வெள்ளி, 21 மார்ச், 2014

தேர்தல் களத்தில் 158 வது முறையாகவும் குதிக்கும் தேர்தல் ராஜா



குழல்மந்நம் ராமகிருஷ்ணன்

உலகிலேயே நீண்ட மீசையுள்ள-ராம்சிங்க் சௌஹான்


உலகிலேயே உயரம் அதிகமுள்ள சுல்தான் கோசன்


உலகிலேயே உயரம் குறைவான சந்த்ர பஹதூர் தாங்கி

உலகிலேயே உயரம் குறைவான கதாநாயகன் ப்க்ரூ என்ற அஜித்

     நீண்ட நேரம் மிருதங்கம் வாசித்து, லிம்கா, கின்னஸ் ரெக்கார்ட் வென்ற குழல்மந்நம் ராமகிருஷ்ணன், அது போல், நீண்ட மீசையுள்ளதாலும், உயரம் அதிகமானதாலும், உயரம் குறைந்ததாலும், உயரம் குறைந்து கதாநாயகனாக நடித்ததாலும் (பக்ரூ என்ற அஜித்), கின்னஸ் ரெக்கார்ட் வென்ற ஏராளமானவர்களைப் பற்றி நமக்குத் தெரியும். இதோ, அந்த வரிசையில், தேர்தல் நேரமான இப்போது நம் முன் கின்னஸ் ரெக்கார்டில் தேர்தல் சம்பந்தமான ஒன்றில் இடம் பிடித்த தேர்தல் ராஜா! இவரது கின்னஸ் தகுதி, உலகில், அதிகமாகத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றது என்பதுதான்!

ஆல் இந்தியா தேர்தல் ராஜா - Dr. பத்மராஜன்(ஹோமியோ) - அதிக முறை தேர்தலில் தோற்றவர் - கின்னஸ் ரெக்கார்ட்

மீண்டும், நடக்கவிருக்கும் 2014 தேர்தலிலும், தோற்பதற்காக, 158 வது முறையாக, வாரனாசியில் நரேந்திர மோடிக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோற்கப்போகிறார்! மே 12ம் தேதி, வாரனாசியில் நடக்கும் தேர்தலில் போட்டியிட, நாமினேஷன் கொடுக்க, வரும் ஏப்ரல் 17அம் தேதி அங்கு செல்ல முடிவு செய்திருக்கிறார்! அதற்கு முன், ஐயப்ப பக்தரான அவர், சபரிமலை சென்று ஐயப்ப தரிசனம் செய்தும் விட்டார். இனி பயப்பட ஒன்றுமில்லை!.  சேலம், மேட்டூர், ராம் நகரைச் சேர்ந்த இவர், வாரனாசியில் மட்டுமல்ல, தர்மபுரி பாராளுமன்றத் தொகுதியில் அன்புமணி ராமதாஸுக்கு எதிராகவும் போட்டியிடுகிறார்!

     1988ல் மேட்டூர் சட்டசபைத் தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட ஆரம்பித்த இவர், இதுவரை 156 முறை போட்டியிட்டு, ஏறத்தாழ 13 லட்சம் ரூபாய் தேர்தலுக்காகச் செலவிட்டிருக்கிறார்.  தோல்வியைச் தழுவியதால் மட்டும் கின்னஸ் தகுதியைப் பெற்று எல்லோரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்! அவர், தான், போட்டியிடுவதற்காக்ச் சொன்ன காரணம், எனக்கு மிகவும் வித்தியாசமாகத் தோன்றியதால்தான் அவரைப் பற்றி இந்த இடுகை!

“அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் களம் எனும் எண்ணத்தை மக்கள் மனதிலிருந்து அழிப்பது என் நோக்கம்! எந்த ஒரு சாதாரண இந்தியக் குடிமகனுக்கும், இந்தியாவிலுள்ள எந்த்த் தொகுதியிலும் தேர்தலில் நின்று போட்டியிட உரிமை உண்டு என்ற உண்மையை எல்லோருக்கும் உணர்த்துவதுதான் என் லட்சியம்!

அவரது இந்த வார்த்தைகளும், இந்தச் செயலும், இந்தியக் குடிமகனுக்கு உலகில் எங்குமே இல்லாத அளவிற்குச் சுதந்திரமும், பாதுகாப்பும், உரிமையும் நம் நாட்டில் உண்டு என்ற உண்மையை பறைசாற்றுவதை நினைக்கையில், வருத்தப்பட, வேதனைப்பட, வெட்கப்படக், கோபம் கொண்டு குமுற ஏராளமான சம்பவங்கள் தினமும் நடக்கும் நம் நாட்டில் வாழும் என்னை, கொஞ்சம் பெருமைப்படவும் வைத்தது! (கோபம் வேண்டாம்! மிக்ச் சிறிய அளவு பெருமை அவ்வளவே!). 

“இதில் பெருமைப் பட என்ன இருக்கிறது?....டெபாசிட் கட்ட பணம் இருந்தால் போதுமே என்ற எண்ணம் வேண்டாம்.  1991ல், ஆந்திராவில், நந்தியால் எனும் தொகுதியில், இவர் நரசிம்ம ராவுக்கு எதிராகப் போட்டியிட்ட போது, இவருக்கு மிரட்டல் மட்டுமல்ல, இவரைக் கடத்திக் கொண்டே போயிருக்கிறார்கள்! எதிராளிகள் எவருமின்றி நரசிம்மராவைத் தேர்ந்தெடுக்க நடந்த முயற்சி அது!  எப்படியோ, ஒரு பாஜக வேட்பாளர் போட்டியிட வந்ததால், நம் தேர்தல் ராஜா வேட்பாளராகி வழக்கம் போல் தோற்றிருக்கிறார்! இப்படிப்பட்டப் பிரச்சினைகளும் தேர்தல் ராஜாவுக்கு உண்டாகி  இருக்கிறது. எனவே பணம் மட்டும் போதாது, பணத்துடன் கொஞ்சம் தைரியமும் தேவை!  அதனால்தானோ என்னவோ, ஒரு தைரியத்திற்காக வீரப்பன் மீசையையும் வைத்திருக்கிறார்,  இந்த டையர் ரீட்ரீடிங் கடை நடத்தும்  மேட்டூர் குடிமகன். 

     ராஜன் என்று அழைக்கப்படும் இந்த டாக்டர் பத்மராஜன்,(ஹோமியோ மருத்துவர்) எப்போதும் தன்னுடைய போராட்டத்தை அரசியல் பிரமுகர்களுடன் மட்டுமே நடத்துவார்!  இதற்கு முன், கலைஞர், ஜெயலலிதா, வாஜ்பாய், நரசிம்மாராவ், அப்துல்கலாம், ப்ரதிபாபட்டில், கே.ஆர்.நாராயணன் போன்றவர்களுடன் போட்டி போட்டுத் தோற்றிருக்கிறார்! (இப்படி ஒரு ஆள் போட்டிப்போட்டது அவர்களுக்கேத் தெரியாமல் இருந்திருக்கலாம்). அப்போதுதான், பொதுமக்களுக்குச், சாதாரண மனிதன், அரசியல் செல்வாக்குள்ளவர்களுடன் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதை எளிதாகப் புரியவைக்க முடியும் என்பது இவரது வாதம்! இதை கேட்கும் நாமும் வாதிக்கலாம் – இது சுயநலமும், சுயவிளம்பரமும் கலந்த பொதுநலம் என்று!  இருப்பினும், அதில் பொது நலம் சிறிதளவேனும் உண்டு என்பதை நம்மால் மறுக்க முடியாதுதானே! தேர்தல் ராஜா, 158வது முறையும் வெற்றிகரமாகத் தோற்று(!?), தன் கின்னஸ் தகுதியை எவருக்கும் விட்டுக் கொடுக்காமல், தன்னிடமே தக்கவைத்துக் கொள்ள வாழ்த்துக்கள!

     

32 கருத்துகள்:

  1. அவரது இந்த வார்த்தைகளும், இந்தச் செயலும், இந்தியக் குடிமகனுக்கு உலகில் எங்குமே இல்லாத அளவிற்குச் சுதந்திரமும், பாதுகாப்பும், உரிமையும் நம் நாட்டில் உண்டு என்ற உண்மையை பறைசாற்றுவதை நினைக்கையில், வருத்தப்பட, வேதனைப்பட, வெட்கப்படக், கோபம் கொண்டு குமுற ஏராளமான சம்பவங்கள் தினமும் நடக்கும் நம் நாட்டில் வாழும் என்னை, கொஞ்சம் பெருமைப்படவும் வைத்தது! (கோபம் வேண்டாம்! மிக்ச் சிறிய அளவு பெருமை அவ்வளவே!).

    இதுவரை அறியாத தகவல்
    விளக்கிச் சென்றவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! தங்கள் கருத்திற்கு! இப்படியும் ஒரு மனிதர் இருக்கிறாரே என்று வாசித்த போது ஆச்சரியமாகத்தான் இருந்தது!

      நீக்கு
  2. ஆஹா..இது உண்மையிலும் மீசை தானா ?..!!!!!!
    ரசிக்க வைத்த பகிர்வு அருமை ! வாழ்த்துக்கள்
    சகோதரா மேலும் தொடரட்டும் .

    பதிலளிநீக்கு
  3. தேர்தல் ராஜா தகவல்கள் அறியாதவை... இப்படியுமா...?

    பதிலளிநீக்கு
  4. தேர்தல் ராஜா செய்திகள் இதுவரை அறியாதது நண்பரே நன்றி

    பதிலளிநீக்கு
  5. குறிப்பிட்ட தகவல்களை ஒரே தொகுப்பாக கொடுப்பது வரவேற்க்கக்கூடியதே.

    பதிலளிநீக்கு
  6. ஹோமியோபதி டாக்டர் பத்மராஜன் இம்மாதிரி தேர்தல்ராஜனாக மாறிவருவது நல்லதே. ஏனெனில் ஹோமியோபதியில் நோய்கள் குனமாவதில்லை. அரசியல் மூலமாவது குணமாகட்டுமே!

    பதிலளிநீக்கு
  7. பாராட்டத் தக்க மனிதர்தான்! ஐயமேயில்லை!

    பதிலளிநீக்கு
  8. புரியாத புதிர்களுக்குள் புரியும் புதிர். மனிதர்களில் பல விதம் அவரும் ஒரு விதம்.
    ரசிக்கும் படியான தகவல்களை அருமையாக முன் வைத்தீர்கள் மிக்க நன்றி சகோதரா!
    வாழ்த்துக்கள்....! google follower ஐ கிளிக் செய்தால் இப்பொழுது கையாள முடியாது என்றே வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனியா இதே பிரச்சனை தான் எனக்கும். உங்களையும்,சகோவையும் follow பண்ணமுடியல .y blood same blood !!

      நீக்கு
  9. மிக்க நன்றி சகோதரி அம்பாளடியாள்! தங்கள் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  10. எவ்ளோ அடிச்சாலும் தாங்குறார்! இவர் ரொம்ப நல்லவருங்கோ!

    பதிலளிநீக்கு
  11. இப்படியும் ஒருவர் இருக்கிறார் பாருங்கள் DD! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  12. மிக்க நன்றி கரந்தையாரே! தங்கள் கருத்திற்கு!

    பதிலளிநீக்கு
  13. ந்ண்பர் ஜோதிஜி, தங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  14. நல்லதொரு நக்கல் ஊடே ! பின்னூட்டத்தில்! செல்லப்பா சார்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  15. மிக்க நன்றி இனிய இனியா சகோதரி!

    அப்படி நடப்பதுண்டு கூகுள் அப்படி பதிலளிப்பது! எங்களுக்கும் சில தளங்கலுக்குச் சென்று அப்படி ஆனதால் இன்னும் தொடராம்ல இருக்கின்றோம்! மீண்டும் முயற்சி செய்ய்து பாருங்கள்1 அப்படியும் பிரச்சினை என்றால் இருக்கவே இருக்கின்றார் நமது ஆபத்பாந்தவர்ன், நண்பர் DD அவர்கள் !

    பதிலளிநீக்கு
  16. எது எதுக்குதான் கின்னஸ் சாதனை என்று தெரியவில்லை .நம்ம ஜனநாயகம் பணக்காரனுக்கு மட்டுமே என்றாகி விட்டது ,இவர் இப்படி பெருமைப் பட்டுக் கொள்வதில் அர்த்தமே இல்லை !
    த ம 9

    பதிலளிநீக்கு
  17. ஹாஹஹா நல்ல பின்னூட்டம்! ஜி! ஜோக்காளி நகைச்சுவைத் துணுக்குகளாக அள்ளித் தெளிப்பாதால் ஜோக்காளியும் கின்னஸுக்குள் ஒரு நாள் நுழையலாம் ஜி! ஜோக்காளியைத் துணுக்குகளை கணக்கு வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்! ஜி!

    மிக்க நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
  18. அப்ப அவர நம்ம வைகைப் புயல் அப்படின்றீங்க! அதுவும் சரிதான்!

    பதிலளிநீக்கு
  19. சாதனையாளர்களைப் பட்டியலிட்டிருக்கிறீர்கள். இதுவும் ஒரு ‘பதிவுலக’ச் சாதனைதான்.

    பதிலளிநீக்கு
  20. சகோதரி மைதிலி அப்ப எங்க கூட்டத்துல வந்துடுங்க! எங்களுக்கும் அதெ பிரச்சினைதான்! நாங்கள் சில வலைச் தளங்களுக்குச் சென்று follow அழுத்தினால் follow பண்ண உடியாது என்ற பதிலே வருகின்றது! ஸோ இது கூகுள் ப்ளாகரின் பிரசினைதான்!

    பதிலளிநீக்கு
  21. ஐயையோ காம்க்கிழத்தன் நண்பரே என்ன இது? பதிவுலகச் சாதனை என்று சோதனையாக்கி விட்டீர்கள்??!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  22. யாத்தாடி எம்பூட்டு ஒசரம்...(சுல்தான் கோசன்)?!!!
    தேர்தல் ராசா... நம்ப குப்பத்துக்காண்டி ஒருக்கா வந்துக்கினார்னா... போதும்பா... கெலிக்க வச்சுருவோம்...!
    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    பதிலளிநீக்கு
  23. இன்ன நைனா தேர்தல் ராசா குப்பத்துக்காண்டி ஒருக்கா வந்துக்கினார்னா சொல்லுற? ராசா கெலிப்பாரு? டவுட்டு! ஓட்டு போட்டதுக்கு டேங்க்ஸ்பா! ராசாவுக்கு இல்ல நம்மளுக்கு!

    பதிலளிநீக்கு
  24. கின்னஸ் சாதககல் வியக்கவைத்தன..பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  25. தேர்தல் ராஜா அறியாத செய்திகளை அறிந்து கொள்ள வைத்த பதிவு. கின்னஸ் சாதனையை தக்க வைத்து கொள்ள வாழ்த்துக்கள் சொன்னீர்கள் பாருங்கள் திஸ் இஸ் பஞ்ச்

    பதிலளிநீக்கு