நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல வசனம், நல்ல நடிப்பு, நல்ல ஒலி அமைப்பு மற்றும் நல்ல ஒளி அமைப்பு. இவை எல்லாம் அமையப்பெற்றால் நல்ல திரைப்படம் உருவாகும். இத்தனை 'நல்ல'துடன் நல்ல ஒரு கருத்தையும் நம்மை சிந்திக்கவைக்கும்படி சொன்னால் அந்தப்படம் எல்லோராலும் எல்லாக்காலத்திலும் பாராட்டப்படும் ஒன்றாகிவிடும். அந்தவிதத்தில் பார்க்கும் போது 'சூக்ஷ்மதர்சினி' எனும் மலையாளப் படம் அப்படி எல்லாவிதத்திலும் ஒரு நல்ல படம்தான். அதைப் பற்றித்தான் இன்று பார்க்கவிருக்கிறோம்.
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
ஞாயிறு, 1 டிசம்பர், 2024
திங்கள், 18 மார்ச், 2024
ஜெயமோகனும் மஞ்ஞும்மல் பாய்ஸும்
இதைப் பற்றி ஒன்றும் சொல்லாமலிருக்க என்னால் முடிந்தவரை தாக்குப் பிடித்தேன். இனி முடியாது என்பதால்தான் இந்தக் கருத்து.
செவ்வாய், 12 மார்ச், 2024
துபாய் நாட்கள் – ஐந்தாம் நாள் – 30-10-2023 மற்றும் துபாய்க்கு விடை சொல்லும் நாள் – 31-10-2023
முந்தைய பதிவுகளை வாசித்தவர்கள், கருத்திட்ட அனைத்து நட்புகளுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. என் துபாய் பயணத்தின் ஐந்தாவது நாள் சென்ற இடங்கள் மற்றும் கடைசி நாள்.
துபாய்
நாட்கள் – ஐந்தாம் நாள் – 30-10-2023
அன்று நாங்கள் தனியாக மெட்ரோ மற்றும் பஸ் ஏறி மிராக்கிள் கார்டன் - Miracle Garden – அதிசயப் பூங்கா சென்று பார்க்க வேண்டும். காலை வழக்கம் போல் Baniyas Square லிருந்து மெட்ரோ ரயிலில் ஏறி Mall of Emirates – மால் ஆஃப் எமிரெட்ஸ் நிலையத்திற்குப் பயணித்தோம். போகும் வழியில் துபாய் ஃப்ரேமை – Dubai Frame ஐ மிகவும் அருகில் பார்த்தோம். 1 (காணொளியில்)
வெள்ளி, 8 மார்ச், 2024
சிவராத்திரி
ஜோதிர் லிங்கமாய் பிர்பஞ்சத்தில் எங்கும் சிவமயமாகவும்
சிவசக்தியாகவும் நிற்கும் பரம் பொருளுக்கான ஒரு ராத்திரி. மாதமிருமுறை அமாவாசைக்கும்
பௌர்ணமிக்கும் முன் வந்து போகும் பிரதோஷம் விரதம் ஆகின்ற சிவராத்திரி வருடத்தில் மாசி
மாதம் வரும் அமாவாசைக்கு முன் வரும் போது மகா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
முனிகளும் யோகிகளும் பிறப்பறுத்து மோட்சம்
பெற அந்நாளை உபயோகிக்கும் போது, சாதாரண மக்கள் வருடத்தில் அந்த ஒரு நாளை அவர்கள் வழிபடும்
இறையின் திருநாமத்தை, நமசிவாய மந்திரத்தை இரவெல்லாம் உச்சரித்து அவர்களுக்குள் உறையும்
ஆத்மலிங்கத்துடனான தொடர்பை திடப்படுத்தும் நாள் என்று சொல்லலாம். எல்லோரையும் அதில்
பக்தியுடன் பங்கெடுக்கச் செய்ய அந்நாள் சிவபெருமான் பார்வதி தேவியை மணந்த தினம் என்றும்
மனித குலத்தைக் காக்க சிவபெருமான் ஆலகால விஷமருந்தி நீலகண்டனாய் மாறிய தினமென்றும்
சொல்லவும் நம்பவும்படுகிறது.
எல்லா மதங்களிலும் இதுபோன்ற பல சம்பவங்களின்
அடிப்படையில்தான் அவரவர்களது பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதுபோல் இந்து மதத்தில்
சைவ நெறியை பின்பற்றுபவர்களின் நம்பிக்கை இது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் கொண்டாடும்
சிவராத்திரி நாட்களில் பல அதிசய சம்பவங்களும் நிகழ்ந்து இருக்கின்றன. அவையெல்லாம் அடுத்த
தலைமுறைக்கு இறை உணர்வை வளர்க்க உதவியும் இருக்கிறன.
ஒரு வேடன் புலியிடமிருந்து தப்ப ஒரு வில்வ
மரமேறி மரத்திலேயே உறங்கி, விழாமல் இருக்க வில்வ இலைகளைப் பறித்து இறைவனின் நாமம் சொல்லி
ஒரு கல்லில் இட அக்கல் சிவலிங்கமாய் மாறி அங்கு இறைவன் தோன்றி அவனுக்கு மோட்சம் அளித்த
கதை.
இது போன்ற சம்பவங்களில் எல்லாம் வாய்மொழியாய்
பல தலைமுறையைக் கடக்கும் போது அவற்றில் ஏற்படும் கோர்த்தல், களைதல் மற்றும் மாற்றங்களைத்
தவிர்க்க முடியாது.
அப்படி கேரளத்தில் 135 ஆண்டுகளுக்கு முன்னும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதைப்பற்றிதான் நான் இங்கு சொல்ல இருக்கிறேன்.
1888 ஆம் ஆண்டு ஒரு சிவராத்திரி நாள். இடம்
நெய்யாற்றின் கரை அருகே உள்ள அருவிப்புரம். அன்றெல்லாம் பிற்பட்ட மற்றும் தாழ்ந்த இனமென்று
முத்திரை குத்தப்பட்டவர்களுக்குக் கோவிலுக்குள் மட்டுமல்ல அதன் அருகே கூடப் போகக்கூடாது
எனும் நிலை. அவர்களுக்கு என ஒரு கோவில் கட்டி வழிபட வசதியும் இல்லை. அனுமதியும் இல்லை.
அன்றைய இஸ்லாம் மற்றும் கிருத்தவர்களின் நம்பிக்கையை
பின்பற்றி பலரும் மதம் மாறி இறையருள் பெற்றிருந்தாலும் பலருக்கும் அப்படிச் செய்யத்
தயக்கம். பயம். வைகுண்ட சுவாமிகள், அய்யாவு சுவாமிகள் போன்றவர்கள் தந்த ஊக்கம், மதம்
மாறாமலேயே மூதாதையர்கள் வழிபட்ட முறையில் நாமும் வழிபடலாம் என்ற சிந்தை வளர உதவியது.
மருத்துவா மலையில் தியானத்திலிருந்து இறையை உணர்ந்த ஸ்ரீ நாராயண குரு எனும் இளம் சன்னியாசியிடம்
முறையிட்டதன் பலனாக அவர் ஆலோசனைப்படி நெய்யாற்றின் கரையில் நமச்சிவாய மந்திரம் சொல்லி
கூடியிருக்கும் மக்கள்.
இரவு 12 மணி அளவில் தன் தியானத்தை முடித்து
ஆசிரமத்திற்கு வெளியே வந்த குரு, ஆற்றின் ஆழமான சங்கரன்குழியில் முங்கி நீண்ட நேரத்திற்குப்
பின் ஒரு கல்லுடன் வருகிறார். தன் மார்போடு பிடித்தபடி நீண்ட மூன்று மணி நேர தியானம்,
நின்றபடி செய்கிறார். கண்களில் இருந்து வழியும் கண்ணீரால் அபிஷேகம் செய்யப்பட்ட கல்,
வேடன் வில்வ இலைகளால் பூஜித்த கல் சிவலிங்கமானது போல், அதுவும் சிவ சைதன்யமுள்ள சிவலிங்கம்
ஆகிறது.
பரம்பொருளான ஜோதிர்லிங்கமும் ஆத்ம லிங்கமும்
உருகி வழிந்த கண்ணீரும் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் சிவ நாமங்களும்
அந்த சிவராத்திரியில் சிவனை சிவசைதன்யத்தை அங்கு
வரவழைத்தது.
அந்த லிங்கம் சிவலிங்கமாக்கப்பட்டு அங்கிருந்த
பாறையில் அஷ்டபந்தமின்றி பிரதிஷ்டை செயப்படுகிறது. அப்படி அன்று வேத விதிப்படி அல்லாமல்
பிராமணர் அல்லாத ஒருவரால் பிரதிஷ்டை நடத்தியதால் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் வரை
ஸ்ரீ நாராயண குரு சென்று வாதாடி இது முற்பட்ட வகுப்பினருக்கான சிவன் அல்ல பிற்பட்ட
வகுப்பினருக்கான சிவன் என்று சொல்லி வெல்லவும் செய்கிறார்.
அப்படி, கோவிலும் இறைவனும் இல்லை என்றிருந்த அன்றைய திருவிதாங்கூர், கொச்சி, மலபார் வாழ் பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மதமாற்றம் செய்யாமலேயே இறைவனும் கோவிலும் கிடைக்கச் செய்ததும் இதுபோன்ற ஒரு சிவராத்திரி நாளில்தான். அது போலவே 1924 ஆம் ஆண்டில், மார்ச் 3, 4 தேதிகளில் ஒரு சிவராத்திரி நாளில்தான் ஸ்ரீ நாராயண குரு ஆலுவாவில் சர்வபத மாநாடு நடத்தி எல்லா மதங்களும் ஒரே ஒரு ரகசியமான பரம்பொருளையே மையமாகக் கொண்டு இயங்குகின்றன. இறை உணர்வு ஆத்ம சுகம் தரும் ஒன்று. அதுவே எல்லா மதங்களும் கூறுவது. எனவே மனித குலத்திற்கு ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் தான் என்று சொல்லி மத வேற்றுமை பாராத இறை உணர்வின் முக்கியத்துவத்தையும் இந்த சிவராத்திரி நாளில்தான் விளக்கினார்.
எதிர்காலத்தில் இந்நிகழ்வுகளும் சிவராத்திரியின் பெருமை பற்றி பேசும்போது பேசப்படும்
என்பது உறுதி.
தங்கள் வாழ்வையே சிவபாதத்தில் வைத்து சிவபோகத்தில்
திளைத்து சிவலோகம் புகும் சிவனடியார்கள் போல் அல்லாமல் வருடம் ஒரு நாள் மட்டும் இரவு
சிவ தலம்/தலங்கள் சென்று இயன்ற மட்டும் சிவ நாமம் சொல்லி இறைவனை வேண்டும் சாதாரண மனிதர்களுக்கும்
சிவனருள் இறையருள் உண்டு. ஏனென்றால், நம்முள் உறையும் சிவனும் நாமும் ஒன்றே அதை உணரத்தான்
இந்த சிவராத்திரி.
எந்நாட்டவரின் இறையே போற்றி!
தென்னாட்டவரின் சிவனே போற்றி!
சென்ற பதிவுகளை வாசித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. துபாய் பயணத்தின் இறுதிப் பகுதி வெளியிட இருந்த போது, சிவராத்திரி வந்துவிட அதைப் பற்றி ஒரு சொற்பொழிவு கேட்டதும், உற்சாகம் தொற்றிக் கொள்ள ஒரு சின்ன பதிவு எழுதிடலாமே என இப்பதிவு. துபாய் பதிவு தள்ளி வைக்கப்பட்டது.
பெண்கள் தினமும் கூட. அனைத்து சகோதரிகளுக்கும், நம் எல்லோரது வாழ்விலும் நமக்கு உறுதுணையாய் நிற்கும் பெண்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
-------துளசிதரன்
செவ்வாய், 27 பிப்ரவரி, 2024
மஞ்ஞும்மேல் பாய்ஸ் - குணா குகை உண்மை நிகழ்வு
கடந்த ஆண்டு வெளிவந்த ஜூட் ஆண்டனியின் 2018 எனும் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அருமையான படம். புதிய திரைப்படக் கலைஞர்களும் நடிக நடிகையர்களும் டெக்னாலஜியும் ஒன்றுபட செயல்படும்போது மிக அருமையான படங்கள் நம் கண்களுக்கு விருந்தாகி மனதில் பதிவதுண்டு. கடந்த தினம் அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தான் இந்தப் பதிவு.
வியாழன், 22 பிப்ரவரி, 2024
சில்லு சில்லாய் - 21 - மூப்பியலில் தேவையான கவனங்கள்- இரட்டை - திருப்பதி அம்பட்டன்
சில்லு - 1 - மூப்பியல்
உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருக்கிறார்களா? இல்லை நீங்களே Senior Citizen பட்டியலில் இளமைத் துள்ளலுடன் அடி எடுத்து வைக்கும் பருவத்தில் இருக்கிறீர்களா? சற்றே இதைக் கவனத்தில் கொள்ளவும். எங்களுக்கு வயசாகிடுச்சுன்னு யார் சொன்னது!!? என்ற குரல்கள் ஒலிப்பது எனக்கு மூன்றாவது காது பொருத்தாத சமயத்திலும் கேட்கிறது!!! Wait! Wait! யாருங்க சொன்னது வயசாகிடுச்சுன்னு? கவனமா இருங்கன்னுதானே சொல்லப் போகிறேன்.
சனி, 17 பிப்ரவரி, 2024
துபாய் நாட்கள் - நான்காம் நாள் – 29-10-2023
தளத்தின்
பதிவுகளை வாசிப்பவர்கள், கருத்திடுபவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
நாங்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே ஒரு சின்ன உணவகம். கண்ணூர்க்காரர் நடத்துவது. அங்குதான் இரண்டாம் நாள் இரவு முதல் சாப்பிட்டோம். இன்றும் (நான்காம் நாள்) காலை இட்லி வடை சாப்பிட்டுவிட்டு Baniya Square – பனியா ஸ்கொயர் மெட்ரோ நிலையத்தில் மெஷினில் ரீசார்ஜ் செய்தோம். ஏடிஎம் மெஷின் போல் திரையில் பார்த்து கவனமாகச் செய்ய வேண்டும்.
வெள்ளி, 9 பிப்ரவரி, 2024
ஸ்ரீ சூரிய நராயண சுவாமி கோயில் - பெங்களூரு
கிட்டத்தட்ட
15 வருடங்களுக்கும் மேலாக இப்போது வரை எங்கள் வீட்டுச் சூழலில் இடங்களைப் பார்ப்பதற்கான
பயணம் மேற்கொள்வது என்பது ரொம்பவும் கடினமான ஒன்றாக, யோசித்துச் செய்ய வேண்டியதாக உள்ளது.
தவிர்க்கமுடியாத
காரணங்கள் என்றால் மட்டுமே இருவருமாக ஒரு நாள் பயணம் மட்டுமே அதுவும் பல முன்னேற்பாடுகளுடன்
மேற்கொள்ள வேண்டிய சூழல். எனவே சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை மட்டுமேனும் பெங்களூருவுக்குள் சென்று வரலாம் என்று இடையில் செல்வதுண்டு. எனக்கு வெளியில் சுற்றிப் பார்ப்பது
என்பது மிகவும் பிடிக்கும் அதுவும் பயணம் என்றால் துள்ளல்தான். இல்லை என்றால் கொஞ்சம்
அயற்சி ஏற்படுகிறதுதான் எனக்கு.
அப்படி ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று சென்ற கோயில் தான் பெங்களூரில், Domlur (டொம்லூர்? டோம்லூர்) டோம்லூரில் உள்ள சூரிய நாராயணர் கோயில். இந்தியாவில் உள்ள மிகச் சில சூரிய பகவான் கோயில்களில் ஒன்று என்று சொல்லப்படுகிறது.
சனி, 3 பிப்ரவரி, 2024
சில்லு சில்லாய் - 20 - பரவசம் - கட்டிடக் காடாய் மாறிவரும் பெங்களூர் - Kempe Gowda பன்னாட்டு விமான நிலையம்
வேறொரு பதிவை தயார் செய்து கொண்டிருந்த வேளையில் இன்று வெங்கட்ஜியின் பதிவில் காங்க்ரீட் காடுகள் என்பதைப் பார்த்ததும் இதைப் பற்றியும், இதற்கு முன்பு அவர் எழுதியிருந்த கங்கா ஆரத்தி பார்த்த கமயம் உணர்வுபூர்வமாகக் கண்களில் நீர் வந்ததையும் எழுதியிருந்ததை வாசித்த போதும் என் அனுபவத்தை எழுதி வைத்திருந்தேன். மற்ற பதிவை அடுத்த பதிவாக ஓரங்கட்டிவிட்டு இன்று இதை தட்டிக் கொட்டிப் போட்டுவிடலாம் என்று இதோ....
செவ்வாய், 30 ஜனவரி, 2024
துபாய் நாட்கள் - மூன்றாம் நாள் - 28-10-2023
====> துபாய் நாட்கள் முதல் நாள் - துபாய் நாட்கள் இரண்டாம் நாள்<====
கில்லர்ஜி இந்தியாவிற்கு வந்துவிட்டதால், (இந்தப் பயணத்தின் போது இந்தியாவில் இருந்தார். தற்போது இதை எழுதும் சமயம் அபுதாபியில் இருக்கிறார் என்பதை அறிகிறேன்) நம் சகோதரி பதிவர் மனோ சாமிநாதன் அவர்கள் அச்சமயம் தஞ்சையில் இருந்ததாக அறிந்து கொண்டேன். இறை அருள் கிடைத்தால் அபுதாபியிலுள்ள தம்பி பரிவை சே குமாரைக் காண வேண்டும் என்ற ஆவல். அலைபேசியில் பேசினோம். அபுதாபி நகரத்திற்கு வரும் போது கூப்பிட்டு அவருக்கு வரவோ, எனக்கு அவர் இருக்கும் பகுதிக்குப் போகவோ முடிந்தால் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து கிளம்பினேன். 1
புதன், 24 ஜனவரி, 2024
சில்லு சில்லாய் - 19 - பாட்டியும் சினிமா வைபவங்களும்
பாட்டியிடம்
நான் போட்ட பிட் இதுதான் - “பாட்டி,
நாங்க எல்லாரும் ஆத்துலதானே இருக்கோம். வடசேரி சந்தைக்கும், மாவு மெஷினுக்கும் போலாமா?
நாங்க எல்லாம் தூக்கிண்டு வருவோமே….சிவாஜி படம் கூட ஏதோ புதுசா வந்திருக்காமே! அப்படியே
அதையும்….”
என்ன
ஆச்சு?!! குழந்தை அழுததா சிரித்ததா? தொடரும். // இது முதல் பதிவு இங்கே
என்ன ஆச்சு!? பாட்டியிடமிருந்து பதில் இல்லை. தூங்கிட்டாங்க போல என்று நைஸாக எழுந்து என் வேலையைப் பார்க்கலாமே என்று நழுவினேன். என்னத்த பெரிய வேலை? அப்போதே என்னவோ பெரிய எழுத்தாளர் போல, கட்டுரை அல்லது கதை எழுத முயற்சி அல்லது படம் வரையறது, பேப்பர்ல கோலம் போட்டு டிசைன் போடுவது இப்படி ஏதாவதுதான். படிக்கும் புத்தகம் எல்லாம் டக்கென்று கையில் வராது அது சாட்சிக்கு அருகில் இருக்கும். பாட்டி எழுந்தால் புத்தகம் கைக்கு வந்துவிடும்.
ஞாயிறு, 14 ஜனவரி, 2024
துபாய் நாட்கள் - இரண்டாம் நாள் - 27-10-2023
துபாய் நாட்கள் பகுதி 1 வாசித்தவர்கள், கருத்திட்டவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. வாசிக்காதவர்கள் விரும்பினால் இச்சுட்டி சென்று வாசித்துக் கொள்ளலாம்.
இதோ இரண்டாம் நாள் பகுதி.
வியாழன், 11 ஜனவரி, 2024
சில்லு சில்லாய் - 18 - இந்தியாவின் சிலிக்கன் நகரம் உணவு நகரமாய் மாறி வருகிறதா - 3
சில்லு - 1 - சிலிகான் சிப் நகரம் சிப்ஸ் நகரமாக?!
இதற்கு முன் பெங்களூருக்கு வந்த போதும் சரி, இருந்த போதும் சரி சாப்பிட்டுப் பார்க்காத, ஆனால் நான் வீட்டில் அவ்வப்போது செய்து வந்த மத்துர் வடையை இப்போதைய பங்களூர் வாசத்தில் ஒரு சில கடைகளில், உணவகங்களில் சாப்பிட்டுப் பார்க்க விரும்பிச் சாப்பிட்டதுண்டு. வடை என்ற பெயர் இருந்தாலும் வடையும் அல்ல, தட்டையும் அல்ல. இரண்டிற்கும் நடுவான ஒரு தின்பண்டம். ரவை, அரிசிமாவு, மைதா எல்லாம் ஒரு கணக்கு வைத்து கலந்து (செய்த படங்களுடன் பின்னர் வரும்) நிறைய வெங்காயம் போட்டு (இதுதான் இதில் முக்கியம்) எள்ளு, தேங்காய், நிலக்கடலை எல்லாம் போட்டு, தட்டி எண்ணையில் பொரிக்க வேண்டும்.
வெள்ளி, 5 ஜனவரி, 2024
துபாய் நாட்கள் - முதல் நாள் - 26-10-2023
கரிப்பூர்
(கோழிக்கோடு) விமான நிலையத்திலிருந்து துபாயில் இறங்கிய
முதல்
நாள் – 26-10-2023
Travel is recess and we need it. ஆம்! பயணங்கள் என்பது ஒரு இடை ஓய்வு. அது நம் ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியம். பல முறை ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேட்கும் போது ஒரு முறை அதைப் பார்க்க ஆவல் உண்டாகும் தானே! 1
சஃபாரி யுட்யூப் சானல் நடத்தும் சந்தோஷ் ஜார்ஜ் குளங்கரா - படங்களுக்கு நன்றி - இணையம்