சனி, 28 நவம்பர், 2015

வரலாற்றுச் சான்றுகளாக மாறிய பேசும் (புகை) படங்கள். -1

லியானார்டோ டா வின்சியின் லாஸ்ட் சப்பர்
ராஃபேலின் “ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்
ரெம்ப்ராண்டின் “அப்டக்ஷன் ஆஃப் யூரோப்

லியானார்டோ டா வின்சியின் லாஸ்ட் சப்பரும்”, ராஃபேலின் “ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸும்” ரெம்ப்ராண்டின் “அப்டக்ஷன் ஆஃப் யூரோப்”பும், ரவி வர்மனின், “தர்பைப் புல் முனை காலில் தைத்த சகுந்தலையும்” எப்போதாவது ஏதேனும் புத்தகத்திலோ, நாளிதழிலோ நாம் காண நேரும் போது அவை நம்மை நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த, அவற்றுடன் தொடர்புடைய நிகழ்வுகளை நம் மனதில் கொண்டு வரும்.  அது போன்ற சித்திரங்கள் பேசுவதெல்லாம் காலத்தால் அழியாத வரலாற்று உண்மைகள்.  இப்போதும் வரலாறு படைக்கும் சித்திரங்கள் வரையப்படாமல் இல்லை.  ஆனால், அவற்றை விட இப்போதெல்லாம் வரலாற்று உண்மைகளை உலகிற்கு உணர்த்திக் கொண்டிருப்பைவகள் என்னவோ வரலாறு ஆகவிருக்கும் சம்பவங்களைக் காண நேரும்  புகைப்படக் கருவியின் கண்களுடன் சுற்றித் திரியும் புகைப்பட நிபுணர்கள் ஒற்றி எடுக்கும் புகைப்படங்கள்தான்.

ஐலான் குர்தி
     சிரியா நாட்டு அகதிகள் அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுதல்
  இவர்களைப் பார்க்கும் போது நாம் சொர்கத்தில் வாழ்கின்றோம் இல்லையா...ஆனால் கிடைத்த சொர்கத்தையும் நாம் கெடுத்துக் கொண்டிருக்கின்றோம்...

 சிரியாவிலிருந்து க்ரீஸுக்குப் படகில் தப்பிச் சென்ற போது விபத்துக்குள்ளான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது ஐலான் குர்தியின், கரையில் ஒதுங்கிய, உயிரற்ற உடலைக் காண்பித்த புகைப்படம் அது போல் ஒன்றே. சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்துத் தப்பி, ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற 3 1/2 கோடி மக்களின் துயரத்தையும், உயிரைப் பணையம் வைத்து அவர்கள் மேற்கொண்ட அப்பயணத்தின் உயிர் நீத்தவர்களையும் நினைக்க வைக்கும் அப்புகைப்படம் சமீபத்தில் உலகை உலுக்கிய ஒன்றும் கூட. எப்படியோ, அப்புகைப்படம் சிரியாவின் அகதிகளைத் தங்கள் நாடுகளுக்குள் அதுவரை அனுமதிக்காமல் இருந்த பல ஐரோப்பிய நாடுகளில் மனதை மாற்றி அவர்கள் நாட்டுக் கதவுகளை சிரியா அகதிகளுக்காகத் திறக்கச் செய்தது.

ஆர்க்கோ டத்தா எடுத்த ஒரு புகைப்படம்

     அது போலவே 2004 ஆம் ஆண்டு புலிட்ஸர் விருது பெற்ற ஆர்க்கோ டத்தா எடுத்த ஒரு புகைப்படம்.  சுனாமியில் உயிரிழந்த கணவனின் சடலத்தருகே மண்டியிட்டு அழும் ஒரு பெண்ணின் அப்புகைப்படம், காண்போரது மனதில் தீக்கங்குகளை வாரி இரைத்துச் சுனாமியை நினைவுபடுத்தும் ஒன்று.

தன்னைக் கொல்ல வேண்டாம் எனக்கெஞ்சும் குத்துப்பின் அன்சாரி மற்றும் வாளுடன் இரு கைகளை உயர்த்தி எதிரிகளைக் கொல்லத் தயாராய் நிற்கும் அசோக் மோச்சி தற்போது தாங்கள் செய்த தவறை உணர்ந்து மதக்கலவரம் கூடாது என்று பிரச்சாரம். பாராட்டுவோம்.

  அது போலவே கண்கலங்கி கைக்கூப்பித் தன்னைக் கொல்ல வேண்டாம் எனக்கெஞ்சும் குத்துப்பின் அன்சாரி மற்றும் வாளுடன் இரு கைகளை உயர்த்தி எதிரிகளைக் கொல்லத் தயாராய் நிற்கும் அசோக் மோச்சியின் புகைப்படங்கள் குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தை நினைவுபடுத்துபவை. 

கடந்த வருடம் இவ்விருவரும் இந்தியாவெங்கும் பல இடங்களில் ஒரே மேடையில் தோன்றி கலவரத்திற்கெதிராகப் பிரச்சாரம் செய்தார்கள்.  செருப்புத் தைத்துக் கொண்டிருந்த தான் அன்று சிந்திக்காமல் செய்த தவறுக்கான பிராயச் சித்தம்தான் இப்போது தான் மேற்கொள்ளும் பிரச்சாரம் என்று அசோக் மோச்சி சொல்லி வருந்துவதைப் பார்த்த போது மதக் கலவரத்தில் பங்கெடுப்பவர்களில் பலரும் இப்படிச் சிந்திக்காமல், காளை ஈன்றது எனக் கேட்கும் போது கயிற்றை எடுத்துக் கொண்டு கன்றினைக் கட்டப் போகின்றவர்களே என்று எனக்குத் தோன்றியது.

நிக் உட் - கிம்  ஃபுக் தற்போது....
Image result for kim phuc and nick ut
கிம் ஃபுக், தற்போது, யு . என். குட்வில் அம்பாசடராக இருக்கிறார்

அது போல் 43 வருடங்களுக்கு முன், 1972 ஜீன் மாதம் 8 ஆம் தேதி வியட்நாம் போரின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்.  தென்வியட்நாம் ராணுவத்தின் குண்டு வீச்சில் அகப்பட்டுத் தீப்பிடித்த ஆடையை அவிழ்த்தெறிந்து நிர்வாணமாக கதறி அழுது ஓடும் ஒன்பது வயதான கிம் ஃபுக்கின் புகைப்படம். வியட்நாம் யுத்தமும் அதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா வகித்தப் பங்கையும் அதன் விளைவுகளையும், வியட்நாமியரின் துயரத்தையும் நம் மனத்திரையில் ஓடச் செய்கின்ற ஒரு புகைப்படம் அது. 

அப்புகைப்படத்தை எடுத்த நிக் உட் என்ற 21 வயது இளைஞன் உடனே அக்குழந்தையின் உடலில் பற்றிப் பிடித்த தீயை அணைத்துத் தான் அணிந்திருந்த கோட்டால் அவளைப் போர்த்தித் தன் காரில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அச்சிறுமியை உயிர்பிழைக்கச் செய்தார்.  இப்போது கானடா, டோரோண்டோவில் வாழும் கிம்ஃபுக் யுனைட்டெட் நேஷனின் குட்வில் அம்பாசிடராகவும் இருக்கின்றார்.  சமீபத்தில் ஒரு விழாவில் பங்கெடுத்த கிம்ஃபுக் மற்றும் நிக் உட்டின் புகைப்படம் நாளிதழ்களில் வெளியிடப்பட்டதைப் பார்த்த போது 1972 ஆம் வருட புகைப்படம் நம் மனதில் உண்டாக்கிய வேதனை கொஞ்சம் குறைந்தது போல் ஒரு உணர்வு. 

தொடரும் பேசும் புகைப்படங்கள்.....


 புகைப்படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து...



61 கருத்துகள்:

  1. ,படைப்பும் ,படங்களும் சொல்லும் விதமும் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைக்கத்தூண்டுகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செல்வா....ஆனால் அந்த அளவிற்குத் தகுதியாவனா/வர்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி...கருத்திற்கும்

      நீக்கு
  2. நல்ல படங்கள். சில கண்ணீரை வரவழைக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  3. வணக்கம்
    ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு வித உணர்வை தருகிறது.... படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்.. த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  4. மனதைக் கனக்கச் செய்யும் புகைப் படங்கள்
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தையாரே தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  5. புகைப்படங்கள் பல செய்திகளை அளிக்கின்றன என்பர். பல அரிய அருமையான புகைப்படங்களைத் தொகுத்த விதம் அருமை. சில மனதை அதிகமாக கனக்க வைத்துவிட்டன. கிம்புக் அவர்களைப் பற்றி படித்துள்ளேன். தற்போது தங்கள் பதிவின் மூலமாக மறுபடியும் பார்க்கவும், படிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  6. மிக மிக அருமையான பகிர்வு. சமீபத்தில் தினமணி தீபாவளி மலரில் 2015 வருடத்தின் நோபல் பரிசு பெற்ற செர்னோபில் குரல்கள் என்கிற புத்தகத்தின் ஒரு பகுதியைப் படித்து மனம் கலங்கிப் போனேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். செர்னோபில் படங்களும் அப்படித்தான்...ஈழம் படங்கள் இப்படிப் பல சொல்லலாம்தான்...மனதைக் கலங்க வைக்கும்...

      நீக்கு
  7. உண்மையில் அந்தப் படங்கள் - உண்மையைப் பேசும் படங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...

      நீக்கு
  8. நெஞ்சை உலுக்கும் படங்கள் (நிகழ்வுகள்)

    பதிலளிநீக்கு
  9. வரலாற்று நிகழ்வுகளை கண் முண் கொண்டு வந்த பதிவு,நெஞ்சம் பிசைந்தது,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி விமலன் தங்களின் முதல்?! வருகைக்கும் கருத்திற்கும்..

      நீக்கு
  10. கோடி வார்த்தைகள் ஏற்படுத்தாத ஒரு
    உணர்வினை ஒரு புகைப்படம் ஏற்படுத்துவிடும் என்பதுதான்
    எத்தனை உண்மை
    அற்புதமான புகைப்படங்கள் அருமையான
    விளக்கம்.தொடர நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  11. புகைப்படங்கள் பேசுவது புதுமை ஐயா. சில புகைப்படங்கள் போரையே நிறுத்தியிருக்கின்றன. அரிய தகவல்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயசீலன் ரொம்ப நாட்களாகிவிட்டது.....உங்களைக் கண்டு...புதுகை உங்கள் ஊராயிற்றே நீங்கள் பதிவர் விழாவிற்கு வந்து உங்களைச் சந்திக்காமல் போய்விட்டோமோ என்றுதான்....கல்லூரிப்படிப்பு இறுதிவருடமோ...

      நீக்கு
  12. பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  13. [[[இவர்களைப் பார்க்கும் போது நாம் சொர்கத்தில் வாழ்கின்றோம் இல்லையா...ஆனால் கிடைத்த சொர்கத்தையும் நாம் கெடுத்துக் கொண்டிருக்கின்றோம்]]]

    உண்மை தான்!
    இருப்பதை விட்டு பறப்பதை பிடிக்காதே! நல்ல பதிவு!
    கிராமங்களில் தான் இந்தியா வாழ்கிறது! எவ்வளவு பெரிய உண்மை!

    நான் சென்னை நகரத்தில் பிறந்து வளர்ந்தாலும்...
    .இன்று சென்னை ஒரு "நரகமாக" மாறிவிட்டது!
    மழைக்கு முன்பே இது என்னுடைய கருத்து. சுருங்க சொன்னால், சென்னை was gang-raped by one and all!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நம்பள்கி! நிச்சயமாக கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது ஆனால் அந்தக் கிராமங்களே இப்போது சாயம் பூசத் தொடங்கிவிட்டனவே.

      இன்று சென்னை நரகமே அதில் சந்தேகமே இல்லை நம்பள்கி.

      யெஸ் ரேப்ட் பை ஆல்....நல்ல கருத்து ...

      மிக்க நன்றி நம்பள்கி!

      நீக்கு
    2. மிக்க நன்றி நம்பள்கி! நிச்சயமாக கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது ஆனால் அந்தக் கிராமங்களே இப்போது சாயம் பூசத் தொடங்கிவிட்டனவே.

      இன்று சென்னை நரகமே அதில் சந்தேகமே இல்லை நம்பள்கி.

      யெஸ் ரேப்ட் பை ஆல்....நல்ல கருத்து ...

      மிக்க நன்றி நம்பள்கி!

      நீக்கு
  14. ஆம் உண்மைதான் சில புகைப்படங்கள் வரலாறுகளாகின்றன. நான் ரசித்த பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கு..ரசித்தமைக்கும்

      நீக்கு
  15. புகைப்படங்களும் விடயங்களும் மனதை கணக்க வைத்து விட்டது
    தமிழ் மணம் 10

    பதிலளிநீக்கு
  16. கண்ணீரை வரவழைத்த புகைப்படங்கள். மனதைக் கலங்க அடித்தது. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  17. மனதைக் கலங்க வைக்கும் தொகுப்பு !

    பதிலளிநீக்கு
  18. ஒவ்வொரு புகைப்படமும் ஒரு சம்பவத்தையோ,
    ஒரு துயரத்தையோ சொல்லிவிடுகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன் சகோதரரே தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  19. அருமை அருமை, நான் கொஞ்ச நாள் இப்படி வரலாற்றில் இடம் பெற்ற படங்களைப் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறேன். தங்களின் பதிவை படிக்கும் போது அது மீண்டும் நினைவில் நிழலாடுகிறது.
    தொடருங்கள், தொடர்கிறேன்.
    த ம 12

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில் சகோ! உங்கள் கட்டுரை தளத்தில் இருக்கின்றதா? பார்க்கின்றோம்....மிக்க நன்றி சகோ...

      நீக்கு
  20. சில திருத்தங்கள் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்:

    //31/2 கோடி மக்களின் துயரத்தையும்,//

    "3 1/2 கோடி மக்களின் துயரத்தையும்,"

    //கிம் ஃபுக் யு என் குட் வில் அம்பாசடராக இருக்கிறார்//

    "கிம் ஃபுக், தற்போது யு. என். குட்வில் அம்பாசடராக இருக்கிறார்"

    //நிக் உட் - கிம் ஃபுக் தற்போது....//
    //மிக் உட் என்ற 21 வயது//
    //நிக் உட்டின் புகைப்படம்//

    எது சரி? நிக் உட்? மிக உட்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரரே ! மாற்றிவிட்டோம். நிக் உட் என்பதுதான் சரி

      சென்னைதான் எங்கள் தலைமையகம். அதாவது கீதாவின் வீட்டிலிருந்துதான் பதிவுகள் வெளியாதல். துளசி வாசித்து, அன்று இரவே வெகு நேரமாகிவிட்டது பதிவிட்டு வெளியிட..மீண்டும் வாசித்த போதும் கண்ணில் படவில்லை...கீதா மறுநாள் பயணம். இப்போதும் பயணத்தில்தான். இடையில் கிடைத்த நேரத்தில் இது மாற்றப்படவேண்டியது என்பதால் கீதா மாற்றிவிட்டார். துளசி ஆசிரியர் !!! எப்போதும் கீதாவிடம் சொல்லுவது..மீண்டும் வாசித்துத் தவறுகள் இல்லாமல் வெளியிட வேண்டும் என்று... ஹஹஹ்..ஆனால், கீதா சில சமயங்களில் கவனக் குறைவால் இப்படி நடந்துவிடுகின்றது..

      இப்போது சரியாகிவிட்டதா என்று பார்த்துச் சொல்லுங்கள் சகோ...ஏதேனும் விடுபட்டுள்ளதா என்று...

      இனி கவனமாக இருக்க முயற்சி செய்கின்றோம் சகோதரரே. மீண்டும் மீண்டும் தங்களின் அக்கறையான அன்பான பின்னூட்டத்திற்கு மிக்க மிக்க நன்றி. சுட்டிக் காட்டுங்கள். மகிழ்வுடன் வரவேற்கின்றோம் சகோ...மிக்க நன்றி

      நீக்கு
    2. என் கருத்திற்கு மதிப்பளித்து திருத்தங்கள் செய்தமைக்கு அன்பு நன்றிகள்!

      நீக்கு
    3. //குட் வில் அம்பாசடராக//

      'குட்வில்' என்று ஒரே வார்த்தையாக சேர்த்து பிரசுரிக்கலாமோ?

      நீக்கு
    4. சகோ நாங்கள் அல்லவா தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்...ஆமாம் குட்வில் ஒரே வார்த்தைதான் அந்த காப் சேர்க்க விடுபட்டுவிட்டது இதோ சேர்த்துவிடுகின்றோம் மிக்க மிக்க நன்றி சகோ...

      நீக்கு
  21. பேசும் படங்கள் அருமை...
    படங்கள் எல்லாமே மனசை கலங்கடித்து விட்டது சார்.

    பதிலளிநீக்கு
  22. நெஞ்சை உலுக்கும் செய்திகள் படங்கள். கொல்பவன், கொல்லப்படுபவன் இருவருமே மனிதர்கள் என்பது வேதனையான ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இளங்கோ ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  23. உண்மை தான் சகோ, படங்கள் பேசுகின்றன. மனம் வலிக்கிறது பார்க்கும் போது,
    நல்ல பகிர்வு தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேஸ்வரி சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  24. ஆனந்த விகடனில் , உலகை உலுக்கிய புகைப்படங்கள் என்றொரு தொடர் வருகிறது.
    ஒருவேளை தளம் மாறி வந்துவிட்டேனோ என்று நினைத்தேன். :)

    ஆயிரம் சொற்கள் சொல்ல முடியாததை ஒரு படம் சொல்லி விடும் என்பது எவ்வளவு உண்மை.

    தொடர்கிறேன் சகோ.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ! ஆனந்தவிகடன்??? பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டது....கேரளா சென்ற பிறகு எல்லாமே மாறிவிட்டது. ஆனால் தமிழில் எழுத வேண்டும் என்றும் தமிழ் தமிழ் என்பது மட்டும் என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது....இப்போதும்...

      மிக்க நன்றி சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  25. நல்ல தொடர்! நன்றி!

    சிரிய ஏதிலியர்களுக்காக இப்பொழுது உலகமே வருந்துகிறது. நேச நாடுகளும் தம் படைகளை அனுப்பி இந்தக் கொடுமைகளுக்குக் காரணமான ஐ.எஸ் விலங்குகளை வீழ்த்தத் தொடர்ச்சியாக முயன்று வருகின்றன. இன்று உலகிலேயே மிக உச்சக்கட்டமாக ஏதிலியர்களை உருவாக்கும் நாடாய் சிரியா இருப்பது எனக்கும் வருத்தத்தை ஏற்படுத்தவே செய்கிறது எனச் சொன்னால் அது பொய்யாகி விடும். காரணம், இதே போலத்தானே ஈழத்தில் நம் தொப்புள்கொடி உறவுகளும் பாதிக்கப்பட்டார்கள்? அவர்களும் இப்படித்தானே நாடு விட்டு நாடு படகில் ஏதிலியர்களாகக் கிளம்பி நடுக்கடலில் செத்து மடிகிறார்கள்? அவர்களும் இம்மாதிரிதானே சொந்த நாட்டில் வாழ முடியாமல் நாடு நாடாக இரவலர்களைப் போல் திரிகிறார்கள்? ஆனால், இன்று சிரியர்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு தம் துருப்புகளை அனுப்பி வைத்திருக்கும் நேச நாடுகள் நம் மக்களைக் காப்பாற்ற ஒரு துரும்பையும் அன்று அனுப்பவில்லையே ஏன்? சிரியர்கள் பாதிப்புப் பற்றிப் பன்னாட்டு விசாரணை கோரும் ஐ.நா அதையே நாம் கோரினால் கடைவாயில் இகழ்ச்சிப் புன்னகை புரிகிறதே ஏன்? சிரிய ஏதிலியர்களுக்காகத் தம் கதவுகளைத் திறந்து விட்டுள்ள உலக நாடுகள் ஈழ ஏதிலியர்களை மட்டும் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளுகிறார்களே ஏன்? திபெத், சிரியா, பாலஸ்தீன், தெற்கு சூடான் என உலகில் எந்த நாட்டு மக்கள் குருதி சிந்தினாலும் பரிந்து வரும் உலக சமூகம் தமிழர்கள் குருதி வடித்தால் மட்டும் பாராமுகம் காட்டுகிறதே ஏன்? இதர பேர்களுக்கு வந்தால் இரத்தம் தமிழனுக்கு வந்தால் மட்டும் தக்காளிச் சட்னியா?!

    இப்படி ஒருதலைப்பட்ட உலகப் போக்கைப் பார்த்துப் பார்த்து இன்று மற்ற மக்கள் பாதிக்கப்பட்டால் அதற்காக வருத்தம் கூட எழாத அளவுக்கு மனம் மரத்துப் போய்விட்டது. இப்படியே போனால் மனிதத்தன்மையையே இழந்து விடுவேனோ என அச்சமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்துமே சரிதான் இபுஞா சகோதரரே. ஈழத்துப் படங்களும் இன்று தொடரில் வருகின்றன சகோ..

      சூடான நியாயமானக் கேள்விகள் தங்களது கேள்விகள் அனைத்தும்....

      மிக்க நன்றி தங்களின் உணர்வுபூர்வமான கருத்திற்கு. மதிக்கின்றோம் தங்கள் கருத்தை

      நீக்கு
  26. உண்மையிலேயே பேசும் படங்கள்தாம்!
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சென்னைப்பித்தன் சார் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  27. அன்புள்ள அய்யா,

    பேசாத படங்கள் பேசும் படங்களாக பேசியவைகள் கொஞ்சமல்ல... நெஞ்சம் கனத்தது! இந்த ஆண்டின் ‘ஐலான் குர்தி’ பிஞ்சு மனம் தலைசாய்க்க ஓர் இடம் இல்லாமல் கடற்கரையில் படுத்து நீடுதுயில் கொண்ட துயரம்... மனிதம் மடிந்து போனதின் உச்சம்!

    நன்றி.
    த.ம.17

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மணவையாரே தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு