கவிதையாலேயே ஆட்சியைப் பிடிப்போம் என்று சூளுரைத்து
கிளம்பிவிட்டார்கள் 5 பேர். கூடியிருந்தால் கோடி நன்மை! புலவர் ராமானுசம் ஐயா,
http://www.pulavarkural.info, திரு. ரமணி, http://yaathoramani.blogspot.in திரு. கவியாழி கண்ணதாசன், http://kaviyazhi.blogspot.com பரிதி முத்துராசன், http://kavithaivaanam.blogspot.in அம்பாள் அடியாள். http://rupika-rupika.blogspot.com “ஐயோ! அடியாள் கட்சியா? என்று பயந்து விடாதீர்கள்! அவர் “அடியாள்” அல்ல. “அம்பாள் அடியாள்”! பக்திப் பரவசமாகவும்,
நல்ல கருத்துக்கள் உடைய கவிதைகளும் எழுதி உங்கள்
எல்லோரையும் கவர்ந்து எங்கள் கட்சிக்கு ஆட்களும், ஆதரவும் தேடுபவர். எங்களுக்கு
ஓட்டுப் போடத் தூண்டுபவர்! அவர்கள் கவியை நீங்கள் வாசித்தால் மயங்கி விடுவீர்கள்”! என்ற முன்னுரையுடன் தங்கள் பிரச்சாரத்தை
ஆரம்பித்தார் அனுபவ முதியவர் புலவர்!
“நாங்கள் தமிழ் கூறும் நல்லுலகத்தை எங்கள் “தமிழ்கட்சி”யின் வழியாக கவிதைகளால் எல்லோரையும்
பரவசமூட்டும் இளைஞர்கள்! நன்றும் தீதும் பிறர் தர வாரா, நாம் என்ன செய்தாலும்
அதற்கு நாம் தான் காரணம் என்ற உயரிய எண்ணம் படைத்த திரு ரமணியும், சுவைபட,
விழிப்புணர்வுக் கருத்துக்களையும் ஊடுறவச் செய்து, சேர்த்து கவி பாடும் கவியாழியும்,
கவி பாடினாலும், பல அரசியல் விஷயங்களும், சினிமாவும் பேசி, ஓட்டுப் பெட்டி போட்டு
ஓட்டு வாங்கும் பரிதி முத்துராசனும் இருக்கும் போது எங்களுக்கென்ன கவலை!?
எங்கள் கவிதைகள் உங்கள் நாடி நரம்புகளை எல்லாம் முறுக்கேற்றி, அன்று பாரதி,
பாரதிதாசன் ஆகியோர் இந்திய விடுதலைக்குப் போராடியது போல் நாங்களும், கொட்டு முரசே,
சங்கே முழங்கு என்று எங்கள் சங்கநாதத்தைப் பரப்பி தேசப்பற்றையும், தமிழ் பற்றையும்
ஊட்டுகின்றோம்! நீங்கள் புதுக்கவிதைக்குத் தாவினாலும், மரபுக் கவிதைகளை மறந்திட
மாட்டீர் என்று நம்புகின்றோம்! நாங்கள் பாவலர்கள்! தருமியின் வழி ஆதலால், இலவசமாக எதுவும்
தருவதற்கில்லை! உண்மையான தமிழர்களாகிய, இந்தியர்களாகிய நீங்கள் கண்டிப்பாக
எங்களுக்கு ஓட்டளிப்பீர் என்ற நம்பிக்கையில் இத்தோடு நிறுத்திக் கொள்கின்றோம்!
இல்லையென்றால், எங்களுக்குப் பழக்கமில்லாத வார்த்தையாகிய “மொக்கை” என்று சொல்லிவிடுவீர்களோ என்றுதான்.” மறந்துவிடாதீர்கள், எங்கள் சின்னம் “எழுதுகோல்”!
முட்டா நைனா! http://muttanina.blogspot.com மக்களே! முட்டா
நைனா என்றவுடன் முட்டாள் என்று நினைத்து விடாதீர்கள்! “செம டேலண்டுபா! நல்ல ஷோக்கா
பேசுவாரு! எய்துவாரு”! ஒரே ஒரு கேள்வி கேட்டு தற்போது ஊரையே, சுவற்றில் முட்டிக்
கொண்டு, தலை முடியைப் பிய்த்துக் கொள்ளவும், சுவற்றைப் பிராண்டவும் வைத்துக்
கொண்டிருப்பவர்!
“மக்களே என் பெயர் பார்த்து ஏதோ என்று நினைத்து
விடாதீர்கள்! நான் சமூகத்தில் மிகவும்
நலிந்துள்ள மக்களை அணுகி அவர்களது கண்ணோட்டத்தில் இந்த சமுதாயத்தைப் பார்ப்பதாலும்
அவர்களுடன் ஒன்றி வாழ்வதாலும் இந்தப் பெயர்! அந்த மக்களுக்காகப் பாடுபடத்தான்
நான், ரம்ணா படத்தில் நம் கேப்டன் மறைந்திருந்து செயல்கள் செய்வது போல், ஆனால் அவரைப்
போல் அல்லாமல், புள்ளிவிவரம் பேசாமல், நான் செயலில் காட்ட விழைகின்றேன்! நான்
கேள்வி கேட்பேன்! ஆனால் உங்களுக்கு பதில் சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்துக் கொண்டே
போவேன். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, ஏழு நிலம் தாண்டி, இருக்கும் ஒரு குகைக்குள்,
வலது பக்கத்தில் இருக்கும் கதவைத் திறந்து, அதனுள் இருக்கும் நிலவறையைத் திறந்து,
அந்த இருட்டுக்குள் பயணித்து, தட்டுத் தடுமாறி, துழாவி அங்கு சுவரில் இருக்கும்
ஒரு சின்னப் பொந்தை ஆராய்ந்தால் என் கட்சிக் கொள்கை, என் நோக்கம் எல்லாம் தெரியும்!
அப்போதுதானே
நீங்கள் அதை யோசிப்பதிலேயே நேரத்தைக் கழித்து விடுவீர்கள்! நான் என்ன செய்கின்றேன் என்று கேள்வி கேட்க
மாட்டீர்கள்! ஸ்பா....இப்பவே மூச்சு முட்டுதே என்று வடிவேல் ஸ்டைலில் உட்கார்ந்து
விடாதீர்கள்! எனக்கு ஓட்டுப் போட்டு
விட்டு உட்காருங்கள்! அப்புறம் ஓட்டுப் பெட்டி காணாமல் போய்விடப் போகிறது! என் கட்சி “ரகசியச் சோற்றுக் கட்சி”. சின்னம் “மூளை”
“வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா என்னப்
பாக்காம போறியே ஓட்டுக் குத்த” என்ற குரல் கேட்க, திரும்பினால், நமது திரு. இராய
செல்லப்பா, http://chellappatamildiary.blogspot.com பொதுவாக இமயம் என்றால் எல்லோருக்கும் இமய மலைதான் நினைவுக்கு வரும்! ஆனால், இங்கு இமயம் என்றால், அது இமயத்தலைவன் இவரைத்தான்
குறிக்கும்! http://imayathalaivan.blogspot.in அருமையான எழுத்தாளர். இலைமறைகாயாக ஹாஸ்யம் இழைந்தோடும் இவரது
எழுத்துக்களில்! தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் என்ற சிறு கதைத் தொகுப்பை
வெளியிட்டவர்! பாண்டிச்சேரி அன்னை பக்தன்!
“மக்களே! தமிழ் அன்னை என்னைத் தாலாட்டுகிறாள்! எனவே, தமிழ் மக்களாகிய
உங்களுக்கு நல்லது செய்ய ஆசைப்படுகின்றேன்! எல்லோரும் தமிழை வளர்க்க
உதவுங்கள்! நான் ஆட்சி அமைத்தால் தமிழ்
வளர மிகவும் பாடுபடுவேன்! குறிப்பாக
எல்லோரும் தமிழைப் பிழை இல்லாமல் எழுத வைப்பேன்!. பல நல்ல புத்தகங்கள் வர வேண்டும்,
அதை நீங்களும், திருட்டு சிடி வாங்கிப் பார்ப்பது போல், இலவசமாகப் புத்தகம்
படிக்காமல், காசு கொடுத்து வாங்கி
எழுத்தாளர்க்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைப்பவன்! நீங்கள் இப்படி வாசித்து, எழுத ஆரம்பித்து
விட்டால், அரசியல் குட்டையைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?! நாடே அமைதியாகி விடும்! “சாந்தி நிலவ வேண்டும்”என்பதை நினைவில் கொண்டு என் சின்னமாகிய “புத்தகத்திற்கு” வாக்களித்து என் கட்சி “எழுத்தாளர் கட்சி”யை வெற்றி பெறச்
செய்யுங்கள்! கூடவே உங்கள் எல்லோருக்கும்,
நல்ல தோட்டத்தில் விளைந்த, சுவை உள்ள வெள்ளரிக்காய்கள் இலவசமாக வழங்கப்படும்!
ஜோதிஜி
திருப்பூர் http://deviyar-illam.blogspot.in எங்களைக் கவர்ந்த
எழுத்தாளர்களில் ஒருவர்! மிகச் சிறந்த
மனிதர் என்பதை அவர் எழுத்துக்கள் கூறி விடும்! ‘டாலர் நகரம்’, ‘ஈழம்:வந்தார்கள்
வென்றார்கள்’, ‘தமிழர் தேசம்’ என்ற அருமையான படைப்புகளுக்குச்
சொந்தக்கார்ர்! இதோ அவரது வார்த்தைகளிலேயே......
“மக்களே! எந்த நிலையில் இருந்தாலும்
நல்லவிதமாக உங்களை அடையாளம் காட்டிக் கொள்வதில் ஏராளமான பிரச்சனைகள் இங்கே உண்டு. தினந்தோறும்
எண்ணிக்கையில் அடக்க முடியாத கூட்டம் வந்து போய்க் கொண்டே இருப்பதால் உங்களை
நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். பிரச்சனைகளை உணர்ந்து செயல்பட்டுக் கொண்டே
இருக்க வேண்டும். பலசமயம் எதிர் விளைவுகளை உருவாக்கலாம். போட்டி, பொறாமை, வன்மம், குரோதம், எரிச்சல் என்று ஏதோ ஒன்று உங்களைத் தாக்கிக்
கொண்டேயிருக்கும். அனைத்தையும் கடந்து வந்து கொண்டே தான் இருக்க வேண்டும். இணையம் என்பது "திறந்த வெளி மைதானம்"
என்பது தான் சரியாக இருக்கும். நீங்கள் எங்கு நின்றாலும் ஏதோவொரு வழியில்
தெரிவீர்கள். ரகசியங்கள் எதையும் காக்கமுடியாத பெருவெளி. பெரும்புள்ளியாக, சிறுபுள்ளியாக அல்லது கரும்புள்ளியாக. ஏதோவொன்றாக உங்களை
அடையாளம் காட்டிக் கொள்ள முடியும். எனவே, நல்ல வகையில், திறம்பட பயன்படுத்தி பயன் அடையுங்கள்! உங்கள்
எல்லோருக்கும் இணையம் மூலம் இலவசக் கல்வி கிடைக்கச் செய்வேன்! என் படைப்புகள்
இலவசமாக இணையம் மூலம் கிடைக்கும்! உங்கள் ஓட்டையும் இணையம் மூலமே என் சின்னம் “வாள்”க்கு அளித்து
விடுங்கள்! என் கட்சி “தமிழர் இணையக் கட்சி”
சுப்புத்தாத்தா, http://subbuthatha.blogspot.in. இவரைத் தாத்தா என்று நினைத்து விடாதீர்கள்! மார்கண்டேயர்!
மனுஷர், “வாடா மாப்பிள்ள வாழைபழத் தோப்புல வாலிபால் ஆடலாமா” என்று கேட்கும்
அளவு நகைச்சுவை வாலிபர்! கணவன்மார்களுக்கு மனைவிகளை எப்படி சமாளிப்பது என்று பாடம்
எடுப்பவர்! நல்ல அனுபவம் உள்ளவர்! எனவே, இவருக்கு ஆண்கள் ஓட்டு நிச்சயம்!
“மக்களே! எனக்கு வயதாகி விட்டது என்று
நினைத்து விட வேண்டாம்! உங்களைப்
பரவசப்படுத்தும் அளவு நகைச்சுவைகளை அள்ளித் தெளித்து எனக்கு ஓட்டு போட வைத்து மற்ற
கட்சிகள் பக்கம் அண்ட விட மாட்டேன்!
வேண்டும் என்றால் எந்தெந்த நாட்டு அரசியல் தலைவர்கள் நம்ம ஊர் தலைவர் “சுவாமி” மாதிரி
கோமாளிகளாக இருக்கின்றார்கள் என்பதை ஆய்ந்து வீடியோ பதிவுடன் தருகின்றேன்! அதைப்
பார்த்தால், உங்களுக்கே தெரியும் இங்கு யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று! ஆம்! எனக்குத்தான்!
உங்கள் குழந்தைகளைத் தூங்க வைக்க வேண்டுமா கவலைப் படாதீர்கள்! யாமிருக்க பயமென்? எனக்கு நல்ல அனுபவம்
உண்டு! வருகிறேன் உங்களுக்கு உதவ! ஆனால்,
நீங்கள் தூங்கிவிடக் கூடாது!
புலியை முறம் கொண்டு விரட்டிய மனைவிமார்கள் இருக்க நாம்
பூனையாகத்தான் இருக்க வேண்டுமோ என்று நினைக்க வேண்டாம் ஆண்களே! பாக்கியம் ராமசாமியின் சீதாப் பாட்டி போன்று
நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசும் மனைவிகள் இருந்தாலும், நாமும் கராத்தே பயிற்சி எடுத்துக்
கொள்வோம்! வெத்து வேட்டாக இருக்க வேண்டாமே
என்றுதான்! இப்படி, பல ஆலோசனகளை இலவசமாக வழங்குவேன்! ஓட்டுப் போடுங்கள்! வேட்டு
வைத்து விடாதீர்கள்! என் மனைவியிடம் மாட்டிக் கொள்வேன்! எனவே நம் கட்சி “டைகர்
கட்சி” சின்னம் “புலிதான்” – ‘ஐயோ! புலி என்றாலே பயமா இருக்கு! அரசியலில்! எங்கின்றீர்களா?!!
அப்பா, இது அந்தப் புலி அல்லப்பா! வீரம் காண்பிக்கும் பூனைப்
புலிதான்!”
கோவை ஆவி, http://www.kovaiaavee.com படம் பற்றிய பதிவுகள் அதிகம் போட்டாலும்,
கதைகளும், விமர்சனங்களும், எழுதிக் கலக்குபவர்! சமீபத்தில் ஆவிப்பா எழுதி
காதலர்களை உணர்ச்சிவசப்பட வைத்தவர்! திரைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் இருக்கும்
குடந்தையூர் சரவணனுடன் கூட்டணி அமைக்கலாமா, வேண்டாமா என்ற யோசனையில் இருந்தவரை, வாத்தியார், http://minnalvarigal.blogspot.com. ஸ்கூல்பையன், http://schoolpaiyan2012.blogspot.com. அரசன், http://karaiseraaalai.blogspot.in, சீனு, http://www.seenuguru.com. ரூபக் http://www.rubakram.com போன்றோருடன் நட்புவட்டத்தில் பார்த்ததால்
அவரைப் பிரிக்கவில்லை! அவர்கள் எல்லோரும் கூட்டணிக் கட்சி! இவர்களது கட்சி “தோழர்கள் கட்சி”. சின்னம் “நூலகம்”. இவர்கள், அடிக்கடி சந்திக்கும் இடம் பீச் என்று
தெரிகிறது! பீச்சுக்கு, எதுக்குச்
செல்கின்றார்கள் என்று கேள்வி எல்லாம் கேட்காதீர்கள்! பீச்சுக்கு எதுக்குச்
செல்வார்கள்?!!!! இலக்கியம் என்று சொல்லிக் கொள்கின்றார்கள்! விட்டு விடுவோம்!
இவர்களின் தலைவர் “வாத்தியார்” என்பதால் சிறிதாக எம்.ஜி.ஆரின் படமும் அங்கங்கே
காணப்படலாம்! ஆனால் இந்த வாத்தியார் அந்த வாத்தியார் அல்ல! இவர் திரு.
பாலகணேஷ்!
“நாங்கள் சிரிக்கவும் வைப்போம்!
சிந்திக்கவும் வைப்போம்! திடங்கொண்டு போராடும் சீனுவும் இருப்பதால் எங்களால் போராட
முடியும்! நாங்கள் புத்தகங்களைக் கூறு போட்டு அலசி விமர்சிப்பது போல்! ஊழல்களையும் அலசித், துவைப்போம்! எல்லோரும்
நிறைய வாசிக்க வேண்டும்! எனவே எங்கள் வாசகர் கூடத்திற்கு http://vasagarkoodam.blogspot.com வந்து
வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ள
வேண்டும்! மறைந்த எழுத்தாளர் திரு. சுஜாதா “நடிகை/நடிகரின் முகவரியை மூளையில்
சேமித்து வைப்பதற்குப் பதில் அந்த இடத்தில் நல்ல விஷயங்களைச் சேமிக்கலாம்” என்று சொன்னதையே நாங்களும் முன் மொழிகின்றோம்! படித்தவர்கள்
வந்தால் நாடு உருப்படும்! தலை முடி கொட்டி வழுக்கை விழுதால் அதற்கு நாங்கள்
பொறுப்பல்ல! எங்கள் குழு பெரிது என்பதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை பகிர்ந்து
கொள்வோம்! நாங்கள் ஊருராய் சுற்றிக் கொண்டே இருப்போம்! அப்பதானே உங்கள எல்லாம் வந்து
பார்க்க முடியும்!!
உதாரணமாக ஆவி http://www.kovaiaavee.com (இங்கே பாருங்கள் நாங்கள் இதை எழுதிக்
கொண்டிருக்கும் சமயம் அவர் பெயருக்கு ஏற்ற ஒரு பதிவு “அமானுஷ்யம்” னு போட்டிருக்கிறார். சைக்கோனு அருமையான படம்
அல்ஃப்ரெட் ஹிச்சாக் அதுவும் போட்டுருக்காரு) உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் வந்து
நாட்டு நடப்புகளையும், சினிமாக்களையும் கண்டு வந்து ரிப்போர்ட் தருவார்! ஸ்கூல் பையன், பிள்ளைகள் எல்லோரும் ஒழுங்காக
பள்ளி செல்கிறார்களா என்று பார்த்துக் கொள்வார்! பெற்றோருக்குக் கவலை இல்லை! ஒருவர்
இந்த மண்ணின் வேர்கள், அதாவது நம் கலாச்சாரம் எல்லாம் பசுமை மாறாமல் இருக்கின்றதா,
என்று பார்த்துக் கொள்வார்! எங்களைக் கரை சேரா அலைகள் என்று எண்ணிவிட
வேண்டாம்! கரை சேரா அலைகள் என்றால்
தீயவற்றின் கரைகளைத் தொட மாட்டோம் என்பதுதான் அர்த்தம்! உங்கள் எல்லோருக்கும் மொறு
மொறு மிக்சர் இலவசமாக அளிக்கப்படும்! கலர் பென்சில்களும் இலவசமாக அளிக்கப்படும்!
ரூபக்ராமைச் சாப்பாட்டு ராமன் என்ரு நினைத்துவிட வேண்டாம்! கனவுகளோடு இருப்பவர்! http://www.rubakram.com எங்கள் கனவுகள் மெய்ப்படவேண்டும்! அதை எங்கள் வலைப்பூக்களில் தெரிந்து
கொள்ளலாம்! எனவே உங்கள் எல்லோரையும் எங்கள் கட்சிக்கு உத்தரவின்றி உள்ளே வரவும்,
ஓட்டு போட்டு ஜெயிக்கவும் வைக்க வேண்டுகின்றோம்!”
நீங்கள்
எல்லோரும் எங்கேயோ இருந்து கொண்டு கட்சி அமைத்து பேசும் போது நான் இந்தியாவின்
தலைநகரில் இருந்து கொண்டு தில்லிக்கு ராஜாவாக.... என்று சொல்லி வந்தார் திரு
வெங்கட்நாகராஜ்!
“மக்களே! “Don’t talk philosophy to a Beggar” என்று ஆங்கிலத்தில் உள்ளதற்கு மாறாக நம்
திருவள்ளுவர் “செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்று
சொன்னாலும், உங்கள் செவிக்கும், கண்ணிற்கும் பல நல்ல வீடியோக்களைத் தரும் முன், நல்ல
பதிவுகள் இட்டு சிந்திக்க வைக்கும் முன், ஆன்மீக உலா அழைத்துச் செல்லும் முன் உங்களுக்கு எல்லாம் மிகவும் சத்துள்ள் உணவான
ஃப்ரூட் சாலட் இலவசமாகத் தருகிறேன்! அதில் கண்டிப்பாக நெல்லிக்காய் இருக்கும்!
“மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்” என்பதாலும், நம்
ஔவைப் பாட்டியும், நெல்லிக்கனி இளமையாக வைக்க உதவும் என்று அதியமானுக்கு
நெல்லிக்கனி கொடுத்தது போல உங்கள் எல்லோரையும் இளமையாக வைத்திருக்கத்தான் நெல்லிக்கனி!
அப்படித் தந்தால் தான் நான் சொல்பவற்றை உங்கள் மனதில் பதியவைக்க முடியும் என்ற நம்பிக்கையில்! இளமையாக இருந்தால்தான் கடினமாக உழைக்க் முடியும் என்பதாலும்தான்! வெளியூர் சென்று உழைப்பதற்கு பதில், நம் ஊரில் உழைத்து நம் நாட்டை மேம்படுத்துங்கள்! என்ற வேண்டுகோளை உங்கள் முன் வைத்து, நான் தலைநகர் தில்லியில் இருப்பதால், வெகு எளிதாக, இந்தியா கேட் வழியாக பார்லிமென்டில் நுழைய முடியும், செங்கோட்டையையும் (திருநெல்வேலி அருகில் உள்ள செங்கோட்டை அல்ல) அடைய முடியும்! என்பதால் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்! எனது கட்சி “வந்தேமாதரம் கட்சி”. சின்னம் “ஃப்ரூட்சாலட்”!”
அப்படித் தந்தால் தான் நான் சொல்பவற்றை உங்கள் மனதில் பதியவைக்க முடியும் என்ற நம்பிக்கையில்! இளமையாக இருந்தால்தான் கடினமாக உழைக்க் முடியும் என்பதாலும்தான்! வெளியூர் சென்று உழைப்பதற்கு பதில், நம் ஊரில் உழைத்து நம் நாட்டை மேம்படுத்துங்கள்! என்ற வேண்டுகோளை உங்கள் முன் வைத்து, நான் தலைநகர் தில்லியில் இருப்பதால், வெகு எளிதாக, இந்தியா கேட் வழியாக பார்லிமென்டில் நுழைய முடியும், செங்கோட்டையையும் (திருநெல்வேலி அருகில் உள்ள செங்கோட்டை அல்ல) அடைய முடியும்! என்பதால் எனக்கு ஓட்டு போடுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்! எனது கட்சி “வந்தேமாதரம் கட்சி”. சின்னம் “ஃப்ரூட்சாலட்”!”
தளிர் சுரேஷ் http://thalirssb.blogspot.com. இவரது டெக்னிக் அருமை! பாப்பா கதைகள் பல எழுதி
பாப்பாக்களை எல்லாம் ஈர்த்துவிட்டால், அவர்களால், வயது காரணமாக ஓட்டுப் போட முடியாவிட்டாலும், அவர்கள் தங்கள்
பெற்றோரிடமும், பெரியவர்களிடமும், “சுரேஷ் மாமாக்கு ஓட்டு போடுங்க” அப்படினு ஓட்டு சேகரிப்பாங்கனு நம்பிக்கையில்
இருக்கிறார்!
“மக்களே! குழந்தைச் செல்வங்கள் தான் இந் நாட்டின் நாளையச் சிற்பிகள்! எனவே
அவர்களை என் எண்ணங்களாலும், எழுத்தோவியங்களாலும் செதுக்கி பண்படுத்த நினைக்கின்றேன்!
அதனால் தான், அவர்கள் க்ற்றுக் கொள்ள வேண்டியும், அவர்களுக்கும் தமிழ் மீது ஆர்வம்
வரவேண்டும் என்றும், தமிழ் மீதுள்ள பற்று
காரணமாக தமிழ் இலக்கணம் கூட கற்பித்துத் தருகின்றேன்! இளைஞர்கள் முதல் பெரியவர்கள்
வரை அதைக் கற்கலாம்! என் கட்சி
“பாப்பாக் கட்சி” சின்னம் “குச்சிமிட்டாய்”. மறக்காமல் நாளைய
சிற்பிகளின் நல்வாழ்வுக்காக எனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வையுங்கள்!
குடந்தையூரார்
(சரவணன்) http://kudanthaiyur.blogspot.in சினிமா ஆர்வம் உள்ளவர்! சமூகத்திற்கும் நல்லது
செய்ய விழைபவர்! கட்சி “சமூகச் சீர்திருத்தசினிமா கட்சி”. சின்னம்
“படச்சுருள்”. இனிமையானவர்!
“எங்களைச் சினிமாக்காரர்கள் என்று நினைத்து விடாதீர்கள்!
இன்று சினிமா இல்லாத அரசியல் இல்லை! அரசியல் இல்லாத சினிமா இல்லை! உங்களுக்கு இலவசமாகச் சினிமா காட்டுவோம்!
கேளிக்கை வரி இருக்காது! மக்களில் பலர் படிப்பறிவு இல்லாமல் இருப்பதால்,
அவர்களையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், நாங்கள் படங்கள் மூலமாகவே எங்கள்
ஆட்சியை நடத்துவோம்! எல்லாமே விஷுவல்ஸ்தான்! மக்களே! உங்களுக்கு டென்ஷன் என்பதே இருக்காது! எனவே
எங்கள் கட்சிக்கு ஓட்டளியுங்கள்! படம் காட்டுகிறோம்!”
காமக் கிழத்தன் http://kaamakkizaththan.blogspot.in.
பேர்தான் அப்படியே தவிர மனிதர் மிக நல்ல கருத்துக்களைச் சொல்பவர்! கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்! ஆனாலும்,
மனித நேயம் மிக்க நல்ல மனிதர்! மிக நல்ல
கதைகள் தருபவர். அறிவியலில் நாட்டம் கொண்டு ஆராய்பவர்! அறிவியல் மூலம் கடவுள்
பற்றி கேள்வி கேட்பவர்! நல்ல எழுத்தர்! அவர், அடிக்கடி பிரயாணத்தில்
இருப்பவர்! அவரது கட்சி “மனிதநேயக் கட்சி”. சின்னம் “டார்வின்/முட்டை” (முட்டையிலிருந்து கோழிக் குஞ்சு வந்ததா? கோழியிலிருந்து முட்டை வந்ததா? இது
உங்களுக்கான கேள்வி!)
“கடவுள் என்பவர் கேள்விக்குறியே! அவர்
இருக்கிறாரா என்று கேட்டால் இல்ல என்பேன் நான்! மூட நம்பிக்கைஅகளை அறவே ஒழிக்கப்
பாடுபடுவேன், பெரியார் வழியில்! பல இது
போன்ற விஷ(ய)ங்கள் தான் உங்களை எல்லோரையும் குழப்பி விடுகின்றது! மக்களே! அறிவியலை ஆராயுங்கள்! தெளிவான சிந்தனைகளுடன் வாழக் கற்றுக்
கொள்ளுங்கள்! உங்கள் இறை நம்பிக்கையை நான்
சாட வில்லை! கடவுள் இல்லை என்றுதான் சொல்லுகின்றேன்! கடவுள் என்பதை விட சக மனிதரை
மதிக்கவும், அன்பு செய்யவும் கற்றுக் கொள்ளுங்கள்! உயிருடன் இருக்கும் போது மனிதனை
நேசிக்காமல், இறந்த பிறகு சடங்குகள் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை! பரஸ்பர
மனித நேயமே எனது கொள்கை! இதை நீங்கள் கடைபிடித்தால், சாதி, மத வேறுபாடுகள், சண்டைகள்
இருக்காது! நாடு அமைதியாக இருக்கும்!
சிந்தியுங்கள்! எனக்கு ஓட்டளியுங்கள் எனத்
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்!”
கும்மாச்சி! http://www.kummacchionline.com இவர் எல்லாவற்றைப் பற்றியும் பேசுவார்! ஆனால்
இவரது ஸ்பெஷல் “ஃபிகர்” போட்டு மக்களைத் தன்பக்கம் இழுப்பது!
“மக்களே! நான் உங்களுக்கு பல நல்ல விஷயங்கள் செய்ய
உள்ளேன்! என்ன எனக்கு கொஞ்சம் நேரம்
போதவில்லை! பல ஊர்கள் சுற்றிக்
கொண்டிருப்பதால்! எல்லாம்
உங்களுக்காகத்தான்! நம்புங்கள்! உங்களுக்கு இலவசம் “காக்டெயில்” அதுதான் என் சின்னமும் கூட! என்
கட்சி “கலர் கட்சி” நான் என்ன
பேசினாலும் கண்டிப்பாக்க் கடைசியில் நல்ல ஃபிகர் படம் உண்டு! எனவே எல்லோரும்
எனக்கு ஆதரவு அளித்து ஓட்டுப் போடுமாறு கேட்டுக் கொள்கின்றேன்!
இன்னும் பலர் இருக்கின்றார்கள்! எங்கள் ஏரியா பெரிதாகிக்
கொண்டே போகின்றது! அறிவிப்பு இடுகையும் பெரிதாகி விட்டது! அதனால், நாங்கள் இன்னும்
சில ஏரியாக்கட்சிகளைப் பற்றி பகிர முடியவில்லை!
இதற்கே மக்கள் குழம்பிப் போய் இருக்கின்றார்கள்! நாட்டில், எந்தக் கட்சி நல்ல கட்சி என்று
ஆராய்வது மிகக் கடினம் என்பதால்! (அதாவது எந்த சாக்கடை நல்ல சாக்கடை) எந்தக்
கட்சிக்கு ஓட்டு என்ற குழப்பம்! இங்கோ,
எல்லா கட்சிகளுமே நல்ல கட்சிகள், வேட்பாளர்களும் ரொம்ப நல்லவர்களாக
இருக்கிறார்களே!!!! எந்தக் கட்சிக்கு ஓட்டு என்ற குழப்பம்! எங்களுக்கு வந்த செய்தி என்னவென்றால், மக்கள்
எல்லோருக்குமே ஓட்டுப் போடத் தீர்மானித்துள்ளதாக!
எல்லோருமே மனிதாபிமானம் மிக்கவர்களாகவும், நல்ல உள்ளம் கொண்டவர்களாகவும்
இருப்பதால், எல்லொருமே ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக ஒரே கட்சியாக
இருந்துவிடுவார்கள்! அதனால் எல்லோருக்குமே ஓட்டு! என்று!
கீதா! அங்கிருந்து ரெண்டு சகோதரிகளின் குரல் கேட்கிறதே! அங்க
பாரு, சகோதரிகள் ராஜியும், உஷாவும் தான்....
“பெண்கள் சிலர், எங்க அன்ணன் மதுரைத் தமிழன் கட்சியில இருக்கிறாதா
கேள்விப்பட்டோம்! அது வேறு யாரும் இல்ல உங்க கீதாதான்.... அவங்களும் லொள்ளாமே!!!...அண்ணனோட கட்சியாமே! ரொம்ப
லொள்ளு பண்றாங்களாமே! அதான், இவ்வளவு தைரியமா இங்க கலாய்சிருக்கீங்களா?!!! இதோ! வர்ரோம்....உங்க ரெண்டு பேரையும் என்ன
செய்யறோம் பாருங்க.....த்தா....கட்டையை எடுங்கப்பா.... .இவ்வளவு நேரம் எங்களப்
பத்தி அலசின உங்கள யாரு அலசுரது? இதோ
வர்ரோம்!!!!!
ஆஹா! கீதா!... குரல் கேட்டுச்சுல......நான் எவ்வளவோ சொன்னேன்....நீ கேக்காம அத
இத சொல்லி இப்ப என்னையும் மாட்டி விட்டுட்ட.....ஐயோ! ஸார்.....அண்ணே!....ஐயா!......நான் வெளியூர்............எனக்கு ஒண்ணும் தெரியாது!!?? ஐயோ! யாரும்
கேக்கற மாதிரி இல்லையே!!!. அவங்க எல்லாம் துரத்தி நம்மள அடிக்க வரதுக்குள்ள
ஓடிக்கோ!.....ஓடு....ஓடு....
துளசி!..... ஓடிக்கோ! விடு ஜூட்! எஸ்கேப்!.....
ஹா... ஹா... தூள் கிளப்பிட்டீங்க...! அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஎன்ன அண்ணாச்சி! அங்கே இங்கே போய்விட்டு, கடைசியில் நம்ம தலையிலும் கை வைத்துவிட்டீர்களே! பரவாயில்லை, நல்லவிதமாகத்தான் எழுதி இருக்கிறீர்கள். வாழ்க உம் எழுத்தாற்றல்!
பதிலளிநீக்குநீங்க தளிர் சுரேஷ் சகோவை நாளைக்கு படிங்கன்னு வருத்தி சொன்னது ஏன்னு இப்போதான் புரியுது!// கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்! ஆனாலும், மனித நேயம் மிக்க நல்ல மனிதர்!// ஹல்லோ அப்போ என்னை போன்ற பெரியார் வாரிசுகள் எல்லாம் மனிதநேயம் அற்றவர்கள் என்றா சொல்லுறீங்க,??கடவுளை மற ,மனிதனை நினை என்பதுதாங்க எங்க காப்சென்னே ! சரி விடுங்க . பாவம் நீங்களே யாரு கண்ணுக்கும் படாமல் எங்க பதுங்கிநீர்கள்னே னு தெரியல ஹா...ஹா...ஹா..அட்டகாசமான காமெடி போங்க. சிரிச்சு சிரிச்சு பல்லே வலிக்குதுன பாருங்களேன்!!!
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி! ஆமாம் நீங்க கடைசி பாரா படிச்சிருப்பீங்களேஅதுல நம்ம வலை அன்பர்கள் எல்லாருமே மிக நல்ல மனிதனேயம் உள்ளர்வர்கள் அதனால மக்கள் எல்லாருக்குமே ஓட்டு போட்டுடறாங்களே அதுல நீங்களும் அடக்கம்தான்ங்க!
நீக்குஹாஹா ஆமாங்க...சரிதான் நாங்க ஒளிஞ்சுருக்கோம்! !!!
நாங்க எழுதினது யாருக்காவது மனச வருத்திடுச்சோனு தோணுது!! ஆனா நாங்க ரொம்ப நல்ல எண்ணத்தோடதான் கலாய்சுருந்தோம்!
-------------------------------------------------------------------------------------------------------------------
//நீங்க தளிர் சுரேஷ் சகோவை நாளைக்கு படிங்கன்னு வருத்தி சொன்னது ஏன்னு இப்போதான் புரியுது!// கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்! ஆனாலும், மனித நேயம் மிக்க நல்ல மனிதர்!// ஹல்லோ அப்போ என்னை போன்ற பெரியார் வாரிசுகள் எல்லாம் மனிதநேயம் அற்றவர்கள் என்றா சொல்லுறீங்க,??கடவுளை மற ,மனிதனை நினை என்பதுதாங்க எங்க காப்சென்னே ! சரி விடுங்க . பாவம் நீங்களே யாரு கண்ணுக்கும் படாமல் எங்க பதுங்கிநீர்கள்னே னு தெரியல ஹா...ஹா...ஹா..அட்டகாசமான காமெடி போங்க. சிரிச்சு சிரிச்சு பல்லே வலிக்குதுன பாருங்களேன்!!!//
ஹே! its really funny!!!!!!!!!!!!!!! cooooooooooooooool !!!!!!!!!!!!!!
நீக்குமிக்க நன்றி DD! தங்களின் உக்கத்திற்கு!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸார்! தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும்!
பதிலளிநீக்கு------------------------------------------------------------------------------------------------------------
//என்ன அண்ணாச்சி! அங்கே இங்கே போய்விட்டு, கடைசியில் நம்ம தலையிலும் கை வைத்துவிட்டீர்களே! பரவாயில்லை, நல்லவிதமாகத்தான் எழுதி இருக்கிறீர்கள். வாழ்க உம் எழுத்தாற்றல்!//
எப்படியோ என்னையும் அரசியல்ல குதிக்க வைச்சுட்டீங்களே சார்! ஆனா நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் குட்டிப்பசங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்! ஒரு வேலை நான் கட்சி ஆரம்பிச்சா உங்க யோசனையை பாலோ பண்ணி உங்களை என் ஆலோசகரா வெச்சுக்கறேன்! ஹாஹா!
பதிலளிநீக்குஆஹா ...எத்தனை அருமையாக என் உள்ளம் கவர்ந்த வலைத்தள
பதிலளிநீக்குஉறவுகளையும் என்னையும் நினைவில் கொண்டு சிறப்பித்து
ஓர் ஆக்கத்தைத் தந்துள்ளீர்கள் சகோதரா !! தங்களின் இதயத்தில்
இந்த அம்பாளடியாளுக்கும் ஓர் இடம் கிட்டியுள்ளதே என்று
எண்ணும் போது நான் பேரானந்தம் அடைகின்றேன் சகோதரா
தாமதமாக வந்தமைக்கு என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்
சகோதரா .வலைத் தளம் தந்த இந்த நட்பு உறவுகளை நாம்
ஒரு போதும் மறக்க மாட்டோம் .மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .
ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்! சகோதரி!!!! எங்கள் வலைத்தள அன்பர்கள் எல்லோருமே எங்கள் இதயம் கவர்ந்தவர்கள்! நாங்கள் மிகவும் ரசித்து, எத்தனை தமிழ் எழுத்தர்கள் இருக்கின்றார்கள் என்று வியந்து மகிழ்வதுண்டு!!!
பதிலளிநீக்குஇத்தனை அன்பர்கள் கிடைத்ததற்கு நாங்கள் அதிர்ஷ்டக்காரர்கள் தான்!!!
சுரேஷ் உங்களுக்கு எங்கள் ஆலோசனை கண்டிப்பாக உண்டு!!!! ஹாஹாஹ.....ஆமாங்க சின்ன பசங்கள் உலகமே மிக மிக ஒரு உயர்ந்த உலகம்.....சூதுவாது அறியாத பச்சமரம் போன்ற மனதுடைய பிஞ்சு உள்ளங்கள்! மிக்க நன்றி தாங்கள் ரசித்ததற்கு!!!!!
பதிலளிநீக்குஅம்பாளடியாள் சகோதரி! (ரூபிகா??!!!!) தங்களுடைய கவிதைகளை ரசித்து வாசித்து, அந்த சந்த நடையில் நாங்கள் ஆழ்ந்து விடுவதுண்டு! எத்தனை அழகானத் தமிழ்! என்று!!!! உங்களை மறப்பதா?!!! இந்த வலை அன்பர்கள் எல்லோரது நல்ல உள்ளமும், எழுத்தும் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்! இன்னும் விவரணம் நீலவண்ணன் போன்றோரை நாங்கள் இந்தப் பதிவில் கொண்டு வரவில்லை! பதிவு மிகப் பெரிதாகி விட்டது! இரண்டுமே!
பதிலளிநீக்குநீங்கள் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை! கருத்துதான் எங்களுக்கு முக்கியமே! அது பராட்டாக இருந்தாலும், சுட்டுக் காட்டுவதாக இருந்தாலும் சரி! எல்லாவற்றையுமெ நாங்கள் மிகவும் நேர்மறையாகத்தான் எடுத்துக் கொள்வோம்!
சகோதரி! இந்த வலை உறவுகளை தாங்கள் கூறிஉள்ளது போல ஒரு போதும் மறக்க மாட்டோம்! எவ்வளவு அன்புடன் ஊக்கம் தருகின்றார்கள்!!!! அதற்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள்!!! தமிழுக்கும், தமிழ் அன்பர்கள் எல்லோருக்கும்!!
மிக்க நன்றி சகோதரி!
முதலில் என்னை மன்னிக்கணும் துளசிதரன் ஜி !
பதிலளிநீக்குஇது part 2 என்பதை இப்போதுதான் கவனித்தேன் ,அதுதான் கமெண்ட் போட தாமதமாகி விட்டது ...
இத்தனை பதிவர்களை இவ்வளவு விரிவாக கவனித்து கலாய்க்கிறது என்பது சாதாரணமான காரியமாகத் தோன்றவில்லை ...பதிவர்களும் ,அவர்களது படைப்புக்களும் என்ற தலைப்பில் நீங்கள் டாக்டரேட் பட்டமே வாங்கி விடுவீர்கள் போலிருக்கிறதே !
த ம 4
ஐயோ! என்ன ஜி! இதுக்கு போய் மன்னிப்பு எல்லாம் கேட்டு!!!! லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வந்து விட்டீர்களே ஜி! குளிர்ந்து விட்டோம்! நீங்கள் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை ஜி! எங்களுக்கு உங்கள் கருத்துதான் முக்கியம் ஜி!
பதிலளிநீக்குஜி! அதை ஏன் கேட்கின்றீகள் இன்னும் நிறைய பேர் உள்ளன்ர் லிஸ்டில்! ஆனால் பதிவு ஹைவே போல் நீண்டுகொண்டே போகிறதே என்று ஒரு ப்ரேக் போட்டுவிட்டோம்! அவர்களை மற்றொரு பதிவில் இணைத்து விடலாம்! என்று நினைத்துள்ளோம்! பார்ப்போம்!
மிக்க நன்றி! ஜி! இப்படி எங்களை மிகவும் பாராட்டியதற்கு! எல்லோரும் நம் அன்பர்கள் தானே! எல்லோர் எழுத்தையும் ரசிப்பதால் தான்!
மிக்க மிக்க நன்றி ஜி! உங்கள் தளத்திற்கு வர எத்தனிக்கும் போது உங்கள் கருத்து!!!!!!
இதோ வந்து விட்டோம்!!!!
பலரும் முகம் சுழிக்கும் புனை பெயரில், மிகப் பலர் மனம் கோண, கடவுளைச் சாடுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு எழுதிவரும் என்னை மிக நல்ல மனிதனென்று பாராட்டியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஅதற்கான தகுதி எனக்கு இல்லையென்றாலும், சிரித்து மகிழ வைக்கும் நல்ல நகைச்சுவைப் பதிவு இது என்பதால் என் மனம் நிறைந்த பாரட்டுகள்; நன்றி துளசிதரன்..
அத ற்கான தகுதி இல்லை என்றெல்லாம் சொல்லி தப்பிக்க முயல வேண்டாம் .உங்கள் இடுகைகள் பலதும் உங்கள் மனதுக்குள் எங்களை அழைத்துசென்று உங்களை அடையாளம் காட்டியிருக்கிறது .அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் என்பதுபோல் நல் மனதுக்கும் இல்லை அடைக்கும் தாழும் மறைக்கும் கதவும் .
பதிலளிநீக்குமிக்க நன்றி தங்கள் பாராட்டிற்கு!
எனக்கு அரசியல் பிடிக்காது. இதுவரை எந்த அரசியல் பதிவும் எழுதியதில்லை. இருந்தாலும் இந்த அரசியல் விளையாட்டு சூப்பரா இருக்கும் போலிருக்கே. முதல்வன் அர்ஜுன் சொன்னதுபோல் "என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டீங்களே" ஹிஹி...
பதிலளிநீக்குஹாஹாஹ! ஆமாம் ஸ்கூல் பையன்! சும்மா ஒரு ஜாலிக்குத்தான்! உங்கள் எல்லாம் அரசியல் வாதி ஆக்கவில்லை! இறுதியில் சொல்லியிருப்போமெ எல்லா வலைப பதிவர்களும் ஒரே கட்சிதான் என்று! ஏன் என்றால் மக்களுக்கு ஓட்டுப் போடுவதில் குழப்பம் எல்லோருமே நல்லவர்களாக இருப்பதால்!!!!
பதிலளிநீக்குமிக்க நன்றி!