சனி, 23 ஏப்ரல், 2016

பாஹே அப்பாவின் பாதங்களில் வணக்கம்

எங்கள் ப்ளாக் நம் நண்பர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையும், எழுத்தாளருமான திரு ஹேமாபாலசுப்பிரமணியம் – பாஹே அவர்களின் மறைவு மனதைச் சங்கடப்படுத்தியது. தொடர்ந்து மனதை வேதனைப்படுத்தும் நிகழ்வுகள்.

நண்பர் ஸ்ரீராமின் வீட்டிற்கு கீதா சென்றிருந்த போது ஸ்ரீராம் கீதாவுக்கு, பாஹேவின் “தூறல்கள்” புத்தகத்தைக் கொடுக்க அந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கம் பல நாட்களுக்கு இருந்தது என்றால் அது மிகையல்ல. நறுக்குத் தெரித்தார் போன்ற சுருக், பளிச் என்ற வார்த்தைகளில் யதார்த்தக் கருத்துகள். தூறல்கள் பல நெத்திப் பொட்டில் பொளேர் என்று அறையும் அளவிற்கு வலிமையான வார்த்தைகள். எங்கள் தளத்திலும் பதிந்திருந்தோம்.

நாங்களும் அவரை அப்பா என்றே சொல்ல ஆரம்பித்தோம். அந்த அளவிற்கு மனதில் பதிந்திருந்தார்/பதிந்திருக்கிறார். பாஹே அப்பாவைப் பற்றிய ஸ்ரீராமின் பதிவுகளையும் நாங்கள் தேடித் தேடி வாசித்தோம்.

சமீபத்தில் அவருக்கு உடல் நலக் குறைவு என்று ஸ்ரீராம் சொல்லியிருந்தார். அல்சிமர் வேறு பாஹே அப்பாவிற்கு.

அதைக் கேட்டதுமே பல நாட்களாக அப்பாவைப் பார்த்துவிட்டு வர வேண்டும், ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த எண்ணம் வலுவடைந்தது. ஸ்ரீராமும் நான் மதுரைக்குச் செல்வதாக இருந்தால் சொல்லச் சொல்லியிருந்தார். ஆனால் வீட்டின் நிகழ்வுகள் எனது பயணத்திற்குத் தடை போட்டுக் கொண்டே இருந்தது. இப்போது, அப்பாவைப் பார்க்க முடியாமல் போனதே என்று மனதும் தவிக்கின்றது.

பாஹே அப்பாவின் கதையையும் கூட ஸ்ரீராம் பதிந்திருந்தார். பலரின் மனதை மிகவும் ஆழமாகத் தொட்டுப் பாதித்த கதை அது.

மனைவியை நேசிக்கும் ஆண்களின் மத்தியில் இவர் தனித்துவமாய், உமையோர்பாகனாய், மனைவியின் மீது கொண்ட மட்டற்ற அன்பினால், மனைவியின் மறைவிற்குப் பின் மனைவி ஹேமலதா தன்னுள் கலந்து இருப்பதாக, மனைவிக்கு முன்னிடம் கொடுத்துத் தன் பெயரை ஹேமலதா பாலசுப்ரமணியம் என்று இட்டுக் கொண்டவர்.  தூறல்கள் புத்தகத்தையும்

என்னில் தானாக ஒன்றித்
தானே நானாக
இறுதி வரை இணைந்தும்
இன்றுள்ள நானாக என்னை
உருவாக்கி வளர்த்தலில்
பரிவு, பாசத்துடன்
முதற் பங்கேற்றும்.........

என்று தன் மனைவிக்கே படையல் என்று சொல்லி, அவர்களின் திருவடித் தாமைரைக்கு சமர்ப்பித்தார்.  அந்தத் தவித்த மனது இப்போது தனது ஒரு பாகமாகிய மனைவியுடன் சேர்ந்திட பயணம் செய்கிறது.


     னைவியுடன் சேர்ந்திட அப்பாவின் பயணமோ

இதோ இப்போது பாஹே அப்பாவின் திருவடித் தாமரைகளுக்கு எங்கள் வணக்கங்கள், இந்தப் பதிவையும், அவரது புத்தகமாகிய “தூறல்கள்” பற்றிய எங்கள் பதிவையும் http://thillaiakathuchronicles.blogspot.com/2015/07/THOORALGAL.html பாஹே அப்பாவிற்குச் சமர்ப்பிக்கின்றோம்.

“பாதைகள் தொடர்ந்து செல்லும் –
முடிவதில்லை;
பயணங்கள் குறுகிவிடும்-
தொடர்வதில்லை” – இது பாஹே அப்பாவின் வார்த்தைகள்.

அப்பா, உங்கள் பயணங்கள் இறுதியில் குறுகி, இப்போது நீங்கள் உடலளவில் எங்களை விட்டுப் பயணித்திருக்கலாம். ஆனால், நீங்கள் உங்களின் எழுத்துத் திறமையையும், உங்கள் எழுத்துகளையும், உங்கள் மகன் ஸ்ரீராமிடம் விட்டுச் சென்றிருக்கின்றீர்கள். உங்கள் கனவாகிய நல்ல செய்திகளை அவர் சனிக்கிழமை தோறும் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றார். அவை எங்கள் எல்லோரையும் வழிநடத்தி உங்கள் எழுத்துப் பயணத்தில் பயணம் செய்ய வைக்கும்.

ஸ்ரீராம் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஸ்ரீராமின் மனதில் மட்டுமல்ல எங்கள்/நம் மனதிலும் பாஹே அப்பா நீங்கள் நீங்காத இடம் பெற்று எப்போதும் நிறைந்திருப்பீர்கள்.

(இணையப் பிரச்சனையினால் செய்தி தாமதமாகத்தான் தெரிய வந்தது. இதை அடித்து வெளியிடுவதும் தாமதமாகிறது இணையப் பிரச்சனையினால்.

இந்தச் செய்தி கூட ப்ளாகர் டேஷ் போர்டில் சகோ கீதா சாம்பசிவம் மற்றும் கில்லர்ஜியின் தலைப்புகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டதுதான். இணையம் போய் விட்டதால் வாசிக்க இயலவில்லை. இப்போதுதான் வாசித்தோம். மிக்க நன்றி இருவருக்கும். இதோ இந்தப் பதிவையும் கூட பதிவிட முடியாமல் இணையம் பிரச்சனை செய்கிறது.)

(இரங்கல் செய்திகளுக்குத் தமிழ்மண வாக்கு அளிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்)



27 கருத்துகள்:

  1. மிகத் துயரமான செய்தி!
    அன்னாரை இழந்து வாடும் நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கும், அவரது குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த மீளாத் துயரில் இருந்து அவர்கள் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்..!

    பதிலளிநீக்கு
  2. நண்பர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் ஆன்மா இறைவனிடத்தில் சாந்தியடையட்டும் நண்பர்களுக்கு எமது இரங்கல்களை தெரிவிக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  3. ஸ்ரீ ராம் ஜி அவர்களின் தந்தை என்று தெரியாதபோதே தூறல்களை நான் வாசித்து இருக்கிறேன் ,அவரை சந்திக்க வேண்டுமென்ற என் எண்ணம் நிறைவேறாமலே போய்விட்டது (:

    பதிலளிநீக்கு
  4. மதிப்புக்குரிய ஐயா திரு பாஹே அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்..
    நண்பர் ஸ்ரீராம் அவர்களும் அவர் தம் குடும்பத்தினரும் பெருந்துயரிலிருந்து மீண்டு வரவேண்டும்.. எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக..

    பதிலளிநீக்கு
  5. சகோ.ஸ்ரீராம் மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .
    அப்பா அவர்களின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்திப்போம்

    பதிலளிநீக்கு
  6. மிகவும் சோகமான செய்தி.

    ஸ்ரீராம் மற்றும் குடும்பத்தினருக்கு என் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.

    அவரும் ஓர் எழுத்தாளர் + நூல்கள் வெளியிட்டுள்ளவர் என்ற செய்தியே சமீபத்தில் அவரின் சிறுகதையொன்று எங்கள் பிளாக்கில் வெளியிட்டதன் மூலமே எனக்குத் தெரிய வந்தது. அவரின் அந்தக்கதையைப் படித்ததனால் வருத்தம் மேலும் அதிகமாகிறது. :(

    பதிலளிநீக்கு
  7. எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்

    பதிலளிநீக்கு
  8. அறிஞர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் காலமான செய்தி கேட்டுத் துயருற்றேன்.
    அவர்களின் குடும்பத்தாருடன் துயர் பகிருகின்றோம்.

    பதிலளிநீக்கு
  9. வலையுலகுக்கு இவ்வளவு துயரா...

    அய்யா வின் ஆன்மா சாந்தி பெறட்டும்...

    பதிலளிநீக்கு
  10. ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

    பதிலளிநீக்கு
  11. ஆழ்ந்த அனுதாபங்கள்.
    ஸ்ரீராம் அவர்களின் குடும்பத்தினருக்கு என் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் .

    பதிலளிநீக்கு
  12. எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெரியவரின் ஆன்மா அமைதி அடைய இறைவனிடம் எனது பிரார்த்தனை.

    பதிலளிநீக்கு
  13. நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்.. தந்தையாரின் அன்பும் ஆசியும் தொடர்ந்து வழிநடத்தட்டும்.

    பதிலளிநீக்கு
  14. மிக உருக்கமான..உள்ளார்ந்த பதிவு..ஆழ்ந் இரங்கல்கள்...

    பதிலளிநீக்கு
  15. ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்! பதிவர் வைகறையும் இறந்துவிட்டார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன்! பதிவுலகம் இத்தகைய பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டுவர இறைவனை வேண்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
  16. வயது முதிர்ந்தவர்கள் நம்மைவிட்டுப் போவது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் உடல்நிலை சரியில்லை என்றால் அவர்கள் படும் துன்பங்கள் நம்மை மிகவும் பாதிக்கின்றன. ஸ்ரீராமிடம் இன்னும் பேசவில்லை.
    பெரியவருக்கு எனது அஞ்சலிகளும்.

    பதிலளிநீக்கு
  17. எங்களுடன் சேர்ந்து பாஹே அப்பாவிற்கு அஞ்சலி செலுத்திய அனைத்து நண்பர்கள், சகோதர சகோதரிகளுக்கும் எங்கள் பணிவான வணக்கங்கள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி நட்புகளே...

    நன்றி துளசிஜி / கீதா.

    பதிலளிநீக்கு
  19. துக்க செய்தி .இதை ஏன் நான் முன்பே பார்க்கவில்லை.

    மிக வருத்தமாக இருக்கிறது. ஸ்ரீராம் தன் அம்மாவின் மேல் வைத்திருந்த
    பிரியம் அறிவேன்.
    தந்தையின் மேல் அளவுகடந்த சோகம். இப்படி ஆகிவிட்டதே என்று.
    நீங்கள் சொல்வது போல் பெற்றோர் இணைந்திருப்பார்கள்.
    என் அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  20. “பாதைகள் தொடர்ந்து செல்லும் –
    முடிவதில்லை;
    பயணங்கள் குறுகிவிடும்-
    தொடர்வதில்லை” - ஆகா!! எவ்வளவு ஆழமான வார்த்தையாடல்! சக நண்பர் ஒருவரின் அப்பா என்பதனால் எழுதிய பதிவு என யாரும் நினைக்க முடியாதபடிச் செய்து விட்ட வரிகள்!

    ஸ்ரீராம் அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் என் கனிவார்ந்த ஆறுதல்கள்!

    பதிலளிநீக்கு
  21. ஆழ்ந்த இரங்கல்கள்! சிரிராம் குடும்பத்தார்களுக்கு கடவுள் இந்த இழப்பை தாங்கும் மனவலிமையை கொடுக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  22. அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்

    பதிலளிநீக்கு
  23. ஆறுதல் சொல்லியிருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  24. ஐயா திருமிகு. பாஹே அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  25. ம்ம்ம்ம் இதுக்கு நான் போட்ட கருத்தைக் காக்கா கொண்டு போய்விட்டது போலும்! :(

    பதிலளிநீக்கு