வெள்ளி, 14 நவம்பர், 2014

மருத்துவ தர்மம் மறந்த நாடும், மருத்துவர்களும் பறித்த 13 உயிர்கள்


     சத்திஸ்கரில் கடந்த சனியன்று (8.11.2014) கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 83 பெண்களில், 23 க்கும் 32 க்கும் இடைப்பட்ட வயதுடைய 13 பெண்கள் அறுவை சிகிச்சையில் நேர்ந்த தவறு மூலமும், கொடுக்கப்பட்ட தரமில்லாத மருந்துகளாலும் உயிரழந்திருக்கின்றார்கள். திங்களன்று (10-11-2014) மீண்டும் அதே முகாமில் அறிவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 10 பெண்களுடைய உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. இவர்கள் எல்லோரும், இரண்டோ, மூன்றோ குழந்தைகளைப் பெற்று, அக்குழந்தைகளுக்குப் பாசமும், நேசமும் ஊட்டி வளர்த்துக் கொண்டிருப்பவர்கள்.குழந்தைப் பிறப்பை அத்தோடு நிறுத்திக் கொண்டால்; தங்களுடைய் மற்ற குழந்தைகளுக்கு, நல்ல உணவு, உடை, கல்வி கொடுத்து வளர்க்கலாம் என்ற எண்ணமும், அறுவை சிகிச்சை செய்வதால் அவர்களுக்குக் கிடைக்கப் பொகும் ரூ 1400 ஐ நினைத்தும், அவர்கள் அவ் அறுவை சிகிச்சை செய்யத் தயாராகி இருக்கலாம்.  அதே போல் பெண்களை அறுவை சிகிச்சை முகாமுக்குக் கொண்டு வரும் ஒவ்வொரு ஆரோக்கிய இலாகா ஊழியருக்கும் கிடைக்கும் ரூ 200 ம் அவர்களை முகாமுக்கு அதிகமானத் தாய்மார்களை அழைத்துவரச் செய்திருக்கலாம்.
 


மருத்துவ இலாகாவின் கவனக் குறைவாலும், ஒரு இலட்சம் பேருக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்து விருது பெற்ற டாக்டர் ஆர்.கே குப்தா, அறுவை சிகிச்சைக்குத் தலைமை வகித்து, அவர் 5 மணி நேரத்தில் 83 பேருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டதாலும், போதுமான இட வசதியோ, கருவிகளோ, உதவியாளர்களோ இல்லாததாலும் ஒரு வேளை இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம். இதன் விளைவாக ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரழந்த 14 தாய்மார்களின், 1 வயது முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகள் அவர்களது தாய்மார்களை இழந்துவிட்டார்கள்.  வரும் நாட்களில் இனி எத்தனை தாய்மார்கள் உயிரழக்கப் போகின்றார்களோ?  தெரியவில்லை. 

      நாமெல்லாம், வரும் நாட்களில், இவ்விபத்தை மறந்து புதுப் புதுச் செய்திகளின் பின்னால் சென்று அதைப் பற்றி எல்லாம் விவாதிக்கும் போதெல்லாம், பாவம் அக்குழந்தைகள் தாயின் அன்பின்றி இவ்வுலகில் வாழ வேண்டியிருக்கும் என்பதை எண்ணும் போது, மனது கனக்கின்றது.  இதை எல்லாம் பார்க்கும் போது பெரும்பான்மையான மருத்துவர்கள் மருத்துவ தர்மத்தையே மறந்து போகின்றார்களோ என்ற ஐயம் எழுகின்றது. மனிதாபிமானமற்ற மருத்துவர்களும், இது போன்ற விபத்துகளுக்கு வித்திடும் மருத்துவ இலாகாவும் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது. இப்படிப்பட்ட மருத்துவர்களையும் மருத்துவ இலாகாவையும் நம்பி நாட்டின் மக்கள் தொகை அதிகரிக்காமல் இருப்பதற்காக இந்தியா எங்கும், எல்லா வருடமும் அக்டோபர் முதல், ஃபெப்ரவரி மாதம் வரை நடத்தப்படும் இது போன்ற கருத்தடை அறுவை சிகிச்சை முகாம்கள் செயல்படுவது மண்குதிரையை நம்பி ஆற்றிலிறங்குவது போல்தான்.

      கடந்த 4 மாதங்களுக்கு மேலாக உபயோகிக்கப்படாமல் மூடிக் கிடந்த, பிலாஸ்பூர் அருகே, பெண்டாரியில் உள்ள “மேமிசந்த் ஜெயின் கான்சர் மற்றும் ரிசர்ச்ச் செண்டரில் உள்ள அறுவை சிகிச்சைப் பிரிவில் இத்தகைய அறுவை சிகிச்சை ஏன் செய்யத் துணிந்தார்கள் என்பது வியப்பாக இருக்கின்றது.  அப்படிச் செய்ய வேண்டியக் கட்டாயம் ஏற்பட்ட போது முன்னேற்பாடாக அவர்கள் செய்ய வேண்டிய அறுவைச் சிகிச்சைக் கருவிகளைச் சுத்தம் செய்தல், சிகிச்சைக்கான இடத்தைத் தூய்மைப் படுத்துதல், தேவையான உதவியாளர்கள், போன்ற முன்னேற்பாடுகளை ஏன் செய்யவில்லை என்பது மிகுந்த வேதனையைச் தருகின்றது.  மனித நேயம் இல்லாமல் ஏதோ சில மனிதர்களது அலட்சியத்தாலும், செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்யாமல் இருந்ததாலும் அதற்காகச் செலவாகும் பணத்தை அபரித்ததாலும் உயிரழக்க நேர்ந்ததோ, ஒரு குற்றமும் செய்யாத  13 இளம் தாய்மார்கள். 

      அதே சமயம் மருத்துவ தர்மம் மறவாத இங்கிலாந்து நாட்டில், நாட்டிங்ஹாம்ஷேரில் கடந்த 32 வருடங்களாக பல் மருத்துவம் செய்துவந்த பல் மருத்துவர் ஒருவர் தன் கருவிகளை ஸ்டெரிலைஸ் செய்வதில்லை என்பதை அறிந்ததும் அவரிடம் கடந்த 32 வருடங்களில் பல் மருத்துவம் செய்து கொண்ட 22,000 பேர்களுக்கு அதனால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றதா என்பதைப் பரிசோதித்து அறிய எல்லா நாட்களிலும் செயல்படும் ஹாட்லைன் செண்டர் நாட்டின்ஹாம்ஷேரில் திறந்து மக்களின் பயத்தை நீக்கிக் கொண்டிருக்கின்றார்களாம்.  ஆனால், நம் நாட்டில் இதே இடத்தில் இது போன்ற தவறுகள் இதற்கு முன் பல முறை நடந்தும், மீண்டும் அத்தவறு நடக்காமல் இருக்க நடவடிக்கைகள் கூட எடுக்கவில்லை என்பதை எண்ணும் போது வெட்கித் தலைகுனிவதைத் தவிர வேறு வழியில்லை.

      கடந்த 2011 செப்டம்பர் சத்திஸ்கரில் பாலோத் எனும் இடத்தில் நடந்த கண்புறைக்கான அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களில் 42 பேர்கள் பார்வை இழந்திருக்கின்றார்கள்.  2012 ல் இதே மாநிலத்தில் இதே கண்புறைக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 23பேர் கண் பார்வை இழந்திருக்கின்றார்கள்.  இவ்வருடமோ கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட 14 பெண்கள் தங்கள் உயிரையே இழந்திருக்கின்றார்கள்.
 
உ.பி, சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில், நிகழும் தவறுகளும், சுகாதாரம் இல்லாத சூழல்களும் இதன் முன் பல முறை செய்தித் தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கின்றது. மெடிக்கல் பம்பிற்கு பதிலாகச் சைக்கிள் பம்ப் உபயோகிப்பது, ஒரே சிரிஞ்சில் 50க்கும் மேலானவர்களுக்கு ஊசி போடுவது, காலாவதியான மருந்துகள் கொடுப்பது போன்றவை அம் மாநிலங்களில் சர்வ சாதாரணமாம்.  “வரும் முன் காவாத” அரசும் மருத்துவத் துறையும் இப்படி விபத்து நடந்த பின் இறந்தவர்களது குடும்பத்திற்கு ரூ 4 இலட்சமும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு ரூ 50000 மும் கொடுப்பதால் என்ன பயன்?


இதில் ஒரு சிறிய பகுதியைத் தேவையான நேரத்தில் சரியாக விநியோகித்து இது போன்ற விபத்துகள் நிகழாமல் இருக்கத் தேவையான முன்னேற்பாட்டைச் செய்திருக்கலாமே.  இனியேனும் இதற்குக் காரணம் என்ன என்றுக் கண்டுபிடித்து, காரணமானவர்களுக்குத் தக்க தண்டனை வழங்குவதுடன், இது போன்ற விபத்துக்கள் நிகழாமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகளைச் செய்வார்களா?  அடுத்த வருடமேனும் நம் நாட்டில் இது போன்ற ஒரு விபத்து மனிதர்களின் கவனக் குறைவாலும், பண ஆசையாலும், செய்ய வேண்டியவைகளைச் செவ்வனே செய்யாத அலட்சிய மனோபாவத்தாலும் நிகழும், முயன்றால் நம்மால் எளிதாகத் தவிர்க்க முடிகின்ற, விபத்துகள் ஏற்படாமல் தடுக்கப்படும் என்று நம்புவோம்.  தாயை இழந்துத் தவிக்கும் அக்குழந்தைகளுக்காக வேண்டிக் கொள்வோம். 


(நடிகர் கமலஹாசனின் 60 வது பிறந்தநாளைப் பற்றிய கடந்த இடுகையில் பதிவரும் நண்பருமான இ.பு. ஞானப்பிரகாசம் அவர்களின் பின்னூட்டத்தில் அவர் கொடுத்துள்ள இந்தச் சுட்டியைப் பாருங்களேன்.  மிக அருமையாக அவர் செய்துள்ளார். நன்றி நண்பரே!  
'யுவா தொலைக்காட்சி'க்காக நான் எழுதிய 'கலையுலகில் கமலியல்!' (Kamalism in Tamil Cinema!). கமல்ஹாசன் வைர விழாப் பிறந்தநாள் சிறப்பு விழியம் (video)! இங்கே உங்கள் பார்வைக்காக! http://yuvatv.co.in/e-mag/kamalism-in-tamil-cinema-documentary--51)

58 கருத்துகள்:

 1. கடவுளுக்கு அடுத்தபடியாக நம்புவது மருத்துவரைத்தானே நாமெல்லாம்..!
  இப்படியுமா உலகில் அக்கிரமங்களும் அநியாய உயிர்ப் பறிப்புகளும் நடக்கின்றன..:(

  அத்தனையும் கொடுமை சகோதரரே! விபரிக்க முடியாத வேதனை நெஞ்சுக்குள் வந்து அடைக்கின்றது...

  மேலை நாடுகளிலும் அங்கங்கே இத்தகைய கவனக் குறைபாடுகள் நடக்கின்றனதான்.
  பிடிபடாவிட்டால் தப்பித்துக் கொள்வார்கள்.பிடிபட்டால் காலில் விழுந்து உங்களைப் பணத்தால் வாங்கிடுவார்கள்!

  என்றுதான் இதையெல்லாம் கண்டிக்கக் கவனிக்க ஒரு சக்தி உருவாகுமோ?..
  அன்றுதான் கிடைக்கும் நிம்மதி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! மிக மிக உண்மை! நாம் கடவுளுக்கு அடுத்த படியாக நம்புவது மருத்துவரைத்தான்....

   இப்படி ஒரு பக்கம் நடந்தாலும், காஷ்மீரில் வெள்ளப்பெருக்கின் போது மருத்துவர்கள் மிகவும் மனித நேயத்துடன் தொண்டுசெய்திருக்கின்றார்கள் என்பதை நண்பர் ஸ்ரீராம் அவர்கள் அவர்களது எங்கள் ப்ளாகில் பாசிட்டிவ் செய்தியில் சொல்லி இருப்பது மகிழ்ச்சியையும் தருகின்றது.

   மிக்க நன்றி சகோதரி! தங்கள் சீரிய கருத்திற்கு!

   நீக்கு
 2. என்ன ஒரு அநியாயம் ஐய்யா! ஒரு உயிர்க்கு மதிப்பு கொடுக்காத ஒரு இடத்தில எப்படி மனிதர்கள் வாழ முடியும். இந்த பரிதாபமான கொடூர செயலிற்கு முக்கிய காரணமே "ஊழல்" தான் . எதில் எடுத்தாலும் எனக்கு என்ன இருக்கு என்று அனைவரும் அலைந்து கொண்டு இருகின்றார்கள். அந்த தாயை இழந்து துடிக்கும் பிள்ளைகளின் எதிர் காலத்தை யோசித்தாலே நெஞ்சு பதறுகின்றது.

  இதற்க்கு விடிவு காலமே இல்லையா? நெஞ்சு பொறுக்குதிலையே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! விடிவுகாலம் எப்பொது? சில இடங்களில் நல்லதும் நடக்கத்தான் செய்கின்றது! மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்துக்களுக்கு!

   நீக்கு
 3. மனதை கனத்துப்போகச் செய்துவிட்ட செய்தி.
  நீங்கள் சொல்வது உண்மை - நாமெல்லாம் இதை படித்து முடித்துவிட்டு வேறு வேறு புதிய செய்திகளை படிக்க ஆரம்பித்து விடுவோம். ஆனால் இந்த குழந்தைகளின் நிலை, ஐயோ நினைத்துப்பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

  இந்த மாதிரி நடந்தால் ஏழை எளிய மக்கள், கருத்தடை செய்ய எப்படி முன்வருவார்கள். பிறகு ஏன் நம் நாட்டில் மக்கள் பெருக்கம் அதிகமாகாது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே! ஏழை எளியவர்களுக்கு அரசாங்க மருத்துவமனைகள் இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்! இல்லாதது வேதனைதான்!

   மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 4. உங்களின் தனித்த அடையாளங்களில் ஒன்று நீண்ட சமூக அக்கறையுள்ள கட்டுரைகள்.
  வாழ்த்துக்கள்
  வாக்களித்தாயிற்று
  த.ம இரண்டு ஆனால் பணம் இன்னும் செட்டில் ஆகலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் பாராட்டிற்கு!

   சரி அது என்ன பணம் இன்னும் செட்டில் ஆகலை! இது பல வலைத்தளங்களில் கண்டோமே!! ஓ வாக்கு போட்டதற்கா...ஹஹஹஹஹஹ் தோழரே நாங்கள் அரசியல் வாதிகள் இல்லையே! மோடியிடம் கேட்கலாமா?!!!

   நீக்கு
 5. என்ன உலகம் இது நண்பரே
  இறந்தவர்களின் குடும்பத்தினரை நினைத்தால் கவலையாக இருக்கிறது
  யார் செயத தவறுக்கு யார் துன்பப்படுவது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! நண்பரே! இது போன்ற நிகழ்வுகள் மனதை வேதனை கொள்ளத்தான் செய்கின்றது! மிக்க நன்றி!

   நீக்கு
 6. அந்த கொடுமையை படித்து நானும் பதைபதைதேன். என்றுமே அரசுமருத்துவமனைகளை நாடி வருபவர்களுக்கு கிடைக்கும் மரியாதை இது தான் என காட்டுகிறார்களோ:((( உயிர் எத்தனை மலிவாய் ஆகிவிட்டது இவர்களுக்கு:((

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோதரி! அரசு மருத்துவமனைகள் ஏன் இப்படி உள்ளன என்று தெரியவில்லை! சென்னையில் எக்மோரில் உள்ள அரசு மருத்துவமனை பற்றி வந்த செய்திகள் இன்னும் அதிர்ச்சியானவை! கேரளா எத்தனையோ மேல்! அங்கு இது போன்று அவ்வளவு இல்லை!

   மிக்க நன்றி! சகோதரி!

   நீக்கு
 7. ஆம் மேலை நாட்டினர் சொல்கிறார்கள் ..
  இந்திய பாக்கித்தானிய, ஆப்கானிய ஆப்பரிக்க நாடுகளில் மனித உயிர் மலிவாய்க் கிடைக்குமென்று...

  அப்போத்திகிரி பார்த்தீர்களா ஆசானே..
  நான் பொதுவாகத் திரைப்படங்கள் பார்ப்பதில்லை.
  வெறுப்பென்றில்லை..சில சாதாரணத் தடைகள்தான்!

  அப்போத்திகிரி பார்த்து அதிர்ந்து போனேன்.
  முடிந்தால் அதைப்பற்றி ஒரு பதிவிடுங்களேன்.
  உங்கள் பதிவைப் பார்த்ததும் இந்தப் படம்தான் நினைவில் வந்து தொலைக்கிறது.
  நன்றி.
  தமிழ்மணம் கூடுதல் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஆசானே! 3ஆம் தர நாடுகளில் உயிர் மலிவாகாத்தான் கிடைக்கின்றது..

   அப்போத்தகரி பற்றிய பதிவு எழுதலாம்....ஆம்மிகவும் உண்மையை நிதர்சனமாக காட்டியிருப்பார்கள். மனம் பதைபதைக்கும்.

   மிக்க நன்றி ஆசானே!

   நீக்கு
 8. தரமற்ற மருத்துவப் பொருட்களை உபயோகிக்கும் போக்கும், காசுக்கு ஆசைப்பட்டு கணக்குக் காட்டும் மனோபாவமும் அல்லது நெருக்கடியும் காரணமாயிருந்திருக்கலாம். மருத்துவர் தனக்குக் கிடைத்த பொருட்களை வைத்துத்தானே செய்ய முடியும்? எங்கள் ப்ளாக் பாசிட்டிவ் பகுதியில் பகிரப்பட்ட சம்பவத்தைப் படித்திருப்பீர்கள். காஷ்மீர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட மருத்துவமனையில் குறைந்த அளவு உபகரணங்களைக் கொண்டு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் இருக்கிறார்கள்.

  எது எப்படி ஆயினும் நடந்திருப்பது வேதனையான விஷயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மியச் சரியே! நண்பரே1 தங்கள் கருத்து! பாசிட்டிவ் செய்தி படித்தோம் ஆம் அப்படிப்பட்ட மருத்துவர்களும் இருக்கத்தான் செய்ட்கின்றார்க்ள். ஆனாலும் நம் நாட்டில் அரசங்க மருத்துவமனைகள் நன்றாக இயங்கினால் ந்ல்லதே!

   மிக்க நன்றி!

   நீக்கு
 9. #ஒரு இலட்சம் பேருக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து சாதனை புரிந்து விருது பெற்ற டாக்டர் ஆர்.கே குப்தா,#
  ஏழைகள் உயிரோடு விளையாடும் இதிலும் சாதனை புரிய நினைத்து இருப்பாரோ ?இறந்தவரை பிழைக்க வைத்தால் சாதனை ,அப்பாவி மக்களை கொன்று குவிப்பது வேதனை!
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னத்த சொல்ல?! ஜி? மக்கள் தொகைக் குறைப்போ?!

   மிக்க நன்றி ஜி!

   நீக்கு
 10. வேதனையே,
  காலம் முழுவதும் இதைக்கேள்விப்பட்டு ‘’உச்’’ கொட்டி என்ன பயன் நாட்டில் கடுமையான சட்டங்கள் இயற்றப்படாதவரை இந்த மாதிரியான தவறுகள் நிகழ்து கொண்டே இருக்கும் இதற்காகன அடுத்த நடவடிக்கை என்ன என்பதை நான் யோசிக்க வேண்டும் மக்’’கல்’’ ஆன நாம் அனைவரும் தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
  இதைப்படித்து வேதனைப்பட்டு என்ன பயன் இதுவே நமக்கு பழகி விட்டதே….
  ஆனால் ? நடந்த சம்பவத்திற்க்கான பொருப்பாளிகள் எவனாவது கவலைப்படுவானா ? என்றால் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்
  சிந்திப்போம் மாற்று வழி தேடி. இன்று சிந்தித்தால் அடுத்த தேர்ததலிலாவது மாற்றத்தை கொடுக்கலாம்.
  குறிப்பு, இதைப்படிப்போர் நினைக்கலாம் கில்லர்ஜி வேறு விசயத்துக்கு போய் விட்டானே என்று,, நான் நாளை இதுபோல் தவறுகள் நடக்ககூடாது என்பதை யோசிப்பவன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேதனைப்படுவதை விட செயலில் இறங்குதல் தான் சிறந்தது எனப்தும் தெரிகின்றது! ஆனால் வழி என்ன என்ரு திக்குத் தெரியாத காடு போல் உல்ளது. தனிமனிதனோ இல்லை குழுவோ செய்ய முடியுமா என்று ஆனால் செய்து அசத்துபவர்களும் இருக்கத்தாஅன் செய்கின்றார்க்ள். எங்கள் ப்ளாகில் வரும் பாசிட்டிவ் செய்திகள் அதைத்தான் சொல்லுகின்றன....நீங்கள் சும்மா எழுதுகின்றீர்கள். பேனாவில் கண்னீர் விடுகின்றீர்கள்..சாரி கணினியில் கண்ணீர் விடுகின்றீர்கள்...நாங்கள் செயலில் இறங்குகின்றோம் என்று ...

   மிக்க நன்றி!

   நீக்கு
 11. சொல்ல இயலா துயர நிகழ்வு ... சின்ன கவனக்குறைவு பெரிய இழப்பில் முடிகிறது ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவனக் குறைவு என்பதை விட செய்யும் தொழிலில் நாட்டமும், நேர்மையும் இல்லாமை.....மிக்க நன்றி அரசன்!

   நீக்கு
 12. இலவச முகாம்களுக்கு அரசு இலக்கு நிர்ணயிப்பதே இமாதிரி விபத்துக்களுக்கு முக்கிய காரணமைந்து மணிநேரத்தில் 83 லாப்ராஸ்கோபிக் அறுவைச் சிகிச்சைகள் செய்ய முடியாத தென்றும்தேவையான எந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வில்லை என்றும் அறிகிறோம்.முகவும் அலட்சியமான வேதனை தரும் நிகழ்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சார்! மிக மிக சரியான கருத்து! அலட்சியப் போக்குதான் அதுவும் மருத்துவர்களுக்கானாலும், அவர்களுக்கு உதவுபவர்களுக்கும், செவிலியர்களுக்கும் இருக்கக் கூடாத ஒன்று!

   மிக்க நன்றி!

   நீக்கு
 13. பதில்கள்
  1. மிக்க ந்னறி புலவர் ஐயா தங்கள் கருத்திற்கு! கொடுமைதான்!

   நீக்கு
 14. நம் நாட்டில் மருத்துவம் இப்படி சில சமயங்களில் உயிர்களில் விளையாடுவதாக அமைந்துவிடுகிறது! பத்தாவது படித்தவர்கள் கூட போலி டாக்டர்களாக உருமாறி வைத்தியம் செய்துகொண்டிருக்கிறார்கள்! அரசாங்கம் கூடுதல் விழிப்புணர்வோடு இருப்பதோடு மக்களும் விழிப்புணர்வு அடையவேண்டியது காலத்தின் கட்டாயம்! நல்ல பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான்! நண்பரே! அரசாங்கம் தான் ஆவன செய்ய வேண்டும் ஏழை மக்களின் ஆரோக்கியத்திற்கும் மருத்துவத்திற்கும்!

   மிக்க நன்றி!

   நீக்கு
 15. //ஒரே சிரிஞ்சில் 50க்கும் மேலானவர்களுக்கு ஊசி போடுவது, காலாவதியான மருந்துகள் கொடுப்பது போன்றவை அம் மாநிலங்களில் சர்வ சாதாரணமாம். //

  மனம் கொதிக்கிறது !! இவ்வளவு அக்கறையில்லாமல் இருக்கிறார்களே !:(
  பதிவை வாசித்ததும் பாவம் அந்த குழந்தைகளை நினைத்து மனம் வேதனைபடுகிறது ..நாட்டிங்க்ஹாம் சம்பவம் அந்த மருத்துவர் ஒழுங்க சர்ஜிகல் instruments கழுவவேயில்லை என்பதை சீக்ரட்ட யாரோ படம் பிடித்து அனுப்பியிருக்காங்க
  சென்ற வருடம் ஒரு இருவர் infection வந்து செத்து போனாங்க ..
  தொழிலை தெய்வமாக மதித்த காலம் போய் எல்லாமே வியாபறமாகிபோனது உலகில் :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ! நாட்டிங்ஹாம் சம்பவத்தில் இருவர் இறந்தனரா? ,ம்ம்ம்ம்ம் டாக்டர் தொழில் எத்தனைப் புனிதமானது?! ஆனால் பாருங்கள் அதன் நிலைமை! அரசாங்கம் ஆவன செய்தால் நலல்து

   மிக்க நன்றி சகோதரி!

   நீக்கு
 16. மிகவும் கொடுமையான விடயம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டியவர்களே யமனாக இருப்பது வேதனை!

  பதிலளிநீக்கு
 17. கொடுமையிலும் கொடுமை.மருத்துவத் துறையில் வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்!

   நீக்கு
 18. நம் நாட்டில் பல துறைகளிலும் பற்பல தவறுகள் இதற்கு முன் பல முறை நடந்தும்,
  மீண்டும் அத்தவறுகள் நடக்காமல் இருக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை..

  இனிமேலும் எடுக்க மாட்டார்கள் என்பதே உண்மை!..

  முதலையும் மூர்க்கனும் கொண்டது விடார் என்பர்.. மனம் கனக்கின்றது ஐயா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் இருக்கும் நாட்டில் சட்டம் எல்லாம் மிகவும் கடுமையாக இருக்குமாமே மருத்துவத் துறையுலும் அப்படித்தானே? அப்படி இருந்தால் அது போன்று இங்கும் வர வேண்டும்.

   மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 19. நானும்
  இச்செய்தியைக் கேட்டதும்
  அதிர்ச்சி அடைந்தேன்!
  “வரும் முன் காவாத” அரசும்
  மருத்துவத் துறையும்
  இருந்தென்ன பயன்?
  அவ்வவ் மாநில மக்களுக்கு
  போதிய மதியுரை (ஆலோசனை) ளழங்க
  ஆளணி இல்லாமையும்
  இவ்வாறான நிலைமைகளைத் தோற்றுவிக்கலாம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரெ! தங்களது சீரிய கருத்திற்கு! மிக நலல் கருத்து!

   நீக்கு
 20. அன்புள்ள அய்யா,

  மருத்துவ தர்மம் மறந்த நாடும், மருத்துவர்களும் பறித்த 13 உயிர்களை நினைத்து மனது பதைபதைத்து கனத்தது. சத்திஸ்கரில் கடந்த 2011 செப்டம்பர் சத்திஸ்கரில் பாலோத் எனும் இடத்தில் நடந்த கண்புறைக்கான அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களில் 42 பேர்கள் பார்வை இழந்திருக்கின்றார்கள். 2012 ல் இதே மாநிலத்தில் இதே கண்புறைக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 23பேர் கண் பார்வை இழந்திருக்கின்றார்கள். இவ்வருடமோ கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட 14 பெண்கள் தங்கள் உயிரையே இழந்திருக்கின்றார்கள் என்பதைச் செய்தியாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது.

  மனித நேயம் இல்லாமல் ஏதோ சில மனிதர்களது அலட்சியத்தாலும், செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளைச் செய்யாமல் இருந்ததாலும் அதற்காகச் செலவாகும் பணத்தை அபரித்ததாலும் உயிரழக்க நேர்ந்ததோ, ஒரு குற்றமும் செய்யாத 13 இளம் தாய்மார்கள்... எனறு தாங்கள் எண்ணியது மிகவும் சரியே..

  மருத்துவர்கள் மனித உயிர்கள் மேல் வைத்திருக்கும் அலட்சியத்தால்தான் இந்த பரிதாபமான நிலை...ஏழைகள்தானே....இவர்களால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற மெத்தனப்போக்கும் காரணமாக இருக்கலாம்.

  இதைப்படிக்கும் பொழுது எங்கள் ஊரில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவுக்கு வந்தது... இருபத்து அய்ந்து அல்லது முப்பது வருடத்திற்கு முன் இருக்கும்... பிரசவத்திற்காக மணப்பாறை அரசு மருத்துவமனை (லோகல் பண்டு என்று சொல்வார்கள்) எங்கள் ஊரைச்சேர்ந்த மேரி என்ற பெண்ணை பிரசவத்திற்காக சேர்த்தார்கள்...அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் என்று சொல்லி...அறுவை சிகிச்சை செய்தார்கள். அந்த மருத்துவமனையில் செய்யப்பட்ட முதல் பிரசவ அறுவை சிகிச்சை அதுவாம். மருத்துவர்கள் தெரியாமல் ஒரு நரம்பை வெட்டிவிட... இரத்தப்போக்கு நிற்காமல்...உடனே திருச்சிராப்பள்ளி மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டுபோகச் சொல்ல...ஒர் அம்பாசடர் காரில் அவசரமாக அந்தப் பெண்ணை தூக்கிப்போட்டுக்கொண்டு செல்ல மரவனூர் என்ற இடத்தை தாண்டும்பொழுதே ( இருபது கிலோ மீட்டருக்குள்) அந்த பெண் இறந்து விட்ட கொடுமை நேர்த்தது. இது போல எத்தனையோ உண்மைகள் வெளியில் தெரியாமலே போகின்றன.
  இதேபோல் சமீபத்தில் ( ஏழு ஆண்டுகள் இருக்கும்) எங்கள் ஊரில் முருகேசன் என்ற மருத்துவர் ஒரு பெண்ணிற்கு பிரசவத்திற்கு அறுவை சிகிச்சை செய்யும் போது பள்ளியில் படிக்கும் தனது மகனைவைத்து... ஒரு பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்யவைத்ததை பெருமையாக வீடியோவில் போட்டுக்காட்டி மாட்டிக்கொண்டார். மருத்துவ போர்டும் அவரை மருத்துவம் செய்வதற்கு சில ஆண்டு காலம் தடைவிதித்தது. தற்பொழுது அந்த இடத்தைமாற்றி வேறு இடத்தில் அதே ஊரில் பெரிய மருத்துவமனை கட்டி மருத்துவம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

  விலைமதிக்க முடியாத உயிர்களுக்கு...இறந்த பின் சில இலட்சங்களைக் கொடுத்து என்ன பயன்? அன்னை இருப்பதைப்போல் பிள்ளைக்கு அரவணைப்பு ஆகுமா?
  வருமுன்னர்க் காக்க அரசும் மருத்துவர்களும் ஆவன செய்ய வேண்டும்.இதில் அலட்சியம் காட்டக்கூடாது.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் தாங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவம் வாசித்துள்ளொம் ஐயா! மிகவும் வேதனைதான்! அரசு மருத்துவமனைகள் தான் இதற்கு வழி வகுக்க வேண்டும்! அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் எல்லாம் ஒழுங்காக நடைபெறும். அரசே ஊழலில் சிக்கி இருந்தால்?!!

   மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 21. இந்த விஷயத்தில் தமிழகம் எவ்வளோ பரவாயில்லை. அரசாங்கம் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட ஆமம் அதுவும் சரிதான்...வட இந்தியாவை ஒப்ப்டும் போது தமிழகம் ப்ரவாய்ல்லைதான்....மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 22. மனதை கனத்துப்போகச் செய்துவிட்ட செய்தி கொடுமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனம் மிகவும் வேதனைப் பட்டது இதை வாசித்த பொது! மிக்க நன்றி சகோதரி!

   நீக்கு
 23. பதில்கள்
  1. ஜி! பரவாயில்ல நிறைஅ த.ம. 1 ஓட்டுக்கள்! ஹஹஹ
   மிக்க நன்றி!

   நீக்கு
  2. எனக்கு 18 வயசு ஆச்சு நாங்களும் ஓட்டுப்போடுவோமுள்ள...

   நீக்கு
  3. அட்! உங்களுக்கு 18 தானா?!! நாங்க உங்கள் ரொம்ம்ம்ம்ப வயசானவர்னுல நினைச்சோம். அப்ப நீங்களும் எங்க கட்சிதானு சொல்லுங்க!!! அஹஹஹ்ஹ் நாங்க உங்கள்விட சின்னவங்க எப்பவுமே 16!!!!

   நீக்கு
  4. 81 அ மாத்தி போட்டுட்டீங்களோனு முதல்ல நினைச்சோம் ஜி! ஏன்ன நீங்க காந்தியோட பேசிருக்கீங்களே அதனால.....ஹஹ்ஹ

   நீக்கு
 24. இனிய நண்பரே தங்களை தொடர்பதிவில் இணைத்திருக்கிறேன் எனது வலைப்பூ வந்து அறிந்து கொள்ளவும்,
  அன்புடன்
  தங்களின் நண்பன்
  கில்லர்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரோம் ஜி! பதில் சரியா கிடைக்காம தவிச்சுக்கிட்டுருக்கோம்...16 வயசுக்காரங்களுக்கு இந்த மாதிரி ரொம்ப மெட்ச்சூர் கேள்வி கேட்டா காந்திக் கணக்கு எழுதறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா....(மத்தவங்களோட பதில்கள வாசிக்காம எழுதணும்னு தான்....) ஹஹஹ

   நீக்கு