சனி, 18 மார்ச், 2017

பெண் அன்றி நான் அல்ல பொம்மை...

  சுவர்க்கடிகாரத்தின் குயிலின் இனிய நாதம் மணி 4 என்றது. அயர்ந்து உறங்கியிருக்கிறேன் போலும். ஏனோ இன்று இப்படி ஒரு அசதி. அதற்குள் 4 ஆகிவிட்டதா என்ற உணர்வு. மதியம் வரைதான் இன்று பள்ளி என்பதால், எனது அறைக்கு வந்ததும் உறங்கியே போனேன். அருகில் இருந்த கோயில் திருவிழா என்பதால்  தேய்ந்து போன ரெக்கார்டில் தாசேட்டன் இழுத்து இழுத்துப் பாடிக் கொண்டிருந்தார்தாசேட்டன் இதைக் கேட்டால் என்ன நினைப்பார் என்று நினைத்ததும் சிரிப்பு வந்தது

கண் திறக்கும் போது எதிரே சுவற்றில் இருக்கும் முருகன் படத்தில் இருந்த காலண்டரின் தேதி ஜானகி டீச்சரின் மகளது கல்யாணம் நாளை என்பதை நினைவுறுத்தியது. மண நாளுக்கு முதல் நாள் மணவீட்டுக்குச் சென்று வருவது வழக்கம் ஆனதால், இன்று, எங்கள் பள்ளியிலிருந்து மாலை பெரும்பான்மையானோர் ஜானகி டீச்சரின் வீட்டிற்குப் போக வேண்டும் என்று திட்டமிட்டிருந்தது நினைவில் வர, எழுந்து விரைவில் தயாராகி, ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கூட வாசலில் சந்திக்கலாம் என்று சொல்லியிருந்ததால் அங்கு சென்றேன்எல்லோரும் வந்ததும், ஜானகி டீச்சரின் வீட்டுக்குப் போனோம்.

வீட்டின் முகப்பு கல்யாண வீட்டிற்கான களையுடன், அலங்காரத்துடன் இருந்தது. குழந்தைகள் ஆரவாரத்துடன் ஓடி ஆடி, ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இளம் பெண்கள் தங்கள் அலங்காரம் நன்றாக இருக்கிறதா என்பதை அறிய அங்கு குழுமியிருந்த இளைஞர்களைக் கடைக்கண் பார்வையால் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர். இப்போதுதான் சமூக வலைத்தளங்கள் வந்துவிட்டனவே! எல்லோரும் ஸ்மார்ட்டாக கையில் ஸ்மார்ட் ஃபோனுடன் செல்ஃபி எடுக்கும் செல்ஃபி பிள்ளைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர். நொடிக்கு நொடி படங்கள் சமூக வலைத்தளங்களுக்குப் பறந்து கொண்டிருந்தன. இளைய சமுதாயம் நிறையவே மாறிவிட்டதுதான். எங்கள் இளம் வயது காலக்கட்டத்தில் இல்லாத தைரியமும் வந்திருக்கிறது இத்தலைமுறையினரிடம்வீட்டினுள் நுழைந்தோம்.

பெரிசுகளின் ராஜ்ஜியம் முன் ஹாலில். 1947 காலகட்டங்களில் சஞ்சரித்துக் கொண்டும் கேரளத்தின் மாற்றங்களைக் குறித்தும், கம்யூனிஸ்டா, காங்கிரஸா என்ற விவாதங்களையும், அலசி ஆராய்ந்தும், அவர்களில் பலரது அடுத்த தலைமுறை கல்ஃபில் வாழும் வாழ்க்கையைப் பற்றியும், தாங்கள் சென்று வந்த பெருமையையும் அவ்வூரையும் நம்மூரையும் ஒப்பிட்டுக் கதைகளாகப் பேசிக்  கொண்டிருந்தார்கள். பொழுது போக வேண்டுமே! கல்யாண வீடு களை கட்டியிருக்கத் தேவையில்லாமல் டிவி யில் நேர்மையான போலீஸ் அதிகாரி சுரேஷ்கோபி, “புல்லேஎன்று வசனம் பேசிக் கொண்டிருந்தார்.

எங்கள் கண்கள் ஜானகி டீச்சரைத் தேடிக் கொண்டிருக்க, ஜானகி டீச்சரும் அவரது அக்கா மாதவியும் எங்களைக் கண்டதும் வந்து எங்களை உபசரித்துவிட்டு, உள்ளே அழைத்துச் சென்று, கல்யாணப் பெண்ணிற்கு அவர்கள் வாங்கியிருந்த நகை, கல்யாணப் புடவை எல்லாம் எடுத்து வந்து எங்களிடம் காட்ட, அதைப் பற்றி நாங்கள் எல்லோரும் பேசிக் கொண்டிருந்தோம். பெண் ஆசிரியர்கள் எல்லோரும்  பெண்களுக்கே உரித்தான ஆர்வத்துடன் அதைப் பார்த்து, தங்கள் பெண்களுக்குக் கல்யாணம் செய்யும் போது, வேறு எந்த வகையில் வாங்கலாம், எங்கு வாங்கலாம், போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். கூடவே கொஞ்சம் வம்பும், பார்க்கும் பொருட்களைப் பற்றி கமெண்டும் ரகசியக் குரலில் அடித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் ஆண்கள், எங்களுக்குள், கிடைக்கவிருக்கும் புதிய DA (Dearness allowance) பற்றியும், சம்பள உயர்வு பற்றியும், பேசிக் கொண்டிருந்தோம். டீச்சரின் அக்கா மாதவியிடம், ஏதோ ஒரு சிறு வித்தியாசம் தென்பட்டதால், என் கண்கள் மாதவியை ஆராயத் தொடங்கியது.

ஜானகி டீச்சரின் அக்கா மாதவி எங்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும், ஏதோவொரு பிரச்சினை அவரை அலட்டுவது போல் எனக்குத் தோன்றியதுஇடையிடையே, தொலைபேசி அழைப்புகள் அவருக்கு வந்து கொண்டிருந்தனசில அழைப்புகளை ஏற்றுக் கொண்டார்சிலவற்றை முணுமுணுத்துக் கொண்டே "கட்" செய்வதுமாக இருந்தார்நான் அவரது பிரச்சினை என்ன என்று அறிய சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் கல்யாணப் பெண்ணிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த தருணத்தைப் பயன் படுத்தி, மற்றவர்கள் கவனிக்காத போது,

"என்னப் பிரச்சினைரொம்ப டென்ஷனா இருக்கீங்க போலஎன்றேன்.

அந்த ஆள்தான்எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்காம ஒரே தொந்தரவு. என்ன செய்யறதுன்னே தெரியல! இனிமேயும் என்னால பொறுக்க முடியாது. அதான் போலீஸ்ல புகார் கொடுக்கலாமானு யோசனை பண்ணிக்கிட்டு இருக்கேன்!".  

அவர் யோசிக்கட்டும். அதற்குள் இவர்களைப் பற்றியும், மாதவியைப் பற்றியும் ஒரு சிறு அறிமுகம். இவர்களது குடும்பம் இவர்களின் பெற்றோர் காலத்திலிருந்தே எங்களது குடும்பத்து நண்பர்கள் ஆதலால், ஜானகி டீச்சர் தன் குடும்ப விஷயங்களைப் பற்றி அவ்வப்பொழுது என்னிடம் பகிர்ந்து கொள்வதால், அவ்விரு குடும்பங்களிலும் நடந்த, நடக்கின்ற எல்லா சம்பவங்களைப் பற்றியும் எனக்கு ஓரளவு தெரியும்

மாதவி, தற்போது, பாலக்காடு கலெக்ட்ரேட்டில் பணிபுரிகிறார்.  55 வயது. அடுத்த வருடம், 2018, மார்ச் மாதம் ரிட்டையராகப் போகிறார். அவருடைய ஒரே மகள், இந்து, ஒரு வங்கியில் பணி புரிகிறார்மகள் இந்துவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள்இருவரும், கல்லூரியிலும், பள்ளியிலுமாகப் படிக்கிறார்கள். இந்துவின் கணவன் மகேஷ் கடந்த வருடம் நடந்த ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார்எனவே, மகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் மாதவிதான் ஆதரவாகவும், ஆறுதலாகவும் இருக்கிறார்இப்போதும் கூட, ஜானகி டீச்சர் சொன்ன சம்பவங்களை எல்லாம் நினைக்கும் போது, அவை எல்லாம் என் கண் முன் சம்பவித்தது போல் ஓர் உணர்வு எனக்கு ஏற்படுகிறது! எனக்கு அங்கு இருந்தவர்களிடம் மேலும் பேச ஒன்றும் இல்லாததால், போரடிக்கவே நான் மெதுவாக மொட்டை மாடிக்குச் சென்று அருகில் இருக்கும் மலைகளையும், அங்கிருக்கும் மல்லிங்கேஸ்வரர் கோயிலையும் பார்த்துக் கொண்டிருக்க மனம் ஒரு குரங்காயிற்றே! அது நினைவுகளை அசை போடத் தொடங்கி பின்னோக்கிச் சென்றது.

(பின் குறிப்பு: இந்தக் குறுநாவல் இரு வருடங்களுக்கு முன் ஒரு மாத இதழின் குறுநாவல் போட்டிக்காக அனுப்பித் தேர்வு பெறவில்லை. அதையே இங்கு பகுதிகளாகப் பிரித்து வெளியிடுகிறேன். அடுத்த பகுதி திங்களன்று வரும் - துளசிதரன்.)














51 கருத்துகள்:

  1. அழகிய நடை..
    அடுத்த பகுதிக்காக காத்திருக்கின்றேன்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் துரை செல்வராஜு ஐயா! மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  2. மாதவி அவர்களின் வரலாறு அறிய தொடர்கிறேன்.

    സൂരേഷ് ഗോപി நேர்மையான போலீஸ் அதிகாரியா ?
    இது சினிமாவில்தானே...

    அவரு "எடோ புல்லே" அப்படியிலே சொல்வாரு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடருங்கல் கில்லர்ஜி! சுரேஷ் கோபி ஹஹ சினிமாவிலதான்....ஆம் எடா புல்லே நு தான் சொல்லுவாரு...இங்கு சும்மா புல்லே என்பது மட்டுமே கதையைச் சொல்பவரின் காதில் விழுந்ததால் அப்படிச் சொல்லிச் சென்றேன்.

      மிக்க நன்றி கில்லர்ஜி! கருத்திற்கு

      நீக்கு

  3. கதைக் கரு அருமை!
    தங்கள் கைவண்ணம்
    பதிவுக்கு அழகு சேர்க்கிறது!
    அடுத்த பகுதியில் தொடருகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் நண்பரே! பாராட்டிற்கும் கருத்திற்கும்....

      நீக்கு
  4. அடடா...! மாத இதழின் ஆசிரியரின் முகவரியை கொஞ்சம் சொல்வீர்களா...? கொஞ்சம் பேசவும் வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் டிடி எதற்கு? நல்ல தேர்ந்த அனுபவ எழுத்தாளரான இராயசெல்லப்பா சாருடைய கதையே தேர்வாகவில்லை எனும் போது என் கதை எல்லாம் எங்கே! அவர் தானெ எங்களுக்கு இந்தப் போட்டியைப் பற்றிச் சொன்னதே! எப்படிக் கொடுக்க வேண்டும் என்று பல யோசனைகள் தெரிவித்தார். அவருக்கும் நாங்கள் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

      மிக்க நன்றி டிடி

      நீக்கு
  5. வந்த வேகத்தில் வோட் போட்டிட்டுப் போகிறேன் பொய் எனில் கையைப் பாருங்கோ மை இருக்கு...இன்னும் படிக்கவில்லை...வந்து படிக்கிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ்ஹஹஹ சரி சரி நம்பிவிட்டோம்!!! அதிரா சகோ! எப்போது நேரம் கிடைக்கிறதோ வாசித்துக் கொள்ளுங்கள் இங்குதானே இருக்கப்போகிறது....

      மிக்க நன்றி அதிரா சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
    2. கையில் மை இருக்கலாம் ஆனால் வோட்டு ஒழுங்காக போட்டீர்களா என்பது தெரியவில்லையே நெக்ஸ்ட் டைம் வோட்டு போடுவதை வீடியோ எடுத்து போடவும்

      நீக்கு
    3. அதிரா உங்களுக்கு ஓட்டுப் பெட்டி கண்ணில் பட்டதா??!! என் கண்ணில் படவே இல்லையே!

      கீதா

      நீக்கு
  6. துவக்கமே அசத்தலாக இருக்கிறது ..திருமண மண்டப காட்சிகள் அதுவும் தற்கால காட்சிகளை நான் பார்த்ததில்லை ..அப்படியே அங்கே இருந்ததது போன்ற உணர்வு ..
    கோயில் திருவிழா சத்தம் எல்லாம் எவ்ளோ இனிமை !! இன்னும் தாசேட்டன் பாட்டு ஒலிக்குது பல புதியோர் வருகைக்குப்பின்னும் எவ்ளோ ஆச்சர்யமில்லை !
    அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சலின் சகோ! தாங்கள் ரசித்து வாசிப்பதற்கும் மிக்க நன்றி! ஆம் இப்போதும் எங்கள் ஊரில் தாசேட்டனின் குரல் ஒலிக்கிறது தான் அந்த அளவிற்கு அவர் பாப்புலர், மக்களை ஈர்த்தவர் ஆயிற்றே! ஒரு சில பழைய பக்திப்பாடல்கள் அவரது இசைத்தட்டுதான் பெரும்பாலாக...

      நீக்கு
  7. ஆஹா! சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லையே. நீங்கள் மொத்தமாக போட்டதும் நானும் மொத்தமாக படித்து கொள்கின்றேன்.

    ஆர்வத்தினை கிளப்பும் அறிமுகத்தை எழுதி விட்டு மீதியை தொடரும் போட்டது நல்லாவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஷா சகோ இப்படிப் போடவில்லை என்றால் பெரிதாக இருந்தால் வாசிப்பதற்குச் சிரமமாக இருக்கும் வாசிக்க பலருக்கும் சலிப்பு ஏற்படுவதால்க இப்படிப் போட வேண்டியுள்ளது. அடுத்த பகுதியை இன்னும் கொஞ்சம் கூடுதலாகத் தர முயற்சி செய்கிறேன்....சரியான இடத்தில் தொடரும் போட வேண்டுமே!!! ஹஹஹ்

      கருத்திற்கு மிக்க நன்றி நிஷா சகோ!

      நீக்கு
  8. ஆகா
    தொடரும் போட்டுவிட்டீர்களே
    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை நண்பரே! தங்களின் கருத்திற்கு. ஆம் பெரிது அல்லவா அதனால்தான் தொடரும்...

      நீக்கு
  9. இப்படிப் பிரித்துப் போடுவதனால் படித்தது மறக்கவும் தொடர்ந்து படிப்பவர் எண்ணிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கிறது என் அனுபவம் அப்படி வாழ்த்துகள் இதுவரை உங்கள் தளத்தில் கதைகள்படிக்க வில்லை என்றே நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் சார். ஆனால் பெரிய நாவலை இப்படித்தானே போட முடியும். இது புத்தகமல்லவே. பெரிதாகப் போட்டாலும் படிக்க எல்லோரும் கஷ்டப்படுவர் அதனால்தான் பிரித்துப் போடுவது....இது எங்களுக்கு முன்பும் நிகழ்ந்துள்லது சார்.

      இதற்கு முன் இருவருமே கதைகள் எழுதியிருக்கிறோமே சார். முன்பு. ஒரு சில கீதா எழுதியவற்றில் அவரது பெயர் இருக்காது. தற்போதுதான் தனது பெயரைப் போடுகிறார். ஆனால் இருவரின் கதைகளும் உண்டு. கதைகள் பகுதியில் பார்த்தால் இருக்கும் ஜிஎம்பி சார்..

      மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  10. நாவல் எனக்குறிப்பிட்டதால்
    இது நாவல் எனப் புரிந்துகொண்டேன்
    அதுவரை இயல்பான நடையில்
    சொல்லிப் போனவிதம் உடன்
    நிஜ நிகழ்வுபோலவே எனக்குப்பட்டது
    அற்புதமான துவக்கம்
    ஆவலுடன் தொடர்கிறோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது குறுநாவலே! கீதா சாம்பசிவம் சகோவிற்குச் சொன்னது போல நான் என்று வருவதால் அப்படித் தோன்றுகிறது போலும்! நிகழ்வுகளில் சற்று கர்பனை கலந்து கதையே!....மிக்க நன்றி நண்பர் ரமணி அவர்களே! தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  11. அடுத்த பகுதிக்குக் காத்திருக்கேன். சொந்த அனுபவமோனு நினைக்க வைத்தது. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை சொந்த அனுபவம் எல்லாம் இல்லை சகோ! அறிந்த நிகழ்வுகளில் கொஞ்சம் கற்பனை கலந்து எழுதுவது.

      அது ஏனோ தெரியவில்லை நான் என்று குறிப்பிட்டு எழுதினால் அது சொந்த அனுபவம் என்று கருத்தில் கொள்ளப்படுகிறது!!!! அது அப்படியான தொனியைக் கொடுக்கிறது போலும்!

      மிக்க நன்றி சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  12. "தாசேட்டன்" என்றால் என்ன? 'புல்லே' என்றால் என்ன?

    நீங்கள் அனுப்பிய அதே குறுநாவல் போட்டிக்கு நானும் அனுப்பினேன். ரிசல்ட் இருவருக்கும் ஒன்றுதான்! அதை என் தளத்தில் ஏற்கெனவே வெளியிட்டுவிட்டேன். நீங்கள் என் இவ்வளவு தாமதம் செய்தீர்கள் என்று புரியவில்லை. திருத்தம் செய்து வெளியிடுவதால் தாமதமா?
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாசேட்டன் என்பது, கேரளத்தில் திரு ஜேசுதாஸ் அவர்களை அன்புடன் அழைக்கும் முறை. லாலேட்டன் என்று மோஹன் லாலையும், மம்மூட்டி யை மம்முக்கா என்றும் தான் இங்கு சொல்வது வழக்கம். தாசேட்டன் - தாஸ் அண்ணன் உங்களுக்குத் தெரியாதது அல்ல. புல்லே - எடோ புல்லே என்று சுரேஷ் கோபிக்குப் பொதுவாக வரும் வசனம் திட்டுவது...தமிழில் அற்பமானவனே என்று சொல்லுவது போல்...

      ஆம் சார்! உங்கள் கதை வெளி வந்ததை வாசித்தோம்.

      திருத்தம் செய்யவில்லை சார். இதுதான் இறுதிக் காப்பி. ஏனோ வெளியிடத் தோன்றாமல் இப்போது தோன்றியதால் வெளியிடுகிறேன் சார். ஆனால் வெளியிட நினைத்து 4, 5 மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது எனது பதிவுகள் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டதால் வெளியிடுகிறேன்.

      மிக்க நன்றி சார். தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  13. ஒரு திருமண வீட்டை, அழகாக கண்முன்னே கொண்டு வந்திட்டீங்க... நாமும் அங்கு வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டு விட்டது துளசி அண்ணன். விரைவில் அடுத்த பகுதியைப் போடுங்கோ..

    மனம் மொட்டை மாடியில் நின்று பின்னோக்கிச் செல்வதைப் பார்த்தால், இனி ஜானகி றீச்சரின் இளமைக் காலம் வரப்போகுது என எண்ண வைக்குது.. பார்ப்போம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ...மிக்க நன்றி அதிரா சகோ...வாசியுங்கள்...அது யாருடைய கதை என்று தெரிய வரும்..

      நீக்கு
    2. //ஒரு திருமண வீட்டை, அழகாக கண்முன்னே கொண்டு வந்திட்டீங்க... நாமும் அங்கு வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டு விட்டது///


      அதிரா விருந்தினர்களாக அங்கு வந்தது போல உணர்வா அல்லது மணப்பெண்ணாக வந்தது போல உணர்வா?

      நீக்கு
    3. மதுரைத் தமிழன் அப்ப அதிரா சின்னப் புள்ளையா....ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  14. குறுநாவலா? அடடே... தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஆம்! மிக்க நன்றி. பதிலளிக்கத் தாமதமாகிவிட்டது. நான் பார்த்து பதில்களை கீதாவுக்கு அனுப்பி போட வேண்டியுள்ளதால்...

      நீக்கு
  15. சகோ துளசி & கீதா,

    கதை அழகாக நகர்கிறது. காட்சிகள் நேரில் பார்ப்பது போலவே உள்ளன. அடுத்த பகுதியைப் படிக்கும் ஆவலில் காத்திருக்கிறேன்!

    DA க்கு Dearness allowance இப்படிகூட பொருள் உண்டோ :) அறிவித்தவுடன் சந்தோஷத்தில் இதை கணக்குப்போட்டுப் பார்த்த நாட்கள் நினைவில் வந்துபோகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் ஆம்!! டிஏ!! மிக்க நன்றி சகோதரி சித்ரா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  16. நேற்று கேட்க நினைத்து மறந்துபோய்ப் போய் விட்டேன்ன்...
    தலைப்பு குழப்பிப் போட்டிருக்கிறீங்களே?:).. பொம்மை அல்ல எனத்தானே வரோணும்... வித்தியாசமாக சிந்தித்திருப்பீங்கபோல:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ அதிரா தலைப்பு ஒரு பழைய தமிழ்படப் பாடல். கேட்டதில்லையா? நான் பெண் தான் பொம்மை அல்ல என்பது தானே குழப்பம் இல்லை என்றே தோன்றுகிறது..

      மிக்க நன்றி சகோ...

      நீக்கு
  17. பதிவுக்கு மண்டை காய்க்கிறது எனக்கு ,நீங்கள் அழகான கதை இருந்தும் வெளியிடாமல் இருப்பது நியாயமா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் பகவான் ஜி உங்களுக்கா மண்டை காய்கிறது??!!வியப்பாக இருக்கிறது. இதோ இப்போது வெளியிட்டுவிட்டேனே....

      மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  18. பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பர் நாகேந்திர பாரதி கருத்திற்கு

      நீக்கு
  19. குறுநாவல் ரசித்தேன். தொடருக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  20. மிகவும் சுவாரசியமான துவக்கம்.. கதையை நேரில் நின்று உம் கொட்டிக் கேட்பது போன்ற உணர்வு.. பத்திரிகையில் வெளியிட அவர்களுக்குக் கொடுத்துவைக்கவில்லை.. அவ்வளவுதான். தலைப்பும் சிந்திக்கவைக்கிறது.

    (பெண் ஆசிரியைகள் என்பது சரியா... ஆசிரியைகள் என்றாலே பெண்கள்தானே.. ஆசிரியைகள் அல்லது பெண் ஆசிரியர்கள் என்று வந்திருக்க வேண்டுமோ)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோ கீத மதிவாணான் மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு. ஆம்! பெண் ஆசிரியர்கள் அல்லது ஆசிரியைகள் என்று வந்திருக்க வேண்டும். இல்லையா திருத்திவிடுகிறேன்....மிக்க மிக்க நன்றி சகோதரி.

      நீக்கு
  21. லேட்டாக வந்ததற்கு மன்னிச்சூ.....எப்படியோ என் கண்ணில்படாமல் போய்விட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயோ எதற்கு மதுரைத் தமிழன் மன்னிப்பு எல்லாம்...எப்போது நேரம் கிடைக்கிறதோ, பார்க்க முடிகிறதோ பாருங்கள். எல்லோருக்கும் நேர்வதுதானே...

      மிக்க நன்றி மதுரைத் தமிழன் வருகைக்கு..

      நீக்கு
    2. ஐயோ எதற்கு மதுரைத் தமிழன் மன்னிப்பு எல்லாம்...எப்போது நேரம் கிடைக்கிறதோ, பார்க்க முடிகிறதோ பாருங்கள். எல்லோருக்கும் நேர்வதுதானே...

      மிக்க நன்றி மதுரைத் தமிழன் வருகைக்கு..

      நீக்கு

  22. கதை தேர்வாகவில்லை என்றால் அதற்கு அர்த்தம் தேர்ந்தெடுக்கும் நிலையில் உள்ளவர்கள் இன்னும் தேறவில்லை என்றுதான் அர்த்தம். நான் தேர்ந்தெடுத்துவிட்டேன் அருமையான நாவல்தான் இது என்று.

    ஜானகி டீச்சரின் சேச்சி,மாதவி சேச்சி அவர்களின் பிரச்சனை என்னவாக இருக்கும், தொடர்கிறேன் உங்கள் நாவலை ஆவலுடன்.

    கோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கோயில் பிள்ளை! இராய செல்லப்பா சாரின் கதையே தேர்வாகவில்லை அப்புறம் இல்லையா இந்தக் கதை எல்லாம்...இதை விட நல்ல கதைகள் அதைத் தேர்ந்தெடுத்த ஆசிரியர்களின் கண்களில் பட்டிருக்கலாம்...

      வலைத்தளத்தில் வாசிக்க பலர் இருக்கும் போது என்ன கவலை இல்லையா சொல்லுங்கள்..

      மிக்க நன்றி கோ! தங்களின் கருத்திற்கு...தொடருங்கள்...

      நீக்கு
  23. அழகான தொடக்கம்....காத்திருக்கிறேன் முழு நாவலும் வாசிக்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ அனு தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு