கடந்த ஞாயிறு 4.18 pm முதல் 4.36pm வரையிலான நேரம் இந்தியாவின் பொன்னான நேரம். கடந்த 3 முறை முயன்ற போதும் நேர்ந்தது போல்
அசம்பாவிதங்கள் ஏதும் நிகழக் கூடாது என்று இந்தியர்கள் பிரார்த்தித்த நேரம். EDUSAT ற்குப் பதிலாக விண்வெளிக்கு விடப்பட்ட GSAT – 14 செயற்கைக் கோளை, GSLV D 5 ராக்கேட் சுமந்து செல்கிறதே என்ற ஆதங்கம் மட்டும் அல்ல, வெற்றி கண்டால் இந்தியாவிலேயே
தயாரிக்கப்பட்ட க்ரையோஜெனிக்
டெக்னாலஜி மூலம், விண்வெளிஏவுகலங்களை விடும் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான்,
யூரோப்பியன் ஸ்பேஸ் ஏஜன்ஸி மற்றும் சீனா போன்ற 5 நாடுகளுக்குப் பின் 6 ஆவது நாடாக
இந்தியா அறியப்படும் என்ற எதிர்பார்ப்பும் கூடத்தான். குறைவான பாரமும், கூடுதலான தள்ளும் சக்தியையும்
அளிக்கும் வித்தைதான் க்ரையோஜெனிக் டெக்னாலஜி. -253 டிகிரி செல்ஷியஸில் ஹைட்ரஜனும்,
-183 டிகிரி செல்ஷியஸில் ஆக்சிஜனும், திரவ ரூபத்தில் ஆக்கப்பட்டுதான் இதற்காக
உபயோகப்படுத்தப்படுகின்றன. ஏவுகலம் புறப்படுவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்பு மட்டுமே
இத்திரவங்கள் ஏவுகலத்தில் நிறைக்கப்பட வேண்டும். முன்பு நேர்ந்த தோல்விகளுக்குக்
காரணமான எல்லாக் குறைபாடுகளையும் நீக்கி, மிகவும் கவனமாக நம் விஞ்ஞானிகள் திருவனந்தபுரம்
VSSC
யிலும், வலியமலை LPSC யிலும், மகேந்திரகிரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிலும்
செயல்பட்டதுதான் வெற்றிக்கு உறுதுணையானது. அவர்கள் சிந்திய வியர்வை வீண்
போகவில்லை. அவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு இந்தியனின் உளமார்ந்த பாராட்டுக்கள்.
1990 ல் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யாவின் உதவியுடன் க்ரையோஜெனிக் எஞ்சின்
உபயோகித்து ஏவுகலங்கள் விடுவதை தடை செய்வதில் வெற்றி கண்டபோது இந்திய விஞ்ஞானிகள் “Where there is a
will there is a way” என முயற்சியை மேற்கொண்டார்கள். மூன்று தோல்விகளைக்
கண்டும் அவர்கள் துவளாமல், 4 ஆம் முறை வெற்றிக் கொடி நாட்டி அனைவரது பாராட்டுக்களையும்
பெற்றிருக்கிறார்கள். இதன் வாயிலாக 4000 கிலோ வரையுள்ள ஸாட்டில்லைட்டுகளை
விண்வெளிப்பாதையில் கொண்டு செல்லும் திறமையை நம் ISRO பெற்றிருக்கிறது. இனி, ISRO க்கு விண்வெளிக்கு மனினை அனுப்புவதும் எளிதே! இந்த
சாதனைக்கு உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுமே பாராட்டுக்குறியவர்களே! ஊழல்கள், விலைவாசி
உயர்வு, பெண்களுக்கு எதிரே நடக்கும் கொடுமைகள் இவற்றை எல்லாம் நினைத்து வருந்தும்
இந்திய மக்களுக்கு இது போன்ற சம்பவங்கள் பாலைவனச் சோலை தரும் சுகம் தரத்தான்
செய்கிறது.!!
அண்ணே, சாரி, தம்பி!
பதிலளிநீக்குமுத்ல் போனி என்னோடது!
தமிழ்மணம் +1
பிறகு வருகிறேன்!
முதல் போனிக்கு நன்றி! வாருங்கள் நம்பள்கி! உங்கள் வருகை எப்போதுமே தனிதான். நீங்கள் சிறிய பதில்இட்டாலும் அதிலும் சற்று வித்தியாசம், ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது!
நீக்குதம்பி மட்டும் இல்லை நம்பள்கி....கூட இன்னொருவரும் இருக்கிறார்......!!!
சாதனை செய்த விஞ்ஞனிகளுக்கும் மட்டுமல்ல அந்த சாதனையை பதிவாக்கி தந்த உங்களையும் பாராட்டுகிறேன், கண்டதை எல்லாம் ஷேர் செய்து பாராட்டி பெருமை கொள்ளும் நம் சமுதாயம் இந்த மாதிரி செய்திக்ளை வெளியிட்டு பெருமை கொள்ள தவறுகிறதே tha.ma 2
பதிலளிநீக்குமிக்க நன்றி! மதுரை தமிழன்!!! உங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!! கடந்த சில நாட்களாக நானும் என் தோழியும் வலைக்கு வந்து வாசிக்க முடியவில்லை! வருகிறோம்!
நீக்குஎத்தனை பெரிய சாதனை என்பதை
பதிலளிநீக்குபடிப்பவர்கள் அறியும் வண்ணம்
அருமையாக விரிவாகப் பதிவிட்டமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக மிக நன்றி! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!! எப்போதும் போல் தவறாது தரும் உங்கள் ஊக்கத்திற்கும்!
நீக்குtha.ma 3
பதிலளிநீக்குநன்றி! கடந்த சில நாட்களாக இருவரும் வலைப்பக்கம் வந்து வாசிக்க முடியாமல் ஆகிவிட்டது. வருகின்றோம்.!!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குநண்பரே...
இந்த செய்தியை கேட்கும் போது மனதுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது... நண்பரே... அழகாகதொகுத்து... எழுதியுள்ளீர்கள் மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்...
புதியபதிவாக.டெங்குவின் கோரவத்தாண்டவம்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி நண்பரே!! வருகைக்கும், கருத்திற்கும்.
நீக்குவருகிறோம் உங்கள் பத்வை வாசிக்க...கடந்த சில நாட்களாக எங்கள் இருவருக்குமே வர முடியாமல் போனது! டெங்குவின் கோரகத்தாண்டவம் பற்றி அறிய வருகின்றோம்!!
வெரி குட்டுபா...
பதிலளிநீக்குஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
வாங்க நைனா!! டேங்க்ஸ்பா! அப்பால வர்ரோம்! எய்திருக்கிறத வாசிக்க! இன்னாபா கொஞ்சநாளா மெர்ஸலாகிப் போச்சுபா!!! அதான்.....நன்றிபா!!!
நீக்குசாதனை தொடர வேண்டும்...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! DD!!!
நீக்குசாதனை மனிதர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அவர்களைப் பற்றிய தகவலை உங்கள் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி! தங்கல் வருகைக்கும், கருத்தைப் பகிர்ந்ததற்கும், பாராட்டிற்கும்!
நீக்குசினிமா செய்திகளை எழுதுவதே இன்றைய தமிழ் பிளாக்கர்களின் பணி என பலர் இங்கு புறப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது மிகவும் தேவையான அனைவரும் சற்று உற்று நோக்க வேண்டிய ஒரு நிகழ்வை தொட்டு அதையும் தரமான நடையில் அளித்ததற்கு நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும்!! பாராட்டிற்கும் சேர்த்துத்தான்!
பதிலளிநீக்கு