இயற்கையே விந்தையானதுதான். முந்தைய பதிவில்
குரங்குகள் மற்றும் சிம்பன்சீக்கள் தங்களுக்கு உடல் உபாதைகள் வரும் போது சில
இயற்கை வைத்தியங்கள் செய்து கொண்டு தங்களைக் காத்துக் கொள்கின்றன என்று
எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சி...
இந்த சிம்பன்ஜீக்கள் மழைக்காலத்தில் அதிகமான
மருத்துவத் தாவரங்களை உண்ணுகின்றன, நிமோனியா மற்றும் வேறு சில பயமுறுத்தும்
தொற்றுகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள. இது போன்ற செயல்களிலிருந்து, குரங்கினங்கள்
தங்கள் உடல்நல உபாதைகளைக் குறித்து நன்றாகவே தெரிந்து வைத்திருப்பது போலத்
தெரிகின்றது.
கொலோபஸ் குரங்கு வகை Colobus monkeys on the island of Zanzibar
அதே போன்று, ஜன்ஜிபர் தீவினைச் சேர்ந்த கொலோபஸ்
குரங்கு வகைகள், மனிதர்கள் நெருப்பு மூட்டுவதற்கு வைத்திருக்கும் கரித்துண்டுகளைத்
திருடித் தின்னுமாம். இந்தக் கரித்துண்டுகள், குரங்குகளின் உணவாகிய மாம்பழம்,
பாதாம் கொட்டை மரங்களின் இலைகளை உண்பதால் வரும் நச்சினை வெளியேற்ற உதவுகின்றதாம்.
ஆவாஷ் அருவி - எத்தியோப்பியா
பாலைவனப் பேரீச்சை மரம் - (Baboons) குரங்கு வகை
எத்தியோப்பியாவில், ஆவாஷ் அருவியின்
அருகில் பாலனைட்ஸ் எஜிப்டியாக்கா Balanites aegyptiaca எனும் ஒரு
வகை பாலைவனப் பேரீச்சம் பழம் அதிகமாகக் காணப்படுமாம். இந்த அருவியைன் கீழே வாழும்
பபூன் (Baboons) எனப்படும் மிகப் பழமையான குரங்கினம்
இந்தப் பேரீச்சம் பழத்தை உண்கின்றன. இந்தக் குரங்குகள் தண்ணீரில் இருக்கும்
நத்தைகளை உண்பதால் அந்த நத்தைகளின் உள் இருக்கும் புழுக்கள் இந்தக் குரங்குகளின்
உடலிலும் காணப்படுகின்றன. இந்தப் பேரீச்சம் பழம் அந்தப் புழுக்களை வெளியேற்ற
உதவுகின்றன.
அதே சமயம் அருவிக்கு மேலே வாழும் பபூன்ஸ்
குரங்குகள் இந்தப் பேரீச்சையை உண்பதில்லை ஏனென்றால் அவை இந்த நத்தைகளை
உண்பதில்லை.
விந்தைதான் இல்லையா! இதிலிருந்து விலங்குகள் அவை தாங்கள் வாழும் இடத்திற்கு ஏற்றாற் போல் வாழ்கின்றன என்பது தெரிகின்றது.
விந்தைதான் இல்லையா! இதிலிருந்து விலங்குகள் அவை தாங்கள் வாழும் இடத்திற்கு ஏற்றாற் போல் வாழ்கின்றன என்பது தெரிகின்றது.
இவற்றை எல்லாம் விட மிக ஆச்சரியமான ஒன்று
என்னவென்றால், ஹௌலர் இன வகைக் குரங்குகள் இயற்கை வழி குடும்பக்காட்டுப்பாட்டை
அறிந்து வைத்திருக்கின்றன என்பதே. இந்த வகைக் குரங்குகள் மத்திய, தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.
ப்ரெசீலியன் இனமான முரிக்கி - Muriqui
ப்ரேசிலில் ஹௌலர் இனப் பெண் குரங்குகள் - ப்ரெசீலியன் இனமான முரிக்கி - குழந்தை பிறந்த சில தினங்களில் ஒரு வகையான, இன்னும் பெயர் சூட்டப்படாத மரத்தின்
இலைகளைக் கணிசமாக உட்கொள்ள வேண்டித் தேடிச் சென்று உண்ணுமாம். இந்த இலைகளில் ஐசோஃப்ளமைன்ஸ்
எனப்படும் வேதியியல் காணப்படுகிறதாம். இந்த வேதியியல் பொருள் கிட்டத்தட்ட
ஈஸ்ட்ரஜன் போன்ற தன்மை உடையது என்றும், அது கரு உருவாகுவதைத் தடுப்பதாக இருக்கலாம்
என்றும் ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள்.
மத்திய அமெரிக்காவில் உள்ள காஸ்ட்டாரிக்கா
எனும் நாட்டில் இந்த ஹௌலர் வகையைச் சேர்ந்த பெண் குரங்குகள் கலவிக்கு முன்னும்
பின்னும் ஒரு வகையான மூலிகைத் தாவரத்தை உட்கொள்கின்றன. இந்த மூலிகைத் தாவரத்தை
வேறு எந்த சமயத்திலும் உட்கொள்வதில்லை.
இந்தக் காலகட்டத்தில் இந்தக் குரங்குகளின் இனப்பெருக்கம்
எதுவும் பதியப்படவில்லை என்பதால் இந்த மூலிகையைக் குரங்குகள் தங்கள் இனப்பெருக்கத்தைக்
கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்துவதாக இருக்கலாம் என்று “குரங்குகளின்
மருத்துவம்” என்ற புதிய வகையான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கும் ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றார்கள்.
இந்த ஆராய்ச்சியில் பல வியத்தகு ரகசியங்கள்
அடங்கியிருப்பதாகவும் தெரிகின்றது. மேற்
சொன்னதையும் விட ஆச்சரியமான ஒன்று என்னவென்றால், இந்த ஹௌலர் வகையினம் தங்களுக்குப்
பிறக்கப் போகும் குட்டியின் பாலினையும் முடிவு செய்கின்றனவாம்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆண் குட்டிகள்
மட்டுமே பிறக்கின்றதாம். பிற நேரங்களின்
பெண் குட்டிகள் பிறக்கின்றன என்று 20 வருட ஆராய்ச்சிகளிலிருந்து அறிய முடிகின்றது.
இந்தப் பெண் குரங்குகள் கலவிக்கு முன்னும் பின்னும் உண்ணும் ஒரு குறிப்பிட்ட அந்த
மூலிகைத் தாவரம் வஜைனாவின் ம்யூக்கஸின் அமிலத்தன்மையை பாதிக்கும் தன்மை உடையனவாக
இருக்கின்றன என்று சொல்கின்றார்கள்.
இந்த ஹௌலர் வகை எப்படி இப்படிக்
கட்டுப்படுத்துகின்றன என்பது இந்தக் குரங்குவகைகளின் கடினமான சமூக அமைப்பிலிருந்து
தெரிகின்றது. இந்த வகைக் குரங்குகளின் ஒரு குழுவின் தலைவன் பெரும்பாலும் ஆண் தான்.
அதனால், பெண் குரங்கு தனக்கு ஆண் குட்டி பிறப்பதனால், தன் குழுவில் தனது உரிமையை
நிலைநாட்டிக் கொள்கின்றாதாம்.
அதே போன்று எப்போது பெண் குரங்குகளுக்குப்
பற்றாக் குறை வருகின்றதோ அப்போது பெண் குரங்குகள் பெண் குட்டிகளைப் பெற்று, தங்கள்
பரம்பரை வரிசையில் தங்கள் நிலையை இன்னும் சற்று அதிகமாக நிலை நிறுத்திக் கொள்ளுமாம்.
ஏனென்றால் பிறக்கும் பெண் குட்டிகள் அம்மாவாகுமே! இப்படி இந்த இனம் பல வருடங்கள்
அழியாமல் இருக்க உதவுகின்றதாம்.
ஆப்பிரிக்கப் பெண் யானை
ஆப்பிரிக்கப் பெண் யானைகள் கரு உருவாகும்
சமயத்திலிருந்து நல்ல நார்ச்சத்துள்ள உணவு முறையை ஒழுங்காகக் கடைப்பிடிப்பவை, பிரசவகாலம்
நெருங்கும் சமயத்தில் அவைகளின் உணவு முறையை மாற்றிக் கொண்டு விடுகின்றனவாம். தங்கள்
உணவு கிடைக்கும் இடத்திலிருந்து, ஒரு வகையான புதர்ச் செடியின் இலைகளையும்,
பட்டையையும் உண்பதற்காக, ஏறக் குறைய 17 மைல் தூரம், கனமான உடம்புடன் நடந்து சென்று
உண்டுவிட்டு சில நாட்களில் பிரசவித்து விடுமாம்.
இந்த இலைகளும், பட்டைகளும் அவற்றின் பிரசவ
வலியைத் தூண்டி, பிரசவம் இயற்கையாக நல்ல முறையில் நடைபெற உதவுகின்றது என்பதையும்
ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். கென்யா நாட்டுப் பெண்களும் தங்கள் பிரசவ
காலத்தில் பிரசவ வலியைத் தூண்டுவதற்கு இதே இலை மற்றும் பட்டைகளைலிருந்துதான் தேநீர்
தயாரித்து அருந்துகின்றனர்.
விலங்குகள் விந்தையானவைதான், பாருங்கள் தாங்கள்
வாழும் இடத்திற்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்கின்றன!
ரகசியங்கள் தொடரும்...
......கீதா
படங்கள் இணையத்திலிருந்து
படங்கள் இணையத்திலிருந்து
(இணையப் பிரச்சனை தீரவில்லை. அதனால் பதிவுகளுக்கு வருவதும், கருத்துகள் இடுவதும் சற்றுத் தாமதமாகலாம்...)
இயற்கையின் ஏராளமான விந்தைகளில் ஒரு துளியை அறியத் தந்திருக்கிறீர்கள். அதுவே இத்தனை வியப்பாக இருக்கிறது. மேலும் பல தகவல்களை கொடுங்கள்.
பதிலளிநீக்குஇதுவரை அறியாத தகவலை தந்ததற்கு மிக்க நன்றி! இயற்கையின் விநோதத்தை எண்ணி வியக்கிறேன்.
த ம 1
இயற்கையின் வினோதங்களை மிக அழகாக எழுதி வருகிறீர்கள்! படிக்கும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. தொடருங்கள்!
பதிலளிநீக்குசுவாரஸ்யமான தகவல்கள்.
பதிலளிநீக்குவாழும் இடத்திற்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்வது விலங்குகள் மட்டும்தானா...???
பதிலளிநீக்குஇயற்கையின் ரகசியங்களை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஆம் உண்மை தான். விலங்குகள் மட்டுமா மனிதனும் தான்,,, மூங்கில் இலை,, அரிசி காலத்திற்கு ஏற்றது,, பெண்ணின் பிரசவ காலத்தில் சாப்பிடும் அரிசி,, பால் கொடுக்கும் காலத்தில் சாப்பிடும் அரிசி ,,, இன்னும் இது போல் அதிகம் ,,,, புதிய தகவல்,, பகிர்வுக்கு நன்றிகள்,, தொடருங்கள்,,,
பதிலளிநீக்குஅட! குரங்கெல்லாம் நம்பள விட மூளையோட இருக்கே !
பதிலளிநீக்குஅடேங்கப்பா நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் ஐந்தறிவு பற்றியதாக இல்லையே..... சந்தேகமாகத்தான் இருக்கின்றது.
பதிலளிநீக்குஆறறிவு என்று சொல்லும் மனிதன் இன்னும் ஜாதி மதத்தில் மூழ்கி இருக்கின்றானே... இதுவும் எனக்கு சந்தேகமே காரணம் உண்மையிலேயே மனிதனுக்கு ஆறறிவு என்பது உண்மையா ?
தொடர்ந்து வருகிறேன்....
தமிழ் மணம் 4
படிக்கப் படிக்க வியப்பு மேலிடுகிறது சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி
தம +1
எவ்வளவு விந்தையான தகவல்கள்... ஒவ்வொரு ஜீவராசியும் தனக்கான வாழ்க்கையை எவ்வளவு சிறப்பாக அமைத்துக்கொள்கிறது.. தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் ஆரோக்கிய வாழ்வின் ரகசியங்கள் அத்தனையும் வியப்பின் உச்சம். இன்னும் வரவிருக்கும் ஆச்சர்யங்களுக்காய் காத்துக்கொண்டிருக்கிறோம். அருமையான முயற்சிக்குப் பாராட்டுகள் தோழி.
பதிலளிநீக்குசிறந்த அறிவியல் ஆய்வுப் பதிவு
பதிலளிநீக்குதொடருங்கள், தொடருவோம்!
வியப்பூட்டும் செய்திகள்....
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு...
சகோ செந்தில்குமார்,
பதிலளிநீக்குசகோ மனோசாமிநாதன்
ஸ்ரீராம்,
வலிப்போக்கன்,
சகோ கோமதி அரசு,
மகேஷ்வரி,
அபயா அருணா,
கில்லர்ஜி
கரந்தையார்,
சகோ கீதா மதிவாணன்
சகோ யாழ்பாவாணன்
அஜய்
எல்லோருக்கும் மிக்க நன்றி கருத்த்துகளுக்கும் வருகைக்கும். நேரமின்மையால் ஒருமித்து நன்றி நவிலல்....
விந்தைகள் வியப்பளிக்கின்றன.
பதிலளிநீக்குஇந்த சிம்பன்ஜி,பகவான்ஜியை விட நல்லாவே யோசிக்கும் போலிருக்கே :)
பதிலளிநீக்குநமது மூதாதையர் பற்றிய ஆச்சர்யமான தகவல்கள். தேடித் தந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குசுவாரஸ்யமான பதிவு. ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு வகையான உணவு மற்றும் மருந்து ; அதனாற்றான் எல்லா உயிர்களுக்கும் அவை பரவலாக அமைந்துள்ளன.
பதிலளிநீக்கு//விந்தைதான் இல்லையா! இதிலிருந்து விலங்குகள் அவை தாங்கள் வாழும் இடத்திற்கு ஏற்றாற் போல் வாழ்கின்றன என்பது தெரிகின்றது.//
பதிலளிநீக்குமீன்களில் sole fish எனும் நாக்கு மீனில் கடலின் அடியில் மணலோடு ஒட்டி வாழ்வதால் கண்கள் ஒரு புறம் திரும்பியவாறு இருக்கும் , மேலும் டார்வின் finches உணவின் தன்மைக்கு ஏற்றவாறு வெட்டும் கடிக்கும் உறிஞ்சும் அலகுகளை பெற்றிருந்தன ..ஒவ்வொரு விலங்கும் இப்படி ஸ்பெஷல் அடப்டேஷன் பெற்றவை ...இதெல்லாம் இயற்கையின் விந்தை ..
//பெண் குரங்கு தனக்கு ஆண் குட்டி பிறப்பதனால், தன் குழுவில் தனது உரிமையை நிலைநாட்டிக் கொள்கின்றாதாம்.//
முன்னோர்கள் கிட்டருந்துதான் இந்த ஆம்பள சிங்கம் தற்பெருமை வந்துச்சோ மனிதனுக்கும் :))
விடுமுறை முடிந்து வாங்க ..அடுத்த பார்ட்டுக்கு காத்திருக்கிறேன் ..
அதிசயத் தகவல்கள். அருமையாகத் தொகுத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு