முதல் பகுதி, இரண்டாம் பகுதிகளின் சுட்டிகள் இதோ...
1263 படிகள். ஏறும் இடத்திலிருந்து
நம் மூதாதையர்களின் ஆட்டம் தொடங்குகிறது. அதைப்பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். என்று
முடித்திருந்தேன். நிறையவே இடைவெளி வந்துவிட்டது இந்தப் பயணப்பதிவில். இணையம் வேறு சரியாக இல்லை. படங்களைப் பதிவேற்றம் செய்வதில் ரொம்பச் சிரமமாக இருந்தது. நினைத்த போது இணையம் வரும் போகும் என்ற நிலை. நாளை சரியாகும் என்று நினைக்கிறேன்.
படியில் ஒரு தும்பி..உடனே ஒரு க்ளிக். தெரிகிறதா?
படிகளை ஏறிக் கடக்கும் போது ஆங்காங்கே
நாங்கள் 5 நிமிடம் போல சற்று ஓய்வு எடுத்துவிட்டுத் தொடர்ந்தோம். அப்படி ஓய்வு எடுக்கும்
நேரத்தில், என் கேமரா ஒத்துழைத்த தருணங்களில் நான் சில காட்சிகளைப் படம் பிடித்தேன்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாங்கள் அடையவேண்டிய கோயில் இருக்கும் மலை உச்சியைப் பார்த்தால்
அது நந்தி வடிவில் இருக்கும் என்று எங்களுடன் வந்த, ஏற்கனவே 6 முறை சென்ற அனுபவம் உள்ள
நண்பர் சொல்லவும் பார்த்தால் ஆம் நந்தி வடிவம்.
தோழி நளினி எடுத்த புகைப்படம்.
மலையின் உச்சி நந்தி வடிவில்
இவ்வடிவம் காலப்போக்கில் மழை,
காற்று, வெயில் என்று இயற்கைச் சுழலில் மாறுமோ? மாறலாம். நிச்சயமாக மாறும் என்றே நினைக்கிறேன்.
ஆனால், அதற்குப் பல வருடங்கள் ஆகலாமாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. கிளிக்கிக்
கொண்டோம்.
குழுவில், சாப்பாடு மூட்டைகளையும்,
கொரிக்கும் உணவுப் பொருட்கள், தண்ணீர் அடங்கிய பைகளைக் கொண்டு செல்வதை மோப்பம் பிடித்த
நம் மூதாதையர்கள் அவர்களிடம் வம்பு செய்யத் தொடங்கினார்கள். வம்பு ரசிக்கும்படி இருந்தாலும்
நாம் கவனமாக இருக்க வேண்டுமே! என் மைத்துனர், தான் சுமந்த சாப்பாட்டு முதுகுப் பையைத்
தன் அருகில் வைத்து அமர்ந்திட, நாங்கள் குரங்கார்களைப் பற்றிய பேச்சு சுவாரஸ்யத்தில்
இருக்க ஒரு குரங்கார் மெதுவாக வந்து மைத்துனர் வைத்திருந்த சாப்பாட்டுப் பையின் ஜிப்பை
மிக லாகவமாகத் திறந்தாரே பார்க்கணும்! நான் அவரைப் படம் பிடிக்க முயற்சி செய்ததைப்
பார்த்த குரங்கார் “ர்ர்ர்ர்ர்” என்றிட, நான் எங்கேனும் பிடுங்கிவிடுவாரோ என்று கேமராவை
மூடி வைத்துவிட்டேன். நாம் பையை அப்புறப்படுத்த முயன்றால் குரங்காருக்கும் கோபம் வரும்
என்பதால் மைத்துனர் அமைதியாக இருந்திட எங்களில் ஒருவர் கம்பைக் காட்ட குரங்கார் நகர்ந்தார்.
பாருங்கள் இந்தக் குரங்கார் உணவு
கேட்டுக் கைநீட்டுகிறார்…என்ன அழகு இல்லையா? இதை அப்பவே இங்குச் சொல்ல நினைத்து விட்டேன்.
நாங்களும் நடக்கத் தொடங்கினோம்.
அங்கு இருந்த மரங்களில் காய்ந்த கிளைகளில் இருந்து கம்புகளை ஒடித்து எடுத்துக் கொண்டோம்.
மேலிருந்து கீழே இறங்கியவர்களும் எங்களிடம் கம்புகள் வைத்துக் கொள்ளச் சொன்னார்கள்.
குரங்கார்கள் தண்ணீருக்கு ரொம்பவே அலைந்தார்கள் பாவம்! அங்குச் சென்ற மக்கள் சிலரிடம்
வம்பு செய்திருப்பார்கள் போலும் அங்கு தண்ணீருடன் எறியப்பட்டிருந்த பாட்டில்களில் இருந்த
தண்ணீரை சிலர் மூடியைத் திறந்து குடித்தார்கள். சிலர் மூடியைத் திறக்க இயலாமல் பாட்டிலின்
அடியில் பல்லால் கடித்து ஓட்டை போட்டு, சொட்டும் தண்ணீரை அழகாகக் குடித்தார்கள். கண்கொள்ளாக்
காட்சி!
மூதாதையர்களுக்கு ஜிப் பழகியிருப்பதால்,
ஜிப் என்றாலே பை என்ற நினைப்பு போலும். பேன்ட் ஜிப்பிலும் கை வைத்தார்கள்! எனவே கையில்
பையிருந்தால் கம்பில்லாமல் நடப்பது உசிதமல்ல.
அழகான நீரோடை
மழை பெய்தால் ஓடும் ஆறு போலும்.
ஏறும் போது ஓர் இடத்தில் அழகான
நீரோடை. உடனே ஒரு கிளிக் எடுத்துக் கொண்டேன். சற்று தூரம் ஏறியதும் வலது புறம் சல சல
என்ற சத்தம் கேட்கவும் இன்னும் கொஞ்சம் ஏறித் தேடிய போது அங்கு தண்ணீர் கொஞ்சமாக ஆறு
போல் ஓடுவது தெரிந்தது. மழை பெய்தால் ஓடும் ஆறு போலும். கொஞ்சம் முனைந்து இறங்கினால்
அருகில் செல்ல முடியும் என்றாலும் மீண்டும் ஏறி பாதைக்கு வரும் போது சறுக்கிடலாம் என்பதாலும்
நேரமும் இல்லை என்பதாலும் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். மீண்டும் ஏறத் தொடங்கினோம்.
வழியில் இப்படி ஒரு சிவலிங்கம்…கூடாரம்
வைக்கப்பட்டு
ஏறும் போது எடுத்த சில காட்சிகள்…
மரத்தின் கீழே தெரிவது கடையின் கூடாரம்..
வழியில் கால்வாசி தூரம் கடந்த
பின் கடை இருக்கிறது. மேலே கோயிலின் நுழை வாயில் வரை சற்று தூர இடைவெளியில் தோராயமாக
ஒரு அரை கிலோமீட்டர் தூர இடைவெளியில் சிறிய கடைகள் இருக்கின்றன. விடுமுறை நாட்களிலும்,
பௌர்ணமி தினங்களிலும், விசேஷ நாட்களிலும் மட்டுமே நிறைய மக்கள் மலை ஏறுவதால் இக்கடைகள்
இந்த நாட்களில் மட்டுமே திறக்கப்படுகின்றன. கிராமத்திலிருந்து இங்கு வந்து கடையை நடத்துபவர்கள்
இங்கேயே தங்கி மீண்டும் தங்கள் வீட்டிற்குச் சென்று விடுகின்றனர். கடைகள் சிறிய கூடாரம்
போல் இருக்கிறது. ஸோலார் பேனலை வெளியில் வைத்து சூரிய ஒளி சேமித்து இரவு நேரங்களில்
சூரிய ஒளி மூலம் பெறப்படும் மின்சாரத்தால் கடைகள் சிறு வெளிச்சத்தில் இயங்குகின்றன
என்று சொன்னார்கள். எப்படிப் பொருட்களைக் கொண்டு வருகின்றார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.
இங்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின்
விலை ரூ40. குழிப்பணியாரம், கேப்பைக் கூழ், இட்லி, வடை, டீ, காஃபி, மூலிகை சூப், சுக்கு
காபி என்று கிடைக்கிறது. கிராமத்து அதுவும் மலையில் உள்ள கடைகளில் கூட இலைகள் மறைந்து
பேப்பர் தட்டுகள் அவதாரம் எடுத்துப் புகுந்திருப்பது தெரிந்தது. சிறிய பேப்பர் கப்புகளில்
காபி, டீ, சுக்குக் காபி. மூலிகை சூப் (காபி, டீ, சுக்குக் காபி ரூ 10. மூலிகை சூப்
ரூ 20) அத்தனை தூரம் தண்ணீர் எடுத்துச் செல்வது கடினமாயிற்றே! குறிப்பாக எல்லாக் கடைகளிலும்
குழிப்பணியாரம் கிடைக்கிறது. படிகளின் அருகில் இருக்கும் கடைகளில், அங்கிருக்கும் படிகளில்
அமர்ந்து சாப்பிடலாம். பாறைப் பகுதிகளில் இருக்கும் கடைகளில் வெளியில் சம தரையுள்ள
இடம் இருக்கும் இடத்தை சுத்தப்படுத்தி பாய்கள் அல்லது ஷீட்கள் விரித்து வைத்திருக்கிறார்கள்.
அங்கு அமர்ந்து உண்ணலாம். ப்ளாஸ்டிக் பக்கெட்டுகளைக் குப்பைத் தொட்டிகளாக வைத்திருக்கிறார்கள்.
கேமரா ஒத்துழைக்க மறுத்ததால் படம் பிடிக்க முடியவில்லை.
படிகள் முடிந்ததும் பாறைக்கற்கள்
பாதை தொடங்குகிறது ஏற்றமாகத்தான். ஒரு சில இடங்களில் மட்டும் காலை பாறைக் கற்களின்
மீது ஊன்றி ஏற முடியும். பல இடங்களில் கால் சறுக்கிவிடாமல் இருக்க வேண்டி கவனமாகக்
கைகளையும் ஊன்றி நடக்க வேண்டும். பாறைக் கற்களில் நடக்கும் போதும் குரங்கார்களின் விளையாட்டு
தொடர்ந்தது. இதோ சில படங்கள்.
அப்புறம் கொஞ்சம் தூரம் கை பிடித்து
ஏறுவதற்கு ஏற்ப கம்பி பதிக்கப்பட்டிருக்கிறது. அதில் இடையில் சில பகுதிகள் உடைந்திருக்கிறது.
இங்கும் காலை நாம் கவனமாக ஊன்ற வேண்டும். இல்லை என்றால் இடுக்கில் கால்கள் இறங்கிவிட
வாய்ப்புண்டு. கம்பிகள் இருக்கும் பகுதி முடிந்ததும் மீண்டும் பாறைகளில் கைகளை ஊன்றியும்,
பிடித்துக் கொண்டும் ஏற வேண்டும்.
எங்கள் நண்பர் ராமன் எங்கள் குழுவில் சீனியர் மோஸ்ட்.
எங்கள் நண்பர் ராமன் எங்கள் குழுவில்
சீனியர் மோஸ்ட். அவருக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி நடந்து சில வருடங்கள் ஆகின்றன. மிக மிக
ஜோவியலானவர். மிகவும் “ஸ்வீட்டான” மனிதரும் கூட நாங்கள் அவர் பிரச்சனைகள் எதுவுமில்லாமல்
ஏற வேண்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்க அவரோ எங்களுக்கு முன்னர் ஏறி முதலில் மலைக்
கோயிலை அடைந்தவர். மலையில் ஏற முடியுமா என்று யோசிப்பவர்கள் கூட இப்பதிவைப் பார்த்து
இதோ எங்கள் நண்பரைப் பார்த்து அவரைப் போல மன உறுதியுடன், உற்சாகத்துடன் ஏறிட ஒரு ஊக்கம்
கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ஒரு இடத்தில் நாங்கள் அமர்ந்த
போது எங்களுடனேயே எங்கள் அருகில் நண்பர் குரங்காரும் அமர்ந்தார். நீங்களும் அவருடன்
பேசி, அவரைப் பேட்டி எடுத்துக் கொண்டிருங்கள்… பாறைகள் நிறைந்த பகுதியின் தொடர்ச்சியும்,
கடப்பாறைப் பகுதியும், கோயிலை அடையும் பகுதியும் அடுத்த பதிவில்…
ஏறுவோம்….
--------கீதா
ஊக்குக் குறிப்பு: பதிவு சிறிது என்றாலும். செல்ல முடியாத
பலருக்காகவும் எடுத்த புகைப்படங்களை இங்குக் கொஞ்சம் அதிகமாகவே தந்துள்ளேன்.
ஏறுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் போலிருக்கு. கூட்டமாக ஏறும்போது அந்தக் கஷ்டம் தெரியாதுன்னு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஎவ்வளவு நேரம் ஆனது? வழியில் கடைகள் இருப்பது நல்லதுதான். ஏதாவது சாப்பிடவாவது கிடைக்கும்.
தொடர்கிறேன். அடுத்த பதிவு, இந்தப் பதிவை மறக்கறதுக்குள்ள வந்துடுமா?
அதிரா போல ஃபர்ஸ்டூஊஊஊனு சொல்லலியா ஹா ஹா ஹா ஹா...நன்றி..
நீக்குகொஞ்சம் கஷ்டம்தான் நெல்லை...ஆனால் குழுவா போனதுதால அவ்வளவா தெரியலை...அதுவும் இது குளிர்நாளில் போவது மட்டுமே நல்லது....எங்களுக்கு 4 1/2 மணி நேரம் எடுத்தது. பொதுவாக 3 1/2 மணி நேரம் சொல்லப்படுகிறது...கடைகள் இருந்தாலும் நாங்கள் ஏறும் போது எதுவும் சாப்பிடவில்லை. நாங்கள் எல்லாம் கொண்டு சென்றதால். அடுத்த முறை போகும் போது தண்ணீர் மட்டும் கொண்டு போனால் போதும் என்று தோன்றுகிறது...
//அடுத்த பதிவு, இந்தப் பதிவை மறக்கறதுக்குள்ள வந்துடுமா?//
ஹா ஹா ஹா ..நெல்லை நெட் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்..வந்துவிடும்!!
மிக்க நன்றி நெல்லை
ஆஆஆங்ங்ங் சரி சரி மீ விட்டுக் குடுத்திட்டேன்ன்:) ஹையோ இப்போ கலைக்கப் போறாரே:)
நீக்கு1ஸ்ட்டு பிளேஸ் கிடைக்கல்லியே இனி எப்ப போனா என்ன.:) என நினைச்சு அங்கின அடிபட்டு இங்கின அடிபட்டு இப்போதான் வந்து சேர்ந்தேன்ன்ன்...
புகைப்படங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குகுறிப்புகள் அருமையாக தொகுத்து தந்தமைக்கு நன்றி
மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு...
நீக்குஅது சரி, நீங்கள் தரும் விவரங்கள் சரியானதா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா சென்னை
ஹா ஹா ஹா ஹா...ஸார் நான் போனதால்தானே சொல்ல முடிகிறது!!!! மிக்க நன்றி செல்லப்பா ஸார் கருத்திற்கு
நீக்குமிகவும் அருமையான பயணம். உடல்நிலை இடம் கொடுத்தால் நாங்களும் எப்போதோ சென்றிருப்போம். இனி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. பாறைகளைப் பார்த்தாலே எப்படி ஏறினீங்கனு ஆச்சரியம் வருது! அதுவும் உடல்நிலை சரியில்லாதவர் இருதய நோயாளி ஏறி இருக்காரே! இறைவன் துணை என்பது இம்மாதிரி நிகழ்வில் இருந்து புரிகிறது.
பதிலளிநீக்குபுரிகிறது கீதாக்கா....குழுவாகச் சென்றதால் நன்றாகவே இருந்தது. அங்கு தனியாக அல்லது இரண்டு பேர் என்றும் ஏறுகிறார்கள்...
நீக்குநண்பர் ராமன் ஏறியது இறைவனின் அருளாள்...நிச்சயமாக மிக்க நன்றி கீதாக்கா....
படிக்கட்டில் ஏறும்போது அருகிலிருக்கும் காடுகளின் அடர்த்தியிலிருந்து எந்நேரமும் ஒரு சிறுத்தையோ, புலியோ வெளிப்படும் சாத்தியக்கூறு ?!!!!
பதிலளிநீக்குஹா ஹா இல்லை ஸ்ரீராம். அங்கு மந்திகள் தவிர வேறு விலங்குகள் இல்லை. இருப்பதாகவும் தெரியலை. இது மழை பெய்த சீசன் என்பதால் காடு கொஞ்சம் செழிப்பாக இருக்கு. வெயில் காலம் என்றால் இருக்காது என்றே தோன்றுகிறது. பாம்புகள் இருக்கலாம்..பூச்சிகள், இருக்கலாம்...மற்றபடி ஆபத்தான விலங்குகள் இல்லை...
நீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்
குறுகலான வழி.
பதிலளிநீக்குதும்பி சரியாகத் தெரியவில்லை தம்பி!! நந்தி வடிவ மலையுச்சி அழகு. அவ்வளவு தூரம் செல்ல வேண்டுமா? அப்பாடி!
சில இடங்களில் குறுகலான வழி ஆம் ஸ்ரீராம்.
நீக்குஹா ஹா தம்பி...ஓ ஸாரி அண்ணா...(ஸ்ரீராம் அடிக்க வருவார்...மீ எஸ்கேப் ஆயிடறேன் கமென்ட் போட்டுட்டு) தும்பி அதே கலர்ல இல்லையா..ஸோ தெரியாதுனு நினைச்சேன்..இருந்தாலும் எடுத்தேன் படம்...
மலை உச்சி நந்தி வடிவம் அழகு இல்லையா...இது காலப்போக்கில் உரு மாறாம இருக்கணும்னு தோனிச்சு ஸ்ரீராம்...
பாறைக் கற்களே பாதையாகவா? அம்மா....டி... கால் வலிக்கிறது.
பதிலளிநீக்குபடிகள் முடிந்ததும் பாறைக் கற்கள்...பலரும் வெறுங்கால்களிலேயே நடக்கிறார்கள்...அது சரி என்றேதோன்றியது என்றாலும் காலில் ஏதேனும் குத்தினாலோ என்றும் தோன்றியது......நாங்கள் ஷூ போட்டுக் கொண்டுதான் சென்றோம்...
நீக்குநீங்கள் சுருங்க சொன்னதை படங்கள் விளங்க வைத்து விட்டன. சுருக்கத்திற்கு காரணம் இணைய படுத்தலா?
பதிலளிநீக்குமிக்க நன்றி பானுக்கா...//சுருக்கத்திற்கு காரணம் இணைய படுத்தலா// சுருக்கத்திற்குக் காரணம் இணையப் படுத்தல் இல்லை படுத்தல் இருந்தாலும்....சின்ன சின்ன பார்ட்டாகச் சொல்லுவதுதான் செல்லுபடியாகிறது அக்கா...நான் கொஞ்சம் நீளமாக எழுதுவதுண்டு இல்லையா...அதை மென்டராக என்னை மென்ட் பண்ணியவர்கள் மதுரைதமிழன் மற்றும் ஸ்ரீராம்....ஸோ க்ரெடிட் அவர்ங்களுக்கு..
நீக்குனெட் இப்ப ராத்திரி அமெரிக்கா நேரத்திர்குத்தான் வெலை செய்யுது...ஹா ஹா ஹா
கீதா
தும்பி படம் நீங்கள் சொன்ன பிறகு கவனமாய் பார்த்தவுடன் தெரிந்தது,
பதிலளிநீக்குஅருமையான படங்கள்.
மலைபாறைகளில் இடையில் கால் மாட்டிக் கொள்ளாமல் நடக்க வேண்டும்.நந்தி வடிவ பாறை அழகு.
குரங்குகள் தொந்திரவு செய்வது கஷ்டம் தான். கடைகளில் உணவுகள் கிடைப்பது நல்ல விஷயம் தான்.
தொடர்கிறேன்.
ஹை உங்களுக்குத் தெரிந்ததா தும்பி கோமதிக்கா ரொம்ப மகிழ்ச்சி...ஆம் அக்கா பாறைகளில் கவனமாக நடக்கணும்...மிக்க நன்றி கோமதிக்கா....கருத்திற்கு
நீக்குஆவ்வ்வ்வ் படி ஏறத் தொடங்கியாச்சுப்போல...
பதிலளிநீக்கு//நண்பர்கள் முன்னே….நான் பின்னே கிளிக்கிக் கொண்டு…///
ஹா ஹா ஹா பின்ன கடமை முக்கியம் எல்லோ:))
ஆமாம்...ஏறத் தொடங்கி ஹால்ட் போட்டாச்சு...அடுத்து பாறைகளில் அல்லோ பயணம்...யெஸ் யெஸ் நம் கடமை எருமையைப் பார்க்கோணும் இல்லையா...அப்பத்தானே இங்கன போட முடியும்...
நீக்குநன்றி நன்றி அதிரா...
//படியில் ஒரு தும்பி..உடனே ஒரு க்ளிக். தெரிகிறதா?//
பதிலளிநீக்குஓ நானும் கண்டு பிடிச்சிட்டேன் பாறைக் கலரிலேயே இருக்கிறார்.. அதுசரி இதில ஒரு ஒற்றுமை நாங்களும் தும்பி எனத்தான் சொல்லுவோம்.. வெளிநாடு வந்ததிலிருந்து மறந்திருந்தேன் நினைவு படுத்திட்டீங்க.
ஹை அதிரா நீங்களும் கண்டு பிடிச்சிட்டீங்களா சூப்பார். ஸ்ரீராம் மட்டும் தான் கண்டு பிடிக்கமுடியலை....அவர் கண்ணாடி போட்டு பார்க்கலையா இருக்கும் இல்லையா அதிரா...அது சரி நீங்க கண்னாடி போட்டுத்தானே பார்த்திருப்பீங்க இல்லையோ...ஹா ஹா ஹா ஹா
நீக்குஹா ஹா ஹா கர்:) இல்ல கீதா ஸ்ரீராம் கண்ணாடி போட்டுத்தான் பார்த்திருப்பார் தும்பியையும் பார்த்திருப்பார்.. ஆனா கொமெண்ட் போடும்போது மறந்திட்டார்ர்:)) ஹா ஹா ஹா அவருக்கு மறதி அதிகமெல்லோ:))
நீக்குஸ்ரீராமுக்கு மறதி உண்டு!! அதனால "கண்ணாடி போட்டுப் பார்த்தும்" அப்படின்றத சேர்க்க மறந்துட்டாரோ...போட்டுப் பார்த்தும் தும்பி தெரியலை தம்பி!!ஹா ஹா ஹா...
நீக்கு(மானத்தை வாங்கறாங்களே...)
நீக்குஆ... நானும் பார்த்து விட்டேன் தும்பியை.... என் கண்ணுக்கும் தெரிந்து விட்டது...
அவ்வ்வ்வ்...
ஹா ஹா ஹா ஸ்ரீராம் வாங்க அப்படி வாங்க வழிக்கு!!! அதிரா!!!! செய்தி கேட்டீங்......க......ளா...ஆஆஆஅ...ஸ்ரீராம் தும்பியைப் பார்த்து.......ட்ட்ட்ட்டா....ர்!!! அவர் கண்ணுக்கும் தெரிந்து விட்டதாஆஆஆஆஆஆஆஆம்....இந்தச் செய்தியை பரப்பிடுவோம்...ஹா ஹா ஹா
நீக்குதட்டாம்பூச்சியை தும்பின்னு சொல்றீங்களா? தும்பின்னா அது வண்டாச்சே. (கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி ஞாபகம் வருதா? அதுக்கு வசனம், 'தும்பி இனத்தைச் சேர்ந்த வண்டே.. நீ கண்ட மலர்களுள்.....)
நீக்கு///தோழி நளினி எடுத்த புகைப்படம். மலையின் உச்சி நந்தி வடிவில்//
பதிலளிநீக்குஹா ஹா ஹா அப்படியேதான் இருக்கு. இங்கும் ஒரு மலை இருக்கு அதுக்கு “ஸ்லீப்பிங் இண்டியன்” எனப் பெயர் வச்சிருக்கினம்.. அது ரெட் இண்டீஸ் ஒருவர் படுத்திருப்பதுபோல தெரியும் தொலைவில் இருந்து பார்க்க.
ஹா ஹா ஹா கிரேட் குரு மிக அழகாக தியானத்தில் இருக்கிறார். கடசிப் படத்தில குட்டியோடு கோபம் போல:)... இவை செங்குரங்குகள் எனச் சொல்லுவோம் தானே.
இந்த ரெட் இண்டியன் படுத்திருக்கும் மலை நான் உறவினர் ஒருவர் உங்க ஊர்ப்பக்கம் வந்து போனப்ப சொல்லிக் கேட்டிருக்கேன். படம் பார்த்ததில்லை...
நீக்குகுட்டியோடு இருக்கும் குரங்கார் உணவு கேட்கிறார் பாருங்கள்....எங்களிடம்... // கிரேட் குரு தியானம்// ஹா ஹா ஹா ஹா
//வழியில் இப்படி ஒரு சிவலிங்கம்…கூடாரம் வைக்கப்பட்டு//
பதிலளிநீக்குஹையோ கீதா எனக்கு.. சிவபெருமான் சிலை சிவலிங்கம், வைரவர் இவை மூன்றிலும் கொள்ளைப் பிரியம்.. இவற்ரைப் பார்த்தால் நகரவே மாட்டேன் கும்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும்.. என் ஒன்று விட்ட அக்கா ஒருவர் சொல்லுவா.. கோயிலில் வைரவருக்கு முன்னால போனால் அதிரா சிலையாகி விடுறா என ஹா ஹா ஹா... சிலைகள்தான் பிடிக்கும்.. போட்டோ எனில் அவ்வளவு கவர்ச்சி இல்லை.
அருமையான சிவலிங்கம்.
எனக்கும் சிவலிங்கம் ரொம்பப் பிடிக்கும்./...அதுவும் குட்டியாக....இது நேரில் பார்க்க இன்னும் அழகு..வைரவர் கோயில்கள் இங்கு நிறைய இருக்கு அதிரா...அப்ப நீங்க இங்கருந்து போகவே மாட்டீங்க...ஹா ஹா ஹா
நீக்குமிக அருமையான பிரயாணம் பார்க்கவே மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.. பலபேர் சேர்ந்தால்தான் நேரம் போவதும் களைப்பும் தெரியாமல் ஏற முடியும்.. சில இடங்களில் பாறைகளில் எப்படி ஏறினீங்க.. வழுக்கி விட்டால் அவ்ளோதான்.
பதிலளிநீக்குகார்ட் பை பாஸ் செய்தோரின் கார்ட் மிக சூப்பராக இயங்கும் கீதா:)).. அவர்கள் 10 வயது இளமையாகி விட்டதுபோல இருப்பார்கள்.
அருமையான படங்கள்.. அதுசரி நெட்டும் அடிக்கடி டோச்சர் பண்ணுவதைப்போல உங்கள் கமெராவும் டோச்சர் பண்ணுதோ?:).. இருவரும் சகோஓஓஓஓதரமாக இருப்பினமோ:)).. ஹா ஹா ஹா.
ஆமாம் ...ரொம்பவே அருமையான பயணம்...பிடித்துக் கொண்டு ஏறினோம் அதிரா..வழுக்கும் வாய்ப்பு உண்டு அதுவும் இறங்கும் போது...நண்பர் எப்ப்வுமே இளமைதான்...ஜோவியல்...
நீக்குகேமரா போயே போச் அதிரா...மலை ஏறும் போதே அதையும் கையில் பிடித்து ஏறினால்..அதுவும் க்ளிக்கிக் கொண்டே...ஒரு இடத்தில் சிறிதாகத் தட்டியது...அப்புறம் அதுகொஞ்சம் மக்கர் செய்தது..அப்புறம் வீட்டுக்கு வந்ததும் ஒரேஅடியா போச்சு..னெட் வரும் வராது...அப்படி இருக்கு...இதோ இந்த அமெரிக்க நேரத்தில் தான் வேலை செய்யுது../இருவரும் சகோஓஓஓஓதரமாக இருப்பினமோ:))..// முன் ஜென்மத்து பழக்கமா இருக்குமோ....ஹா ஹா ஹா ஹா..
வாவ் !! அந்த பசுமையான சூழல் கண்ணுக்கு செம விருந்து .இம்மாதிரி மலை ஏற சல்வார் கமீஸைவிட வசதி ஜீன்ஸ் மற்றும் முழுக்கை டி ஷர்ட் அப்புறம் ட்ரெக்கிங் ஷூஸ் .முன்னோர்கள் ரொம்ப க்ளோசா வந்திருக்காங்க :) எல்லாம் பாசம்தான் நம்மேல் .
பதிலளிநீக்குஅந்த கடைகள் பற்றி ..இவ்ளோ அழகான உயரமான இடத்தில கடை போடுவது உண்மையில் வருகை தரவங்களுக்கு வசதி என்றாலும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தால் நல்லது ..நம்ம ஊரில் மந்தாரை இலைகள் கிடைக்கும் அதுவே பயன்படுத்தலாமே .
நான் தும்பியை பார்த்தேனே .
நந்தி வடிவம் அழகாக இருக்கு .அப்புறம் நம்ம முன்னோர் அம்மா அவங்க செல்லக்குழந்தையை ஒரு கையால் அணைத்து பிடித்திருக்கும் காட்சி செம :)
வாங்க ஏஞ்சல்.... நிறைய அழகான காட்சிகள் இருந்தன படமும் எடுத்திருக்கேன்,,,பதிவுகள்ல கொடுக்கறேன் கொடுக்க முடியாததைத் தனியாக புகைப்படங்கள் மூன்றாவது விழியின் பார்வையில் கொடுக்கிறேன் ஏஞ்சல்
நீக்குமுன்னோர்கள் செம க்யூட் ஏஞ்சல்....பேன்ட் ஜிப்பைக் கூடத் திறக்க முயற்சி பண்ணினார்கள் ஹா ஹா ஹா..கூடவேதான் வந்தார்கள் ..நானும் பொதுவாகவே பிரயாணம் என்றால் ஜீன்ஸ் பேன்ட் அண்ட் ஷார்ட் டாப்ஸ்....ஷர்ட் ஃபுல் ஹேன்ட்..ஷூஸ் இப்ப்டித்தான்....அன்றும் அப்படியே..
யெஸ் ஏஞ்சல் கடைகள் இருப்பது ஓகே கஷ்டப்பட்டுப் பொருட்கள் கொண்டுவராங்க ...குப்பைத் தொட்டிகளும் வைச்சுருக்காங்க ஆனாலும் மக்கள் ஆங்காங்கே எறியராங்க...என்ன சொல்ல...மந்தாரை இலைகள் கூட இப்பல்லாம் எல்லா இடங்களிலும் இல்லை ஏஞ்சல்..பாக்கு மட்டைத் தட்டுகள் கூட வைக்கலாம்...நாங்கள் எங்கள் குப்பைகளைக் கவனமாக ஒரு பையில் போட்டு எடுத்து வந்து குப்பைத் தொட்டியில் போட்ட்டோம்...
ஹை நீங்களும் தும்பியைப் பார்த்தீங்களா சூப்பர் ஏஞ்சல்....
முன்னோர் அவங்க செல்லக் குழந்தையை ஹையோ ரொம்ப க்யூட் ஏஞ்சல்...அடுத்த பதிவில் இன்னுரு படம் போடறேன் என் நாத்தனார் எடுத்த படம்..செம க்ளோஸப்..அந்தக் குழந்தையை வைச்சுக் கிட்டு எனக்கும் ஏதாவதுகொடுங்கனு கை நீட்டறாங்க பாருங்க ஒரு படத்துல ஹையோ நாங்க ரொம்ப ரசித்தோம்....
நன்றி ஏஞ்சல்...
பதிவு படிக்கப்படிக்க பர்வத மலைக்கு ஒரு முறை நிச்சயம் போகவேண்டும் என்ற உணர்வு உந்திச்செல்கின்றது! குரங்காருடன் எடுத்த பேட்டியை விரைவில் பகிருங்கள்)))
பதிலளிநீக்குநேசன் நிச்சயமாகப் போய் வாருங்கள்...ஓ ஆனால் உங்களுக்கு விசா கிடைப்பது இப்போ சிரமமாக இருக்கிறது இல்லையா? வாய்ப்பு கண்டிப்பாகக் கிடைக்கும் நேசன்.//.குரங்காருடன் எடுத்த பேட்டியை விரைவில் பகிருங்கள்)))// ஹா ஹா ஹா ஹா ஹா...பகிர முயற்சி செய்கிறேன்..
நீக்கு.மிக்க நன்றி கருத்திற்கு
குரங்கார் யாசகம் கேட்கும் காட்சி மனதை நெருடுகின்றது!
பதிலளிநீக்குஆமாம் நேசன் எங்களுக்கும் நேரில் அதைக் கண்ட போது மனது ரொம்ப வேதனை அடைந்தது. பாவமாக இருந்தது மட்டுமல்ல அது அம்மா குரங்கார் தன் பிள்ளையுடன் வேறு இருந்தார். பாவம்..ஆனால் ஏதேனும் போட்டால் அப்புறம் நிறைய முன்னோர்கள் நம்மைச் சூழ்ந்து கொள்வார்களே என்று போடமால் விட்டோம்...
நீக்குஅழகான படங்களுடன் விரிவான தகவல்கள்...
பதிலளிநீக்குஅவ்வளவு பெரிய காட்டின் குரங்குகளுக்கு ஏற்ற கனிவகைகள் கிடைக்கவில்லை போலிருக்கின்றது..
கோயிலுக்கு வருவபவர்களை நம்பித்தான் அவைகளும் இருக்கின்றன போலும்..
எல்லாம் சிவன் செயல்... வாழ்க நலம்..
மிக்க நன்றி துரை செல்வராஜு அண்ணா தங்களின் கருத்திற்கு. பதில் கொடுக்கத் தாமதம்.
நீக்குகுரங்குகளுக்கு அங்கு அவற்றிற்கான கனிகள் இருப்பதாகத்தெரியவில்லை. எல்லாம் கடைகளில்,அல்லது மக்கள் கொடுப்பது கோயில் என்று பிழைக்கின்றன. வாழ்வதற்கு மரங்கள் இருக்கின்றன அந்த மட்டும் கொஞ்சம் நிம்மதி.
எல்லாம் அவன் செயல் ஆம் அண்ணா.
திருப்பதி மலைமேல் ஏறும்போது, ப்ரெஷர் (குறைவா அதிகமான்னு சொல்லத் தெரியலை) பாதி வழியில் எனெர்ஜி போய் 10-15 நிமிஷம் உட்கார்ந்துடுவேன் (கடந்த மூன்று தடவை இப்படியாச்சு. கடைசியா போனபோது என் பையனுடன் சென்றதால், பயம் வந்துவிட்டது). கோல்கொண்டா கோட்டை பார்க்க, நல்லாச் சாப்பிட்டுட்டு, 12 மணி வெயில்ல மலை ஏறினதுலயும் ரொம்ப கஷ்டமாயிடுத்து. அதனால் இந்த மாதிரி மலை ஏத்தம் கொஞ்சம் கஷ்டம்தான்னு தோணுது.
பதிலளிநீக்குநெல்லை மலை ஏறும் போது சாப்பிடக் கூடாது. அதாவது குறைந்தது 3 மணி நேரம் அவகாசம் தேவை. ஃபுல்லாகச் சாப்பிடாமல் போகணும். கையில் இனிப்பு மிட்டாய்கள் வைத்துக் கொள்ளலாம் நாவறட்சி இல்லாமல் இருக்கும். வாழைப்பழம் வைத்துக் கொண்டால் நல்லது. முயற்சி செய்து பாருங்கள்...வெயிலில் மட்டும் ஏறக் கூடாது. எங்கள் குழுவும் சரி நானும் ஏறவே மாட்டோம்..நான் குளிரைக் கூடத் தாங்கிவிடுவேன். வெயில் என்றால் நிறையவே தயக்கம் உண்டு...
நீக்குபுகைப்படங்கள் அருமை
பதிலளிநீக்குஆனால் படிகளே இல்லாமல் ஏறுவதைப் பார்த்தாலே மூச்சு வாங்குகிறது
மறக்க இயலாத பயணம்தான்
நன்றி
மிக்க நன்றி கரந்தை சகோ கருத்திற்கு. முதலில் கொஞ்சம் படிகள் உண்டு. அடுத்து இறுதியில் கொஞ்சம்...ஆம் மறக்க இயலாத பயணமே
நீக்குஅருமையான சாதனை. வர்ணனியும் படங்களும்.
பதிலளிநீக்குகூட வந்தே களைத்துவிட்டேன். சிறிய வயதில் போக வேண்டிய இடம். மகிழ்ச்சிமா. தொடர்கிறேன்.
ஆமாம் வல்லிம்மா சின்ன வயதில் ஓரளவிற்கு ஏறும் திடம் இருந்தால் ஏறலாம்...மிக்க நன்றி வல்லிம்மா...கருத்திற்கு
நீக்குபிரம்மாண்டமான பயணம்....
பதிலளிநீக்குஆம் கீதாக்கா பெரிய மஹால்களை பார்ப்பதை விட இது கடினம் ..அதிலும் அந்த பாறைகளில் ஏறுவது என்பது வியப்பே...
மிக அருமை அக்கா..
அருமையான படங்கள்...
நந்தி வடிவ பாறை மிக அழகு....
பார்க்க பார்க்க பரவசம்...செல்லும் ஆசையை உங்கள் வார்த்தைகள் தூண்டுகின்றன..
மிக்க நன்றி அனு கருத்திற்கு. கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆனால் ஏறி இறங்கியதும் ஏதொ சாதனை போல இருந்தது...முடிந்தால் வயதாவதற்குள் சென்று வந்துவிடுங்கள் அனு!! குழந்தைகளும் மிகவும் எஞ்சாய் செய்வார்கள்..
நீக்குஅழகான படங்கள். இந்த இடம் பார்க்கும்போது அய்யர் மலை சென்ற நினைவு எனக்குள்..... அங்கே கூட நிறைய படிகள். ஆனால் இது போன்ற கடினம் கிடையாது. சென்று வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
பதிலளிநீக்குவெங்கட்ஜி மிக்க நன்றி! அட! அய்யர் மலை! ஒரு இடம் தெரிந்து கொண்டாச்சு...நெட்டில் பார்த்துவிட்டேன் ஜி...உங்க ஊர் சைடுதான் போல...அது போல பச்சைமலையும் உள்ளது லிஸ்டில்...
நீக்குநீங்களும் இந்த இடம் செல்லுங்கள் ஜி. ஆனால் டிசம்பரில் செல்லுங்கள். குளிர் நாளில்...
மெள்ள இப்போதுதான் படித்தேன். சிரமங்கள் இருந்தாலும் போகவேண்டும் என்ற ஆவல் பலத்தைக் கொடுக்கிறது. எவ்வளவு விஷயங்கள்? நிறைய விஷயங்கள் அறியமுடிந்தது. படங்களே இன்னும் கூடுதலான விஷயங்களை மனதில் தோன்ற வைக்கிறது. ஆர்வம், விஷயக்கோர்வை மிகவும் நன்றாக உள்ளது. அன்புடன்
பதிலளிநீக்குபர்வத மலை பயணப் பதிவு மிக அருமை. எனக்கு மலை ஏற்றம் மிகவும் பிடிக்கும். பதிவுக்கழகு படங்கள்; அட்டகாசம். காடுவாழ் உயிரினங்களுக்கு நாம் உணவளித்து அவற்றின் முயற்சியை மழுங்கச் செய்தல் கூடாது என்பது என் கருத்து. அவற்றுக்குத் தண்ணீர் வசதி அளிக்க வேண்டியது அரசின் பொறுப்பு.
பதிலளிநீக்குஅழகான மலையேற்றப் பாதை. நீரோடைகள். குரங்கின் சேட்டைகள். அருமையான வர்ணனை. நான் நினைவில் கொண்டது இந்தச் செய்யுளைத்தான். திருவண்ணாமலையிலுள்ள ஒரு சிவன் கோவிலில் பதிவு செய்த கல்வெட்டுச் செய்யுள்:
பதிலளிநீக்குநல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில்
வெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன்
வகையும் குரங்கும் விசைய முந்தீட்டிய
ஆடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்
(http://know-your-heritage.blogspot.in/2017/02/naviram-hills-parvathamalai-and.html)
என்று பர்வதமலையின் இயற்கை வளத்தைக் குறிக்கிறது.
அழகான மலையேற்றப் பாதை. நீரோடைகள். குரங்கின் சேட்டைகள். அருமையான வர்ணனை. நான் நினைவில் கொண்டது இந்தச் செய்யுளைத்தான். திருவண்ணாமலையிலுள்ள ஒரு சிவன் கோவிலில் பதிவு செய்த கல்வெட்டுச் செய்யுள்:
பதிலளிநீக்குநல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில்
வெல்புக ழனைத்தும் மேம்படத் தங்கோன்
வகையும் குரங்கும் விசைய முந்தீட்டிய
ஆடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்
(http://know-your-heritage.blogspot.in/2017/02/naviram-hills-parvathamalai-and.html)
என்று பர்வதமலையின் இயற்கை வளத்தைக் குறிக்கிறது.
புகைப்படங்கள் அருமை. வர்ணனை கச்சிதம்.
பதிலளிநீக்கு