திங்கள், 22 டிசம்பர், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி 2025 பரிசு பெற்ற கதைகளைப் பற்றி...பகுதி - 2 - 2/7

=======>முதல் பகுதி<=======

சென்ற வருடம் பரிசு பெற்றக் கதைகளைப் பற்றி என் பார்வையில் சொல்லியிருந்தேன்.  இந்த வருடம் போட்டியில் நானும் கலந்து கொண்டு பரிசு பெற்றதால் சற்று கவனத்தோடுதான் கதைத்துக் கொண்டுவருகிறேன். நான் பெரிய எழுத்தாளர் அல்ல. ஏதேனும் குறை இருந்தால்,  ஆசிரியர்கள் தயவாய் சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்.  நட்புகளும் சுட்டிக் காட்டலாம். என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்ற முன்னுரையுடன் அடுத்த பகுதி 2/7

வெள்ளி, 19 டிசம்பர், 2025

தலக்காடு - 3 - பாடலேஸ்வரா / பாதாளீஸ்வரர் / வாசுகீஸ்வரர் கோவில்

முந்தைய பதிவில் சொல்லியிருந்தேன் இல்லையா? தலக்காடு கோவில்கள் காவிரி நதிக்கரையில் மணல் மூடி புதைந்து கிடந்தவற்றை மீட்டெடுத்தனர் என்று அப்படியான கோவில்களில் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்களில் ஒன்றான பாதாளே/ளீஸ்வரர் கோயிலைச் சென்றடைந்தோம் என்று சொல்லியிருந்தேன். இப்ப அந்தக் கோவிலைப் பற்றி..... 

புதன், 17 டிசம்பர், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி 2025 பரிசு பெற்ற கதைகளைப் பற்றி...பகுதி - 1 - 1/7

குவிகம் பதிப்பகம் -புத்தகத்தின் விலை ரூ 350. புத்தகம் வாங்க விரும்புவோர்  'குவிகம்' கிருபானந்தன் அவர்களை 9791069435 இல் தொடர்பு கொள்ளவும்.

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி 2025ல் பரிசு பெற்ற கதைகளை, "அன்னை ஸ்வர்ணாம்பாள் இலக்கிய விருதுகள் 2025 பரிசுக் கதைகள்" என்று முழுத்தொகுப்பாக நம் இராய செல்லப்பா சார் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். பரிசு பெற்றவர்களுக்கு மூன்று பிரதிகள் வழங்கப்பட்டதையும் சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். 

சென்ற வருடம் பரிசு பெற்றக் கதைகளைப் பற்றி என் பார்வையில் சொல்லியிருந்தேன்.  இந்த வருடம் போட்டியில் நானும் கலந்து கொண்டு பரிசு பெற்றதால் சற்று கவனத்தோடு கதைத்திருக்கிறேன். 

புதன், 10 டிசம்பர், 2025

தலக்காடு - 2 - பாடலேஸ்வரா / பாதாளீஸ்வரர் / வாசுகீஸ்வரர் கோவில் நோக்கி

 தலக்காடு - 1 ன் தொடர்ச்சி.

மைசூர் உடையார் வம்சத்தின் ராணியான அலமேலு, சில வரலாற்றுச் சம்பவங்களால் - அப்படியான ஒரு சம்பவத்தில் தன் கணவரை இழந்ததால், சோழர்களுக்கும், உடையார்களின் வம்சத்திற்கும் சாபம் இட்டதாகக் கூறப்படுகிறது.

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி - 2025

எழுத்தாளர் இராய செல்லப்பா சார் குடும்பத்தினர் நடத்தும் அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைப் போட்டி- 2025 இந்த வருடமும் மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. தன் அன்னையின் நினைவில் தொடங்கி, எழுத்தாளர்களின் படைப்பாற்றலைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் எளிய முயற்சியாக சென்ற வருடத்திலிருந்து நடத்திவருகிறார், திரு செல்லப்பா சார்.