உண்டவல்லிக் குகைகள்/ஊண்டவல்லிக் குகைகள்-
உண்டவல்லி செல்ல பேருந்துகள் பற்றி தெனாலி பேருந்து நிலையத்தில் கேட்ட போது
அவர்களுக்கு முதலில் புரியவில்லை. பின்னர் நாங்கள் விளக்கியதும் அவர்கள் உச்சரிப்பு
இப்படி இருந்தது. “ஊண்டவல்லி” என்று. அதனால்தான் ஊண்டவல்லி என்று நான்
எழுதுகின்றேன்.
எவ்வகையிலும் இவற்றிற்குப் பாதிப்பு ஏற்படுத்துபவர்களுக்கு அபராதம், தண்டனை என்று எழுதிவைக்கப்பட்டிருந்தாலும் நம் மக்கள் கிறுக்கித் தள்ளுவதில் வல்லவர்களாயிற்றே! கண்டதையும் கிறுக்கித் தள்ளியிருக்கின்றார்கள். இதற்கெல்லாம் தண்டனை கிடையாதோ?!
படி ஏறி விட்டீர்களா?
சரி இப்போது ஊண்டவல்லிக் குகைகளைக் காண
நாம் வந்துவிட்டோம். உள்ளே செல்லுவதற்கு முன் ஒரு சிறிய முன்னுரை. குகைகள் என்று சொல்லுவதை விட ஊண்டவல்லிக் குடைவரைகள்/குடைவரைக்
கோயில் என்று சொல்லலாமோ என்று தோன்றுகின்றது.
மிக அழகான இடம். தொல்பொருளாராய்ச்சித்
துறையின் கீழ். ஆனால், சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்பது வேதனைதான். இந்தக்
குடைவரைகள் 6-7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று வரலாறு சொல்லுகின்றது. உள்ளே
செல்வதற்கு நுழைவுக்கட்டணம் ரூ 5. புகைப்படம் எடுப்பதற்கு கட்டணம் இல்லை. வீடியோ காமேரா என்றால் ரூ 15.
எப்பொதுமே நான் ஒரு இடத்திற்குச் செல்லும்
முன் குறிப்பாக, சுற்றிப்பார்க்க என்றால், அந்த இடம் எவ்வளவு தூரம், எப்படிச்
செல்ல முடியும், தங்கும் அவசியம் இருக்குமா இல்லை ஒரே நாளில் முடிக்க முடியுமா,
அருகில் வேறு இடங்கள் உள்ளனவா சுற்றிப் பார்க்க, அந்த இடத்தின் தட்பவெப்ப நிலை,
என்று பல விவரங்களைத் திரட்டிவிட்டுத் திட்டமிட்டுச் செல்வது உண்டு என்பதால்
அப்படி இந்தக் குகைகளைப் பற்றித் தேடிய போது இந்தக் குடைவரைகளுடன் விஷ்ணுகுந்தின் அரசர்களுக்குத்
(கிபி 420-620) தொடர்பு உண்டு என்றும், முக்கியமாக அனந்தபத்மநாப சுவாமிக்கும்,
நரசிம்மருக்கும் அர்ப்பணிப்புச் செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்லப்பட்டிருப்பதை
அறிய முடிந்தது.
இப்போது நான் பார்த்த விவரங்கள்.
குடைவரைகள் 4 தளங்களாக உள்ளன. கீழ்த்தளம், முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம்
தளம் என்று. கீழ்த்தளம் குடைவரைகள் மட்டுமே. பல பிரிவுகள். 6, 7 இருக்கும் என்று
நினைக்கின்றேன். இவை பௌத்தத் துறவிகள் ஓய்வெடுக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டன
என்றும் சொல்லப்படுகின்றது. இருக்கலாம். அருகில்தானே அமராவதியில் பௌத்த ஸ்தூபி இருக்கிறது. இப்போது வொவ்வால்களின் குடும்பங்களின் உறைவிடம். பாவம் அவை எங்கு செல்லும். பலரும் மூக்கைப் பொத்திக்
கொண்டுச் சென்றார்கள். ஆனால், எனக்கோ மணம், குணம், ருசி எதுவும் தெரியாதே! அதைப்
பற்றித் தனி பதிவு இட உள்ளேன். விழிப்புணர்விற்காக.
சரி, ஒவ்வொரு தளமாக விவரித்து எழுதுவதைவிட,
வாருங்கள் உங்களை ஒவ்வொரு தளமாக அழைத்துச் செல்லுகின்றேன். மூன்று மூர்த்திகளும் இருக்கின்றார்கள். துர்கை/மஹிஷாசுரமர்த்தினி ரூபத்தில். சிறப்பு என்னவென்றால் அனந்தபத்மநாப ஸ்வாமி...வாருங்கள்
படி ஏறி வந்துவிட்டீர்களா? இதுதான் குடைவரைக் கோயில். 4 தளங்கள் தெரிகின்றதா..வாருங்கள்..உள்ளே செல்வோம். மற்றொரு புகைப்படம் இன்னும் சற்றுத் தெளிவாக இருந்தது ஆனால் அதில் பல மக்கள் தெளிவாகத் தெரிந்ததால் வேண்டாம் என்று விட்டுவிட்டேன். காமேரா இல்லாதது கைஒடிந்த மாதிரி இருந்தது/இருக்கின்றது
கீழ்த்தளம்-கீழே இன்னும் இரு படங்கள்- கீழ்த்தளத்தில் அவ்வளவாக ஒன்றும் இல்லை. குகைதான். ஆனாலும் அழகு.
இதுவும் கீழ்த்தளம்தான். பல பிரிவுகள். குழந்தைகள் ஓடி ஒளிந்து விளையாட ஏற்ற இடம்! புகைப்படத்திற்கும்!! இதனால்தான் ஜோடிகளின் கூட்டமும், விதவிதமான கோணங்களில், போஸ்களில் ஃப்ளாஷ்களும் மின்னுகின்றன!
அப்படியே வெளியே வந்து கரடுமுரடான படிகளில் வேண்டுமென்றால் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு முதல் தளத்திற்கு வாருங்கள். இதுதான் முதல் தளம். படியேறினால் தெய்வ உருவங்கள் பல தரிசித்திட.
படி ஏறி வாருங்கள் உள்ளே செல்ல. இது தவிர மேலே உள்ள படத்தில் அந்தப் பக்கவாட்டின் வழியாகவும், கீழ்த்தளத்தில் பார்த்தது போல் உள்ளே நுழையமுடியும் அங்குதான் அடுத்த தளத்திற்குச் செல்லும் படிகள் இருக்கின்றன காட்டுகின்றேன். இப்போது இதன் உள்ளே.
கீழ்த்தளம் போலவே ஆனால் சற்று நல்ல முறையில் இருக்கிறது. நடந்து வந்து பார்த்தீர்களா
பிரம்மா
துர்கை இடது புறம் சிங்க வடிவில் அரக்கனை வதம் செய்யும் சிற்பம்
இது ஒரு குகை உள்ளே செல்ல முடியாது. தடுப்பு
இப்போது இதன் வழி வாருங்கள் அடுத்த தளத்திற்குச் செல்வோம்
இதோ அடுத்த 2 வது தளத்திற்குப் படிகள்...
இதோ இரண்டாவது தளம் வந்துவிட்டோம்..
நேரே ஆஞ்சநேயர் தெரிகின்றாரா...பாவம் அவரது கால் சற்றுச் சிதைந்துள்ளது..கதவு, வாயில் தெரிகின்றது இல்லையா அங்குதான் அனந்தபத்மநாப ஸ்வாமி
அனந்தபத்மநாப ஸ்வாமி சிறப்பு என்னவென்றால் 5 மீ நீளத்தில் ஒரே கிரானைட்கல்லில் செதுக்கப்பட்டிருப்பது
பத்மநாப ஸ்வாமியின் பாதங்கள்
2வது தளத்தில் வெளியே இருக்கும் சிற்பங்கள்/சிலைகள். இனி அடுத்த 3 வது தளம் கடைசித் தளத்திற்குச் செல்வோம் வாருங்கள்
இதுதான் மூன்றாவது தளம். இதில் இரு குடைவரைகள் அவ்வளவே. அதற்குள் அமர்ந்து எல்லோரும் படம் எடுத்துக் கொள்கின்றனர். அதை எடுக்க முடியாத அளவிற்குப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதால், மக்கள் இருந்து கொண்டே இருந்ததால் என்னால் அதை எடுக்க முடியவில்லை
அடுத்து இங்கிருந்து எடுக்கப்பட்டக் காட்சிகள்
இந்தக் குகைகளின் கீழே பக்கவாட்டில் நடந்து சென்றால் கழிவறைகளும், இன்னும் சற்று தூரம் நடந்து சென்றால் சிறிய குடைவரை, நரசிம்மரும். ஆனால் மொபைல் திடீரென்று வேலை செய்யாததால் எடுக்க முடியவில்லை.
இந்தக் குடைவரை குகைவழி மங்களகிரியில் இருக்கும் பானக நரசிம்மர் கோயிலை அடைவது போல் முன்பு இருந்ததாகவும் இப்போது அது அடைக்கப்பட்டுள்ளது என்றும் சொல்லப்பட்டது. இங்கிருந்து விஜயவாடா 6 கிமீ. அங்கிருந்து தெனாலி, வட்லமுடி வந்து அடுத்த தினம் தெனாலியிலிருந்து சென்னை வந்து சேர்ந்தோம். வட்லமுடியிலிருந்து காலை 5 மணிக்கு தெனாலி ரயில் நிலையத்திற்குப் பேருந்து இருந்தாலும், முதலில் ஷேர் ஆட்டோ வந்ததால் அதில் பயணித்தோம். 13 கிமீ. ரயில் நிலைய வாசல்வரை. ரூ 10 ஒருவருக்கு.
சரி நன்றாகச் சுற்றிப் பார்த்தீர்கள்தானே. இத்துடன் பயணக் கட்டுரை முடிகின்றது. இனி அடுத்த பயணம் மேற்கொள்ளும் போது பயணக் கட்டுரை எழுதுகின்றேன். என்னுடன் பயணித்த உங்கள் எல்லோருக்கும் நன்றி.
---கீதா
குகைகள், குகைப்பாதைகள், படிகள், சிற்பங்கள் எல்லாமே அழகோ அழகாகப் போட்டோ கவரேஜ் செய்து காட்டியுள்ளீர்கள். மிகவும் அருமையான பயணக்கட்டுரை.
பதிலளிநீக்குகீழிருந்து ஆறாவது மற்றும் எட்டாவது படங்கள் {அனந்த சயனப் பள்ளிகொண்ட பத்மநாபப் பெருமாள் + பாதங்கள்} மிகச்சிறப்பாக உள்ளன.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
மிக்க நன்றி வைகோ சார் தங்களின் விரிவான கருத்திற்கும், வருகைக்கும் தொடர்ந்து ஊக்கம் அளித்துக் கொண்டிருப்பதற்கும். காமெரா பழுதடைந்து விட்டது. மொபைலில் எடுத்ததால் இப்படித் தெளிவாக இல்லை. இல்லை என்றால் இன்னும் சற்றுத் தெளிவாக இருக்கும்...மிக்க நன்றி மீண்டும்
நீக்குபௌத்தம் வளரவிடக் கூடாது என்று ,பௌத்த இடங்களில் எல்லாம் இந்துமதவாதிகள் ஆக்கிரமிப்பு செய்திருப்பார்கள் போலிருக்கே :)
பதிலளிநீக்குமிக்க நன்றி தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் பகவான் ஜி.
நீக்குஅழகிய ரசமான பயணத்துக்கு எங்களையும் அழைத்துப் போனதற்கு நன்றி
பதிலளிநீக்குதமிழ் மணம் 2
மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குசுவாரஸ்யமான இடங்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குஒவ்வொரு தளத்தையும் புகைப்படம் எடுத்து அழகாய் விவரித்து கூட்டிக் கொண்டு சென்றீர்கள். நாங்களும் பயணம் முடித்துவிட்டோம் ஹஹஹா....நன்றி சகோ.தம 3
பதிலளிநீக்குமிக்க நன்றி உமையாள் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குதொடர்ந்து பயணித்தேன். புகைப்படங்கள் அருமையாக இருந்தன. செய்தியைப் பகிர்ந்தவிதம் நாங்களும் உடன் வருவதைப்போன்ற உணர்வைத் தந்தது. அடுத்த பயணத்தற்காகக் காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.
நீக்குபடங்களுடன் தகவல்களும் அருமை! எந்த சுற்றுலாத் தலமானாலும் ஜோடிகள் தொல்லை அதிகம்தான் போல! சிறப்பான கட்டுரை! நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குஅருமையாக கொண்டு செல்கிறீர்கள். படங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணித்து ஆந்திராவின் அதிசயங்களை தெரிந்து கொண்டோம்.
பதிலளிநீக்குதமிழ்மணம் வேலை செய்யவில்லை. அதனால் வாக்களிக்க முடியவில்லை.
மிக்க நன்றி செந்தில். படங்கள் தெளிவாக இல்லாமை ஒன்று மொபைலில் எடுத்தது. மொபைலும் ஸ்மார்ட் ஃபோன் எல்லாம் இல்லை. சாதாரண ஃபோன் தான். காமெரா பழுதாகிவிட்டது. பார்க்க வேண்டும் ரிப்பேர் செய்ய முடியுமா இல்லை என்றால் ம்ம்ம்ம் பார்ப்போம். மிக்க நன்றி
நீக்குஉடன் பயணித்த மாதிரியான உணர்வைக் கொடுத்து விட்டீர்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி மலர்வண்ணன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குஇருங்க இருங்க இரண்டாம் தளத்தில் இருக்கிறேன்... வந்துவிட்டேன் :-)
பதிலளிநீக்குஉங்களுடன் பயணித்தது போன்ற உணர்வு தரும் பதிவுகள்.
நம் மக்கள் செய்யும் கிறுக்கல்களும் பராமரிப்பு குறைவாக இருப்பதும் வருத்தம் தருகிறது.. இங்கெல்லாம் ஒன்றும் இல்லாத இடத்திற்கு வரலாறும் பூகோளமும் கதையும் அவ்வளவு சொல்லிப் பாதுகாத்து வருமானமும் பார்க்கின்றனர். நம் நாட்டில் ...? ஹ்ம்ம்ம்ம்ம்
நான் சுற்றுலாத்துறை அமைச்சராக வேண்டும் ;-)
உங்களைப் போலவே நானும் என் கணவரும் போகும் இடத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்துவிட்டுப் போவோம். :-) same same sweet, give me sweet நான் வரும்போது கண்டிப்பாகப் கொடுக்கனும், சரியா கீதா? :-)
அதிகாலையில் ஷேர் ஆட்டோவில் கூட்டிக்கொண்டு வந்துவிட்டீர்களே,, இப்போ தூங்கப் போறேன் ஹஹஹா
விழிப்புணர்வு பதிவு- இப்படி சிலருக்கு ஏற்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. பதிவுக்குக் காத்திருக்கிறேன்.
அடுத்த பயனத்திற்கும் நான் ரெடி :-)
வாங்க க்ரேஸ்,.. மிக்க நன்றி முதலில்.....ஆம் பெரும்பான்மையான சுற்றுலா தளங்களில் பல கிறுக்கல்கள்...பராமரிப்பு இருந்தால் இன்னும் சுற்றுலாத் துறை நல்ல வருமானம் கிடைக்கும் நாட்டிற்கும் மாநிலத்திற்கும். ஆம் அங்கெல்லாம் அருமையாகப் பராமரிப்பார்கள். வாங்க நாங்கல்லாம் ஓட்டுப் போடறோம்...சுர்றுலாத்துறை அமைச்சர் என்ன பிரதமாராகவோ, முதல்வராகவோ ஆக்கிவிடறோம்...எங்களுக்கும் ஒரு நல்ல தலைமை கிடைத்ததாக மகிழ்வோம்...நிம்மதியாக இருப்போம்..இது எப்படி..நல்லாருக்குல்ல?!!
நீக்குஹஹஹ் கண்டிப்பாக ஸ்வீட் தருகின்றேன் ஸ்வீட் மட்டுமல்ல விருந்தே படைக்கின்றேன். வாருங்கள் அடுத்த முறை வரும் போது தெரிவியுங்கள் வீட்டிற்கு அழைத்துப் போகின்றேன் கிரேஸ்...
மிக்க நன்றி கிரேஸ் அருமையான ரசனையான பின்னூட்டத்திற்கு
ஆஹா...!! ஒரு துறையைப் பார்க்கலாம் என்று நினைத்தால், மொத்தமாப் பார்க்கச் சொல்கிறீர்களே :-) அதுவும் நல்லாத்தான் இருக்கு..ஹஹாஹா
நீக்குமிக்க நன்றி கீதா, வரும்போது கண்டிப்பாகச் சொல்கிறேன். உங்களைச் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்.
நானும் க்ரேஸ்! ரொம்ப ஆவலாக உள்ளோம் இருவருமே..மிக்க நன்றி
நீக்குஅருமையான பயணம். சிற்பங்களனைத்தும் கண்ணுக்குள்ளேயே நிக்குது. :)அடுத்த பயணம் எந்தூரு :)
பதிலளிநீக்குமிக்க நன்றி தேனு தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..அதுவும் தங்கள் வேலைப்பளுவிக்கிடையில்...மிக்க மகிழ்ச்சி!
நீக்குஅழகான படங்களுடன்
பதிலளிநீக்குஅருமையான சுற்றுலாப் பயண விரிப்பு
யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
http://www.ypvnpubs.com/2016/01/01.html
மிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். ஆம் உங்கள் மின் நூல் பற்றிய குறிப்பு பார்த்தோம். தரவிறக்கம் செய்கின்றோம் மிக்க நன்றி சகோ...
நீக்குபடங்களும் விளக்கங்களும் ரொம்பவே அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி டிடி....வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குநிறைய பேர் தங்களது காதலை பறைசாற்றி இருப்பது எல்லா இடங்களிலும் நடக்கிறது. நமது மக்களை எப்படிச் சொன்னாலும் திருத்த முடியாது.....
பதிலளிநீக்குபயணத்தில் சிறப்பான பல இடங்களைப் பார்த்து ரசித்து பதிவில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
எனது பக்கத்தில் இக்குகைகள் பற்றி எழுதிய பதிவு - http://venkatnagaraj.blogspot.com/2010/11/blog-post_18.html.
நேரம் இருந்தால் பாருங்கள். அப்படியே நூல் பிடித்துப் போனால் அத்தொடரின் மற்ற பதிவுகளும் படிக்கலாம்!
மிக்க நன்றி வெங்கட் ஜி! இன்று ஏதேச்சையாகத் தமிழில் குகைகள் பெயரை அடிக்கும் போது உங்கள் பக்கம் வந்தது ஜி. அது தொடராக இருந்ததைப் பார்த்தேன்.
நீக்குநீங்கள் முன்பே சொல்லியிருந்தீர்கள் எனது முதல் பதிவிலேயே நீங்களும் இந்த இடங்களுக்கு எல்லாம் சென்றிருப்பதைப் பற்றி. அப்போதே நினைத்துக் கொண்டேன் பார்க்க வேண்டும் என்று. உங்கள் பதிவைக் குறித்துக் கொண்டுள்ளேன் நிச்சயமாகப் பார்க்கின்றேன். தமிழில் உண்டவல்லி என்று கூகுளில் அடித்தாலே உங்கள் பக்கம் தான் முதலில் வருகின்றது.
மிக்க நன்றி வெங்கட்ஜி வருகைக்கும் கருத்திற்கும்
படங்கள் அருமை!உடன் பயனித்த உணர்வு!
பதிலளிநீக்குஅன்புள்ள சகோதரி,
பதிலளிநீக்குகை வண்ணம் குடைவரை குகை அங்கே கண்டு வியந்து போகிறேன். அதை தங்களின் எழுத்து வண்ணத்தில் அழகிய படங்களுடன் வரலாற்று உண்மைகளை ஊருக்கு உணர்த்தியதற்கு பாராட்டும்... வாழ்த்தும்!
நன்றி.
த.ம.6
ஊண்டவல்லிக் குகைகளின் சிறப்புகளை அறிந்தேன். கம்பியைப் பற்றிக்கொண்டு நடக்கச்சொன்னீர்கள். ஆனால் உங்கள் எழுத்தோ உங்கள் கைகளைப் பற்றிக்கொண்டு நடப்பதான அனுபவத்தைத் தருகிறது. படங்கள் பிரமாதம். பாராட்டுகள் தோழி.
பதிலளிநீக்குஅருமை.....
பதிலளிநீக்கு