செவ்வாய், 21 மார்ச், 2017

பெண் அன்றி நான் அல்ல பொம்மை...2


ஜானகி டீச்சரின் பெற்றோர், எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர்கள்டீச்சரின் அம்மா, பாலக்காடு அருகே உள்ள முண்டூர் என்னும் கிராமத்திலுள்ள L.P. பள்ளியில் (லோயர் ப்ரைமரி பள்ளி) ஆசிரியையாகப் பொறுப்பேற்றதால், அங்கு வருடங்களுக்கு முன்பு குடியேறியவர்கள்.
 டீச்சரின்  அப்பா, விவசாயமும், அரசியலுமாக பிசியாக இருந்தார். ஜானகி டீச்சருக்கு, 5 வயதும், மாதவிக்கு 8 வயதுமாக இருந்த போது, ஒரு நாள் மாலை இருவரும் பள்ளியிலிருந்து வீட்டை அடைந்த போது, ஒரு ஆன்ட்டியும், கூடவே 10, 12 வயதுகளில் இரண்டு பையன்களும் வீட்டிற்கு வந்திருப்பதைக் கண்டார்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த இனிப்புப் பலகாரங்கள் அந்த மாலையை இனிமையாக்கியது! டீச்சரின் அப்பா, டீச்சரையும், மாதவியையும் அழைத்து,

இது முரளி! இது மாதவன்! இவங்க, உங்க அத்தை சாரதா. இவங்க மூணு பேரும் இனி இங்கதான் நம்ம கூட இருக்கப் போறாங்கநீங்க ரெண்டு பேரும் இவங்க சொல்றத கேட்டு, இவங்க கூட சண்டை எல்லாம் போடாம, நல்ல பிள்ளைங்களா, சமத்தா இருக்கணும், புரியுதா?”

இருவரும் தலையாட்டினார்கள். அது போல், முரளி மற்றும் மாதவனிடமும்,

முரளி! மாதவாஇவங்க யாரு தெரியுமா? ரெண்டு பேரும் யாரோ இல்ல, உங்க மாமாவான என் குழந்தைங்க! அதனால, அவங்க ஏதாவது உங்களுக்குப் பிடிக்காததை செய்யவோ, சொல்லவோ செஞ்சா, எங்கிட்டயோ, இல்ல அவங்க அம்மா கிட்டயோ அதான், உங்க அத்தைகிட்டயோ சொல்லணும். அவங்களுக்கு உங்களோட எல்லா நல்ல பழக்க வழக்கங்களையும் சொல்லிக் கொடுத்துப், பழக்கி நல்ல பிள்ளைகளாக்கணும்புரியுதா?” அவர்களும் தலையாட்டி, அன்புடன், ஜானகியையும், மாதவியையும் பார்த்து, நாணம் கலந்த புன்சிரிப்பை உதிர்த்தார்கள்!

கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான் ஜானகிக்கும், மாதவிக்கும் தெரிய வந்தது, முரளி மற்றும் மாதவனின் அப்பா, அவர்கள் முன்பு வாழ்ந்த இடுக்கியில், 2 வருடங்களுக்கு முன்பு பெய்த கனத்த மழையால் ஏற்பட்ட நிலச் சரிவில் மண்ணிற்கு அடியில் புதைந்து இறந்து போன சம்பவம்! விபத்து நடந்த அன்று சாரதா அத்தையும், முரளியும், மாதவனும் எர்ணாகுளத்திலுள்ள அத்தையின் பிறந்த வீட்டிற்கு வந்திருந்ததால் உயிர் பிழைத்தார்கள் என்பதும், அந்த சம்பவத்திற்குப் பின் இரண்டு வருடங்களாக அவர்கள் அத்தையின் அண்ணன் வீட்டில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது!

அந்த வீட்டிலுள்ள, சாரதா அத்தையினுடைய உடன் பிறந்த அண்ணன் பாலுவின் இரண்டு பையன்களும், முரளி மற்றும் மாதவனைப் போல் நன்றாகப் படிக்கமாட்டார்களாம்அதனால் அவர்களின் அம்மா, முரளியிடமும், மாதவனிடமும் எப்போதும் எரிந்து விழுந்திருக்கிறார். எந்நேரமும், ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்எனவே, முரளிக்கும், மாதவனுக்கும் அங்கு தங்கப் பிடிக்கவே இல்லைவேறு ஒரு வீட்டிற்கு மாற முடிவு செய்திருந்த போதுதான், ஜானகி டீச்சரின் அப்பா, அங்கு ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்திருக்கிறார்முரளி மற்றும் மாதவனிடம் தற்செயலாக,

என்னுடன் பாலக்காடு வருகிறீர்களா?”  என்று கேட்டதும்,

வருகிறோம்என்று இரு குழந்தைகளும் பதிலளிக்க, சாரதா அத்தையும், டீச்சரின் அப்பா, தனது பெரியப்பாவின் மகன் என்பதாலும் இரு குடும்பங்களும் நல்ல உறவில் இருந்ததாலும்,

அண்ணா! பசங்க இங்க எப்பவும் பாலு அண்ணன் பசங்களோட சண்டை போடறதுனால, படிப்புல கவனம்  இல்லாம இருக்காங்கஅங்க........உங்க வீட்டுல ரெண்டுமே பொண்ணுங்கதானே! நாங்க அங்க வந்திரட்டுமா? இடுக்கில இருந்த இடத்த வித்தாச்சு! உங்க வீட்டுப்பக்கம் ஏதாவது ஒரு வீடு வாங்கிக்கலாம்பாக்கிப் பணத்தை பேங்கில போட்டு, கிடைக்கிற வட்டியை வைச்சு நாங்க யாருக்கும் பிரச்சினை இல்லாம வாழ்ந்துக்கறோம்உங்களோட ஒரு கண் காணிப்பும், பாதுகாப்பும் கிடைச்சா போதும்என்றார்.

நிலச்சரிவில் இறந்து போன டீச்சரின் மாமா, அதாவது சாரதா அத்தையின் கணவர், டீச்சரின் அப்பாவின் சொந்த அத்தை மகனும் கூட. எனவே, அத்தைக்கும், குழந்தைகளுக்கும் அங்கு பிரச்சினை என்றதும், அத்தையின் சொந்த அண்ணன் பாலுவுடன் சண்டையிட்டு, அத்தையையும், குழந்தைகளையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தேவிட்டார்.

முரளி மற்றும் மாதவனிடம் ஏராளமான விளையாட்டுப் பொருட்கள் இருந்தன. அவை எல்லாம் ஜானகிக்கும், மாதவிக்கும், இடையிடையே விளையாடக் கிடைத்ததால், நால்வருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் எதுவும் ஏற்படவே இல்லை. ஆனால், ஜானகியும், மாதவியும் இடையிடையே அப்பாவுக்குத் தெரியாமல் அம்மாவிடம்,

என்னம்மா, அவங்களுக்கு மட்டும் ஓவலும், ஹார்லிக்ஸுமா? எங்களுக்கு இல்லையா?” என்று வருத்தத்தோடு கேட்பதுண்டு. அப்போது அம்மா,

அவங்க சின்ன வயசுலருந்தே அதெல்லாம் குடிச்சுப் பழகினதுனால, அது  இல்லாம வெறும் பாலோ, டீயோ, குடிக்க மாட்டாங்கஆனா, நீங்க அப்படியில்லையே! பால், டீ, காபி எல்லாம் குடிச்சு பழகினவங்கதானே? அது போதும். யானை சாணம் போடுதுனு முயல் கிடந்து முக்க வேண்டாம்என்று கோபமும்பட்டதுண்டு.

அத்தையும், பிள்ளைகளும் வந்த பின்பு, டீச்சரின் வீட்டில் ஏராளமான மாற்றங்கள் வந்தன. புதிய கட்டில்கள், படுத்தால் பாதி உடல் புதைந்து போகும் மெத்தைகள், ரேடியோ, முரளிக்கும், மாதவனுக்கும் இரண்டு சைக்கிள்கள், இப்படி ஏராளமான பொருட்கள் வீட்டில் இடம் பிடித்தன. இடையிடையே விடுமுறை நாட்களில் அவர்கள் எர்ணாகுளம் சென்ற போதெல்லாம், அவர்களைப் புகைவண்டி நிலையம் வரை கொண்டு விட ஒரு வெள்ளை அம்பாஸடர் கார் வருவதுண்டு. அதில் ஏறி பயணம் செய்ய எவ்வளவோ ஆசை இருந்தும் அப்பாவுக்குப் பயந்து அதை, ஜானகியும், மாதவியும் வெளியில் சொன்னதே இல்லை

எப்போதோ ஓரிரு முறை அப்பா இல்லாத போது, அம்மாவுடன் ரோடில் மிதந்து போகும் நல்ல மணமுள்ள அந்த வெள்ளைக்காரில் இனிமையாக மகிழ்வுடன் பயணம் செய்ததும் உண்டு. இது போன்ற ஆடம்பர வாழ்க்கைக்கு எல்லாம் காரணம், அத்தை இடுக்கியில் இருந்த இடத்தை விற்றதால் அன்று – 1967 ல் - கிடைத்த பணமான ரூ.18000த்தை, ஜானகி டீச்சரின் அப்பாவிடம் கொடுத்ததுதான்.      
                                                                                                                                                                டீச்சரின் அம்மா பலமுறை, அப்பாவிடம், அந்தப் பணத்தில், அத்தைக்கும், பிள்ளைகளுக்கும் ஒரு வீடும், நிலமும் வாங்கிக் கொடுக்கச் சொல்லியும், அப்பா அதை செவிகொடுத்துக் கேட்கவில்லையாம்எப்படியோ, 8 ஆண்டுகள் பிரச்சினை இல்லாமல் போயிருக்கிறதுபின் டீச்சரின் அப்பாவினுடைய கையில் இருந்த ரூ.18000மும் செலவாகிப் போனதால் பணப் பற்றாக்குறை ஏற்பட்டது.

டீச்சரின் அம்மாவின் சம்பளத்தை வைத்து அனைவரும் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட, அத்தைக்கும், அப்பாவுக்கும் இடையிடையே வாய்ச்சண்டை ஏற்படத்தொடங்கியது.      
                                                                              
  "நாங்கள் எங்கேனும் வேறு வீட்டிற்குப் போகிறோம்உங்க கையில பாக்கியிருக்கற பணத்தைத் தந்தா போதும். நாங்க மூணு பேரும் அண்ணி சம்பளத்துலதான் வாழறோம்னும் இடையிடையே அவங்க சொல்லிக் குத்திக் காமிக்கறாங்க

"சாரதா! நீ தந்த பணத்தை, ஒவ்வொரு தேவைக்கும் எடுத்து செலவு பண்ணி பணமெல்லாம் தீந்திருச்சுநீயே பாரு. பாலன்ஸ் இல்லஎன்று சொல்லி பேங்க் பாஸ் புக்கை எடுத்துக் காட்டி இருக்கிறார் டீச்சரின் அப்பா.

 “இனி அந்தப் பணத்தக் கொடுன்னா நான் எங்கப் போவேன்நீயே சொல்லு. நீ எங்கூட வராம, எர்ணாகுளத்துல தங்கியிருந்திருந்தா ஒரே வருஷத்துல அந்தப் பணம் தீர்ந்திருக்கும்எனக்கு இது வேணும்உங்க மேல பரிதாபப்பட்டுக், கூட்டிட்டு வந்தேன் பாரு, எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.”

அண்ணா! பரிதாபப்பட்டுக் கூட்டி வந்தேன்னு எல்லாம் சொல்லாதீங்கஇங்க நானும், என் பிள்ளைங்களும் இத்தனை நாள் தங்கினோம்னா அதுக்கு அட்வான்ஸா 18000 ரூபாய் உங்க கையில எண்ணிக் கொடுத்த பிறகுதான். அதை ஞாபகம் வைச்சுக்கங்கஎன்றதும்டீச்சரின் அம்மா,

சாரதா! என்ன இது? முன்ன மாதிரி ஆடம்பரமா இல்லைன்னாலும், நமக்கும், பிள்ளைங்களுக்கும் பிரச்சினை இல்லாம வாழ முடியுதேஉன்னோட பணத்துல நாம எல்லோரும் இதுக்கு முன்னாடி வாழ்ந்தோம் இல்லியா? அது தீர்ந்ததுனாலதானே, இப்ப என் வருமானத்துல வாழறோம்! நான் சொன்னது ஏதாவது உன் மனச புண்படுத்தியிருந்தா மன்னிச்சுடுஎன்று சொல்லி சமாதானப்படுத்தியிருக்கிறார்மீண்டும் எல்லோரும் சேர்ந்தே இருந்தனர்.                                                                                                 
                                                                                                                   
இதற்கிடையில், இளம்பருவமடைந்த முரளியும், மாதவியும் மிகவும் நெருக்கமாகப் பழகுவதைப் பற்றிக் கிராமத்தில் கிசுகிசுக்கத் தொடங்கினர்டீச்சரின் அம்மாவின் காதிலும் இந்தச் செய்தி விழுந்தது. நெருப்பு இருந்தால்தானே புகையும் என்று சொல்வதுண்டே! அப்படியென்றால் அது வீண் வதந்தி அல்ல என்றும் தோன்றியது.

ஒரு நாள், டீச்சரின் அப்பாவும், அம்மாவும், அத்தையும், பிள்ளைகள் அனைவரையும் அழைத்து, ஒரு நீண்ட அறிவுரை வகுப்பே எடுத்திருக்கிறார்கள். முரளியும், மாதவியும் காதலர்கள் என்பதையும், அக்காதலை எதிர்த்துத் தோற்கடித்து அவர்களைப் பிரிப்பது சிரமம் என்பதையும் புரிந்து கொண்டார்கள்அதனால், முரளிக்குத்தான் மாதவி என்றும், ஆனால், முரளிக்கு ஒரு வேலை கிடைத்த பிறகு கல்யாணம் என்றும் முடிவு செய்தார்கள். மாதவனும், ஜானகியும், பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களுக்கிடையில் நட்புறவை மட்டுமே வளர்த்துக் கொண்டார்களே ஒழிய காதல் போன்ற உணர்வுகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள்.

 ஆனால், முரளியும், மாதவியும் இதற்கெல்லாம் முன்பே காதலர்களாகி விட்டதாலோ என்னவோ, அவர்களுக்கு, வீட்டில் திடீரென ஏற்பட்ட கட்டுப்பாடும், கண்காணிப்பும் எரிச்சல் மூட்டியது. அதனால், எல்லோரிடமும் எரிந்து விழத் தொடங்கினார்கள்அப்பா இல்லாத போது, எரிந்து விழுவது சற்றுக் கூடியது!

 இப்படி நாட்கள் ஓடிக் கொண்டிருக்க, ஒரு நாள், டீச்சரின் அம்மா  வென்று அழுததைப் பார்த்த வீட்டிலுள்ளோருக்கு அதிர்ச்சி....

டீச்சரின் அம்மா எதற்காக அழுதார்? தொடருங்கள்...தெரிந்துவிடும்!





56 கருத்துகள்:

  1. 6வது பத்தியின் 5வது வரிக்கு. மேல் தொடர,எனக்கு. வெட்க மாயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்து புரியவில்லை அன்பே சிவம்! என்றாலும் மிக்க நன்றி வருகைக்கு!

      நீக்கு
    2. இத்தனை. ஆழமி குந்த யதார்த்தம் பகிரும் நடையை மறுதலித்த மேதைகளை சொன்னேன்.

      நீக்கு
    3. அப்படி எல்லாம் இல்லை அன்பே சிவம். இந்தக் கதையை விடவும் வேறு கதைகள் ஆசிரியர்களுக்கு விரும்பிய விதத்தில் இருந்திருக்கலாம்.. இருந்திருக்கும் இல்லையா...அதனால் விடுங்கள்...இதோ உங்களைப் போன்ற வாசகர்கள் தரும் கருத்துதானே முக்கியம்....

      மிக்க நன்றி சிவம்!

      நீக்கு
  2. சுவாரஸ்யமாக அடுத்து என்னவாக இருக்கும் என்ன நடக்கபோகிறதோ என்ற எதிர்பார்ப்புக்களுடன் தொடர்கிறேன் ..பணம் பல பிரச்சினைகளுக்கு அடிப்படை இந்த உறவுகள் விஷயத்திலும் அதுவே காரணமாகி ஆரம்ப புள்ளியாகிடுச்சே :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ ஏஞ்சலின்! உங்கள் ஊகம் சரியா என்று பாருங்கள் அடுத்த பகுதியில்!!

      நீக்கு

  3. //யானை சாணம் போடுதுனு முயல் கிடந்து முக்க வேண்டாம்//

    அடடே... நல்லாருக்கே.. இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    இந்தக் காலத்தில் உறவுகள் என்றாலும் தனித்தனியாக இருப்பதே நல்லது என்று தோன்றும் எனக்கு. இங்கு அது உண்மையாகிவிடும் என்று தோன்றுகிறதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியா ஸ்ரீராம்! இது எங்கள் ஊர் பகுதியில் சொல்லப்படுவது! உண்மைதான் ....அதன் பாதிப்பு கதையில் வருகிறது...

      மிக்க நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
    2. மிக்க நன்றி கில்லர்ஜி உங்களுக்கு இந்தப் பழமொழி தெரிந்திருக்குமே!

      நீக்கு
  4. பதிவை பார்த்துட்டேன் வேலைக்கு செல்வதால் வந்து படித்து பதில் அளிக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓகே மதுரைத் தமிழன் வாருங்கள் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பாருங்கள்!! மிக்க நன்றி!!

      நீக்கு
    2. ஹலோ மதுரை தமிழன் நீங்க வந்துட்டு அட்டெண்டன்ஸ் வைச்சுட்டுப் போனது அதிராவுக்குத் தெரியல இன்னும்....அவங்க வந்து "ட்ரூத்! என் கண்ணுல மட்டும் மையில்ல என் விரல்ல மை பாருங்கனு சொல்லப் போறாங்க....கண்ணுல வைக்கும் போது விரல்ல பட்ட மையத்தான் சொல்லுறாங்கனு தெரியாதா என்ன ஹிஹிஹி...சரி சரி போட்டுக் கொடுத்துடாதீங்க!!

      கீதா

      நீக்கு
    3. நான், விரலில் மை போட்டுக்கொண்டுதான் உள்ளே வந்தேன்:) நேற்று வச்சதே அழிக்கிறதுக்கு 50 பவுண்டுகள் கேட்கினம்:).. இந்த நஷ்ட ஈட்டை கீதாவிடம் தான் வசூல் செய்வேன்ன்:)..

      ///Avargal Unmaigal21 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 6:46
      பதிவை பார்த்துட்டேன் வேலைக்கு செல்வதால் வந்து படித்து பதில் அளிக்கிறேன்///
      அச்சச்சோ இப்பூடி எழுதிட்டாரா ட்றுத்?? அவ்ளோதான்ன்ன்ன் கதை முடிஞ்சுபோச்ச்ச்ச்ச்ச்:)) இனி ஆளை அடுத்த பகுதியில்தான் காணமுடியும்..:).. எதுக்கு ஓட விட்டீங்க?:))[இப்பூடிச் சொல்லிச் சொல்லியே திரும்ப வர வைச்சிடுவேன்ன்.. நாம ஆரு?:))]. சரி சரி படிச்சதும் கிழிச்சுக் கூவத்தில போட்டிடுங்கோ கீதா பிளீஸ்ஸ்... :)

      நீக்கு
    4. ஹஹ்ஹ இத படிச்சுட்டு கூவத்தில் போடலை இங்கேயும் போட்டாச்சு மதுரைத் தமிழனின் அருகில் இருக்கும் கடலில் கப்பலாகவும் விட்டாச்சு!!

      கீதா

      நீக்கு
    5. நோ நோவ் :) கீதா நம்பாதீங்க அது மையில்ல டாட்டூ ..அழியலன்னு சொல்லி உங்ககிட்ட நைசா நஷ்ட ஈடு கேக்கிறார் பூஸ் :)

      நீக்கு
    6. அடப் பாவி! பூஸார் டாட்டு வைச்சுட்டா ஊரில் சவுண்ட் விட்டுக் கொண்டு அலைகிறார்!!!

      கீதா

      நீக்கு
  5. இனிய நடை..

    ஆனாலும், காலம் போகின்ற போக்கில் கதையும் போவதால்
    அடுத்து என்னவாக இருக்கும் என்பதை யூகிக்க இயலவில்லை..

    அதுதானே - எழுத்தின் வெற்றி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா! தங்களின் பாராட்டு மிக்க கருத்திற்கு..

      நீக்கு
  6. உறவு முறைகளும் பொருந்தும் பொழுது காதல் வருவதில் வியப்பில்லைதான்

    முன்பு இவர்களைக் குறித்து படித்தது போல் ஓர்ம...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கில்லர்ஜி! முன்பு இதனைக் கொஞ்சம் சுருக்கி சிறுகதை வடிவில் கொடுத்தேன் பின்னர் இராயசெல்லப்பா சார் அதைக் குறுநாவலாகப் போட்டிக்கு எழுதி அனுப்பச் சொல்ல விஸ்தரித்து விரிவாக்கி அனுப்பியதன் வடிவமே இது..

      மிக்க நன்றி தாங்கள் நினைவு வைத்திருந்தமைக்கும்...

      நீக்கு
  7. முரளி மாதவி காதல் என்னாகுமோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்கள் அடுத்த பகுதியில்.....மிக்க நன்றி பகவான் ஜி!!கருத்திற்கு

      நீக்கு
  8. மறுபடியும் சஸ்பென்ஸ். தொடரக் காத்திருக்கேன் வழக்கம் போல்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதா சாம்பசிவம் சகோதரி தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  9. ஆஹா இரண்டாம் பகுதிக்கு வந்து சேர கொஞ்சம் லேட்டாகிட்டுது எனக்கு, ஆனாலும் வந்த வேகத்தில் வோட் பண்ணி விட்டேன்ன்... வர வர உறவுகள் கொஞ்சம் பெருத்துக் கொண்டுவருது .. கதை வாயால் சொல்வதுபோல ரொம்ப ஈசியான பேச்சு வழக்கில் எழுதியிருப்பது ரசிக்க வைக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அதிரா சகோ கருத்திற்கு! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாகத்தானே வருகிறீர்கள்!

      நீக்கு
    2. ஆமாம் ஆமாம் இந்த வயதிலும் உறவுகள் பெருகாமல் இருக்குமா....எவ்வளவு நலல்து இல்லையா அதிரா..

      கீதா

      நீக்கு
    3. //இந்த வயதிலும் உறவுகள் பெருகாமல் இருக்குமா.../////

      அதிரா இப்போதூதான் கேள்விப்பட்டேன் உங்கவீட்டுல விஷேசம் போல இருக்கே கங்கிராட்ஸ்

      நீக்கு
    4. அஞ்சூஊஊஊஊஉ மேடைக்கு வாங்கோஓஓ ட்றுத். க்கு மட்டும் சொல்லிடாதீங்க என ரகசியம் சொன்னேனே:) சமோசா சாப்பிட்டதால எல்லாத்தையும் உளறிட்டீங்களோ கர்ர்ர்ர்:)

      நீக்கு
    5. மதுரைத் தமிழன் அப்போ நெசமாவே விசேஷமா...ரகசியம்னு வேற சொல்லுறாங்க அதிரா....ஆஹா அப்ப அதுவும் கின்னஸ்லியா....ஹிஹிஹிஹிஹ்

      கீதா

      நீக்கு
    6. ஆமா ஆமா !! நான் சொல்லலை சொன்னேன் சொல்லலை சொன்னேன் இருங்க சமோசா மட்டுமில்லை ஒரு ரவா ஊத்தப்பமும் அதான் எனக்கு சொன்னேனா சொல்லலியா னு நினைவில்லை :)

      நீக்கு
    7. நான் ட்ரூத்துக்கு சொல்லலை ஆனா மதுரை தமிழனுக்கு சொன்னேன் :))

      நீக்கு
  10. /////யானை சாணம் போடுதுனு முயல் கிடந்து முக்க வேண்டாம்///// ஹா ஹா ஹா நானும் சகோ ஸ்ரீராம் போல இன்றுதான் புதிதாக காண்கிறேன் இதை... எனக்கு பழமொழிகள் ரொம்பப் பிடிக்கும்.. பழமொழிப்பாட்டி எனவும் பலர் என்னைப் பட்டப் பெயர் சொல்லி அழைத்த நாட்களும் உண்டு:).. விழுவதை எல்லாம் பொறுக்கிடுவேன்ன்.. ஐ மீன்.. இப்படி கண்ணில் தெரியும் பழமொழிகளை எல்லாம் எடுத்து என் நோட் புக்கில் எழுதி வச்சுவிடுவேன்:)..

    அச்சச்சோ ரீச்சரின் அம்மாவைத் தொடரச் சொல்லிட்டீங்க?:) தொடர்ந்தால் அடி விழாது?:)).. ஹா ஹா ஹா தொடர்கிறோம் துளசி அண்ணன்.. அடுத்த பாகத்தை விரைவில் போடுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா சகோ மிக்க நன்றி கருத்திற்கு. பழ மொழிகள் பிடிக்குமா! ஓ அப்ப இதையும் வைத்து உங்கள் ஸ்டைலில் பதிவு இடுங்கள்!!! அடுத்த பாகம் வந்துவிடும்....

      நீக்கு
    2. சரிதானே உங்கள் பட்டப்பெயர்!! ஓ அப்ப்டி என்றால் மதுரைத் தமிழன் மற்றும் ஏஞ்சலின் கணக்கு தவறு!! அதாங்க உங்க வயசுக் கணக்ககு...80 அல்ல....கின்னஸில் இடம் பெறும் வயசு உங்களுக்கு....100+ அதான் பல் செட் எல்லாம் கூட தேடுவதாக வாசித்த நினைவு ஹிஹிஹிஹி...

      சரிதானே மதுரைத் தமிழன் அண்ட் ஏஞ்சல்!!???

      கீதா

      நீக்கு
    3. ஆமாம் கீதா தப்பா சொல்லிட்டேன் அன்னிக்கு ..பூஸ் இஸ் 88 சியர்ஸ் நோ நோ பியர்ஸ் ஹையோ என்னது இன்னிக்கு இவ்ளோ தடுமாற்றம் இட் இஸ் இயர்ஸ்

      நீக்கு
    4. நீங்க சொன்னா சரியாகே இருக்கும் கீதா

      நீக்கு
    5. ஆஹா ஆஹா அதிராவைப்பற்றி ஏதும் கதைச்சிடப்பூடாதே ஆரும்.... உடனே பொகோன் கச்சான் பக்கோறா எல்லாம் பார்சல் பண்ணிக்கொண்டு ஓடிவருவினம் சாப்பிட்டுச் சாப்பிட்டு விடுப்ஸ் பார்க்க:), கால்ல பாறாங்கல்லைக் கட்டிப்போட்டுத் தேம்ஸ்ல தள்ளிடுவேன் ஜாஆஆக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்தை:))), நாம ஆரு??? 1500 மீட்டர் ஓட்டத்தில 2 ஆவதா வந்தேனாக்கும்... தள்ளிப்போட்டு ஓடியே தப்பிடுவேன்ன்ன்:)...

      நீக்கு
    6. ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சூஊஊஉ இன்னும் ரெண்டு சமோசா சாப்பிட்டுப்போட்டு வாங்கோ பிளீஸ்ஸ் அப்போதான் இந்த தடுமாற்றம் நிக்கும்:) ஹையோ ஹையோ... விடுங்கோ விடுங்கோ எனக்கு நேரமச்சுது... ஹையோ கீதா கையை விடுங்கோ நான் போகோணும் ஹா ஹா ஹா:)

      நீக்கு
    7. ஏஞ்சல் அஹ்ஹஹஹ்ஹ சியர்ஸ், பியர்ஸ், இயர்ஸ்.....தடுமாற்றம் ஏன்னு தெரியலையா ..//.1500 மீட்டர் ஓட்டத்தில 2 ஆவதா வந்தேனாக்கும்... தள்ளிப்போட்டு ஓடியே தப்பிடுவேன்ன்ன்:)..// அவங்க ஓடி வந்துட்டே இருக்காங்க ஏஞ்சல் அதான் உங்க ஏரியா அதிருது!!! இன்னும் அந்த மாரத்தான் முடியலையாம்ம்ம்

      கீதா.

      நீக்கு
  11. ///முரளியும், மாதவியும் காதலர்கள் என்பதையும், அக்காதலை எதிர்த்துத் தோற்கடித்து அவர்களைப் பிரிப்பது சிரமம் என்பதையும் புரிந்து கொண்டார்கள். அதனால், முரளிக்குத்தான் மாதவி என்றும், ஆனால், முரளிக்கு ஒரு வேலை கிடைத்த பிறகு கல்யாணம் என்றும் முடிவு செய்தார்கள். ///



    இவர்கள் கல்யாணம் பண்ணுவதற்கு முன்னால யாரவது இவர்களுக்கு மதுரைதமிழனின் கதையை சொல்லுங்க அதன் பின் காதலும் வேண்டாம் கத்திரிக்காவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போவார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா போஸ்ட்டர் அடிச்சு ஒட்டுறத்துக்கு பெர்மிஷன் தாறேன் என இந்த வெள்ளைப் பேப்பரில் கையொப்பமிடுங்கோ ட்றுத்:).... உங்கள் பூரிக்கதையைத்தான்:) சொறி டங்கு ஸ்லிப் ஆஅச்சா.. அது பூரிக்கட்டை:).

      நீக்கு
    2. ஹஹாஹ்ஹ் மதுரைத் தமிழன் இது உங்கள் கதையைப் போல அ....ல்...ல....அ.ல்.ல.....அல்ல......இது ..................காதல்...போகப் போகத் தெரியும்.....

      நீக்கு
    3. அதிரா டேக் பேக் ஹஹஹ மதுரைத் தமிழன் வந்துவிட்டாரே!!! கருத்து சொல்ல

      கீதா

      நீக்கு
  12. //டீச்சரின் அம்மா எதற்காக அழுதார்?//

    ஒரு வேளை அதிரா கைக்கு போட வேண்டிய மை கண்ணுக்கு போட்டு நேரில் தோன்றி இருப்பார்கள் அதை பார்த்த பயத்தில் அவர்கள் அழுதிருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:) துளசி அண்ணன் கெதியாச் சொல்லிப்போடுங்கோ ரீச்சரின் அம்மா ஏன் அழுதா என்பதை, இல்லாட்டில் என் கைக்குச் சங்கிலி போட்டிடப் போகினமே ஆண்டவா... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஊரில ஆர் அழுதாலும் சிரிச்சாலும் என் தலையில எல்லோ வந்து விழுந்திடுது:)...

      நீக்கு
    2. ஆமாம் ! மதுரைத் தமிழன் சகோ.....லகலகலகலக

      கீதா

      நீக்கு
    3. அதிரா கீதா நான் சொல்லிட்டேனே.லகலகலகலக அது யாராக்கும் எல்லாம் ..ஹஹஹ்ஹ் துளசி அடுத்த பகுதியில சொல்லுவர் டீச்சரின் அம்மா ஏன் அழுதார் என்று...கீதா

      கீதா

      நீக்கு
  13. ஆகா
    மீண்டும் சஸ்பென்சா
    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பர் கரந்தையார்...கருத்திற்கு மிக்க நன்றி...தொடருங்கள்..

      நீக்கு
  14. வசஹிகள் வரும்போது உறவுகள் வேண்டுமா வேண்டாமா. எது வசதி, யாருக்கு வசதி இன்னபிற கேள்விகள்,,,,,

    பதிலளிநீக்கு
  15. பின்னூட்டத்தில் தட்டச்சுப்பிழை வசதிகள் என்று இருக்க வேண்டும் சரிசெய்யும் மு ன் பப்லிஷ் சொடுக்கி விட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோருக்கும் வருவதுதான் சார்....மிக்க நன்றி சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  16. "முரளியும், மாதவியும் காதலர்கள் என்பதையும், அக்காதலை எதிர்த்துத் தோற்கடித்து அவர்களைப் பிரிப்பது சிரமம் என்பதையும் புரிந்து கொண்டார்கள். அதனால், முரளிக்குத்தான் மாதவி என்றும், ஆனால், முரளிக்கு ஒரு வேலை கிடைத்த பிறகு கல்யாணம் என்றும் முடிவு செய்தார்கள். மாதவனும், ஜானகியும், பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களுக்கிடையில் நட்புறவை மட்டுமே வளர்த்துக் கொண்டார்களே ஒழிய காதல் போன்ற உணர்வுகள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள்." என்றவாறு தான் இளம் காதலரை நம்மாளுங்க கையாளுகின்றார்கள்.

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கு..

      பார்க்கிறோம் நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டியை...

      நீக்கு