திங்கள், 15 ஜூன், 2015

உத்ரா! குட்டிப் பெண்ணே! உன் குரலால் மயக்கிவிட்டாயடிக் கண்ணே!

Image result for uthra unnikrishnan

     இந்தப் பதிவை நான் சைவம் படப் பாடல்களைக் கேட்டதும், உத்ரா பாடியிருக்கும் பாடல் காட்சியைப் பார்த்ததும் எழுதத் தொடங்கி, அதற்குக் கண்டிப்பாக அவளுக்கு அவார்ட் கிடைக்கும் என்பதையும் எழுதி, பிசாசு படம் பார்த்ததும் மீண்டும் எழுதி, முடிக்காமல், இப்போது மூன்றுமணி எனும் மலையாள சீரியலின் டைட்டில் பாடலாக இந்தக் குழந்தையின் பாட்டு வருவதைக் கேட்டதும், எப்படியேனும் முடித்து, இந்தக் குழந்தையைப் பாராட்டியே ஆக வேண்டும் என்ற ஒரு உத்வேகத்திலும், நான் அப்போது சொன்ன அவார்ட் அவளுக்குக் கிடைத்தது குறித்த மகிழ்விலும், காதில் ஹெட் செட் வைத்துக் கொண்டு இந்தச் சிறு குழந்தையின் இனிமையான குரலில், உணர்வுகளோடு, அனுபவித்துப் பாடிய அந்தத் தேன் குரல் பாடல்களைக் கேட்டுக் கொண்டே எழுதி முடித்தேன்.

     உத்ரா உன்னிக் கிருஷ்ணன்! பிரபல கர்நாடக சங்கீதப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆன திரு உன்னிக் கிருஷ்ணன் அவர்களின் செல்லப் புதல்வி! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!  புலி எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும்!  ஆம்!  16 அடி அல்ல இந்தக் குட்டிப் பெண் பல உயரங்கள் பாய்ந்துவிட்டாள், தந்தையை விட, இந்த மிகச் சிறிய வயதில்! என்ன தவம் செய்தனை உன்னிக் கிருஷ்ணா!  என்று பாட வேண்டும் போல் உள்ளது.  அந்த அளவிற்குத் தன் குரலால் மயக்கிக் கட்டிப் போட்டுவிட்டாள். 
Image result for uthra unnikrishnan 
 பல வருடங்கள், பல கர்நாடக இசைப் பாடகர்கள் எனது மானசீக குருவாக இருந்தார்கள், நான் ஏகலைவியாக. அதில் திரு உன்னிக் கிருஷ்ணனும் உண்டு.   சில நாட்களுக்கு முன், திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் என்னைக் கவர்ந்த “கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்” பாடலை, அதனைப் பாடியவர்களை என் மானசீக குருவாக வைத்துக் கொண்டு நான் ஏகலைவியாகக் கற்றுக் கொண்டேன்.  அதனைப் பாடி பதிவும் செய்தேன். தற்போது எனது மானசீக குருவாகிப் போனாள் இந்தக் குட்டிப் பெண் உத்தரா உன்னிக் கிருஷ்ணன். தந்தையும் எனது மானசீகக் குரு, அவரது பெண்ணும் இப்போது! அவளது பாடல்களைக் கேட்டுக் கற்றுக் கொண்டிருக்கின்றேன்!
சைவம் படத்தில் அழகு பாடல்

இந்தப் பாடல் எப்படி உருவாகிய விதம் தந்தையிடம் கற்று மெருகூட்டல் காணொளி
     குட்டிப் பெண் பாடிய சைவம் படப் பாடல் “அழகு” அழகு! நா முத்துக்குமார் அவர்களின் வரிகளில், மெய் சிலிர்க்க வைத்த பாடல். (சுப்புத் தாத்தாவின் ஃபேவரிட் ராகத்தில் அமைந்த பாடல்-கானடா ராகத்தில்...கொஞ்சம் காபியின் சுவை எட்டிப் பார்க்கிறதோ!!?) அவள் சுவரங்களும், ஜதியும் எப்படிப் பாடுகின்றாள் அந்தப் பாடலில்!  அந்தப் பாடலுக்குத் தேசீய விருதும் வாங்கிவிட்டாள் இந்தக் குட்டி சங்கீத தேவதை! அவள் அளித்த பேட்டியில் குழந்தை மனசு வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது.  தேசீய விருது பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லுவது உட்பட!  அது அறிவிக்கப்பட்ட போது அதை அவளது தாத்தா சொல்லிய போது உத்ரா கணினியில் விளையாடிக் கொண்டிருந்தாளாம்.  உன்னிக் கிருஷ்ணன் அவர்களும் ஊரில் இல்லையாம்.  தந்தை உன்னிக் கிருஷ்ணன் குருவல்ல.  டாக்டர் சுதா ராஜா தான் இவளது குரு! உத்ரா!  குட்டிப் பெண்ணே! உன்னால் உனது பெற்றோர்களுக்குப் பெருமை!
பிசாசு படத்தில் "போகும் பாதை"
      பிசாசு படத்தில் உத்ரா பாடிய பாடல் “போகும் பாதை தூரமில்லை”.  ஆம்!  குட்டிப் பெண்ணே! நீ போகும் பாதை வெகு தூரமில்லை இன்னும் பல உயரங்களைத் தொட! தமிழச்சியின் வரிகள் அருமை.  உத்ராவின் குரல் அதனை அப்படியே பிரதிபலித்து மனதை உருக்கி, நெகிழச் செய்துவிட்டது! கீரவாணி ராகத்தில் அமைந்த பாடல். அந்த வயலின் நோட்ஸ் ஆஹா! மனதை என்னமோ செய்கின்றது.  முன்பே ராஜா போட்டதுதான் என்றாலும்....


   தற்போது இப்போது மூணுமணி எனும் மலையாள தொடரில் மிக ரம்யமான ஒரு டைட்டில் பாடல் பாடியுள்ளாள். மன நிலை குன்றிய பெண் கதாபாத்திரத்திற்கு. காபி ராகத்தில் அமைந்த பாடல்...

   இந்த 50 வயது இளம்?! கிழவிக்கு மானசீக குருவாகிப் போனாயடிப் பெண்ணே! இளம் கிழவியின் ராயல் சல்யூட்!! தேசீய விருது வாங்கியதற்கும், இன்னும் நீ பல உயரங்களைத் தொடவும், விருதுகளைப் பெறவும், எங்களை எல்லாம் உனது இனிய குரலால், நல்ல பாடல்களால் மகிழ்விக்கவும், கர்நாடக இசை மேடைகளில் பாடி மிளிரவும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! வலையுலக சார்பில்! வாழ்க நீ பல்லாண்டு குட்டி சங்கீத தேவதையே!

பின் குறிப்பு:  இதை எழுதி வைத்தும் விடுபட்டு விட்டது பதிவில் பதிய.  நண்பர் ஜோதிஜியின் பின்னூட்டம் அதை நினைவு படுத்த இதோ விடுபட்ட வரிகள்....
இன்னும் இது போன்ற பின்புலம் இல்லாத திறமை மிக்க குழந்தைகள் பலர் உள்ளனர். அவர்களும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். குழந்தைகளின் திறமை ஆச்சரியம் அளிக்கின்றதுதான். பண்டும் இருந்தார்கள் ஆனால் அப்போது இது போன்று வெளிச்சம் போட்டுக் காட்ட ஊடகங்கள் இல்லையே. இப்போதும் கூட ஊடகங்கள் இருந்தாலும். திறமை மிக்க குழந்தைகள் பலர் வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளதால் வெளி வர முடியாமல் இருக்கின்றனர் தான் என்பதையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும்......

----கீதா

படங்கள் : கூகுளில் இருந்து






48 கருத்துகள்:

  1. நன்கு ரசித்து, அனுபவித்து எழுதியுள்ள விதம் எங்களை ஈர்த்துவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! தங்களின் ரசனைக்கும்! கருத்திற்கும்...

      நீக்கு
  2. அன்புள்ள சகோதரி,

    ‘உத்ரா! குட்டிப் பெண்ணே! உன் குரலால் மயக்கிவிட்டாயடிக் கண்ணே!’ உண்மைதான். படம் பார்த்தபோதுகூட இந்தப் பாடலை இவ்வளவு இரசித்துக் கேட்கவில்லை. அருமை... அருமை...!

    நா. முத்துக்குமார் அவர்களின் பாடலை உத்ரா வெகு அழகாக பாடியது அழகு. இசையில் லயித்து அதைச் சொல்லியது தங்களின் பெருமை.

    நன்றி.
    த.ம.1.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு..எப்போதுமே படம் பார்க்கும் போது பொதுவாக நாம் காட்சியில் லயித்துவிடுவதால் பாடல் அப்போது பதியாமல் பின்னர் தனியாகக் கேட்கும்போது இன்னும் இனிமையாக இருக்கும். நான் பாடலுடன் காட்சியையும் சேர்த்து லயித்து விடுவேன்....நல்ல காட்சியாகவும் பாடலாகவும் இருந்தால்....அதில் இதுவும் பிசாசு படப் பாடலும் அடக்கம். எல்லா பாடல்களையும் சொல்ல முடியாது.....காட்சிகளையும் அப்படிச் சொல்ல முடியாது...

      மிக்க நன்றி நண்பரே! பாராட்டிற்கும்!

      நீக்கு
  3. பதில்கள்
    1. நன்றி ஜி வாக்கிற்கு! எங்க ஆளக் காணோம்? ஊர் சுத்திக்கிட்டு இருக்கீங்களா?

      நீக்கு
    2. இதே கேள்வியை நாங்களும் கேட்கலாமா ?



      நீக்கு
  4. ஏற்கனவே சைவம் படத்தில் அழகு பாடல் கேட்டிருந்தாலும் கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
    வாவ்!!! இனிமையான குரல்.
    பத்து வயதில் National Award பெற்றது மகிழ்ச்சியான செய்தி.
    உத்ரா குட்டிக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கின்றது.

    நல்லதொரு பதிவு மேடம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சைவம் படமே மிக அருமையான படம் மகேஷ். நிச்சயமாக அவளுக்குப் பிரகாசமான காலம் இருக்கின்றது...நன்றி மகேஷ்...

      நீக்கு
  5. உத்ரா பாடும் தகவல் பற்றிப் படித்திருந்தாலும், பாடல்களை இப்போதுதான் கேட்கிறேன். வெண்ணெய போல வழுக்கிக் கரையும் குரல். வாழ்க. உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! நண்பரே! நான் பல முறை கேட்டுவிட்டேன்...கேட்டுக் கொண்டிருக்கின்றேன்...கற்றுக் கொண்டிருக்கின்றேன்....இந்தச் சுட்டிப் பெண் எனது மானசீகக் குருவாகிப் போனாள்.....இப்போது....மிக்க நன்றி தாங்களும் ரசித்ததற்கு....

      நீக்கு
    2. சைவம் படம் பார்த்தீர்களா? பார்க்கவில்லை என்றால் பார்த்து விடுங்கள் மிக அருமையான படம் நண்பரே! வசனங்கள் எல்லாம் நச்! கதாபாத்திரங்களின் நடிப்பும் அருமையாக இருக்கும்...

      நீக்கு
    3. சைவம் படம் பார்க்கவில்லை இதுவரை. 'கிடைத்ததும்' பார்க்கிறேன்! :))))

      நீக்கு
  6. உன்னி கிருஷ்ணன் பாடிய அபிஷேகம் என்ற பாடல் தொகுப்பை கேட்டுப் பாருங்க. மெய் மறந்து போயிடுவீங்க. இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை தினந்தோறும் கேட்டுக் கொண்டே இருப்பேன். இப்போது கூட எங்கேயாவது ஒலித்தால் அப்படியே அந்த குரல் இனிமைக்காக நின்று கேட்டு விட்டு செல்வதுண்டு. இந்தக் குழந்தை மட்டுமல்ல. பல குழந்தைகள் ஆச்சரியத்தை திகைப்பை ஏற்படுத்தும் அளவிற்கு அவர்களின் திறமை நம்ப முடியாத அதிசயமாக உள்ளது. கால மாற்றமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்டிருக்கின்றேன் நண்பரே! அபிஷேகம்! மெய் சிலிர்க்க வைக்கும்...ரசித்துக் கேட்பேன்...இப்போதும் கூட...அதே போன்று அவரது ஆல்பம், மறைந்த திருமதி அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் எழுதிய பாடல்களை அவர் பாடியிருப்பது அப்படியே நம்மை தியானத்தில் ஆழ்த்தும்....

      நீங்கள் சொல்லுவது மிகச் சரியே! இக் குழந்தை மட்டுமல்ல....இன்னும் இது போன்ற பின்புலம் இல்லாத திறமை மிக்க குழந்தைகள் பலர் உள்ளனர். அவர்களும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். குழந்தைகளின் திறமை ஆச்சரியம் அளிக்கின்றதுதான். பண்டும் இருந்தார்கள் ஆனால் அப்போது இது போன்று வெளிச்சம் போட்டுக் காட்ட ஊடகங்கள் இல்லையே. இப்போதும் கூட ஊடகங்கள் இருந்தாலும். திறமை மிக்க குழந்தைகள் பலர் வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளதால் வெளி வர முடியாமல் இருக்கின்றனர் தான் என்பதையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும்......

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  7. என்னவொரு இனிமை இச் சுட்டிப் பெண்ணின் குரலில்......

    அவர் மேலும் பல உயரங்களைத் தொட எனது வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட் ஜி! மிக இனிமையாக இருக்கின்றது நிச்சயமாகப் பல உயரங்களைத் தொடுவாள் இந்தச் சுட்டிப் பெண்....

      நீக்கு
  8. நெஞ்சைக் கொள்ளை கொள்கின்றாள் - உத்ரா!..
    தினமும் கேட்கும் பாடல்களுள் ஒன்று - அழகு!...

    மேலும் திரு. ஜோதிஜி திருப்பூர் - அவர்கள் குறிப்பிட்டிருக்கும் திரு. உன்னி கிருஷ்ணனின் அபிஷேகம் தொகுப்பு என்னிடமும் உள்ளது.. தொகுப்பிலுள்ள பாடல்களைக் கேட்கும்போது - நான் செயலற்றவனாகி விடுவேன்....

    ஸ்ரீராமாவதாரப் பாடல் ஒலிக்கும் போது - மனதின் நிலையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை..

    செல்லப்பெண் உத்ரா - மேலும் பல சிறப்புகளை எய்திட நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா! ஆம் அபிஷேகம் பாடல் தொகுப்பு கேட்டிருக்கின்றேன்...அருமையான தொகுப்பு....

      மிக்க நன்றி ஐயா...

      நீக்கு
  9. உத்தராவுக்கு அவார்ட் கிடைத்தது கேள்விப்பட்டேன் இனிய சங்கீதம் கேட்கப் பிடிக்கும். சங்கீதத்தின் ந்யுவன்ஸெஸ் தெரியாது. உத்தராவின் பாடலை இப்போதுதான் கேட்டேன் பகிர்வுக்கு நன்றி. திறமை எங்கெல்லாமோ ஒளிந்து கிடக்கும் வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்கிறவர்கள் பிரபலம் அடைகிறார்கள். சூப்பர் சிங்கர் ஜுனியரில் வென்ற சிறுமி ஸ்பூர்த்தியின் திறமையை ரசித்திருக்கிறேன் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் சங்கீதம் கேட்பதற்கு ந்யூவன்செஸ் அவசியம் இல்லை...ரசிக்கத் தெரிந்தால் போதும். மொழியும் அவசியமில்லை.....உண்மைதான் ஒரு சிலர் திறமையை பயன்படுத்திக் கொண்டு பிரபலம் அடைகின்றார்கள் . அதனால் மற்றவர்கள் திறமை இல்லாதவர்கள் என்றும் சொல்லி விட முடியாது....சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தி மிக மிகத் திறமை வாய்ந்தவள். பாருங்கள் அந்தக் குட்டிப் பெண்ணும் அவார்ட் வாங்கி விடுவாள்....அவள் திறமையை ஏதேனும் இசையமைப்பாளர் உபயோகப் படுத்திக் கொண்டால்.....

      மிக்க நன்றி சார்

      நீக்கு
  10. உத்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்! இப்போதெல்லாம் இளமையிலேயே திறமை வாய்த்துவிடுகின்றது. ஒளிந்து கொண்டிருக்கும் திறமையை வெளிக்கொணர வைப்பதில்தான் பெற்றோர்களுக்கு பெரும் வேலையே இருக்கின்றது. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் சுரேஷ்! நீங்கள் சொல்லுவது சரிதான்....பெற்றோர்களுக்கு பெரும் வேலை மட்டுமல்ல....நிதியும் இந்தக் காலத்தில் அவசியமாகிவிட்டது ...

      நீக்கு
  11. தாய்(தந்தை) எட்டடி!குட்டி பதினாறடி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்....எல்லா குடும்பங்களிலும் இது பலிப்பதில்லை....இல்லையோ?

      நீக்கு
  12. வணக்கம்
    அண்ணா

    மனதை கவரும் பாடல் கேட்டு மகிழ்ந்தேன் அண்ணா.. பகிர்வுக்கு நன்றி மேன்மேலும் சிறந்து விளங்க எனது வாழ்த்துக்கள் த.ம10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. உத்ரா பாராட்டுகுறியவள் இனிமையான குரல் இன்னும் சாதனை படைக்க வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  14. குழலிசை இனிதா இக் குழந்தை குரலிசை இனிதா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! அதேதான் எங்களுக்கும் தோன்றியது புலவர் ஐயா! மிக்க நன்றி!

      நீக்கு
  15. இப்போதுதான் பாடலைக் கேட்கிறேன்
    அற்புதமான பாடல்
    மிக மிக அருமையாகப் பாடி இருக்கிறார்
    உங்கள் விளக்க உரைக்குப் பின் கேட்க
    கூடுதல் சுவை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்! தங்களின் ரசனைக்கும் வாழ்த்திற்கும்!

      நீக்கு
  16. உத்ராவின் குரல் எதிர்காலத்தில் யாருமே தொட முடியாத உச்சத்தைத் தொடுவார் என்பதற்கு
    உத்தரவாதம் :)

    பதிலளிநீக்கு

  17. "உத்ரா!
    குட்டிப் பெண்ணே!
    உன் குரலால் மயக்கிவிட்டாயடிக் கண்ணே!" என்ற பதிவு
    வெறும் பாராட்டுப் பதிவு மட்டுமல்ல
    "இப்போதும் கூட ஊடகங்கள் இருந்தாலும்.
    திறமை மிக்க குழந்தைகள் பலர்
    வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளதால்
    வெளி வர முடியாமல் இருக்கின்றனர் தான் என்பதையும்
    இங்கு சொல்லியே ஆக வேண்டும்..." என்ற
    கருத்தை வரவேற்கிறேன்.
    ஆமாம்,
    இலைமறை காயாகவுள்ள கலைஞர்களை
    ஊடகங்கள் அறிமுகப்படுத்தலாமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே! மிக்க நன்றி தங்களின் அழகான கருத்திற்கு!

      நீக்கு
  18. குட்டிப் பெண் சிகம் தொட வாழ்த்துவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  19. நானும் ரசித்து, மயங்கிப் போன குரல் இது. அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். மிக ரசனையான பதிவு!
    த ம 13

    பதிலளிநீக்கு
  20. நானும் ரசித்துள்ளேன், மிகவும் பிடித்த பாடல், நல்ல எதிகாலம் அமையட்டும் வாழ்த்துக்கள், தங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. பெற்றோரின் அறிவு பிள்ளைகளுக்குக் கிடைப்பதை, “குலவித்தை கல்லாமல் பாகம் படும்” என்று சொல்வார்கள் ஆசானே.

    இச்சிறுமியின் குரல் கேட்க அதுதான் தோன்றியது.

    பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  22. பாடல்களின் இணைப்பை தந்ததற்கு ஒரு கூடுதல் நன்றி.
    தம +

    பதிலளிநீக்கு