முதல் பகுதி http://thillaiakathuchronicles.blogspot.in/2016/01/Vadlamudi-Trip-1-Guntur-Tenali.html#links
பக்கின்கேம் கால்வாய்
முதல் இரண்டு நாட்கள் வட்லமுடி கிராமத்தில்
ஒரு சுற்று சுற்றினோம் நடந்து சென்றே. வாருங்கள் என்னுடன். தெனாலி போகும் சாலையில்
20 நிமிட நடையில் வருவது பக்கிங்ஹாம் கால்வாய்! என்னடா இவள் பக்கிங்க்ஹாம்
கால்வாயை விடமாட்டாள் போலிருக்கின்றதே என்று நினைக்கின்றீர்களா! அதற்கு முன்
இந்தக் கால்வாய் வரும் முன் நிறைய அழகழகானப் பூக்கள் செடிகள் விற்கும் நர்சரிகள்
கண்ணயும் மனதையும் கொள்ளை கொள்ளுகின்றன.
நர்சரிகள்
குப்பைகளுடன்
இதுதான் குறுக்கு அணை. ஜகர்லா முடிலாக்
இங்கு பக்கிங்ஹாம் கால்வாய் நன்றாக
இருந்தாலும், அதன் நடுவில் இருக்கும் சிறிய குறுக்கு அணையைக் கொஞ்சமாகத் திறந்து
வைத்திருப்பதால் அதிலிருந்து வரும் நீர் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாய்கின்றது. அங்கு
வழக்கம் போலக் குப்பைகள். இது போன்ற சிறிய சிறிய அணைகள் ஆங்காங்கே நீர்நிலைகளில்
காணப்படுகின்றன.
திறந்து விடப்படும் கால்வாயின் பகுதியில் குப்பைகள்
இவை குறிப்பாக நீர்ப்பாசனத்திற்குப்
பயன்படுத்தப்படுகின்றன. சுற்றிலும் வயலும்
தோட்டங்களும்தான். அணையின் மறு புறம்
நிறைய நீர். அதிலிருந்து குறுக்கில் மற்றொரு தடுப்பு வைத்து அங்கும் கால்வாய்
செல்கின்றது. நிறைய நீர் உள்ள இடத்தில் கிராமத்து மக்கள் குளிக்கின்றார்கள் அதாவது
பெரிய பக்கின்காம் கால்வாயிலிருந்து மற்றொரு கால்வாய். இந்தப் படங்கள் இங்கு கொடுத்துள்ளேன். வட்லமுடியைச் சுற்றியே நிறைய கால்வாய்கள் அதில்
படித்துறைகள் ஆங்காங்கே இருப்பதால் அங்கு மக்கள் துணிகள் துவைத்துக் குளிக்கவும்
செய்கின்றார்கள். இந்த வாய்க்கால்களின் படங்களை அடுத்தப் பதிவில் தருகின்றேன். அவை
வேறொரு அலைபேசியில் இருப்பதால்.
தெனாலிக்குள் கால்வாய்கள் குப்பைகளுடன் அழுக்கு நீருடன்
40நிமிடம் நடந்துவிட்டு அங்கிருந்த பேருந்து
நிறுத்தத்திலிருந்துத் தெனாலிக்குப் பேருந்தில் சென்றோம். தெனாலிக்குள் நுழையும்
போது ஒரு கால்வாய் அது கழிவுநீர்க் கால்வாய் போன்று அத்தனைக் கறுப்பாக,
குப்பைகளுடன் இருக்கின்றது. அதற்கு இணையாக மற்றும் மூன்று கால்வாய்கள் – கிருஷ்ணா நதி கால்வாய்கள் தெனாலி முழுவதும் ஓடுகின்றன. பேருந்து
நிலையத்தின் அருகிலேயே, அதாவது நகரத்தின் மையப்பகுதிலேயே நீண்டு நகரம் முழுவதும்
ஓடுகின்றன. ஆனால் குப்பைகளுடன்! தெனாலி ஆந்திராவின் பாரிஸ் என்றும்,
நெற்களஞ்சியத்தின் ஒரு பகுதியாகவும் புகழ்பெற்று உள்ளது. இந்த மூன்று
கால்வாய்களில் ஒன்றில் நிஜாம்பட்னம் துறைமுகம் வரை படகுகள் செல்லும் வழியாக உள்ளது
என்று சொல்லப்படுகின்றது. ஆனால் நான்
எந்தப் படகும் பார்க்கவில்லை.
தெனாலியிலிருந்து விஜயவாடாவிற்குப் பேருந்தில்
சென்றோம். நான்ஸ்டாப் பேருந்து. ஒரு மணி நேரப் பயணம். பேருந்தில் ஏறும் முன் ஒரு உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டோம். அங்கு இருந்த புத்தர் சிலையும், மயில் சிலை ஒன்றும் மேலே..
ஆங்காங்கே கிராமங்களைப் பிரதானச் சாலையுடன் இப்படிப் பாலங்கள் இணைக்கின்றன
கால்வாயின் ஓரங்களில் குப்பைகள்
இந்தக் கிருஷ்ணா நீர்க் கால்வாய்கள் நகருக்குள்
சாக்கடைகள். இதில் இரண்டு கால்வாய்கள் இரு புறம் ஓட நடுவில் விஜயவாடாவிற்குச்
செல்லும் சாலை. தெனாலியைக் கடக்கும் போது சிறிது சுத்தமாக ஓடுகின்றது என்றாலும்,
ஆங்காங்கே சிறு சிறுகிராமங்கள் வரும்போது மீண்டும் கால்வாய்களின் ஓரங்கள்
குப்பைகளுடன். ஆங்காங்கே இருக்கும் கிராமங்களுக்கு இந்தக் கால்வாய்களிலிருந்து
சிறு சிறு மடைத் திறப்புகளுடன் மற்றும் கால்வாய்கள் ஓடுகின்றன வயல்களின் நடுவாகவும்,
கிராமங்களின் நடுவாகவும்.
விஜயவாடா செல்லும் சாலையின் ஒரு புறம் ஓடும் அகலமான கிருஷ்ணாவின் ஒரு பிரிவு நதி.
நடுவில் ஒரு 20 நிமிடப் பயணத்தில் ஒருகிராமம்
வருகின்றது அங்கு இந்தக் கால்வாய் ஆங்காங்கே பல மடைத் திறப்புகளுடன் பிரிந்து அதன்
முதன்மையான நதி கிருஷ்ணாவிலிருந்து திறந்துவிடப்பட்ட நீருடனான நதி விரிகின்றது.
அந்த நதி சாலையின் ஒரு புறம் அடுத்த ஒரு 20 நிமிடத்திற்கு வருகின்றது. பிரியும்
கிராமத்தின் பெயர்கள் எல்லாமே தெலுங்கில் இருந்ததால் குறித்துக் கொள்ள முடியவில்லை.
சரி விஜயவாடாவை நெருங்கி விட்டோம். அங்கு பார்த்த ப்ரகாசம் பாரஜ் (அணைக்கட்டு)
பவானி, கனகதுர்கா கோயில் பற்றி, பவானிக்குப் படகில் பயணித்துக் கொண்டே
பேசுவோமா....
--------கீதா
விளக்கவுரைகளுடன் அழகிய புகைப்படங்கள் நன்று தொடர்கிறேன்
பதிலளிநீக்குதமிழ் மணம் இணைக்க முடியவில்லையே ?
மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். தமிழ்மணம் பற்றித் தெரியவில்லை. என்னாலும் இணைக்க முடியவில்லை..பரவாயில்லை
நீக்குஅழகான படங்களுடன், அற்புதமான செய்திகளுடன், பயணக்கட்டுரை சும்மா ஜொலிக்குது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி வைகோ சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குதங்கள் தெனாலி பயணத்தை படங்களுடன் தந்து எங்களையும் தொடர வைத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குகாவிரி, வைகை பாயும் பகுதிகளில் எல்லாம் இதுபோல வாய்க்கால்கள் நீர் பிரித்து பாசனத்துக்கு செல்லப் போடப்பட்டிருக்கின்றன... நீர் போகும்போது மக்கள் குளிக்க படிகள் கட்டப்பட்டிருக்கும்....
குப்பைகளைப் போடுவதில்தான் நாம் கில்லாடியாயிற்றே... நாமாவது திருந்துவதாவது...
படங்களில் உங்கள் பெயரைப் பதியுங்கள்...
தொடர்கிறேன் கீதாக்கா...
மிக்க நன்றி குமார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். ஆம் காவிரி வைகை பாயும் இடங்களிலும் இருக்கின்றனதான். தாமிரபரணியிலும் உண்டுதான். குப்பைகள் ம்ம்ம் ..படங்களில் பெயரைப் பதிக்கின்றேன் குமார் நன்றி. இப்போதையப் பதிவிலும் விடுபட்டுவிட்டதுதான். படங்கள் அவ்வளவு தெளிவாக இல்லையே...
நீக்குபதிவை இணைத்தும் பார்த்தேன்.. முடியலை...
பதிலளிநீக்குஓட்டும் போட முடியலை...
தமிழ்மணம் பலருக்கு இப்படித்தான் இருக்கு...
பிரச்சினை இருக்கும் போலும்.
தமிழ்மணம் இணைவைதில்லை குமார் ஏதோ பிரச்சனை போலும் பரவாயில்லை..
நீக்குகால்வாய்த் திட்டம் நல்லா இருக்கும் போல் தோன்றுகிறதே! குப்பைகள் :(
பதிலளிநீக்குநம்மூர் மட்டும் வறண்டு போகுதே.. :(
ஆஹா, படகில் கீதாவோடு! இதோ, life jacket போட்டுக்கொண்டு நான் ரெடி! :)
மிக்க நன்றி க்ரேஸ் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். இதோ அந்தப் பதிவு வந்து விட்டது...என்றேனும் பயணிப்போம் தானே...நிச்சயமாக க்ரேஸ்!!
நீக்குகுப்பைகள்
பதிலளிநீக்குகுப்பைகள்
குப்பைகளே இந்தியாவின் தேசிய அடையாளமாக மாறிப் போய்விடுமோ
மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். அப்படித்தான் தோன்றுகின்றது...சென்னை இன்னும் மோசமாகின்றது
நீக்குகுப்பைகளைப் பார்க்கக் கஷ்டமாக இருந்தாலும், இலேஸாக ஒரு அல்ப திருப்தி! மனுஷ மனசுதானே! ஏன் தமிழ்மணம் இணைக்கப்படவில்லை? சென்ற பதிவும் கூட இணைக்கப் படாமலேயே இருக்கிறதே....
பதிலளிநீக்குஹஹஹ ஆமாம் எனக்கும் அதே....தமிழ்மணம் ஸ்ட்ரைக் போலும்!!! இணைக்க முடியவில்லை..
நீக்குஅழகான படங்கள்.. அருமையான பயணம்..
பதிலளிநீக்குபாராட்டுக்கள்..!
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..
நீக்குபடங்கள் அருமை! குப்பைகள் இல்லாவிடின் இந்தியா இன்னும் அழகாக இருக்கும்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஆம் உண்மையே!
நீக்குநல்ல பயணம். உடன்வருவது போன்ற உணர்வு. தொடர்ந்து பயணிக்கிறேன். உங்களுடன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கள் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...
நீக்குகிருஷ்ணா பாரேஜ், கனகதுர்கா கோவில் என பல இடங்கள் இனிய நினைவுகளை மீட்டெடுத்தன. சிறு வயதில் வருடா வருடம் கோடை விடுமுறையில் தங்குவதே விஜயவாடாவில் இருக்கும் பெரியம்மா - பெரியப்பா வீட்டில் என்பதால் இவ்விடங்கள் பல முறை சென்றதுண்டு. உங்கள் பதிவின் மூலம் இவ்விடங்களை மீண்டும் பார்க்கப்போவதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவெங்கட்ஜி நீங்கள் சென்றிருப்பீர்கள் என்று தெரியும். உங்கள் பதிவில் கூட விஜயவாடாவில் விடுமுறை பற்றிச் சொல்லிய நினைவுஇருக்கிறது. தகவலில் ஏதேனும் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள். ஜி
நீக்குநாறும் வாய்க்கால்கள் நடுவே தமிழ் மணமும் மணப்பதாக இல்லை ,என்னாச்சு :)
பதிலளிநீக்குபகவான்ஜி மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..தமிழ்மணம் மணக்க மாட்டேங்குது...
நீக்குபயணங்கள் ஒரு வரம்.
பதிலளிநீக்குஅது எல்லார்க்கும் எப்போதும் கொடுத்து வைப்பதில்லை. அழகான படங்களுடன் நானும் தொடர்கிறேன்.
நன்றி சகோ.
மிக்க நன்றி விஜு சகோ தங்களின் கருத்திற்கும். ஆம் பயணங்கள் வரமே. எனக்கும் பல இடங்கள் போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் ஒரு சில முடிகின்றது. அதுவே பெரிய விஷயம்தானே சகோ இல்லையா...
நீக்குநல்ல பதிவு. படங்கள் மொபைலில் எடுத்ததால் சற்று தெளிவில்லாமல் இருக்கிறது. இன்னும் எனது பயணம் ஓயவில்லை. அதனால்தான் முன்புபோல் அதிகம் வலைப்பக்கம் வரமுடியவில்லை.
பதிலளிநீக்குத ம 2
ஆம் செந்தில் மொபைல் என்பதால்...வாருங்கள் நிதானமாக எப்போது நேரம் கிடைக்கின்றதோ அப்போது...மிக்க நன்றி பயணத்தின் நடுவிலும் பதிவு பார்த்துக் கருத்துச்சொன்னமைக்கு..
நீக்குபயணங்கள் தொடரட்டும்
பதிலளிநீக்குமிக்க நன்றி மது தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
அழகிய படங்களுடன் அறியாத தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அங்கும் பக்கிங்காமா? உங்களை தொடர்ந்து வரும் போலவே!
பதிலளிநீக்குபயண அனுபவங்களில் பெரும்பாலும் நீர் நிலைகள்.அதன்சுற்றுப்புறம் குறித்து அவதானித்தைருப்பது பதிவில் தெரிகின்றது. அருமை தொடருக்ங்கள்.
ஆந்திராவில் அதிகம் சுற்றியதில்லை. சிகந்திராபாத் வாசத்தின் போது ஹைதராபாத், ஹூசேன் சாகர், சார்மினார், சாலார்ஜங் ம்யூசியம்னு பார்த்ததோடு சரி. இந்தக் குறிப்புகள் எல்லாம் அங்கே வந்து சுற்றிப் பார்க்கச் சொல்லி ஆவலை ஊட்டுகிறது. பக்கிங்காம் கால்வாயின் தற்போதைய நிலைமை மனதைக் கனக்க வைக்கிறது. பவானி என்று ஆந்திராவிலும் ஓர் ஊரா?
பதிலளிநீக்கு