி அவ்வப்போது வேண்டித்தான் இருந்தது.

ஓரளவு புரிந்து கொள்ளும் திறன் பெற்றவர்கள் நாம் சொல்வதைப் புரிந்து கொண்டு செய்கிறார்கள். அன்று விழாவில் ஒரு சில வேலைகளுக்கு அந்த நான்கு குழந்தைகளில் மூவர் புரிந்து கொண்டு உதவினர். இரு ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை.

நான் இங்குக் குழந்தை குழந்தை என்று சொல்வதை வைத்து நீங்கள் சிறுமியர், சிறுவர் என்று நினைத்துவிடாதீர்கள்! எல்லோரும் 20 வயதிலிருந்து 40 ற்குள் உள்ள பெரிய குழந்தைகளின் யூனிட் இது.

பயிற்சி பெற்ற பெற்றோரும், சேவை மனப்பான்மையுடன் உதவுபவர்களும், இவர்களை எல்லாம் வழிநடத்தும் ஓர் ஒருங்கிணைப்பாளரும் இணைந்து வயதில் மூத்த சிறப்புக் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோரால் தொடங்கப்பட்ட ஒரு குழுமம். யூனிட் 1, யூனிட் 2 என்று ஒவ்வொரு பகுதியிலும் தொடங்கியுள்ளார்கள். அந்தந்தப் பகுதியில் இருப்பவர்கள் இது போன்ற குழந்தைகளை உடையவர்கள் இக்குழுமத்தில் இணைந்து தங்கள் குழந்தைகளுக்கு என்ன செய்ய இயலுமோ அதைச் செய்ய வைக்கலாம்.

இக்குழந்தைகள், பெற்றோர், பயிற்சியாளர்கள் உதவியுடன் செய்யும் பேப்பர் கப், பைகள், நவீன நகைகள் போன்ற கைவினைப் பொருட்களை விற்று அதில் வரும் வருமானம் இவர்களுக்கு உதவுகிறது. ஒவ்வொரு யூனிட்டிலும் அந்தக் குழந்தைகளின் திறன் பொருத்து செய்யப்படும் கைவினைப் பொருட்கள் மாறுபடும். இதில் பயிற்சி பெற்ற பெற்றோர் சிலர் திநகர் குழுமத்தில் சேவை செய்வார்கள், குழந்தைகள் அடையார் அல்லது ஆழ்வார்பேட்டை யூனிட்டில் பயிற்சி பெறுகிறார்கள்.

குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் என்னை அறியாமல் என் கண்களில் நீர்  பெருகியதைத் தடுக்க முடியவில்லை. இக்குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? என்ன தவறு செய்தார்கள்?  

இக்குழந்தைகளின் பெற்றோர் பலரும் 60 வயதைக் கடந்தவர்கள். படி ஏறுவதற்கும் கஷ்டப்படும் பெற்றோர் உள்ளனர். இப்பெற்றோருக்கு உடல் நலன் மிகவும் நலிந்தாலோ, அவர்கள் காலத்திற்குப் பிறகோ இக்குழந்தைகளின் நிலை என்ன என்று என் மனம் வேதனைப்பட்டது. உடன் பிறந்தோர் இருந்தாலும், அவர்களுக்கு இவர்களை வைத்துக்கொள்ளும் மனம் இருந்தாலும் சூழ்நிலை எப்படி இருக்குமோ? ஒரே குழந்தையாக இருந்தால் யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் அன்றைய மாலைப்பொழுதின் இனிய நினைவுகளை மட்டும் தேக்கிக் கொண்டு, அடுத்து இவர்களுடன் நேரம் செலவழிக்க எப்போது செல்லலாம் என்று யோசித்தவாறே வெளியில் வந்தேன்.

------கீதா



38 கருத்துகள்:

  1. டிடி சகோ அவர்கள் இந்த ஸ்லைட் ஷோ எப்படிச் செய்வது சைட் பாரில் எப்படி இணைப்பது என்ற தொழில்நுட்பத்தத் தனது தளத்தில் விளக்கி ஒரு பதிவு போட்டிருந்தார். அதைப் பார்த்ததும் எப்படியேனும் அதைக் கற்றுக் கொண்டு எங்கள் தளத்தில் பதிவில் இட வேண்டும் என்று அவா எழ அதை நான் முயற்சி செய்து சைட்பாரில் இணைப்பதில் வெற்றி கண்டு டிடியிடம் அதைக் காட்டி ஐயம் நீங்கிட, பின்னர் அதை எடுத்துவிட்டுப் பதிவில் இணைத்திட முயன்று முயன்று எல்லாம் சரியாகியும், பதிவில் இணைக்க முடியாமல் தவித்து, டிடி அதைச் சரியாகத்தான் இருக்கிறது என்றும் சொல்லி சில மாற்றங்கள் செய்து இதோ பதிவில் இணைத்தும் தந்துவிட்டார். எந்த நேரத்திலும் ஓடோடி வந்து உதவும், காக்கும்... மிக்க மிக்க நன்றி டிடி தங்கள் உதவிக்கு!!! அடுத்து எப்படியேனும் நானே அதனை முழுமையாகச் செய்து ஒரு பதிவு வெளியிட உறுதி எடுத்துள்ளேன் டிடி....!! பார்க்கலாம் வெற்றி கிடைக்கிறதா என்று!!

    மீண்டும் நன்றி டிடி!

    பதிலளிநீக்கு
  2. நான் தான் நன்றி சொல்ல வேண்டும்... முயற்சித்து வெற்றியும் பெற்று உள்ளீர்கள்... இந்தப் பதிவு எனது அந்த தொழிற்நுட்ப பதிவிற்கு கிடைத்த வெற்றி...

    நன்றி... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி உங்கள் உதவியால்தானே நான் கற்றுக் கொண்டது. முதலில் உங்கள் பதிவை வைத்து முயன்று வெற்றி பெற்றாலும், பதிவில் சேர்ப்பது பற்றி பல ஐயங்களைத் தீர்த்து இறுதியில் வெளியிடவும் உதவியது நீங்கள்தானே டிடி. சரி சரி ஆசிரியருக்குத் தன் மாணவி 90% செய்தாலும் மகிழ்ச்சிதானே!! அப்படி எடுத்துக் கொள்கிறேன் ஓகேயா...

      மிக்க நன்றி டிடி!!

      நீக்கு
  3. திருவேற்காடு உதவும் கரங்கள் என்னுமிடத்துக்குச் சென்றிருந்தோம் அங்கு எல்லாவித்மான வர்களுக்கும் அடைக்கலம் உண்டு ஆட்டிசமால் பாதிக்கப்பட்ட இரு பிள்ளைகளின் தாய் ஒரு பையனின் தந்தை பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன் “ஜாக்கி மணியும் பந்தையக் குதிரையும் என்று படித்துப் பாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பதிவைப் பார்க்கிறேன் சார். இந்த யூனிட் இவர்களுக்கு மட்டுமே என்று அதாவது பல பயிற்சிகள் கொடுக்கப்படும் யூனிட். மிக்க நன்றி சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
    2. அம்பர்நாத் அலும்னி மீட்ட்டில் பல கடவுளின் குழந்தைகள் பெர்ஃபார்ம் செய்தார்கள் பதிவில் அந்தபதிவில் பகிர்ந்திருந்தேன் அத்தனை பேர் முன்னிலையில் பாட்டும் டான்சும் படம் வரைதல் போன்ற பல செயல்களைச் செய்து காட்டினார்கள்

      நீக்கு
  4. இவர்களைப் பார்த்துக்கொள்ள தன்னலமில்லாத அன்பு நிறைந்த மனிதர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துதான் இறைவன் இத்தகையவர்களை பூமியில் விதைக்கிறான் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைத்தமிழன் கருத்திற்கும் வருகைக்கும். இறைவன் விதைக்கிறான் சரிதான் ஆனால், பெற்றோரின் காலத்திற்குப் பிறகு என்ற கேள்வி என்னுள் தொக்கி நின்று மனதைக் குடைந்துகொண்டுதான் இருக்கிறது.

      நீக்கு
  5. //இக்குழந்தைகளின் பெற்றோர் பலரும் 60 வயதைக் கடந்தவர்கள். படி ஏறுவதற்கும் கஷ்டப்படும் பெற்றோர் உள்ளனர். இப்பெற்றோருக்கு உடல் நலன் மிகவும் நலிந்தாலோ, அவர்கள் காலத்திற்குப் பிறகோ இக்குழந்தைகளின் நிலை என்ன என்று என் மனம் வேதனைப்பட்டது.//
    சிறந்த பதிவு. மனம் கனத்தது,குறிப்பாக மேலே குறிப்பிட்ட வரிகளை படித்த பொழுது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பானுமதிம்மா கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  6. மனதைக் கனக்கச் செய்து விட்டீர்கள்! என்னென்னவோ எண்ணங்களைக் கிளறி விட்டுவிட்டது! நல்ல பதிவு! குறிப்பிட்ட அந்த குழுமத்தின் முகவரியையும் சேர்த்திருந்தீர்களானால் இத்தகைய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்கள்தம் பெற்றோருக்கும் உதவியாக இருந்திருக்கும்.

    வில்லைக்காட்சி (slideshow) அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ! வில்லைக்காட்சி!! புதிய வார்த்தை அறிந்து கொண்டுவிட்டேன்! நன்றி!
      //என்னென்னவோ எண்ணங்களைக் கிளறி விட்டுவிட்டது!// இக்குழந்தைகள் மட்டுமல்ல, மேலும் ஒரு சில மாற்றுத் திறன் கொண்டவர்களைப் பற்றி எழுதி பாதியில் உள்ளது. ஆனால், என் மரியாதைக்கும், அன்பிற்கும், நட்பிற்கும் உரிய உதாரணமான அந்த சகோவின் அனுமதி இன்றி பகிர முடியாது என்ற காரணத்தினால் நான் பதிவிடாமல் வைத்திருக்கிறேன் சகோ.

      ஆம் கொடுக்காமல் விட்டதற்கு மன்னித்துவிடுங்கள் சகோ. இது போன்ற பல அமைப்புகள் இருக்கின்றனர். தக்கர் பாபா பள்ளியின் வளாகத்திற்குள் ஒரு குழுமம் இருக்கிறது. அவர்கள் கோட்டூர்புரத்தில் உள்ள வித்தியாசாகர் பள்ளியின் ஒரு யூனிட்டாக இயங்குகிறார்கள். அந்தக் குழுமத்தைச் சேர்ந்தவர்கள்தான் இவர்கள் குழந்தைகள் மிகவும் பெரியவர்களாகிவிட்டதால் இப்போது தனியாகப் பிரிந்து யூனிட்டுகள் பல அமைத்து இயங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதோ அவர்களது முகவரி.

      எஸ் எஸ் ஜி ட்ரஸ்ட், 332, ஸ்ரீனிவாச காந்தி நிலையம், அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018 (யூனிட்1)

      எண் 40, அலங்கார் நடராஜ் அப்பார்ட்மென்ட், நாதமுனி தெரு, தி நகர், சென்னை 17. யூனிட் 2

      834, வி பி கோயில் தெரு, தஞ்சாவூர் - 613009 யூனிட் 3

      தொடர்பு கொள்ள எண்கள்: +91 9840206008, +91 9444556087, + 91 9445219559

      மிக்க நன்றி இபுஞா சகோ கருத்திற்கும், முகவரி, தொடர்பு எண்கள் பகிராமல் விட்டதை நினைவூட்டி பகிர வைத்தமைக்கும் நன்றி சகோ.



      நீக்கு
    2. //என் மரியாதைக்கும், அன்பிற்கும், நட்பிற்கும் உரிய உதாரணமான அந்த சகோவின் அனுமதி இன்றி பகிர முடியாது என்ற காரணத்தினால் நான் பதிவிடாமல் வைத்திருக்கிறேன் சகோ// - விரைவில் அவர் உங்களுக்கு இசைவளிப்பார் என நம்புகிறேன். ஆனால் அதுவரை, இசைவளிக்கும் மற்றவர்களைப் பற்றி நீங்கள் எழுதலாமே!

      நீக்கு
    3. மிக்க நன்றி இசைவளிப்பார் என்றதும் மிகுந்த மகிழ்ச்சி. ஆம் மற்றவர் ஒருவர்தான் மாற்றுத் திறனாளி. எனவே இருவரைப் பற்றியும் எழுதலாம் என்ற எண்ணம். எனவே காத்திருந்து எழுதுகிறேன்...மிக்க நன்றி

      நீக்கு
  7. ஆனந்தக் கண்ணீருடன்
    பதிவினைப் படித்தேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

      நீக்கு
  8. மனதைக் கனக்கச் செய்த பதிவு. கள்ளமில்லாமல் சிரிக்கும் இந்தக் குழந்தைகளைப் பெற்றோருக்குப் பின் காப்பாற்றுபவர் யார்? அதை நினைக்கையில் மன வேதனை அதிகம் ஆகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கீதாக்கா எனக்கும் அன்று நேரில் கண்ட போது அப்படித்தான் இருந்தது. மிக்க நன்றி அக்கா கருத்திற்கு

      நீக்கு
  9. ஊக்கம் தரும் பதிவை ரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
  10. வாசித்து முடித்ததும் மனதை நெகிழ்த்தியது கீதா ..எங்க மகள் கடந்த வருடம் work எக்ஸ்பிரியன்ஸுக்கு தேர்ந்தெடுத்த இடம் ..இந்த நட்சத்திரங்கள் ஒன்றாக குவிந்த ஸ்பெஷல் நீட்ஸ் பள்ளியை .இரு வாரங்கள் வேலை செய்தாள் ..
    ஒவ்வொருநாளும் அவர்கள் புராணம்தாம் ..அம்மா மத்யூவுக்கு யோகர்ட் நானேதான் ஊட்டினேன் .அவனால் சாப்பிட முடியாது சலீம் நடக்க மாட்டான் வீல்சேர்த்தான் இப்படி ஒவ்வொருவர் பற்றி சொல்லி அழுவாள் ....நமக்கே கண்ணீர் வரும்போது 15 1/2 வயதில் அவளுக்கு எவ்வளவு கஷ்டமாயிருந்திருக்கும் ..

    இந்த நட்சத்திரங்களுக்கு நிறைய ஸ்பெஷல் டாலண்ட்ஸ் இருக்கு அவற்றை சரியா கண்டுபிடிக்க வேண்டும் பெற்றோர் ஆசிரியரும் ..இங்கே இவர்களுக்கு guide தெரப்பி dogs மற்றும் ஒரு carer வசதி அரசாங்கம் செய்து தரும் .. இங்குள்ள அரசு நன்கு கவனிக்கும் இந்த ஸ்பெஷல் விண்மீன்களை..
    இந்த மாதிரி விழாக்களுக்கு செல்வதே மனத்துக்குசந்தோஷம் பயக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏஞ்சல் புலி 8 அடி பாய்ந்தால் குட்டி 16 என்ன 32 அடியே பாயும் என்பதற்குச் சிறந்த உதாரணம் நீங்களும் உங்கள் மகளும்...மிகவும் மகிழ்வாக இருக்கிறது ஷரன் பற்றி கேட்கும் போது. நல்ல மனித நேயமும் அன்பும் உள்ளமும் கொண்ட நல்ல பெண் உருவாகிவருவதை அறியும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! பெருமையாகவும் இருக்கிறது. இங்கு பொதுப்பள்ளிகள் என்று இல்லை. மேலை நாட்டு அரசு போல இங்கும் அரசு நல்லது செய்தால் நல்லது..மிக்க நன்றி ஏஞ்சல் தாமதமாகப் பதிலளிக்கிறேன்

      நீக்கு
  11. எங்கள் ஆலயத்தில் சில வருடங்கள் முன்பு இந்த ஸ்பெஷல் நட்சத்திரங்கள் நான்கைந்து பேரை தொடர்ந்து அவர்களின் கேரர்ஸ் சண்டே சர்விசுக்கு அழைத்து வருவாங்க ..பிரசங்கம் முடிந்ததும் அனைவரையும்போல peace தருவாங்க இவங்களும் ..பிறகு சில காலம் வரலை இரண்டு வருஷம் கழித்து ஒருநாள் என் கணவர் காரிலிருந்து இறங்கி பார்க்கிங் டிக்கட் போட போனார் பக்கத்து வேனிலிருந்து ஆலயத்துக்கு முன்பு வந்த ஒரு நட்சத்திரம் வேகமா வந்து கணவரை கை குலுக்கியிருக்கு ,,கன்னத்தை தடவி அன்பை காட்டியிருக்கிறது ..இவருக்கு ஆச்சர்யம் ..எப்படி நினைவு வைச்சிருக்காங்க என்று ..வியக்க வைக்கும் விண்மீன்கள் தான் இவர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சலின் அவங்க ரொம்பவே அன்பா இருப்பாங்க...அவங்களுடைய நினைவுத்திறன் பல சமயங்கள்ல நம்மள ரொம்ப ஆச்சரியப்படவைக்கும்...மிக்க நன்றி அழகான உணர்வுபூர்வமான அனுபவத்தை இங்குப் பகிர்ந்தமைக்கு..

      நீக்கு
  12. சகோ துளசி & கீதா,

    கள்ளங்கபடமற்ற சிரிப்பு. மனம் கனக்கிறது. நம் ஊரைவிட இங்கு இவர்களை நிறையப் பார்க்கலாம். அப்பா & அம்மாவுக்குப் பிறகு யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணம்தான் தோன்றும்.

    ஸ்லைட் ஷோ பார்த்ததும் டிடி ன் பதிவுதான் நினைவுக்கு வந்தது. ஆமாம் கீதா, விளக்கவும், உதவவும் ஒரு சிலரால்தான் முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சித்ரா இவர்களைப் பார்க்கும் போது எனக்கு அந்த எண்ணம்தான் தோன்றும்...டிடி அவர்கள்தானே கற்றுக் கொடுத்து மீண்டும் இங்கு அதை இணைக்க உதவியது!!! மிக்க நன்றி சித்ரா...

      நீக்கு
  13. இவ்வாறான ஒரு உலகம் இருக்கிறது என்பதை நம்மில் பலர் அறியாமல் இருக்கிறோம் என்பதே வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா ஆம் பலரும் இவ்வுலகத்தை அறிந்திருக்கவில்லை...அறிந்தாலும் புரிந்து கொள்ளவும் இயலாமல் பலர் இருப்பது வேதனைதான் ஐயா மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  14. கடவுளின் குழந்தைகளின் கலைநிகழ்ச்சி விவரிப்பு சிறப்பு! ஸ்லைட் ஷோ இணைப்பும் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
  15. மனதைத் தொட்ட பதிவு.....

    பாராட்டுகள் உங்களுக்கும் நிகழ்வில் பங்குபெற்ற குழந்தைகளுக்கும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி! ஆம் நேரில் கண்ட போது மனம் மகிழ்ந்தாலும் மறுபுறம் என்னவோ செய்தது. மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  16. புதிய முறையில் படங்களைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்று.

    தாரே ஜமீன் பர்! ஆமாம்... இவர்கள் கடவுளின் குழந்தைகள். மனம் கனக்கச்செய்யும் இவர்களின் இருப்பு எங்கள் உறவு / நட்பு இல்லங்களிலும் உண்டு. இவர்களைப் பெற்றவர்களின் காலத்துக்குப் பிறகு இவர்களை கவனிப்பார் யார்? நான் கண்ட இப்படிப்பட்ட ஒருவரின் உண்மைச் சம்பவத்தை ;வெங்கிட்டு' என்கிற தலைப்பில் கதையாக்கினேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய முறையில் படங்களுக்குக் காரணம் டிடி!!!

      தாரே சமீன் பர் குழந்தைகள் கூட சரி செய்துவிடலாம் ஸ்ரீராம் கொஞ்சம் நாம் முனைந்தால். இது போன்ற மனவளர்ச்சி குன்றியவர்களைக் கவனித்துப் பயிற்சி அளிப்பது என்பது கொஞ்சம் கஷ்டம்தான். என் உறவிலும் நிறைய உண்டு. என் மகன் தாரே சமீன் பர் கேஸ் நல்ல காலம் டிகிரி கம்மியாக இருந்ததால் சரி செய்ய முடிந்தது என்றாலும் இப்போதும் ஒரு சில விஷயங்களில் அவனைப் புரிந்து கொள்ள முடியாதுதான்...

      மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கு...சரி உங்களிடம் அந்த லிங்க் கேட்டு வாசிக்க வேண்டும்

      நீக்கு
  17. இனம் தெரியாத வெதனை!மனதில்

    பதிலளிநீக்கு