ஞாயிறு, 1 டிசம்பர், 2024

சூக்ஷ்ம தர்ஷினி - திரைப்படம் - ஒரு பார்வை

நல்ல கதை, நல்ல திரைக்கதை, நல்ல வசனம், நல்ல நடிப்பு, நல்ல ஒலி அமைப்பு மற்றும் நல்ல ஒளி அமைப்பு. இவை எல்லாம் அமையப்பெற்றால் நல்ல திரைப்படம் உருவாகும். இத்தனை 'நல்ல'துடன் நல்ல ஒரு கருத்தையும் நம்மை சிந்திக்கவைக்கும்படி சொன்னால் அந்தப்படம் எல்லோராலும் எல்லாக்காலத்திலும் பாராட்டப்படும் ஒன்றாகிவிடும். அந்தவிதத்தில் பார்க்கும் போது 'சூக்ஷ்மதர்சினி' எனும் மலையாளப் படம் அப்படி எல்லாவிதத்திலும் ஒரு நல்ல படம்தான். அதைப் பற்றித்தான் இன்று பார்க்கவிருக்கிறோம்


சூக்ஷ்மதர்ஷினி என்றால் மைக்ரோஸ்கோப் - நுண்ணோக்கி.

சிலரது கண்கள் மைக்ரோஸ்கோப் போல இருக்கும். Microscopic Eye, Microscopic Mind. இப்படத்தில் நாயகியும், நாயகனும் அப்படிப்பட்ட மைக்ரோஸ்கோப்பிக் கண்ணும், மைக்ரோஸ்பிக் மனதும் பெற்றவர்கள்


மேனுவெல் எனும் இளைஞன், மனநிலை பாதிக்கப்பட்டத் தன் தாயுடன் தான் சிறுவயதில் வசித்த தன் பழைய வீட்டிற்குக் குடிவருகிறான். சுற்றிலும் நடுத்தரவர்கத்தினரான புது மனிதர்கள். ஓரிரு வயதானவர்களுக்கு அவர்களைத் தெரியும். நம் கதாநாயகி, கணவன் மற்றும் மகளுடன் அடுத்தவீட்டில். எதையும் நுண்ணோக்கிக் காணுகின்ற மனம் மற்றும் கண்களால் காணும் திறனுள்ள பிரியதர்ஷினியின் கண்களில் மேனுவெலின் சில செயல்கள் சந்தேகத்தை விதைக்கின்றன. (வாய்ஸ் 2)

'மகன் தாயை உண்மையாக நேசிக்கிறானா? எல்லாம் வெறும் நடிப்பா?' என்ற சந்தேகம். மேனுவெலும், பிரியா தன்னை கவனிக்கிறாள் என்பதைப் புரிந்த பின், பிரியாவை தன் வழியிலிருந்து மாற்ற முயன்று ஓரளவு வெற்றியும் காண்கிறான். இதையெல்லாம் அருமையாக நஸ்ரியாவும் பேஸில் ஜோசஃபும் செய்திருக்கிறார்கள்.  இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எல்லாக் காட்சிகளும் அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன

கூடவே மேனுவெலும் அவரது கூட்டாளிகளும் பேசுவதும் செய்வதும் எல்லாம் பிரியாவைப் போல், படம் பார்க்கும் நம்மையும் படத்திற்குள்ளே இழுத்துச் செல்கிறது. எதிர்பார்ப்பு, அடுத்து என்ன நிகழப் போகிறது என்ற பரபரப்பு ஏறுகிறது. இங்கெல்லாம் திரைக்கதையும், வசனமும், நடிப்பும், ஒலிப்பதிவு மற்றும் ஒளி அமைப்பும், ஆர்ட் டைரக்ஷனும் ஒன்றுக்கொன்று கொடுக்கும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது. அப்படி அருமையான ஒரு மிஸ்ட்ரி த்ரில்லர் படமாகத் தொய்வில்லாமல் படம் நகர்கிறது. இதற்கெல்லாம் மேலாகப் படத்தின் க்ளைமேக்ஸ் தரும் அதிர்ச்சி படத்தை எங்கோ கொண்டு செல்கிறது

இயக்குநர் ஜிதின் திரைக்கதை ஆசிரியர்கள் லிபின், அதுல் ராமச்சந்திரன்

இதை எல்லாம் அருமையாகப் படமாக்கியிருக்கும் விதம்தான் இயக்குனர் எம் சி ஜிதினையும், திரைக்கதை ஆசிரியர்களான லிபின், அதுல் ராமசந்திரன் உள்ளிட்டவர்களது வியக்கத்தக்கத் திறமையை நமக்குக் காட்டுகிறது. இறுதிக் காட்சிகளெல்லாம் கவிதை வரிகளைப் போல் ரத்தினச் சுருக்கமாக வந்து silence speaks volumes என்பதை உறுதிப்படுத்துகிறது. கூடவே 21 ஆம் நூற்றாண்டு சினிமா ரசிகர்களும் நல்ல வாசகர்கள் வரிகளுக்கிடையில் வாசிப்பது போல் காட்சிகளுக்கு இடையில் நிகழ்வதை ஊகித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் காட்டப்படும் காட்சிகள் எல்லாம் காணும் நம்மை, இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களாகவே மாற்றிவிடுகிறது. (வாய்ஸ் 4)

மட்டுமல்ல அதை எல்லாம் விரிவாகச் சொல்லியிருந்தால் வீண் விவாதத்திற்கு வழி வைக்குமே ஒழிய வேறு பலன் ஒன்றுமில்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டு அவற்றை எல்லாம் தவிர்த்தது உண்மையிலேயே பாராட்டிற்குரியது.  அதே நேரத்தில் படம் பெண்ணியமும் மகளிர் ஓரினச்சேர்க்கை பற்றியும் பேச வேண்டியதைத் தேவையான அளவுக்குப் பேசவும் செய்கிறது. அந்த அளவுக்கு அருமையான திரைக்கதை அமையப்பெற்றத் திரைப்படம் தான் சூக்ஷ்மதர்சினி


அத்துடன் இதில் பேசப்படும் பெண்ணியம் Indian Great Kitchen போல ஆவேசத்துடன் பேசப்படுவதோ, How Old are you போல அமைதியாகப் பேசப்படுவதோ, நகைச்சுவை தளும்ப ஜய ஜய ஜய ஹே வில் பேசுப்படுவது போலவும் அல்ல. வாழைப்பழத்தில் ஊசி ஏறுவது போல காண்போரின் மனதில் பெண்ணியமும், மகளிர் ஓரினச்சேர்க்கை பற்றிய சிந்தைகளும் ஏறிவிடுகின்றன. பெண்களுக்கு எதிராகப் பெண்களும் நிற்கிறார்கள் என்பதையும், கௌரவக் கொலைகளுக்குக் காரணம் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் உண்டு என்பதையும் படம் காண்பிக்கிறது. இங்கு லெஸ்பியனிஸம் - மகளிர் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக முன்பந்தியில் நிற்கும் ஒரு பெண் கதாபத்திரத்தைக் காட்டுவதிலிருந்து நாம் அதைப் புரிந்து கொள்ள முடியும். (வாய்ஸ் 5)


பின் அப்படத்தின் இறுதிக் காட்சியில் நஸ்ரியாவின் சாகஸங்கள் கொஞ்சம் எல்லை மீறல் நடத்தினாலும் படத்திற்கு அது ஒருவகையில் கைதட்டல்களை வாங்கித் தருவதுடன் பெண்கள் தனிநபராகத் தைரியத்தைக் கைவிடாமல் போராடினால் வெற்றி பெறலாம் என்ற வலுவான ஒரு கருத்தையும் முன்வைக்கிறதே, அதுவும் இப்படத்திற்கு மெருகேற்றத்தான் செய்கிறது


Casting - கதாபாத்திரங்களின் தேர்வு அருமை. எல்லா நடிக நடிகைகளும் இயல்பாக அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே வந்து மனதில் இடம் பிடிக்கிறார்கள்

சித்தார்த் பரதன்

சித்தார்த் பரதனின் கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கிறது. 


அது போலவே தீபக், அகிலா, பூஜா, மெரின் போன்றவர்களும் இயல்பாகவே நடித்திருக்கிறார்கள்

ஷரண் வேலாயுதன்

ஷரண் வேலாயுதனின் காட்சிகளைப் படமாக்கிய விதம் அருமையாக இருக்கிறது
சாமன் சாக்கோ
அது போலவே சாமன் சாக்கோவின் படத்தொகுப்பும்

கிறிஸ்டோ சேவியர்
கிறிஸ்டோ சேவியரின் இசையும்


வினோத் ரவீந்திரனின் அரங்க அமைப்பும், முக்கியமாக, கொல்லப்பட்டவரின் உடலை அப்புறப்படுத்தும் காட்சியில் அருவருப்பூட்டாமல் அரங்கைக் காட்டிய விதம்


இப்படி எல்லோரும் படத்தின் சிறப்புக்குச் செய்த உதவியும் பாராட்டத்தக்கதே. எப்போதாவது வரும் சில நல்ல திரைப்படங்களில் இதுவும் ஒன்று. எனவே முடிந்தால் பாருங்கள்

(நெடுநாட்களுக்குப் பிறகு ஒரு பதிவு. ரப்பர் வேலைகள், யுனிவேர்சிட்டி சம்பந்தப்பட்ட சில வேலைகள், வகுப்புகள், அதற்கான தயாரிப்புகள், இடையில் தவிர்க்க முடியாத குடும்ப நிகழ்வுகள் என்று வலைப்பக்கம் வருவதற்கும் வாசிப்பதற்கும் கருத்திடவும் நேரம் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. எனது சில பயணப் பதிவுகளும் இருக்கின்றன. அதையும் பதிவிட முயற்சி செய்கிறேன்)

https://youtu.be/EgKkACvg7YE

------துளசிதரன் 

29 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஸ்ரீராம், எனக்குத் தெரிந்து OTT யில் இன்னும் வரவில்லைன் அப்பபடித்தான் அறிகிறேன். துளசி தியேட்டரில் பார்த்திருக்கிறார்.

      கீதா

      நீக்கு
    2. கீதா ஏற்கனவே சொல்லியிருக்கிறார். OTT யில் வந்துவிட்டதா என்று எனக்குத் தெரியவில்லை, ஸ்ரீராம். நான் பார்க்கும் படங்கள் எல்லாமே தியேட்டரில்தான்.

      மிக்க நன்றி, ஸ்ரீராம்

      துளசிதரன்

      நீக்கு
  2. ஃபகத் ஜோஸப் ஃபகத் ஃபாசிலின் தம்பியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Fahad Fazil veru....Fazil இயக்குநரின் மகன்...இதில் கதாநாயகன் Basil Joseph என்பவர். அவர் ஒரு இயக்குநரும் கூட. Minnal Murali enum எனும் படம் எடுத்தவர்.

      மிக்க நன்றி, ஸ்ரீராம்

      துளசிதரன்

      நீக்கு
    2. OTT யில் வரவில்லையாம், ஸ்ரீராம்.

      துளசிதரன்

      நீக்கு
    3. மின்னல் முரளி பல மாதங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன். சுமார் இரண்டு வருடங்களுக்குள்...

      நீக்கு
    4. அப்படம் ஒரு வெற்றிப்படம். பிறகு நடிப்பில் இறங்கி அங்கும் தன் திறமையை காண்பித்து கொண்டிருக்கிறார். oru

      துளசிதரன்

      நீக்கு
  3. ​துளசி சார். சூஷ்ம தர்சினி பற்றிய விளக்கம், கதை சுருக்கம், ஆகியவை சரியாக இருந்தாலும் இந்த வாய்ஸ் 1, 2 என்பவரது யாருடையது, ஒருவருடையாதா, அல்லது வேல்வேறு நபர்களுடையதா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.

    ஏகப்பட்ட ஸ்டில்கள். கட்டுரையின் நோக்கத்தையே மறைக்கின்றன.

    படம் பார்த்தவர்களுக்கு வேண்டுமானால் இந்த விமரிசனம் நன்றாக புரியும். மற்றவர்கள் சோ சோ தான். இப்படி கூறுவதற்கு மன்னிக்கவும்.

    Jayaku​mar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெ கே அண்ணா, துளசி பதிவை வாய்ஸில் அனுப்பினார். அதைக் கேட்டு டைப் செய்து அவர் வாய்ஸ் இணைத்து வீடியோ செய்தப்ப, வீடியோவில் வைத்தது போல் படங்கள் சேர்த்து, பதிவை செய்ததால் - ஒவ்வொரு பாராவுக்கும் கடைசியில் வாய்ஸ் என்பதைச் சேர்த்துக் கொண்டேன்.

      பதிவு இன்று போட வேண்டும் என்பதை மறந்துவிட்டேன். காலையில் எபிக்கு வந்ததும் தான், ஓ இன்று பதிவைப் போடணுமே என்று இங்கு வந்து டக்டக் என்று வேர்டில் அடித்து வைத்ததை காப்பி செய்து போட்டேன். வாய்ஸ் என்பதை எடுக்க விட்டுப் போச்சு.

      இப்ப எடுத்துவிடுகிறேன். கருத்திற்குப் பதில்களுக்குத் துளசி வாய்ஸ் அனுப்பும் போது அதை நான் இங்கு தருகிறேன்.

      கீதா

      நீக்கு
    2. வாய்ஸ் பற்றி கீதா சொல்லிவிட்டார். நான் அனுப்பும் பதிவுகளை அவர்தான் டைப் செய்து, என்னிடம் கரெக்ஷன் வாங்கி, என்னிடம் கேட்டுக் கொண்டு படங்கள் சேர்த்து, இடுகைகள், காணொளிகள் எல்லாம் பதிவேற்றிச் செய்பவர்.

      படங்கள் சேர்த்தமைக்கு ஒரு காரணத்தையும் கீதாவே சொல்லிவிட்டார் காணொளி செய்யும் போது கோர்த்தவை.
      என்னிடம் கேட்டுக் கொண்டுதான் செய்தார்.

      படத்தின் கதையின் க்ளைமாக்ஸ் சொல்ல முடியாதே அப்புறம் படத்தின் சுவாரசியம் போய்விடுமே. எனவே இலை மறை காயாகப் படங்களுடன் படத்தைப் பார்க்கக் கூடிய ஆர்வத்தைத் தூண்டும் ப்ளஸ் பாயின்ட்ஸைச் சொல்லலாமே என்றுதான். நீங்கள் சொன்னது போல் படம் பார்த்தவர்கள் அதன் க்ளைமாக்ஸைச் சொல்லிவிட்டால் அப்புறம் படம் பார்க்க எப்படித் தோன்றும் இல்லையா? அதனால்தான் படங்களுடன் சொல்லிச் சென்றேன்.

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஜெயகுமார் சந்திரசேகரன் சார்.

      துளசிதரன்

      நீக்கு
  4. சூக்ஷ்மதரிசனம் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

    பொதுவாக மலையாளத் திரைப்படங்கள் வலுவான கதையுடன் வரும். வெற்று ஆரவாரங்கள், கதாநாயகன் துதி போன்றவை அதிகமாக இருக்காது.

    சமீபத்தில் ஓடிடியில் பார்த்த, கிஷ்கிந்தா... படம் ஒரு உதாரணம். கதாநாயகியின் கவர்ச்சி, கதாநாயகனின் ரசிகர் கூட,டத்திற்கான அதீத செயற்கையான காட்சிகள் இல்லாமல் எடுப்பார்கள்.

    இந்தப் படத்தின் கதையை, க்ளைமாக்ஸ் இல்லாமல் இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். கதைப் போக்கைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. மற்றப் படங்களின் குறிப்பு திசை திருப்பிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடக்கின்ற ஒரு கொலையை கதாநாயகி கண்டிபிடிக்கிறார். ஆனால் கொல்லப்பட்டவர் யார் என்பவர் யார் என்று சொல்லும் போது ஏற்படும் அதிர்ச்சிதான் படத்தின் உயிர்நாடி. அதைச் சொல்லிப் போகும் விதம் நன்றாக இருந்தது,

      கிஷ்கிந்தா காண்டம் போல ஒரு ட்விஸ்ட் அது சீரியஸாகச் சொல்லிப் போகும் போது இது கொஞ்சம் நகைச்சுவையோடு சொல்லப்படுகிறது. பேசப்பட்ட பெண்ணியமும், லெஸ்பியனிஸமும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. விரிவாகச் சொன்னால் படத்தைக் காணும் போது கிடைக்கும் த்ரில் கிடைக்காதே என்பதால் சுருக்கிவிட்டேன். சந்திரன்சேகர் சாரும் இதைத்தான் சொல்லியிருந்தார்.

      ஓகே நீங்கள் சொல்லியிருப்பது போல் பெண்ணியம் பற்றிச் சொல்லும் போது மற்றபடங்களுடன் ஒப்பிட்டுப் பேசி திசைதிரும்பிவிட்டது. படத்தில் அந்த இரு சப்ஜெக்ட் பற்றி வித்தியாசமாகச் சொல்லிச் செல்லும் போது நம்மைச் சிந்திக்க வைக்கிறது. இவை எல்லாம் இனியும் எங்கும் நடக்கும் என்பது போல்.

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
  5. விரைவில் பயணங்கள் பதிவுகள் வருவது பற்றி சந்தோஷம்... இதோ இன்னும் மூன்று வாரங்களில் கேரளப் பகுதியில் கோயில்களுக்குச் செல்வேன். நான் அதிகமான ரப்பர் மரங்களை நாகர்கோவில் பகுதிகளில்தான் கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரளாவில் சாலைகளில் பயணிக்கும் போது ரப்பர் தோட்டங்கள் பார்ப்பது கொஞ்சம் அரிது கட்டிடங்கள் எழும்பி வருவதால். நீங்கள் கேரளப் பகுதிகளுக்குக் கோவிலுக்குச் செல்லும் போது நிலம்பூர் பகுதிக்கு வந்தால் பார்க்கலாம், எங்களோடு தங்கி சில நல்ல காட்சிகளைக் கண்டு, ரப்பர் வேளாண்மை பற்றியும் தெரிந்துகொண்டு செல்லலாம்.

      பதிவுகள் முயற்சிக்கிறேன்.

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்

      துளசிதரன்

      நீக்கு
    2. உங்கள் டூர் ஆபரேட்டர் நாலம்பலம் என்ற ராமர், பரதர், லக்ஷ்மணன், சத்ருக்கனன் கோயில்களான திருப்புரையாறு, கூடல்மாணிக்கம், மூழிக்குளம், பாயம்மல் ஆகிய க்ஷேத்திரங்களை உட்படுத்தியிருக்கிறாரா? இல்லை என்றால் அதற்க்கு ஒரு நாள் ஒதுக்கிச் சேர்க்கவும்.

      Jayakumar

      நீக்கு
    3. உங்கள் டூர் ஆபரேட்டர் நாலம்பலம் என்ற ராமர், பரதர், லக்ஷ்மணன், சத்ருக்கனன் கோயில்களான திருப்புரையாறு, கூடல்மாணிக்கம், மூழிக்குளம், பாயம்மல் ஆகிய க்ஷேத்திரங்களை உட்படுத்தியிருக்கிறாரா? இல்லை என்றால் அதற்க்கு ஒரு நாள் ஒதுக்கிச் சேர்க்கவும்.

      Jayakumar

      நீக்கு
  6. பட விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது.
    வீட்டிலிருந்து பார்க்கும் வாய்ப்பு வரும் போது பார்க்கிறேன்.
    தியேட்டர் எல்லாம் போய் பார்க்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் ஓடிடியில் வந்துவிடுகிறதே. வந்துவிடும் போது பாருங்கள் சகோதரி கோமதி அரசு.

      மிக்க நன்றி சகோதரி

      துளசிதரன்

      நீக்கு
  7. கீதா, துளசி அண்ணன்.. நலம்தானே.. மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு போஸ்ட் போட்டிருக்கிறீங்கள்போல:)))...
    இது துளசி அண்ணன் தியேட்டரில் பார்த்த புதுப்படமோ??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் , அதிரா சகோதரி, நாங்கள் நலம். நீங்களும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறோம். வீடியோக்கள் வருகின்றனவே பார்ப்பதுண்டு. கை மட்டும் தம்ப்ஸ் அப் போடுவதுண்டு.

      ஆமாம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பவும் வேலைப்பளு.

      ஆம் தியேட்டரில் பார்த்த படம். இங்கு எங்கள் ஏரியாவில் நிலம்பூர் எனும் இடம் வீட்டிலிருந்து 10 கிமீ தூரத்தில் இருக்கிறது அங்குதான் இப்படி பார்ப்பதுண்டு. இது நல்ல படம் என்று தோன்றியதால் இங்கு சொன்னேன்.

      உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

      துளசிதரன்

      நீக்கு
  8. //சூக்ஷ்மதர்ஷினி என்றால் மைக்ரோஸ்கோப் - நுண்ணோக்கி.//

    ஓ ஹா ஹா ஹா நல்லவேளை சொன்னீங்கள், நான் ஏதோ அம்மன் பெயராக்கும் என நினைச்சேன்... மலையாளமோ?..

    நஸ்றியாவும் நடிக்கிறாவா?.. நடிக்கமாட்டேன் எனத்தானே திருமணம் பண்ணிக்கொண்டு போனவ... பெர்மிஷன் கிடைச்சிருக்குப் போலும் ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.. பார்த்துட்டாங்களா... இனி கொஞ்ச நாள் 'சூக்ஷ்மதர்ஷினி அதிரா' என்று பெயர் வருமோ....

      நீக்கு
    2. ஹாஹாஹா ஆமாம் ...பிலஹரி இப்ப ...

      கீதா

      நீக்கு
    3. கேட்டா....ஆமாம் இந்த அதிராவும் எல்லாம் நுண்ணோக்கி, லென்ஸ் வைச்சுப் பார்ப்பவங்களாக்கும்னு சொல்லிக்குவாங்க

      கீதா

      நீக்கு
    4. சிரித்துவிட்டேன் சகோதரி உங்கள் கருத்தைப் பார்த்து. அம்மன் பெயராக இருக்குமோ என்றதைப் பார்த்ததும்'.

      ஆம் அதனால்தான் இங்கு அதன் அர்த்தத்தைச் சொன்னேன் தமிழில் எழுதும் போது அதன் அர்த்தமும் சொல்ல வேண்டும் படமும் அதை ஒட்டியதுதானே.

      நஸ்ரியா நல்ல நடிகை. முன்பு மஞ்சுவாரியாரும் இப்படி நடிக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தார் இப்ப நடிக்கிறார். இப்படியான நல்ல நடிகைகள் நடிக்காமல் இருப்பது என்பது அவர்களுக்கு மட்டுமல்ல சினி உலகிற்கும் ரசிகர்களுக்குமே கூட இழப்புதான். எனவே அவர்கள் மீண்டும் வந்து நடிப்பது நல்லது. நஸ்ரியா நன்றாகச் செய்திருக்கிறார். தொடர்வார்கள் என்று நினைப்போம்

      மிக்க நன்றி அதிரா சகோதரி உங்கள் கருத்திற்கு

      துளசிதரன்

      நீக்கு
    5. அதிரா சூக்ஷ்மதர்ஷினின்னு அம்மன் பெயராக இருக்கலாம் தான் ஆனா பாருங்க நீங்க அந்தப் பெயரை அம்மன்ற அர்த்தத்தில் வைதுக் கொண்டுவிடாதீங்க. அப்புறம் இங்க தமிழ்நாட்டுலருந்து உங்களைத் தேடி பல்லாயிரக்கணக்கான பக்த கோடிகள் வந்துடப் போறாங்க. ஏற்கனவே புலாலியூர் பூஸாநந்தா...இப்ப சக்தியாகிட்டாங்களான்னு..ஹாஹாஹா ..

      பிலஹரி ன்றத பார்த்ததும், பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை மாதிரி இந்த அதிராவும் பிலஹரி ராகம் பாடுறதுல வித்தகியோன்னு நினைக்க ஆரம்பிச்சுட்டேன்...பிலஹரி சூக்ஷ்மதர்ஷினி - ஆஹா இது கூட நல்லாருக்குல்ல!

      கீதா

      நீக்கு
    6. ஹா ஹா ஹா ஸ்ரீராம் சொன்னதைப்போல பெயர் மாற்ற நினைச்சேன் ஆனா..

      .// நீங்க அந்தப் பெயரை அம்மன்ற அர்த்தத்தில் வைதுக் கொண்டுவிடாதீங்க.//
      கீதாவின் கொமெண்ட் பார்த்து, என் முடிவை மாத்திட்டேன், தேம்ஸ் கரை ஆச்சிரமமே முட்டி வழியுது பக்தர்களால்:)).. பின்பு அம்மனாகவும் மாறினால்.... அன்னபூரணி அம்மா ஆக்கிடப்போகினம் என்னை ஹா ஹா ஹா..

      நீக்கு
    7. ஓஹோ அதிரா, அன்னபூரணி அங்கும் ஃபேமஸ் ஆகிட்டாங்களா? உங்க தேம்ஸ் கரை ஆசிரமம் பத்திரம்!!!

      கீதா

      நீக்கு