படங்கள் இணையத்திலிருந்து
மிகவும் நெருங்கிய உறவினர் வீட்டிற்குச்
சென்றிருந்தோம். உறவினர் வீட்டுப் பையன் இந்த வருடம் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதுகின்றான். எனவே, அவன் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகின்றான், 11
ஆம் வகுப்பில் அவன் விருப்பப்பாடம் என்ன எடுக்க விரும்புகின்றான் என்று பையனிடம் கேட்டுக்
கொண்டிருந்தோம்.
“டேய் இவ்வளவு நாள் விட்டாச்சு. கிரிக்கெட்
கோச்சிங்க் போற..சரிதான். ஆனா, அது
மட்டுமே அப்படினு எல்லாம் நம்மள மாதிரி ஆளுங்களுக்குச் சரிப்பட்டு வராது. இப்பவாவது
நீ தீர்மானிக்கணும் இல்லையாடா? அடுத்து என்ன பண்ணணும், என்ன பாடம் எடுக்கணும்
அப்படினு?”
“நீங்களே ஏதாவது சொல்லுங்களேன். நான்
யோசிக்கறேன்” என்றான்.
“டாக்டருக்குப் படிக்கறயாடா?”
“என்னது டாக்டரா? 24 ஹவர்ஸ் + லைஃப் முழுசும்
நோயாளிங்களோடுதான் இருக்கணும். என்னை இருக்கச் சொல்றீங்களா. நோ சான்ஸ்”
“சரி எஞ்சினியர் ஆகறியாடா?”
“அதுக்குத்தான் வீட்டுல ரெண்டு பேர்
இருக்கீங்களே! (உறவினர்கள் இருவர்) அப்புறம் நான் வேற எதுக்கு எஞ்சினீயர் ஆகணும்.”
“அது சரி! அப்ப சி ஏ படிக்கறியாடா?”
“அப்படின்னா?”
“கணக்குப் பிள்ளை/ஆடிட்டர். கம்பெனி, மத்தவங்களோட
கணக்கு வழக்கெல்லாம் பார்த்துக்கணும்.”
“நான் எதுக்கு மத்தவங்க லைஃப்ல,
ஃபைனான்சியல் மாட்டர்ல மூக்கை நுழைக்கணும். நான் நுழைய மாட்டேன். பக்கா ஜென்டில்மேன் நான்”
“சரி. ஆடிட்டர் வேண்டாம், ஃபினான்சியல்
கன்சல்டண்டா?”
“அதுக்கு நான் என்ன பண்ணனும்?”
“உங்க அம்மா இப்ப என்ன பண்ணறாங்க அதுதான்..”
“ஐயோ...எங்க அம்மா அதத்தான்
பண்ணிக்கிட்டுருக்காங்க. நான் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டேன் இதுல இன்வெஸ்ட்
பண்ணு அதுல பண்ணு அப்படினு.”
“பைலட்?”
“என் உயிருக்கு உத்தரவாதமே இல்லையே.
உயிருக்கு உத்தரவாதம் இல்லாத தொழில எல்லாம் பண்ணச் சொல்றீங்களே”
“ஓகே....நீதான் நாலுகால் செல்லங்களோட
விளையாடற. கொஞ்சற. வீட்டுலயும் ஒண்ணு வேணும்னு அடம் பிடிக்கற. ஸோ வெட்னரியன்
ஆகிடறியாடா?”
“நான் நாலுகால் செல்லங்களைக் கொஞ்சத்தான்
செய்வேன். நீங்க என்னடான்னா அறுக்கச் சொல்றீங்களே. சரி வேற?”
“சரி, ப்ரொஃபசர்/டீச்சர்? நிறைய லீவெல்லாம்
கிடைக்கும்...எப்படி?”
“நான் படிக்கறதே கஷ்டமா இருக்கு. நானே
ஸ்கூல்ல அடங்கறது இல்ல. இதுல பசங்களுக்கு வேற என் தொண்டத்தண்ணி வத்த சொல்லிக்
கொடுக்கற வேலையா? ஸாரி”
எங்கள் நண்பர் ஒருவர் பெரிய நிலையில்
இருக்கின்றார். அவரதுப் புகைப்படத்தைக்
காட்டி
“இவரைப் போல் ஆகறியா. கையெழுத்து மட்டும் போட்டா போதும்.”
“ஹை! இது நல்ல டீலா இருக்கே”
“ஹலோ...அதுக்கும் 25 வருஷம் உழைக்கணும். சும்மா இல்ல. அப்பதான் அந்தப் பொசிஷனை அடைய முடியும்”
“ம்ம்ம்...அந்த 25 வருஷம்றதுதான்
உதைக்குது. அது எல்லாம் சரிப்பட்டு வராது... கையெழுத்து மட்டும் போடறதுனா ஓகே!
நல்ல டீல்தான். ஒரு பக்கம் நாலுகால்
செல்லங்களைக் கொஞ்சல், இன்னுரு பக்கம் கிரிக்கெட் நடுல நான் கையெழுத்துப் போடற
வேலை...இது நல்லாருக்கு ஓகே!”
“என்னடா எதச் சொன்னாலும் இப்படிப் பேசற”
“நானே என் எதிர்காலத்தைப் பத்திக்
கவலைப்படல. நீங்க எல்லாரும் எதுக்கு என்
எதிர்காலத்தைப் பத்தி இப்படி மண்டைய உடைச்சுக் குழப்பிக்கறீங்கனு தெரியல....சரி..அத
விடுங்க... நாம அன்னிக்குப் பார்த்துட்டு வந்த லாப்ரடார் பப்பிய எப்ப எனக்கு வாங்கித்
தரப்போறீங்க?"
(நேற்று என் மகனின் வருகை. துளசியும் ரொம்ப பிசி. எனவே நம் நண்பர்கள் உங்கள் வலைத்தளத்திற்கு வருவது சிரமமாக அல்லது சற்றுத் தாமதமாகின்றது. இடையிடையில் வருகின்றோம்...)
---கீதா
இப்படியா நடுச்சாமத்துல மண்டையை காச்சுறது ? இவனுக்கு V.O வேலை இருக்கு வேணுமா ?
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
மிக்க நன்றி கில்லர்ஜி. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குகுழந்தைகளின் இந்த குழந்தைமையை அப்படியே பார்த்துக் கொண்டாலே போதும்...எதிர்காலத்தை எண்ண வைத்து அவர்களின் நிகழ்கால சந்தோசங்களை தொலைக்க வைத்துவிட கூடாது என்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும்.
பதிலளிநீக்குஅவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
மிக அருமையானதொரு உரையாடல். பகிர்வுக்கு வாழ்த்துக்கள் !!
ஆம் மிகச் சரிதான் கௌசல்யா! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குநண்பர் கரை வேட்டிக்காரரோ :)
பதிலளிநீக்குமிக்க நன்றி பகவான்ஜி. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குஹஹஹஹ இல்லை பகவான்ஜி. அவர் மிகவும் நல்ல மனிதர்.
நீக்கு“நானே என் எதிர்காலத்தைப் பத்திக் கவலைப்படல. நீங்க எல்லாரும் எதுக்கு என் எதிர்காலத்தைப் பத்தி இப்படி மண்டைய உடைச்சுக் குழப்பிக்கறீங்கனு தெரியல.
பதிலளிநீக்குஇது தான் இன்றைய இளைஞர்கள் கீதாமா!என் மகனும் இப்படித்தான் தனக்கான முடிவில் நிரம்ப தெளிவு,படிப்பு விடயத்திலும் தொழில் தேர்விலும் தனக்கு ப்பிடித்ததை தெரிந்து கொண்டார், இப்போ அவர் வழியில் மகளும்......!
நமக்கு தான் கவலை, அவர்கள் நமக்கு ஆறுதல் சொல்லும் நிலையில்!
அதைப்பற்றி உங்களுக்கு என்ன கவலை!நாங்க பார்த்துக் கொள்வோம் என ரெடிமேட் பதில்.
அதற்கு ஏற்ப பெற்றோரை சாராமல் வாழவும் திடமாய் முடிவெடுக்கின்றார்கள். பாராட்டுவோம்.
மிக்க நன்றி நிஷா. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...ஆம் உண்மைதான்..இதுதான் இப்போதைய குழந்தைகளின் எண்ண ஓட்டங்கள்..
நீக்குயதார்த்தத்தின் வெளிப்பாடு. நல்ல பதிவு. நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குஇன்றைய இளைஞர்கள் விவரமானவர்கள்.. அவர்கள் வழியை அவர்கள் சிறப்பாகவே பார்த்துக் கொள்வார்கள்.
பதிலளிநீக்குஇந்த உரையாடல்கள் எனக்கு 'பாஸ் என்கிற பாஸ்கரன்' பட ஆர்யா-சந்தானம் உரையாடலை நினைவூட்டியது!
:)))
அதே... அதே...
நீக்குஓ! அப்படியா ஸ்ரீராம்! எனக்கு அந்தத் திரைப்படம் பார்க்காததால் தெரியவில்லை. பார்த்திருந்தாலும் பல சமயங்களில் வசனங்கள் மனதில் பதிய மறுக்கின்றன...அன்று தெரிந்திருந்தால் இன்னும் அவனை ஓட்டியிருக்கலாம்...
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம் வருகைக்கும் கருத்திற்கும்
டிடி ஸ்ரீராமுக்கு அளித்த பதிலே அதே அதே!!ஹஹ்ஹ மிக்க நன்றி டிடி. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குஇந்தக் கால பசங்ககிட்ட பேசமுடியாது. சுவாரஸ்யம்...கீதா.
பதிலளிநீக்குதம+1
மிக்க நன்றி உமையாள். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குஉரையாடலின் கடைசி வரிகள் தான் இன்றைய நிதர்சனம்..
பதிலளிநீக்குகுடியரசு தின நல்வாழ்த்துகள்..
வாழ்க நலம்!..
மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குஅவர்களிடம் பேசி ஜெயிக்க முடிவதில்லை..... :)
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குஇக்கால இளைஞர்களின் மன நிலையை துல்லியமாய்
பதிலளிநீக்குஅருமை
மிக்க நன்றி கரந்தை சகோ..வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குகைப்புள்ள கணக்கா நம்மள பாத்தாலும் கண்டுக்காம போயிடனும்...
பதிலளிநீக்குஹஹஹ் மிக்க நன்றி மலர் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குஎங்க மூளைக்கு வேலை வைக்கும் நல்ல பதிவு
பதிலளிநீக்குஇந்தியாவின் 67வது குடியரசு நாள் வாழ்த்துகள்!
மின்நூல் வடிவமைப்பும் வெளியீடும் பற்றி அறிந்திட......
http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html
மிக்க நன்றி யாழ்ப்பாவாணன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குபுள்ள ரொம்ப விவரமாத்தான் இருக்குது! ஹாஹாஹா! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குஇன்றைய தலைமுறைக்கு வசதிகள் அதிகம் என்பதால் விரும்பியதுறையை தெரிவுசெய்துவிடுவார்கள் .நல்ல உரையாடல் பகிர்வு.
பதிலளிநீக்குவசதிகள் அதிகம்தான் தனிமரம் நேசன் ஆனால் விரும்பியத் துறையைத் தேர்ந்தெடுத்துச் சேர்வது என்பது எளிதல்ல. கலை கல்லூரிகளில் சேர்க்கை கூட கடினமாகிவிட்டது.
நீக்குமிக்க நன்றி தனிமரம் நேசன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
அன்புள்ள சகோதரி,
பதிலளிநீக்கு‘இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...?’
நன்று.
த.ம.9
மிக்க நன்றி மணவையாரே தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குவாழ்த்துகள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குரியலி கூல் கை..
பதிலளிநீக்குதம +
ஹஹஹ யா!! ஹீ இஸ் ரியலி எ கூல் கை...தாங்க்ஸ் எ லாட் கஸ்தூரி
நீக்குஉண்மையை நல்ல உரையாடல் மூலம் விளக்கியுள்ளீர்கள்,, அருமை, நன்றி
பதிலளிநீக்குமிக்க நன்றி மகேஷ்வரி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குஅருமையான உரையாடல் பகிர்வு...
பதிலளிநீக்குஎதார்த்தமாய் பேசியிருக்கிறான்... கண்டிப்பாக நல்லா வருவான்...
மிக்க நன்றி குமார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்....ஆம் அவன் நன்றாக வருவான் மிக்க நன்றி அதற்கும்..
நீக்குஎதிர்காலம் என்ற ஒன்று இருந்தால்தானே ஆசைப்படுவதற்கு...
பதிலளிநீக்குமிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்கு