கூகுளிலிருந்து.
“ரூம் நம்பர் 3 ல் ஒரு மாணவி தேர்வு எழுத வரவில்லை.” உடனே ப்ரின்ஸிபல்
நிஷா டீச்சர் “யாரது” என்று விசாரிக்க, தேர்வு எழுதிக் கொண்டிருந்த மற்ற மாணவிகள்,
“அது ஆத்மபிரபா” என்றார்கள். ஆத்மப்ரபா 9.15 ற்குப் பள்ளிக்கூட வாசலில் கலங்கியக்
கண்களுமாய் நின்றிருந்ததாகவும், காரணம் கேட்ட போது, “ஹால் டிக்கெட் எடுக்கவில்லை. அப்பாவிடம்
ஃபோன் செய்து சொல்லி இருக்கிறேன். அவர்
ஹால் டிக்கெட்டுடன் வருகிறார். நீங்கள் போங்கள். நான் வருகிறேன்.” என்று சொல்லியதாகச்
சொன்னார்கள். உடனே பிரின்ஸிபல் நிஷா, அவளை
அழைத்துவர பள்ளிக்கூட வாசலிற்கு ஓடினார்கள்.
வொக்கேஷனல் ஹையர்செகண்டரி பொதுத் தேர்வு பணிக்காக, பாலக்காடு
நெம்மாரா, அரசு மகளிர் வொக்கேஷனல் ஹையர் செகண்டரி பள்ளியில், டெபுடி சீஃப்
சூப்பரிண்டென்ட் ஆக நியமிக்கப்பட்ட எனக்கு, 09-03-2015 முதல் எல்லாத்
தேர்வுகளுக்கும் எல்லா மாணவிகளும் அன்று வரை வருகை தந்து இருந்ததால் மகிழ்ந்திருந்த நான், அம்மாணவி
சிறிது தாமதித்தாலும் வந்து தேர்வு எழுத வேண்டும் என்று மனதில் வேண்டிக்
கொண்டேன். ஃபோன் செய்தபடி பிரின்சிபல்
மட்டும் தனியாக நடந்து வருவதைக் கண்டதும் அருகே ஓடினேன். எல்லாத் தேர்வு
அறைகளுக்கும் வினாத் தாள்களைக் கொடுக்க, அங்குள்ள தேர்வு கண்காணிப்பாளரை ஏற்பித்துவிட்டதால்,
அதன் பின் நான் இடையிடையே ஒவ்வொரு தேர்வு அறைக்கும் சென்று கண்காணித்தால் போதும்
என்பதால், அவர் தொலைபேசியில் பேசுவதைக் கவனமாகக் கேட்டேன்.
“என்ன? ஹால்டிக்கெட் அவளது பையில்
இருந்ததா? அவளது அப்பா, அவளைப் பள்ளிக்கூட வாசலில் கொண்டு விட்டபின் திருச்சூர்
சென்று விட்டாரா? பின் ஏன் அவள் அப்படி ஒரு பொய் சொல்லி வெளியில் நிற்க வேண்டும்?
தேர்வு தொடங்கி விட்டது. அவளை வெளியே
காணவில்லை”
அப்படியானால், ஹால் டிக்கெட் எடுக்க பதட்டத்துடன் வீட்டிற்கு
ஓடிப்போகும் வழியில் ஏதேனும் விபத்து நேர்ந்திருக்குமோ?....யாரேனும் கடத்திச்
சென்றிருப்பார்களோ....? இப்படி மனதில் செய்தித் தாள்களிலும், திரைப்படங்களிலும்,
வாசித்த, கண்ட, மனதை பீதியில் ஆழ்த்தும் சம்பவங்கள் வந்து மறைந்தன.
“என்ன?...இப்படி ஏதாவதுப் பிரச்சினை என்றால், அவளை என்னிடம்
ஏற்பித்து விவரம் சொல்லிச் செல்ல வேண்டாமா?...நான் அவளது தேர்வு முடிந்த பின் அவளை
நீங்கள் வரும் வரை ஆஃபீஸில் நிறுத்தி இருப்பேனே?.....இல்லையேல் நீங்கள் யாரேனும்
இங்கு தேர்வு முடியும் வரை காத்திருந்துக் கூட்டிச் சென்றிருக்கலாமே? ....அவன்
யாரென்று தெரியுமா?....அது சரி அவனையும்
அவர் வீட்டாரையும் தெரியுமா?....அப்படியானால், இனியும் தாமதிக்க வேண்டாம். உடனே போலீசில்
புகார் கொடுக்க வேண்டும்.”
பிரின்சிபாலின் இவ்வார்த்தைகளிலிருந்து, எனக்கு ஓரளவு நடந்த
சம்பவங்களை ஊகிக்க முடிந்தது. 17 வயதான
ஆத்மபிரபா, அவளது வீடருகே உள்ள ஒரு இளைஞனுடன், பரீட்சை
எழுதாமல், வீட்டார்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு எங்கோ சென்று விட்டாள்.
காதலுக்குக் கண் மட்டுமல்ல, மூளையும் இல்லைதானே. இல்லையேல், இந்த வயதில்,
தேர்வுக்கிடையில், அந்த ஆத்மப் பிரபாவிற்கு இப்படிச் செய்யத் தோன்றுமா?
ஆத்மபிரபா வீட்டிற்கு மூத்த மகள்.
அப்பாவுக்குச் செல்ல மகள்.
பள்ளியில் கலை மற்றும் நடனத்தில் தன் திறமையைக் கடந்த ஆறு வருடங்களாக நிலை
நாட்டிக் கொண்டிருப்பவள். 10 ஆம்
வகுப்பில், உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற 10 மாணவிகளில் ஒருவளாக இருந்தவள். மேல்நிலை
வகுப்புக்கு வந்ததும் முதலாண்டில் எல்லா பாடங்களிலும், சிரமப்பட்டுத் தேர்ச்சிப்
பெறவே முடிந்தது. வீட்டார்களின் கவனக்
குறைவாக இருக்கலாம். இல்லையேல்,
முந்திரிக் கொட்டை போல் முளைத்தக் காதல் படிப்பிலுள்ள ஆர்வத்தைக் குறைத்து
இருக்கலாம்.
சிறிது நேரத்தில் அழுது கொண்டே பள்ளிக்கு வந்த, 40 வயதான அந்தத் தாயைக்
கண்டதும் எங்கள் கண்களிலும் நீர் நிறைந்தது.
“நாங்கள் அவளை அடித்தும் கெஞ்சியும் எவ்வளவோ சொல்லியும் பயனில்லாமல்
போனதே. தேர்வு கூட எழுத விட வேண்டாம்
என்று தீர்மானித்திருந்தோம், இப்படி ஏதேனும் நடக்குமோ என்ற பயத்தில். ஆனால், அவள், அழுது மன்றாடி, “என் ஒரு வருடம்
வீணாகும்” என்றுசொன்னதால் தான் அவள் அப்பா அவள் வார்த்தைகளை நம்பி பள்ளிக் கூட
வாசல் முன் இறக்கிவிட்டுச் சென்றார்.
ஆனால், அவள் இப்படி ஒரு சதி செய்வாள் என்று நாங்கள் சிந்திக்கவே இல்லை. ஒரு
நல்லவனுடன் போனாள் என்றால், மனதுக்கு ஒரு சமாதானமாவது உண்டாகும். ஆனால், அவன் ஒரு போதை மருந்து உபயோகிப்பவன்
என்பதை நினைக்கும் போது தாங்க முடியவில்லை.” என்று சொல்லித் தேம்பி அழ ஆரம்பித்து
விட்டார். உடனே, இனி நேரத்தை வீணாக்காமல்,
நேராகக் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கச் சொன்னோம். தகர்ந்து போன மனதுடனும், தளர்ந்து போன
உடலுடனும் நடந்து செல்லும் அவரது உருவம் அவ்வளவு சீக்கிரம் என் மனதை விட்டு அகலப்
போவது இல்லை.
கண்ணை இமை போலும் காக்கும் என் பெற்றோர் எனக்கு ஏற்ற ஒரு வாழ்க்கைத்
துணையை நேரம் வரும் போது தேடித் தருவார்கள் என்று சிந்திக்கக் கூடிய மனப் பக்குவம்
அந்தப் பதினேழு வயது ஆத்மபிரபாவுக்கு இல்லாமல் போனதே என்று மனம் பதறுகிறது.
தன் மகளிடம் வந்த சிறிய மாற்றத்தை, அந்தப் பெற்றோர்கள் கவனித்து, அதன்
காரணமானக் காதலை அறிந்து அவளை அதிலிருந்து மீட்கத் தவறிவிட்டார்களே அந்தப்
பெற்றோர்கள் என்று மனம் பதைக்கிறது.
இதை எல்லாம் விட விபரீதமாக ஒன்றும் நடக்காமல் எல்லோரது வருத்தத்தையும்
போக்கும் வகையில், பிரச்சினை இல்லாமல், ஒரு அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு ஆத்மப்
பிரபாவிற்குக் கிடைக்க வேண்டும் என்று மனம் ஏங்குகின்றது. – அப்படிப் பட்ட ஒரு வாழ்வு
அவள் நம்பிச் சென்ற அந்த வாலிபனுடன் ஆனாலும் சரி, இல்லையேல் அவனிடமிருந்துத் தப்பி
வேறு ஏதேனும் நல்ல இதயமுள்ள மனிதனுடன் ஆனாலும் சரி. அதற்காக மனம் உருகி இறைவனிடம்
வேண்டுகிறேன். நீங்களும் வேண்டிக்
கொள்ளுங்களேன்.
பின் குறிப்பு : இது போல்தான்
வேறு ஒரு சம்பவம், 10 வருடங்களுக்கு முன் ஒரு கீதாவுக்கு (எங்கள் கீதா இல்லை)
நேர்ந்தது. பெற்றோர் வயிற்றில் தீயை
அள்ளிப் போட்டு, ஒரு ஆட்டோ டிரைவருடன், இறுதித் தேர்வு முடிந்த்தும் ஓடிப் போன
அவளை, ஒரு மாத்ததிற்குப் பிறகு, பெற்றோர்கள் கண்ணூரிலிருந்துக் கூட்டி வந்து, 3
ஆண்டு படிக்க வைத்து அதன் பின் மணம் முடித்து வைத்து, இப்போது சென்னையில் ஒரு
குழந்தையுடன் சுகமாக வாழ்கின்றாள்.
இந்தக்காதல் படுத்தும்பாடு என்னவென்று சொல்வது உண்மையில் நீங்கள் தொல்வதுபோ காதலுக்கு மூளை கூடவா ? இல்லை அவர்களின் பெற்றோர்க்களின் மனம் எவ்வளவு வேதனைப்படும் எத்தனை சினிமா பார்க்கின்றார்கள், எவ்வளவு பத்திரிக்கைகள் படிக்கின்றார்கள் ஏன் ? இந்த அறிவு இல்லாமல் போகின்றது.
பதிலளிநீக்குஇனியெனும் ஆத்ம பிரபாவுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய இறைவனிடம் வேண்டுவோம் வேறு வழி ?
இதைக் காதல் என்று சொல்லப்பட்டாலும் இது காதல் அல்ல. பருவ வயதில் தோன்றுகின்ற ஒரு கிளர்ச்சிதான். மனம் பக்குவம் அடையாத போது தோன்றுகின்ற ஒன்று. ஆனால் அதை எல்லாம் யோசிக்க அந்த அறிவு இந்த வயதில் இடம் கொடுக்காத காரணத்தால் இப்படிப்பட்ட முடிவுகள். பெற்றோரும், பள்ளியும் இந்த வயதைப் பற்றிய நல்ல புரிதலை குழந்தைகளிடம் ஏற்படுத்தினால் நல்லது. அதுவும் நட்புடன்.
நீக்குமிக்க நன்றி நண்பரே!
நினைக்கும் போதே மனம் பதறுகிறது..
பதிலளிநீக்குபெற்றெடுத்து - இத்தனை காலம் வளர்த்த தாய் தந்தையர் தனக்கு ஏற்ற ஒரு வாழ்க்கைத் துணையை தேடித் தருவார்கள் என்று சிந்திக்கக் கூடிய மனப் பக்குவம் -
ஆத்ம பிரபாவுக்கு மட்டுமல்லாமல் - இந்த வயதுடைய பெண்பிள்ளைகள் பலருக்கும் இல்லை என்பது மிக மிக வேதனைக்குரிய விஷயம்..
ஆம்! ஐயா! எல்லாம் வயசுக் கோளாறு அதைப் பற்றிய சரியான புரிதல் இல்லாமையாலும், பெற்றோரும் ஒரு காரணமாக அமைவதால்....மிக்க நன்றி ஐயா!
நீக்கு//தன் மகளிடம் வந்த சிறிய மாற்றத்தை, அந்தப் பெற்றோர்கள் கவனித்து, அதன் காரணமானக் காதலை அறிந்து அவளை அதிலிருந்து மீட்கத் தவறிவிட்டார்களே //
பதிலளிநீக்குமிக சரியா சொன்னீங்க அண்ணா ..பதின்ம வயது எதை செய்யனும்னு புரியாத பருவம்
ஹார்மோன்களும் ,மற்றும் ஒருவித துணிச்சல் ,பெற்றோர் வைக்கும் அதீத நம்பிக்கை எல்லாமே குழப்பும் பருவம் ..
..ப்ரரார்த்திபோம் ஆத்மபிரபாவுக்காக
மிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோதரி! இந்த ஹார்மோன் கள் படுத்தும் பாடு.....பெற்றோர் இன்னும் சற்றுக் கூடுதலாகக் கவனம் வைத்திருக்கலாம்....ஆசிரியர்களும், ஒரு மாணவி திடீரென்று மதிப்பெண்கள் குறையக் காரணம் என்ன என்றும் ஏன் அவளால் படிக்க இயலாமல் போகின்றது என்றும் சிறிது கண்ணுற்று நோக்கி இருக்கலாம். பெற்றோருடன் ஒரு கலந்து பேசியிருக்கலாம்...இப்படிப் பலவற்றை நாம் அலசலாம் தான்....ம்ம்ம்
நீக்குமிக்க நன்றி சகோதரி!
ஒரு அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு ஆத்மப் பிரபாவிற்குக் கிடைக்க வேண்டும் என்று மனம் ஏங்குகின்றது. – //
பதிலளிநீக்குஎன் தாய் உள்ளமும் அதையே வேண்டுகிறது.
ஆத்மபிரபாவிற்கு நல்லவாழ்க்கை அமைய வேண்டுமென்று இறைவனிடம் வேண்டுகிறேன் .
மிக்க நன்றி சகோதரி தங்களின் அன்பான உள்ளத்திற்கும், கருத்திற்கும்!
நீக்குமிக்க நன்றி சகோதரி தங்களின் அன்பான உள்ளத்திற்கும், கருத்திற்கும்!
நீக்குஇக்கால மாணவமாணவியர் தம் பெற்றோர் பற்றியோ, தங்களது குடும்பம் பற்றியோ, ஒரு நொடி கூட நினைப்பதில்லை. சுயநலம் அதிகமாகிவிடுகிறது காதல் என்னும் பெயரில். நற் சிந்தனைகளையும், நற் செயல்களையும் போதிக்க வேண்டிய பள்ளி, இன்று மதிப்பெண்களை பெற வைக்கும் தொழிற்சாலைகளாக மாற்றப்பட்டு விட்டனவே
பதிலளிநீக்குஎன் செய்வது?
ம்ம்ம் ஆன் நண்பரே! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு!
நீக்குதம +1
பதிலளிநீக்குமிக்க நன்றி!
நீக்குபல இளம் பெண்கள் தங்கள் அறிவை பயன்படுத்துவது இல்லை .நன்றாகப் படிக்கிறார்கள் ஆனால் சிந்திக்கும் திறன் குறைந்தவர்களாக இருப்பது வேதனை.ஏமாற்றுப் பேச்சுகளை நம்பி விடுகிறார்கள். திரைப்படங்களில் காதல் ஒரு இயல்பான உணர்வு என்பதை உணர்த்தாமல் அதனைப் போல உயரந்தது இல்லை என்ற ரீதியில் மூளை சலவை செய்வதும் ஒரு காரணம்
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரெ! தங்கள் கருத்திற்கு, ஆம் இதுவும் ஒருகாரணமாக இருக்கக்கூடும்...
நீக்குபூணூலையும் சிலுவையையும் அவுத்துப் போட்டு ஆற்றை கடந்து அந்தப் பக்கம் ஓடிப்போயிட்டா வாழ்க்கையில வெற்றியடைஞ்சதா இன்னும் இந்தப் பிள்ளைகள் நம்பிக் கொண்டிருப்பதுதான் கொடுமை...
பதிலளிநீக்குபள்ளியில் பாலியல் கல்வியும், வீட்டில் புரிதலும் இல்லாததே இது போன்ற நிகழ்வுகளுக்கு பெரும் காரணிகளாக இருக்கின்றன...
சரியாச் சொன்னீங்க மலர்வண்ணன்! உங்கள் கருத்தை வரவேற்கின்றோம்....மிக்க நன்றி! சரி ஏன் நீங்கள் பதிவுகள் போடவில்லை. அப்பப்ப முகத்தக் காமிக்கிறீங்க...என்னாச்சு...வாங்க உங்க நகைச் சுவைப் பதிவுகள வுடுங்களேன் இருக்கற இடத்துலருந்து....
நீக்குசரியாச் சொன்னீங்க மலர்வண்ணன்! உங்கள் கருத்தை வரவேற்கின்றோம்....மிக்க நன்றி! சரி ஏன் நீங்கள் பதிவுகள் போடவில்லை. அப்பப்ப முகத்தக் காமிக்கிறீங்க...என்னாச்சு...வாங்க உங்க நகைச் சுவைப் பதிவுகள வுடுங்களேன் இருக்கற இடத்துலருந்து....
நீக்குஐயோ.. அய்யய்யோ... பிரபாவிற்கு ஆத்மா இல்லையோ...
பதிலளிநீக்குஅவசரம் - அவஸ்தை...
ஆமாம் டிடி! அவசரம்தான்.......!
நீக்குமிக்க நன்றி டிடி
பின்விளைவுகள் அறியாமல் வீணாய்ப் போகும் இது மாதிரி மொட்டுகளை என்ன சொல்லித் திருத்த? என்ன ப்ளாக்மெயிலோ அந்தப் பெண் கலங்கிய கண்களுடன் படிப்பைக் கைவிட. இறைவன் அந்தப் பெண்ணுக்கு நல்ல பாதையைச் சீக்கிரம் காட்டட்டும். பாவம் அந்தத் தாய், தந்தையர்.
பதிலளிநீக்குஇப்படித்தான் பல மொட்டுக்கள் வீணாகிப் போகின்றன! பெற்றோரிடமோ இல்ல ஆசிரியர்களிடமோ சொல்லி தீர்வு கண்டிருக்கலாம்...பெற்றோரும், ஆசிரியரும் இன்னும் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்....ம்ம்ம் ஏதாவது நல்லது நடந்தால் சரி...
நீக்குதேர்வைக் கூட புறக்கணிக்க வைக்கிறதே,தன் தவறான தேர்வு என்பதை 'ஆத்ம பிரபா 'க்கள் புரிந்துக் கொண்டால் நல்லது !
பதிலளிநீக்குஆமாம் ஜி! கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் போல?!! ம்ம்ம் என்ன சொல்ல....மிக்க நன்றி ஜி!
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குகாதலுக்கு கண் மட்டுமல்ல, மூளையும் இல்லை....படித்தபோது மனம் பதறியது. வாலிபப் பருவத்தில் வரும் காதல் படுத்தும் பாடு கல்வியைப் பாழ்படுத்துகிறேதே!
“தன் மகளிடம் வந்த சிறிய மாற்றத்தை, அந்தப் பெற்றோர்கள் கவனித்து, அதன் காரணமானக் காதலை அறிந்து அவளை அதிலிருந்து மீட்கத் தவறிவிட்டார்களோ? அந்தப் பெற்றோர்கள் என்று மனம் பதைக்கிறது” தங்களின் ஆதங்கம் ... வேதனை...உணரமுடிகிறது.
சமீபத்தில் எனது பதிவுகூட ‘தூக்கிலேற்றிய காதல்’ கூட கல்லூரியில் படித்த மாணவிக்கு நிகழ்ந்தது.
‘பிரச்சினை இல்லாமல், ஒரு அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு ஆத்மப் பிரபாவிற்குக் கிடைக்க வேண்டும் என்று மனம் ஏங்குகின்றது.’ -தங்களின் வேண்டுதல் நிறைவேற வேண்டும்.
நன்றி.
த.ம. 9.
மிக்க நன்றி நண்பரே! தங்களின் பதிவும் வாசித்தோம் என்ற நினைவு....இல்லை என்றா ல் வாசிக்கின்றோம்...அந்தப் பெண்ணிற்கு நல்லதொரு வாழ்வு கிடைத்தால் அது நல்லது. கூடவே கல்வி கற்கும் வாய்ப்பும் கிடைத்தால் சிறக்கும்....
நீக்குசாதிக்க வேண்டிய வயதில் கோட்டை விட்டு , பின் என்ன செய்யப் போகிறார்கள்? பெண்களுக்கு கடைசி வரை துணை நிற்பது படிப்பு மட்டுமே என்று நான் என் மாணவிகளுக்கு அடிக்கடி சொல்வதுண்டு.பாவம் அந்த குழந்தை காதல் என்பதை நம்பி வாழ்க்கையை,பெற்றோரின் தன்மானத்தை தொலைத்து விட்டு நிற்கிறது.இறைவன் காப்பாற்ற வேண்டும்.
பதிலளிநீக்குஆம் சகோதரி! மிக நல்ல அறிவுரை! பெண்கள் தங்கள் காலில் சுய சிந்தனையுடன், நம்பிக்கையுடன், மனப்பக்குவத்துடன் நல்ல கல்வியுடன் வாழ வேண்டும்....
நீக்குமிக்க நன்றி சகோதரி!
உண்மைதான் ஆசானே..!
பதிலளிநீக்குதிரைப்படங்களிலும் பத்திரிக்கைகளிலும் இலக்கியங்களிலும் வரும் (அ)சுத்தமான காதலை நம்பி அப்பருவ வயதின் மனவெழுச்சியோடு பொருத்திப் பார்த்து உன்னதம் என நம்பிப் பெருமாலும் ஏமாறும் எண்ணற்ற பிள்ளைகள் இது போல் பள்ளிப்பருவத்தினராக இருப்பதுதான் கொடுமை.
இன்னொரு புறம் காதலிக்காவிட்டால் தன் வயதொத்த சக நட்பிடத்துக் கிடைக்காத அங்கீகாரம்.
எனது கருத்து எல்லா இடங்களிலும் இதுதான்.
பெற்றோர்கள் இது போன்ற பருவத்தில் குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் விதம், காட்டும் பரிவு, பொழியும் அன்பு, கற்பிக்க வேண்டிய வாழ்வியலுக்குத் தேவையான நெறிமுறைகள்,
பொது இடங்களில் குறிப்பாகப் பெண்பிள்ளைகள் செலுத்த வேண்டிய கவனம், உறவோ நட்போ முன்பின்அறிமுகமில்லாமையோ யாரிடத்தும் நிற்க வேண்டிய எல்லை, ஒரு வேளை காதல் என்று சொல்லும் போது, இன்னும் அக்குழந்தைமேல் காட்ட வேண்டிய கரிசனம், உணர்த்த வேண்டிய முன் நிற்கும் பிரச்சனைகள்......!
பெரும்பாலும் பெற்றோரின் அன்பும் கவனிப்பும் அற்ற குழந்தைகள்தான் இன்னொருபுறம் நிரம்பித் ததும்பும் அன்பும், எல்லையற்ற கவனிப்பும் காட்டக் கூடிய மாயவலைகளில் வாழ்வு சிக்கிச் சின்னாபின்னமாகின்றன.
எனக்கு என்னமோ ஆத்மப்பிரபா விற்கும் கெட்டபின் ஞானம் வரும் என்றே தோன்றுகிறது.
அப்போது தாங்கிய தோள்களிலும் தூங்கிய மடிகளிலும் ஒரு கணம் சாய்ந்து கதறத் தோன்றும்.
இல்லாமை மட்டுமே இருந்ததன் அருமையை உணர்த்தப் போதுமானது.
அன்றி அவள் நம்பிக்கை வீண் போகவில்லை என்றால்.
அவள் காதலன் மாய உலகில் வரும் இளவரசனைப் போல் என்றால்.......
நிச்சயமாய் ஆத்மார்த்தமான நம் வாழ்த்துகளை அவளுக்குத் தருவோம்.
இப்போது வருந்தும் பெற்றோரும் சற்றுக் காலம் கடந்தேனும் அவ்வாழ்த்துகளைத் தருவர்.
அருமையான பதிவு ஆசானே..!!
தொடருங்கள்.
த ம கூடுதல் 1
இன்னொரு புறம் காதலிக்காவிட்டால் தன் வயதொத்த சக நட்பிடத்துக் கிடைக்காத அங்கீகாரம்.// உண்மையே ஆசானே!
நீக்குதாங்கள் சொல்லுவது பொல் பெற்றோர்தான் வாழ்வியல் நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அன்புடனும், கருணையுடனும், தோள் சாயக் கொடுக்க வேண்டும். அன்பும் அரவணைப்பும் கிடைக்காத இடங்களில் தான் குழந்தைகள் பிறழ்ந்து போகின்றனர். உண்மையே!
மிக மிக அருமையான ரசனையான, ஆழாமான அர்த்தமுள்ளக் கருத்துக்களைப் பின்னூட்டத்தில் தந்தமைக்கு மிக்க மிக்க நன்றி! ஆசான் அல்லவா! அதுவும் பண்பட்ட அறிவுமிக்க ஆசான் அல்லவா....
மிக்க மிக்க நன்றி ஆசானே!
பதிவைப் படித்தேன்! வருந்துவதைத் தவிர வேறென்ன சொல்ல!
பதிலளிநீக்குமிக்க நன்ரி புலவர் ஐயா! தங்கள் கருத்திற்கு!
நீக்குகாதல் என்பது ஒரு உணர்வு. திரைப்படங்களும் நம் எழுத்தாளர்களும் அந்த அனுபவம் இல்லாவிட்டால் ஏதோ சரியில்லை என்ற போக்கிலேயே காண்பிக்கிறார்கள். மனம் பக்குவப் படாதபோது தவறுகள் நேர்கின்றன. காதல் என்பது ஏதோ மகாத்தவறு என்று சித்தரிக்கப் படுவதால் மனதில் கள்ளம் ஏற்படுகிறது. அதுவே களங்கத்துக்குக் காரணமாகிறது. பெற்றோர்களுக்குப் புரிதல் போதாமல் இருக்கும் போது பதின்ம வயதினர் அதை மறைக்கின்றனர். சங்ககால இலக்கியங்கள் கூட இம்மாதிரி காதல் இருந்ததை தெரியப் படுத்துகின்றன என்றே தோன்ற்கிறது. அனுபவங்கள் பாடஙளைக் கற்பிக்கும். தினம் வாசிக்கும் செய்திகளில் இதுவும் ஒன்றுபோல் தெரிகிறது.
பதிலளிநீக்குஆமாம் சார்! திரைப்படங்கள், எழுத்தாளர்கள் மட்டுமல்ல, நண்பர்களுக்குள்ளும் அப்படித்தான். இதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனமாக இருந்து அவர்களை வழி நடத்தினால் நல்லது. சங்க காலத்திற்கும் இப்பொதைய காலத்திற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. மனிதர்கள் தானே....இந்த உணர்வுகள் மட்டும் மாறுவதில்லை....உண்மையான, பக்குவப்பட்ட, புரிதல் உள்ளக் காதல் என்றால் மிகவும் நல்லதுதானே சார்! மிக்க நன்றி சார்! தங்களின் அருமையான கருத்திற்கு!
நீக்கு"தகர்ந்து போன மனதுடனும், தளர்ந்து போன உடலுடனும் நடந்து செல்லும் அவரது உருவம் அவ்வளவு சீக்கிரம் என் மனதை விட்டு அகலப் போவது இல்லை." என்ற உண்மை உள்ளத்தை விட்டு அகலாதே!
பதிலளிநீக்குஎத்தனை தாய்மாரின் எத்தனை துயர்கள்...
இதெல்லாம்
இன்றைய இளசுகள் உணர வேண்டுமே!
ஆம் நண்பரே! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு!
நீக்குஇந்த வயதில் காதலின் ஆழமான உணர்வுகள் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. திரைப்படங்கள், சீரியல்கள், பாடல்கள் மனக்கிளர்ச்சியை மட்டுமே உண்டாக்குகின்றன. அதைக் காதல் என்று கற்பனை செய்து வீட்டை விட்டு ஓடிப்போகும் இளம் பெண்கள் இன்று ஏராளம். படிப்பில் சூரப்புலியாக இருக்கும் பெண்கள் பலர் மனப்பக்குவத்தில் குறைந்திருப்பதனால் வரும் விளைவு இது. சமீபத்தில் கூட பள்ளியில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வந்த சகோதரிகள் அவர்கள் பெற்றோர் வசதியற்ற காரணத்தினால் ஒருத்தரை மட்டும் படிக்க வைத்து, மற்றவரைத் திருமணம் செய்து கொடுத்து விட முடிவு செய்த காரணத்தால் இரண்டு சகோதரிகளுமே தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தி வந்தது. பெண் என்பவள் மட்டுமல்ல, அது ஆண் பிள்ளையானாலும் வளர்ந்து வரும்போதே பெற்றவர்கள் அந்தந்த வயதில் தேவையானவற்றை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். இது கூட படிப்பறிவு உள்ள பெற்றோர்களுக்கு மட்டுமே! பாவம், படிப்பறிவில்லாத, ஏழை பெற்றோர் என்ன செய்வார்கள் தன் குழந்தைகளை நம்புவதைத் தவிர?
பதிலளிநீக்குஆம்! சகோதரி! மிகவும் சரிதான்! மனக் கிளர்ச்சிதான்...
நீக்குஆம் அந்த இரு சகோதரிகளைப் பற்றியும் வாசித்தோம்... வேதனையான முடிவு...
பெண் குழந்தையானாலும், ஆண் குழந்தையானாலும் அவர்களை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும்....மிக்க நன்றி சகோதரி தங்களின் அருமையான கருத்திற்கு!
நண்பர் வீட்டிலும் தற்போது இது போன்று ஒன்று நடந்து கொண்டிருக்கின்றது.
பதிலளிநீக்குஎனக்கு ஒரே ஓரு ஆச்சரியம் என்னவென்றால்
மதம் காதல் இந்த இரண்டு விசயங்களிலும் நடக்கும் திடீர் ரசாயன மாற்றம் என்னை அதிக அளவு யோசிக்க வைக்கின்றது. கூடவே ஆச்சரியப்பட வைக்கின்றது.
முப்பது வருடங்கள் இந்து மத சாமிகள் அனைத்தையும் வணங்கி பக்தி பழமாக இருந்த பெண் ஒரே நாளில் சாத்தனை இனி வணங்க மாட்டேன் என்று மனம் மாறுவதும்
இருபது வருடங்கள் தாய் தந்தை மற்றும் உறவுகளுடன் இருந்த பெண் ஒருவருடன் அனைத்தையும் துறந்து விட்டு சென்று விடுவதும்.
எப்படி முடிகின்றது? என்று யோசித்துக் கொண்டே இருக்கின்றேன்.
இதைப்பற்றி ஒரு தனிப் பதிவாக எழுதுங்களேன்.
மதம் நிச்சயமாக யோசிக்க வைக்கின்றது! காதல் ரசாயன மாற்றங்களால் தான் என்றாலும்....பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள் சிறிது கவனமாக இருந்தால் தீர்வு காணலாம். அதையும் மீறி நடந்தால் பட்டுத் தெரியட்டும் என்று விட வேண்டியதுதான்...
நீக்குதனிப் பதிவாக எழுதலாம் என்ற யோசனை உள்ளது. மிக்க நன்றி நண்பர் ஜோதிஜி!!
Culture insists on segregation of sexes. The boys and girls grow with the mindset imposed by the culture and will definitely elope. In NE, the sexes intermingle freely and there is no such incidents of giving up studies and running away with partners.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! தங்களின் அழகான யதார்த்தரீதியிலான கருத்திற்கு! உண்மையே!
நீக்குஎன்னைப்பொருத்தவரையில், காதலிப்பது தவறில்லை ஆனால் எந்த வயதில் என்பது தான் பிரச்சனையே. இப்படி படிக்கிற வயதில் காதலிப்பது என்பது வெறும் உடற் கவர்ச்சி தான் . ஆனால் அதனை இந்த இளம் சமுதாயத்தினர் தெரிந்து கொள்வதில்லை.
பதிலளிநீக்குஇந்த விடலைப்பருவத்தில், அவர்களுக்கு வீட்டில் உண்மையான அன்பு கிடைக்கும்பட்சத்தில், அதாவது அந்த வயதினருக்கு உற்ற நண்பர்கள் பெற்றோர்களாக இருந்து விட்டால், இந்த பிரச்சனை ஏற்படாது என்று நினைக்கிறேன்.
ஆம் நண்பரே! இங்கு சொல்லப்பட்டது விடலைப் பருவக் காதல் பற்றியே. காதல் என்பது தவறெ இல்லையே! அதுவும் அன்புதானே! மிகவும் உயர்வான ஒன்று. புரிதல் இருந்துவிட்டால், உண்மையான காதலாக இருந்துவிட்டால்....அதில் தவறே இல்லை. ஆனால், இப்போதெல்லாம் கல்லூரிகளில் கூட ஜஸ்ட் டைம் பாஸ் என்பது போல காதலிக்கின்றார்கள். இல்லை என்றால் காதலித்துவிட்டு நன்றாக ஊரி சுற்றி விட்டு, கல்யாணம் என்று வரும் போது வீட்டில் பேச பயந்து கொண்டு, அவர்கள் பார்க்கும் பெண்ணையோ, ஆணையோ மணந்து கொண்டு விடுகின்றார்கள். ஏன் ஒரு பெண்ணின் மீதோம் ஆணின் மீதோ காதல் வரும் போது நம் வீட்டின் நிலைமை, அவர்களது எண்ணங்கள் தெரியாமலா இருக்கும்? தெரிந்தும் காதலித்தால், தைரியம் வேண்டும், சொல்லி மணம் முடித்துக் கொள்ள, இல்லை என்றால் அந்தக் காதலை வளர விடாமல் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். அந்தக் காலத்தில் தான் பல கட்டுப்பாடுகள் இருந்தது என்றால் இப்போதும் இந்தக் கால கட்டத்திலும் கூடா ஜாதி பிரிக்கின்றது காதலை....ம்ம்ம்ம்
நீக்குஅருமையான கருத்தை முன் வைத்தமைக்கு மிக்க நன்றி எங்கள் கருத்தும் அதே!
எதிர்காலம் பற்றிய எந்த நினைவும் இன்றி, ச்சே, கோபம் அதிகமாகிறது. காதல் தவறு என்பது என் வாதம் அல்ல. எடுக்கும் முடிவு தான், காதல் என்பது எதையும் எதிர்கொள்வது, இப்படி கொல்வது அல்ல,பெற்றோர், கூட இருப்பவர்கள், இப்படியாக,,,,,
பதிலளிநீக்குகாதல் தவறில்லை. ஆனால் இது போன்றவைதான் நல்லதல்ல....மிக்க நன்ரி சகோதரி!
நீக்குஇதைக் காதல் எனக் கூறாதீர்கள் துளசி ஐயா! இது காதல் இல்லை; வெறும் இனக்கவர்ச்சி. தாங்கள் அறியாததில்லை, நாட்டில் இப்படி நிறைய நடக்கிறது என்பதால், இதையே சாக்காக வைத்து உண்மையான காதலர்களைக் கூடப் பிரித்து, ஆள் வைத்து அடித்து, இணையரில் ஒருவரை - பெரும்பாலும் ஆணை - கொன்று தங்கள் சாதி வெறியை நிலைநாட்டுகிறார்கள் சில கட்சிக்காரக் கயவர்கள்.
பதிலளிநீக்கு"ஆம்! நான் சாதிக்காரன்தான். இன்று மட்டுமில்லை தொடக்கத்திலிருந்தே நான் சாதிக்காரன்தான்" எனக் கொஞ்சமும் கூசாமல் மேடையில் அலறும் இந்தச் சாதிய வெறியர்களுக்கு நாம் எந்த வகையிலும் உதவி புரிந்ததாக ஆகிவிடக்கூடாது. காதலுக்குக் கண்ணும் உண்டு, அறிவும் உண்டு! ஆனால், இனக்கவர்ச்சிக்குத்தான் உடற்பசியைத் தவிர வேறொன்றும் இல்லை.
இது காதலே அல்ல! நண்பரே! இனக்கவச்சிதான். காதல் என்றுதானே சொல்லப்படுகின்றது அதனால்தான் அந்தத் தலைப்பு அப்படிக் கொடுத்தோம். மற்றபடி உண்மையான காதலாக இருந்தால் அதன் மதிப்பே தனிதான் நண்பரே! அது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாதது! வருடங்கள் ஆனாலும் அழிதாதது! அதில் தூய அன்பு மட்டுமே நிறைந்திருக்கும்! ஆனால் நீங்கள் சொல்லி இருப்பது போல் இந்த சாதி வந்து கெடுத்துவிடுகின்றதே! அது எப்போது மாறுமோ அப்போதுதான் உண்மையான காதல்கள் வெல்லும்....ஆம் உண்மையான காதலுக்கு கண்ணும் உண்டு அறிவும் உண்டு, மனமும் உண்டு!
நீக்குமிக்க நன்றி ந்ண்பரே! தலைப்பை வேறுவிதமாக வைத்திருக்கலாமோ...இப்போது தோன்றுகின்றது.!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். எந்நாளும் நலம் வாழ வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! மற்ற சமூகத் தளத்தில் கொடுத்துவிட்டதால் இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன்.. மன்னிக்கவும்!
நீக்குகாதல் கண்ணை மட்டும் மறைக்காமல் ...மூளையையும் மழுங்கடித்து விடுகிறது.
பதிலளிநீக்குகுருட்டு தைரியம்...? என்ன வென்று சொல்வது இவர்களை .....
சகோதரி! இது இஅங்க்கவர்ச்சிக்கு மட்டும்தான். உண்மையான காதல் என்றால் வரவேற்கலாமே! அது அறிவுடன் சிந்திக்கும்.....அன்புட்னௌம்....மிக்க நன்றி சகோதரி!
நீக்குதங்களின் வருங்காலத்தை எப்படியெல்லாம் இவர்கள் எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள் ! சீக்கிரமே தெளிந்து வர வேண்டும்.
பதிலளிநீக்குதன் திறமைக்கு மீறி படிக்கச் சொல்லும் பெற்றோர் & ஆசிரியர்களிடமிருந்தும் தப்பிக்க இதுபோன்ற வழிகளைத் தேடுபவர்களும் இருக்கிறார்கள்.
ஆம்! இனக்கவர்ச்சியால் குழந்தைகள் இப்படி ஆகின்றார்களே. இந்த வயதினருக்கு இதைப் பற்றிய நல்லதொரு கல்வி தேவை! மனத் தெளிவு தேவை என்பதும்.
பதிலளிநீக்குமிக்க நன்றிசகோதரி!
இளம் வயதினில் இனக்கவர்ச்சிக்கு ஆளாவது சகஜம்தான். குழந்தைகளும் பெற்றோர்களும் எவ்வளவுதான் கவனமாக இருப்பினும் இதுபோல ஆங்காங்கே எதிர்பாராத சில சம்பவங்கள் நடைபெற்று விடுகின்றன.
பதிலளிநீக்குஅனைவருக்குமே மனத்தெளிவுடன் அனைத்துக்கோணங்களிலும் சிந்திக்கும் ஆற்றல் இயற்கையாகவே ஏற்பட வேண்டும்.
அனைவரையும் சிந்திக்க வைக்கும் சிறப்பானதோர் பகிர்வுக்கு நன்றிகள்.