சனி, 24 மார்ச், 2018

பர்வதமலை-கோமுகி அணை-பெரியார் நீர்வீழ்ச்சி - 5






மறுநாள் கோமுகி அணை மற்றும் பெரியார் நீர்வீழ்ச்சிக்குச் செல்ல எப்போது தயாராக வேண்டும் என்று நேரம் முடிவு செய்துவிட்டுத் தூங்கச் சென்றோம். என்று முடித்திருந்தேன்.

மறுநாள் காலை 6 மணிக்கு எல்லோரும் எழுந்துவிட லாட்ஜின் அருகிலேயே மெயின் ரோட் இருப்பது தெரிந்ததும், சும்மா நடை நடந்துவிட்டு வரலாம் என்று எல்லோரும் புறப்பட அப்படியே அருகில் ஏதேனும் டீ, காஃபி கிடைக்கும் கடைகள் இருக்கிறதோ என்று பார்த்தபடி நடந்தோம். .அங்கு ஒரு பேக்கரியைக் கண்டிட அங்கு சென்று காஃபி, டீ என்று அவரவர்க்கு வேண்டியதை ஆர்டர் செய்ய, பேக்கரி வாசலில் பைரவர் செல்லம் ஒன்று எங்கள் அருகில் வந்து எங்களையே பார்த்தபடி மிகவும் தோழமையுடன் நின்றது. என் நாத்தனாரும் செல்லங்களைக் காதலிப்பவர் என்பதால் (எல்லா விலங்குகளையும்) பைரவிக்கு பேக்கரியில் பிஸ்கட் வாங்கிக் கொடுக்க, கேட்க வேண்டுமா அவரும் எங்களுடன் அளவளாவி விட்டு நாங்கள் கிளம்பியதும் சென்றுவிட்டார்.(ள்)

நீர்வீழ்ச்சியில் குளிக்க இருந்ததால் குளிக்கும் வேலை இல்லை. எனவே காஃபி, டீ குடித்துவிட்டு, லாட்ஜிற்கு வந்ததும் உடனே நாங்கள் வந்த வண்டியில் புறப்பட்டோம். அதே மெயின் ரோட்டில் நல்லதொரு உணவகம் இருந்திட அங்கு காலை உணவை முடித்துக் கொண்டு கோமுகி அணையை நோக்கிப் புறப்பட்டோம்.

கோமுகி அணை செல்லும் போது இக்கிராமம் அருகில் அழகான வயற்பரப்புகள் இரு புறமும் இருந்திட எல்லோருக்கும் ஆசை வந்துவிட்டது இறங்கி பார்த்திட. சென்னையில் இதனைப் பார்த்திட முடியுமோ? அதனால் தோழியும் அவரது மகனுக்கு வயல், வரப்பு, ஓடை, அங்கிருந்த மரங்கள், செடிகள் என்று எல்லாம் காட்டி விளக்கினார். 

எனக்கோ ஆஹா! எத்தனை வருடங்கள் ஆயிற்று வயற்வரப்பின் மீது நடந்து என்று வரப்பின் மீது நானும், என் நாத்தனாரும் நடந்து சென்றோம். எங்கள் அருகில் சிறிய ஓடை ஓடிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே சிறிதாக வெட்டப்பட்டு வயல்களூக்கு நீர் போய்க் கொண்டிருந்தது. அருமையான காட்சிகள். நான் என் மூன்றாவது விழியைத் திறந்தேன். முதலில் அடம்பிடித்த விழி அப்புறம் நல்ல பிள்ளையாகக் காட்சிகளைச் சேமித்தது. அங்கு ரசித்துவிட்டு மீண்டும் கோமுகி அணையை நோக்கிப் பயணித்தோம். 3 கிமீ தூரம்தான்.

கச்சிராயபாளையம் கிராமம்-ராதாவின்(கணவரின் தங்கை)  க்ளிக்ஸ்
கிராமம் வயல் என்று கண்டதும், என் கேமரா ஒத்துழைத்தவரை க்ளிக்கிக் கொண்டேன். 
இதோ இன்னும் சில காட்சிகள்…

கோமுகி அணையை அடைந்தோம். அழகான காட்சி. வெள்ளாறு எனும் ஆற்றின் கிளை நதிதான் கோமுகி ஆறு. அதன் மீது கட்டப்பட்ட இந்த அணையில் மலையின் மீது மழை பொழியும் போது சிறிய ஆறுகளின் வழி நீர் இந்த அணையை வந்தடைவது போல் கட்டப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் ஃபெப்ருவரி மாதம் வரை அணை திறந்துவிடப்பட்டு கால்வாய் வழி நீர் விடப்படுகிறது. 

 
கோமுகி அணை-ராதாவின்க்ளிக்ஸ்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் சுத்துப்பட்டு கிராமங்கள் 50 ற்கும் மேல், அவற்றைச் சுற்றியுள்ள விளைநிலங்கள் இந்த அணையிலிருந்து நீர்ப்பாசன வசதி பெற்று பயனடைகின்றன. இந்த ஆற்றின் மீது இன்னும் வெவ்வேறு இடங்களில் சிறிய சிறிய அணைகள் உள்ளன. அப்படி சுமார் 40 ஏரிகளுக்கு நீர் செல்கிறது. அதற்காக வெட்டப்பட்டிருக்கும் கால்வாயின் தூரம் 8,917 மீ. அணையின் கொள்ளளவு 46 அடி. இங்கு பூங்கா மற்றும் சிவபெருமான் சிலை, காளை சிலை, திருவள்ளுவர் சிலை என்று உள்ளன. ஆனால், நேரப்பற்றாக் குறையால் நாங்கள் அங்குச் செல்லவில்லை.

கால்வாய் வழி நீர் விடப்படுகிறது. 
கால்வாய்.....பல சுத்துப்பட்டுக் கிராமங்களையும் உயிர்ப்பிக்க ஓடுகிறது!
மேலே உள்ள கால்வாய் திறந்துவிடப்படும் மதகுப் பாலத்தின் அடியில் தேன் கூடு-ராதாவின் க்ளிக்ஸ்
அணையின் கீழ் வெந்த கடலையும், பச்சைக் கடலையுமாக விற்பனை. அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். கடலை விளைச்சல் இப்போது குறைவு என்றும் மஹாராஷ்ட்டிராவில் இருந்து வருகிறது என்றும் சொன்னார். எங்கள் நண்பரின் குடும்பமோ விவசாயக் குடும்பம். அவர் சொன்னது கடலை சாகுபடி நன்றாகவே இங்கு இருக்கிறது என்று சொன்னார். நாங்கள் பர்வதமலை அடிவார கிராமமான தென்மாதிமங்கலத்தில் கடலை பயிரடப்பட்டிருந்ததையும் பார்த்தோம். நாங்கள் பாவம் அந்த வயதானவர் என்று வெந்த கடலை வாங்கிக் கொண்டோம். நன்றாகவே இருந்தது

அணையையும், கால்வாயையும் ஃபோட்டோ ஷூட் நடத்திவிட்டு அடுத்து அங்கிருந்து 15 கி மீ தூரத்தில் கல்வராயன் மலையில் இருக்கும் பெரியார் நீர்வீழ்ச்சிக்குச் சென்றோம். வழி முழுவதும் இயற்கைக் காட்சிகள் கண்ணிற்கு விருந்தாய் இருந்தது. அங்கு மேகம், பண்ணியப்பாடி என்று மேலும் 9 அருவிகள் இருக்கின்றன.. மேகம் அருவிக்கு 5 கி மீ தூரம் நடக்க வேண்டும். பாறைகளில் இறங்க வேண்டும். இதுவும் நேரப்பற்றாக்குறையால் செல்ல இயலவில்லை என்பதை விட திட்டத்திலும் இல்லை
.
பெரியார் நீர்வீழ்ச்சி - ராதாவின் க்ளிக்ஸ்
பெரியார் நீர்வீழ்ச்சி - ராதாவின் க்ளிக்ஸ் இரு படங்களுமே ரோடிலிருந்து எடுக்கப்பட்டவை

பெரியார் நீர்வீழ்ச்சியை அடையும் போதே 9.30 மணி ஆகியிருந்தது. நீர்வீழ்ச்சி ரோடின் அருகிலேயே இருப்பதால் ரோடில் இருந்து பார்த்தாலே தெரியும். இது மலையின் கீழ்ப்பகுதியில் தான் இருக்கிறது. தமிழ்நாடு வனத்துறையின் கீழ் வருவதால் நீர்வீழ்ச்சிக்கு நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ 10. கட்டனம் வசூலித்தாலும், அங்கு இருக்கும் இரு துணி மாற்றும் அறைகளுமே மிக மிக அசுத்தமாகத்தான் இருக்கின்றன. ஆனால், எங்களுக்குக் காட்டிற்குள் எந்தவித வசதிகளும் இல்லாத அருவிகளில், ஆறுகளில் குளித்து அங்கேயே பெரிய பெட்ஷீட்டை மரங்களுக்கிடையில் கட்டி ரூம் போன்று அமைத்துக் கொண்டு துணி மாற்றிப் பழக்கம் உண்டு என்பதால் இதையும் சமாளிக்க முடிந்தது. அது போன்று ரிஸ்க்கான அருவிகளில் குளித்தும் பழக்கம் என்பதால் பெரியார் நீர்வீழ்ச்சியிலும் சிரமமில்லை. அத்தனை பயமில்லாததால் யார் வேண்டுமானலும் எளிதாக இறங்கிச் சென்று குளிக்கலாம். 

எங்கள் குழுவில் பெரும்பான்மையோர் (நானும் தான்!) எங்கேனும் நீர்வீழ்ச்சியோ, ஆறோ கண்டுவிட்டால் போதும் உடனே இறங்கி ஆட்டம் போட நினைப்பவர்கள். ஆனால், சோப், ஷாம்பூ என்று எதுவும் பயன்படுத்தவும் மாட்டோம். குப்பைகளைச் சேகரிக்க என்று தனியாகப் பைகள் கொண்டு செல்வோம். 

முந்தைய நாள் பர்வதமலை ஏறியதன் வலிகள் எல்லாம் நீர்வீழ்ச்சி செய்த மஸாஜில் கரைந்தது. ஆனந்தம் என்றால் அப்படி ஒரு ஆனந்தம். நன்றாகக் களித்துக் குளித்துவிட்டு, துணி மாற்றிக் கொண்டு மேலேறி வந்து நீர்வீழ்ச்சி ஆறாக ஓடுவதை ரோடில் மறுபுறம் இருந்து பார்த்துவிட்டு, அங்கிருந்த நல்ல விளை மண்ணையும் கொஞ்சம் சேகரித்துக் கொண்டு புறப்பட்டோம். 


வரும் வழியில் ஓரிடத்தில் ஒரு வளைவில் நின்று பார்த்தால் கோமுகி அணை வியூபாயின்ட் இருக்க அங்கிருந்து அழகாகத் தெரிந்த அணைப்பரப்பைக் க்ளிக்கிக் கொண்டு கள்ளக்குறிச்சி வந்து மதிய உணவிற்குச் சென்றோம்.

கள்ளக்குறிச்சியின் சுத்துப்பட்டுக் கிராமங்களின் விளை நிலங்கள் செழிப்புடன் இருப்பதாலோ என்னவோ காய்களும், பழங்களும் மிக மிக நன்றாக இருந்தன. இதோ குழுவினர் வாங்கிய கொய்யாப் பழம் ஒன்றில் புழு! ஹப்பா! எந்த உரமும் போடப்படாத ஆர்கானிக் பழம் என்ற மகிழ்ச்சி! ராதாவின் க்ளிக்ஸ்

முழுச் சாப்பாடு எங்களில் பலருக்கும் சாப்பிட இயலாத காரணத்தால் கொடுக்கப்பட்ட சாதத்தைப் பிரித்துக் கொண்டு இரவு உணவிற்கு தயிர்சாதமாகப் தயிர் மற்றும் பாலும் சேர்த்து அங்கேயே தயிர்சாதமாகக் கலந்து எடுத்துக் கொண்டுவிட்டோம். சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் சப்பாத்தியும், குருமாவும் சொல்லி அதையும் பார்சல் செய்து கொண்டு சென்னையை நோக்கிப் புறப்பட்ட சமயம் மதியம் 2 மணி. பயணம் முழுவதும் ஆண்கள் ஒர் அணி, பெண்கள் ஓர் அணி என்று  டம்ஷரஸ் விளையாட்டுத்தான். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டும் கூட. இப்படித்தான் எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் சினிமாக்களின் பெயர்கள் பழக்கமாகியது. தோழியின் மகன் குட்டிப் பையன் பயங்கரச் சுட்டி, ஃப்ளைட் மாடல்கள் எல்லாம் பற்றிப் பேசுவதில் கில்லாடி. அது போன்று விலங்குகள்! அவனும் இடையிடையே எங்களுக்கு டம்ஷரஸ் வழி புதிர் போட பயணம் கலகலத்தது.

வரும் வழியில் காபி, டீக்கும் நிறுத்தி அதையும் முடித்துக் கொண்டு, திண்டிவனம், மதுராந்தகம் வழி என்பதால் மதுராந்தகம் கோயிலையும் தரிசித்துவிட்டு 9.30 மணி அளவில் இனிய நினைவுகளுடன் வீடு வந்து சேர்ந்தோம்.

------கீதா

(இப்பயணம் இத்துடன் முடிகிறது. இதற்கு முன்னான இரு பயணங்கள் குறித்து எழுத வேண்டும். எப்போது என்று தெரியவில்லை. எழுதும் மனநிலை குறைந்து வருகிறது. பார்ப்போம்.)

72 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஹை ஹை வாங்க அனு!!! ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ!! அதிரா!!! அனுதான் இங்கு ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊ..!! ஹா ஹா ஹா

      வாங்க அனு!!!

      கீதா

      நீக்கு
  2. வயல்வெளியின் காட்சிகள் எப்பவுமே அழகு தான் அக்கா...பார்க்க பார்க்க தெவிட்டாத அழகு..

    அணையின் தகவல்களும் படங்களும் மிக சிறப்பு...

    அனைத்தையும் ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு! ஆமாம் நீங்களும் ரசிப்பீர்கள் என்று தெரியும்!!!!

      நீக்கு
  3. பேக்கரி வாசலில் சந்தித்த செல்லத்தின் புகைப்படம் வெளியாகாததை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் ! நான் நிச்சயமாக இந்தக் கமென்ட் உங்களிடமிருந்து வரும் என்று எதிர்பார்த்து....குழுவிடம் கேட்டேன்...என் நாத்தானாரும் கையில் மொபைல் வைத்துக் கொள்ளவில்லை....அதனால் படம் எடுக்க வில்லை. இன்னும் ஒரே ஒருவர் எங்கள் நண்பர் பாக்கி இருக்கிறார் அவரிடம் கேட்கிறேன் கிடைத்தால் மூன்றாவது விழிப்பார்வை படங்கள் தொகுப்பில் வெளியிடுகிறேன்...நான் எப்போதும் என் மூன்றாவது விழிக் கவசத்துடன் அலைபவள்...அப்படியும்..எனது மூன்றாவது விழி அவ்வப்போது படுத்தியது என்பதால் அதை ரெஸ்டில் போட்டுவிட்டுச் சென்றுவிட்டேன் காபி குடிக்கத்தானே என்று...அப்போது என் மொபைல் கேமரா நன்றாக இல்லை என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்...அதன் மேல் இருந்த அந்தப் பேப்பரை விலக்காமல் அது கூடத் தெரியாத மக்கு ப்ளாஸ்திரி நான்..பேப்பரை எடுக்காமல் படம் பிடித்துவிட்டு..அது நன்றாக இல்லை என்று....மொபைல் கேமரா நன்றாக இல்லை என்று சொல்லித் திரிந்தேன் ஹிஹிஹிஹி...அப்புறம் தானே தெரிந்தது ஹிஹிஹிஹி என் அறிவின் வளர்ச்சி!!! ஹா ஹா ஹா

      நீக்கு
  4. குளிச்சுட்டு வந்து சாப்பிட்டிருக்கக் கூடாதோ...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அப்படி ஒன்று உண்டோ?!! இதுவரை நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் பார்த்தது இல்லையே..எங்கள் குழுவில் உள்ளவர்களும் ஒன்றும் சொல்லவில்லை.....ஆனால் குளித்ததும் உடன் எல்லாம் சாப்பிட வில்லை ஸ்ரீராம்....நிறைய நேரம் கழித்துத்தான் சாப்பிட்டோம்....

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  5. அந்த வயலுக்கு சுற்றி போடச் சொல்லுங்கள். சென்னைக்காரர்கள் கண் பட்டுவிடும்! காட்சிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா!! ஆமாம் ஆமாம்!ஸ்ரீராம்...நாங்களும் சொல்லிக் கொண்டோம்! இப்படியே எப்போதும் வளமையுடன் இருக்கணும் என்று வாழ்த்தினோம்...

      நீக்கு
  6. Y அல்லது நாமம் போல படிக்கட்டுகள்... செல்லும் வழி..... சுற்றிலும் மலை.. மொத்தத்தில் இயற்கைக்காட்சிகள் கவர்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா Y நாமம்!!!! ஹையோ வேண்டாம் வேறு!! ஹா ஹா ஹா...

      காட்சிகள் செமையா இருந்தது....மிக்க நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  7. ஆ.... எம்புட்டு தண்ணீர்? சென்னை அணைகள் காணாதது! பெரியார் நீர்வீழ்ச்சி அளவாக அழகாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்...அதற்குக் காரணம் அங்கு மலையில் மழை பெய்யும் போது அந்த நீர் சிறிக்ய ஆறுகள் வழி எல்லாம் அணையில் வந்து சேரும்படியாகச உள்ளனவாம். இப்போது அதிலும் முன்பு இருந்த அணைப்பரப்பு மக்களின் ஆக்ரமிப்பினால் குறைந்து வருவதாக கிராமத்து மக்கள் போராடுவதாகவும் சொல்லப்படுகிறது. அணையின் பரப்பளவு குறைந்தால் அப்புறம் என்னாவது...இன்னும் நிறைய நிறைய சிறு அணைகளும் இருக்கின்றனவாம்...வெயில் காலத்தில் தண்ணீர் குறைவாகவோ அல்லது வற்றியோதான் இருக்குமாம் அச்சிறிய அணைகள்...

      நீக்கு
  8. புழு இருந்தால் இப்படி ஒரு அர்த்தமா? என்ன ஒரு நூதன வழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம்....ஒரு இயற்கை விஞ்ஞான செமினார் ஒன்று இங்கு அடையாரில் நடந்தது சில வருடங்களுக்கு முன்னால். அப்போது அவர்கள் சொன்னது அதுதான் அதாவது கீரை கூட வாங்கும் போது இலைகளில் ஓட்டை இருந்தால் பரவாயில்லை பூச்சி மருந்து அடிக்கவில்லை என்று அர்த்தம் அது போல காலிஃப்ளவர்...

      அதனால் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி!! ஹா ஹா ஹா.....மிக்க நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  9. நல்லபடியாக ஒரு மகிழ்வுப்பயணம் மேற்கொண்டு வந்து விட்டீர்கள். மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. விரிவாக சொன்ன தகவல்களும் அழகிய பசுமைக் காட்சிகளும் அழகு நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள்தான்.

      நீக்கு
    2. மிக்க நன்றி கில்லர்ஜி. ஆமாம் ஜி அருமையான இடங்கள் ஆனால் கண்டிப்பா கோடையில் போகக் கூடாது...வெயில் சுட்டெரிக்கும். மலையில் வேண்டுமானால் போய் தங்க நினைத்தால் தங்கலாம்...

      நீக்கு
  11. //முந்தைய நாள் பர்வதமலை ஏறியதன் வலிகள் எல்லாம் நீர்வீழ்ச்சி செய்த மஸாஜில் கரைந்தது. ஆனந்தம் என்றால் அப்படி ஒரு ஆனந்தம். நன்றாகக் களித்துக் குளித்துவிட்டு, துணி மாற்றிக் கொண்டு மேலேறி வந்து நீர்வீழ்ச்சி ஆறாக ஓடுவதை ரோடில் மறுபுறம் இருந்து பார்த்துவிட்டு, அங்கிருந்த நல்ல விளை மண்ணையும் கொஞ்சம் சேகரித்துக் கொண்டு புறப்பட்டோம்.//

    இயற்கை காட்சிகளும் அருவி குளியலும் அருமை.
    நீர்வீழ்ச்சி உடம்பு வலியை போக்கி மனமகிழ்ச்சியை கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா...நீட்வீழ்ச்சியில் குளிப்பது என்றால் தனி ஆனந்தம் மனதிற்கும் மிக மிக நன்றாக இருக்கும்...எந்த நினைவும் வராது...அப்படியே ஒன்றிப் போய்க் குளிக்கும் ஆனந்தம்...

      இயற்கை இயற்கைதான்...அக்காட்சிகளும் அப்படித்தான் மனதைக் கட்டிப் போட்டு எந்தவேண்டாத நினைவுகளுக்கும் அங்கு இடம் இருக்காது,..

      மிக்க நன்றி கோமதிக்கா

      நீக்கு
  12. முழுச் சாப்பாடு எங்களில் பலருக்கும் சாப்பிட இயலாத காரணத்தால் கொடுக்கப்பட்ட சாதத்தைப் பிரித்துக் கொண்டு இரவு உணவிற்கு தயிர்சாதமாகப் தயிர் மற்றும் பாலும் சேர்த்து அங்கேயே தயிர்சாதமாகக் கலந்து எடுத்துக் கொண்டுவிட்டோம்//

    நல்ல யோசனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா நாங்கள் எங்கு சென்றாலும் உணவை வேஸ்ட் செய்யாமல் இப்படிச் செய்துவிடுவதுண்டு. எங்குச் சென்றாலும், அடுத்த நேரத்திற்கு ஆயிற்று இல்லையா...முதலிலேயே எடுத்து தனியாக வைத்துவிடுவது வழக்கம்...

      மிக்க நன்றி கோமதிக்கா...

      நீக்கு
  13. //ஆண்கள் ஒர் அணி, பெண்கள் ஓர் அணி என்று டம்ஷரஸ் விளையாட்டுத்தான். எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டும் கூட. இப்படித்தான் எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் சினிமாக்களின் பெயர்கள் பழக்கமாகியது. தோழியின் மகன் குட்டிப் பையன் பயங்கரச் சுட்டி, ஃப்ளைட் மாடல்கள் எல்லாம் பற்றிப் பேசுவதில் கில்லாடி. அது போன்று விலங்குகள்! அவனும் இடையிடையே எங்களுக்கு டம்ஷரஸ் வழி புதிர் போட பயணம் கலகலத்தது.//

    பயணத்தின் போது விளையாட்டு ,போட்டிகள் எல்லாம் பயணத்தை மேலும் மகிழ்ச்சியாக்கும்.
    பயணம் கல கலப்பாய் இருந்ததை அறிய முடிகிறது.
    இனிது இனிது பயணம் இனிது.

    தொடர்கிறேன் கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா எங்கள் குழு எங்கு சென்றாலும் இப்படியான விளையாட்டுகள் உண்டு.இனிமையான பயணம் தான்....நான் கிட்டத்தட்ட 17 வருடங்களுக்குப் பிறகு சென்றேன். இடையில் செல்ல முடியாத பல சூழல்கள். மிக்க நன்றி கோமதிக்கா

      நீக்கு
  14. ஓ கோமுகி அணை வந்திட்டுதோ.. கொஞ்சத்தால வாறேன்ன் விளக்கமா படிச்சு கொமெண்ட் போடுறேன் கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா!! ஆமாம் கோமுகி வந்தாச்சு!!! மெதுவா வந்து போடுங்க படிச்சுட்டு....

      நீக்கு
  15. வெறும் இயற்கை காட்சிகளை எடுக்கும் போதுஇல்லாத த்ரில் அந்த புகைப் படத்தில் யாராவதுஇருந்தால் இன்னும்சோபிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார். அப்படி குழுவினர் இருக்கும் படங்களும் இருக்கின்றன...இங்கு அதில் ஓரிரண்டு பகிர்ந்தேன். மற்றவற்றைப் பகிரவில்லை.

      எனது தனிப்பட்டக் கருத்து....இயற்கையை எவ்வளவு வேண்டுமானாலும் பகிரலாம்...இயற்கையை மட்டும் படம் பிடிப்பதில்தான் ஆர்வம் ...அல்லது வித்தியாசமான மனிதர்கள், குழந்தைகள் என்று படம் பிடிப்பதில் ஆர்வம்..அதிலும் அவர்கள் அறியா வண்ணம் எடுப்பதிலும் ஆர்வம்...உண்டு. மற்றபடி என்னுடன் வருபவர்களை ஓரிரு படங்களுடன் நிறுத்திக் கொண்டுவிடுவேன்...அதிகம் எடுபப்தில் விருப்பமில்லை...

      நீக்கு
  16. இயற்கைக் காட்சிகள், வயல்வெளிகள், அருவிக்காட்சிகள் கண்ணுக்கும் மனதுக்கும் குளுமை! பயணம் சிறப்பாக அமைந்து விட்டது. அடுத்த தொடருக்குக் காத்திருக்கேன். பைரவர்/பைரவியைக் காணாமல் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ஓட்டல்களில் முழுச்சாப்பாடு யாராலும் சாப்பிட முடியறதில்லை. ஆனால் நீங்க சொல்றாப்போல் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லையே? ஒரு வேளை அந்தப் பக்கங்களில் அனுமதி கொடுத்திருக்காங்க போல. யு.எஸ்ஸில் கொண்டு செல்லலாம். செல்வோம். இங்கே இந்தியாவில் அப்படிப் பார்க்கவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாக்கா கருத்திற்கு நன்றி....ஒரு வேளை சப்பாத்தியும் குருமாவும் ஆர்டர் செய்தோமே தயிர்சாதம் குறைவாகத்தானே இருந்தது என்பதால்...கொஞ்சம் சப்பாத்தியும் ஆர்டர் செய்தோம். மதுராந்தகம் கோயில் தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்து அமர்ந்து சாப்பிட்டோம்...ஆமாம் அம்பேரிக்காவில் கொண்டு செல்லலாம்...

      அடுத்த தொடர் எழுதணும் பார்க்கிறேன்....

      நீக்கு
  17. படங்கள் அருமை
    உடன் பயணித்த உணர்வு
    நன்றி

    பதிலளிநீக்கு
  18. படங்களையும் பயணக்கட்டுரையையும் ரசித்துப் படித்தேன்.

    எப்போதும் கொஞ்ச நாளாயிட்டா எழுதறதுல ஆர்வம் குறைந்துவிடும். எனக்கும் "சுருக்க" எழுதினாற்போல் தோன்றியது.

    வழியில், தென்னை, இளனீர் சாப்பிட்ட கதை வரலை. அந்த ஏரியால இல்லையா?

    இப்படி அவ்வப்போது இயற்கை இடங்களுக்குச் சென்றுவருவது புத்துணர்வு அளிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...மிக்க நன்றி ரசித்துப் படித்தமைக்கு.

      ஆமாம் நெல்லை..மிக மிகச் சுருக்கமாகத்தான் எழுதியிருக்கிறேன்...கொஞ்சநாளாகிவிட்டால் அதன் தாக்கம் குறைந்துவிடுகிறது. மட்டுமல்ல இப்போது பொதுவாகவே எழுதுவதற்கான வேகமும் இல்லை. மூன்று கதைகள் அபப்டியே பாதியிலேயே நிற்கிறது. ஒரு கதை முடித்துவிட்டேன் ஆனால் இன்னும் எடிட்டிங்க் வேலை முடிக்கவில்லை...ஆர்வம் குறைந்துவிட்டதால் கதைகளின் பக்கம் போகவும் இல்லை....ஏனோ மிகவும் குறைவாக இருக்கு என்றே சொல்லலாம். அதனால்தான் பின்னூட்டக் கும்மி கூட அடிக்கவில்லை....மற்றபடி என் உற்சாகத்தில் ஒன்றும் குறைவில்லை...

      தென்னை இருந்தாலும் அந்த ஏரியாவில் இளநீர் பார்க்கவில்லை....இருந்தால் குடித்திருப்போமே...

      ஆமாம் நெல்லை அவ்வப்போது இப்படிச் செல்வது ரொமப்வே புத்துணருவ்தான்...பல வருடங்கள் கழித்து இபடியான ஒரு பயணம்....மிக்க நன்றி..

      நீக்கு
  19. / அவரும் எங்களுடன் அளவளாவி விட்டு நாங்கள் கிளம்பியதும் சென்றுவிட்டார்.(ள்)//

    ஹாஹா எங்கே போனாலும் நம்ம உற்ற நண்பர்கள் எப்படியாவது நம்மை வந்து சந்திப்பாங்க :)
    எனக்கு பூனை பைரவர்கள் புறாக்கள் எல்லாரும் வருவாங்க .
    பிகினிக் போனோம் ஒருமுறை யர்துடைய லாப்ரடார் செல்வமோ வந்து என்கிட்டே அமர்ந்தது :) அதன் ஓனர் பயந்திட்டார் நானா ஏதாச்சும் சொல்வேனோன்னு :) நான் சொன்னேன் நானும் அனிமல் லவர் தான்னு :) அது ஒரு பிரத்யேக வாசனை அதுங்களுக்கு தெரியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்!! ஆமாம் ஏஞ்சல் இங்க கூட நான் போகாத தெருவுக்குப் போனா கூட அங்க இருக்கற பைரவர்கள் என் பக்கத்துல வந்து முகர்ந்து பார்த்து நான் தடவிக் கொடுக்கணும்ன்ற மாதிரி நைசா கைல முத்தம் கொடுப்பாங்க...ஹா ஹா ஹாஹா...அதே தான் எங்க போனாலும் குரங்கார்லருந்து எல்லாருமே காக்கா கூட வரும்...ஆமாம் நீங்க சொல்றா மாதிரி வாசனைனு நினைக்கிறேன்...கரெக்ட். நான் நினைப்பேன் நம்ம வீட்டுலயும் கண்ணழகி இருக்கறதுனால அந்த வாசனை இவங்களுக்குத் தெரியும் போல அதான் வந்து பார்க்குறாங்கனு...

      உங்க அனுபவம் ஸ்வாரஸ்யம்...

      மிக்க நன்றி ஏஞ்சல்

      நீக்கு
  20. படங்கள் எல்லாம் அழகு .எனக்கும் வயற் பரப்பில் வெறும் காலோட நடக்கணும் .சாக்ஸ் போட்டு கால் விரல்கள் எல்லாம் ஒட்டி அசையக்கூடமாட்டேங்குது .வெறும் காலுடன் நடப்பது நல்லது.

    //
    எழுதும் மனநிலை குறைந்து வருகிறது. பார்ப்போம்.)//

    அதேதான் கீதா எனக்கும் ..இப்படியே விடக்கூடாது ஏதாச்சும் செய்யணும் ஈஸ்டர் முடியட்டும் ஆரம்பிப்போம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சல் வயற்பரப்பில் வெறும்காலோடு நடப்பதுதான் எனக்கும் பிடிக்கும்...நானும் வெறும்காலோடுதான் நடந்தேன்......ஆமாம் எழுதணும்....நீங்க இப்ப ஈஸ்டர் பிஸி அதனால உங்க சர்ச் ஆக்டிவிட்டிஸ்ல இருக்கறதுனால ...எழுதுங்க ஈஸ்டர் முடிந்ததும் நிறைய அனுபவங்கள் இருக்குமே இப்ப....

      நானும் எழுத முயற்சி செய்கிறேன்...நன்றிபா

      நீக்கு
  21. பச்சைப் பசேலென வயல்வெளி. பார்க்கப் பார்க்க பரவசம். பயணம் சிறப்பாக அமைந்திருப்பது பதிவில் புரிகிறது. பயணங்கள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வெங்கட்ஜி!!! ரொம்பவே நல்லாருந்துச்சு...இயற்கைக் காட்சிகள் செமையா இருந்துச்சு...மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு

      நீக்கு
  22. ஆரம்பப்படங்களில் இயற்கையின் தீரா இளமை..

    மேலே நீலம்
    கீழே பச்சை
    மேலும் பார்க்க
    வருதே இச்சை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா!! கவிதை கவிதை!!! செமை...ஆமாம் பார்க்கப் பார்க்க தீரா காதல்தான்...ஏதோ ஒரு படத்தில் கூட வசனம் வருமே...பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும் அப்படினு....அப்படி இதனைப் பார்க்கப் பார்க்க இன்னும் ஆசை கூடுதே தவிர குறையாது....மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா

      நீக்கு
  23. கட்டுரையின் இறுதிப்பகுதிக்குத்தான் வந்திருக்கிறேன்! முந்தைய பகுதிகளை வாசிக்காமல் விட்டிருக்கிறேன்! விரைவில் வாசிக்க முயல்கிறேன்! படங்களும் விவரிப்பும் அருமை! கிராமத்தின் இயற்கையழகு சுண்டி இழுக்கிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சுரேஷ்....முடிந்த போது வாசியுங்கள். பர்வதமலை கண்டிபபாக வாசியுங்கள் அந்தக் கோயில் பற்றி அறியலாம்....மிக்க நன்றி சுரேஷ் கருத்திற்கு

      நீக்கு
  24. மிக மிக இனிமையான பயணம். முக்கிய காரணம் ,நீரும் வயலும். இந்தப் பசுமை என்றும் நீடிக்கணும். அழகாக எழுதி இருக்கிறீர்கள் கீதா.

    அருவி குளியல் ஆஹா.மிக நன்றி மா.இன்னும் பயணங்கள் வாய்க்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா !! மிக்க நன்றி வல்லிம்மா..கருத்திற்கு..ஆம் பசுமை நீடிக்கணும்....அழியாமல்...அருவி குளியல்னாலே சுகம் தான்...வல்லிம்மா...

      நீக்கு
  25. ஆஹா என்ன ஒரு அழகு பச்சை வயலும் காட்சிகளும்... அங்கு நின்றபோது கீதாவுக்குக் கவிதை ஏதும் வரேல்லையோ?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா கவிதை எல்லாம் என்னென்னவோ தோணிச்சு அப்புறம் அவ்வளவுதான் காற்றில் கரைந்து போயிடுச்சு...உடனே எழுதி வைத்தால்தான் உண்டு...

      மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  26. எந்தாப்பெரிய தேன்கூடு.

    பெரியார் நீர்வீழ்ச்சி சூப்பர்... சில்லெனக் குளிர்ந்திருக்குமே தண்ணி.

    கோமுகி அணை மிக அருமை.. அதுவும் தூரத்தில் எடுத்த படங்கள் இன்னும் சூப்பர் ... எதைச் சொல்ல எதை விட அனைத்தும் அருமை.. மகிழ்ச்சியான சுற்றுலா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் பெரிய தேன் கூடு அதிரா...தண்ணி செமாய்யா இருந்துச்சு...சில்லு சில்லு என்று...சுகம்!!

      ஆமாம் அதிரா மகிழ்ச்சியான சுற்றுலாதான்....மிக்க நன்றி அதிரா..

      அதிரா ரொம்ப பிஸியோ...

      நீக்கு
  27. கச்சான் விற்கும் தாத்தா பொய் சொல்லிட்டாரோ:)...

    அச்சச்சோ எதுக்குப் புழுவை எல்லாம் படமெடுக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா தாத்தா பொய் சொல்லிருப்பாரா என்று தெரியவில்லை..அதிரா ஏனென்றால் அவரும் வேறு சந்தையிலிருந்துதானே வாங்கி வந்திருப்பார். அங்குசொல்லப்பட்டதை சொல்லியிருப்பார். ஒரு வேளை ஆந்திரா, மஹாராஷ்ட்ராவிலிருந்து இங்கு சந்தைக்கு வருவதையும் சொல்லியிருக்கலாம். சிட்டி என்றால் எல்லா மாநிலக்கலவையும் இருக்கலாம்... எங்கள் நண்பர் நாங்கள் சென்ற இடம் கிராமம் என்பதால் அருகில் விளையும் போது எதற்கு மற்ற மாநிலம் என்றதால் சொன்னார். எப்படியோ கடலை நன்றாக இருந்தது!!

      ஹா ஹா ஹா ஹா எல்லாத்தையும் படமெடுக்கும் போது புழுவுக்கு ஆசை வராதோ நம்மளையும் படம் புடிச்சு எல்லாருக்கும் காட்டணும்னு....பாவம் அது!! ஹா ஹா ஹா

      மிக்க ந்னறி அதிரா

      நீக்கு
  28. பார்க்க பார்க்க மனதிற்கு இதம்...

    அழகான அருமையான பயணம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி வருகைக்கும் கருத்திற்கும்...

      ஆம் மிக மிக அருமையான பயணம்..

      நீக்கு
  29. ஆஹா நீங்களும் பயணக்கட்டுரை எழுதுகிறீர்களா? விரைவில் அனைத்தயும் படித்துவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முரளி சகோ! இதற்கு முன்னும் எழுதியிருக்கிறேன்...நேரம் கிடைக்கும் போது வாசியுங்கள். மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  30. அருமையான உலா.அழகான புகைப்படங்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் கருத்திற்கும் ரசித்தமைக்கும்

      நீக்கு
  31. "எழுதும் மனநிலை குறைந்து வருகிறது" இப்படியெல்லாம் சொல்லாதீர்கள். ஆர்வம் குறைந்துவிட அனுமதித்தால் அதை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல.
    இந்தப் பதிவு பார்வை விருந்தாக அமைந்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கோவிந்தராஜு ஐயா.தங்களின் ஊக்கம் மிகு வார்த்தைகளுக்கும் பதிவைப் பற்றிய கருத்திற்கும்... உண்மைதான் மீட்டெடுப்பது மிகவும் சிரமம்..

      எழுத முயற்சி செய்கிறேன் ஐயா...

      நீக்கு
  32. புகைப்படங்கள் & பதிவு அருமை. ஒரே ஜில் ஜில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தேனு...ஜில்ஜில் அருவில நனைஞ்சீங்களா?!!

      ஹா ஹா ஹா

      நீக்கு
  33. வணக்கம் சகோதரி

    தங்களின் பயணக்கட்டுரை மிகவும் பிரமாதமாக இருந்தது. பச்சை பசேல் வயல்கள். பாய்ந்தோடும் நீர்வீழ்ச்சி படங்கள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. வயல் வரப்பினை பார்த்தால் மனதுக்குதான் எவ்வளவு உற்சாகமாக இருக்கும்.அந்த ஆனந்தமே தனியானது.நானும் இவ்வித காட்சிகளை மிகவும் ரசிப்பேன். தங்களின் புகைப்படங்கள் அவ்வித ஏக்கத்தை தீர்த்து வைத்தன. சிறப்பாக இருந்தது.மிக்க நன்றி.

    அடுத்த பயணக்கட்டுரைகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கமலா! ரசித்ததற்கும், கட்டுரை எல்லா பகுதிகளையும் வாசித்தமைக்கும். ஆமாம் இயற்கை எத்தனை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது இல்லையா...

      இன்னும் உங்கள் கதையை முழுவதும் வாசித்து முடிக்கவில்லை...முடித்துவிடுகிறேன்...

      மீண்டும் மிக்க நன்றி

      நீக்கு
  34. பச்சைப்பசேல் என்ற வயல்வெளிகளையும், அருவிகளையும், வாய்க்கால்களையும், நீர்த்தேக்கத்தையும் பார்க்க எவ்வளவு ஸந்தோஷமாக இருக்கிறதென்று அளவிட்டுக் கூறமுடியலே. கூடவே போய்ப்பார்த்தமாதிரி ஒரு மன உணர்ச்சி சிறிது நேரம். படிச்சதற்கே இப்படி என்றால் பார்த்தால் எப்படி இருக்கும்? கற்பனையில் கூடவே வரலாம். அதுதான் சிறந்த வழி. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி காமாட்சியம்மா தங்களின் ரசனையான கருத்திற்கு...ஆமாம் அம்மா நிச்சயமாகக் கற்பனையிலும் பயணிக்கலாம்....மிக்க நன்றி அம்மா

      நீக்கு
  35. படங்களுடன் அருமையான பயண அறிமுகம்
    பயனுள்ள பதிவு

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் நண்பரே.. !

    உங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது, பார்வையிடவும். தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/ வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் இணையத்தளதிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    நன்றி
    http://gossiptamil.com/aggre/

    பதிலளிநீக்கு