“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு?
இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்?”
என்ன எங்கள்
விருந்தினர்கள் “Made For
Each Other” காதல் தம்பதியினர்
தானே?!!! கொஞ்சம் பாத்துச் சொல்லிட்டுத்தான் போங்களேன்! முகநூலில்
மட்டும்தான் லைக் போடுவீங்களோ?! இங்கேயும்
தான் ஒரு லைக் போட்டுட்டுப் போங்களேன்.
ஜோடிங்க சந்தோஷமா இருக்குமில்லையா நம்மளையும் லைக் பண்ணறாங்களே
மனுஷங்க அப்படின்னு!!!
அவன் அசடு வழியத் தலையைச் சொறிந்தான். அவன்
மட்டும்தான் வந்திருக்கின்றான் என்று நினைத்தால், பின்னாலேயே,
“ராணி! நீயும் வந்திருக்கியா! வாம்மா வா! அட! மடில கைக்
குழந்தை வேற! எப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க? சொல்லவே இல்ல! ம்ம்ம் வாங்க வாங்க
உக்காருங்க....” ராணியும் அசடு வழியத்
தலையைச் சொறிந்தாள்!
எங்கள் வீட்டிற்கு இன்று இந்தக் காதல்
ஜோடியின் வருகை. அதுவும் ஒரு வருடத்திற்குப் பிறகு. சென்ற வருடத்தின் முதல்
பகுதியில் செம டூயட்தான். மரத்தைச்
சுத்தி, சுத்தி. விருந்தினர் எங்களுக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரர்கள்தான்.
பையனின் பெயர் ராஜா. நல்ல கொழுக் மொழுக்
என்று இருப்பான். பெண்ணின் பெயர் ராணி. அவளுக்கென்ன குறைச்சல். அவளும் கொழுக்
மொழுக் அழகி!
from yutube - This song is dedicated to our Made For Each Other guests
இனி இவர்கள் காதல் ஜோடி அல்ல...காதல்
தம்பதியர்! அதனால் தான் சென்ற ஒருவருடமாக ஆட்களைக் காணவில்லை போலும். இப்போது
கைக்குழந்தை வேறு. உட்கார்ந்தவர்கள்
அங்குமிங்குமாகப் பார்த்தார்கள்.
“என்ன தேடுகின்றீர்கள்? ஓ! ஸாரி! வெயில் என்னமா அடிக்குது. வெயில்ல
வந்தவங்களுக்கு முதல்ல தண்ணி கூடக் கொடுக்காம நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டே
இருக்கேன்ல?! இந்தாங்க, ரெண்டு பேரும்
தண்ணி குடிங்க முதல்ல”
வந்த விருந்தினர்களுக்கு சாப்பிட என்ன
கொடுக்கலாம் என்று சமையலறைக்குள் சென்று தேடினேன். சின்னஞ்ச் சிறுசுங்க! நொறுக்ஸ், கொறிக்ஸ்
கொடுக்கலாமே என்று பார்த்தால் எதுவுமே இல்லை. நம்ம வீட்டுல எல்லாமே டயட்
ஆச்சே! என்ன இருக்கும் சொல்லுங்க! பார்த்தால் காரட், வெள்ளரிக்காய், கோஸ்,
முள்ளங்கி, வெங்காயம், வெந்த வேர்க்கடலை, பொரி என்று பீச் சுண்டலுக்கு ரெடியாக
இருந்தது. பார்த்தேன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கலந்து எடுத்துக் கொண்டு
சிறுசுகளுக்குக் கொடுக்கச் சென்றால்...காணக் கண்கொள்ளாக் காட்சி. ம்ம்ம் காதல்
ஜோடிகளுக்கு ஒரு வருடம் தானே ஆகின்றது..ஒரே கொஞ்சல்ஸ். இருவரும் ஒருவருக்கொருவர்
அன்புடன் கொஞ்சிக் கொண்டதும், குழந்தையையும் கொஞ்சியதும் பார்க்க சந்தோஷமாக இருந்தது.
நான் கொடுத்த சாலட் கூட அவர்களின் கண்ணில் படவில்லை. அத்தனை அன்பில் அவர்கள் ஆழ்ந்திருந்தார்கள். அவர்கள்
அவர்களது உலகத்தில் இருக்கட்டும், அவர்களை எதற்கு இடையில் நுழைந்து....என்று
எண்ணி, சற்று விலகி கிளிக்கத் தொடங்கினேன்.
காணொளி சுவாரஸ்யமாக எடுத்தேன்.
சுவாரஸ்யத்தில், அதுவும் காணொளி எடுப்பதில் கவனமாக இருந்து ஃப்ரேம் சரியாக
இருக்கிறதா என்று பார்ப்பதில் கவனம் செலுத்தியதால் அவர்கள் கொஞ்சம் அத்துமீறியதைக்
கவனிக்கத் தவறிவிட்டேன். அத்துமீறுதல்
என்றால் ஓவராக எல்லாம் போய்விடவில்லை. அவள் மடியில் குழந்தை வேறு! அதனால், கொஞ்சம்
அப்படியும் இப்படியுமாக இருந்தார்கள் குழந்தைகள்! காணொளி எடுத்துவிட்டுப் பார்த்த
பிறகுதான் தெரிந்தது. எடிட் பண்ண முடியவில்லை நேரம் இல்லாததால். இயற்கைதான். இருந்தாலும் சென்சார்! எனவே
புகைப்படங்கள் மட்டுமே! எங்கள் விருந்தினர்களை நீங்களும் பாருங்களேன்!
- கீதா
சொந்தக்காரங்களைப்பற்றிய தகவல்கள் அறிந்தேன் சந்தோஷம் உணவெல்லாம் கொடுத்து உபசரித்த நீங்கள் ஒரு பாய் தலையணையும் கொடுத்து உறங்கச்சொல்லி இருக்கலாம் சரி அவுங்க திரும்பி போகும் போது செலவுக்கு பணம் கொடுத்து விட்டீகளா ? அப்படியே இந்தப்பக்கம் ரெண்டு நாளைக்கு அனுப்பி வையுங்கள் நானும் விருந்து வச்சு பேரீச்சம்பழம் எல்லாம் வாங்கி கொடுக்கிறேன்.
பதிலளிநீக்குஅவுங்களை வரவேற்க்க அபுதாபி ஏர்போட்டுல ''தனிக்கிழமை'' ரெடியாக இருப்பேன்.
முதல்ல அபுதாபிலருந்து ஓடோடி வந்து எங்க விருந்தாளிங்க வந்துருக்காங்கனு வந்து பாக்க வந்தீங்க பாருங்கள் உங்களுக்கு ரொம்ப நன்றிங்க! அப்ப எதுக்கு நீங்க மட்டும் தனியா போணும் அப்படியே கூட்டிட்டுப் போங்க! போய்ட்டு சீராட்டி பாராட்டி ஹனி மூன் ட்ரிப் உங்க ஊர்ல கொண்டாடிட்டு அனுப்பி விடுங்க....ஆமாங்க தலையணை கொடுத்தேன் அதை எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க!...பாவம் புதுக் குடித்தனம் ல...சரி சரி நீங்க உங்க கூட கூட்டிட்டுப் போகலைனா "தனிக்கிழமை" அனுப்பி வைக்கிறோம். பிள்ளைங்கள பத்திரமா பாத்துக்கங்க!ஜி! ஊர் பேர் தெரியாம திண்டாடிடப் போவுதுங்க! பத்திரம் ஓகேயா! பாஸ்போர்ட் விசா எல்லாம் வேணுமாங்க?!
நீக்குகுழந்தை அழகா இருக்கே
பதிலளிநீக்குபேர் என்னவாம் ?!
ஆமாம் ரொம்பவே அழகா இருந்துச்சுங்க...பேர் வைக்கற விழாவுக்கு எல்லோரையும் அழைச்சுட்டா போச்சு!
நீக்குமிக்க நன்றி நண்பரே!
ஆணா, பொண்ணானு கண்டுபிடிக்க முடியல பக்கத்துல போக முடியாததுனால....
நீக்குநல்ல பதிவு. இதுக்கு இங்கிலீஷ்ல "சடைர்" அப்படீன்னு சொல்லுவாங்களோ?
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! ம்ம்ம் அப்படி இருந்துச்சா ஐயா!? மிக்க நன்றி!
நீக்குஆஹா செல்லமே செல்லம்ஸ் :) அழகோ அழகு ..ஒரு தூளி கட்டிவச்சா வசதியா இருக்குமே :)
பதிலளிநீக்குஹஹாஹஹ் ஆம் சகோதரி தோணிச்சு! கட்டி வைச்சா என்னதான் அதுங்க பண்ணும் அப்படினு பாக்கறதுக்கு வேண்டியாவது....செல்லம்ஸ் தான்
நீக்குஆசானே!
பதிலளிநீக்குஆரம்பத்திலே ஸ்டெம்ப் அவுட் ஆகிபுட்டா எப்படி?
"அவன் அசடு வழியத் தலையைச் சொறிந்தான்"
இந்த ஸ்பின் பால்
ஒன்றே போதும்.
வந்த விருந்தாளி இவர்தான் (மந்தி குடும்பம்) என்று சொல்வதற்கு!
கொஞ்சம் பொறுங்கள் அய்யா!
தேர்ட் அம்பையர்(3வது நடுவர்)
சொல்வதையும் கேட்போம்!
ரசல்ட்?
அவுட் இல்லை
எக்கசக்கமான லைக் கருத்தை 3வது அம்பயர் ஏற்றுக் கொண்டு விட்டார்.
சரி அய்யா!
பைனல் மாட்ச்! (thillai /vz killerjee)
உங்க வீட்டு விருந்தாளிக்கும்/ கில்லர்ஜி வீட்டு விருந்தாளிக்கும்தான்!
மேட்சை லைவில் பார்க்க ஆசையோடு காத்திருக்கிறோம். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஆமாம் ஐயா! ஆனா இந்த தடவை அப்படி புதிர் எல்லாம் வைச்சு எழுதல ஐயா! நேரடியாகவே தான் ..
நீக்குகில்லர் ஜி வீட்டுக்கு அனுப்பியாச்சு ஐயா! லைவ் எல்லாம் பார்க்கணும் என்றால் அவர்தான்...காட்ட வேண்டும்....மிக்க நன்றி ஐயா!
பேன் பார்க்கும் த "லைக் குடும்பம்!
பதிலளிநீக்குவாழை கு "லைக்" குடும்பம்!
வாழும் இடம் ம "லை" குடுமபம்
மரம் விட்டு மரம் தாவும் க"லைக்" குடும்பம்
மனிதன் தோன்றிய முதல் நி "லைக்" குடும்பம்!
தமிழ் மணம் (லைக் 5)
நட்புடன்,
புதுவை வேலு
ஆஹா எத்தனை லைக்குகள் செல்லங்களுக்கு! மிக்க நன்றி ஐயா!
நீக்குதங்கள் “Made For Each Other” காதல் தம்பதியினர் கதையில வந்த ஒளிப்படங்கள் நன்று.
பதிலளிநீக்குஇதே போல நம்மாளுங்க எத்தனை நாளைக்குத் தான் இப்படி இருப்பாங்க...?
ஹஹஹ் மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!
நீக்குமுன்னோர்கள் வாழ்க வளமுடன்...!
பதிலளிநீக்குஹஹஹ் மிக்க நன்றி டிடி!
நீக்குவீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு நல்வாழ்த்துக்கள்!..
பதிலளிநீக்குஇனிமையான பகிர்வு.. மகிழ்ச்சி..
மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு! உங்கள் வீட்டிர்கு குருவிகள் எல்லாரும் வருகின்றனரே!
நீக்குவாழ்க உங்கள் இரசனை! படம் அனைத்தும் அருமை!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு!
நீக்குஅன்புள்ள சகோதரி,
பதிலளிநீக்குதங்கள் வீட்டிற்கு வந்த தம்பதிகளை நாங்களும் கண்டு களித்தோம். என்னதான் அவர்கள் தங்களின் வீட்டிற்குள் புகுந்து முன்பு அட்டகாசம் செய்திருந்தாலும் அவர்கள் மீது உள்ள வாஞ்சை, பிரியம், நேசம், பாசம் பிரித்தாலும் பிரியாதது என்பது புரிகிறது. உயிர்களிடத்து அன்பு செய்யும் தாய்மை தெரிகிறது.
‘இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட...அவை
இரண்டும் சேர்ந்து இன்னொரு பொம்மையைச் செய்தன தாம் விளையாட...!’
அவர்களின் வரவையும் அவர்களால் உண்டான புது வரவையும் கண்டு தாங்கள் அடைந்த மகிழ்ச்சியில் நாங்களும் அதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.
நன்றி.
த.ம.7
மிக்க நன்றி ! தங்களின் அழகான சுவையான கருத்திற்கு! ஆம் சகோதரரே அவர்கள் வந்து அட்டகாசம் செய்தது என்பது அவர்களது இயல்புதானே! நாம் தான் குறிக்கே செல்லக் கூடாது. இயற்கையை நாம் அப்படியே ஏற்றுக் கொண்டால் நல்லதுதானே! மிக்க நன்றி சகோதரரே!
நீக்குநம் முன்னோன் தங்கள் இல்லம் வந்த வருகை அழகு. வாழ்த்துக்கள் தங்களுக்கு. அவர்களை அன்பு பாராட்யிதற்கு.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு!
நீக்குஅழகான தம்பதிகள்[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
பதிலளிநீக்குமெய்யாலுமே! மிக்க நன்றி தனிமரம்!
நீக்குசில நாட்கள் முன் அவர்கள் படுத்தியபாடு பற்றி படித்த நினைவு. அவர்கள்தானா. இல்லை வேறெவரா. அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததா.
பதிலளிநீக்குஇல்லை சார் இவர்கள் வேறு. அந்த ரீசஸ் குரங்கை சுட்டுக் கொன்றுவிட்டார்களாம். வருடம் 6 ஆகி விட்டது....அதைக் கொன்று என்று கேள்வி பட்டேன். இவர்கள் வேறு. சார். ஒரு சில அடையாளங்கள் இருந்தது. அதனால் கண்டு பிடிக்க முடிந்தது. மிக்க நன்றி சார்!
நீக்குவிருந்தினர்களின் சந்தோஷம் புகைப்படத்தில் தெரிகிறது! குரங்கென்று விரட்டாமல் உணவும் கொடுத்து படமும் எடுத்து பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ் தங்களின் கருத்திற்கு!
நீக்குஎன்ன எங்கள் விருந்தினர்கள் “Made For Each Other” காதல் தம்பதியினர் தானே?!!! கொஞ்சம் பாத்துச் சொல்லிட்டுத்தான் போங்களேன்!//
பதிலளிநீக்குஆமாங்க ஆமாம்....
முகநூலில் மட்டும்தான் லைக் போடுவீங்களோ?! இங்கேயும் தான் ஒரு லைக் போட்டுட்டுப் போங்களேன். ஜோடிங்க சந்தோஷமா இருக்குமில்லையா நம்மளையும் லைக் பண்ணறாங்களே மனுஷங்க அப்படின்னு!!! //
லைக் பண்ணியாச்சு......10வது லைக்...சரியா...உங்கள் விருந்தினருக்கும் உங்களுக்கும் மகிழ்ச்சி தானே...?
மிக்க நன்றி சகோதரி! ஆமாம் என்றதற்கும், லைக் போட்டதற்கும் மிக்க நன்றி சகோதரி!
நீக்குவந்த விருந்தாளிங்க உங்க கூட எதுவும் பேசின மாதிரி தெரியலியே :)
பதிலளிநீக்குஹஹஹஹ அவங்க அவங்க வேலைல அப்படியே மூழ்கிட்டாங்க..ஜி! பேசுவாங்க....அடுத்த முறை பேசினால் எழுதுகின்றேன் ஜி! மிக்க நன்றி ஜி!
நீக்குலைக்கினேன் சகோ!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஆசானே! லைக்கினதற்கு. இதற்கு ஏற்றார் போல் ஒரு தலைப்பு உங்கள் பகுதியில்! ஹஹஹ்
நீக்குமனதை தொட்ட பதிவு என்பதைவிட உங்களின் மனதை காட்டிய பதிவு ! சக உயிர்கள் தொடங்கி பிற உயிர்கள்வரை அனைத்தையும் வாஞ்சையுடன் பார்க்கும் மனமே ஒரு வரம் !
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!
நீக்குவிசேஷமான விருந்தாளி, விசேஷமான கவனிப்பு.
பதிலளிநீக்குத ம +1
ஹஹஹ் மிக்கனன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு! உங்களின் அருமையான பதிவுகளால் எங்களை மகிழ்விக்கின்றீர்களே! தகவல்கள் தந்து!
நீக்குவீட்டிற்கு வந்த விருந்தினர்களைக் கண்டு மகிழ்ந்தேன்
பதிலளிநீக்குதம +1
மிக்க நன்றி நண்பரே! தாங்களும் மகிழ்ந்ததற்கு!
நீக்குஅனைத்து உயிரினங்களையும் ஒன்றென்று கருதிடும் ஆன்மிகப் பொதுமை கொண்ட நண்பரே, இனி குரங்கினங்கள் தங்களில் ஒருவராகத் தங்களையும் போற்றுவது உறுதி! அனுமனுக்கு இராமன் போல் எனலாமா? (இன்று இராமன் பிறந்த நாள்) - இராய செல்லப்பா
பதிலளிநீக்குஇல்லைனாலும் நாமும் அவர்களில் ஒருவர்தானே சார்! ஹஹஹ் ஐயையோ அதெல்லாம் ரொம்ப ஓவர் சார்! ஹனுமன், இராமன் என்பதெல்லாம்...மிக்க நன்றி சார்!
நீக்குவீட்டிற்கு வந்த விருந்தினரை அருமையாய் உபசரித்திருக்கிறீர்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!
நீக்குஆஹா வந்து லைக் பண்ணிட்டு போய்விட்டு வந்தேன் சகோ திரும்ப. இப்ப தான் ஒரு திருமணத்திற்கு போய் வந்தேனா tired அது தான். இங்கு வந்து பார்த்தால் இன்னுமொரு அழகான தம்பதிகள் வாழ்த்தாமல் இருக்க முடியுமா நாம் முன்னோர்கள் அல்லவா. அது தான் 16 ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க என மனமார வாழ்த்துகிறேன் என்ன சந்தேகமா பார்கிறீர்கள் உண்மையாகவே தான் வாழ்த்துகிறேன். உங்களுக்கு இவ்வளவு நேயம் இருக்கும் போது நமக்கு வரக் கூடாதா.உண்மையும் தங்கள் அன்பு என்னை பிரமிக்க வைக்கிறது நன்றி பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ.... தோழி கீதா ஹா ஹா மீண்டும் தங்களை சந்திப்பதி ல் மிக்க மகிழ்ச்சி!
பதிலளிநீக்குகீதா,
பதிலளிநீக்குஎன்ன ஒரு ஒற்றுமை ! என்ன ஒரு அழகு ! உங்க வீட்டு விருந்தாளிகளை அழகான வர்ணனையுடன் எங்களுக்கும் அறிமுகம் செய்து வைத்ததில் மகிழ்ச்சி.
செம ரகளை..... ரசித்தேன் அய்யா....
பதிலளிநீக்குஹாஹாஹா முதலில் ஃபோட்டோ அப்லோட் ஆகவில்லையாதலால் பெரியவர்கள் என்று நினைத்தேன். பின்பு திருமணமான தம்பதிகளோ என நினைத்தேன்.
பதிலளிநீக்குபாதி படிக்கும்போதுதான் அவர்கள் ப்ரசன்னமானார்கள். விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். ரொம்பக் குறும்புதான் கீதா & துளசிதரன் சகோ :) அருமையான இடுகை. பாசப் பகிர்வு. :)
நம் மூதாதையர்கள் பற்றிய அருமையான நகைச்சுவையுடன் கூடிய பதிவு. அதுவும் படங்களுடன் + பொருத்தமான பாடல் காணொளியுடன். நன்கு ரஸித்தோம். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிகள்.