சனி, 13 ஜனவரி, 2018

கேரள பள்ளி கலைவிழா 2017- 2018 (கேரள ஸ்கூல் கலோல்சவம்)

Image result for 58th kerala youth festival final 2017-2018
நம்மை வியக்கவும், அதிசயப்படவும் வைக்கும் ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னும் சுயநலமில்லா பொது நலம் பேணும் சில நல்ல மனிதர்களின் கடின உழைப்பும் வியர்வையும் ஒளிந்திருக்கும் தான். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைப் பற்றித்தான் நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
குழந்தை பாக்கியம் இல்லாதிருந்த (ஆதிசங்கரரின்) பெற்றோர் வழிபட்டு ஆதிசங்கரரைத் தங்கள் மகனாய் பெற்றிட அருளிய வடக்கும்நாதர் குடிகொண்டிருக்கும் திருத்தலமாகிய கேரளாவில் திருசிவபேரூர் எனும் திருச்சூரில் 2018 ஜனுவரி 6 முதல் 10 வரை பள்ளி மாணவ மாணவியர்களின் 58 வது கலைவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. பள்ளி, வட்ட மற்றும் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்கள் நான்காவது முறையாக மாநில அளவில் பங்கெடுத்த நிகழ்ச்சி அது. ஏறத்தாழ 15000 மாணவ மாணவியர்கள் 231 நிகழ்ச்சிகளில் 24 மேடைகளில் பகல் இரவு பாராது பங்கெடுத்த நிகழ்ச்சி அது. 

Image result for 58th kerala youth festival final 2017-2018

ஆசியக் கண்டத்தில் நடக்கும் மிகப்பெரிய இந்தக் கலைவிழாவில் இதற்கு முன் எப்போதும் கேரள முதல்வர்கள்தான் வந்து விழாவை விளக்கேற்றித் தொடங்கி வைப்பது வழக்கம். ஆனால், இம்முறை கல்வி அமைச்சர் பேராசிரியர் திருமிகு ரவீந்திரநாத் விளக்கேற்றித் தொடங்கிவைத்தார். (முதல்வர் பினராய் விஜயன் கலைவிழாவில் பங்கெடுக்காமல் கொல்லம் மாவட்ட கட்சிக் கூட்டத்திற்குப் போனது விவாதமாகியிருக்கிறது!)

திருச்சூரின் நாயகரான வடக்கும்நாதர் கோயிலைச் சுற்றி 64 ஏக்கர் விரிந்து கிடக்கும் தேக்கிங்காடு மைதானத்தின் கிழக்கு கோபுரத்தின் முன் 22 பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவியர்களின்

“தும்பப் பூ மாலையும்
கங்கா நீரும்
கொன்னைப் பூ சூடும்
தம்புரானே”

என்று பாடி ஆடிய திருவாதிரை நடனம் கண்கொள்ளாக் காட்சி. அது போலவே தேக்கிங்காடு மைதானத்தில் உள்ள 12 மரத்தடிகளில் 2 மணி நேரம் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பூரக்களி, புலிக்களி, கும்மாட்டி, தெய்யம், மயூரநிருத்தம், படயணி, அர்ஜுன நிருத்தம் போன்ற இந்து மதம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளுடன் சவுட்டு நாடகம், மார்கம்களி, பரிசமுத்து போன்ற கிறித்தவமத கலைநிகழ்ச்சிகளும், ஒப்பன, கோல்களி, தஃப்முட்டு போன்ற இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தது மனதிற்கு இதமளித்தது.

விழா மேடையில், தனது பள்ளி நாட்களில் இரண்டாவது கலைவிழாவில் (கலோல்சவத்தில்) பாடி, ஜேசுதாசுடன் வெற்றி வாகை சூடிய பாடகர் திருமிகு ஜெயச்சந்திரன் பாடிய பாடலும், திரு முருகன் காட்டாகடையின் வரிகளுக்கு திருமிகு எம் ஜி ஸ்ரீகுமார் இசையமைத்து 58 ஆசிரியர்கள் பாடிய பாடலும் அருமை
.
Image result for 58th kerala youth festival final 2017-2018

எல்லா நிகழ்ச்சிகளையும் கண்காணிக்கக் காவல்துறையினர் 124 கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்திக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். 1000 காவலர்களும், 1100 தன்னார்வ தொண்டூழியர்களும் 24 நிகழ்விடங்களில் மட்டுமல்ல, அவ்விடங்களுக்குச் செல்லும் வழிகளிலும் நின்று உதவிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவ தேசிய மாணவர் படையினரும், மாணவக் காவல் துறையினரும், சாரணர், செஞ்சிலுவைசங்க மாணவ இயக்கங்களும் இருந்ததால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித சிரமமும் ஏற்படவே இல்லை.

வெற்றி வாகை சூடிய 12000 பேருக்கு வழங்க “திருச்சூர் ட்ரோஃபிஸ்” மரத்தாலான பரிசுக் கோப்பைகளை வடிவமைத்திருந்தது. போட்டிகள் நடந்த ஒரு பள்ளியிலிருந்து போட்டிகள் நடந்த மற்ற பள்ளிகளுக்கும், உணவு பரிமாறப்பட்ட காவலர் மைதானத்திற்கும், போட்டியிட்ட மாணவர்களையும், அவர்களுடன் வந்த ஆசிரியர்களையும் கொண்டு செல்ல திருச்சூரிலிருந்த எல்லா பள்ளிகளும் அவர்களது பள்ளிப் பேருந்துகளை அளித்திருந்தனர். எல்லா கட்சிகள் சார்ந்த ஆசிரியர் இயக்கங்களும் ஒவ்வொரு பணியை மேற்கொண்டன. போட்டிகள் நடத்திய “விழா குழு” KSTA (kerala State Teachers Association) எனும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இயக்கமும், உணவு சமைத்துப் பரிமாறும் பொறுப்பை KPSTA எனும் காங்கிரஸ் கட்சி சார்ந்த இயக்கமும் சிறப்பாகச் செய்தார்கள்.

5 நாட்களில் இலட்சக்கணக்கான மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிரமமின்றி போட்டிகளில் பங்கெடுத்து உண்டு, உறங்கிச் செல்ல எல்லா ஏற்பாடுகளும் இது போன்ற பல ஆசிரிய இயக்கங்கள் செய்து விழாவைச் சிறப்பித்தன.

கடந்த 57 ஆண்டுகளாக கேரள மாநிலத்தில் மாணவ மாணவியர்கள் தங்கள் கலைத் திறமையை வெளிக்கொணர இது போன்ற ஒரு கலைவிழாவை நடத்த தீர்மானம் எடுக்கப்பட்டது 1957ல். அன்று எர்ணாகுளத்தில் அன்றைய கல்வி இயக்குனரான டாக்டர் திரு சி.எஸ். வெங்கடேஸ்வரனது தலைமையில் ஒரு மேடையில் 11 நிகழ்ச்சிகள் 2 நாட்களில் நடத்தப்பட்டது. இப்படி ஒரு விழாவை நடத்த அவருக்குத் தூண்டுதலாய் அமைந்தது 1956 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த இன்டெர் யுனிவேர்சிட்டி கலைவிழாதான். அதை நேரில் சென்று கண்ட அவரது மனதில் ஏன் இப்படி ஒரு நிகழ்ச்சியைக் கேரளத்தில் பள்ளி மாணவ மாணவர்களிடையே நடத்தக் கூடாது என்று தீர்மானித்துச் செயல்பட்டதுதான் இதற்கெல்லாம் காரணம்.

Image result for 58th kerala youth festival final 2017-2018, trophies

1975 ஆம் ஆண்டு, கலைவிழாவில் பங்கெடுக்கும் எல்லா மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் சுவையான விருந்தளிக்கும் வழக்கம் தொடங்கியது. 1986ஆம் ஆண்டு முதல் வெற்றி பெரும் மாவட்டத்திற்கு 117.5 பவுன் தங்கக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. சாதாரணமாக 7 நாட்கள் நடைபெற்று வந்த இந்த விழா இவ்வருடம் 5 தினங்களுக்குள் முடிக்கப்பட்டிருக்கிறது.

இதில் பங்கெடுக்கும் ஒவ்வொரு கலை நிகழ்ச்சியிலும் 80 மதிப்பெண் பெறுவோருக்கு “A” க்ரேட் வழங்கப்படுகிறது,  “A” க்ரேட் பெறும் மாணவ மாணவியருக்கு 10th, +1, +2 வில் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களுடன் 30 மதிப்பெண்களும், “B” க்ரேட் பெறுவோருக்கு 18 மதிப்பெண்களும், “C” க்ரேட் பெறுவோருக்கு 12 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இப்படிக் கிடைக்கப்பெறும் மதிப்பெண்கள்தான் மாணவ மாணவியரை இக்கலைவிழாவில் பங்கெடுக்கத் தூண்டுகிறது. அதனால், அவர்களில் நன்றாகப் படிக்கும் மாணவ மாணவியர்கள் எல்லா பாடங்களிலும் “A” க்ரேட் உடனும், +2 வில் 1200 க்கு 1200ம் பெற முடிகிறது. (1200/1200) அத்துடன் நாட்டுப்புறப்பாடல்கள் (நாடன் பாட்டு), சவிட்டு நாடகம், வஞ்சிப்பாட்டு (படகுப்பாட்டு), பூரக்களி, யட்ஷகானம் போன்றவைகளை எல்லோரும் காண முடிவதுடன் அக்கலைஞர்களும் கௌரவிக்கப்படுகிறார்கள்.

கேரளா பள்ளிக் கலைவிழா ஒரே இடத்தில் நடந்தாலும் அவை மூன்று பகுதிகளாக நடத்தப்படுகிறது. மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட கலைவிழாவும், சம்ஸ்க்ருத கலைவிழாவும், அரபி கலைவிழாவும் தான் அவை. இதில் தமிழிலும் கன்னடத்திலும் கதை, கவிதை, பேச்சுப் போட்டிகள் உட்படுத்தப்பட்டிருக்கின்றன.

என் மனைவியின் மாணவி அஃப்கலா ஃபர்வீன் தமிழ்க் கவிதை எழுதும் போட்டி, பேச்சுப் போட்டி போன்றவற்றில் கலந்துகொண்டதாலும் என் மகள் அபிராமி ஓட்டம் துள்ளல், சவுட்டு நாடகம், குழு நடனம் போன்றவற்றில் கலந்துகொண்டதாலும் இம்முறை எனக்கும் கலைவிழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அஃப்கலாவுக்கு நான் மட்டுமல்ல கீதாவும் உதவினார். பேச்சுப் போட்டியில் சமூக சேவையில் மாணவர்களின் பங்கு எனும் தலைப்பு கொடுக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்திலிருந்து வந்த ஒரு மாணவி தெளிவாகத் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசி “A” க்ரேட் பெற்றார். அஃப்கலாவுக்கு “B” க்ரேடுதான். வேறு இரண்டு மாணவர்களுக்கு “C” க்ரேடுதான். பங்கெடுத்த மற்ற 6 மாணவ மாணவியர்களுக்கு நோ க்ரேட்தான்.

போட்டியின் போது நான்காவதாக மேடை ஏற வேண்டிய மாணவி பலமுறை அழைத்தும் ஏனோ மேடைக்கு வரவில்லை. இறுதியாக மீண்டும் அழைக்க மேடை ஏற மறுத்த மாணவியிடம் காரணம் வினவ, “பேச்சுப் போட்டிக்குத் தன்னிடம் தலைப்பைச் சொல்லாமல் தாளில் தமிழில் எழுதிக் கொடுத்ததால் தலைப்பு என்ன என்று தெரியவில்லை என்றதும் திகைத்தேன். காரணம் வினவ, இப்படித் தமிழ் வாசிக்கத் தெரியாதவர்கள் எதையாவது மனப்பாடம் செய்து வந்து பேசி ஏதேனும் க்ரேடை வாங்கிப் போகும் வழக்கத்தை ஒழிக்கத்தான் இப்படிச் செய்கிறோம் என்றார்கள். அம்மாணவியின் தாயும் ஒரு போலீசும் பலதையும் சொல்லி எப்படியோ அம்மாணவியை மேடை ஏற்றிவிட்டனர். அம்மாணவி, தான் மனப்பாடம் செய்திருந்த “குழந்தைத் தொழிலாளிகளை”ப் பற்றிப் பேசி மேடையிலிருந்து இறங்கி வந்த பின்தான் மற்றவர்களிடம் கேட்டு, தான் பேச வேண்டிய தலைப்பு வேறு ஒன்று என்பதைப் புரிந்து கொண்டார்.

கேரளத்தில் தமிழ் மொழி கற்பிக்கப்படுவது இடுக்கி, பாலக்காடு, திருவனந்தபுரம் போன்ற மாவட்டங்களில்தான். எனவே இது போன்ற காரியங்களில் மிகவும் கவனமாக இருந்து செயல்பட வேண்டும். அம்மாணவியிடம் இப்படி எல்லாம் கடினமாக நடந்துகொள்ளுவதை முயன்றவரைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றியது.

இது போலவே வேறு ஒரு நிகழ்ச்சியும் நடந்தது. குச்சுப்புடி நடனத்திற்கு நடுவராக சங்கராபரணம் மஞ்சுபார்கவியை விழா குழுவினர் அழைத்து வந்தார்கள். மாணவிகள் மஞ்சுபார்கவிக்கு முன் தங்கள் திறமைகளை எல்லாம் காட்டி சிறப்பாக ஆடினார்கள். ஆனால் தீர்ப்பளிக்கும் போது மஞ்சுபார்கவி இது குச்சுப்புடியே அல்ல என்று சொல்லி 20க்கும் மேற்பட்ட மாணவிகளில் 4 பேருக்கு மட்டும் “A” க்ரேடை வழங்கி மற்றவர்களைக் கதறி அழ வைத்துவிட்டார். அதே நேரத்தில் மஞ்சுபார்கவி நடுவராகச் செல்லாத அதற்கு முன் நடந்த ஹைஸ்கூல் குச்சிப்புடி நடனப் போட்டியில் 90% பேருக்கும் “A” க்ரேட் கிடைத்திருந்தது! இங்கு நாம் யாரைக் குற்றம் சொல்லுவது?....மஞ்சுபார்கவியையா? மஞ்சுபார்கவியை நடுவராக்கிய விழா குழுவினரையா? 30 மதிப்பெண்ணிற்காக ஓரிரு மாதங்கள் மட்டும் குச்சுப்புடி நடனம் பயின்ற மாணவிகளையா?...அவர்களது பெற்றோர்களையா?

எப்படியோ அபிராமிக்கு ஓட்டம் துள்ளல், சவுட்டு நாடகம், குழு நடனம் போன்றவற்றில் “A” க்ரேட் கிடைத்ததால் வடக்கும்நாதருக்கு நன்றி கூறி தப்பித்தேன் பிழைத்தேன் என்று வீடு வந்து சேர்ந்தேன்!

படங்கள் இணையத்திலிருந்து....நன்றி இணையத்திற்கு

--------துளசிதரன்


55 கருத்துகள்:

  1. கே ஜே யேசுதாசும் ஜெயச்சந்திரனும் பள்ளித் தோழர்களா? இதுபோன்ற கலைவிழாக்கள் மாணவ மாணவியருக்கும் புதிய அனுபவங்களையும் சந்தோஷத்தையும் தரக்கூடியது. மார்க் வேறு கிடைக்கும் என்றால் கேட்கவும் வேண்டுமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஜி மன்னிக்கவும் தாமதமான பதிலுக்கு.

      யேசுதாசும் ஜெயச்சந்திரனும் பள்ளித் தோழர்கள் இல்லை. 1958ல் மாநில அளவில் நடந்த இந்தக் கலைவிழாவில் சந்தித்தனர். ஜெயசந்திரன் மிருதங்கத்தில் மாநிலத்தில் முதலாவதாக வந்து பரிசு பெற்றார். யேசுதாஸ் அவர்கள் கர்நாடக சங்கீதத்தில் முதல் பரிசு பெற்றார்.

      ஆமாம் இக்கலைவிழாக்கள் புதிய அனுபவத்தையும் சந்தோஷத்தையும் சிலருக்கு வருத்தத்தையும் (கொஞ்ச நாட்களேனும்..) அதுவும் மார்க்கோடு சேருவதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது நீங்கள் சொல்லியிருப்பது போல். அதனால்தான் இத்தனை ஆர்வத்துடன் பங்கெடுக்கவும் செய்கிறார்கள்.

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  2. எதையோ ஒன்றை மேடையில் பேசிய மாணவியின் முயற்சிக்கு 50 மதிப்பெண்கள். அந்தத் துணிவுக்கும் ஆர்வத்துக்கு 20 மதிப்பெண்கள். தமிழ் சரியாய் அறிந்து பின்னாளில் பேச ஊக்குவிக்கப்படவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நிச்சயமாக. அம்மாணவியின் முயற்சிக்கேனும் ஊக்குவித்திருக்க வேண்டும். அவர்கள் இந்த அளவிற்குக் கடுமையாக இருந்திருக்க வேண்டாம் என்று எனக்கும் தோன்றியது.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. உங்கள் மகளுக்கு வாழ்த்துகள். மகளை அவையத்து முந்தியிருக்கச் செய்யும் உங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் கரந்தையாருக்கு. தங்களுக்கும் எங்கள் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

      நீக்கு
  5. பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
    2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் முனைவர் ஐயா

      நீக்கு
  6. காலையிலேயே வாசித்துவிட்டேன் துளசிதரன். மகளுக்கு வாழ்த்துகள். பிறகு வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைத்தமிழன் தங்களின் வாழ்த்திற்கு.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

      நீக்கு
  7. மகளுக்கு வாழ்த்துகள் துளசியண்ணா

    பதிலளிநீக்கு
  8. சவுட்டு நாடகம்ன்னா என்ன?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜி சவுட்டு நாடகம்ன்றது ரொம்பப் பழமையான நாடகம்..கேரளத்துல வழக்குல இருந்துச்சு. இப்ப அது அழிஞ்சு வருது. நாடக நடிகர்கள் இசைக்கு ஏற்ப, கால்களை தரையில் அடித்து, உடல் அசைவுகள் மூலம் நடிப்பது..பேச்சு கிடையாது...அதற்கேற்ற நல்ல பள பள உடைகள் அணிவாங்க...பெரும்பாலும் கிறித்தவ விவிலியக் கதைகளை, போர் நிகழ்வுகளை சொல்றதா இருக்கும்...இங்க சில லிங்க்ஸ் தரோம் பாருங்க புரியும்..

      https://www.youtube.com/watch?v=qNP8eiEJ4ao

      https://www.youtube.com/watch?v=RD-RU8oiBc4

      https://www.youtube.com/watch?v=37nTadrkeh4 இதில் அதைப் பற்றிய விவரம் முழுவதும் இருக்கும்..

      கீதா

      நீக்கு
    2. ராஜி உங்கள் கேள்விக்கு கீதா பதில் சொல்லிவிட்டார் அதேதான்...

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  9. கருத்துரை பிறகு மொபைலில் எழுத கஷ்டமாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் மகளுக்கு எமது வாழ்த்துகளும்.....

      நீக்கு
    2. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களது வாழ்த்திற்கு.

      நீக்கு
  10. மகத்தான கலை நிகழ்ச்சியை முழுமையாக முன் நிறுத்தியது தங்களுடைய நேர்முகம்..

    இந்நிகழ்வினை ஒரு சமயமாவது கண்டு மகிழ வடக்கு நாதர் அருள்பாலிக்க வேண்டும்..

    இதனூடாக கலை மலிந்த தமிழகத்தில் இப்படியான நிகழ்வுகள் நடப்பத்தில்லையே என ஏக்கமாகவும் இருக்கின்றது....

    அதே சமயம் -
    அதையும் சாதி, இன, மொழிவாரி அரசியலாக்கிக் கெடுத்து வைப்பதை விட -
    நடத்தாமல் இருப்பதே நல்லது என்றும் தோன்றுகின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஸார் தங்களின் கருத்திற்கு. தமிழகத்திலும் நடத்தலாம் ஆனால் நீங்கள் சொல்லுவதைப் போல் அரசியலாகிவிடும் அபாயம் உள்ளதுதான். மட்டுமல்ல கேரளத்திலும் ஊழல்கள் நடக்கிறதுதான். இல்லை என்று சொல்வதற்கில்லை. அதை எல்லாம் சரி செய்ய கேரள அரசு சில கருத்துகளை முன்வைத்து பலரது கருத்துகளையும் கேட்டுள்ளது. அடுத்த வருடப் போட்டியில் அவை நடைமுறைக்கு வருமா என்பது அரசு எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

      நீக்கு
  11. நிகழ்வுகளை அழகாய் தொகுத்து வழங்கி இருக்கீங்க துளசி அண்ணா .
    மஞ்சு பார்கவியை நடுவராக அழைத்ததில் தவறில்லை அனால் இப்படிப்பட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு இரண்டு மூன்று நடுவர் இருந்தால் கலந்து ஆலோசித்து தீர்ப்பு கொடுக்க வசதி .
    எதையோ வாசித்த மாணவி .பாவம்தான் ஆனாலும் தைரியமாக சென்று பேசி வந்ததை பாராட்டியே ஆகணும் .
    கலை நிகழ்வுகளில் பங்குபெற்ற உங்கள் மகளுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் .கீதாவின் பங்களிப்பும் இருந்ததா !கங்கிராட்ஸ் கீதா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஏஞ்சல்! ஆனா ஏஞ்சல் என் பங்களிப்பு ஒன்றும் பெரிதாக இல்லை. தமிழ் போட்டியில் பங்கெடுத்த அப்பெண்ணிற்கு இங்கிருந்து சில குறிப்புகள் தமிழில் வாட்சப்பில் அனுப்பிக் கொடுத்தேன். அவ்வளவே. அப்பெண் 7 ஆம் வகுப்பு வரை தமிழ் படித்திருக்கிறாள். அடிப்படையில் மலையாளம்தான் தாய்மொழி என்றாலும் தமிழ்ப் போட்டிகளில் பங்கெடுத்தாள்....மற்றபடி என் பங்கு ஒன்றும் இல்லை. அங்கு பெரும்பானமையான குழந்தைகள் பங்கெடுப்பதன் காரணம் இதில் பெறும் க்ரேட் வைஸ் மார்க் அவங்க 10,11, 12 மார்க்ஸோட சேர்ப்பாங்க...அதான் இவ்வளவு ஆர்வம். இல்லைனா இத்தனை ஆர்வத்துடன் இத்தனை குழந்தைகள் பங்கெடுக்க மாட்டார்கள்….. இதில் நல்லதும் இருக்கு னெகட்டிவும் இருக்கு… இதில் பேச நிறைய இருக்கு..தில்லுமுல்லுகளும்..…பணம் நிறையவே விளையாடும்…பங்கேற்பதற்குச்செலவுகளும்....நிறைய செலவழித்தும் க்ரேட் கிடைப்பதில் டென்ஷன் என்று.... .அதைப் பற்றி இங்கு சொன்னால் பதிவாகிவிடும்…ஹாஹாஹா….

      துளசி இன்னும் பதில்கள் அனுப்பவில்லை. அனுப்பியதும் இங்கு வெளியிடுகிறேன்

      கீதா

      நீக்கு
    2. சகோதரி ஏஞ்சல் கருத்திற்கு மிக்க நன்றி. அந்த மாணவி பாவம் தான்.

      இதில் சரியான மதிப்பெண்கள் அல்லது சரியான முடிவுகள் கூட வராது. நடுவர்களைப் பொருத்துத்தான். கீதாவே சிலது சொல்லியிருக்கிறார்.

      பதில் தர தாமதமாகிவிட்டது.

      மிக்க நன்றி சகோதரி ஏஞ்சல் உங்கள் கருத்திற்கு

      நீக்கு
  12. உங்கள் மகள் ஓட்டம் துள்ளலில் வல்லவர் என்று கீதா சொல்லித் தெரியும் அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லவர் என்று சொல்லுவதற்கில்லை. அவளால் இயன்ற அளவு நன்றாகச் செய்வாள். மிக்க நன்றி ஜிஎம்பி ஸார் தங்களின் கருத்திற்கு.

      நீக்கு
  13. இப்படி ஒரு விழா பற்றி இன்றுதான் நான் அறிகின்றேன் உங்கள் பகிர்வு மூலம். போட்டிகள் மூலம் திறமை ஊக்குவிக்க வேண்டும் அன்றி போட்டி மனநிலையை உருவாக்கிக்கொள்ளக்கூடாது. மகளுக்கு வாழ்த்துக்கள். இவ்விழா பற்றிய இன்னும் பல பகிர்வுகளை எதிர்பார்க்க்கின்றேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள சொல்லுவது மிகவும் சரியே தனிமரம் நேசன். வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனிமரம்...

      நீக்கு
  14. துளசி சார் அபிராமிக்கு என் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துவிடுங்கள் பாராட்டுக்களும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மதுரைதமிழன் உங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும். கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறேன்.

      நீக்கு
  15. இப்படி ஒரு விழா கேரளாவில்தான் நடை பெற சாத்தியம் தமிழகத்தில் நோசான்ஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது ஒரு வகையில் சரியே. என்றாலும் இங்கும் சில தில்லுமுல்லுக்கள் நடக்கின்றனதான். அதையும் சரி செய்ய கேரளா அரசு சில நடவடிக்கைகள் எடுக்க முன்வைத்துள்ளது. பார்ப்போம் என்ன ஆகிறது என்று. மிக்க நன்றி மதுரைதமிழன் கருத்திற்கு

      நீக்கு
  16. பல வருடங்களின் பின் நடந்த மிக இனிமையான பெரிய நிகழ்வோ.. சூப்பர். துளசி அண்ணனின் மகளும் பங்கெடுத்திருக்கிறா.. அதுக்கு கீதா உதவினா எனும்போது, கீதாவும் இந்நிகழ்ச்சி பார்த்திருக்கிறா.. மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை அதிரா சகோ. ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. மகள் ஒவ்வொரு வருடமும் பங்க்டுக்கிறாள். கீதா வேறொரு பெண்ணிற்கு அவர் தமிழில் கவிதை பேச்சுப் போட்டிக்குக் குறிப்புகள் அனுப்பிக் கொடுத்தார். நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதற்கு முன்னர் இரு வருடங்களுக்கு முன்னர் சப்ஜில்லா நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார்.
      மிக்க நன்றி அதிரா கருத்திற்கு

      நீக்கு
  17. ///போட்டியின் போது நான்காவதாக மேடை ஏற வேண்டிய மாணவி பலமுறை அழைத்தும் ஏனோ மேடைக்கு வரவில்லை. இறுதியாக மீண்டும் அழைக்க மேடை ஏற மறுத்த மாணவியிடம் காரணம் வினவ, “பேச்சுப் போட்டிக்குத் தன்னிடம் தலைப்பைச் சொல்லாமல் தாளில் தமிழில் எழுதிக் கொடுத்ததால் தலைப்பு என்ன என்று தெரியவில்லை என்றதும் திகைத்தேன். காரணம் வினவ, இப்படித் தமிழ் வாசிக்கத் தெரியாதவர்கள் எதையாவது மனப்பாடம் செய்து வந்து பேசி ஏதேனும் க்ரேடை வாங்கிப் போகும் வழக்கத்தை ஒழிக்கத்தான் இப்படிச் செய்கிறோம் என்றார்கள். //

    ஓ இது புது முறையாக இருக்கிறதே... உண்மையில் இப்படி உடனடித்தலைப்புக் குடுத்துப் பேச வைப்பதும் மிக நல்ல முறையே... ஏனெனில் திறமை இருந்தும் சில மாணவர்களுக்கு சேர்டிபிகேட் கிடைப்பதில்லை, ஏனெனில் பலர் பல பெரியவர்களிடம் கேட்டு எழுதிப் பாடமாக்கி வந்து சொல்லி விடுகின்றனர்... கேட்டு எழுத ஆட்களில்லாமல்.. திறமை இருப்பினும் சிலருக்கு கிடைக்காமல் போயும் விடுகிறது வாய்ப்புக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ இதற்குப் பதில் கொடுக்காமல் விட்டுப் போய்விட்டது. அதிரா இது புது முறை என்று சொல்வதற்கில்லை. நாங்கள் பள்ளி கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே இருந்ததுதான்.

      இப்போது இந்தப்போட்டியைப் பற்றிச் சொல்கிறேன். ஆம் போட்டி துவங்கும் முன் அதில் பங்கு பெறுபவர்களை ஒரு அறைக்குள் கொண்டு செல்வார்கள். அங்கிருந்து ஒருவரை அழைப்பார்கள். அவரிடம் ஒரு பேப்பரில் தலைப்பு கொடுக்கப்பட்டு மற்றொரு அறைக்குள் அழைத்துச் சென்று விடுவார்கள் 5 நிமிடம் கொடுக்கப் படும் தலைப்பில் தயார் செய்து கொள்ள. 5 நிமிடம் ஆனதும் போட்டியாளர் அழைக்கப் படுவார். அவர் மேடைக்குச் சென்றதும் அடுத்த போட்டியாளரை அழைத்து தலைப்பு பேப்பரில் எழுதிக் கொடுக்கப்பட்டு இந்த ரூமுக்குக் கொண்டு வரப்படுவார். ஒருவருக்குக் கொடுக்கபப்டும் தலைப்பு அடுத்தவருக்குத் தெரியாது. இப்படித்தான் இந்தப் போட்டி.

      நல்ல வாசிப்பும், தெளிவான சிந்தனைகள் இருந்தால் நல்லது. நல்லதொரு போட்டி. குழந்தைகளின் வாசிப்பையும் அறிவையும் விரிவு செய்யும் ஒன்று.

      ஆம் நீங்கள் சொல்லுவது போல்தான். உங்கள் கருத்து மிகவும் சரியே!!!

      மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  18. வணக்கம் !

    பங்கயம் பூத்துக் கங்கை
    ....பசுமையும் கொள்ளல் போல!
    மங்கலம் பெருகி மக்கள்
    ....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
    எங்கிலும் அமைதி வேண்டி
    ...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
    பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
    ...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சீராளன். மிகவும அழகான தமிழில் கவிதை வடிவில் அருமையான வாழ்த்து.

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

      நீக்கு
  19. அருமையான விசயம் அண்ணா!! வியப்பாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது. அறியத்தந்தமைக்கு நன்றி பல! சரியாக நானும் இன்று வலைப்பக்கம் வந்திருக்கிறேன், மகிழ்ச்சி அண்ணா.
    //எப்படியோ அபிராமிக்கு ஓட்டம் துள்ளல், சவுட்டு நாடகம், குழு நடனம் போன்றவற்றில் “A” க்ரேட் // வாவ்! வாவ்! உங்கள் மகளிற்கு அன்பின் வாழ்த்துகள் அண்ணா!

    மீண்டும் வருவேன், பல கலைகளின் பெயர்கள் புதிதாக இருக்கிறது, எனக்குத் தெரியவில்லை. ராஜிக்காவின் கருத்தில் இருந்து ஒன்றை அறிந்து கொண்டேன் :))


    இனிய பொங்கல் வாழ்த்துகள் அண்ணா/கீதா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கிரேஸ் சகோ. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி. ஆம் கலைகள் அனைத்தும் மிகவும் பழமையானவை. அவற்றை மீட்டெடுக்க இதுவும் ஒரு நல்ல முறை. குழந்தைகளும் அறிவார்கள் இல்லையா...

      ஆமாம் நீங்களும் பல மாதங்கள் கழிந்த்து வருகிறீர்கள் இல்லையா..உங்கள் கை வலி இப்போது குறைந்திருக்கும் என்று நினைக்கிறோம்..ராஜி சகோவுக்கு கீதா சவுட்டு நாடகம் குறித்து எழுதியுள்ளார்.

      இங்குக் குறிப்பிட்டுள்ள கலைகளின் பெயரை நீங்கள் கூகுள் செய்தால் வீடியோக்களும் தகவலும் வரும்.

      மிக்க நன்றி பொங்கல் வாழ்த்துகளுக்கு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் பொங்கல் வாழ்த்துகளும்!!!

      நீக்கு
  20. மிக்க நன்றி நண்பர் யாழ்பாவாணன் தங்களின் வாழ்த்திற்கு. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோ துளசி & கீதா!

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரி இளமதி

      வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் எங்களின் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

      நீக்கு
  22. அஃப்கலாவுக்கும் மகள் அபிராமிக்கும் வாழ்த்துக்கள்.
    கலைநிகழ்ச்சியினை இவ்வளவு விவரமாகத் தொகுத்து அளித்தமைக்குப் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி அபயா அருணா தங்களின் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும்

      நீக்கு
  23. பள்ளிக்கூட கலைவிழா இப்படி ஒரு மஹாப்பெரிய அளவில் நடத்தப்பட்டதாகக் கேள்விப்பட்டது இதுவே முதல்முறை.நேரில் பார்ப்பதுபோன்ற வர்ணனை. பெயர்களெல்லாம் அதிகமாகக் கேள்விப்பட்டதே இல்லை. உங்கள் பெண்ணிற்கு என் பாராட்டுகள். தேசீய அளவில்கூட இவ்வளவு அழகாக நடத்தப்படுமா? ஒரு மானில அளவில் அதிசயம்தான். பொங்கல் கழிந்த மறுநாள் விசேஷமான பாராட்டுகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் காமாட்சி அம்மா. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய கலைவிழா. இதிலும் இன்னும் மாற்றங்கள் கொண்டுவர கேரள அரசு முயன்று வருகிறது.

      மிக்க நன்றி அம்மா கருத்திற்கும் வாழ்த்திற்கும், பாராட்டிற்கும்

      நீக்கு
  24. கேரளப் பள்ளிவிழா ஒன்றினைப்பற்றி இவ்வளவு விபரமான பதிவு என்னை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இது 15000 மாணவ மாணவியர் பங்களிப்பு செய்த ஒரு பெரும் கலைவிழா. முறையாக நடந்து தகுதியான மாணவ மாணவியருக்குப் பரிசு, க்ரேட் போய்ச்சேர்ந்ததெனில் (எல்லா டிஸிப்ளினிலும் அப்படி நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை எனினும்) பாராட்டத்தக்க விஷயம் - இது ஒரு ஆக்கபூர்வமான பெரும் முயற்சி என்பதால்.

    வருஷாவருஷம் விழாவை முதல்வர் திறந்துவைக்கும் வழக்கம் ஒன்று இருக்கையில், மாவட்ட கட்சி மீட்டிங்கில் கலந்துகொள்வதே அதிமுக்கியம் என நினைத்து கொல்லத்தை நோக்கி வெல்லந்திங்க ஓடி, திறன்காட்டிய பினராயி விஜயனுக்கு ஒரு ‘ஏ’ கிரேடு பார்சல். வளரட்டும் அவர்தம் கட்சி சேவகம்!

    உங்கள் மகளுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  25. என்னது இந்தயாவில இப்படி ஒரு கல்வித்திருவிழாவா ..
    அதுவம் அம்பத்தெட்டில் இருந்தா...
    கேரளாவிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது...
    அப்புறம் மருமகளுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  26. அபிராமிக்கு வாழ்த்துகள். இம்மாதிரிக்கலை நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகளுக்கு நம்முடைய கலாசாரங்கள், பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்.

    பதிலளிநீக்கு
  27. அருமை . பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  28. அஃப்கலாவுக்கும் மகள் அபிராமிக்கும் வாழ்த்துக்கள்.
    இப்படிக் கட்டுக்கோப்பாக ஒழுங்குற போட்டிகளை நடத்தி முடிக்கும் பாங்கு தமிழக கல்வித் துறையில் இல்லையே என்பதில் எனக்கு வருத்தமே. மலையாள நாட்டில் தமிழ்ப் போட்டிகளில் மாணாக்கச் செல்வங்கள் ஆர்வமுடன் பங்கேற்றது பாராட்டுக்குரியது. உங்கள் கட்டுரை மிக அருமை. விழா நிகழ்வுகளை நேரில் பார்த்த உணர்வு ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
  29. அடேயப்பா... இப்படியொரு மாபெரும் பள்ளிக்கலைவிழாவா? வியப்பாக உள்ளது. எவ்வளவு சிரத்தையாகவும் அர்ப்பணிப்புடனும் நடத்தப்பட்டிருக்கிறது. வருடாவருடம் நடைபெறும் இவ்விழா பற்றி இப்போதுதான் அறிய நேர்ந்திருக்கிறது. கல்விக்கும் கலைக்கும் கேரள அரசு தரும் முக்கியத்துவம் ஏற்கனவே அறிந்ததுதான்.இப்போது கூடுதல் வியப்பும் மதிப்பும். மாநில மொழி மட்டுமல்லாது அண்டை மாநிலமொழிகளுக்கும் இடம் தந்திருப்பது இன்னும் வியப்பு.

    மகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு