http://www.travelchannel.com/ நம்மளால போக முடிகிறதோ இல்லையோ சும்மா இந்தச் சுட்டிக்குப் போய்ச் சுற்றிப்பாருங்கள்!!
சகோதரி/தோழி மைதிலி தொடங்கிவைத்த பயணங்கள்
முடிவதில்லை ரிலே டார்ச் கொடுக்கப்பட்ட 10 பேரில் நாங்களும். ரிலே டார்ச்சைப் பெற்றுக் கொண்டாலும்
தாமதமாகிவிட்டது. இருந்தாலும் பயணங்கள் முடிவதில்லைதானே. அது மைதிலி தொடங்கிவைத்த 10 பேர் அடுத்துத்
பாஸ் ஆன் செய்ய அது தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றது!! எனவே அவர்களுடன்
நாங்களும் ட்ராக்கில் இணைகின்றோம் இன்று. கேள்விகளுக்குப் பதில்கள் ஒரு
கட்டுரையாக.
பயணம் என்பது எல்லோரது வாழ்விலும் ஏதோ ஒரு
சமயத்திலோ, ஏதாவது ஒரு காரணத்திற்காகவோ, அடிக்கடியோ, அல்லது எப்போதாவதோ, சுற்றுலா
என்றோ நிகழும் ஒன்றுதான். ஒரு சிலருக்கு நிகழாமலேயே கூட இருக்கலாம் பயணத்திற்கு
வண்டிகள் கூட அவசியமில்லை. கால் நடையாகவும் மேற் கொள்ளலாம். இவற்றை எல்லாம் விட
மனம் எனும் மாயக் குதிரை ஒன்றே போதும் முடிவில்லாப் பயணங்களுக்கு.
நமது பயணத் திட்டங்களுக்குக் கூடத் தடை
வரலாம். ஆனால் எந்தவிதத் தடைகளுக்கும் அஞ்சாத, அதை வெற்றிக் கொள்ளக்கூடிய, எல்லாவற்றையும்
விஞ்சி நிற்கும் பயணம் நமது இறுதிப் பயணமே!
அது ஒன்றுதான் இவ்வுலகில் உண்மையான, யாராலும் மறுக்க முடியாத பயணம்! சரி நமக்கு
அது இங்கு வேண்டாம்.....
ஸ்ப்பா .துளசி போதும் உன் தத்துவப் பயணம்.
இது ஜாலி ரைட்பா...இந்தப் பாரா வேணுமாப்பா...
பயணங்களில் ரயிலில் பயணிப்பது என்பது அலாதிதான்.
ரயிலின் ரிதம் காதிற்கு இதம். ஜன்னல் வழி எதிர்த் திசையில் ஓடும் நதிகளும்,
ஊர்களும், மலைகளும் கண்ணிற்கும் மனதிற்கும் விருந்து!
துளசி: முதல் ரயில்பயணம் என்பது தெளிவாக நினைவில்லை
என்றாலும், போடியிலிருந்து மதுரைக்குச் செல்லும் ரயிலில் ஒரு நிறுத்தத்திலிருந்து
ஏறி அடுத்த நிறுத்த்த்தில் இறங்கிய நினைவு..அதன் பின் வளர்ந்த பிறகு பல ரயில் பயணங்கள்.
கீதா: நினைவு தெரிந்த, முதல் ரயில் பயணம்
என்பது சிறு வயதில், இலங்கைத் தலைநகரிலிருந்து தலைமன்னார் வரை வந்த ரயில் பயணம்
இரவில். என் சேட்டைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எனது பாட்டி, இருக்கையின்
அடியில் ஒரு அரக்கன் படுத்திருப்பதாகவும், சேட்டை செய்யும் குழந்தைகளைப்
பிடித்துப் போவதாகவும் சொல்லி என்னை அழைத்துவந்த நினைவு. அந்தச் சிறிய வயதில் நான்
ரயிலை விட மிக மிக அனுபவித்தப் பயணம் தலைமன்னாரிலிருந்து இராமேச்வரம் வரை வரும்
கப்பல் பயணம். இதைப் பற்றி எழுத வேண்டும் என்றால் தனிப் பதிவு வேண்டும் எனவே இங்கு
சென்சார்.
மறக்கமுடியாத பயணம் என்று எதைச் சொல்லுவது
என்று எங்கள் இருவருக்குமே தெரியவில்லை எல்லா பயணங்களையும், ஒவ்வொரு நொடியையும்
அனுபவித்து மகிழ்வுடன் பயணிப்பதாலும், ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவிதமான, வித்தியாசமான
அனுபவங்கள் கிடைப்பதால் எல்லாமே ஏதோ ஒரு வகையில் மறக்க முடியாத பயணங்களே. (ஏதேனும்
மரண நிகழ்வுக்குப் பயணிப்பதைத் தவிர்த்து)
சீருந்து என்றாலும், பேருந்து என்றாலும்,
ரயில் என்றாலும் இரு சக்கரவாகனம், நடராஜா எல்லாவற்றிலுமே பயணிக்கப் பிடிக்கும்.
தனியாகவும், குழுவாகவும், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் பயணிக்கப் பிடிக்கும்.
பயணம் என்பதே இனிமையாக இருக்கும் போது! அதே சாலை, அதே வழி, தினமும் என்றாலும் கூட
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவித அனுபவப் பயணமே.
கீதா: மேலே சொன்னதுடன், பெரும்பாலும் பேக்
பேக்குடன், சுமை இல்லாமல் மகனுடன் பயணிக்கப் பிடிக்கும். தனியாகப் பயணிக்க மிகவும்
பிடிக்கும். பெரும்பான்மையான பயணங்கள் தனிமையில்தான். சுற்றுலா பயணங்களைத் தவிர. விமானப் பயணத்தின் போது ஜன்னலின் அருகில் என்றால் மேகக் கூட்டம் வேறொரு உலகு இருக்கிறதோ என்று வியக்க வைக்கும். திரையில் இந்திர லோகம், கடவுள்கள் உலகம் காட்டுவார்களே அப்படி ஒருவேளை இயக்குநர்கள் இதைப் பார்த்துதான் அப்படிக் காட்சி வைத்திருப்பார்கள் என்று நினைத்ததுண்டு. அத்தனை அழகு என்றால் அழகு, அதிசயமாக இருக்கும், நான் மிகவும் ரசிப்பதுண்டு.
இசையுடன் பயணிப்பது இருவருக்குமே
பிடிக்கும் என்றாலும் குழுவாகவோ, குடும்பத்துடனோ பயணிக்கும் போது அங்கு இசை
புறம்தள்ளப்பட்டு, பேச்சுகள், விளையாட்டுகள் முதலிடம் வகிக்கும். தனியாக என்றால்
இசையுடன் பயணிப்பது உண்டு. சோகப்பாடல்கள் பிடிக்கவே பிடிக்காது. மனதிற்கு இனிய மகிழ்வு தரும், உற்சாகம்
அளிக்கும் பாடல்களே எங்கள் சாய்ஸ்.
.பகல் நேரப் பயணம் ஒருவித அனுபவம் என்றால்
இரவு நேரப்பயணம் வேறுவித அனுபவம். இரண்டுமே பிடிக்கும். வெயில் காலத்தில் பயணம்
என்பது கொஞ்சம் கஷ்டமான பயணமே. அதனால் அதைத் தவிர்க்க நினைப்பதுண்டு.
கீதா: இரவுப் பயணத்தில் ஆங்காங்கே
தூரத்தில் விளக்குகளுடன் மின்னி மறையும் கிராமங்கள், சிறிய ஊர்கள், இரவில் நிலவின்
வெளிச்சத்தில் மின்னும் நீர் நிலைகள், மரங்கள், மலைகளின் அவுட்லைன்களுடன் இரவு
உருவங்கள் என்று ரசிப்பதுண்டு. சில் காற்றுடன் மழைச்சாரல் என்றால் கூடுதல் இன்பம்.
அதுவும் ரயிலில். எனக்கு ஜன்னல் இருக்கைதான் மிகவும் பிடிக்கும். கேட்டுப்
பெறுவதுண்டு ரயிலானாலும், பேருந்தானாலும்.
வெகுதூரப் பயணத்தில் மிகவும் லைட்டான
புத்தகங்கள், கதைகள், நாவல்கள் வாசிக்கப் பிடிக்கும். அதுவும் தனியாகச் சென்றால். குழு,
குடும்பம் என்றால் அதற்கு வாய்ப்பு இருப்பதில்லை. பெரும்பாலும் வேடிக்கப்
பார்த்துக் கொண்டு, ரசித்துக் கொண்டும் பேசிக்கொண்டும், விளையாடிக் கொண்டும் பயணிப்பதால்.
விருப்பமான ரைட் என்பதை விட ட்ரைவ்....கார்
ஓட்டுவது மிகவும் பிடிக்கும் இருவருக்குமே. பயணத்தில் ஓட்டிக் கொண்டே ரசித்துக்
கொண்டுப் பயணிப்பது மிகவும் பிடிக்கும். கடலை ஒட்டியப் பயணம், மலைப்பயணம்
ரசிப்போம் இருவருமே.
கீதா: கார் ஓட்டுவது அலாதிப் பிரியம். ஒரு
சில தொலைதூரப் பயணங்கள் ஓட்டியதுண்டு. என்றாலும் எனக்கு பைக் ரைடும் ரொம்ப்ப்
பிடிக்கும். அதுவும் வெகுதூரம், மலைகளுக்கிடையில், காடுகளுக்கிடையில் கடற்கரை
ஒட்டி என்று, பைக் ஓட்டத் தெரிந்தாலும் அதன் வெயிட்டை என்னால் ஹாண்டில் செய்ய
முடியாத காரணத்தினாலும், நாலடியாராக இருப்பதால் கால்கள் தரையில் எட்டாத
காரணத்தினாலும் ஓட்டுவதில்லை. ஹும் என்ன செய்ய?! அதனால் கார் டிரைவ் சாய்ஸ்.
கனவுப் பயணம் ஆஹா இருவருக்குமே நிறைய
உண்டு. பல திட்டங்கள் சேர்ந்தும், தனித்தனியாகவும் என்று. பல இடங்கள் லிஸ்டில்
உண்டு. சில இலக்குகளும் உண்டு. பார்ப்போம் வாழ்க்கைச் சக்கரம் இன்னும் எப்படி
எல்லாம் சுழலும் என்று தெரியவில்லை. என்றாலும்....
பயணம் என்பது ஒரு சிறந்த ஆசிரியர். அனுபவ
ஆசிரியர். பல
பண்பாடுகளையும், நாகரிகங்களையும் கற்றுக் கொள்ள உதவும்.
பள்ளியில், கல்லூரியில் கற்காத பல பாடங்களையும், வாழ்க்கைப் பாடத்தையும் போதிக்கும். நமது சந்தேகங்களுக்கு மௌனமாக,
அனுபவங்களின் வாயிலாகப் பதிலளிக்கும் ஒரு ஆசிரியர் என்றும் கூறலாம். இந்த உலகைக்
கண்கள் வழி கண்டு மனதை விரிவாக்கி, நமது எண்ணங்களையும், கருத்துகளையுமே மாற்றிப்
பண்படுத்தி, வடிவமைக்கும் ஆசிரியர்.
வாழ்வின் மீதான நம்பிக்கையையும், வாழ வேண்டும் என்ற உந்து
சக்தியையும் ஊர்ஜிதப்படுத்தும். அதனால் வாழ்க்கையின் மீது ஒரு ஆர்வம் கூட
உருவாகுகிறது. வாழ்வை நேசிக்கக் கற்றுக் கொள்வதால் வாழ்க்கையை வேறு ஒரு
கோணத்திலும், வித்தியாசமான, பரந்த பார்வையுடனும் பார்க்கவும் உதவுகின்றது.
பயணம் ஆழமான அன்பையும், நேசத்தையும் கூடப் புரிய வைக்கிறது.
பல புதிய நட்புகளை உருவாக்குகிறது, புதிய மனிதர்களையும் புரிந்துக் கொள்ளவும், நேசிக்கவும்
வைக்கிறது. இந்த உலகம் மிகவும் பரந்தது,
அதில் எண்ணற்ற ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை உணர வைக்கிறது. பயணங்களால் நமது ஆளுமை விரிவடைகிறது.
ஆதலால் பயணம் செய்வீர்! முடிவில்லாப் பயணங்களை! அது உங்கள்
வீட்டிலிருந்து அடுத்த வீட்டிற்கு என்றாலும்!!!!!! (லொள்ளுப்பா இந்த கீதா)
ஏனென்றால் பயணங்கள் முடிவதில்லை!!!!
சரி! என்ன ஸ்ரீராம் ரெடியா? எங்கள் ரிலே டார்ச்சை (நோ டார்ச்சர்!!!!) வாங்கிக்
கொள்ள? துளசிகோபால் சகோ, கூட்டாஞ்சோறு செந்தில், முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, ஜிஎம்பி சார், தேனம்மை சகோ, ஆவி, சீனு,
கலையாத கனவுகள் ராஜி, கீதா சாம்பசிவம் சகோ, ரஞ்சனி சகோ, திருப்பதி மகேஷ் எல்லாரும்
ரிலே ட்ராக்குக்கு வாங்கப்பா...(உங்கள்ல யாரெல்லாம் ஏற்கனவே ட்ராக்குல
இருக்கீங்களோ தெரியல...!!) பயணக் களைப்பு எங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் நீங்க
தொடருங்க...எங்களுக்கு அடுத்தப் பயணம் இருக்குதே! சகோ மைதிலிக்கு மிக்க நன்றி! இப்படி அழகான ஒரு சங்கிலி ரிலே ஏற்படுத்தியமைக்கு!
படங்கள் - இணையத்திலிருந்து.
சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
ஸ்ரீராம் எழுப்பிய கேள்வி சரிதானே...கேள்விகள் இல்லை என்றால் எப்படி நீங்கள் பதில் அளிப்பீர்கள்..சரி இதோ கேள்விகள் அதன் சுட்டியும்... http://makizhnirai.blogspot.com/2016/01/travel-with-my-friends.html
1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
2. மறக்க முடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
3. எப்படிப் பயணிக்கப் பிடிக்கும்?
4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை
5. விருப்பமான பயண நேரம்
6. விருப்பமான பயணத் துணை
7. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்
8. விருப்பமான ரைட் அல்லது ட்ரைவ்
9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்
10. கனவுப் பயணம் ஏதாவது?
//இரவுப் பயணத்தில் ஆங்காங்கே தூரத்தில் விளக்குகளுடன் மின்னி மறையும் கிராமங்கள், சிறிய ஊர்கள், இரவில் நிலவின் வெளிச்சத்தில் மின்னும் நீர் நிலைகள், மரங்கள், மலைகளின் அவுட்லைன்களுடன் இரவு உருவங்கள் என்று ரசிப்பதுண்டு. சில் காற்றுடன் மழைச்சாரல் என்றால் கூடுதல் இன்பம். அதுவும் ரயிலில். எனக்கு ஜன்னல் இருக்கைதான் மிகவும் பிடிக்கும். கேட்டுப் பெறுவதுண்டு ரயிலானாலும், பேருந்தானாலும்.//
பதிலளிநீக்கு:) பயணங்கள் பற்றி மிக அழகான யதார்த்தமான கட்டுரை. பாராட்டுகள்.
மிக்க நன்றி வைகோ சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...தங்கள் கருத்துரை கண்டு மிகவும் மகிழ்ச்சி..
நீக்குசகோ துளசிதரன் & கீதா,
பதிலளிநீக்குஉண்மைப் பயணத்தைச்சொல்லி பயமுறுத்திட்டீங்களே !! உங்கள் கப்பல் பயணத்தை கூடிய சீக்கிரமே ஆரம்பிச்சிடுங்க.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
ஹஹஹஹ் அதை விட்டுத் தள்ளுனள்..மத்ததை ரசிப்போம் சித்ரா....பொங்கல் பொங்கியது..அங்கு??!!
நீக்குமிக்க நன்றி சித்ரா தங்க்ளின் வருகைக்கும் கருத்திர்கும்
பயணங்களும் முடிவதில்லை, தொடர்பதிவுகளும் முடிவதில்லை! கேள்விகளைக் காபி செய்து கொள்ளலாம் என்றால் கேள்விகளே காணாமல் அதைத் தேட மற்ற பழைய பதிவுகளுக்குப் போக வேண்டும்! ம்ம்ம்... :)))) //ஸ்ரீராம் ரெடியா?// தொடர்பதிவுகள் ஆக்கிரமித்துள்ள எங்கள் ப்ளாக்கில் இந்தத் தொடர்பதிவுக்கு வரும் புதன் கிழமைதான் நேரம் ஒதுக்க முடிகிறது! ஹிஹிஹி...
பதிலளிநீக்குகொடுத்துவிட்டேன் இங்கும். பரவாயில்லை புதன் அன்றே வரட்டுமே...நாங்களும் தாமதம்தான்
நீக்குமிக்க நன்றி
பதிலளிநீக்குசிறிது சிறிதாக எழுதிக் கொண்டிருக்கிறேன்... சில பதில்கள் உங்கள் பதிலோடு ஒத்துப் போகிறது...
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...
பாருங்கள் நீங்கள் எழுதிக் கொண்டிருக்கின்றேன் என்று சொல்லி அதற்குப் பதில் கொடுக்கும் முன் நீங்கள் பதிவே போட்டாயிற்று. பார்த்தோமே அழகாகச் சொல்லியிருந்தீர்கள்..
நீக்குபொங்கல் பொங்கியதுதானே!! நன்றி டிடி
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி சகோ தங்கள் பொங்கல் வாழ்த்துகளுக்கு
நீக்குதமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கரந்தை சகோ
நீக்குஎன்ன பிரச்சினை என்றால் ,இறுதிப் பயணத்தில் யாரும் துணையாய் வருவதில்லை :)
பதிலளிநீக்குமிக்க நன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குவணக்கம் பதிவு வெளியானதும் முதல் நபராய் நள்ளிரவில் செல்லில் படித்து விட்டேன்
பதிலளிநீக்குஅழகிய நீரோடை போல விளக்கிச் சொன்ன விதம் அழகு
தங்களது கப்பல் பயணம் விரைவில் நிறைவேறட்டும்
பலமுறை நான் கப்பலில் பயணித்தாலும் (கனவில்) நிச்சயம் ஒருநாள் கப்பலில் பயணிப்பேன் (நனவில்) என்ற நம்பிக்கை இருக்கின்றது
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
தமிழ் மணம் 4
மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஹலோ கப்பலில் பயணித்ததுண்டு. தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் வரை.
நீக்குமிக்க நன்றி ஜி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குஇனிய பொங்கல் வாழ்த்துகள்....
பதிலளிநீக்குபயண அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொண்ட விதம் அருமை கீதா மேடம் / துளசி சார்....
பதிலளிநீக்குஅழகாச் சொல்லியிருக்கீங்க...
வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
அருமையான பகிர்வு. என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி. விரைவில் எழுத முயற்சிக்கிறேன். நான் கப்பலில் பயணம் செய்ததில்லை. ஆனால் ஸ்டீமரில் சென்றிருக்கிறேன். யு.எஸ்ஸில் சின்னதாகக் கப்பல் போன்றதொரு பெரிய படகில், அதுவும் ஸ்டீமரோ? பயணம் செய்திருக்கேன். மற்றபடி பயணங்கள் அதிகம் தான். ஆகவே நினைவில் நிற்கும் சம்பவங்களுக்குக் குறைவில்லை.
பதிலளிநீக்குஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குவாவ்!!! அப்டியே தலைமன்னாரில் கிளம்பி இப்போ தான் வீடுவந்து சேர்கிறேன். சகாஸ்!!! ரெண்டுபேரும் அவ்ளோ அழகா, தெளிவா விளக்கமா பதில் அளித்தமைக்கவே உங்களுக்கு என் ஸ்பெஷல் பொக்கே!! ஆசைக்கப்பல் எல்லோர் மனதிலும் நீந்துகிறது இல்லையா சகாஸ்! இவ்ளோ அன்பா கொடுத்த டார்ச்சை டார்ச்சர் ன்னு சொல்லிபுட்டீகளே!!!! எப்போதும் கில்லியாய் கலக்கும் சகாஸ் இடம் ஒரு வேண்டுகோள் " இந்த பயணப்பதிவில் " நான் தவறவிட்ட பதிவுகளை கண்டால் ப்ளீஸ்! ப்ளீஸ் எனக்கு சொல்லுங்க:) இப்போ பயணத்தில் இணைந்தமைக்கு நன்றி! நன்றி!நன்றி!
பதிலளிநீக்குஉங்கள் பயணத்தையும்.உங்கள் எழுத்துக்களையும் ரசித்து வியக்கிறேன்..உங்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇரண்டுபேருமே மாறி மாறி – நல்ல கருத்துரையாடல். எனது உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா பயணங்கள் தொடரட்டும் த.ம 7
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
செம...
பதிலளிநீக்குநானும் என்னோட மாஞ்சோலைப் பயணத்தை ஆரம்பித்து பாதியிலியே தொங்கல்ல விட்டுட்டேன்..., உங்க பதிவைப் படிச்சதும் உடனே முடிக்கணும் போல இருக்கு..
- பொங்கல் வாழ்த்துக்கள்.. இருவருக்கும்
வணக்கம்.
பதிலளிநீக்குபயணங்களை மகிழ்வுடன் அனுபவிக்கின்ற பலரும் தலைசிறந்த எழுத்தாளர்களாய் இருக்கிறார்கள்.
கேள்விக்கான இருவரின் பதிலும் ரசனை.
தொடர்கிறேன்.
நன்றி.
ஆஹா! இருவரின் பயண அனுபவங்களும் ரசனைகளும் ரசிக்கும்படியாய்!
பதிலளிநீக்குபடம் ஒன்றாய்த் தேர்ந்தெடுத்ததுபோல் நடத்தியும் விடுவோம் :-)
மலைப்பயணம், கடற்கரைப் பயணம் எனக்கும் பிடிக்கும். தொடர் பயணம் நன்றாய் இருக்கிறதே!
விசித்திரமான பயணம் பதில்கள் ரசித்தேன் பாடலில் முரண் .
பதிலளிநீக்குமிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் பொங்கல் வாழ்த்திற்கு
பதிலளிநீக்குஅருமையான பயணங்கள். அதைவிட அருமையான பகிர்வுகள். சூப்பர் துளசி சகோ & கீத்ஸ். தொடர்கிறேன். :) இந்த வாரத்துக்குள் போட முயற்சிக்கிறேன் :)
பதிலளிநீக்குஅட!அனைத்தும் அருமையான அனுபவங்கள். இலங்கை தலை நகரிலிருந்து தலை மன்னாருக்கு பயணம் செய்து எனில் கீதா இலங்கையில் இருந்தீர்களா?
பதிலளிநீக்குஒன்று பட்டு இருவரும் மாறி மாறி பயண அனுபவங்கள் எழுதி அசத்தி இருக்கின்றீர்கள்.அனைத்தையும் ரசித்தேன்பா! நன்று!
ஆஹா.... அருமை.... பயணங்கள் இனிமையானவை. தொடரட்டும் பயணங்கள்.
பதிலளிநீக்குபயணம் குறித்த தங்கள் இருவருடைய அனுபவங்களும் கருத்துகளும் மிகவும் அருமை. பயணங்களே நம்மை வாழ்விக்கின்றன என்பது எவ்வளவு உண்மை.
பதிலளிநீக்கு