சனி, 15 மார்ச், 2014

இதயத்தைக் (தன் ஒரே) கொடுத்த வள்ளல்!...........

வழக்கமாக வரும் குறுஞ்செய்திகள், மின் அஞ்சல், ஏன் காலை வணக்கம் கூட இன்று வரவில்லை என் தோழியிடமிருந்து! ஏன், என்னாயிற்று என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது! ஏனென்றால், தோழி அப்படிப்பட்ட நபர் அல்ல!  எனக்கு சுடச் சுடச் செய்திகள், பதிவுகளுக்கு என்ன பின்னூட்டம் வந்திருக்கிறது, யார், யார் புது இடுகைகள் போட்டிருக்கிறார்கள், நாங்கள் என்ன பின்னூட்டம் தர வேண்டும் என்று பல செய்திகள் தரவில்லை என்றால் அவருக்குத் தலை அந்தச் சூட்டிலேயே வெடித்துவிடும்!  எனவே, நான் அவரை அழைத்தேன்!

“என்னாச்சு?  இன்று இப்படி ஒரு மௌனம்?


“அதை ஏன் கேட்கிறாய! நேற்று நாம் போட்ட பதிவு யாரை பாதித்திருக்கிறதோ இல்லையோ நம் மதுரைத் தமிழனைப் பாதித்திருக்கிறது! இன்று அதிகாலை வழக்கம் போல், என்ன பின்னூட்டங்கள் வந்திருக்கிறது என்று பார்க்க நம் வலைப்பூவைத் திறந்தால், ஒரே உப்பு!! என்ன இது என்று பார்த்தால், நம் மதுரைத் தமிழன் நேற்று முழுவதும் வடித்த ரத்தக் கண்ணீர்...ஸாரி உப்புக் கண்ணீர் காய்ந்து போயிருந்தது! கூடவே ஒரு செய்தியும்! இதைப் படி


“லேகா தன்னிடம் இருந்த 2 கிட்னியில் ஒன்றைத்தான் கொடுத்து இருக்கிறார் ஆனால் நானோ என்னிடம் இருந்த ஒரு இதயத்தை என் மனைவிக்கு கொடுத்துவிட்டேன். அதை வாங்கி வைத்து கொண்டு என் மனைவி என்னை நோக்கி நீ இதயமே இல்லாத அரக்கன் என்று சொல்லி அடிக்கிறாங்க இதுக்கு நீங்கள்தான் நியாம் சொல்லி பதிவு போட வேண்டும்

காரணம் புரிந்தது! எனக்கும் தோழியின் வருத்தம் தொற்றிக் கொண்டு விட்டது! தோழியும், நானும்,  இவ்வளவு தூரம் நம்மை நம்பி, நம் மதுரைத் தமிழன் நியாயம் கேட்கும் போது நாம் பஞ்சாயத்து பண்ணாமல் இருக்க முடியுமா? என்று பேசி, அவரைக் காப்பாற்றக் களத்தில் இறங்க முடிவு செய்து யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அலைபேசி அழைத்தது!  பார்த்தால் நம் மதுரைத் தமிழனின் அன்பு, காதல் மனைவி!


“ஹலோ! இன்று, அவர் உங்களிடம் வந்து விட்டாரா?  ஐயோ!  அதை ஏன் கேட்கின்றீர்கள்!  அவரோடு ஒரே ரோதனையாகி விட்டது! இத்தனை நாள் பொதுவாகத், தன் வலைப்பூவில் எல்லோரிடமும் புலம்பி வந்தவர் சமீப காலமாக, ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்தால், ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி இப்படி ஏதாவது புலம்பி, லொள்ளு பண்ணி என்னை மாட்டி விடுவது வழக்கமாகி விட்டது! வழக்கமாக அவரது சகோதரிகள் உஷா, ராஜி இவர்களிடம் புலம்புவார்!  சமீபத்தில் வெங்கட் அண்ணனின் வீட்டுக் கதவையும் தட்டியதாக அறிந்தேன்! இதோ இப்போது உங்கள் வீடு!  அவரை எப்படியாவது சமாதானப்படுத்தி அனுப்பி வையுங்கள்!

     “சகோதரி! அனுப்பி வைக்கிறோம்!  ஆனால், தவறாக நினைக்காதீர்கள்! பூரிக்கட்டையைத் தூக்க மாட்டேன் என்று எங்களுக்குச் சத்தியம் செய்யுங்கள்! பாவம் அவர்! உங்களிடம் அவரது இதயத்தையும் தந்து விட்டு, “இதயமில்லா அரக்கன் என்று உங்களிடம் அடியும் வாங்கினால்....கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!



     “என்னது?!  பூரிக்கட்டையைத் தூக்கக் கூடாதா? அவர் அடிக்கின்ற லொள்ளைத் தாங்குவது நான்! நான் எப்படி என்னைத் தற்காத்துக் கொள்வதாம்?  அவரிடம் ஒரு கேள்வி கேளுங்கள்!  என்னிடம் இதயத்தைக் கொடுத்து விட்டதாகச் சொல்லும் அவர், இதயம் இல்லாமல் எப்படி வாழ்கிறாராம்?  இதயம் இல்லாததால் தானே அவர் இப்படி என்னை மாட்டி விட்டு ஒவ்வொருவரிடமும் புலம்புகிறார்! அப்படியென்றால், அவர் இதயம் இல்லாத அரக்கன் தானே!  சரி சரி.......நேரமாகிறது! எனக்குப் பயங்கரமாகப் பசிக்கிறது! சாப்பாடு செய்ய வேண்டும்! அவரைச் சீக்கிரம் அனுப்பி வையுங்கள்! ஹலோ! அவர்தான் வந்து சமைக்கணும் அதான்......


நாங்கள் யோசிக்க ஆரம்பித்தோம்! சகோதரி கண்டிப்பாகப் பூரிக்கட்டையுடன் தான் காத்திருப்பார்! அதுவும் சரிதான்!  ஒருவேளை மதுரைத்தமிழனுக்குப் பூரிக்கட்டை அடி தினமும் பழகிப் போய்விட்டதால், அவரது மனைவி அதைத் தூக்கவில்லை என்றால் ஆள்மாறாட்டம் வந்து விடுமோ?. “என் செல்லமே, இன்று பூரிக்கட்டையைத் தூக்கவில்லையே! இன்று ஏதாவது ஸ்பெஷல் நாளா, நான் என் இதயத்தைத் தந்த நாளா? இல்லை தர்மத்தின் தலைவன் ரஜனி மாதிரி மறந்து போய் வேறு வீட்டுக்குள் வந்து விட்டேனா? என்று கேட்கப் போய்,  

“ஓ அப்படி வேறு ஒன்று நடக்கிறதா என்று பூரிக்கட்டை அடி வாங்கியதும்,

“இது அப்படி இல்லை, அந்த அர்த்தம் இல்லை, என் செல்லம், வழக்கமா யார்கிட்டயாவது போய் புலம்புவேன் இல்லையா.....அதுதான்.. ஐயோ!  என் செல்லமே! உன்னைத் தவிர வேறு யாரிடம் பூரிக்கட்டை அடி வாங்குவேன்! அடி வாங்கினாலும் உன் கையால் தானே வாங்குவேன்! அதில்தான் சுகமே! அதற்குத்தானே என் இதயத்தையே உனக்குத் தந்து விட்டேன்!. அது மட்டுமா? உன் இதயத்தைச் சுமந்து கொண்டு, உனக்காக சமைத்து, வீடு சுத்தம் செய்து, நீ களைப்புடன் வரும் போது சுடச் சுடசக் காபி கலந்து கொடுத்து, துணிகள் துவைத்து, இப்படி உனக்காக உழைத்து, உன்னை எப்படித் தாங்குகின்றேன்!  அதைக் கொஞ்சம் யோசித்துப் பார்! என்று சொல்லி அதற்கும் சேர்த்து அவர் வாங்கிய அடிகள் எங்கள் நினைவுக்கு வந்ததால் ஒரே யோசனை.

“துளசி...நிறுத்து!....நிறுத்து..!......இங்க ஒரு யோசனை தோணுது...நம் மதுரைத் தமிழனைக் கூப்பிடு அதற்குள் உன்னிடம், அந்த யோசனையைச் சொல்லுகின்றேன்!.......என்று தோழி சொன்னதும் நாங்கள் அதை ஆலோசித்தோம்!


“மதுரைத் தமிழா...பயப்படாதீர்கள் ....உங்கள் மனைவி உங்களைத் தேடி, எங்களைக் கூப்பிட்டார்!  நீங்கள் இப்போது கண்டிப்பாக அங்கு சென்றே ஆகவேண்டுமாம்!  சமைக்கும் நேரமாம்! அவர்கள் பூரிக்கட்டையுடன் தான் காத்திருக்கிறார்கள்!  ஆனால், பயப்படாதீர்கள்!  இப்படிச் சொல்லுங்கள்! “என் கண்மணி! நான் என் இதயத்தை உனக்குத் தந்தது போல, நீ எனக்கு உன் இதயத்தைத் தந்ததுனால் தானே நான் உயிர் வாழ்கின்றேன்! நீ என் இதயத்தை எப்படிப் பத்திரமாகப் பாதுகாக்கின்றாய்!  என்பதை நினைக்கும் போது உன் அன்பை நினைத்துப் “பூரித்துப் போனேன்! அது போல நானும் உன் இதயத்தைப் பாதுகாக்க வேண்டும் இல்லையா?  நீ இப்படி என்னைப் பூரிக்கட்டையால் அடித்தால், அது, நீயே உன்னை அடித்துக் கொள்வது போல ஆகின்றதே!  என்னுள் இருக்கும் உன் இதயம் ரத்தக் கண்ணீர் வடிப்பதை என்னால் தாங்க முடியுமா சொல்?  யோசித்துப் பார்!

     “இப்படிச் சொன்னீர்கள் என்றால் உங்கள் அன்பு மனைவி கண்டிப்பாகப் பூரிக்கட்டையைத் தூக்கி எறிந்து விட்டு உங்களைக் கட்டிக் கொண்டு விடுவார், பாருங்களேன், All the Best!”  என்று சொல்லி அவரைச் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தோம்! ஏதோ எங்களால் இயன்ற ஒரு உதவி! கூடவே இதையும் சொன்னோம்! அதுவும் வேலை செய்யவில்லை என்றால், நாங்கள், இந்த வலைப்பூவில் உள்ள உங்கள் அன்பர்கள் எல்லோரும் எங்கள் இதயங்களை உங்களுக்குத் தரக் காத்திருக்கிறோம்!என்று!

மதுரைத் தமிழா, “நமது பெரியவர் திரு. இராய செல்லப்பா, நியூ ஜெர்ஸி வருவதாக இருக்கிறாராம். அப்போது அவர் உங்கள் மனைவியிடம் பேசி சமாதானப் படுத்துவதாகச் சொல்லியிருக்கிறார்! எனவே பயப்படாமல் செல்லுங்கள்!

     மதுரைத் தமிழன் வீட்டிற்குள் நுழையும்போதே, நாங்கள் கொடுத்த யோசனையான டயலாக்கைச் சொல்லிச் சென்றதால், மனைவி மனம் இளகித் தூரத் தூக்கி எறிந்த பூரிக் கட்டை மதுரைத் தமிழனைத் தாக்கியதாகக் கேள்வி!

     என்றாலும் பார்ப்போம், எங்கள் யோசனை அவருக்கு உதவியதா என்று! தகவல் வராமலா போய்விடும்?! காத்திருப்போம்!

பின் குறிப்பு:  மதுரைத் தமிழனுக்குப் பூரிக்கட்டை அடி வாங்கமல் இருக்க முடியாது என்று தெரிகின்றது! நாளே டல்லாகி விடும் போல! அது போல அவரது மனைவிக்கும் அதைத் தூக்காவில்லை என்றால் அந்த நாளே டல்லாகி, அதிர்ஷ்டம் இல்லாத நாளாகி விடும் போலும்!  என்ன ஒற்றுமை பாருங்கள்! MADE FOR EACH OTHER COUPLE!!!!!!!!!!!!!!!!!!!!!????????????????????



35 கருத்துகள்:

  1. சே... தூக்கி எறிந்தாலும் அவரைத் தாக்குகிறதே...! ஹிஹி...

    இனிய நண்பர் இதற்குப் பதில் போடும் பகிர்வில் என்னவென்று பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்

    விடயம் வெள்ளக் கடதாசி வரை வந்து விட்டது......போல....

    பதிலளிநீக்கு
  3. நண்பரின் பதிலை அறியக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. ///
    மதுரைத் தமிழன் வீட்டிற்குள் நுழையும்போதே, நாங்கள் கொடுத்த யோசனையான டயலாக்கைச் சொல்லிச் சென்றதால், மனைவி மனம் இளகித் தூரத் தூக்கி எறிந்த பூரிக் கட்டை மதுரைத் தமிழனைத் தாக்கியதாகக் கேள்வி!////

    நல்லா யோசனை சொன்னீங்க... போங்கப்பா இதுக்கு நீங்க சும்மாவே இருந்துருக்கலாம்.. வழக்கமாக நாலைந்து அடிகள்தான் வாங்குவது வழக்கம். நீங்க சொன்ன யோசனையால் என் மனைவி மனம் இளகித் தூரத் தூக்கி எறிந்தது ஒன்று அல்ல பத்தல்ல. நூற்றுக்கும் மேல்....அவ்வளவு தவறி வேகமாம என் மேல் விழுந்தன... என் மனைவிக்கு எப்போதும் நன்றாக குறி பார்த்து எரிய தெரியாது அவ வீட்டுக்கு வெளியே குறி பார்த்து ஏறிந்தது எல்லாம் என்மேல்தான் வந்து விழுந்தன. ஆமாம் அவங்க கிட்ட எப்படி அத்தனை பூரிக்கட்டைகள் என்று கேட்கிறீங்களா அது எல்லாம் எனது சகோதரிகள் ஆசையாக அண்ணிக் வாங்கி அனுபித்த பரிசுகள்தான்.


    போங்கப்பா இனிமே யாருகிட்டடேயும் இனி உதவிகேட்டோ அல்லது சோகத்தை சொல்லியோ அழமாட்டேன் ஏனென்றால் அழக்கூட என் கண்ணில் கண்ணிர் இல்லை

    பதிலளிநீக்கு
  5. வலையுலகில் என்னை எல்லோரும் "வடிவேலாக 'ஆக்கிவிட்டாங்களே....

    பதிலளிநீக்கு
  6. என் மனைவி தூக்கி எறிந்தால் அடிபட்ட நான் ஹாஸ்பிடலுக்கு போனால் என்னை பார்த்த டாக்டர் உன்னை யாரப்பா இப்படி சாகும் அளவுக்கு அடிச்சது என்று கேட்டார்கள். அதற்கு எல்லாம் என் மனைவி செஞ்ச வேலை என்றேன்.. அதற்கு அவர் எதுக்கு அவங்க அவ்வள்வு கஷ்டப்படனும் எங்க கிட்ட சொன்னா நாங்க உங்களை வலியில்லாமல் சாக அடிச்சிருப்போமே என்று சொல்லி சிரிக்கிறார் அந்த டாக்டர்

    அடேய் ஒருத்தன் வலியில் துடித்தால் இப்படியெல்லாம கிண்டல் பண்னுவது என்று சொல்லி வந்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
  7. நல்ல வேளை என் மனைவியை காதலித்து கல்யாணம் பண்ணினதால் இன்னும் அரைகுறையாஉயிரோட இருக்குறேன் காரணம் அவள் ஐடி துறைய சார்ந்தவள் ஒரு வேளை அவ தங்கச்சியை கட்டி இருந்தால் அவள் டாக்டராக இருப்பதால் ஒரு வேளை சாக அடித்து இருப்பாள் போன ஜென்மத்தில் நான் ஏதோ புண்ணியம் செய்து இருக்கிறேன் போல....

    பதிலளிநீக்கு
  8. இவ்வள்வு நாள் நான் என் மனைவிகிட்ட தான் அடி வாங்கி கொண்டிருந்தேன் ஆனால் நீங்க போட்ட பதிவால் என் சகோதரிகள் கிட்டேயும் அடிவாங்கப் போறேன்.. காரணம் நீங்க சொன்னது ராஜி உஷா மட்டுமே ஆனால் சசி அருணா செல்வம் அம்பாளடியாள் போன்றவங்க எல்லாம் இப்ப அடிக்க வ்ராங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்குத் தெரியாதா என்ன உங்கள் சகோதரிகள் உங்கள் மனைவிக்கு வாங்கிக் கொடுத்த பூரிக்கட்டைகள்! அதையும் குறிப்பிட்டு எழுதி, படமாக, அதுவும் வித விதமான பூரிக்கட்டைகள், போடுவதாக எடுத்து வைத்திருந்தோம்!..ப்ளாகர் பயங்கர பிரச்சினை பண்ணியதால் பல விஷயங்கள் விட்டுப் போய்விட்டன! பரவாயில்லை இன்னொரு தருணம் கிடைக்காமலா போய்விடும்! அதாங்க உங்களக் காப்பாத்த!

      இல்லைங்க எங்களுக்குச் சந்தேகம்! உங்களுக்கு அடி வாங்கியே பழக்கமாகிவிட்டதால் நாங்கள் கொடுத்த யோசனையை சரியாக உபயோகிக்க வில்லையோ என்று!!!!

      //நாங்க உங்களை வலியில்லாமல் சாக அடிச்சிருப்போமே என்று சொல்லி சிரிக்கிறார் அந்த டாக்டர் // அப்ப டாக்டர் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையோ? இல்லை மனைவி இல்லையா? என்று நீங்கள் கேட்கவில்லையா?

      //அவ தங்கச்சியை கட்டி இருந்தால் அவள் டாக்டராக இருப்பதால் ஒரு வேளை சாக அடித்து இருப்பாள் போன ஜென்மத்தில் நான் ஏதோ புண்ணியம் செய்து இருக்கிறேன் போல....//

      சரி உங்களைக் காப்பாற்றவே முடியாது போலும்! பின்ன என்ன இப்படி டயலாக் அடித்தால் பூரிக்கட்டை பறந்து வராம இருக்குமா?!

      உங்கள் மற்ற சகோதரிகள் அடிக்க மாட்டார்கள்! சசி அருணா செல்வம் அம்பாளடியாள் சேர்க்க நினைத்தோம் இறுதியில் விடுபட்டு விட்டது! ஆனால் மர்றொரு பதிவில் வந்த் விடுவார்கள்!

      // வலையுலகில் என்னை எல்லோரும் "வடிவேலாக 'ஆக்கிவிட்டாங்களே.// இல்லை இல்லை நண்பரே! "என்னை ரொம்ப நல்லாவன்னு சொல்லிட்டாங்க....எங்க வலை அன்பர்கள்" அப்படின்னு உங்க மனைவியிடம் சொல்லிப்பார்ங்களேன்! அவர்கள் எங்களிடம் சண்டைக்கு வந்து விடுவார்கள்!!!!!! எனவே நீங்கள் கொஞ்ச நேரம் தப்பித்து விடலாம்! அட்லீஸ்ட் இதையாவது சரியாக உபயோகித்துப் பாருங்கள்!

      உங்கள் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தோம்!

      நீக்கு
  9. அடாடா.... இதற்கு தனி பதிவு ஒன்று போடுவார் என நினைத்தேன். பின்னூட்டத்திலேயே எழுதி விட்டாரே மதுரைத் தமிழன்! :))))

    பதிலளிநீக்கு
  10. #நானோ என்னிடம் இருந்த ஒரு இதயத்தை என் மனைவிக்கு கொடுத்துவிட்டேன். அதை வாங்கி வைத்து கொண்டு என் மனைவி என்னை நோக்கி நீ இதயமே இல்லாத அரக்கன்#
    அப்பன் ஆத்தாளைக்கொன்றவன் ,நான் யாரும் இல்லாத அனாதைன்னு சொல்வது போலிருக்கே !
    த ம 5

    பதிலளிநீக்கு
  11. நீங்களும் ஆரம்பித்துவிட்டீர்களா! நல்ல பூரிக்கட்டை!

    பதிலளிநீக்கு
  12. ஹா ஹா ஹா மதுரைத் தமிழன் வாங்கும் பட்டிதொட்டி என பரவி வருகிறது.. இந்நேரம் அவர் ஆம்பூரி என்ற கட்சி தொடங்கி பூரிகட்டை சின்னத்தில் நின்றால் பெருவாரியான ஆண் வாக்குகள் அவருக்குத்தான் போலும் :-)))))))

    பதிலளிநீக்கு
  13. மதுரைத்தமிழனால் எப்படியோ நாலு போஸ்ட் தேத்திவிட்டீர்கள்! ஹாஹா! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. //நானோ என்னிடம் இருந்த ஒரு இதயத்தை என் மனைவிக்கு கொடுத்துவிட்டேன். அதை வாங்கி வைத்து கொண்டு என் மனைவி என்னை நோக்கி நீ இதயமே இல்லாத அரக்கன் //
    காதல் மனைவிஇருக்க, கலர்கலரா படம்போடும் போதே எனக்கு மைல்டா டௌட் தான்? இப்போ கன்பார்ம் ஆய்டுச்சு!!
    ஏதேது save water, save earth போல save thamilan ஸ்லோகன் பாப்புலராடுச்சு போலவே!
    என்னங்க புடுச்சீங்க படங்களை பதிவு போல சூப்பரா இருக்கே?!
    அவரே பூரிக்கட்டை யை மறந்தாலும் நம்மால் மறக்கமுடியாது இல்லையா :)))))))))

    பதிலளிநீக்கு
  15. அதுதாங்க எனக்கும் ஆச்சரியம்! நாங்க எதிர்பார்க்கல! எல்லோருமே எதிர்பார்திருக்கிறார்கள்! ஆனா பாருங்க நாம் எதிர்பார்க்காத நேரத்தில அவரு ஒரு இடுகை போடுவாரு பாருங்களேன்! இப்ப அவருக்கும் தெரியும் நாம் எதிர்பார்ப்போம் அப்படினு! ஸோ இப்ப போட மாட்டாரு! அவருடைய பின்னூட்டம செமயா வரும்னு எதிர்பார்த்தோம்! அது வந்துருச்சு!

    நன்ரி DD!

    பதிலளிநீக்கு
  16. பூரிக் கட்டை என்றால் மதுரைத் தமிழன் ,மதுரைத் தமிழன் என்றால்
    பூரிக் கட்டை ! ....:)))) வாத்துக்கள் மதுரைத் தமிழனுக்கும் அன்புச்
    சகோதரர் தங்களுக்கும் .

    பதிலளிநீக்கு
  17. ஹாஹாஹா! ஆஹா ரூபன் தம்பி வந்து விட்டீர்களா! கணினி சரியாகி விட்டதா?! அது வந்து ரொம்ப நாளாகி விட்டதே தம்பி!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  18. நண்பர் கரந்த்தையாரே! நண்பரின் பதிலை பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம்! அவரைக் கலாய்த்தால், அவர் அதற்கும் பதில் வைத்திருப்பார்! அவரது மூளை பிரத்யேக நகைச்சுவை மூளை!

    மிக்க நன்றி! நண்பரே!

    பதிலளிநீக்கு
  19. ஐயோ ஆவி! அவர் அதற்கும் கலாய்த்து விட்டார் பாருங்கள்! அவரது நகைச்சுவையே நகைச்சுவைதான்!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  20. ஹாஹாஹா! நாங்கள் பின்னூட்டத்தில் எழுதுவார் என்றுதான் எதிர்ப்பார்த்தோம்! ஆனால் எல்லோரும் பதிவு எதிர்பார்த்தார்க்ள்! யாரும் எதிர்பாரா தருணத்தில் போடுவதுதானே மதுரைத் தமிழன்!!!
    நன்றி

    பதிலளிநீக்கு
  21. ஹாஹாஹா பகவான் ஜி! நல்ல பதில்! மதுரைச் தமிழன் இதைப் பார்த்தாரா என்று தெரிய வில்லை! பார்த்தால் இதற்கும் பதில் வரும் இன்று இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு இடுகையில் புகுத்தி விடுவார்!

    நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
  22. ஆம் சீனு! ஹை கட்சி பேர் நன்றாக உள்ளதே! நாங்கள் அவருக்கு லொள்ளு கட்சி என்று சொல்லி சின்னம் பூரிக்கட்டைதான் கொடுத்திருந்தோம் எங்கள் இடுகையில்!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  23. ஹாஹாஹா! ஆம் சுரேஷ் அதுவும் சரிதான்! அவருடைய உபயம்தான்!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  24. சகோதரி மைதிலி! ஆம் கல்ர் கலரா படம் போட்டுத்தானே அடி வாங்குவது அவர்!

    ஹாஹா save mathurai thamizhan பாப்புலர்தான்....ஆனா அது சாத்தியமில்லை! அவரது லொள்ளுக்கு முடிவே இல்லாத போது பூரிக்கட்டைக்கும் முடிவு இல்லை! நல்ல பிஸினஸ் என்று கேள்விப்பட்டோம்!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  25. படங்கல் எல்லாம் வழக்கம் போல கூகுள் தாங்க! எப்பவும் courtesy google என்று போட நினைப்போம் எப்பவுமே இங்கு ப்ளாகர் பிரச்சினை ஆவதால் இறுதியில் எப்படியும் ஏதாவது விட்டுப் போய் விடுகின்றது! இனி மறக்காமல் அதைப் போட வேண்டும்!

    பதிலளிநீக்கு
  26. என்னய்யா இது, எங்கு பார்த்தாலும் பூரிக்கட்டை சமாச்சாரம் தான் இருந்து தொலைக்கிறது! பூரி, குருமா யாரும் தரமாட்டீர்களா? சாப்பிட்டுவிட்டு பின்னூட்டம் எழுதலாமே!

    பதிலளிநீக்கு
  27. மதுரைத் தமிழனையும் பூரிக்கட்டையையும், கர்ணனின் கவச குண்டலம் போல் பிர்க்க முடியாத ஒன்றாய் ஆகிப் போனதால் தான் ......பூரி, குருமா தரலாமே! மதுரைத் தமிழன் தான் அவர் வீட்டில் சமையலாம் அதுவும் பூரி நன்றாகச் செய்வர் போலும்.! அதனால் அவர் கர்ணன் ஆனதால் அவரே தருவார்! பின்னூட்டமும் எழுதி விட்டால் போச்சு!

    பதிலளிநீக்கு
  28. ஹாஹாஹஹஹ சகோதரி அம்பாளடியாள்! மிகச் சைர்யாகச் சொன்னீர்கள்! தங்கள் வாழ்த்துக்களுக்கும்!

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  29. பூரிக்கட்டை கதை கேட்டு மகிழ்ந்தேன் ரசித்தேன். so மதுரை தமிழன் இன்னும் பதில் போடவில்லையே பார்க்கலாம்.
    தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  30. இன்னாபா இது... ஒரே மானா தானா புராணமா கீது...? நீங்க அடிக்கிற அடில எங்களுக்கு வலிக்குதுபா...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நைனா! அத ஏன் கேக்குறபா! இந்த மதுரைத் தமிழன் இருக்காருல நாங்க எய்தின போன பதிவ படிச்சுட்டு அப்படியே இங்கன வ்ந்து அழுவாச்சி! அதான் பா ....அவருக்கு இன்ன செய்யுறதுன்னு மெர்சலாயி இப்புடி ஒரு பதிவு அவர காப்பாத்தலாம்னு....


      ஸாரிபா....எங்க அடினால உங்களுக்கு வலிச்சுருச்சா? ஸாரிபா! மன்னிச்சுகபா!

      மிக்க நன்றி னைனா!!!!

      நீக்கு
  31. மிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கு! ரசித்ததற்கு மிக்க நன்றி! சரி மதுரைத் தமிழன் பதில் போட்டிருக்கின்றாரே அதிலும் கலாய்த்து! பார்க்கவில்லையா இனியா அவர்களே!

    நாங்களும் தொடர்கின்ரோம் தங்களை!

    பதிலளிநீக்கு