முதல் பகுதியின் சுட்டி https://thillaiakathuchronicles.blogspot.com/2018/01/Parvathamalai-Trekking-1.html
மலை ஏறத் தயாராக இருக்கச் சொல்லி
இதற்கு முந்தைய பகுதியை முடித்திருந்தேன். அதற்கு முன் நாங்கள் புறப்பட்டதையும் மலையடிவாரத்தைப் பற்றியும் சொல்லிவிடுகிறேன்.
கோடம்பாக்கத்திலுள்ள என் மாமியார்
வீட்டிலிருந்து காலை 4.30 மணிக்குப் புறப்பட இருந்ததால் நாங்கள் ஒரு சிலர் முதல் நாள்
இரவே அங்குச் சென்று தங்கிவிட்டோம். மறுநாள் மதியம் மலையில் சாப்பாடு கிடைக்காது என்பதால்
என் மைத்துனர் சப்பாத்தி, அதற்குத் தக்காளி வெங்காயம் சேர்த்து வதக்கிய கறி, மற்றும்
தயிர்சாதம் எல்லாம் கேட்டரிங்க் செர்வீஸில் ஆர்டர் செய்திருந்ததால் இரவு 10 மணிக்குச்
சுடச் சுட வந்தது. ஆற வைத்து அதை மூன்று முதுகுப் பைகளில் ஓரளவு சமமாக வெயிட் இருக்குமாறு
மாற்றிக் கொண்டோம். மறுநாள் காலை ஏற்கனவே 6 முறை சென்ற அனுபவம் உள்ள நண்பரும் மற்றொரு
நண்பரும் வந்து சேர்ந்தனர். 4.30க்குச் சரியாகப்
புறப்பட்டு வழியில் கத்திப்பாரா சந்திப்பில் மற்றொரு நண்பர் குடும்பம் (அக்குடும்பத்தில்
ஒரு குட்டிப் பையனும் அடக்கம்) ஏறிட பர்வதமலையை நோக்கிய எங்கள் பயணம் தொடர்ந்தது.
சென்னையிலிருந்து பங்களூர் செல்லும்
தேசிய நெடுஞ்சாலையில் வழியில் முருகன் இட்லி உணவகத்தில் காலை உணவிற்காக வண்டி நிறுத்தப்பட்டது.
எங்கள் குழுவில் ஒரு பழக்கம் உண்டு. நபர்கள் அதிகம் என்பதால், எங்குச் சென்றாலும் உணவகங்களில்
நேரம் அதிகம் ஆகாமல் இருக்க, தனித்தனியாகச் சொல்லாமல், யாரேனும் ஒருவர் பெரும்பாலும்
என் மைத்துனர் எல்லோருக்குமான உணவினை சொல்லிவிடுவார்.
யாருக்கேனும் உணவு அதிகம் என்றாலும் மற்றவர்கள்
அதனைப் பங்கு செய்துகொள்வார்கள். குறிப்பாக நான் எனக்கு அதிகம் என்பதால் எடுத்து வைத்துவிடுவேன்.
எல்லோருக்கும் இட்லியும், கொஞ்சம் பொடி தோசையும் ஆர்டர் செய்து காஃபியும், தேநீரும்
சொல்லி முடித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
ராணிப்பேட்டை, ஆரணி வழி போளூர்
கடந்ததும் போளூர் செங்கம்/போளூர் சாலையில் அருணகிரிமங்கலம் வழி வலப்புறமாக தென்மாதிமங்கலம்-பர்வதமலை
சாலையில் சென்று மலையடிவாரக் கிராமமான தென்மாதிமங்கலத்தை அடைந்தோம். 4 மணி நேரப் பயணம்தான்
என்றாலும் இடையில் காலை உணவிற்கு நிறுத்தியதால் சென்றடைந்த நேரம் 9.15.
தென்மாதிமங்கலம் கிராமத்தில் வண்டி நின்ற இடத்திலிருந்து எடுத்த படம்
அங்கு மெட்டடரை நிறுத்திவிட்டு
ஏறுவதற்கு முன் இயற்கை உபாதைகளை முடித்துக் கொள்ள அங்குக் கட்டணக் கழிப்பிடமும் குளியல்
அறை வசதிகளும் இருக்கிறது ஆனால் அப்போது திறந்திருக்கவில்லை. என்றாலும் வந்த வழியிலேயே
ஒரு 5 நிமிடம் நடந்தால் ஒரு வீட்டின் பின்புறம் 4 குளியல் அறைகளுடன் கூடிய கழிவறைகளும்
இருப்பதை அறிந்து அங்குச் சென்று கட்டணம் செலுத்தி (ஒரு நபருக்கு 5 ரூபாய். பொதுக்
கழிப்பிடத்திலும் அதே கட்டணம் தான்.) வேலைகளை முடித்துக் கொண்டோம். சுற்றிலும் வயல்கள்,
வயல்களில் கடலைச் செடிகள், ,மரங்கள் என்று அழகாக இருக்க அங்கு மீன் கொத்திப் பறவைகள்,
கருங்குருவிகள், இரட்டைவால் குருவிகள், கொக்குகள் என்று ரம்மியமான சூழல். அமைதியோ அமைதி!
மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
மூன்று பேர் (6 முறை சென்ற அனுபவம் உள்ள நண்பர், மற்றொரு நண்பர் மற்றும் என் மைத்துனர்) சாப்பாடு மற்றும்
தண்ணீர் பாட்டில்களுடன் ஆன முதுகுப் பையுடனும், 7 வயது சிறிய பையன் (துறு துறு சமர்த்துப் பையன். அடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.) வந்ததாலும், எல்லோருக்காகவும் ஏறும் போது இடையிடையில் தளராமல் இருந்திட வேண்டி இனிப்பு
மிட்டய்கள், சுவை கூட்டப்பட்ட பால் டப்பாக்கள், தண்ணீர் பாட்டில்கள் என்று முதுகுப் பையுடன் பையனின் பெற்றோர் தயாராகினர். அங்கு இருந்த ஸ்ரீ பச்சையம்மன் கோயிலும் அங்கிருந்த சிலைகளும் ஈர்த்திட நான் சில படங்கள் எடுத்துக் கொண்டேன்.
தென்மாதிமங்கலம் ஸ்ரீ பச்சையம்மன் கோயிலும் அங்கிருந்த சிலைகளும்
பாதை தொடக்கத்தில் வீர ஆஞ்சநேயர் கோயில்
சுமார் 4560 அடி உயரத்தில் செங்குத்தான பாறையின் மீது அமைந்துள்ள கோயிலை நோக்கி எல்லோரும் 9.45 மணிக்கு நடக்கத் தொடங்கினோம். பாதை தொடங்கும் இடத்தில் வனத்துறை அலுவலகமும், செக்போஸ்டும் (சும்மா ஒரு பெரிய கம்பி குறுக்கே உள்ளது அவ்வளவே) வீர ஆஞ்சநேயரின் பெரிய சிலையும் கோயிலும் இருந்திட வணங்கிவிட்டு நடக்கத் தொடங்கினோம். வீர பத்ரர், வனதுர்கை கோயில்களும் வழியில் உள்ளன. படம் எடுக்கவில்லை. கேமரா அவ்வப்போது மக்கர் செய்தது.
கோயிலை அடைய மொத்தம் 5.5 கிலோமீட்டர்.
நமது வேகத்தைப் பொருத்து அங்கு அடையும் நேரம் மாறுபடும். 3.1/2 மணி நேரத்தில் அடையலாம்
என்று சொல்லப்பட்டாலும் எங்களுக்கு 4.1/2 மணி நேரம் ஆனது இடையில் ஆங்காங்கே ஓய்வு எடுத்துச்
சென்றோம். செல்லும் பாதை 4 பகுதிகள். நடந்த போது என் மனதில் தோன்றியதை அடைப்பிற்குள்
கொடுத்துள்ளேன்.
முதல் பகுதி நேர்ப்பாதை - சாப்பாட்டு முதுகுப் பையுடன் இருவர்
முதல் பகுதி 2 கிலோமீட்டருக்குள்
நேர் பாதை. தார் ரோடு, மண் பாதை, என்று இருக்கிறது. (பிறக்கும் போது குழந்தைப் பருவத்தில்
மகிழ்ச்சியாக வாழ்க்கை எளிதாக)…இப்பாதையில் ஒரு சாப்பாட்டுப் பை இழுக்கும் முதுகுப்
பை என்பதால் கொஞ்சம் மாற்றி மாற்றி இழுத்துக் கொண்டு நடந்தோம்.
இடையில் வந்த காட்டாற்றின் ஓடை. இது கடந்ததும் சிறிது தூரத்தில் படிகளில் ஏற வேண்டும்
சுற்றிலும் அடர்த்தியாகக் காட்டு
மரங்களும் தூரம் செல்லச் செல்ல காடும் அடர்ந்து நிழலாகவே இருந்தது. மழைக்காலம் என்பதால்
இருக்கலாம். ஆனால் வெயில் காலத்தில் இம்மலை ஏறுவது எளிதல்ல என்றே தோன்றியது. இடையில்
காட்டாறு ஓடையாகச் செல்லும் பாதையைக் கடந்து செல்ல வேண்டும். சமீபத்து மழையினால் சிறிது
தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. மனது லயித்தது. ஆனால் நெடுந்தூரம் செல்ல வேண்டும் என்பதால்
நிற்க முடியவில்லை. படம் மட்டும் எடுத்துக் கொண்டு தொடர்ந்தோம்.
இப்பாதை முடிவடைந்ததும் இரண்டாவது
பகுதியான படிகள் ஏறும் பாதை தொடங்குகிறது. (வளர்ந்து வரும் பருவம்… கொஞ்சம் மெனக்கெடல் நம் வாழ்க்கையில்)
தொடக்கத்தில் கொஞ்சம் எளிதாக இருந்தாலும் போகப்
போகக் கொஞ்சம் செங்குத்தாக இருக்கிறது. 1263 படிகள். படிகள் ஏறும் இடத்திலிருந்து நம்
மூதாதையர்களின் ஆட்டம் தொடங்குகிறது. அதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். சரி சற்று
ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
........தொடர்வோம்.
-----கீதா
முதலில் ஒரு ஆஜர்...
பதிலளிநீக்குபின்னர் வருகிறேன்.
அட்டெண்டென்ஸ் வைச்சாச்சு!! ஓகே!! வாங்க எப்ப டைம் கிடைக்குதோ அப்ப!ஸ்ரெராம்...
நீக்குபிறகு வருகிறேன்.
பதிலளிநீக்குஅழகிய படங்கள் ரசிக்க வைத்த காட்சிகளே...
நீக்குசுற்றுலா செல்வது விருப்பமானது எனது ஒன்றரை வயதிலிருந்தே ஆர்வமாக இருந்தேன்.
தொடர்கிறேன் மலை ஏற...
ஹா ஹா ஹா ஒன்றறை வயதிலிருந்தேவா...ஆஹா!! வாங்க மலை ஏற படி ஏறத் துவங்கும் வரை வரை ரெஸ்ட் எடுங்க...கில்லர்ஜி
நீக்குமிக்க நன்றி கருத்திற்கு
என்னாது ஒண்ணேரை வயசிலிருந்தே இன்றுவரை ஆர்வமாக இருக்கிறார் ஆனா இன்னும் ஏறவே இல்லையாமா கில்லர்ஜி அவ்வ்வ்வ்வ்வ்வ்:)) இதைப் பார்த்தா மலை ஏறும் ஆசைபோலத் தெரியல்லியே..:))
நீக்குஇப்போதே மூச்சு வாங்குகின்ற மாதிரி இருக்கு...
பதிலளிநீக்குஇருந்தாலும் கூடவே நானும் வர்றேன்..
துரை செல்வராஜு அண்ணா....பரவால்ல அண்ணா ஆற அமர்ந்து நிதானமாகப் படி ஏறலாம்...அழகான கோயில் அண்ணா...அடுத்த பதிவுகளில் வரும் ...வாங்க எங்க கூட
நீக்குமிக்க நன்றி கருத்திற்கு
மீயும்..மீயும் கூடவே வாறேன் கீதா:)), ஆனாக் கலா அண்ணியும் வரோணும்:)
நீக்குஹா ஹா ஹா அதிரா வாங்கோ கலா அண்ணியையும் நாம் இழுத்துக் கொண்டு போவோம்..என்ன சொல்றீங்க!!!
நீக்குவீர ஆஞ்சநேயர் படம் அழகு....
பதிலளிநீக்குவெகு சுவாரஸ்ய பயணம்...தொடர்கிறேன்...
மிக்க நன்றி அனு கருத்திற்கு
நீக்குபசிய மரங்களும் நீலவானமும் அழகோ அழகு! 5.5 கி.மீட்டர் நடையா? இப்போதே மூச்சு திணறுகிற மாதிரியும் கால்கள் வலிக்கிற மாதிரியும் இருக்கிறது! ஆனாலும் பயணம் உங்கள் தெளிவான நடையில் சுவாரஸ்யமாக இருக்கிறது கீதா!
பதிலளிநீக்குஆமாம் மனோ அக்கா ரொம்ப அழகா இருந்தது ஆனால் இந்த டிசம்பர் சீசனில் சென்றால்தான் நல்லது. மேமாதம் என்றால் கொடுமையாக இருக்கும் வெயில்...முதலில் அப்ப்டித் தோன்றும் மனோ அக்கா ஆனால் நடக்க நடக்கத் தெம்பு வந்துவிடும்...மிக்க நன்றி மனோ அக்கா ...கருத்திற்கு
நீக்குபயணம் சுவாரசியம்தான். 'கேட்டரிங்க்' செர்வீஸ் - அருமையான ஐடியா. இல்லைனா யாராவது உணவு தயார் செய்வதில் நேரமும் எனெர்ஜியும் போகும்.
பதிலளிநீக்குபெங்களூர் போகும் வழியில் உள்ள முருகன் இட்லி கடை - அங்கு நான் சர்க்கரைப் பொங்கல் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். ரொம்ப எக்சலென்டாக இருக்கும் (ஆனா, எனக்கு மட்டும் 3 கப் தேவை).
சென்றவர்களின் age range கொடுக்கலை. எல்லோராலும் நடக்க முடிந்ததா என்று தெரிந்துகொள்ள ஆசை. பயணத்திற்கான சாப்பாடும், உங்கள் பைகளில் சரி சமமாக distribute செய்திருந்தீர்களா? தொடர்கிறேன்.
பொதுவாக வீட்டில் செய்து எடுத்துக் கொள்வதுண்டு. ஆனால் இந்த ட்ரிப்பில் கேட்டரிங்க் சர்வீசில் சொல்லி வரவழைத்தோம் மிகவும் சொகர்யமாக இருந்தது.
நீக்குஹா ஹா ஹா சர்க்கரைப் பொங்கல் 3 கப் உங்களுக்கு மட்டும்...!!!
வயது எல்லாம்வ் வரும் நெல்லை அடுத்த பதிவுகளில்....எல்லோராலும் நடக்க முடிந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் உச்சியை அடைந்தவர்கள் யாரெல்லாம் என்பதையும் காரணத்தையும் சொல்கிறென்...வரும் பதிவில்.... ஒரு நண்பருக்குத் திரும்பி வரும் போது முட்டி வலித்தது. கஷ்டப்பட்டு இறங்கினார்... நான் திரும்பி வரும் போது பாதி தூரத்திற்கும் மேல் கட கடவென எல்லோருக்கும் முன்னதாக இறங்கிக் கொண்டிருந்தேன்...பாறைகளில் கூட. அப்புறம் கொஞ்சம் முட்டி மடங்கத் தொடங்கியது. மெதுவாக என் நாத்தனாரின் உதவியுடன் இறங்கிவிட்டேன். நேராக நடப்பதில் பிரச்சனை இல்லை. அப்புறம் ஒன்றுமில்லை...இப்போது தினமும் நடைப்பயிற்சியின் போது இந்திராநகர் பாலம் அதாவது ரோட்டைக் கடக்க இருக்கும் நடைபாதை பாலத்தில் ஏறி இறங்கி ஏறி இறங்கி என்று 8 முறை செய்கிறேன். இடையில் விடுபட்டிருந்தது. இப்போது மீண்டும் தொடர்கிறேன்...
நாங்கள் 5 பேர் தூக்கவில்லை...ஆண்கள் மூன்று பேர் மற்றும் தோழியின் பெண் சிறிது தூரம் தூக்கி வந்தார்கள். கிட்டத்தட்ட சமமாகப் பிரித்து இருந்தாலும் தயிர்சாதம் கொஞ்சம் ஹெவி....ஆனால் அப்படிப் பிரித்ததில் கொண்டு சென்ற நபர்கள் மாற்றிக் கொண்டதால் என்ன ஆயிற்று என்பதைப் பதிவில் சொல்கிறேன்...
மிக்க நன்றி நெல்லை...கருத்திற்கு
என்னாதூஊ பாலத்தில 8 முறை ஏறீஈஈஈஈ ஏறீஈஈஈ இறங்குறீங்களோ?:) ஏன் பாலத்தடியில் புதுசா ஆராவது?:) சரி சரி ஹையோ எனக்கெதுக்குப் புயு வம்பு:)) ஹா ஹா ஹா..
நீக்குஅதிரா... முன்னேறிய நாடுகள்போல் (தாய்வான், சைனாவும் முன்னேறிய நாடுகள்தான்), நடைக்காக நிறைய பூங்காக்களோ அல்லது, நடைபாதைகளோ இந்தியாவில் பெரும்பாலும் இல்லை. இப்போ வரைல, இந்திரா நகர் பாலத்துல, வியாபாரிகள் (காய்கறி போன்ற) ஆக்கிரமிக்கவில்லை போல் தெரிகிறது. உங்களை மாதிரி, நதிக் கரையோரம், யாருடைய தொந்தரவு இல்லாமல் (ஆனால் அங்க அங்க பெஞ்சுகள்ல, ஆவிகள் பூங்கொத்துக்களோடு உட்கார்ந்துகொண்டிருக்கும்) நடப்பதற்கான வசதி சென்னையில் கிடையாது.
நீக்குஅதிரா இங்கு எங்கள் வீட்டருகில் பழையமகாபலிபுரச் சாலையில் செர்வீஸ் லேன் என்றும் நடைபாதை என்றும் இருக்கிறது. அங்கு முன்பெல்லாம் வண்டிகள் புகுந்துவிடும். ஆனால் இப்போது எல்லாம் அடைத்து அங்கு வண்டிகள் விடுவதில்லை. எனவே எளிதாக இருக்கு நடக்க. மற்றும் இங்கு தனியார்ப்பகுதியும் வருவதால் அதாவது அங்கு பொதுப் போக்குவரத்து நுழைய முடியாது. முழுவதும் மரங்கள் அடர்ந்த பகுதி பல கல்விவளாகங்கள் நிறைந்த பகுதி. எனவே இங்கு மட்டும் நடப்பது எளிது..அது போல மெரினா கடற்கரை நடக்கலாம்..மற்றபடி நெல்லை சொல்லியிருப்பது போல இந்திரா நகர் பாலத்துல எந்த ஆக்ரமிப்பும் இதுவரை இல்லாததால் நான் என் நடைப்பயிற்சியுடன் ஏறி இறங்குவதையும் செய்கிறேன்...4 முறை ஏறுதல்...4 முறை இறங்குதல்...இல்லை என்றால் நடப்பது என்பதெல்லாம் கடினம் தான் நகருக்குள்...ஏதேனும் ஒரு இரு சக்கரவாகனம் நம்மை மோதுவது போல் செல்லும். அல்லது செயின் போட்டிருந்தால் செயினை அறுப்பார்கள். இல்லை மொபைல் திருடு போகும்...எங்கள் பகுதியிலும் எப்போதேனும் இது நடக்கும்...
நீக்குபடங்கள் எல்லாம் பச்சைபசேல்னு அழகா இருக்கு கீதா ..ஒரு படம்தான் கோபத்தை வரவைத்தது அது தென்மதிமங்கலம் கிராமத்தில் வண்டி//நின்ற இடத்தில இருந்த பேப்பர் தட்டுக்கள் குப்பைகள் :(
பதிலளிநீக்குகேட்டரிங் சர்வீஸ் ஐடியா நல்ல இருக்கே இங்கே கஷ்டம் அப்படி கொடுத்தாலும் சான்ட்விச் மாதிரித்தான் கிடைக்கும்
ஓடையில் நடப்பது இனிமை இல்லையா அழகான அனுபவங்கள் தொடருங்கள்
வாங்க ஏஞ்சல்!!! ஆமாம் ஏஞ்சல்! பல இடங்களிலும் குப்பைகள் இருந்தனதான். மலையில் இருக்கும் கடைகள் குப்பைக்கூடைகள், ட்ரம் அல்லது வாளி போன்றவை வைத்திருக்காங்க குப்பைகளைப் போட. அங்கு சுத்தமாக இருக்கு ஆனால் வேறு சில ஏறும் இடங்களில் கூட ப்ளாஸ்டிக் குப்பைகள் கிடக்கின்றன...அது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. ஆமாம் என் மைத்துனர் ப்ளான் செய்தார் கேட்டரிங்க் சர்வீச்.
நீக்குஆமாம் அங்கெல்லாம் சான்ட்விச் மாதிரிதான்.
ஓடையில் நடப்பது ரொம்பவே இனிமை ஆனால் காலில் ஷூக்கள்! ஹா ஹா ஹா ஹா...நேரமும் இல்லையே ஏறி இருட்டுவதற்குள் இறங்கவும் வேண்டுமே...என்று
மிக்க நன்றி ஏஞ்சல்
ஆஹா உங்கள் பயணம் நன்கு பிளான் பண்ணப்பட்ட அழகிய பயணமாக இருக்கு... கொஞ்சம்தான் படிச்சேன் விரைவில் வருகிறேன்.
பதிலளிநீக்குஆமாம் ஆல் க்ரெடிட்ஸ் டு மை மைத்துனர். வாங்க அப்புறம் வந்து படிங்க....பூஸார் ரொம்பவே பிஸி போல...
நீக்குமிக்க நன்றி அதிரா
கடினமான பயணம். எனினும் வெற்றிகரமாக முடித்தது ஆண்டவன் அருளாலே தான்! நாங்க பல வருடங்களாக ஆசைப்பட்ட ஒன்று! எனினும் நிறைவேறவில்லை. மலைப்பயணம் என்பது எங்களுக்கு அஹோபிலம் சென்றதிலும், திருக்கயிலையிலும் கிடைத்தது! சாப்பாடு கொண்டு போகும்போது கஷ்டமாக இருந்தாலும் சாப்பிட்டு முடித்த பின்னர் காலியாகி விடும் என்பதால் சுமை தூக்கும் சிரமம் இல்லை. நாங்களும் அநேகமாகக் கையில் கொண்டு போனாலும் சாப்பிடுவது என்பது அரிதாகவே இருக்கும்! சாப்பிட முடியாது. பயணம் முடியும் வரை அதிலேயே கவனம் இருக்கும்.
பதிலளிநீக்குஆமாம் கீதாக்கா வெற்றிகரமாக முடிந்தது...இறைவன் அருளால் தான். யாருக்கும் எதுவும் நேரிடாமல்.
நீக்குஅஹோபிலமும் போயிருக்கோம் அக்கா...அதுவும் நரசிம்மர் பாதம் இருக்கும் அந்த க்ளிஃப் கூட ஏறியிருக்கோம் கீழே கிடு கிடு வேலி ரொம்ப அழகா இருக்கும். பாறையில் ஏறுவது கஷ்டமாகத்தான் இருந்தது. முதல் நாள் முழுவதும் நடைப்பயணம் தான். மறு நாள் தான் ஜீப் வைத்து அழைத்துச் சென்றார்கள். திருக்கயிலை போய் வந்தாச்சா அதைவிடக் கடினம் எதுவும் இல்லையே கீதாக்கா...நாங்கள் சாப்பாட்டு மூட்டை பற்றி சொல்லுகிறேன்..கொஞ்சம் குறைந்ததுதான்.
மிக்க நன்றி கீதாக்கா...
நானுமே நடைப்பயிற்சியை மீண்டும் ஆரம்பிக்கணும்! காலைவேளையில் மொட்டைமாடியில் பனி கொட்டுவதால் போகக் கொஞ்சம் யோசனை! கீழே போகலாம் எனில் கூட்டம்! :)
பதிலளிநீக்குநடைப்பயிற்சி தொடர்ந்துட்டுதான் இருக்கு அக்கா. இந்தப் படி ஏறி இறங்கி செய்வதுண்டு...அது இடையில் விடுபட்டிருந்தது...அதை இப்ப மலை ஏறினப்ப என்ன மிஸ்டேக்னு தெரிஞ்சுது.அதாவது மலை ஏறினதுல நம்மகிட்ட என்ன பிரச்சனை புதுசா முளைச்சிருக்குனு நல்ல ஒரு ஹெல்த் செக்கப் ஆச்சு!!!மாஸ்டர் செக்கப்னு கூடச் சொல்லலாம்....ஸோ மீண்டும் தொடங்கிருக்கேன்.....இந்த ஏறி இறங்கல் எல்லாம்...
நீக்குமிக்க் நன்றி கீதாக்கா கருத்திற்கு
குருப் நல்லபடியாக இருந்தால் பயணம் மிகவும் சுவராஸ்யமாக இருக்கும்
பதிலளிநீக்குவாங்க மதுரை...அதே அதே....எங்கள் க்ரூப் ரொம்ப ரொம்ப நல்ல க்ரூப்!!! அதனால நல்ல ஸ்வாரஸ்யமான க்ரூப். இந்த க்ரூப்புடன் தான் நான் பயணம் செய்ய விரும்புவது. ஆனால் அது பல வருடங்கள் கழித்து இப்போதுதான் நடந்துள்ளது...
நீக்குமிக்க நன்றி மதுரை சகோ கருத்திற்கு
படங்கள் அழகு. காட்டாறு பாதையின் நடுவேயே செல்கிறதா? இது மாதிரி இடங்களுக்குச் செல்கையில் நொறுக்குத் தீனிக்கு மனம் ஆசைப்படுமாயினும் அவற்றைத் தவிர்க்கவேண்டும் இல்லையா?!
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
ஆமாம் ஸ்ரீராம் காட்டாரு பாதையாகத்தான் தெரிந்தது. குறுக்கே ஓடியது சிறிதாக. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக இருக்கலாம். மேலேயும் ஒரு சிறு இடத்தில் சிறியதாக ஓடை ஓடியது. வலப்பக்கம் ஆறு இருப்பது போல் சல சல சத்தம் கேட்டது. ஆறு இருந்ததும் தெரிந்தது, சிறிதாகத் தண்ணீரும் இருந்தது படம் எடுத்துள்ளேன் ஓரளவு வந்தது. இங்கு போடுவேன். அந்த ஆற்றிற்குச் செல்லும் பாதையும் கொஞ்ச இறங்கி சரிவில் செல்லும் படி இருந்தது ஆனால் ஏறுவதற்குத்தானே நேரம் அதனால் எக்ஸ்ப்ளோர் பண்ண முடியவில்லை. இல்லை என்றால் எங்கள் குழு இறங்கியிருக்கும். அத்தனை பேரும் ஆர்வமுள்ளவர்கள்...
நீக்குஆமாம் நொறுக்குத் தீனி ஆஹா..ஆனால் எண்ணைப் பண்டம் எதுவும் கொண்டு செல்லவில்லை ஏறுவதற்குச் சிரமம் என்பதால்...அன்று ஒன்லி சாக்கலேட், ஹெர்ஷ்லே ஃப்ளேவர்ட் மில்க் தோழியின் பெண் கொண்டு வந்திருந்தார்.
நன்றி ஸ்ரீராம் கருத்திற்கு
பயணப்பதிவு சுவாராஸ்யமாக செல்கிறது........பெரிதாகவும் இல்லாமல் அதே நேரத்தில் சிறிதாகவும் இல்லாமல் சரியான அளவில் சொல்லி சென்றவிதம் அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி மதுரைத் தமிழன் கருத்திற்கு
நீக்குகூடவே பயணிப்பது போல் ஈர்த்துச் செல்கிறது எழுத்து...
பதிலளிநீக்குதொடர்கிறோம்...
மிக்க நன்றி குமார் நீங்களும் எங்களுடன் பயணிப்பது போன்று உணர்ந்ததற்கு...
நீக்கு1263 படிகள்கொண்ட மலைக்கு உங்களுடன் நானும் சேர்ந்தே ஏறத்தயாராக இருக்கின்றேன் விரைந்து அடுத்த தொடரையும் எழுதுங்கோ!))) படங்கள் அருமை .
பதிலளிநீக்குமிக்க நன்றி தனிமரம்...படிகள் மட்டுமில்லை தனிமரம்...பாறைகள் சரளைக்கற்களும் உண்டு..ஓகேயா...ரெடியா வாங்க எங்களோடு எற...
நீக்குபர்வதம் மலைக்கு என்றாவது ஒரு பொழுதில் செல்லவேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது.
பதிலளிநீக்குகண்டிப்பாகச் உங்கள் ஆர்வம் நிறைவேறிடட்டும்....தனிமரம் நேசன்!!
நீக்குஆஹா இப்போதுதான் படிச்சு முடிச்சேன் கீதா, நடையின் ஆரம்பமே மிக அழகாக பசுமையாக இருக்கு.. அந்த மலை அடிவாரப் படங்கள் மனதை அள்ளுதே... ஆஞ்சநேயர் சூப்பராக இருக்கிறார் சிரஞ்சீவி மலையைத்தூக்கியபடி.
பதிலளிநீக்குதொடக்கம் பார்க்க ..ஓ இது ஈசியா ஏறலாமே என்பது போல இருக்கு ஹா ஹா ஹா..
ஆமாம் இது ஏறிடலாம்....போகப் போகத்தானே இருக்கு. ஆனால் முன்பை விட இப்போது கொஞ்சம் வசதிகள் எல்லாம் செய்திருக்காங்க...
நீக்குஆஞ்சு ரொம்ப அழகுதான் இல்லையா...
மிக்க நன்றி அதிரா...
அதிரா இப்ப லேட்டஸ்டா உங்களுக்கு விருப்பமாகிப் போன ஜாமீ!!! ஆஞ்சுவைப் போட்டிருக்கேன் பாத்தீங்களா!!! பிடிச்சு வைச்சுக்கோங்கோ!! ஹா ஹா ஹா
நீக்குஇலங்கையில் கதிர்காமம் மலையும் கொஞ்சம் குத்தாகவே ஏறும்.. முழுக்க படிகள்தான். மூத்தவருக்கு மொட்டைபோட அங்குதான் போனோம், ஆர்வக் கோளறில்.. எங்கள் அப்பாவும் , என் கணவரும்.. மகனை நான் தூக்கிக் கொண்டு ஏறுகிறேன் .. இல்லை நீங்க ஏறுங்கோ நான் தூக்கி வருகிறேன் எனப் போட்டி போட்டார்கள்... கால்வாசிகூட ஏறவில்லை... ஆராலுமே தூக்கிக் கொண்டு ஏறமுடியாமல் போச்சு... ஹா ஹா ஹா பின்னர் நம்மோடு கூட வந்த கணவரின் குட்டித்தம்பி ஒருவர்தான்.. மேல் உச்சிவரை தூக்கி வந்தார் ஹா ஹா ஹா:)..
பதிலளிநீக்குஆமாம்....கதிர்காமம்...ரொம்பச் சின்னப் பிள்ளைல கண்டதுண்டு...ஆனால் அத்தனை நினைவு இல்லை. கதிர்காமம் முருகன் அழகு..அதே போல நாங்கள் இருந்த இடத்தில் ஜிந்துப்பட்டி முருகனும் அழகு...
நீக்குஇது போன்ற மலையேற்றப் பயணங்களில் திட்டமிடலும் முன் தயாரிப்பும் மிக முக்கியம். படங்களை எடுத்த கோணம் மிக அருமை.
பதிலளிநீக்குமிக்க நன்றி கோவிந்தராஜு ஐயா. ஆமாம்...மிக மிக முக்கியம். படங்களைப் பற்றிச் சொன்னதற்கும் மிக்க நன்றி ஐயா
நீக்குதிருவண்ணாமலை கிரிவலத்தை விட பர்வத மலை வலம் மிகவும் கடினம் என்று படித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குவர்ணனையும் படங்களும் அருமை! தொடர காத்திருக்கிறேன்.
மிக்க நன்றி பானுக்கா கொஞ்சம் கடினம் தான்....
நீக்குநான் அஹோபிலம் சென்றிருக்கிறேன். அதைப்பற்றி எழுதியதுதான் என் முதல் பதிவு. கைலாஷ் செல்ல ஆசை. . பார்க்கலாம்....
பதிலளிநீக்குஓ பானுக்கா நீங்களும் அஹோபிலம் போயிருக்கீங்களா..உங்களுடைய முதல் பதிவா...ஆஹா!! கைலாஷ் எனக்கும் செல்ல ஆசை உண்டு. அதற்கு நேரமும் வாய்ப்பும் கிடைக்க வேண்டும்..உங்களுக்குக் கிடைத்திடட்டும்!!
நீக்குநீங்கள் போன நாளில் வானம் அதிநீலமாக இருந்திருப்பதாய்த் தெரிகிறது. கீழே சிறு நீரோடையும் வானத்தின் வண்ணத்தைக் கொஞ்சம் எடுத்துக்கொண்டதை அழகாய்ப் பிடித்திருக்கிறீர்கள். இப்படியே கொஞ்சம் மீன்கொத்தி, கருங்குருவி , இரட்டைவால் குருவி என சிக்கவைத்திருக்கலாமே காமெராவில். எல்லோருடனும் வேகமாய் நகர்கையில் இவ்வளவு எடுக்கவிட்டார்களே அதுவே போதும் என்கிறீர்களா!
பதிலளிநீக்குரொம்ப கிளியராக இருந்தது ஏகாந்தன் சகோ...ஆமாம் நீரோடையில் வானம் தெரிந்தது ரொம்ப அழகா இருந்தது அன்று பார்க்கும் போது...உடனே க்ளிக்கினேன். மீன் கொத்தி, கருங்குருவி எல்லாம் பார்த்தேன் சிக்க வைப்பதற்குள் அவை பறந்துவிட்டன. மற்றொன்று என் கேமராவும் லென்ஸ் எரர் வந்து தொல்லை படுத்திக் கொண்டே இருந்தது.
நீக்கு//காமெராவில். எல்லோருடனும் வேகமாய் நகர்கையில் இவ்வளவு எடுக்கவிட்டார்களே அதுவே போதும் என்கிறீர்களா!// அதை ஏன் கேட்கிறீர்கள்!! நேரம் காரணம் என்றாலும்....என் கேமரா லென்ஸ் எரர் வந்ததால், அதை க்ளோஸ் செய்து ஒபன் செய்து சாதரணமாக வரும் வரை நேரம் எடுத்துக் கொண்டது. சரி வந்து படம் எடுத்தால் கெனனில் சேவிங்க் டைம் கொஞ்சம் கூடுதல்...எனவே சேவ் செய்து அடுத்து எடுப்பதற்குள் எல்லோரும் கொஞ்சம் நடந்திருப்பார்கள்...மட்டுமல்ல காட்சிகளும் மாறியிருக்கும்..பறவைகள் பறந்திருக்கும்...பூச்சிகளும் தன்,.ஹா ஹா
என்னால் தாமதமாகிவிடக் கூடாது இல்லையா...
மிக்க நன்றி ஏகாந்தன் சகோ
பார்ட் 1-ஐயும் இப்போதுதான் படித்து வந்தேன். மலையிலிருந்து இறங்கியதுபோல் இருக்கிறது.
பதிலளிநீக்குமலையும் மலைசார்ந்த இடங்களும் ஒரு தனி அழகுதான். இன்று என்னமோ மலைப்பதிவுகளாகப் படித்து மலைத்துப்போகிறேன். இன்னொரு வலைப்பதிவர் எழுதிய கொல்லிமலைப்பதிவையும் தமிழ்மணம் மூலமாக அறிந்து படித்தேன். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, வெள்ளியங்கிரி, சதுரகிரி, திருவண்ணாமலை என்று கேள்விஞானத்தோடு நிற்கிறது என் வண்டி.
மலைஏறியதே கிடையாதா நான்.. என்றால் ஏறியிருக்கிறேன். கேபிள் காரின் மூலம் பனிபடர்ந்த மலை உச்சிகளை நோட்டம்விட்டிருக்கிறேன்.. 1993-ல் ஃப்ரான்ஸின் மோண்ட் ப்ளாங்க் (Mont Blanc) , ஸ்விஸ்ஸின் க்ரெண்டல்வால்ட் (Grendelwald) என ஆல்ப்ஸ் மலைத்தொடர்களில் கொஞ்சம் சுத்தியிருக்கிறேன். கோவிலில்லை அங்கே எனினும், மலையே அந்த மலையப்பன்தானே என்று தோன்றுகிறது. அவனழைக்காமலா ஆல்ப்ஸ்பக்கம் போய் வந்திருப்பேன்..?
வாங்க ஏகாந்தன் சகோ! மலையே அழகுதான்...அது நம்மூர் கொல்லி மலையாக ஹிமாலயமாக இருந்தால் என்ன ஆல்ப்ஸாக இருந்தால் என்ன...அழகுதான். கோயில் இல்லை என்றால் என்ன நீங்க சொல்லிருக்காப்ல மலையே அவன் தான்! திருநெல்வேலிக்கே அல்வாவா?!! ஹா ஹா ஹா..
நீக்குவாவ்! ஃப்ரான்ஸ் மோன்ட்ப்ளாங்க், ஸ்விஸ் க்ரெண்டெல்வால்ட் போயிருக்கீங்களா சூப்பர்!!!இது ஒரு கிராமம் இல்லையா?!!! ரொம்ப அழகா இருக்கும் (னேர்ல பாத்தாப்ல கதை விடுறேனோ??!! ஹா ஹா ஹா) ! நான் நெட்டில் பார்த்திருக்கேன்.நானும் என் பையனும் ட்ரான்ஸ் ட்ரெய்ன்ல யுரோப் வழியா மலைகள் எல்லாம் கடந்து மாஸ்லோலருந்து ஜுரிச் நு நினைக்கறேன்..அதைப் பத்தி பேசிக் கொண்டிருந்த போது பிள்ளையார் இருந்த இடத்துலருந்தே உலகைச் சுத்தினாப்ல நெட்ல சுத்திப் பார்த்தோம்...ஹா ஹா ஹா..
கொல்லிமலை சூப்பரா இருக்கும். சதுரகிடியும் ஏறுவது கடினம் தான் இதைவிட...இதைவிட டைமும் எடுக்கும். மேற்குத் தொடர்சி மலை வேற...இன்னும் பசுமையா இருக்கும்... அதுக்கும் போணும்னு சொல்லிட்டிருக்காங்க எங்க குழு. பார்ப்போம் வாய்ப்பு கிடைக்குதானு...
இங்கயும் இந்த மலைக்கு எல்லாம் போக முடிஞ்சா கிவ் எ ட்ரை...சதுரகிரி, வெள்ளியங்கிரி, இந்த பர்வதம் எல்லாம்...
நீக்குஅருமையானப் பயணம்
பதிலளிநீக்குநேரில் சென்ற உணர்வு
படங்கள் அருமை
மிக்க நன்றி கரந்தை சகோ!! கருத்திற்கு..
நீக்குஏற்கனவே நான் எழுதிய பின்னூட்டம் காணோமே.
பதிலளிநீக்குஅருமையான சந்தர்ப்பம் மலை ஏற்றம்.
உடலில் வலு இருக்கும் போது
கடினமான இடங்களுக்குச் சென்று வரவேண்டும்.
நாங்களும் அஹோபிலம் போகும்போது 25 வருடங்களுக்கு முன்னால்
இத்தனை வகையாக சாலை வசதிகள் இல்லை. ஆடி மாத மழை அலைக்கழித்தது. உக்ர ஸ்தம்பம் மட்டும்
கீழே நின்று தரிசனம் செய்தோம்.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கற்கள் சரிந்துவிழுவதைப் பார்த்துப் பயம் வந்தது.
கீழே இறங்கி மடத்தில் மூக்குப் பிடிக்க சாப்பிட்டு,
மறு நாள் கடப்பா சென்று வண்டி பிடித்தோம்.எல்லாம் நரசிம்ம வைபவம் தான்.
உங்கள் மலையேற்றம் எப்படி இருந்தது என்று பார்க்க மிக ஆவலாக இருக்கு.
துளசிதரன், கீதா.
வல்லிம்மா பல சமயத்தில் கமென்ட்ஸ் எல்லாம் காக்கா தூக்கிக் கொண்டு போய்விடும்..காணாமல் போய்விடுகிறது இருங்கள் ஸ்பாமில் இருக்கானு பார்க்கறேன்.. இல்லை வல்லிமா ஸ்பாமிலும் இல்லை. பரவால்லை விடுங்க..
நீக்குநானும் அஹோபிலம் போயிருக்கோம். உக்ரஸ்தம்பம் ஏறி அங்கு அந்தக் க்ளிஃப் வரை போய் நரசிம்மர் பாதம் அங்கு இருப்பதையும் பார்த்துவந்தோம். அங்கு கீழே சிறிதாக விழுந்து கொண்டிருந்த அருவியில் நனைந்து ஜ்வால நரசிம்மர் தரிசித்தோம் அங்கிருந்துதான் மேலே உக்ரஸ்தம்பத்திற்கு ஏற வேண்டும்...
நீங்கள் சென்ற போது இன்னும் பாதைகள் சரியாக இருந்திருக்காதுதான். நாங்கள் சென்ற போதும் பாறை, கற்கள் எல்லாம் சறுக்கிவிட்டன. கஷ்டப்பட்டு ஏறிவிட்டோம். நாங்கள் சென்ற போது மழைக்காலம் இல்லை. கோடைகாலம்...எனவே ரொம்பவும் ட்ரையாக இருந்தது. அஹோபிலம் எல்லாம் செல்ல வேண்டும் என்றால் நவம்பர் டிசம்பர் ஸீஸன் தான் உகந்தது. சிலு சிலு என்று இருக்கும்.
நாங்களும் மடத்தில்தான் சாப்பிட்டோம். அருமையான சாப்பாடு இல்லையா? மடத்துச் சாப்பாடு எப்போதுமே நன்றாக இருக்கும். சிம்பிள் பட் சிம்பிளி சூப்பர்ப் என்று சொல்லும்படி இருக்கும்.
மலையேற்றம் பற்றி எழுதுகிறேன் வல்லிம்மா...தொடருங்கள்...
மிக்க நன்றி வல்லிம்மா...
உங்களது மறுமொழியை இப்போதுதான் பார்க்கிறேன். இன்னும் என் தளத்தில் உங்கள் மற்றும் ஸ்ரீராம், அதிரா பின்னூட்டத்திற்கு பதிலெழுதவில்லை. க்ரிக்கெட்டே காரணம் சகலத்துக்கும்! போதாக்குறைக்கு நேற்றுவரை ஐபிஎல் ஏலத்தில் -ஏதோ எங்கவீட்டுப்பிள்ளைதான் விளையாடப்போவதுபோல் - பிஸியாயிருந்தேன். இப்பிடி எதிலாவது திடீரென காணமற்போய்விடுவது வழக்கம்தான். நம்ப கதை தனிக் கதை..
பதிலளிநீக்குஎன் ஸ்விஸ் பயண, ஜெனீவா வாழ்க்கை அனுபவங்களை சொல்வனத்தில் கட்டுரையாக எழுதியிருக்கிறேன். நேரமிருக்கையில் படிக்கவும். லிங்க்: https://solvanam.com/?p=47138
ஹா ஹா ஹா ஹா....பரவாயில்லை ஏகாந்தன் சகோ!!! கிரிக்கெட் ஸீஸன் ந்னா அப்படித்தான். எங்க வீட்டுல இப்ப பார்க்க யாரும் இல்லை பார்க்க...
நீக்குநானும் அப்படிக் காணாமல் போவதுண்டு...ஆனால் அந்தக் கதைகள் வேறு...ஹா ஹா ஹாஹா...
ஆஹா உங்கள் லிங்க் இதை சேர்த்து வைத்துக் கொண்டேன். முன்னால் கொடுத்த லிங்கை இப்போது மீண்டும் தேடி எடுத்துச் சேர்க்க வேண்டும். இன்னும் வாசிக்கவில்லை...அதையும் வாசிக்கணும்...மிக்க நன்றி ஏகாந்தன் சகோ...
ஹப்பா அந்தப் பழைய லிங்கையும் எடுத்துட்டேன்...சேவ் செய்துட்டேன்...தனி வேர்ட் ஃபைல் போட்டு ஏகாந்தன் சகோ லிங்க்ஸ்னு சேர்த்து வைச்சுட்டேன்..ஒவ்வொன்றாக வாசிக்கிறேன்...
நீக்குஆஹா..ப்ரமாதம்! நிதானமாகப் படிக்கவேண்டிய விஷயம்தான். சாதாரணப் பயணக்கட்டுரைபோலல்லாமல் வித்தியாசமான அனுபவங்கள், அவதானிப்புகள் என்று விரியும்.
நீக்குஎழுத்தின் கூடவே பயணிப்பது போன்ற உணர்வு!
பதிலளிநீக்குபயணம் மிக அருமை.
பதிலளிநீக்குஉடன் வருபவர்கள் புரிதலுடன் வரும் போது மேலும் ஆனந்தம்.
கிராமிய கோவில் படங்கள் அருமை.
பயணத்தை தொடர்கிறேன்.
இந்த பதிவிற்கு உள்ளேயே நுழையமுடியாமலிருந்தது. படித்தேன்.ரஸித்தேன். அன்புடன்
பதிலளிநீக்கு"அடிக்கொரு லிங்கம் அண்ணாமலை,பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை" என்று சொல்லுவார்கள். தங்கள் தொடர்பதிவில் இரண்டம் பதிவினை இன்று படித்தேன். இதில் இடம்பெற்றுள்ள தகவல் மற்றும் படங்கள் சிறப்பாக உள்ளன.
பதிலளிநீக்கு"அடிக்கொரு லிங்கம் அண்ணாமலை,பிடிக்கொரு லிங்கம் பர்வதமலை" என்று சொல்லுவார்கள். தங்கள் தொடர்பதிவில் இரண்டம் பதிவினை இன்று படித்தேன். இதில் இடம்பெற்றுள்ள தகவல் மற்றும் படங்கள் சிறப்பாக உள்ளன.
பதிலளிநீக்கு