புதன், 15 ஜனவரி, 2014

தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போக வைக்கும் மூலிகை மருத்துவம்

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல் காது போக வேண்டியது காதில் முளைத்திருந்த மரக்காளான் போன்ற பரு போனது எனக்கு மிகுந்த அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் தந்தது.  என் நண்பன், பிஜுவின் மாமனார் வேலாயுதன் 5 மாதங்களுக்கு முன் தனது வலது காதில், துவாரத்திலிருந்து வெளியே, மரத்தில் பற்றிக் கொண்டு முளைக்கும் காளான் போல், வளர்கின்ற ஒரு பருவால் (wart) துன்புற்றிருந்தார். வலியில்லை என்றாலும் அவர் காது கேட்காத நிலையை அடைந்திருந்ததோடு,  பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் வகையில் அது பெரிதாகவும், அருவருப்பாகவும் இருந்தது.  

பல டாக்டர்கள் கொடுத்த பல மருந்துகள், பலனளிக்காமல் போனதால் கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் சென்று, E.N.T டாக்டர் மற்றும் சர்ஜனைக் காண, அதை பயாப்சிக்கு உட்படுத்தி, உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும் என்றும், பெரும்பாலும் பருவை நீக்கும் போது, அது காதோடு பற்றிப் பிடித்திருப்பதால், காதில் ஓட்டை விழ வாய்ப்புண்டு. எனவே, காதையும் ரிமூவ் பண்ண வேண்டியிருக்கும் என்றும் உறுதியாகச் சொல்லிவிட்டார். 

காதைக் காப்பாற்றவும் வேண்டும், வளரும் பருவை அகற்றவும் வேண்டும். செய்வதல்லாது திகைத்தார் வேலாயுதம். ஒற்றை மூலி வைத்தியம், பச்சிலை வைத்தியம், மூலிகை மருத்துவம் என அறுவைச் சிகிச்சைக்குப் போகும் முன், ஓரிரு முயற்சிகளைச் செய்ய முடிவு செய்தார். எங்கு சென்றாலும் எல்லோரது கண்களிலும்படும் இந்தப் பருவுக்கு மருந்து சொன்னவர்கள் ஏராளம். அதில் ஏதோ ஒருவர் சொன்னதை, வேலாயுதனால் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட முடியவில்லை.

ஏதோ ஒரு தையல் காரர்.  அவரை நம் நண்பர் சென்றுக் கண்டார். தையல் காரரும், வைத்தியரும் ஆன அவருக்கு பண ஆசையெல்லாம் கிடையாது.  ஆனால், அவர் ஒரு கண்டிஷன் போட்டார்.  “இந்த மருந்தை உங்களைப் போல் அவசியமுள்ள ஒருவருக்கு அல்லாது (எப்போதாவது உங்கள் வாழ்வில் நீங்கள் என் முன் வந்தது போல், உங்கள் முன்னும் ஒருவர் வந்து நிற்கும் போது) வேறு யாருக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால், மருந்தால் அவருக்கும் உங்களுக்கும் பலன் கிடைக்காது. உங்களுக்கு மீண்டும், போன பரு வரவும் செய்யும். (இப்பத்தான் புரியுது, நம் சித்தர்கள் செடிகளுடன் பேசி, அவைகளின் குணம் அறிந்து, மக்களுக்கு பகிர்ந்து நல்கிய பச்சிலை மூலிகை மருத்துவமெப்படி நம் நாட்டிலிருந்து காணாமல் போயிருக்கிறது என்று......கொடுமை!...வேறென சொல்ல!....)

எப்படியோ நம் நண்பர் கடந்த ஓரிரு மாதங்கள் மூன்று மூலிகைகளின் கூட்டான அந்த மருந்தைக் காதில் பூசி, இரு முறை அந்தப் பரு வீங்கி உடைந்து, உதிர்ந்து, மீண்டும் வீங்கிய போதும், வருவது வரட்டும் என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தார். அதிசயம்.! மூன்றாம் முறை வீங்கி உடைந்த அந்தப் பரு காய்ந்து உதிர்ந்தே போனதாம். அதிசயம் ஆனால் உண்மை! (நம்பள்கிதான் இதன் பின் ஏதேனும் உண்மை இருக்க வாய்பு உண்டா என்று சொல்ல வேண்டும். இல்லை குருவி உட்கார பனங்காய் விழுந்த கதையா?! என்று)

இந்தவகைப்பாம்புகள் ஆப்பிரிக்காவில் அதிகம்

வருடங்களுக்கு முன்பு, ஜிம்பாப்வேயில் (ஆப்பிரிக்கா) நடந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு சம்பவம் என் நினைவுக்கு வந்தது. சில வருடங்களுக்கு முன், +2 ஆங்கில பாடப்புத்தகத்தில் நான் அதைக் கற்பித்து இருக்கிறேன். வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில், விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் கண்களில் ஏதோ ஒரு விஷப் பாம்பு விஷத்தைச் சீற்ற, அலறி தரையில் விழுந்து உருளும் தன் குழந்தையை எடுத்த அந்த இங்கிலாந்தைச் சேர்ந்த தாய் தன் குழந்தையின் கண்கள் இரண்டும் ஒரு சில வினாடிகளில் சிவந்து வீங்கவும் செய்ததைக் கண்டு அதிர்ந்தார். அந்த வீட்டின் சமையல் காரரான ஆப்பிரிக்கர் அதைப் பார்த்து அலறிக் கொண்டு பைத்தியம் பிடித்தவரைப் போல் ஓடிக் கண்களில் கண்ட இலைகளையெல்லாம் பறித்து, ஓடி வந்து அவற்றின் சாரைப் பிழிந்து குழந்தையின் கண்களில் ஊற்றினார். குழந்தை அழுகையை நிறுத்தி மயங்கி விட்டான்.

அடுத்த ஒரு ம்ணி நேரத்துக்குள் பையனின் அப்பா டாக்டருடன் அங்கு வந்து சேர்ந்தார். பையனின் கண்களைப் பரிசோதித்த டாக்டர் பயப்பட ஒன்றுமில்லை என்றார். பையனின் அம்மா, சமையக்காரரின் பச்சிலை வைத்தியத்தைப் பற்றிக் கூறியதும் மூவரும் அடிசயத்துடன் சமையற்காரரைப் பார்த்ததோடு மட்டுமல்ல, அவரிடம் எந்த இலையை உபயோகித்து, குழந்தையின் பார்வையை எப்படி அவர் திரும்பப் பெற உதவினார் என்று கேட்க, பாவம் அவர் ஓடி ஏதேதோ இலைகளைப் பறித்துக் கொண்டுவந்து அவர்களிடம் கொடுத்து அவர்களையும் குழப்பி, “எனக்கு ஒன்றும் ஞாபகம் இல்லை என்று சொல்லி அழுது, இடையில் மயங்கி விழுந்து.....இப்படிப் பலதும் செய்ய, அது கண்ட டாக்டர் பெற்றோரிடம்,

“பிரயோஜனமில்லை, ஆப்பிரிக்க மக்களுக்கு இது போல பல அரிய மருத்துவ அறிவும் உண்டு.  ஆனால், அவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லித் தரமாட்டார்கள். ஆனால். அவசியம் வரும் போது, அதை உபயோகிக்கத் தயங்கவும் மாட்டார்கள். என்றார்.

என்ன செய்ய.  எல்லாம் பொது உடமை ஆக்கும் மேலை நாட்டவரின் மருத்துவம்தான் (அலோபதி) நமக்கு விதித்தது. சாப்பிடும் மருந்தே புதுவித நோய் உண்டாக்கும் ஆங்கில மருத்துவம்தான் நம் கை எட்டும் தூரத்தில் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு எதினோபயாலஜியில் நடத்தப்பட்ட ரிசர்ச்சில், இந்தியாவில் பல பாகங்களில் உள்ள, பழங்குடி மக்கள் மற்றும் கிராமத்தினர், ஏறத்தாழ 7500 மூலிகைச் செடிகளை பலதரப்பட்ட நோய்களுக்கு மருந்தாக உபயோகித்து பயன் பெறுவதாகத் தெரிய வந்தது.  அவற்றைப் பற்றி அறிந்து, அவற்றை உபயோகித்து பயன்பெற அரசும், மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ வல்லுனர்களும் ஆவன் செய்ய வேண்டும்.

மாலிக்குலர் பயாலஜி மற்றும் பயோ கெமிஸ்ட்ரியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளுக்கு நோயைக் குணப்படுத்தக் கூடியத் தன்மை இருந்தாலும் அதிலுள்ள சில ரசாயனப் பொருட்கள் கிட்னி, லிவர் போன்ற உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உடலுக்கு வேறு விதமான பல நோய்களையும் தர வாய்ப்புண்டு. அதே சமயம், நம் மூலிகைகள் எந்த வித பாதிப்பும் உடலுக்கும், உடல் உறுப்புகளுக்கும் ஏற்படுத்தாமல் நோயை குணப்படுத்தி உடலுக்கு பூரண ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியையும் தர வல்லது. எனவே அதை நம்பி, நாம் உபயோகிக்கலாம். இவற்றில் பலதும் மெடிக்கல் Pharmacopoeia வில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, வரும் தலைமுறை இவற்றின் சிறப்பை உணரும்படியாக அவற்றை நாம் அவர்களுக்கு சொல்லிலும், செயலிலும் விளக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஆனால், நம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் இம் மூலிகைகளை, மருந்தாகும் செடிகளை யார்தான் நமக்கு அடையாளம் காட்டுவார்கள்? அதற்கு இங்கிலாந்திலிருந்தோ அமெரிக்கவிலிருந்தோ, நம் பச்சிலை மூலிகைகளைப் பற்றி புகழ்ந்து பேசவோ, எழுதவோ செய்தால்தான் உண்டு. அப்படிச் செய்யும் போது அவர்கள் சும்மா போகமாட்டார்கள் காப்புரிமை எடுத்துக் கொண்டுதான் போவார்கள். காப்புரிமையும் நம்மால் கொடுக்க முடியாது. (வேப்பிலையும்....மஞ்சளும் நம் கைவிட்டுப் போக இருந்தது நமது விழுப்புணர்வுதான் அவை நம் கைவிட்டுப் போகாது காத்தது. எல்லோருக்கும் நினைவிருக்குமே). எனவே, நம் மூலிகைகளை உபயோகித்து நம்மவர்கள் நோயற்ற வாழ்வு வாழ உதவும் வகையில் இனியொரு விதி செய்து அதை எந்த நாளும் காப்போம்!!

இந்த இடுகைக்கு வந்த, இதனை ஆமோதிக்கும் வண்ணமும், மூலிகை மருந்தினால் குணமானது என்று அனுபவத்தால் வந்த சில பின்னூட்டங்கள்! விவாதமும் எழுப்பும் நல்ல பின்னூட்டங்கள்!
இந்தப் பின்னூட்டங்களுக்குப் பிறகு, இறுதியில் பொதுவாக, எங்களது கருத்தையும் சொல்லியிருக்கிறோம்!

[[ஆனால், அவர் ஒரு கண்டிஷன் போட்டார். “இந்த மருந்தை உங்களைப் போல் அவசியமுள்ள ஒருவருக்கு அல்லாது (எப்போதாவது உங்கள் வாழ்வில் நீங்கள் என் முன் வந்தது போல், உங்கள் முன்னும் ஒருவர் வந்து நிற்கும் போது) வேறு யாருக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால், மருந்தால் அவருக்கும் உங்களுக்கும் பலன் கிடைக்காது. உங்களுக்கு மீண்டும், போன பரு வரவும் செய்யும்.]]

குணம் ஆகியிருக்குமா இல்லையா என்பது இங்கு கேள்வி அல்ல! சொல்லிகொடுத்தால் பலன் கிடைக்காது என்று சொல்லும்போதே நம்பகத் தன்மை முழுவதும் அடிபட்டு போகிறது! அவன் பார்த்தான் இவனுக்கு இப்படி ஆச்சு என்று சொல்வது வழக்கமா கேள்விப்படுகிறது தான். நான் எப்பவும் கேப்பது, "நீ அதை பாத்தியா?" என்பது தான். நூற்றுக்கு நூறு வரும் பதில் நான் பார்க்க வில்லை என் உயிர் நண்பன் சொன்னான்; அவனைக் கேட்டல் அவன் சொன்னான் இவன் சொன்னான் அப்படி இப்படிஎன்று தான் பதில் தான் வரும்.

உங்கள் நண்பர் என்பதால். அந்த டாக்டர் கொடுத்த சீட்டுடன், அதே ENT டாக்டரிடம் காட்டுங்கள்; அவர் என்ன சொல்கிறார் என்றும் பார்ப்போம்.

மேலும், 70 விழுக்காடு மருந்துகள் இயற்கையில் இருந்து தான் கிடைகிறது. சுடுகாட்டில் வளரும் நித்யகல்யாணியில் இருந்து கேன்சருக்கு மருந்து தயாரிக்கிரார்கள்; பெனிசிலின் கண்டு படித்ததே தற்செயலாகத்தான். எங்கோ படித்தது. ஒரு புண்ணின் மீது, ரொட்டி துண்டுடன் சில mold or fungus வைத்து கட்டியபோது புண் ஆறியது என்று.

அல்லோபதி மருத்துவர்கள் தாங்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு தவறு என்று தெரிந்தால் தங்களை .மாற்றிக்கொள்வார்கள்.

மஞ்சள் வேம்பு கரும்பு, அரிசி இவைகள் எல்லாம் எல்லா --tropical countries-ல் கிடைக்கிறது. புளி , முருங்கைக்காய், வெண்டை, கல்யாண பூசணி, மஞ்சள் பூசினி இவை எல்லாம் எங்களுக்கு இந்தியாவில் இருந்து வருவதில்லை. மாயன் civilization-தொன்மையானது. இந்தியர்கள் எதோ மஞ்சள் இந்தியாவில் மட்டும் தான் விளைகிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிர்ர்றாக்கள். இங்குள்ள சில மிளகாய்கள் ஒன்று நம்மூர் பச்சை மிளாகாய் இருபதுக்கு சமம். இங்கு இதை கையால் கூட தொடமாட்ட்ர்கள்.

நிறைய இயற்கை மூலிகைகள் --சந்தேகம் இல்லாமல் health supplements தான். ஏன் நானே கூட எடுத்துக் கொள்கிறேன். அப்படி ஒன்றை சாப்பிட்டு காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதையா நான் சிகரெட்டை நிருத்தினேன். அதன் மூலம் மட்டும் தான் நிறுத்த மு.டிந்தது என்று என்ன்னால் உறுதியாக கூற முடியாது அதை ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்படாததால் யாருக்கும் சொல்வது கிடையாது---அப்படி சொல்வது தவறு.

வெறும் தண்ணி மட்டும் கொடுத்து நான் 100 பாம்புக்கடி கடித்தவ்ர்களில் 96 பேரைக் காப்பாற்றுவேன். எப்படி? மொத்தம் இந்தியாவில் இருக்கும் பாம்புகளில் நான்கு வைகை பாம்புகள் மட்டுமே விஷம் மீதி எல்லாம் ஒன்றும் செய்யாது.

ஒரு வெறி நாய் கடிக்கவைத்து, நாகப் பாம்பு கடிக்கவைத்து ஒரு மனிதனை ஆங்கில மருந்து கொடுத்து காப்பாற்ற முடியும்;அதே சமயம் இயற்கை வைத்தியம், மூலிகையினால் காப்பாற்ற சொல்லுங்கள்---அவருக்கு நோபெல் பரிசு நிச்சயம்!

மூலிகை பற்றிய விழிப்புணர்வைத் தூண்டும் பதிவு.

என் மைத்துனருக்குத் தலை முழுக்கப் ‘புழுவெட்டு’ [வட்ட வட்டமான வழுக்கை] பரவியது. ஆங்கில மருத்துவத்தால் பலன் கிடைக்காத நிலையில், ‘ஆடு தீண்டாப் பாலை’என்னும் மூலிகையை ஒருவர் பரிந்துரைத்தார். ஆறு மாதங்களுக்கு மேலாகத் தேய்த்து வந்தததில் மீண்டும் முடி முளைத்துவிட்டது.

மலைப் பகுதிகளில் அரசாங்கமே மூலிகைப் பண்ணைகள் உருவாக்கலாம். தனியாரையும் மானியங்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

வணக்கம்
நண்பரே..

நல்ல கருத்தை சொல்லியுள்ளிர்கள் பதிவில்... ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்தவம் சிறந்தது... ஏன் என்றால் பக்க விளைவுகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் உதாரணமா. நமது வீடுகளில் கூட பாட்டிவைத்திய முறைதான் செய்கிறார்கள் ...
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நம்பள்கி சொல்லுகிறார்---
ஒரு வெறி நாய் கடிக்கவைத்து, நாகப் பாம்பு கடிக்கவைத்து ஒரு மனிதனை ஆங்கில மருந்து கொடுத்து காப்பாற்ற முடியும்;அதே சமயம் இயற்கை வைத்தியம், மூலிகையினால் காப்பாற்ற சொல்லுங்கள்---அவருக்கு நோபெல் பரிசு நிச்சயம்!...................

பதில்-
நிச்சயம் காப்பாற்றமுடியும்.. ஏன் என்றால் நான் நேரில் பார்த்தேன் இது உண்மை.. எங்கள் ஊரில் பாம்பு கடித்தால் விசவைத்தியரைத்தாண் நாடுவார்கள். ஒருபெடியனுக்கு..வயது 15 பாடசாலையில் படிக்கும் வயது. அவன் மாலையில் விளையாடும் போது (இரத்த புடையன் பாம்பு கடித்தது அவனது மூக்கு வாய் இவைகளில் இரத்தம் வடிந்தது கண்கள் எல்லாம் சிகப்பாகியது...கண் மூடியது சளி தொண்டையை இறுக்கியது. எல்லோரும் அழுதார்கள்... இறந்து விட்டான் என்று விசவைத்தியர். கண்ணுக்கு (கலிங்கம் என்று சொல்லப்படும் ஒரு மூலிகை சார் விட்டார் பின்பு மூக்கு பகுதிக்கும் மூலிகை சார் விட்டார் தொண்டையை இறுக்கி இருந்த சளி வெளியில் வந்தது கொஞ்சம் கொஞ்சமாக. மெதுவாக கண்ணும் திறந்தான்... செய்யவேண்டிய வைத்தியத்தை செய்தார் விஷவைத்தியர்... பெடியன் உயிர்தப்பினான்.ஆங்கில மருத்துவ முறையை விட மூலிகை மருத்தவம் சிறந்தது...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படி பாம்பு கடித்த பெடியனை வைத்திய சாலைக்கு சென்றால் கடித்த பாம்பு எங்கே கொண்டுவாருங்கள் என்று உறவினர் இடம் ஆயிரத்தி எட்டு கேள்வி கேட்டு சீரலிப்பார்கள்...ஆங்கில மருத்தவம் மூலம் குணம்மடைந்தாலும் பாம்பின் விசத்தன்மையால் சில காலத்தில் சில நோய்கள் வரும்.. ஆனால் மூலிகை மருந்துவத்தில் அப்படி தன்மை இல்லை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றது போல.... பவர்புள்
(விஷவைத்திய மறை எனக்கும் தெரியும்.. அது படித்தேன்)விஷத்தை கட்டுப்படுத்தஎன்னும் எவ்வளவு மூலிகை யுள்ளது.
பாம்பு கடித்து விட்டதாக விஷவைத்தியரை அழைக்கச் செல்லும் நபரின் நடத்தை கோலம் அவர் சொல்லும் விதம் வைத்த என்ன பாம்பு கடித்தது. என்றும் பாம்பு கடிவாங்கியவர் உயிர் தப்புவரா அல்லத தப்பமாட்டாரா என்று சொல்லும் பக்குவம் மூலிகைவைத்தியருக்கு உண்டு....(இது தனிச்சிறப்பு என்றுதான் சொல்லவேண்டும்)
நண்பரே எழுதினால் என்னும் விரிவாக எழுதிக்கொண்டு போகலாம்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வணக்கம்
நண்பரே

நான் மூலிகையை சொல்ல விருமப வில்லை அந்த மூலிகையின் வேர் சப்பி சாப்பிட கொடுப்பார்கள் அதன் வேர்
இனித்தால்- ஒருவகை பாம்பு.
கசக்கினால் ஒருவகைப்பாம்பு.
உகைத்தால்-ஒருவகைப்பாம்பு.
புளித்தால்-ஒருவகைப்பாம்பு.
இவைகளில் ஒன்றும் இல்லை என்றால்-வேறுவகையான து.

த.ம9வது வாக்கு
இப்படியாக அந்த தவரத்தின் வேர் சொல்லும்.. என்னபாம்பு கடித்தது என்று...

எப்படித் தவறவிட்டேன் இந்தப் பதிவை- என்று தெரியவில்லை. இன்றுதான் பார்க்கிறேன். மன்னிக்கவும். பயனுள்ள விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பழனியில் இருக்கும் பிரபல சித்த வைத்தியரிடம் மூலிகை மருந்து பெற்று தடவிக் கொண்டதில் தான் எனக்கு ஆள்காட்டி விரலில் இருந்த WARTS எண்ணும் மறு நிரந்தரமாக மறைந்தது. அதற்குமுன், அல்லோபதியில், அந்த மருவை மின்சாரம் கொண்டு கறுக்கி, அதன் மேல் ஒரு களிம்பு தடவச் சொல்வார்கள். ஒரு மாதத்திற்குப் பின் மீண்டும் அதே மறு முளைத்து எழுந்துவிடும். மறுபடியும் மின்சாரம். களிம்பு. மறுபடியும் முளைத்தெழுதல். இப்படியே ஆறு மாதங்கள் அவதிப்பட்ட பின் ஒருநாள் தற்செயலாகக் கோவை சென்றிருந்தபொழுது பழனி ஆனந்தா வைத்தியசாலை டாக்டர் சங்கரநாராயணன் (இப்போது அமரர்) அவர்களை ஒரு ஓட்டல் முகாமில் சந்தித்தேன். நாளே ரூபாய்க்கு ஒரு மூலிகை களிம்பு கொடுத்தார். பத்து நாட்கள் தடவினேன். இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அந்தப் பரு திரும்பி வரவில்லை. அந்த வைத்தியசாலை இன்னும் இருக்கிறது.
விசப் பாம்பு கடிபட்டவர்களை, வெறும் மிளகு, வேப்பிலை மற்றும் கார மிளகாய் கொடுத்தே குணப்படுத்துவதை கிராமங்களில் பார்த்திருக்கிறேன்... ஆனால் அந்த வைத்தியம் தலைமுறைகளுக்குக் கடத்தப் படாமலே மறைந்து போவதுதான் சோகம்...
நல்ல பயனுள்ள இடுகை...
//ஒரு வெறி நாய் கடிக்கவைத்து, நாகப் பாம்பு கடிக்கவைத்து ஒரு மனிதனை ஆங்கில மருந்து கொடுத்து காப்பாற்ற முடியும்;அதே சமயம் இயற்கை வைத்தியம், மூலிகையினால் காப்பாற்ற சொல்லுங்கள்---அவருக்கு நோபெல் பரிசு நிச்சயம்!//
மூலிகைகளினால் நிச்சயம் காப்பாற்ற முடியும் நண்பரே. ஆனால் அம் மருந்தைச் சொல்வதற்குத்தான் ஆள் இல்லை இப்போது.
நாம்தான் அனைத்தையும் தொலைத்துவிட்டோமே.

நான் இப்போது கூட சிறு சிறு உடல்
உபத்திரவங்களுக்கு மாத்திரைகளை விட
பாட்டிவைத்திய முறையில்தான் தீர்த்துக் கொள்கிறேன் 

எங்களது கருத்து
ஆம்! மிகச் சரியே!

அலோபதி மருத்துவம் வெளிப்படையாக உள்லது! மற்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் இன்னும் அத்தனை வெளிப்படையாகவோ, டாக்குமென்ட் செய்யப்படவோ இல்லை என்பதுதான். அதற்கான நிரூபணங்கள் நம்பள்கி கேட்பது போல் "அதைப் பாத்தியா" என்பதற்கான பதில் வெளிப்படையாக, ஆதாரங்களுடன் இல்லை. அதை அந்த மருத்துவர்கள், உண்மையான விவரங்களுடன் அதாவது எப்படி அவர்கள் நிவாரணம் அளித்தார்கள் என்பதை, அலொபதி மருத்துவம் விளக்குவது போல....அதாவது அந்த மூலிகை எப்படி உடலில் ரியாக்ட் செய்கிறது, பின்விளைவுகள், நிவாரண விதிமுறைகள், காம்பினேஷன், success stories, failure stories போன்ற புள்ளி விவரக் கணக்குடன், தகவல்களுடன் வெளியிட்டால் ஆராய்சிகளுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும்.

38 கருத்துகள்:

  1. [[ஆனால், அவர் ஒரு கண்டிஷன் போட்டார். “இந்த மருந்தை உங்களைப் போல் அவசியமுள்ள ஒருவருக்கு அல்லாது (எப்போதாவது உங்கள் வாழ்வில் நீங்கள் என் முன் வந்தது போல், உங்கள் முன்னும் ஒருவர் வந்து நிற்கும் போது) வேறு யாருக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால், மருந்தால் அவருக்கும் உங்களுக்கும் பலன் கிடைக்காது. உங்களுக்கு மீண்டும், போன பரு வரவும் செய்யும்.]]

    குணம் ஆகியிருக்குமா இல்லையா என்பது இங்கு கேள்வி அல்ல! சொல்லிகொடுத்தால் பலன் கிடைக்காது என்று சொல்லும்போதே நம்பகத் தன்மை முழுவதும் அடிபட்டு போகிறது! அவன் பார்த்தான் இவனுக்கு இப்படி ஆச்சு என்று சொல்வது வழக்கமா கேள்விப்படுகிறது தான். நான் எப்பவும் கேப்பது, "நீ அதை பாத்தியா?" என்பது தான். நூற்றுக்கு நூறு வரும் பதில் நான் பார்க்க வில்லை என் உயிர் நண்பன் சொன்னான்; அவனைக் கேட்டல் அவன் சொன்னான் இவன் சொன்னான் அப்படி இப்படிஎன்று தான் பதில் தான் வரும்.

    உங்கள் நண்பர் என்பதால். அந்த டாக்டர் கொடுத்த சீட்டுடன், அதே ENT டாக்டரிடம் காட்டுங்கள்; அவர் என்ன சொல்கிறார் என்றும் பார்ப்போம்.

    மேலும், 70 விழுக்காடு மருந்துகள் இயற்கையில் இருந்து தான் கிடைகிறது. சுடுகாட்டில் வளரும் நித்யகல்யாணியில் இருந்து கேன்சருக்கு மருந்து தயாரிக்கிரார்கள்; பெனிசிலின் கண்டு படித்ததே தற்செயலாகத்தான். எங்கோ படித்தது. ஒரு புண்ணின் மீது, ரொட்டி துண்டுடன் சில mold or fungus வைத்து கட்டியபோது புண் ஆறியது என்று.

    அல்லோபதி மருத்துவர்கள் தாங்கள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு தவறு என்று தெரிந்தால் தங்களை .மாற்றிக்கொள்வார்கள்.

    மஞ்சள் வேம்பு கரும்பு, அரிசி இவைகள் எல்லாம் எல்லா --tropical countries-ல் கிடைக்கிறது. புளி , முருங்கைக்காய், வெண்டை, கல்யாண பூசணி, மஞ்சள் பூசினி இவை எல்லாம் எங்களுக்கு இந்தியாவில் இருந்து வருவதில்லை. மாயன் civilization-தொன்மையானது. இந்தியர்கள் எதோ மஞ்சள் இந்தியாவில் மட்டும் தான் விளைகிறது என்று நினைத்துக் கொண்டு இருக்கிர்ர்றாக்கள். இங்குள்ள சில மிளகாய்கள் ஒன்று நம்மூர் பச்சை மிளாகாய் இருபதுக்கு சமம். இங்கு இதை கையால் கூட தொடமாட்ட்ர்கள்.

    நிறைய இயற்கை மூலிகைகள் --சந்தேகம் இல்லாமல் health supplements தான். ஏன் நானே கூட எடுத்துக் கொள்கிறேன். அப்படி ஒன்றை சாப்பிட்டு காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதையா நான் சிகரெட்டை நிருத்தினேன். அதன் மூலம் மட்டும் தான் நிறுத்த மு.டிந்தது என்று என்ன்னால் உறுதியாக கூற முடியாது அதை ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்படாததால் யாருக்கும் சொல்வது கிடையாது---அப்படி சொல்வது தவறு.

    வெறும் தண்ணி மட்டும் கொடுத்து நான் 100 பாம்புக்கடி கடித்தவ்ர்களில் 96 பேரைக் காப்பாற்றுவேன். எப்படி? மொத்தம் இந்தியாவில் இருக்கும் பாம்புகளில் நான்கு வைகை பாம்புகள் மட்டுமே விஷம் மீதி எல்லாம் ஒன்றும் செய்யாது.

    ஒரு வெறி நாய் கடிக்கவைத்து, நாகப் பாம்பு கடிக்கவைத்து ஒரு மனிதனை ஆங்கில மருந்து கொடுத்து காப்பாற்ற முடியும்;அதே சமயம் இயற்கை வைத்தியம், மூலிகையினால் காப்பாற்ற சொல்லுங்கள்---அவருக்கு நோபெல் பரிசு நிச்சயம்!

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. நன்றி நம்பள்கி தங்கள் கருத்திற்கு!! தங்கள் கருத்துக்களை ஆமோதிக்கின்றோம். ஆம்! இந்தியாவில் 4 வகை விஷப் பாம்புகள்தான்! அதில் viper இனம் வீரியன் மிகவும் விஷம் உள்ளது. பாம்புக் கடிக்கு "சிறியா நங்கை" எனும் மூலிகையை மலைப்பகுதிகளில் வாழ்பவர்கள் அதிகம் உபயோகப்படுத்தி பாம்பு விஷத்தை எடுக்கின்றனர். கீழே உள்ள லிங்கைப் படித்துப் பார்க்காலாம். நாய்கடிக்கும் இருப்பதாகத்தான் பதிவர் கரந்தை ஜெயகுமார் அவர்கள் சொல்லியிருப்பது போல நானும் வாசித்திருக்கின்றேன். ஆனால், அது நாய்கடியின் எந்த ஸ்டேஜில்? கடித்த உடனா? அல்லது கடித்து பல நாட்கள் ஆன பிறகா? என் அறிவுக்கு எட்டியவரையில் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இல்லை Document செய்யப்படவில்லையா?

      http://www.downtoearth.org.in/node/13447

      இதில் ஒரு விஷயம் நாம் எல்லோருமே யோசித்துப் பார்க்கலாம். நம்மூர் மூலிகைகளுக்கு மருத்துவ குணம் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. அவை எல்லாம் முன்னொரு காலத்தில் அதாவது மாசு படாத இயற்கைச் சூழல் இருந்த ஒரு காலத்தில் என்று சொல்லலாம். ஆனால், மாசுபடுத்தப் பட்ட இயற்கைச் சூழலில் இன்று வளரும் அந்த மூலிகைகளின் மருத்துவ குணம் அதே போன்று இருக்குமா? நாம் தினமும் வாங்கும் பொருட்கள், காய்கறிகள் எல்லாமே இனார்கானிக் ஆக இருக்கும் போது இந்த மூலிகைகளின் மருத்துவ குணம் தற்போதைய சூழலில் எப்படி இருக்கும்? என்பது என் கேள்வி!

      இதற்கு, யாராவது நல்ல மூலிகை மருத்துவர் இந்த இடுகையை வாசிக்க நேர்ந்தால் பதில் கூறினால் நன்றாக, உபயோகமாக இருக்கும்.

      சென்ற வருடம் WHO எல்லா மருந்துகளும் செடிகளிலிருந்துதான் தயாரிக்கப்படவேண்டும் என்றும், விலங்குகளின் பொருட்கள் இருக்கக் கூடாது என்றும் சொல்லியது.! அது மட்டுமல்ல பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

      அலோபதி மருத்துவம் வெளிப்படையாக உள்லது! மற்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் இன்னும் அத்தனை வெளிப்படையாகவோ, டாக்குமென்ட் செய்யப்படவோ இல்லை என்பதுதான். அதற்கான நிரூபணங்கள் நம்பள்கி கேட்பது போல் "அதைப் பாத்தியா" என்பதற்கான பதில் வெளிப்படையாக, ஆதாரங்களுடன் இல்லை. அதை அந்த மருத்துவர்கள், உண்மையான விவரங்களுடன் அதாவது எப்படி அவர்கள் நிவாரணம் அளித்தார்கள் என்பதை, அலொபதி மருத்துவம் விளக்குவது போல....அதாவது அந்த மூலிகை எப்படி உடலில் ரியாக்ட் செய்கிறது, பின்விளைவுகள், நிவாரண விதிமுறைகள், காம்பினேஷன், success stories, failure stories போன்ற புள்ளி விவரக் கணக்குடன், தகவல்களுடன் வெளியிட்டால் ஆராய்சிகளுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும்.

      //ஏன் நானே கூட எடுத்துக் கொள்கிறேன். அப்படி ஒன்றை சாப்பிட்டு காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதையா நான் சிகரெட்டை நிருத்தினேன். அதன் மூலம் மட்டும் தான் நிறுத்த மு.டிந்தது என்று என்ன்னால் உறுதியாக கூற முடியாது//

      சரிதான் நம்பள்கி! கருத்து....நீங்கள் அலொபதி மருந்து உட்கொண்டிருந்தாலும் சரி, மூலிகை மருந்துகள் உட்கொண்டிருந்தாலும் சரி, இது போன்ற habits நிற்க மருந்துகள் காரணமாக முடியாது. may be 1/4 %. இதில் முக்கியமான விஷயம் நமது மனதுதான். அது நினைத்தால் தான் எந்த மருந்து உட்கொண்டாலும், நமது habits ஐ மாற்றிக் கொள்ள முடியும்! அது குடியானாலும் ச்ரி, புகை ஆனாலும் சரி! நம்பள்கி இதற்கு பதில் அளிக்கலாம்!

      தங்கள் இந்த பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!!

      நீக்கு
    2. நம்பள்கி னீங்கள் சொல்லியிருந்த வழிமுறைகளில், para பிரித்து எழுதுவது இதில் கொஞ்சம் முயற்சி செய்திருக்கிறோம் என்று நினைக்கின்றோம்.! ஃபான்ட் பெரிது. ம்ம்ம்ம்பின்னர் நீங்கள் சொல்லியிருந்த Pros and cons, arguments கொடுத்து இறுதியில் எங்கள் கருத்தைக் கொடுத்து முடிக்க வேண்டும் என்று....அது இதில் முழுவதும் பூர்த்தி ஆகவில்லை என்றுதான் தோன்றுகின்றது...அடுத்த இடுகையில் இருந்து எழுத முயற்சிக்கின்றோம்.

      இதைப் பற்றிய தங்கள் கருத்தை ஒரு ஆசிரியராக, நீங்கள் சொன்னால் இன்னும் எங்களை மேம்படுத்த உதவியாக இருக்கும்!

      நீங்கள் சொல்லியிருந்த active voice, passive voice....Yes. American English and the British English நாங்கள் அமெரிக்காவில் இருந்த போது என் மகனுக்கு அதைத் தெளிவு படுத்த முதலில் நானுமே தடுமாறினேன்! அங்கு அங்கிலக் கட்டுரைகளில், Active voice மட்டுமே. Passive voice ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. பின்னர் அது பழகி விட்டது!

      நீங்கள் சொல்லியிருப்பது போல் TOEFL என்பது ஆங்கிலம் வாசிக்க முடிகிறதா, அவர்களது accent/english புரிந்து கொள்ள முடிகிறதா என்பதைக் கணக்கிடும் ஒரு பரீட்சைதான்! அதற்காக எனது மகன் தன்னைத் தயார் படுத்திக் கொள்ளும் போது அவன் முதலில் கொஞ்சம் கஷ்டப்படத்தான் செய்தான். அமெரிக்கன் ஆங்கிலம் என்பதால் அல்ல! அவனுக்கு expression defect இருந்ததால்மொழிகள் பிரச்சினையாகியதால்.

      பெரும்பாலும், Engineering மாணவர்கள் அங்கு MS க்கு முயற்சி செய்யும் போது அதிக TOEFL மார்க் உதவுவதாகச் சொன்னார்கள். நல்ல காலம் என் மகனிற்கு அவனது Program க்கு 70-80 இருந்தால் போதும் என்றார்கள்! - கீதா

      நீக்கு
    3. நீங்கள் எழுதுவது அறிவு பூர்வமான கட்டுரை! அதானால் இப்படி எழுதினால் நன்றகா இருக்கும்; பின்னூட்டம் குறைவாக வரும்; இரு பக்கம் விவாதிப்பதால்...

      நான் எழுதுவது ஜல்லி அடிப்பது; நன்றாக புரிய வைக்க வேண்டும் என்றால்...என் எழுத்து, நாங்க படிக்கும் போது இருக்கும் பல்லவன் பஸ் மாதிரி...ஸ்டாப்பில் நிற்காது; நின்றாலும் ஆளை ஏத்திக்கொள்ளமட்டார்கள். நேரமாகி விட்டால்..S.I.E.T college-ல் இருந்து சைதாபேட்டை போகாமல் கோட்டூர் பாலம் வழியா கூட அடையார் வருவான்; தேவைப்பட்டால் எதிர் பாதையிலும் செல்வான்; சிக்னலில் நிறுத்த மாட்டான்---சுருங்க சொன்னால் என் எழுத்து அப்படித்தான் இருக்கும்.

      உங்கள் எழுத்து அப்படி அல்ல.

      நீக்கு
    4. நன்றி நம்பள்கி! தங்கள் கருத்துக்களை அப்ளை செய்ய கண்டிப்பாக முனைவோம்!

      நன்பள்கி தங்கள் எழுத்துக்களை அப்படி எல்லாம் சொல்லிக் கொள்ளாதீர்கள்! ஜல்லி அடித்தாலும் சரி...அது குறு பார்த்து நன்றாக அடிக்கப்படுவதால்.......

      பல்லவன் எப்படிப் போனால் என்ன? அவன் அறிவுள்ளவனாக வருவதால் நிற்காமல் போனாலும், எதிர் திசையில் போனாலும், மடை திறந்த வெள்ளம் போல வந்தாலும் பரவாயில்லை! சிக்னலில் நிற்காவிட்டாலும் பரவாயில்லை....அவன் பின்னாடியே ரசித்துக் கொண்டே நாங்கள் ஓடி வந்து தொத்திக் கொள்ளுவோம் இந்த அறிவான பல்லவனை....

      மிக்க நன்றி நம்பள்கி!

      நீக்கு
  3. விசப் பாம்பு கடிபட்டவர்களை, வெறும் மிளகு, வேப்பிலை மற்றும் கார மிளகாய் கொடுத்தே குணப்படுத்துவதை கிராமங்களில் பார்த்திருக்கிறேன்... ஆனால் அந்த வைத்தியம் தலைமுறைகளுக்குக் கடத்தப் படாமலே மறைந்து போவதுதான் சோகம்...
    நல்ல பயனுள்ள இடுகை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நைனா!! தங்கள் கருத்திற்கு! புதிய தகவல்! தலைமுறைகளுக்குக் கடத்தப் படுதல் மட்டுமல்ல, ஒழுங்கான, முறையான ஆதாரங்களுடன், மருத்துவர்களின் பதிவுகள் இல்லாததாலும்....

      மிக்க நன்றி!!

      நீக்கு
  4. //ஒரு வெறி நாய் கடிக்கவைத்து, நாகப் பாம்பு கடிக்கவைத்து ஒரு மனிதனை ஆங்கில மருந்து கொடுத்து காப்பாற்ற முடியும்;அதே சமயம் இயற்கை வைத்தியம், மூலிகையினால் காப்பாற்ற சொல்லுங்கள்---அவருக்கு நோபெல் பரிசு நிச்சயம்!//
    மூலிகைகளினால் நிச்சயம் காப்பாற்ற முடியும் நண்பரே. ஆனால் அம் மருந்தைச் சொல்வதற்குத்தான் ஆள் இல்லை இப்போது.
    நாம்தான் அனைத்தையும் தொலைத்துவிட்டோமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! தாங்கள் சொல்லியது உண்மைதான் என்றாலும், அலோபதி மருத்துவத்தைப் போல நாட்டு வைத்தியம் பலதும் முறையான வெளிப்படுத்தல் இல்லாததால் தொலைந்து போனது! இப்போது இருக்கும் மூலிகை மருத்துவர்கள், நாட்டு வைத்தியர்கள் யாராவது நம்பள்கி சொல்லியிருபபது போல ஆதாரத்துடன் நிரூபித்தால் கண்டிப்பாக நோபல் பரிசு நிச்சயம்! யாரவது செய்வார்களா? நண்பரே! செய்தால் நமக்கு பல அரிய மருந்துகள் கிடைக்க வழி உண்டு!

      மிக்க நன்றி தங்கள் வ்ருகைக்கும், கருத்திற்கும்!!!

      நீக்கு
  5. நான் இப்போது கூட சிறு சிறு உடல்
    உபத்திரவங்களுக்கு மாத்திரைகளை விட
    பாட்டிவைத்திய முறையில்தான் தீர்த்துக் கொள்கிறேன்
    குறிப்பாக மாத்திரைகளில் நம்பிக்கை இழந்த பின்பு....
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரிதான்! நாங்களும்! ஒரு சில விஷயங்களுக்கு உதவத்தான் செய்கின்றன! மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

      நீக்கு
  6. ////நான் எப்பவும் கேப்பது, "நீ அதை பாத்தியா?" என்பது தான். நூற்றுக்கு நூறு வரும் பதில் நான் பார்க்க வில்லை என் உயிர் நண்பன் சொன்னான்; அவனைக் கேட்டல் அவன் சொன்னான் இவன் சொன்னான் அப்படி இப்படிஎன்று தான் பதில் தான் வரும்.///

    நம்பள்கி சொன்ன இந்த வரிகள்தான் நானும் நினைப்பது & கேட்பது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! மிகச் சரியே!

      அலோபதி மருத்துவம் வெளிப்படையாக உள்லது! மற்ற பாரம்பரிய மருத்துவ முறைகள் இன்னும் அத்தனை வெளிப்படையாகவோ, டாக்குமென்ட் செய்யப்படவோ இல்லை என்பதுதான். அதற்கான நிரூபணங்கள் நம்பள்கி கேட்பது போல் "அதைப் பாத்தியா" என்பதற்கான பதில் வெளிப்படையாக, ஆதாரங்களுடன் இல்லை. அதை அந்த மருத்துவர்கள், உண்மையான விவரங்களுடன் அதாவது எப்படி அவர்கள் நிவாரணம் அளித்தார்கள் என்பதை, அலொபதி மருத்துவம் விளக்குவது போல....அதாவது அந்த மூலிகை எப்படி உடலில் ரியாக்ட் செய்கிறது, பின்விளைவுகள், நிவாரண விதிமுறைகள், காம்பினேஷன், success stories, failure stories போன்ற புள்ளி விவரக் கணக்குடன், தகவல்களுடன் வெளியிட்டால் ஆராய்சிகளுக்கு மேலும் உதவிகரமாக இருக்கும்.

      மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

      நீக்கு

  7. உங்களின் எழுத்து திறமையில் எழுதும் பாணியில் எல்லாம் உண்மை என்பது போலவே தெரிகிறது. எளிமையான எழுத்து நடை மட்டுமல்ல தெளிவான அழகிய எழுத்து நடை உங்களிடம் இருக்கிறது. பாராட்டுக்கள் tha.ma 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி! உங்கள் பாராட்டிற்கும், ஊக்கத்திற்கும்!!

      நீக்கு
    2. ஹலோ! நீங்கள் உங்கள் வலைபூவில் நகைச்சுவையில் பின்னுகின்றீர்கள்! ஒவ்வொரு நாளும் புதிதாக....கற்பனையாக....உங்கள் மூளையில் வற்றாத கற்பனை ஊற்று வைத்துள்ளீர்கள்!!!!!! அதுவும் 'பூரிக்கட்டை' என்னும் ஒரு ஆயுதத்தால் மட்டுமே!! அதை விடவா, மதுரைத் தமிழா!!!

      நீக்கு
  8. இன்றைய அவசர உலகில் எல்லாமே அவசரம்... அதனால் நம் நாட்டு அரிய மருத்துவ முறைகளை முறையாக கற்றுக் கொள்ள யாருக்கும் அதிக ஆர்வம் இல்லை என்பது தான் உண்மை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக DD! தங்கள் கருத்தும் சரியாகத்தான் உள்ளது! கருத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  9. மூலிகை பற்றிய விழிப்புணர்வைத் தூண்டும் பதிவு.

    என் மைத்துனருக்குத் தலை முழுக்கப் ‘புழுவெட்டு’ [வட்ட வட்டமான வழுக்கை] பரவியது. ஆங்கில மருத்துவத்தால் பலன் கிடைக்காத நிலையில், ‘ஆடு தீண்டாப் பாலை’என்னும் மூலிகையை ஒருவர் பரிந்துரைத்தார். ஆறு மாதங்களுக்கு மேலாகத் தேய்த்து வந்தததில் மீண்டும் முடி முளைத்துவிட்டது.

    மலைப் பகுதிகளில் அரசாங்கமே மூலிகைப் பண்ணைகள் உருவாக்கலாம். தனியாரையும் மானியங்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல அனுபவம்! தங்கள் கருத்து மிகச் சரியே! அரசாங்கம் பல உதவிகள் செய்யலாம்தான்! முதலில் மேலே பின்னூட்டங்களில் நாங்கள் சொல்லியிருப்பது போல நம் மூலிகை மருத்துவர்கள் செய்ய வேண்டியது வெளிப்படியயாக வெளியிடுவது...கட்டுரைப் பேப்பர்கள், அதுவும் இந்திய ஜர்னல்களில் அல்ல சர்வதேச ஜர்னல்களில்! செய்தால் பல விஷயங்கள் தெளிவாகும்!!

      தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!!!

      நீக்கு
  10. உங்கள் நண்பர் என்பதால். அந்த டாக்டர் கொடுத்த சீட்டுடன், அதே ENT டாக்டரிடம் காட்டுங்கள்; இதை செய்து அந்த டாகடர் என்ன சொல்கிறார். என்று தெரிவது எல்லோருக்கும் நல்லது/ மேலும் இந்த பாம்ப் விஷங்கள் எப்படி செயபடுகிர்து என்று அறிந்து கொள்வது அவசியம். ரேபிஸ் வாச்க்ஸீன் அந்த வைரஸ் மூளையில் பரவாமல் தடுக்கிறது. This is an ocean. நீங்கள் சொன்ன லிங்கை பார்த்தேன். அது ஒரு opinion based கட்டுரை. ஏன் ஒரு மிருகத்திற்கு கொடுத்து நிரூபிக்கலாமே!
    இதைப்பற்றி நான் ஒரு பதிவு போடுகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக காட்டிக் கேட்கச் சொல்கிறேன்! கேட்டு அதை இங்கும் எழுதுகின்றோம்!

      பாம்பின் விஷம்....சரியே எப்படி என்று அறிய வேண்டும்! நம்பள்கி விக்கியில் viper விஷம் எப்படிச் செயல்படுகிறது என்று இருக்கிறது!

      http://en.wikipedia.org/wiki/Viperidae நீங்கள் பார்த்திருப்பீர்கள்!

      இந்தச் சிறியா நங்கை எப்படி விஷத்தை முறிக்கின்றது, டோசேஜ் இதெல்லாம் முறையாக அறிய வேண்டுமே!

      இந்தச் சிறியா நங்கை பற்றி நான் மகனின்VET படிப்பிற்காகp பாண்டிச்சேரியில் thangi இருந்த போது வீட்டில் காடு போல வளர்ந்து இருந்ததால் அப்போது அங்குள்ள மக்களிடம் இருந்து கற்றது! அதை கூகுள் செய்யும் போது இந்த லிங்க் அப்போதே படித்து அறிந்தது!.

      ரேபீஸ் வாக்சின் அந்த வைரஸ் மூளையில் பரவாமல் தடுக்கிறது! ஆமாம். ஆனால் கடிக்குப் பிறகும் கூட அந்த வைரஸ் மூளைக்குப் பரவ பல வருடங்கள் கூட ஆகின்றதே!. ஒருவர் 7 வருடங்களுக்குப் பிறகு ரேபிஸ் தாக்கி இறந்தார் இங்கு சென்னையில். இங்கு human டாக்டர்கள், vaccinated நாய் கடித்தால் ரேபிஸ் வாக்சின் அவசியமில்லை என்கின்றனர். அது சரியாக இருந்தாலும், வெட்ஸ் அட்லீஸ்ட் 3 ஷாட்ஸ் எடுக்கணும் என்று அறிவுறுத்துகின்றனர் ஏனென்றால் WHO recommends that!

      உங்கள் இடுகையை எதிர்பார்க்கிறோம்!

      நன்றி நம்பள்கி!

      நீக்கு
  11. அனைவருக்கும் சென்று சேர வேண்டிய நல்ல பதிவு ,தமிழ் மண மகுடம் சூட்டி விட்டேன் !
    +7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைப்பாகையை மகுடம் ஆக்கிவிட்டீர்கள் என்று சொல்லுங்கள் ஜி!! மிக்க நன்றி பகவான் ஜி!!!! தாங்கள் மகுடம் ஏற்றியதற்கு!!!

      நீக்கு
    2. பொருத்தமாய் சொன்னீர்கள் !
      காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்கு !

      நீக்கு
    3. நாங்கள் கொடுத்த பதில் "ஜோக்'காளியைக் கவர்ந்திருப்பதில் சந்தோஷம்! மிக்க நன்றி !எங்கள் அடுத்த பதிவு இன்று இரவு ஏற்றம் செய்யப்படும்.

      நான் துளசியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். சென்றவாரம். அதனால் தான் பதிவும் இல்லை. பின்னூட்டங்களும் இல்லை.பின்னர் இப்போது கோயம்பத்தூரில் . அதன் காரணம் எங்கள் இன்றைய இடுகையிலிருந்து தெரிய வரும். இதோ இப்போது கூட நெட் சென்டரில் இருந்து தான் உங்களுக்குப் பதில். வலைப்பூவில் வாராதது எங்களுக்கே கஷ்டமாகிவிட்டது ஜி.! நம் வலை நண்பர்களை எல்லாம் காணாமல்! "ஜோக்'காளியை வாசித்து சிரிக்காமல் ..... மிக்க நன்றி ! சந்தோஷம் எங்கள் இடுகையை எதிர்பார்த்து இருப்பதற்கு!

      நீக்கு
  12. வணக்கம்
    நண்பரே..

    நல்ல கருத்தை சொல்லியுள்ளிர்கள் பதிவில்... ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்தவம் சிறந்தது... ஏன் என்றால் பக்க விளைவுகள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் உதாரணமா. நமது வீடுகளில் கூட பாட்டிவைத்திய முறைதான் செய்கிறார்கள் ...
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    நம்பள்கி சொல்லுகிறார்---
    ஒரு வெறி நாய் கடிக்கவைத்து, நாகப் பாம்பு கடிக்கவைத்து ஒரு மனிதனை ஆங்கில மருந்து கொடுத்து காப்பாற்ற முடியும்;அதே சமயம் இயற்கை வைத்தியம், மூலிகையினால் காப்பாற்ற சொல்லுங்கள்---அவருக்கு நோபெல் பரிசு நிச்சயம்!...................

    பதில்-
    நிச்சயம் காப்பாற்றமுடியும்.. ஏன் என்றால் நான் நேரில் பார்த்தேன் இது உண்மை.. எங்கள் ஊரில் பாம்பு கடித்தால் விசவைத்தியரைத்தாண் நாடுவார்கள். ஒருபெடியனுக்கு..வயது 15 பாடசாலையில் படிக்கும் வயது. அவன் மாலையில் விளையாடும் போது (இரத்த புடையன் பாம்பு கடித்தது அவனது மூக்கு வாய் இவைகளில் இரத்தம் வடிந்தது கண்கள் எல்லாம் சிகப்பாகியது...கண் மூடியது சளி தொண்டையை இறுக்கியது. எல்லோரும் அழுதார்கள்... இறந்து விட்டான் என்று விசவைத்தியர். கண்ணுக்கு (கலிங்கம் என்று சொல்லப்படும் ஒரு மூலிகை சார் விட்டார் பின்பு மூக்கு பகுதிக்கும் மூலிகை சார் விட்டார் தொண்டையை இறுக்கி இருந்த சளி வெளியில் வந்தது கொஞ்சம் கொஞ்சமாக. மெதுவாக கண்ணும் திறந்தான்... செய்யவேண்டிய வைத்தியத்தை செய்தார் விஷவைத்தியர்... பெடியன் உயிர்தப்பினான்.ஆங்கில மருத்துவ முறையை விட மூலிகை மருத்தவம் சிறந்தது...
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    இப்படி பாம்பு கடித்த பெடியனை வைத்திய சாலைக்கு சென்றால் கடித்த பாம்பு எங்கே கொண்டுவாருங்கள் என்று உறவினர் இடம் ஆயிரத்தி எட்டு கேள்வி கேட்டு சீரலிப்பார்கள்...ஆங்கில மருத்தவம் மூலம் குணம்மடைந்தாலும் பாம்பின் விசத்தன்மையால் சில காலத்தில் சில நோய்கள் வரும்.. ஆனால் மூலிகை மருந்துவத்தில் அப்படி தன்மை இல்லை வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றது போல.... பவர்புள்
    (விஷவைத்திய மறை எனக்கும் தெரியும்.. அது படித்தேன்)விஷத்தை கட்டுப்படுத்தஎன்னும் எவ்வளவு மூலிகை யுள்ளது.
    பாம்பு கடித்து விட்டதாக விஷவைத்தியரை அழைக்கச் செல்லும் நபரின் நடத்தை கோலம் அவர் சொல்லும் விதம் வைத்த என்ன பாம்பு கடித்தது. என்றும் பாம்பு கடிவாங்கியவர் உயிர் தப்புவரா அல்லத தப்பமாட்டாரா என்று சொல்லும் பக்குவம் மூலிகைவைத்தியருக்கு உண்டு....(இது தனிச்சிறப்பு என்றுதான் சொல்லவேண்டும்)
    நண்பரே எழுதினால் என்னும் விரிவாக எழுதிக்கொண்டு போகலாம்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அருமையான தகவல் தந்துள்ளீர்கள் நண்பரே! நண்பரே னீங்கள் விஷவைத்திய முறை கற்றிருக்கின்றீர்கள் என்றால் ஏன் அதைப் பற்றி உங்கள் வலைபூவில் எழுத்க் கூடாது?! தயவு செய்து எழுதுங்கள்! எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும். நம்பள்கியும் மருத்துவர். (அலோபதி). அவரும் அதைப் படிக்க நேர்ந்தால் கண்டிப்பாக பின்னூட்டம் இடுவார்! ஒரு நல்ல ஆரோக்கியமான விவாதத்திற்கு அது வழி வகுக்கும் அல்லாது தகவல்கள் வாசிக்கும் எல்லோரையும் சென்றடையுமே! யோசியுங்கள்! ஏனென்றால் இது போன்ற வைத்தியங்கள், புள்ளி விவரங்களுடனும், எப்படி அவை நிவாரணம் அளிக்கின்றன என்ற தகவல்களுடனும் ஒழுங்கான, நேர்மையான முறையில், இதுவரை வெள்யிடப்படாததால், வெளியிடப்பட்டால் மிக உபயோகமாக,சிந்திக்க வைப்பதாக இருக்கும்! யோசியுங்கள்!

      தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

      நீக்கு
  13. வணக்கம்
    நண்பரே

    நான் மூலிகையை சொல்ல விருமப வில்லை அந்த மூலிகையின் வேர் சப்பி சாப்பிட கொடுப்பார்கள் அதன் வேர்
    இனித்தால்- ஒருவகை பாம்பு.
    கசக்கினால் ஒருவகைப்பாம்பு.
    உகைத்தால்-ஒருவகைப்பாம்பு.
    புளித்தால்-ஒருவகைப்பாம்பு.
    இவைகளில் ஒன்றும் இல்லை என்றால்-வேறுவகையான து.

    த.ம9வது வாக்கு
    இப்படியாக அந்த தவரத்தின் வேர் சொல்லும்.. என்னபாம்பு கடித்தது என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ரூபன் அவர்களுக்கு! தங்கள் தகவல் மிகவும் வியப்பாக உள்ளது! இனித்தால் ஒரு வகை....கசந்தால் ஒரு வகை.....பயனுள்ள தகவல்..ஆனால், மூலிகையின் பெயர்?

      சரி ஏன் நண்பரே மூலிகை பெயர் சொல்ல விரும்ப வில்லை? இதுதான் பல நாட்டு வைத்தியர்களும் செய்யும் விஷயம்! இப்படி வெளியிடப்படாமல் போவதால்தானே மூலிகை மருத்துவம் அடுத்த தலை முறைகளுக்கு அறியப்படாமல் போகின்றது! சரி அது குடும்பத்தின் ரகசியமாக, அவர்கள் தலைமுறைக்கு மட்டும்தான் என்றாலும், அவர்கள் வீட்டுத் அடுத்த தலைமுறை இதைக் கற்பதில் ஆர்வம் இல்லாமல் போனால் என்ன செய்வது? அந்த ரகசியங்கள் அந்த வைத்தியரோடு அழிந்து தானே போகும்? என்ன சொல்கின்றீர்கள் நண்பரே!

      எனவே தாங்கள் தயவு செய்து தாங்கள் கற்றதை பதியிங்கள் உங்கள் வலைப்பூவில்!

      நீக்கு
  14. நன்றி! தங்கள் வருகைக்கும் , கருத்திற்கும்!

    பதிலளிநீக்கு
  15. ஆனால் சித்த வைத்தியர்கள் கூட தங்களை தங்கள் திறமைகளை வெளியே சொல்லிக் கொள்ள மறுகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் (தற்போதைய சூழலில்) கவனத்தில் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  16. எப்படித் தவறவிட்டேன் இந்தப் பதிவை- என்று தெரியவில்லை. இன்றுதான் பார்க்கிறேன். மன்னிக்கவும். பயனுள்ள விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பழனியில் இருக்கும் பிரபல சித்த வைத்தியரிடம் மூலிகை மருந்து பெற்று தடவிக் கொண்டதில் தான் எனக்கு ஆள்காட்டி விரலில் இருந்த WARTS எண்ணும் மறு நிரந்தரமாக மறைந்தது. அதற்குமுன், அல்லோபதியில், அந்த மருவை மின்சாரம் கொண்டு கறுக்கி, அதன் மேல் ஒரு களிம்பு தடவச் சொல்வார்கள். ஒரு மாதத்திற்குப் பின் மீண்டும் அதே மறு முளைத்து எழுந்துவிடும். மறுபடியும் மின்சாரம். களிம்பு. மறுபடியும் முளைத்தெழுதல். இப்படியே ஆறு மாதங்கள் அவதிப்பட்ட பின் ஒருநாள் தற்செயலாகக் கோவை சென்றிருந்தபொழுது பழனி ஆனந்தா வைத்தியசாலை டாக்டர் சங்கரநாராயணன் (இப்போது அமரர்) அவர்களை ஒரு ஓட்டல் முகாமில் சந்தித்தேன். நாளே ரூபாய்க்கு ஒரு மூலிகை களிம்பு கொடுத்தார். பத்து நாட்கள் தடவினேன். இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அந்தப் பரு திரும்பி வரவில்லை. அந்த வைத்தியசாலை இன்னும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. மிக்க நன்றி சார்! லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாகத்தான் வந்துள்ளீர்கள்! பின்னே, இப்படி ஒரு நல்ல இந்த இடுகைக்கு ஒத்துப் போவது போல ஒரு அனுபவத்துடன் வந்துளளீர்களே! அதைவிட வேறு என்ன வேண்டும் சார்!

    மிக்க நன்றி! தங்கள் பதிலை எங்கல் இடுகையில் இணைத்துள்ளோம்!

    பதிலளிநீக்கு
  18. இதில் ஒரு விஷயம் நாம் எல்லோருமே யோசித்துப் பார்க்கலாம். நம்மூர் மூலிகைகளுக்கு மருத்துவ குணம் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை. அவை எல்லாம் முன்னொரு காலத்தில்
    அதாவது மாசு படாத இயற்கைச் சூழல் இருந்த ஒரு காலத்தில் என்று சொல்லலாம். ஆனால், மாசுபடுத்தப் பட்ட இயற்கைச் சூழலில் இன்று வளரும் அந்த மூலிகைகளின் மருத்துவ
    குணம் அதே போன்று இருக்குமா? நாம் தினமும் வாங்கும் பொருட்கள், காய்கறிகள் எல்லாமே இனார்கானிக் ஆக இருக்கும் போது இந்த மூலிகைகளின் மருத்துவ குணம் தற்போதைய
    சூழலில் எப்படி இருக்கும்? என்பது என் கேள்வி////

    sariyaaka yosithirukkurirkal.

    aangila maruthuvam pakka vilaivukal athikam aanal sikkiram gunam aakalam.
    athe pola nirantharamaka sariyaakumaa oru doubtthaan.

    ennai poruthavaraiyil aangila maruthuvam 50 % and iyarkai mulikai vaithiyam 50% valarnthaal
    nallathu ninaikkuren.

    nalla katturai sir.

    பதிலளிநீக்கு