தளத்தின்
பதிவுகளை வாசிப்பவர்கள், கருத்திடுபவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
நாங்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே ஒரு சின்ன உணவகம். கண்ணூர்க்காரர் நடத்துவது. அங்குதான் இரண்டாம் நாள் இரவு முதல் சாப்பிட்டோம். இன்றும் (நான்காம் நாள்) காலை இட்லி வடை சாப்பிட்டுவிட்டு Baniya Square – பனியா ஸ்கொயர் மெட்ரோ நிலையத்தில் மெஷினில் ரீசார்ஜ் செய்தோம். ஏடிஎம் மெஷின் போல் திரையில் பார்த்து கவனமாகச் செய்ய வேண்டும்.
பின் அங்கிருந்து யூனியன் ரயில் நிலையம் சென்று சிவப்பு நிற தடத்திற்கு மாறி இறுதி பாயின்ட் அடைந்து வேனில் அங்கிருந்து ஆமிர் பணி புரியும் டைவ் டெக் Dive tech சென்று பார்த்தோம். ஹன்னாவின் குழந்தைகள் வரவில்லை. அவர்களது அப்பாவுடன் வேறு எங்கோ போக முடிவு செய்ததால்.
அன்றைய
தினம் Khorffakkan Beach – கொர்ஃபாகான் கடற்கரை,
நீர்வீழ்ச்சி, Al Bidya அல் பித்யா மசூதி மற்றும் Friday Market – வெள்ளிக்கிழமை
சந்தை இங்கெல்லாம் போகப் போகிறோம் என்றார் ஜமாலுதீன் அவர்கள்.
போகும்
வழியில் பாலைவனம் தொடங்கும் இடம் கண்டதும் எல்லோரும் இறங்கி, படமும், காணொளியும் எடுத்துக்
கொண்டோம். தனியாகப் பாலைவனம் காண்பதற்கு ஒரு தினம் ஒதுக்கி, விருந்து மற்றும் பெல்லி
நடனம் நம் வயதுக்கும் உடலுக்கும் மனதுக்கும் ஏற்றதல்ல. மட்டுமல்ல செலவிட நேரமும் வேண்டுமே.
குறைந்த நேரத்தில் கூடுதல் காட்சிகள் என்பதால் அரபு நாடுகளில் காண்பதற்கரிய இடங்களையும்
காட்சிகளையும் வேனில் பயணம் செய்து காண்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம். அங்கிருந்து
மீண்டும் பயணமானோம். Voice 4 - 25
மணல்
மேடுகளைத் தாண்டி மலைகள் தோன்றத் தொடங்கின. காடு சூழ்ந்த, மரங்கள் நிறைந்த மலைகளை மட்டும்
கண்டுப் பழக்கப்பட்ட கண்களுக்கு அந்தக் கற்கள் மற்றும் பாறைகளாலான அம்மலைகளின் காட்சி
வியப்பளித்தது.
புதிய
ஷார்ஜா-கோர்ஃபக்கான் சாலையானது 89 கிமீ நீளமுள்ள சாலைத் திட்டம். இது இரு நகரங்களுக்கிடையேயான
பயண நேரத்தை அதாவது துபாயில் இருந்து கோர்ஃபக்கான் நகரத்திற்கு 45 நிமிடங்களிலிருந்து
90 நிமிடங்கள் வரை குறைக்குமாம்.
சாலைகள்
அமைக்கவும் மற்றும் பல உபயோகத்திற்கும் பாறைகளை வெட்டி எடுக்கும் இடங்கள் இடையிடையே
கண்ணில்பட்டன. மலைகளின் இடையே அருமையாக உருவாக்கிப் பராமரிக்கப்படும் சாலைகள்.
இடையில்
மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட 2.7 கிமீ நீளமான சுரங்கப்பாதை. கோர் ஃபக்கானை ஷார்ஜாவுடன்
இணைக்கும் இந்தச் சுரங்கப்பாதை மத்திய கிழக்கின் மிக நீளமான சுரங்கப்பாதையாம். இந்தப்
பெரிய சுரங்கப் பாதையைக் கடந்ததும் வித்தியாசமான சூழலைக் கொண்ட Khorffakkan கொர்ஃபாகான்
கண்ணில் பட்டது. Khorffakkan கோர்ஃபக்கான் நகரத்தில் பயணித்தோம். (காணொளியில் பார்க்கலாம்)
பின்
அமீர் ஒரு குன்றின் மேல் வேனை ஓட்டிச் சென்று, அதன் உச்சியில் நிறுத்திவிட்டு இறங்கச்
சொன்னார். இறங்கி அவரைப் பின் தொடர்ந்தோம். Khorfakkan-கொர்ஃபாகான் பகுதியில் இருக்கும்
அந்த மலை உச்சி மற்றும் இடத்தின் பெயர் AI Rabi Tower-ராபி டவர். ஜமால் அவர்கள் கையை
நீட்டிச் சுட்டிக் காண்பித்த திக்கில் கடலும், கப்பல்களும் கொஞ்சம் தொலைவில் கண்ணுக்கு
விருந்தாய் Khorfakkan–கோர்ஃபக்கான் கடற்கரையும் தெரிந்தன. நீண்ட நேரம் அங்கு நின்று
இயற்கையின் அழகை ரசித்த பின் Khorfakkan-கொர்ஃபாகான் கடற்கரைக்குச் சென்றோம்.
ஷார்ஜாவில் உள்ள இந்த
Khorfakkan-கோர்ஃபக்கான் என்ற கடலோர நகரம் உண்மையிலேயே ஐக்கிய அரபு எமிரேட்ஸில் காண வேண்டிய
பல அழகிய இடங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு சுற்றுலா நகரம். அதில்
கோர்ஃபக்கான் கடற்கரைக்குப் பெயர் பெற்ற கோர்ஃபக்கான் ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாகும்.
நீர் விளையாட்டுகளுக்குப்
பெயர் பெற்றது. மதிய
நேரமானதால் அதிகம் ஆட்கள் இல்லை. சில சுற்றுலா பயணிகள் கடலில் தூரத்தில் நீந்திக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்திற்குப் பின் அங்கிருந்து கிளம்பி அடுத்து ஒரு மிகப் பழமை வாய்ந்த ஒரு
மசூதியைக் காண பயணமானோம்.
போகும் வழியில் வண்டியில் இருந்து கொண்டே செயற்கையாக உருவாக்கிய Khorffakkan கோர்ஃபக்கான் நீர்வீழ்ச்சியைக் கண்டோம்.
வரும் போதும் மீண்டும் திரும்பிப் போகும் போதுமான இந்தச் சாலைப் பயணம் மிகவும் ரசித்து அனுபவிக்கத்தக்க ஒரு பயணம் எனலாம். போகும் வழியில் மீண்டும் மலைகளின் இடையில் பயணம். காணக் கண்கொள்ளாக் காட்சி. அதன் பின் அமீரகத்தில் உள்ள ஒரு பழமையான மசூதியை அடைந்தோம்.
அல் பித்யா மசூதி
மரங்கள் எதுவும் பயன்படுத்தாமல் அங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களான மண் மற்றும் கல்லால் கட்டப்பட்ட அமைப்பு.
மசூதி பற்றிய விவரங்கள்
நூற்றாண்டுகளுக்கு
முன்பு – கிபி 1424 ல் கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த
Al bidya மசூதியும் நம் வேப்ப மரம் போல் இலைகளைக் கொண்ட ஒரு மரத்தின் அருகே உள்ள ஒரு
கிணறும், நூற்றாண்டுகளுக்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களை மனத்திரையில் காண்பித்தன.
பிரார்த்திக்கும் இடம்
மசூதி பற்றிய விவரங்கள்
ஃபுஜைரா
எமிரேட்ஸில் உள்ள அல் பித்யா எனும் ஒரு கிராமத்தில் அமைந்துள்ளதால் "அல் பித்யா
மசூதி" என்று அழைக்கப்படுகிறது. "உஸ்மானிய மசூதி" என்றும் அழைக்கப்படுகிறது.
மரங்கள் எதுவும் பயன்படுத்தாமல் அங்கு கிடைக்கப்பெற்ற பொருட்களான மண் மற்றும் கல்லால்
கட்டப்பட்ட அமைப்பு. உள்ளே செல்ல உடை கட்டுப்பாடுகள் உண்டு. பிரார்த்தனை மண்டபத்தில்
ஒரு சிறிய மிஹ்ராப் அதாவது மெக்காவின் திசையைக்
குறிக்கும் சுவரில் உள்ள இடம் உள்ளது. பிரார்த்தனை கூடத்தின் உள்ளே, பல சிறிய அலங்கார
ஜன்னல்கள் மசூதிக்குள் ஒளி மற்றும் காற்று வருவதற்கு வசதியாக இருக்கின்றன. இந்த மசூதியில்
தினசரி பிரார்த்தனைகள் நடக்கின்றன. கூடவே இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் உள்ளது.
மதியம்
3 மணி ஆனதால் பசி வேறு வாட்டியது. இடையிடையே பழங்கள் மற்றும் நொறுக்குத் தீனி இல்லாமல்
இல்லை. ஒரு நேரமேனும் அரபு நாட்டவர்கள் சாப்பிடுவது போல உணவு உண்டால் நல்லது இல்லையா
என்றார் ஜமாலுதீன் அவர்கள். நாங்கள் எல்லோரும் ஆர்வத்துடன் ஆமாம் என்றோம். சிறிது நேரத்தில்
வேன் ஒரு உணவகம் முன் நின்றது. கம்பளம் விரித்த தரையில் அமர்ந்து அரேபியன் ஸ்டைலில்
உணவருந்தினோம். Voice 12 – 1 min
அதன்
பின் நேரமின்மையால் Fujairah நகரத்தில் இறங்காமல் வேனிலிருந்து கண்களின் வழி மனதிலும்
மொபைலிலும் காட்சிகளை பிடித்துக் கொண்டு சென்றோம். மலைகளினிடையே Flag Pole &
Resistance Monument Khorfakkan - கோர்ஃபக்கான்
ரெஸிஸ்டன்ஸ் மோனுமென்ட் கண்டு கொண்டே சென்றோம். ஷார்ஜா
மசூதியையும், வேனிலிருந்து கண்டு கொண்டே பயணித்தோம்.
Hajar ஹஜர் மலையைக் கடந்து Friday Market
– ஃப்ரைடே மார்க்கெட்டை அடைந்தோம். (இப்பகுதியின் காணொளியில் காணலாம்)
பழங்கள்
காய்கறிகள் விற்கும் கடைகளும், உணவகங்களும் துபாயில் பிரபலமான பேரீச்சம்பழங்களில் முக்கிச்
சாப்பிடும் சிறிய வடைகளைக் கண்டோம். பேரீச்சம் பழ மரத்தின் தலை பாகத்தைச் சீவி அதனுள்
இருக்கும் குருத்தைப் பலரும் காத்திருந்து வாங்கிக் கொண்டு போனார்கள். (இப்பகுதியும் காணொளியில்)
அங்கிருந்து
கிளம்பி நீண்ட பயணம். 8 மணிக்குத் துபாயிலுள்ள Nesto Hyper Market – நெஸ்டோ ஹைப்பர்
மார்க்கெட் சென்று அங்கிருந்து பொருட்கள் வாங்கினோம்.
அறையை
அடைந்து தங்குமிடம் அருகே உள்ள Day to Day – டே டு டே எனும் Shopping Mall – ஷாப்பிங்க்
மாலுக்குச் சென்று தேவையான பொருட்கள் வாங்கினோம். விலை குறைவு. ஆனால் தரம் இல்லை.
மறுநாள்
– 30-10-2013 ஒரு நாள் தான். அன்று நாங்கள் மிக அழகான ஓரிடத்திற்குச் சென்றோம். அது
என்ன என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன் படங்களுடன், காணொளிகளுடன், காத்திருப்பீர்கள்தானே!
-----துளசிதரன்
உங்கள் மொபைல் தயவில் அதன் வழியே உங்கள் கண்கள் கண்ட காட்சிகளை நாங்களும் கண்டோம். உடன் பயணித்தோம்!
பதிலளிநீக்குதரையில் அமர்ந்து சாப்பிடுவது நல்ல பழக்கம். ஏன் இன்னும் தமிழ்நாட்டில் இந்த ஸ்டைலை பின்பற்றி உணவகம் எதுவும் அமையவில்லை என்று தெரியவில்லை! என்ன சாப்பிட்டீர்கள் என்று சொல்லவில்லையே? அங்கு சிறப்பு வாய்ந்த உணவு என்ன?
பதிலளிநீக்குதரையில் அமர்ந்து உண்பது என்பது நம்மிடையே இல்லாமல் போய்விட்டது. அதனால் எனக்கு இப்போதெல்லாம் தரையில் கால்களை மடக்கி உட்கார்வது சிரமமாகிறது.
நீக்குநாங்கள் சாப்பிட்டது அசைவம் தான். அதனால்தான் இங்கு சொல்லவில்லை. வெளி உணவகங்களில் எப்போதும் சாப்பிட்டுப் பழக்கமுள்ள எங்களுடன் இருந்த சிலர் அதனை மந்திரைஸ் என்று பெயர் சொன்னதாக நினைவு எனக்குப் பெயர் எல்லாம் சரியாகத் தெரியாததால்தான் அதைக் குறிப்பிடாமல் மழுப்பிவிட்டேன். நீங்கள் விடவில்லை. பிடித்துவிட்டீர்கள்!
கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்
துளசிதரன்
ஸ்ரீராம் நம்மூரிலும் கீழே அமர்ந்து சாப்பிடுவதாட்ன உணவகங்கள் இருக்கின்றன. கீழே குஷன் போட்டு அமர்ந்து உட்காரும் நிலையில் எட்டுவதான நெஞ்சளவு உயரமான சின்ன மேசைகள் வட்ட மேசையாகவோ நீள்வடிவமாகவோ ஓவல் ஷேப்பிலோ இருக்கின்றன. ஆனால் அவை எல்லாம் சுற்றுலாப்பயணிகள் வரும் இடங்களில். சைவ உணவகங்கள் இருக்கின்றனவா என்று பார்க்கிறேன் எனக்குத் தெரிந்த வரை அசைவ உணவகங்கள்தான். இப்போது பெரும்பாலும் பொதுவாகவே அசைவ உணவகங்கள்தான் அதிகமாக இருக்கின்றன அல்லது இரண்டும் கலந்து continental என்ற வகையில்.
நீக்குகீதா
Mandi rice with Alfahm chicken - அந்த உணவின் பெயர்.
நீக்குதுளசிதரன்
மந்தி என்பதே சரி.
நீக்குஆமாம் தெரிந்து கொண்டேன் கில்லர்ஜி. மிக்க நன்றி
நீக்குதுளசிதரன்
பழமையான மசூதி பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். ஏனோ இதுமாதிரி விஷயங்களில் மனதில் ஒரு சுவாரஸ்யம் வந்து விடுகிறது.
பதிலளிநீக்குஆம் நீங்கள் சொல்வது போல் ஒரு சுவாரசியம் வந்துவிடுகிறது. அன்றைய மனிதர்கள் அவர்கள் வாழ்ந்த சூழல் எல்லாம் நினைக்கையில் நம் கண்களில் 40, 50 வருடங்கள் முன்பு நாம் கண்ட காட்சிகள் இப்போது இல்லை. ஒ 500 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணுகையில் நமக்கு வியப்பாகத்தானே இருக்கும்?. அது சுவாரசியமான விஷயம் தான் நீங்கள் சொல்வது போல்.
நீக்குஆழ்ந்து வாசித்துச் சொன்ன கருத்திற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.
துளசிதரன்
அந்த குன்றின் உச்சியிலிருந்து படங்கள் எதுவும் எடுக்கவில்லையா?
பதிலளிநீக்குஆ! ஸ்ரீராம் அந்தப் படங்களைச் சேர்த்திருந்தேன். துளசி எல்லாமும் எப்போதோ அனுப்பி செட் செய்து வைத்திருந்தேனே...பாருங்க கடைசில ப்ரிவ்யூ பார்க்காம பப்ளிஷ் கொடுத்திருந்திருக்கிறேன். நல்ல காலம் கேட்டீங்க. இதோ சேர்த்து விடுகிறேன்...
நீக்குகீதா
சேர்த்துவிட்டேன் ஸ்ரீராம். துளசி பயணத்தில் இருந்தார் இரு நாட்களாக....அதுவும் மிக அழகான இடம். அவங்க ஊரிலேயே அருகிலேயே அதுவும் பதிவாக எழுதி வரும் என்று நினைக்கிறேன். படங்கள் வீடியோக்கள் அனுப்பியிருந்தார். அவர் மெதுவாகத்தான் எழுவார்! எழுந்து பார்ப்பதற்குள் உங்க கமென்ட் பார்த்து சேர்த்துவிட்டேன்!!!! ஹிஹிஹிஹி
நீக்குகீதா
ஓ.. பார்த்து விட்டேன்! அழகு.
நீக்குகாணொளி பார்க்க முடிந்ததா ஸ்ரீராம்? நான் எதுக்குக் கேட்கிறேன்னு தெரிஞ்சுருக்குமே!! ஹாஹாஹாஹா
நீக்குகீதா
நன்றி ஸ்ரீராம். கண்களுடன் பயணித்ததற்கு. மனத்திறையில் காண்பதுடன் நம் கைபேசித் திரையில் எப்போதாவது காணலாமே. இவை எல்லாம் தான் இந்த நவீனகாலத்தில் நமக்குக் கிடைக்கும் விஞ்ஞான உதவிகள்.
நீக்குநன்றி ஸ்ரீராம்.
துளசிதரன்
குன்றிலிருந்து எடுத்த படங்கள் காணொளியில் இருக்கின்றன. இப்போது கீதா இங்கு சேர்த்திருக்கிறார். கீழே தெரியும் சாலை, நகரம் மற்றும் தூரத்தில் தெரியும் நீல நிறக் கடல் அருமையான காட்சிகள். இப்போது நீங்களும் பார்த்துவிட்டீர்கள்!
நீக்குநான் பார்த்தது எடுத்தது எல்லாம் உங்கள் எல்லோருக்கும் வந்து சேர உதவும் கீதா சிலவற்றை இணைக்க முடியாமல் தவித்து விட்டுவிடுவார். அப்படிச் சில காட்சிகள் விட்டுப் போவதுண்டு. பின்னர் சேர்ப்பதுண்டு. சில ப்ளாகர் பிரச்சனைகளால். அவரது கணினியின் பிரச்சனைகளால்,
"இருக்கும் வீட்டுப் பணிகளில், நேரப் பிரச்சனைகளில், கணினிப் பிரச்சனைகளில் அடிக்கடி ஹாங்க் ஆகும் கணினியில் கஷ்டப்பட்டு படங்களைப் பதிவில் இணைத்து, காணொளிகள் எடிட் செய்து, குரல் கோர்த்து. செய்கிறேன் நீ இப்படிச் சொல்றியே" என்று வருத்தப்படுவார். ஏனென்றால், செய்வதைச் செம்மையாகச் செய்ய முயற்சிப்பவர்.
நன்றி ஸ்ரீராம்! நீங்கள் கேட்டதும் அவரும் பார்த்து இணைத்திருக்கிறார்.
துளசிதரன்
படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குகொர்பஹான் இரண்டு முறை சென்று இருக்கிறேன் நிறைய வித்தியாசம் தெரிகிறது.
காணொளி சிறப்பு.
மிக்க நன்றி கில்லர்ஜி. ஆமாம் மாற்றங்கள் வந்து கொண்டேதானே இருக்கும் இல்லையா. இப்போது நீங்கள் அங்கு இருப்பதால் சென்று பார்க்கலாம் எப்போது உங்களுக்கு முடிகிறதோ அப்போது.
நீக்குகாணொளி கண்டதற்கு மிக்க நன்றி கில்லர்ஜி
துளசிதரன்
எங்களையும் அழைத்துக்கொண்டு போய் சென்ற இடங்களை பற்றி விவரித்து, புகைப்படங்களும், காணொளியும் இட்டு, ஒரு ஆசிரியர் மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்து சென்றது போல் எழுதிய பதிவு சிறப்பாக உள்ளது.
பதிலளிநீக்குJayakumar
மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார். நீங்களும் பதிவு, படங்கள் காணொளி வழி என்னோடு பயணித்ததற்கு. இடையில் பதிவுகள் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இனி இடம் என்றால் ஒரே ஒரு இடம் தான் அடுத்த பதிவு. அதன்மறுநாள் ஊருக்குத் திரும்புவது பற்றி. துபாய் நாட்கள் அதோடு முடிகிறது.
நீக்குமிக்க நன்றி சார் கருத்திற்கு.
துளசிதரன்
உங்கள் கருத்தை இப்பதிவிற்குக் கண்டதும் மகிழ்ச்சி, ஸார்
நீக்குதுளசிதரன்
பலைவான படங்கள், மற்றும் பழமையான மசூதி படங்கள் அருமை. காணொளியும் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇஸ்லாமியர் வீட்டுத்திருமணம் மற்றும் விழாக்களில் பெரிய தட்டில் உணவு இருக்கும் உறவினர் எல்லோரும் சாப்பிடுவார்கள் .
உணவகத்தில் பெரிய தட்டில் உணவு இருக்கிறது, எல்லோரும் தேவையானதை தட்டில் எடுத்து வைத்து சாப்பிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆம், அங்கு பெரிய தட்டில் வைத்துவிட்டார்கள். என்றாலும் சிறிய சிறிய தட்டுகளும் வைத்திருந்ததால் சௌகரியமாக இருந்தது. ஸ்பூன்களும் இருந்தன. அதனால் தேவையானதை எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட முடிந்தது. வித்தியாசம் பெரிதாகத் தெரியவில்லை. இங்கு பிள்ளைகளுக்காக வாங்குவதும், அவர்களுக்காக அசைவ உணவகங்களுக்குச் செல்வதும் சாதாரணமாக நடப்பதுதான். இடையிடையே பிள்ளைகளுக்குப் பிடித்தமானதால் வாங்குவதும் உண்டு. அங்கு பிரத்யேகமாகத்தட்டுகள் கொடுத்திருந்தார்கள்.
நீக்குமிக்க நன்றி சகோதரி கோமதி அரசு உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
வரலாற்றுச் சிறப்பு மிக்க மசூதியும் அருகே உள்ள ஒரு கிணறும் அருமை.
பதிலளிநீக்குகுன்றின் உச்சியிலிருந்து எடுத்த படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
ஆமாம் மிக வும் சிறப்பான மசூதி அதாவது அந்தக்கால வகையிலானது என்பதால் கூடுதல் சிறப்பு. கிணறும் அப்படியான காலத்தை நினைவூட்டியது.
நீக்குமிக்க நன்றி படங்களை ரசித்ததற்கும் எல்லாம் பார்த்து கருத்து சொன்னதற்கும், சகோதரி கோமதி அரசு.
துளசிதரன்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. துபாய் பயணத்தில் நான்காம் நாளன்று நீங்கள் அங்கு கண்டு களித்த இடங்கலெல்லாம் நன்றாக உள்ளது.
பாலைவனப்பகுதி படங்களும், குன்று மேல் ஏறி அங்கிருந்து எடுத்த கடல் வழி காட்சி படங்களும் நன்றாக உள்ளது.
பயணித்த விபரங்களை நல்ல தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். நாங்களும் உங்களுடன் பயணித்த ஒர் உணவை தந்தது.
வரலாற்று சிறப்பு மிக்க மசூதியையும் அதன் சிறப்புகளையும் பதிவில் படித்தததின் மூலம் அறிந்து கொண்டேன். அதன் படங்கள் அனைத்தும் அருமை.
அங்குள்ள அரபு ஸ்டைல் உணவகத்தில் கீழே அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் இருப்பதறிந்து மகிழ்ச்சி. கீழே அமர்ந்து உணவு எடுத்துக் கொண்டால் உடல்நலத்திற்கு நல்லதுதானே..! நாம் முன்பெல்லாம் கீழே அமர்ந்துதான் சாப்பிட்டோம். இப்போது ஏற்பட்ட நாகரீகத்தில்தான் வீட்டில் டைனிங் டேபிள் சேர் என வந்துள்ளது.. நமக்காக இல்லையென்றாலும் வீட்டுக்கு வரும் உறவு மற்றும் விருந்தாளிகளுக்காக இதை வாங்கி போட்டுள்ளோம்.
நெஸ்டோ ஹைப்பர் மார்க்கெட் நல்ல பெரிதாக உள்ளது. அங்குள்ள சாமான்களும் நல்ல தரமுள்ளவையயாக கிடைத்தனவா? மேலும் பயணத்துடன் துபாயின் அழகான பகுதி காட்சிகளை காண தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எல்லாவற்றையும் பற்றி விரிவாகப் பேசியதற்கு மிக்க நன்றி. நெஸ்டோ பரவாயில்லை. நீங்கள் சொல்லியிருபப்து போல் ஓரளவு பரவாயில்லை. ஆனால் டே டு டே மாலில் பார்த்துதான் வாங்க வேண்டும்.
நீக்குகீழே அமர்ந்து சாப்பிடுவது நல்ல பழக்கம் ஆனால் அது இப்போது நடக்காததால் பல சிரமங்கள் வந்துள்ளன என்பதும் உண்மை.
நேரம் குறைவு என்பதால் துபாயில் பல இடங்களைக் காண முடியவில்லை என்பதுதான் வருத்தம்.
மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் உங்களின் விரிவான கருத்திற்கு
துளசிதரன்
படங்கள் மிக அழகு... பழைய மசூதிக்குச் சென்றது சிறப்பு.
பதிலளிநீக்குபழைய நினைவுகளைக் கொண்டுவந்துவிட்டீர்கள்.
ஆம் நெல்லைத்தமிழன் உங்களுக்கும் பழைய நினைவுகள் வந்திருக்கும். அந்த நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளலாமே நீங்கள் நாங்களும் மகிழ்வோமே.
நீக்குமிக்க நன்றி நெல்லைத்தமிழன், உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
பாலைவன ஆரம்பத்தில் படம் எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅந்தப் பகுதியில் ஒட்டகங்கள் நிறைய போவதைப் பார்க்க முடியும்.
பாலைவனத்தில் காரில் செல்வது (;டெசர்ட் சஃபாரி), பெல்லி டான்ஸ், அங்குள்ள உணவு போன்றவையும் தனித்துவமானவை. ஆபாசத்துக்கோ இல்லை பயணிக்க முடியாத வகையிலோ இருக்காது.
ஒட்டகங்கள் தூரத்தில் தெரிந்தன. ஆனால் மொபைல் கேமராவில் எடுக்கும் அளவான தூரத்தில் அல்ல. நாங்கள் அங்கு தனியிருந்த 5 நாட்கள் பேக்கேஜில் போயிருந்தால் எல்லா இடங்களுக்கும் கூட்டிப் போயிருந்திருப்பார்கள். நாங்கள் எங்களுக்கு ஜமால் அவர்களும் எங்களுடன் இருக்க வேண்டும் என்று நினைத்ததாலும், அவர் வர இயலாத தினங்களில் நாங்களாக எளிதாகச் சென்று வர முடிந்த இடங்களுக்குச் சென்று வந்தோம் என்பதாலும் பல இடங்களைப் பார்க்க முடியாமல் போனது.
நீக்குமிக்க நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
93களில், துபாய் ஷார்ஜாவிற்கு இடைப்பட்ட ஒரு மைலுக்கும் மேலான பகுதி பாலைவனமாக இருந்தது. பிறகு நிறைய மாற்றக்கள், கட்டிடங்கள் வந்துவிட்டன. அதுபோல துபாய் அபுதாபி ரோடு ஆரம்பத்தில் நாலைந்து மிக உயரமான டவர்கள் மாத்திரமே இருந்தன.
பதிலளிநீக்குமுன்பு சென்னையில் எல்ஐசி பதினாலு மாடிக் கட்டடமே தமிழகத்தின் உயரமான கட்டிடமாக இருந்தது போல (இப்போ எங்க வளாகத்திலேயே 32 மாடிக் குடியிருப்புகள் இருக்கின்றன)
30 ஆண்டுகளில் துபாயில் வந்த மாற்றங்கள் அதிகமாகத்தான் இருக்கும். முற்றிலும் தோற்றத்தையே மாற்றியிருக்க்கும் தான். 80 களில் பார்த்த எர்ணாகுளம் இப்போது எர்ணாகுளம் எவ்வளவோ வித்தியாசப்பட்டு இருக்கிறது. 90 களில் பார்த்த கோயமேடு அல்ல இப்போதைய கோயமேடும் அதை அடுத்த பகுதிகளும் பிறகு துபாயைப் பற்றிச் சொல்லவா வேண்டும்!
நீக்குமிக்க நன்றி நெல்லைத்தமிழன், உங்கள் கருத்திற்கு
துளசிதரன்
விரைவில் பெல்லி டான்ஸ் போன்றவற்றை மட்டுமாவது படங்களுடன் எழுதுகிறேன்.
பதிலளிநீக்குஎழுதுங்கள் நெல்லைத்தமிழன் நீங்கள் சொல்வது போல் desert safari, belly dance, உணவின் தனித்தன்மை பற்றி தெரிந்து கொள்ளலாமே!. ஏனென்றால் நீங்கள் அதில் மிகவும் ஆழமாகச் சென்று நுணுக்கமாக எல்லா விஷயங்களையும் சொல்வீர்கள். காத்திருக்கிறோம்
நீக்குமிக்க நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
90களுக்கும் அதற்குப் பிறகும் நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 90களில், அராபியர்கள், வியாழன் மாலை காரில், ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும் பிலிப்பினோக்கள் அல்லது ரஷியர்கள் (பெண்கள்) அருகே மெதுவாக நிறுத்தி ஏறிக்கொள்கிறார்களா என்று பார்ப்பார்கள். அதுபோல அவர்களும் ஒரு சில பகுதிகளில் அடர்த்தியாக நின்றுகொண்டிருப்பார்கள், கஸ்டமர்கள் (எந்தத் தேசத்தவராயினும்) தங்களை பிக்கப் செய்துகொள்ள. இவையெல்லாம் 2000க்குப் பிறகு குறைந்துவிட்டது.
நீக்குஒன்று மாத்திரம் உறுதி. பெண்களை அவர்கள் விருப்பம் இல்லாமல் அணுகவோ இல்லை முறைத்துப் பார்க்கவோ (physicalஆக எதுவும் செய்யவோ) முடியவே முடியாது. அவ்வளவு பாதுகாப்பானது எமிரேட்ஸ் மற்றும் பல கல்ஃப் தேசங்கள்.
எப்படியோ அந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் நின்று போனது நல்ல விஷயம் இல்லை என்றால் துபாய் போன்ற நகரங்களின் அழகு போய்விடும். உலகிலேயெ அது ஒரு பெரிய வியாபார நகரமாக மாறியது பெரிய விஷயம்தான்.
நீக்கு//ஒன்று மாத்திரம் உறுதி. பெண்களை அவர்கள் விருப்பம் இல்லாமல் அணுகவோ இல்லை முறைத்துப் பார்க்கவோ (physicalஆக எதுவும் செய்யவோ) முடியவே முடியாது. அவ்வளவு பாதுகாப்பானது எமிரேட்ஸ் மற்றும் பல கல்ஃப் தேசங்கள்.//
இது மிக நல்ல விஷயம். நம் நாட்டிலும் இப்படி வந்தால் நன்றாக இருக்கும்.
மீண்டும் வந்து தகவல் சொன்னதற்கு மிக்க நன்றி நெல்லைத்தமிழன்
துளசிதரன்
துபாய் பயணம் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. பகிர்ந்து கொண்ட தகவல்கள் அனைத்தும் சிறப்பு.
பதிலளிநீக்குகீழே அமர்ந்து உணவு உட்கொள்ள சில இடங்கள் உண்டு. ஆனால் பெரும்பாலும் அப்படியான உணவகங்களுக்குச் செல்வது சுற்றுலாவாசிகள் தான். நம் ஊரில் இப்படியான இடங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆமாம், கீழே அமர்ந்து சாப்பிடுவது என்பது சுற்றுலா வருபவர்கள்தான். சுற்றுலா தலங்கள் ஏதோ ஒன்றில் இருப்பதாகத் தெரிகிறது.
நீக்குமிக்க நன்றி வெங்கட்ஜி உங்களின் கருத்திற்கும் தொடர்வதற்கும்
துளசிதரன்