வியாழன், 15 மார்ச், 2018

பர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 4


முந்தைய பகுதிகளின் சுட்டிகள்….


பாறைகள் நிறைந்த பகுதியின் தொடர்ச்சியும், கடப்பாறைப் பகுதியும், கோயிலை அடையும் பகுதியும் அடுத்த பதிவில்…என்று சென்ற பகுதியை முடித்திருந்தேன். இதோ அப்பகுதிகளின் படங்களும் அதன் கீழேயே விளக்கங்களும்.

நண்பர் ராமன் க்ளிக்கிய படம். இப்பகுதியை அடுத்து பாறைப்பகுதி
பாறையின் மீது குரங்கார்....நாங்கள் என்ன வைத்திருக்கிறோம் என்று பார்க்கிறார்
குரங்கார் அமர்ந்திருக்கும் பாறையின் அருகில் ஒரு கடை அதன் அருகில் இந்த அம்மி உரல்....
இதன் வழி ஏறி......
பாறைக்கற்களின் வழி ஏறி நடந்த போது இதோ கீழே அடுத்து வரும் பாறைப் பகுதிக்கு முன் ஒர் இடத்தில் சில காட்சிகளைக் க்ளிக்கினேன்.
இதோ இந்தப் பாறையின் இடுக்கின் வழி ஏறி நுழைந்து செல்ல வேண்டும். 
இப்பகுதியில் இருந்து நேரே ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பிரிகிறது என்றாலும் எந்த வழி வேண்டுமானாலும் செல்லலாம். நேரே சென்றால் கடப்பாறைப் பகுதி வழி செல்லவேண்டும். இப்படத்தில் இடப்புறத்தில்  படிகள் பகுதி தெரிகிறதல்லையா அது இறங்குவதற்கு என்றாலும் ஏறியும் செல்லலாம். இரு பகுதியும் ஒரு 20 நிமிடத்தில் ஒன்றிணைந்து விடுகிறது. அதன் பின் ஒரே வழிதான்..
கடப்பாறைப் பகுதி….இதுதான் கடினமான பகுதி…நண்பர் ராமனின் கிளிக்
கடப்பாறைப் பகுதி தொடர்கிறது….நண்பர் ராமனின் கிளிக்ஸ்
அப்பகுதி கடந்ததும் அடுத்து செங்குத்தான படிகள் மற்றும் வழுக்கும் பாறை எல்லாம் ஏறும் முன் சிதிலமடைந்த கோட்டை போன்ற ஒன்றின் பகுதி. அதற்குச் செல்ல நேரமில்லாததால் செல்லமுடியவில்லை. கோட்டை இருந்ததன் அடையாளம்…
இதோ தெரிகிறதா செங்குத்தான படிகள்… இதன் வழிதான் அடுத்து ஏற வேண்டும் இவை சமீபத்தில் கட்டப்பட்டதாத் தெரிகிறது. கம்பிகள் கட்டப்பட்டிருந்தாலும் கீழே நோக்கினால் பள்ளம் தான்…இப்படத்தில் உச்சியில் தெரிவது புதிதாக எழுப்பப்படும் மண்டபம், அதன் அப்புறம் இருக்கிறது கோயில்..
கோயிலை சமீபத்துவிட்டோம்….
மேலே…படத்தில் உள்ள பகுதி வழியாகச் சென்ற போது இடப்புறம் உள்ள காட்சியை ஒரு கிளிக்
இதோ இறுதிப் பகுதி….கோயிலை நெருங்கிவிட்டோம்…
கோயிலின் முகப்பு வாயில்….படிகள் ஏறிவிட்டால்…..

மிகச் சிறிய கோயில். இறைவன் இறைவியான ஸ்ரீ பிரம்மராம்பிகை சமேத ஸ்ரீ மல்லிகார்ஜுனர் மிக அழகான லிங்க வடிவில். நந்திஎம்பெருமான் முன்னில் காட்சி தருகிறார். மூன்று சந்நதிகள் இருக்கின்றன.

நண்பர் ராமனின் கிளிக்ஸ் கோயிலின் ஒரு புறம்..
ஹப்பா!!!! கோயிலை வந்தடைந்துவிட்டோம்!!! எல்லாரும் ஜோரா கைதட்டுங்க!!! அடைந்ததும் அப்படி ஒரு ஆனந்தம்! அதை வார்த்தைகளால் விவரித்திட முடியாது!!!!

முதல் சந்நதியில் காளி, விநாயகர், சிவனின் அம்சமான பைரவர், அகத்தியர், முருகன் வள்ளி தேவசேனாவுடன் மற்றும் நந்திஎம்பெருமானும் காட்சி தருகின்றனர். தொட்டடுத்த சந்நதியில் ஈஸ்வரன் மல்லிகார்ஜுனர் லிங்க வடிவில் நந்திஎம்பெருமான் முன்னிலையில். மூன்றாவது சந்நதி இறைவன் சன்னதியின் இடப்புறம், பக்கவாட்டில் இறைவி பிரம்மராம்பிகை. கோயிலின் காலம் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்று சொல்லப்படுகிறது. கோயிலை அப்போது வழிபட்ட ராஜா பற்றிய தகவல்கள் எல்லாமே பல வலைத்தளங்களில் இருப்பதால் நான் இங்கு தரவில்லை.


கோயிலின் சைடில் இருந்த கதவு…அம்பிகையைன் சன்னதியின் பின்புறம் எனலாம்....ஒரு க்ளிக்….

என்னைக் கவர்ந்த விஷயங்கள். கோயிலுக்குக் கதவுகள் எதுவும் கிடையாது என்பதால் எப்போதும் இறைவனை தரிசிக்கலாம். கோயிலில் பூசாரியோ, குருக்களோ கிடையாது. நாமே இறைவனுக்கு அபிஷேகம் செய்து பூசை செய்யலாம். அதற்கானப் பொருட்களை நாம்தான் கொண்டு செல்ல வேண்டும். கொண்டு செல்ல முடியவில்லை என்றாலும், கோயிலின் கீழ் நுழைவு வாயிலில் படியேறும் முன் ஒரு சிறுகடை இருக்கிறது. அங்கு அகல்விளக்குகள், ஊதுபத்தி மற்றும் ஒரு சில பூசை சாமான்கள் பெற்றுக் கொள்ளலாம். விலை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். இருக்கத்தான் செய்யும். அத்தனை உயரத்திற்கு அவர் பொருட்களைக் கொண்டு செல்வதே பெரிய விஷயம். இங்கு பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில் அன்னதானமும் நடைபெறுகிறதாம். தினமும் இறைவனுக்கான மலர்களை ஒருவர் கீழிருந்து மேலே கோயிலுக்குக் கொண்டு செல்வதாகச் சொன்னார்கள். தினமும் கோயில் வரை ஏறி இறங்கி!!! அந்த பக்தர் வாழ்க! பல்லாண்டுகாலம்!

நாங்கள் சென்றிருந்த போது ஒரு குழு இறைவனுக்குத் தாங்கள் கொண்டுவந்திருந்த அபிஷேகப் பொருட்கள் வைத்து அபிஷேகம் செய்து பூசை செய்தனர். மலர்கள் கொண்டு அலங்காரமும் செய்தனர். மிக அழகான தரிசனம். அங்கு வெளிச்சம் இல்லை என்பதால் தங்கள் மொபைல் லைட்டை வைத்துக் கொண்டுதான் செய்தனர். அப்புறம் தாங்கள் கொண்டு வந்திருந்த அகலில் விளக்கேற்றி வைத்தனர். ஆனாலும் அந்த ஒளி போதவில்லை. அவர்கள் பூசை செய்து கொண்டிருந்தாலும் நாம் உள்ளே சென்று இறைவனை அருகில் கண்டு வணங்கிவிட்டு வரலாம். 

இறைவன், இறைவி மற்ற சன்னதி எதையும் நாங்கள் புகைப்படம் எடுக்கவில்லை. சன்னதிகள் இருட்டாக இருந்ததால் என் கேமராவில் சரியாக வரவில்லை. எங்கள் குழுவில் இருந்த மற்றவர்களும் எடுத்திருக்கவில்லை. எனவே அப்படங்களைத் தர இயலவில்லை. ஆனால் இணையத்தில் வேறு சிலர் எடுத்தவை இருக்கின்றன. http://arunachalagrace.blogspot.in/2015/03/parvathamalai-summit.html குறிப்பாக இந்தத் தளத்தில் மிக அழகாக இறைவன் மற்றும் இறைவியின் படங்களும், சமீபத்தில் கட்டப்பட்ட கோயிலின் முன்புறப் படங்களும் இருக்கின்றன.



இக்கோயில் 600 ஆண்டுகளாக எந்தவித புனரமைப்பும் செய்யப்படாமல், கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்ததால் இறைவன் இறவி அருளால் புனரமைப்புப் பணிகள் நடைபெறத் தொடங்கியது. இத்தனை உயரத்தில் கட்டுமானம் எப்படி? எங்கிருந்து பொருட்கள் என்ற கேள்விகள் எழுகிறதல்லவா. இக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் தங்களால் இயன்ற நன்கொடை, கட்டுமானப் பொருட்கள் என்று வழங்கியிருக்கின்றனர். சென்னையில் இக்கோயிலுக்கு நன்கொடை வழங்கும் குழுக்கள் பல இருக்கின்றன என்பது அங்கிருந்த சில தகவல்கள் தெரிவித்தன.

பொருட்கள் எல்லாமே மலையின் அடிவாரத்தில் வைக்கப்பட்டுவிடுமாம். மலையேறும் பக்தர்கள் ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொருவரும் அப்பொருட்களில் தங்களால் கொண்டு செல்ல முடிந்த அளவு சுமந்து கொண்டு ஏறி மலையில் கொண்டு சேர்ப்பார்களாம். அப்படி நடைபெறத் தொடங்கிய போது 2009ல் ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்தினால் தடைபட்டு மீண்டும் 2010 ல் தொடங்கியது. மெதுவாகத்தான் பணிகள் நடைபெற்றிருக்கின்றன. இத்தனை உயரம் ஏற வேண்டாமா? அப்படிச் சுமந்து சென்ற அத்தனை பக்தர்களின் உழைப்பாலும், இறைவன் இறைவியின் அருளாலும் 2016ல் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. இப்போது கோயிலின் அருகில் மற்றொரு மண்டபம் தயாராகி வருகிறது. 


நண்பர் ராமனின் க்ளிக்ஸ்

கோயிலைச் சுற்றி கொஞ்சம் எறி இறங்கி என்று வலம் வரலாம். கோயிலின் வெளிப்புறத்தில் சூலங்கள் இருக்கின்றன. இந்த சூலங்களின் அருகே, மேலே உள்ள அக்கதவின் அருகே தான் புண்ணியத் தீர்த்தம்….


புண்ணியத் தீர்த்தமும் இருக்கிறது. அத்தண்ணீரைத்தான் மக்கள் எடுத்து இறைவனின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்துகிறார்கள். அது வற்றுவதில்லையாம். நெட்டில் முன்பு சென்றவர்கள் போட்ட படங்களில் அத்தண்ணீர் மிக மிக நன்றாக இருக்கிறது. ஆனால் நாங்கள் சென்றிருந்த போது தண்ணீர் அழுக்காகவும் குப்பைகள் சில மிதந்தும் காணப்பட்டது.

ஒரு சிலர் பகல் வேளையில் மலை ஏறுகிறார்கள். பெரும்பான்மையான மக்கள் இக்கோயிலுக்கு எந்தப் பாதை வழி மலையேறினாலும் அந்திமாலை மயங்கும் நேரத்தில், இரவில் மலை ஏறிச் சென்று கோயிலில் தங்கி இறைவனைக் கண்டு தரிசித்துவிட்டு, பூசை செய்வோர் பூசையும் செய்துவிட்டு, மறுநாள் காலையில் இறங்கிவருகிறார்கள். இத்தனைக்கும் மின்சார இணைப்பு கோயிலிலும் இல்லை, வழியிலும் இல்லை.


உச்சியிலிருந்து சுற்றிலும் இருந்த காட்சிகளை கேமரா கண்களுக்குள் சிறை பிடித்தேன்!! அதில் இதுவும்...தூரத்தில் தெரியது ஜவ்வாது மலைத்தொடராம்..மேலும் சில காட்சிகள் இதோ...
இவை ஒரு புறம் என்றால்……
இவை மறு புறம்….

தரிசனம் முடிந்து நாங்கள் அந்தப் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மண்டபத்தினுள் சென்று நாங்கள் கையில் கொண்டு சென்றிருந்த உணவைச் சாப்பிட்டோம். அங்கு தண்ணீர் கிடையாது என்பதால் கையில் கொண்டு சென்றிருந்த பாட்டில் நீரைத்தான் கை கழுவவும் பயன்படுத்திக் கொண்டோம். மலையின் மேலிருந்து பார்க்கும் போது அழகான மலைகளும், கீழிருக்கும் வயல்வெளிகளும் கிராமங்களும் என்று காட்சிகள். கொஞ்சம் க்ளிக்கிக் கொண்டு கீழிறங்கத் தொடங்கினோம்.

கோயிலை சமீபிக்கும் போது பாறைகளைப் பற்றிக் கொண்டு ஏறுகிறோம் இல்லையா…அங்கு ஏறியதும் வலப்புறத்தில் பிரியும் இவ்வழிதான் இறங்குவதற்கு…
இப்படி இறங்கிவிட்டால் அப்புறம் ஏறிய வழியேதான் இறங்க வேண்டும்…இந்தப்படிகள் முடியும் இடத்தில் தான் ஏறும் வழியான கடப்பாறை வழி பிரியும்….

ஏதாவது சூடாகக் குடித்தால் தேவலாம் போலிருக்க வழியில் இருந்த கடை ஒன்றில் சிலர் டீ, சிலர் மூலிகை சூப் என்றிட நான் வழக்கம் போல் காபி குடித்துவிட்டு இறங்கினோம். ஏறிய போது கடைக்காரர்கள் எங்களை ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போங்கள் என்று சொன்ன போது இறங்கும் போது வருகிறோம் என்று சொன்னதால் அப்படி நடுவில் கடையில் சிலர் மசாலா வடை, எனர்ஜி டிரிங்க் என்று சாப்பிட குரங்கார்கள் வடைக்கு அடி போட அவருக்கும் கொடுத்துக் களித்து இறங்கினோம்.

இறங்கிய போது தோழி வைத்திருந்த முதுகுப் பையை அவர் கையில் பிடித்திருக்க, குரங்கார் ஒருவர் அதைப் பிடித்து இழுக்க தோழி அவரைத் துரத்த முயன்றும் அவர் விடுவதாக இல்லை. பறித்துக் கொண்டு ஓடத் தொடங்கினார். அப்புறம் ஆண்கள் கம்பால் தட்டிக் கொண்டு ஓடிச் சென்று பையை மீட்டுக் கொண்டு வந்தனர். 

சிலர் முன்னதாக இறங்கிவிட்டனர். படிகள் முடியும் இடத்தில் அவர்கள் காத்திருக்க, என்னுடன் வந்தவர்களும் என்னால் ஒரு அரை மணி நேரம் தாமதமாகிட நாங்களும் அவர்களுடன் இணைந்திட எல்லோரும் அடிவாரப் பாதையில் நடந்து வண்டியை அடைந்தோம். மலையிலிருந்து 3.15க்கு இறங்கத் தொடங்கி 7 மணியளவில் வந்து சேர்ந்தோம்.

கள்ளக்குறிச்சிதான் தங்குவதற்கு வசதிகள் உள்ள அருகில் இருக்கும் ஊர் என்பதாலும், கள்ளக்குறிச்சியில் தங்குவதற்கு லாட்ஜ் பதிவு செய்யப்பட்டிருந்ததாலும் அதை நோக்கிப் பயணம். மீதமிருந்த உணவை வண்டியிலேயே சாப்பிடும் விட்டோம். 9 மணியளவில் சென்றடைந்தோம். லாட்ஜிற்குச் சென்றதும் சிறிது நேரம் பயணம் பற்றி சிலாகித்து அவரவர் அனுபவ அளவலாவுக்குப் பிறகு மறுநாள் கோமுகி அணை மற்றும் பெரியார் நீர்வீழ்ச்சிக்குச் செல்ல எப்போது தயாராக வேண்டும் என்று என் மைத்துனர் நேரம் சொல்லிட பெண்கள் ஓர் அறையிலும், ஆண்கள் ஓர் அறையிலுமாகத் தூங்கச் சென்றோம். மறுநாள் சென்ற இடங்களைப் பற்றி அடுத்த பதிவில்....அதோடு முடிந்துவிடும் இப்பயணத் தொடர்!

தொடர்வோம்….

-------கீதா



61 கருத்துகள்:

  1. அந்த அம்மி உரலில் குரங்குகள் மாவாட்டி, சூடான பாறைகளில் தோசை சுடுமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் ஓடோடி வந்து நான் ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஉ என்று சொல்லாமல் ஆனால் பூசார் வந்து அதாரு எனக்கு முன்பாக வந்து ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஉ ஆனது என்று சலங்கை ஒலி ஒலிச்சுட்டுப் போவாங்க ஹா ஹா ஹா

      ஹா ஹா ஹா ஹா குரங்கார்கள் செய்தாலும் செய்யும் ஸ்ரீராம்...அம்புட்டு குறும்புக்கார பசங்களா இருந்துச்சுங்க...பாட்டில்ல மூடியைத் திறந்து தண்ணிய குடிச்சுதுங்க...மூடி திறக்க முடியலைனா...அடில ஓட்டை போட்டு குடிச்சுதுங்க...ஜிப்பைத் தொறக்குதுங்க....(அது ஆண்களின் பேன்ட் ஜிப்பாக இருந்தாலும்...ஜிப் நா தொறக்கணும் அம்புட்டுத்தான்...!! ஹா ஹா ஹா) என்னன்றீங்க...ஸோ தோசை சுடறதெல்லாம் ஜுஜூபி அதுங்களுக்கு...

      கீதா

      நீக்கு
  2. மேகங்களையும், மலை ஓரங்களையும் பார்த்தால் நம்மால் புகைப்படம் எடுக்கும் ஆவலைக் கட்டுப்படுத்த முடிவதில்லை இல்லை? ஆனாலும் கண்ணால் பார்க்கும் அழகு படங்களில் முழுமையாக வராதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் கண்ணால் பார்க்கும் அழகு கேமராக்குள் வருவதில்லை....இயற்கை இயற்கைதான் அதை மிஞ்ச யாரால் முடியும்...என்றாலும் அப்புறம் நாம் பார்த்து மகிழ அதுவும் வெளியில் செல்ல முடியாத போது இவை எல்லாம் பொக்கிஷமாக நம்மை மகிழ்விக்கும் என்று எல்லாத்தையும் பிடிச்சுப் போட்டுறணும்னு தோனூம்....ஹா ஹா ஹா...அதான்...

      கீதா

      நீக்கு
  3. அந்தப் பாறை இடுக்கின் வழியாகவா? ஏறும் வழி பார்த்தால் தலை சுற்றுகிறது. செங்குத்தாக இருக்கும் போலவே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாறை இடுக்குதான் ஆனால் அப்படி ஒன்றும் கடினமில்லை...கவனமாக ஏறணும் அவ்வளவுதான்....இறுதியில்தான் செங்குத்து ஆனால் இப்போது படிகள் இருப்பதால் பரவாயில்லை...முன்பெல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பார்கள்...ஒருவேளை இனி வரும் மக்களுக்கு இன்னும் பல வசதிகள் வந்துவிடலாம்....கொஞ்சம் கொஞ்சமாக....

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  4. கோவிலை அடைந்ததும் ஆனந்தம்தான். ஆனால் அதே தூரம் இறங்கவேண்டுமே... ஆனால் இறங்குவது சற்றே எளிதுதான் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்... இறங்குவது எளிது நார்மலாக ஆனால் இங்கு படிகளில் ஓகே...ஆனால் பாறைகளில் இறங்குவது சறுக்கிவிட வாய்ப்புண்டு...சில இடங்கள் ரொம்பவும் பள்ளமாக இருக்கும்...அப்போது பார்த்துப் பார்த்து கால்கள் பாறைகளின் இடுக்கில் சிக்கிக் கொண்டுவிடாமல், கால்கள் பிசகிடாமல் இறங்கணும்....ஸோ ஏறுவது எளிது என்று தோன்றியது இங்கு...

      கீதா

      நீக்கு
  5. 'மறுபுறம்' படங்கள் அபாரம். ஒருவழியாகக் கோவிலைப் பார்த்து இறங்கி விட்டீர்கள். பதிவையும் வெளியேற்றி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஆமா ஸ்ரீராம் பதிவையும் வெளியேற்றிவிட்டேன் ஒரு வழியாக.... கோயிலைப் பார்த்து இறங்கியது கூட எளிது..இதுதான் கஷ்டமா போச்சு...

      மிக்க நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  6. படங்கள் அனைத்துமே பளீர் அழகு.
    விளக்கங்கள் ஸூப்பர் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி!!! கருத்திற்கும் ரசித்தமைக்கும்....

      நீக்கு
  7. ஹையோ !!அட்டகாசமான அழகான படங்கள் .
    படியேறும் பாதையில் இரும்பு கம்பிகள் போலிருக்கே அது கடப்பாரை பகுதி //எப்படி கடந்திங்க ??

    ஆனாலும் உங்களுக்கு நல்ல மனா திடம் கீதா ..படங்களை பார்த்தே எனக்கு தலை சுற்றுது !!!
    அந்த அம்மி உரல் அங்கே எப்படி ?
    தீர்த்தம் உள்ள பகுதியில் எப்படி குப்பை வந்து ??இவ்ளோ அழகான இடத்தில குப்பை போட எப்படித்தான் மனசு வருமோ

    //கோயிலின் கீழ் நுழைவு வாயிலில் படியேறும் முன் ஒரு சிறுகடை இருக்கிறது.//

    அதன் உரிமையாளர் தினமும் வந்து செல்வாரா இல்லைனா தாங்கும் வசதி உண்டா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்....ஆமாம் கம்பிகள் எல்லாம் இருந்தனதான்...கடினமாக இல்லை...குழுவாகச் சென்றதால்....அப்புறம் போகும் வழியில் ஆங்காங்கே சின்ன கடைகள் இருக்குனு சொல்லிருந்தேன் இல்லையா அப்படியான ஒரு சில கடைகளின் அருகில் உரல் அம்மி இருப்பதைக் காண முடிந்தது. இந்தப் படம் எடுக்கத்தான் கேமரா ஒத்துழைத்தது. கேமரா அவ்வப்போது எரர் வந்து முடங்கிவிட்டது. இல்லை என்றால் இன்னும் படங்கள் எடுத்திருப்பேன்...அதை ஏன் கேக்கறீங்க கேமரா முடங்கிய போது மொபைலில் எடுத்திருக்கலாம்...ஆனா பாருங்க என் அறிவு மொபைல் கேமரா சரியில்லைனு னினைச்சுட்டுருந்தேன் வீட்டுக்கு வந்து பல நாட்கள் ஆனப்புறம் தான் தெரிஞ்சுச்சு நான் மொபைல் கேமரா மே ல இருந்த அந்த பேப்பரை எடுக்கவே இல்லைனு ஹிஹிஹிஹிஹிஹிஹி...

      ஏஞ்சல் தீர்த்தம் முன்பு சென்றவர்களின் படங்களில் நன்றாக இருந்திருக்கிறது தெளிவாகச் சுத்தமாக....இப்ப பாருங்க எப்படி இருக்குனு...கஷ்டமா இருந்துச்சு பார்த்த போது...அதான் எப்படிக் குப்பை போட மனசு வருதோ அதேதான் எனக்கும் தோணிச்சு ஏஞ்சல்...

      நான் கேட்ட வரையில் கோயிலுக்குப் பெரும்பாலும் பௌர்னமி மற்றும் விசேஷ திங்கங்களில் மற்றும் லீவு நாட்களில் தான் மக்கள் வருவதால் கடைக்காரர்களும் அந்த தினங்களில் மட்டும்தான் வந்து கடையைத் திறக்கிறார்கள். மிச்ச நாட்களில் கீழே ஊரில்தான் இருக்கிறார்கள். மலைக்கு வரும் போது 2, 3, 4 நாட்கள் என்றால் அங்கேயே தங்கிவிடுகிறார்களாம்...இக்கடையாவது கோயிலின் அருகில்...அங்கு கோயில் திறந்திருப்பதால் வெராண்டா அல்லது மண்டபம் இப்படி படுக்கலாம்....ஆனால்...நடுவில் மலையில் கடை வைத்திருப்பவர்கள் தான்...எப்படியோ கடையிலேயே தங்கிவிடுகிறார்கள்...

      மிக்க நன்றி ஏஞ்சல்....

      நீக்கு
  8. ஆவ்வ்வ்வ்வ் மீயும் லாண்டட்ட்ட்ட்ட்:)..

    //பாறையின் மீது குரங்கார்..///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) என் கிரேட் குருவைப்பார்த்துக், குரங்கார் எனச் சொன்னமைக்கு என் வன்மையான கண்டனங்கள்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹாஹா வாங்க அதிரா...வரும் போதே சத்தத்தோடு வந்து பழகியாச்சு!!! ஹலோ உங்க க்ரேட் குரு குரங்கார் பாறைல தியானம் செய்யுறார்....அப்பத்தானே இப்போ ஞானியாகிட்ட உங்களை விட தன்னை அப்டேட் செய்ய முடியும்!!! ஹா ஹா ஹா

      நீக்கு
  9. //ஒரு கடை அதன் அருகில் இந்த அம்மி உரல்....//

    ஓ கருங்கல்லிலேயே செதுக்கி இருக்கினம்.. அதில்தான் மா அரைப்பார்களோ?..சூப்பரா இருக்கு.

    //இதன் வழி ஏறி......//

    அந்தக் கருங் கல்லிலே ஏதோ எழுதியிருக்குது கீதா.. அக் கல்லில் அதிரா என எழுதிப்போட்டு வந்திருக்கலாம்:).. இனி எங்காவது போனால் மறக்காமல் எழுதிப்போட்டு வரோணும் ஓகே?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில்தான் மா அரைப்பாங்களானு தெரியலை அதிரா...தண்ணீ வசதி எதுவும் இல்லை அங்கு
      எங்கோ ஒரு இடத்தில் கொஞ்சம் தண்ணீர் ஓடியது அதிலிருந்துதான் கொண்டு வருவாங்களானு தெரியலை இல்லை கீழிருந்துதான் கொண்டு வரணும

      ஆமாம் அதிரா அது சி யில் ஆரம்பித்து என்னை ஏதோ கெஸ் செய்ய வைத்தது வேண்டாம் என்று கடந்துவிட்டேன்...

      இனி அதிரா என்று எழுதி வைச்சுட்டா போச்சு...எதுக்கும் உங்க செக் கிட்ட கேட்டு சொல்லுங்க...ஹா ஹா ஹா

      நீக்கு
  10. அழகான பாதையாகத்தான் இருக்கு ஆனா கற்பாறைகள்.. வழுக்கினால் வெட்டிப் போடுமே காலை. மிகக் கவனமாக ஏற வேண்டும்.. அத்தொடு ஈரம் இருந்தாலும் வழுக்கிடும்போல இருக்கே.. பயமா இருக்கு.

    //இப்படத்தில் உச்சியில் தெரிவது புதிதாக எழுப்பப்படும் மண்டபம், அதன் அப்புறம் இருக்கிறது கோயில்..//
    அச்ச்சச்சோ நான் சத்தியமா அங்கு வரமாட்டேன் .. என்னா பயங்கரமா இருக்குது பார்க்க எனக்கு உசிர் முக்கியம்:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் காயம் படலாம்./...அதான் இனி ட்ரெக்கிங்க் போகும் போது நிறைய பாதுகாப்பெல்லாம் எடுக்கணும்னு இங்க இப்ப சொல்ல ஆரம்பிச்சுருக்கறதுனால டொக்டர் அதிராவை எங்களோடு இனி கூட்டிப் போகலாம்னு தீர்மானிச்சாச்சு!! ஹா ஹா ஹா ஹா

      நீக்கு
    2. அதிரா பயமே இல்லை...இதுவரை அங்கு சென்றவர்களில் எந்தவித அபாயமோ, இறப்போ ஏற்பட்டதாகத் தெரியவில்லை...சிறு குழந்தைகள் கூட ஏறுகிறார்கள் அதுவும் மாலை மயங்கும் நேரத்தில்...

      இரவு கோயிலில் விளக்கு இருக்காது பக்தர்கள் யாராவது அகல் ஏற்றினால் உண்டு என்று நினைக்கிறேன்...

      நீக்கு
  11. இவ்வளவு ஒரு அழகிய கோயிலை ஏன் அங்கு கொண்டுபோய்க் கட்டினார்களோ.. அடிவாரத்தில் கட்டியிருக்கலாம்.. பார்க்கவே பயங்கரம்.. கால் வழுக்கினால் நேரெ கீழே விழவேண்டியதுதானே கீதா?.. ஆனா இன்னும் சிறிது காலத்டில் கேபிள் கார் வசதி கொண்டு வந்திடுவார்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் இறைவன் லிங்க வடிவில் இருந்தார் என்று தான் சொல்லப்படுகிறது...லிங்கம் மட்டும்..அப்புறம் தான் கோயில் எழுப்பப்பட்டதாம் அங்கிருந்த மன்னரால்....அப்புறம் இப்போதைய கலர் எலலம் சமீபத்தியது....இறைவன் சன்னதி முன் கொஞ்சம் எக்ஸ்டென்ட் செய்து டைல்ஸ் போட்டு கட்டியிருக்காங்க....
      கேபிள் கார் கொண்டு வருவாங்களா இருக்கலாம்...ஆனால் இது தனி அனுபவம்....அப்புறம் மலையில் அழகு கெட்டுவிடும் கண்டிப்பாக...கேபிளில் சென்றாலும் இந்த அனுபவம் என்பது தனிதான் அதிரா....

      நீக்கு
  12. ///கோயிலின் காலம் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்று சொல்லப்படுகிறது.//

    ஓஓஓ.. நம்ப முடியவில்லை.. இவ்ளோ புதுசா பேணுகிறார்கள்.

    //கோயிலுக்குக் கதவுகள் எதுவும் கிடையாது என்பதால் எப்போதும் இறைவனை தரிசிக்கலாம். //
    அப்போ என் குருவின் சேட்டைகள் அங்கு பலமா இருக்குமே:).. விளக்கிலிருந்து அத்தனையும் தூக்கிப் போய் விடுவார்களே:)..

    //தினமும் இறைவனுக்கான மலர்களை ஒருவர் கீழிருந்து மேலே கோயிலுக்குக் கொண்டு செல்வதாகச் சொன்னார்கள். தினமும் கோயில் வரை ஏறி இறங்கி//

    ஓ இக்காலத்திலும் இப்படிப் பக்தர்கள் இருக்கிறார்கள்தானே அப்போ..

    //இறைவன் இறைவியின் அருளாலும் 2016ல் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. இப்போது கோயிலின் அருகில் மற்றொரு மண்டபம் தயாராகி வருகிறது. //

    அவ்ளோ பெரிய இடமிருக்கோ மேலே.. பார்த்தால் குத்திண்டு நிற்கும் மலைபோலே இருக்கே.

    கனடாவின் சி என் டவரின் உச்சியில் ஏறி நின்று பார்ப்பதைப்போல இருக்கு:).

    //அந்திமாலை மயங்கும் நேரத்தில், இரவில் மலை ஏறிச் சென்று கோயிலில் தங்கி இறைவனைக் கண்டு தரிசித்துவிட்டு, பூசை செய்வோர் பூசையும் செய்துவிட்டு, மறுநாள் காலையில் இறங்கிவருகிறார்கள். //

    ஓ.. இரவில் பயமா இருக்குமே.. பாம்புகள் ஏதும் வந்தால்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுசா தெரிவது சமீபத்து ரெனவேஷன் வொர்க் நால....பாழடைந்துதான் இருந்ததாம் 2009 ல்தான் வொர்க் ஆரம்பிச்சு இப்படி எல்லாம் செய்திருக்காங்க...

      அங்கு வரும் பக்தர்கள் மெய்யாலுமெ இதைக் கடினமாக நினைப்பதில்லை. எங்களுடன் பெண்கள் எப்படி அழ்காக ஏறினார்கள் தெரியுமா....ஆங்காங்கே அப்படியே மண்ணில் அல்லது பாறையில் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்து எடுத்து ஆனால் வேகமாக ஏறினார்கள். நன்றாக குண்டாவும் இருந்தார்கள்...சிரமம் இல்லாமல் ஏறினார்கள்...

      ஒரே இடத்தில் அல்ல அதிரா...கோயில் இருக்கும் பாறையில் அதற்கு மட்டும் தான் இடம்....அடுத்து கொஞ்சம் கீழே இறங்கி பாறை வழியாக மேலே ஏறினால் மண்டபம் கட்டப்படும் பாறை...இங்கிருந்து பார்க்கும் போது கோயில் மறைந்திருக்கும்...இடையில் பாறைகள் பள்ளம் இருப்பதால்...அப்புறம் இந்த மண்டபம்தான் ஏறும் போது தெரியும்...

      கனடாவின் சி என் டவர் ஆமாம் எங்களுடன் வந்த என் கணவரின் தங்கை என் மகன் ஒன்டேரியோவில் னார்த் அமெரிக்கன் வெட் லைசன்ஸ் வாங்க கோர்ஸ் அட்டென்ட் செய்யப் போயிருந்த போது அவர் மகனின் இடத்திற்குச் சென்று மகனையும் அழைத்துப் போயிருந்திருக்கிறார்...

      அங்கு பாம்புகள் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை...அதிரா..இரவில் உங்களின் குரு வரமாட்டார்...

      மற்றொன்று நாம் நகர வாழ்க்கைக்குப் பழகிப் போய்விட்டதால்....இதெல்லாம் பயமாக இருக்கும்..ஆனால் இயற்கையோடு வாழும் கிராம மக்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி...

      மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  13. //குரங்கார் ஒருவர் அதைப் பிடித்து இழுக்க தோழி அவரைத் துரத்த முயன்றும் அவர் விடுவதாக இல்லை. பறித்துக் கொண்டு ஓடத் தொடங்கினார். அப்புறம் ஆண்கள் கம்பால் தட்டிக் கொண்டு ஓடிச் சென்று பையை மீட்டுக் கொண்டு வந்தனர்.//

    ஓ.. ஹா ஹா ஹா.. என்னா வீரத்தனம்:)..

    ஓ இப்பயணம் இன்னும் தொடர்கிறதோ.. அருமை தொடரட்டும்...இனி மலைப்பயம் இல்லாத பயணம் என நினைக்கிறேன்.

    படங்கள் அனைத்தும் கிளியராக நன்றாக இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அதிரா உங்கள் குரு இருக்காரே பலகலை நிபுணர்!!! (உடனே அதான் அவர் சிஷ்யை நானனும் அப்படி பல அவதாரங்கள் எடுக்கிறேன்னு சொல்லப்படாது!! ஹா ஹா ஹா ஹா ஹா!!!) ஹையோ அவரது விளையாட்டுகள் எல்லாம் நாங்கள் வியந்து நின்று ரசித்து வந்தோம்...

      ஆமாம் இனி மறுநாள் பயணம் கொஞ்சம் மலை ரோடு என்றாலும் மலைகளில் நடை கிடையாது. அங்கும் நாங்கள் சென்ற அருவிக்கு மேலே செல்ல வேண்டும் என்றால் ட்ரெக்கிங்க் செய்யணும்...மகன் அவன் கல்லூரியில் படித்த போது சென்றிருக்கிறான்...நாங்கள் இம்முறை செல்லவில்லை நேரமில்லை ஏற்கனவே பர்வதமலை ஏறிவிட்டதால்...

      படங்கள் பற்றி சொன்னதுக்கு மிக்க நன்றி அதிரா...

      நீக்கு
  14. பதிவை படிக்கும் போது இப்படி ஒரு அழகான சன்நிதியை பார்க்காமல் விட்டு இருக்கின்றோமே என்ற ஆதங்கம் வருகின்றது .என்றாலும் குழுவாக போனால் நிச்சயம் அமைதியாக விரும்பிய படி தருசனம் செய்யம்ய்டியாது என்பதை உங்களின் பகிர்வும் சொல்வதில் அறியமுடிகின்றது எப்படியும் அடுத்த முறை நிச்சயம் பார்க்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தனிமரம்....கண்டிபபாகப் பார்க்க வேண்டிய இடம் நேசன்....நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்...அடுத்த முறை வரும் போது சென்று வாருங்கள்....குழுவாகச் சென்றால் அது உண்மைதான் விரும்பியபடி செய்ய முடியாது...நீங்கள் டிசம்பரில் செல்லுங்கள் அப்போதுதான் வெயில் கடுமை இருக்காது....சென்று அங்கேயே தங்கி நன்றாகத் தரிசனம் செய்துவிட்டு மறு நாள் இறங்குங்கள்...மலை உச்சியில் நல்ல காற்று வரும்...அருமையான இடம் இரவு தங்கினால் அது அசாத்தியமான இடம்....அங்கு அமானுஷ்யங்கள் நடப்பதாகவும். அதாஅது இரவில், சித்தர்களின் நடமாட்டம் இருக்கும் அற்புதங்கள் நிகழும் என்றும் சொல்லுகிறார்கள்..மிக்க நன்றி நேசன்

      நீக்கு
  15. மலையுச்சியில் இருந்து கீழே பார்க்கும் உணர்வு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி தோன்றும்!))) குரங்கார் வரவேற்பது தனிப்பாசத்தில்!)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சரிதான் நேசன்...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருமாதிரி...

      ஹா ஹா ஹா ஆமாம் குரங்காருக்கு எங்கள் மேல் தனி பாசம் இருந்ததுதான்...மிக்க நன்றி நேசன்

      நீக்கு
  16. அடுத்த பதிவை சீக்கரம் போடுங்கோ இவ்வளவு அதிக இடைவெளி கூடாது அப்புறம் உத்தரப்பிரதேச தேர்தல் போல ஈர்ப்பு இருக்காது!))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் நேசன்...கண்டிப்பாகப் போடுகிறேன்...இம்முறை இணையம் சரியாக வேலை செய்யாததால் போட இயலாமல் போனது நேசன்...அடுத்த பதிவைப் போட்டுவிடுகிறேன்...இங்கும் அரசியலா ஹா ஹா ஹா ஹா...

      நீக்கு
  17. மிக அருமையான பயணம்! படங்கள் எல்லாம் கொள்ளை அழகு. உங்கள் அனுபவங்கள் மெய் சிலிர்க்க வைத்தது. அதிலும் உச்சியில் இருந்து எடுத்த படங்கள் அற்புதமாக வந்திருக்கின்றன. அவ்வளவு உயரத்தில் போய் முதல் முதல் கோயில் கட்டியவர்கள் யாரோ? அப்போதெல்லாம் இன்னமும் மலைக்காடுகள் அடர்ந்து இருந்திருக்கும்! எப்படிச் சாமான்களை எடுத்துச் சென்றனர்? விக்கிரஹங்கள் மலைக்கல்லிலேயே செதுக்கப்பட்டனவா? ஒவ்வொன்றும் நினைக்க நினைக்க ஆச்சரியம் மேலிடுகிறது. இப்போது திருப்பணி நடப்பது கூட அதிசயம்னு சொல்ல முடியாது! அந்தக் காலங்களில் எவ்வித வசதிகளும் இல்லாதப்போ இந்த மலை மேல் கோயில் கட்டிய புண்ணியவானையும் அதைக் கண்டுபிடித்துப் போகும்படி செய்த புண்ணியவானும் போற்றுதலுக்கு உரியவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா ரொம்ப ரொம்ப அருமையான பயணம்...இந்தக் கோயிலைக் காண உதவியவர் எங்களுடன் பயணித்த என் மைத்துனரின் நண்பர்தான்...

      படங்கள் பற்றி சொன்னமைக்கு மிக்க நன்றி அக்கா. அப்போது அங்கு ஆண்ட நன்னன் சேய் நன்னன்....விக்கி சொல்வது இதுதான்....//திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களைப்பற்றியும், அப்பகுதி மக்களைப்பற்றியும் குறிப்பிடும் ஒரே சங்க நூல் மலைப்படுகடாம் ஆகும். பத்துப்பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப்பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். // எனது முதல் பகுதியில் சொல்லிய்ருக்கிறேன் என்று நினைவு...

      ஆமாம் அப்ப எல்லாம் இன்னும் காடுகளும், இப்படியான வழியும் கிடையாது இதெல்லாம் சமீப காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வந்தவைதான்....அங்கிருந்த விக்கிரகங்கள் மலைக்கல்லில்தான் இருக்கின்றன. அதாவது ரொம்ப நம் பிற கோயில்களில் பார்ப்பது போல இல்லை. இறைவனும், அம்பிகையும் மட்டும் அப்புறம் சீர்ப்படுத்தப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது...ஆனால் லிங்க வடிவம் மலைபடுகடாம் பாடப்பட்ட காலத்திலேயே இருப்பதாகத்தான் சொல்லப்படுகிறது...மிகவும் ஆச்சரியமான கோயில்தான் அக்கா...நான் இங்கு கொடுத்திருக்கும் லிங்கில் போய் பாருங்கள் இறைவன் படங்கள் அலங்காரத்துடன் இருக்கும். என்னால் படம் எடுக்க முடியவில்லை நல்ல வெளிச்சம் இல்லாத பகுதியில் என் கேமரா சரியாக எடுக்காது...ஃப்ளாஷ் போட்டால் சுத்தம்!!!!

      கண்டிபபக அப்போது நடந்ததுதான் அதைச் செய்தவர்கள் தான் போற்றுதலுக்குரியவர்கள்....மிக்க நன்றி அக்கா

      நீக்கு
  18. ஆன்மீகம், இயற்கை, அழகியல் உள்ளிட்டவற்றைக் கொண்ட அருமையான பதிவு. வாய்ப்பு கிடைக்கும்போது அங்கு செல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா...கண்டிப்பாக வாய்ப்புகிடைக்கும் போது தவற விடாதீர்கள். நல்ல அருமையான இடம் கோயில்....

      நீக்கு
  19. ரொம்பநாளா படங்களையோ, பதிவையோ காணோமே என நினைத்திருந்தேன்..

    படங்கள் ப்ரமாதம். குரங்காரிடம் கேமராவை இழந்துவிட்டு வராமல் தூக்கிக்கொண்டுவந்தீர்களே..பாராட்டுகள். கஷ்டப்பட்டு மலையேறி இறைவன், இறைவியை இம்ப்ரெஸ் செய்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. படிகளைப்பார்க்கையில், முழங்காலுக்கு ’மூவ்’ தேவைப்பட்டிருக்கும்போலிருக்கிறதே.

    கதவில் சிவன். மேலே செல் நம்பர். சிவனே! சொல். உனக்குமா செல்?

    கடப்பாறைப்பகுதியை, சுற்றுவட்டாரத்தைப் படங்களில் பார்க்கையில் இங்கே ஒரு திகில் கதையைப் படமாக எடுக்கலாமோ என்றும் தோன்றியது. ஒல்லியான மஞ்சளான ஹீரோயினை (தமன்னா?) , கருப்பான குண்டான வில்லன் புஸ்..புஸ்..என்று மூச்சுவிட்டுத் துரத்துவதுபோல் ..வித் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் அண்னா அதை ஏன் கேக்கறீங்க....இணையத்தின் உபயத்தினால் பதிவு போட முடியாமல் போய்விட்டது...

      ஹா ஹா ஹா இறைவன் இறைவி இம்ப்ரெஸ் ஆனாங்களோ இல்லையோ நாங்க அந்த இடத்தைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆகிட்டோம்...

      ஆமாம் கேமராவை பக்கத்தில் கொண்டு போனாலே "உர்ர்ர்ர்ர்ர்ர்" சத்தம்தான்...பயந்து உள்ளே பதுக்கி காப்பாற்றிக் கொண்டு வந்தேன்..ஆனால் பாருங்க இப்ப கேமரா கம்ப்ளீட்லி அவுட்!!! குரங்காரின் வேலையா இருக்குமோ ஹா ஹா ஹா ஹா

      முழங்காலுக்கு "மூவ்" (ஹா ஹா ஹா ஹா சொல்லாடல்!!) தேவைப்படாமல் மூவ் ஆனது மறு நாள் அருவி வேறு மஸாஜ் செய்துவிட்டதே வரும் பாருங்க அடுத்த பதிவு...

      //கதவில் சிவன். மேலே செல் நம்பர். சிவனே! சொல். உனக்குமா செல்?// ஹா ஹா ஹ ஹாஅஹா ஆ...ரொம்பவே சிரிச்சுட்டேன் ரசித்தேன்...ஹப்பா உங்க கமென்ட்ஸ் செம!!!!! சொல்லாடல், நகைச்சுவை...போகிற போக்கில் அள்ளித் தெளிச்சுட்டுப் போறீங்க...

      ஹா ஹா ஹா ஹா உங்களின் பட ஐடியா ஹையோ சிரிச்சுட்டேன் முடிலப்பா...ஹையோ ஏதாவது டைரக்டர் எல்லாம்நம்ம தளத்தை வாசிக்கவா போறாங்க உங்க ஐடியாவைப் பார்க்க..ஆனா சூப்பர் ஐடியா.......அது சரி இதுதானே வேண்டான்றது....பாகுபலி பார்த்தீங்கதானே....தமனாவைச் சொல்லிட்டு வீர அனுஷைச் சொல்லாம போனா நம்ம ஸ்ரீராமுக்கு வருத்தம் ஆகிடும்...தமனாவை ஓட விட்டதுக்கும் இப்படி ஒல்லியான மஞ்சளான தமனா னு சொன்னதுக்கும் நெல்லை ஓடி வரப் போறார்...

      சரி தமனா ஓடறாங்க அவரைக் காப்பாத்தறது வீர அனுஷ்!!!! இது எப்புடி...!!!

      நீக்கு
  20. //அப்புறம் ஆண்கள் கம்பால் தட்டிக் கொண்டு ஓடிச் சென்று பையை மீட்டுக் கொண்டு வந்தனர்.//

    காலங்காலமாய்ப் பெண்களுக்காக இந்த ஆண்கள் படும்பாடு இருக்கிறதே..அப்பப்பா!
    பொறந்தாலும்.. ஆம்பளயாப் பொறக்கக்கூடாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹ்கா ஹஒயோ வயிறு புண்ணாகிடுச்சு ப்ளீஸ் இனி உங்க கமென்டோட புண்ணாற்றும் மருந்தும் இலவசமா கொடுக்கோனும் சொல்லிப்புட்டேன்...

      நாங்க கொஞ்சம் பின்னாடி இருந்தோம் இல்லைனா நாங்க ஓடிப் போயிருப்போம் தெரியுமா...நல்லகாலம் அதுவும் படில இறங்கும் போது...பாறைலநா ரொம்ப கஷ்டமா இருந்திருக்கும்....

      நீக்கு
  21. மலை உச்சிக்கு வந்ததும் எனக்கும் ஏகத்துக்கு களைப்பாகி விட்டேன்..

    சும்மா படித்ததற்கே இப்படி..
    முழங்கால் தேய நடந்தவர்களுக்கு எப்படியிருக்கும்!?...

    தங்களால் நானும் புண்ணிய பலன் எய்தினேன்..

    சிவாய நம!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு அண்ணா...களைப்பாகிடுச்சா...யாரங்கே அண்னாவுக்குப் பானகம் கொடுத்து இளைப்பாற வையுங்க!!

      இல்லை அண்ணா ஏறுவதும் இறங்குவதும் கடினமாக இருந்தாலும் அத்தனை சிரமமாகத் தெரியவில்லை..

      மிக்க நன்றி கருத்திற்கு...

      நீக்கு
  22. பொருட்கள் எல்லாமே மலையின் அடிவாரத்தில் வைக்கப்பட்டுவிடுமாம். மலையேறும் பக்தர்கள் ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொருவரும் அப்பொருட்களில் தங்களால் கொண்டு செல்ல முடிந்த அளவு சுமந்து கொண்டு ஏறி மலையில் கொண்டு சேர்ப்பார்களாம்.//

    எவ்வளவு புண்ணியமான காரியம்!
    அவர்கள் ஏறுவதே கஷ்டம் என்பது போல் இருக்கும் போது கட்டிட பணிக்கு சாமான்களை எடுத்து கொண்டு ஏறுவது என்றால் எவ்வளவு பெரிய விஷயம் ! திடமான பக்தி கொண்ட மக்கள் வாழ்க!

    ஏறும் பாதைகள் பயத்தை தருது.

    எப்படியோ ஏறி சாமி தரிசனம் செய்தவுடன் கிடைக்கும் நிம்மதி ஆனந்தம் சொல்ல வார்த்தை இருக்காது தான்.

    படங்கள் நீங்க்கள் எடுத்த்தும், நண்பர் எடுத்தும் அழகு.

    அடுத்த பதிவை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அக்கா...ஆமாம் அக்கா ஊர்மக்கள் தான் பொருட்களைக் கொண்டு சேர்த்து சீரமைப்புப் பணிகள் நடந்திருக்கு...மாபெரும் புண்ணிய காரியம்...

      இறைவனை அடையும் வழி எளிதல்லவே இல்லையா அக்கா...வாழ்விலும்தான். அதற்கு எத்தனை மனப்பயிற்சிகள் வேண்டும்...எனக்கு இப்பாதையை ஏறிய போது அப்படித்தான் தோன்றியது. முதலில் சம்மான ரோடு பாதை... மகிழ்வான பருவம்...அப்புறம் படிகள் ....கொஞ்சம் மெனக்கெடல் பருஅம்....அப்புறம் பாறை...உழைக்கும் பருவம்...அப்புறம் கடப்பாறைப் பகுதி செங்குததான் படிகல் பகுதி எல்லாம் இறைவனை அடைவதற்கான பயிற்சிப் பருவம்....என்று தோன்றியது...

      ஆமாம் அக்கா ரொம்ப மனதிற்கு இதமாக இருந்தது...

      மிக்க நன்றி அக்கா நண்பரைப் பற்றியும் இங்கு சொன்னமைக்கு...அவரிடம் சொல்கிறேன்..

      நீக்கு
  23. ரொம்ப நாளாக இடுகையின் தொடர்ச்சிக்குக் காத்திருந்தேன். 2000 ஆண்டுப் பழமையா? படங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. இறைவன் இறைவி படங்களைத் தளத்தில் பிறகு பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை இணையம் சரியாக இல்லாம...அப்புறம் மொபைல்ல ஜியொ 1.5 ஜிபி இருந்தும் அது மண்டைல உரைக்காம அப்புறம் நேத்து திடீர்னு காலைல பல்பு எரிஞ்சுச்சு உடனே கனெக்ட் பண்ணி ஹாட்ஸ்பாட் மூலமா... பார்த்து ஆஹா நெட் வர....பதிவு முதல்ல படங்கள் அப்லோட் பண்ணி...அப்புறம் இன்று பி எஸ் என் எல் உம் சரியாக்கிட்டாங்க...

      அந்த சைட் போய் பாருங்க நல்லாருக்கு படங்கள்..படங்கள் தேடினப்பதான் அந்த சைட் கிடைச்சுது....நானே அவருக்கு நன்றி சொல்லி படங்கள் அதுலருந்து எடுத்துப் போடலாம்னு பார்த்தேன்...அப்புறம் இங்கயே நிறைய ஸோ அந்த லிங்க் கொடுத்தா போதும்னு விட்டுட்டேன்....

      மிக்க நன்றி நெல்லை...

      நீக்கு
  24. சுனை நீரை நீங்கள் எடுத்தீர்களா? அதற்கு எளிதாகப் போக பாதை இருந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுனை கோயில் அம்பிகை சந்நிதியின் பக்கத்தில் மேல அந்த சிவன் கதவு இருக்கு இல்லையா...அப்புறம் நண்பர் ராமன் எடுத்த சூலம் படம் இருக்கு இல்லையாஅ அங்கதான்..சூலம் இருக்கும் படத்தில் ஒரு க்ரில் கதவு தெரிகிறது இல்லையா அதுதான் கோயிலின் சன்னதிகளின் முன்னால் இருக்கும் பெரிய வெராண்டவின் சைட் கதவு...நீங்க அந்த தளத்துல இந்த இடத்தைப் பார்க்கலாம்...அந்த க்ரில் கதவு அடுத்தாப்புல இங்க நான் கொடுத்துருக்கற சிவன் கதவு இருக்கு இல்லியா அந்தக் கதவு உள்ளிருந்து அம்பிகை சன்னதியின் அருகில் வெளியே வர....ஆனால் பூட்டியெ இருக்கு...அந்தக் கதவு பக்கத்துல ..இருக்கு சுனை...கோயிலை சின்னதா ஒரு பிரதட்சணம் வரும் போது கோயிலை ஒட்டித்தான் இருக்கு உள்ளேயே தான்...சுனையில் நீர் கொஞ்சம் குறைவாதான் இருக்கு....நான் மெதுவாக உட்கார்ந்து தவழும் நிலையில் உட்கார்ந்து மெதுவாகக் கைவிட்டு எட்டிய வரையில் எடுத்தேன்.....கொஞ்சம் பாசிபிடித்து அழுக்கு மிதந்து கொண்டிருந்தது....
      மிக்க நன்றி நெல்லை

      நீக்கு
  25. வழக்கம் போல் ...மிக அருமை கீதாக்கா படங்களும் செய்திகளும்....


    எவ்வொலோ பெரிய மலை அதன் மீது கோவில்...நினைக்கவே பிரமிப்பு...இங்கு சென்று வந்தால்ஆஹா..

    பதிலளிநீக்கு
  26. மிக்க நன்றி அனு!! அனு இப்பவே வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு குழந்தைகளோடு போய்ட்டு வந்துருங்க....ஆனா டிசம்பர் மாதத்துல போங்க...அப்ப பிள்ளைங்களுக்கும் லீவு இருக்குமே....சின்ன வயசுல ஏற முடிஞ்சப்ப போய்ட்டுவந்துறலாமெ இல்லையா...நீங்க ரொம்ப எஞ்சாய் பண்ணுவீங்க

    பதிலளிநீக்கு
  27. படங்களைப் பார்க்கும்போதே மூச்சு வாங்குகிறது
    மறக்க இயலாதப் பயணமாய் அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ நல்ல அனுபவம்...மிக்க நன்றிகருத்திற்கு

      நீக்கு
  28. குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனாகிய நன்னனின் நாடு. கருமையான விஷத்தை உண்ட கடவுள் (காலகண்டேஸ்வரர் ஆகிய சிவன்) உறையும் நவிரமலை. 'பல்குன்றக் கோட்டம்' மிக அழகான வர்ணனை.

    நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
    பேரிசை நவிர மேஎ யுறையும்
    காரி உண்டிக் கடவுள தியற்கையும் (மலைபடுகடாம்.81-84)
    http://know-your-heritage.blogspot.in/2017/02/naviram-hills-parvathamalai-and.html

    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஆர். முத்துசுவாமி ஐயா அவர்களுக்கு. தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்.

      ஆமாம் ஐயா இதைப் பற்றி நானும் கொஞ்சம் வாசித்தேன்...நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியையும் வாசிக்கின்றேன். மிக்க மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

      நீக்கு
  29. உண்மையில் இமாலய சாதனை. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோவின்ந்த ராஜு ஐயா...ஆமாம் ஒரு வயதிற்கு மேல் செல்ல இயலுமா என்று தெரியவில்லை...நன்றி ஐயா கருத்திற்கு

      நீக்கு
  30. வணக்கம் சகோதரி

    அழகான பர்வத மலையின் பயணம் குறித்த செயதிகள் பிரமிப்பை தருகின்றன.பயணம் ஒரு பக்கம் கடினமெனினும் மற்றொரு பக்கம் மிகவும் இனிமை நிறைந்ததாக இருந்திருக்குமென நினைக்கிறேன். எவ்வளவு அழகான இடங்கள்,பசுமை நிறைந்த மலைகள் என பயணம் நிச்சயம் இனித்திருக்கும். அனைத்துப் புகைப்படங்களும் அருமையாய் இருந்தது.ஒரு சில படங்கள் தங்களின் பயண சிரமங்களை எடுத்து காட்டியது.

    இறைவனை நாமே அபிஷேகம் செய்வித்து வழிபாடு செய்யலாம் எனும் போது, மனதிற்கு மகிழ்வாக மலை ஏறிய சிரமங்கள் கூட காணாமல் போவதை உணரலாம் அல்லவா!

    மலை என்றாலே குரங்கார்களின் ஆதிக்கந்தான். நிறைய பேர்களுடன் பயணம் என்றால் கொஞ்சம் பயமின்றி குரங்கார்களை ரசித்தபடி சென்று வரலாம். இல்லையென்றால் கஸ்டந்தான்.

    இதன் முந்தைய பகுதிகளையும் படித்து கருத்திடுகிறேன். அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன். மிக்கநன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா ச்கோ கருத்திற்கு மிக்க நன்றி!!! ஆமாம் இனிமையான பயணம்..மலை அழகு ஆம் நாமே செய்யலாம் ..அதுதான் எனக்குப் பிடித்தது...கூட்டம் இல்லை...நல்ல காற்று என்று சுகம்...

      மெதுவாக வாசித்துவிட்டுச் சொல்லுங்கள் சகோ...

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  31. படிக்கும்போது எப்போது இங்கே போகப்போகிறோமோ என்ற எண்ணம் வருகிறது. அழைப்பு வர வேண்டுமே.....

    படங்கள் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக அழைப்பு வரும் ஜி!! செல்லும் போது டிஸம்பர் சீசனில் செல்வது போல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் வெயில் என்றால் ரொம்பக் கடுமையாக இருக்கும் பகுதி...அதனால்....

      மிக்க நன்றி வெங்கட்ஜி..கருத்திற்கு

      நீக்கு