வெள்ளி, 24 மார்ச், 2017

பெண் அன்றி நான் அல்ல பொம்மை...4

சென்ற இரு பகுதிகளின் சுட்டி

தனது மாமியாரான சாரதா அத்தையும் எர்ணாகுளத்திற்குப் போனவர் அங்கேயே தங்கிவிட்டதாலும், தன் தந்தையும் உடல்நலக் குறைவாகிப் படுத்திருந்ததாலும், தானே நேரில் சென்று பார்த்துவிடலாம் என்று முடிவு செய்த போது, வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் முரளி துபாய் போய் விட்டதாகச் சொன்னார்மேலும், முண்டூரிலிருந்து, கட்டிட வேலைக்கு எர்ணாகுளம் சென்ற சிலர், சாரதா அத்தையையும், முரளியின் தம்பியான மாதவனையும், முரளியின் புதிய வீட்டையும், அங்கிருந்த முரளியின் மனைவி, மற்றும் குழந்தைகளையும் பார்த்ததாகவும் சொன்னதை இந்த உறவினரும் உறுதிப் படுத்தியதால், மாதவிக்கும், டீச்சருக்கும், அவர்கள் அம்மாவுக்கும் தலையில் இடி இறங்கியது போல் ஆகியது! விசாரிக்கவோ, சண்டை போடவோ போக யாருமின்றி, மூவரும் குமுறி அழுதார்கள்என்ன செய்வதென்றும் அவர்களுக்குத் தெரியவுமில்லை. தைரியமும் இல்லை.

டீச்சரின் அப்பாவுக்கும் உடல் ஆரோக்கிய நிலை குறைந்து கொண்டே வந்தது! உடல் நலம் மோசமாகும் போதுதானே தாங்கள் செய்த தவறுகள் மனதில் வந்து வாட்டும். டீச்சரின் அப்பாவும் அதற்கு விதிவிலக்கல்ல. தன் மனைவியிடம், வீட்டில் ஏற்பட்ட துயரங்களுக்கெல்லாம் தான் சிந்திக்காமல் எடுத்த பல தீர்மானங்கள்தான் காரணம் என்று சொல்லி வருந்தினார்தன் மனைவி, தன் சொந்தக் காலில் நின்று குடும்பத்தைக் காப்பாற்றியதற்கு உதவியாய் இருந்தது, அவருடைய ஆசிரியப் பணியிலிருந்து கிடைத்த வருமானமும், ஓய்வு பெற்ற பின் கிடைத்த ஓய்வூதியமும்தான் என்பதை உணர்ந்ததால்தன் மனைவியிடம்,

எப்படியாவது மாதவிக்கும், ஜானகிக்கும், வேலை கிடைக்க வழி செய்யணும். நம்மோட இந்த இடத்தை வித்தாலும் பரவாயில்லைஇரண்டு பேரும் சொந்தக் கால்ல நிக்கணும்! யாரையும் எதிர்பார்க்காம, உன்ன மாதிரி குடும்பத்தைக் கட்டிக் காப்பாத்தணும் கடைசி வரை!”

டீச்சரின் அம்மாவுக்கு, அவரது கணவர் சொல்வதற்கு முன்னரே அந்த எண்ணம் இருந்ததால், தான் ஓய்வு பெறும் முன்பே, தான் வேலை பார்த்த பள்ளியிலேயே தன் மூத்த மகளான மாதவியை வேலையில் அமர்த்த வேண்டிய ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அவர் பணி புரிந்த பள்ளி நிர்வாகி, இரண்டு வருடங்களுக்குப் பிறகு வரும் காலியிடத்தில் மாதவியை வேலையில் அமர்த்துவதாக உறுதி கூற, ஓய்வு பெற்ற போது கிடைத்த பணத்தில் நல்ல ஒரு விகிதத்தைப் பள்ளி நிர்வாகிக்கு அட்வான்ஸாகக் கொடுத்து, வேலையை உறுதிப்படுத்தவும் செய்திருந்தார். ஆனால், இந்த விவரங்களை டீச்சரின் அப்பாவிடம் அது வரைடீச்சரின் அம்மா சொல்லவில்லை.

என்னை மன்னிச்சுருங்க! நான் உங்ககிட்ட சொல்லலசொன்னா நீங்க ஒருவேளை அனுமதிக்க மாட்டீங்களோ என்கிற பயம்தான்உங்களுக்குத் தெரியாமலேயே நான் மாதவியோட வேலைக்காக பள்ளி நிர்வாகிக்கு அட்வான்ஸ் கொடுத்து வேலையை உறுதிபடுத்தியிருக்கேன், மன்னிச்சுடுங்க.”

அப்பாவின் கண்களில் நீர் நிறைந்தது, “உன்னோட தீர்மானங்கள் எல்லாமே நல்லதுதான்நான் தான் அதைப் புரிஞ்சுக்காம போய்ட்டேன்உன் அபிப்ராயங்களைக் கேட்டு நடந்திருந்தா நமக்கு இந்தச் சிரமம் எல்லாம் வந்திருக்காதுஎன்ன செய்ய! “பெண் புத்தி பின் புத்திஇல்ல, குடும்பத்துக்கு அவசியமான புத்திங்கறத இப்பதான் புரிஞ்சுக்கிட்டேன்!.” காலம் கடந்த ஒன்று.
இந்தச் சமயத்தில், டீச்சரின் அப்பாவின் மிக நெருங்கிய நண்பரான மணி வாத்தியார் வந்தார். இருவரும் நீண்ட நேரம் பேசினார்கள்மணி வாத்தியார் சென்ற பின் டீச்சரின் அம்மா, கணவருக்குக் கஞ்சி சொண்டு போக, “இப்ப வேண்டாம்என்று சொல்லிவிட மீண்டும்  அரைமணி நேரம் கழித்து  கஞ்சியுடன் சென்ற டீச்சரின் அம்மா, அசைவின்றிக் கிடந்த கணவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்து மயக்கத்தில் கீழே விழுந்தார். அப்பாவின் மரணம்! எல்லோரையும் உலுக்கியது மட்டுமின்றி டீச்சரின் அம்மா அதிர்ச்சியடைந்து வீழ்ந்ததால் உடலின் இடது பாகம் செயலிழந்து விட்டதுஅதன் பின் டீச்சரின் அம்மா வீட்டிற்குள், கைத்தடியின் உதவியுடன் ஓரளவு அங்குமிங்கும் நடக்கத்தான் முடிந்தது.

பெண்கள் தனியாக இருந்ததால் அங்கிருந்த ஆண்களால் ஏற்பட்ட சில தொந்தரவுகளைப் பற்றியும் சில சம்பவங்களைப் பற்றியும் டீச்சர் என்னிடம் விவரித்ததுண்டு.

ஆண்கள் இல்லாத வீடு என்றால் வக்கிரபுத்தி உள்ள ஆண்களுக்குத் தைரியம் வந்து, பெண்களைத் துன்புறுத்த தயாராகிவிடுகிறார்கள் போலிறுக்கிறது! காவல் துறையில் புகார் கொடுத்தால் நியாயம் கிடைத்துவிடுகிறதா என்ன? அதெல்லாம் நம் நாட்டில் ஏமாற்றம் தரும் எதிர்பார்ப்புக்கள்தான். பணமும், அரசியல் செல்வாக்கும், ரௌடித்தனமும், பெண்களுக்கு நீதி கிடைக்கத் தடையாக இருக்கின்ற சம்பவங்கள் தானே நாடெங்கும் நடக்கின்றனபெண்ணுரிமை, பேச்சிலும், எழுத்திலும் மட்டுமே! உயிர் வாழும் அவல நிலைக்கு என்று மாற்றம் வருமோ? என்றெல்லாம் எனக்குத் தோன்றியது!

டீச்சரின் அம்மாவின் பள்ளியில் ஆசிரியையாகும் வாய்ப்பு மாதவிக்கு வந்த போது, மாதவியோ,

ஜானகிக்கு வேலை இருந்தா அவளுக்கு ஒரு நல்ல கல்யாண வாழ்க்கை அமையும்லஅதனால அவ அந்த வேலைல சேரட்டும்நான் எழுதின பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுல 2 இன்டெர்வ்யூ அட்டெண்ட் பண்ணியிருக்கேன். அதுல, ஏதாவது ஒரு வேலை எனக்கு நிச்சயமா கிடைக்கும்கற நம்பிக்கை இருக்குஎனக்கு அது போதும்.” என்று சொல்லித் தனக்குக் கிடைத்த வேலை வாய்ப்பைத் தன் தங்கைக்குக் கொடுத்துவிட்டார்.
 
வேலை கிடைத்த வருடமே, ஜானகி டீச்சருக்கு ரெயில்வேயில் பணிபுரியும் ராதாகிருஷ்ணன் கணவரானார்அப்படி ஜானகி டீச்சரை மணந்தபின், அந்த வீட்டிற்கு ஒரு நல்ல பாதுகாவலராய் அன்று முதல், இன்றுவரை இருந்து வருகிறார். அவர், பல முறை, முரளியைக் கண்டு பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லியும், மாதவி அதற்கு ஒரு போதும் ஒப்புக் கொள்ளவில்லை. சரி அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்பதால்  மாதவியின் மறுமணத்தின் அவசியம் பற்றிப் பேசிய போதெல்லாம் மாதவி அவரிடம்,

அதெல்லாம் முடிந்து போன அத்யாயம். கொஞ்ச வருடங்கள் போகட்டும், இந்த வீட்டுல ஒரு கல்யாணப் பந்தல் போடுவோம்எனக்கில்ல! என் பொண்ணுக்கு!” என்று  சொல்லிவிட்டாள்.

இதற்கிடையில், படுத்த படுக்கையான அம்மாவைக் காண வந்த மணி வாத்தியார் சொன்ன வார்த்தைகளை, அவர்கள் மூவராலும் நம்பவே முடியவில்லை. மாதவியின் குழந்தை இந்துவுக்கு அரைஞாண் கட்டும் விழா முடிந்த அன்று மாலை, எர்ணாகுளம் சென்று, பின்னர் துபாய் சென்ற முரளி, 4 வருடங்கள் கழித்து மணி வாத்தியாருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்திருக்கிறான்

"எங்களைப் பாதுகாக்கிறேன் பேர்வழி என்று எங்கள் சொத்தை எல்லாம் அபகரித்த அந்த மனிதனுக்கு (டீச்சரின் அப்பாவுக்கு) இது நான் கொடுக்கும் தண்டனைநான் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணத்தில், எங்கள் மாமா தந்த இடத்தில் ஒரு வீடு கட்டியிருக்கிறேன்இப்போது என் அம்மாவும், தம்பியும் அந்த வீட்டில்தான் இருக்கிறார்கள்அடுத்த வருடம் நான் நாடு திரும்பும் போது, ஒரு கல்யாணமும் செய்து கொள்ளப் போகிறேன்!" என்று எழுதியிருந்திருக்கிறான்! கூடவே, அதை மறக்காமல் டீச்சரின் அப்பாவிடமும் கொடுக்கச் சொல்லி அதில் குறிப்பிட்டிருந்திருந்திருக்கிறான்!

 வேறு வழியின்றி, முரளியை இனி எதிர்பார்த்து இருப்பதில் பலனில்லை என்பதைத் தெரிவிக்க, மணி வாத்தியார், நோய்வாய்பட்டு படுத்திருந்த டீச்சரின் அப்பாவைக் காண வந்த போது, அந்தக் கடிதத்தைக் காட்டியதும்கடிதத்தை வாசித்த  டீச்சரின் அப்பா மனம் உடைந்து, துவண்டு போய், மணி வாத்தியாரிடம்,

இந்தக் கடிதத்தை என் மனைவியும், பிள்ளைகளும் வாசித்து மனமொடிந்துதுவண்டு போய், செயலிழந்து உட்கார்ந்து விடமாட்டார்கள் என்று உறுதியாகத் தோன்றும் போது மட்டும் அவர்கள் கையில் கொடுத்தால் போதும்என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டதனால்தான், இத்தனை நாளாக அக்கடிதத்தைப் பற்றிச் சொல்லவில்லை என்று சொன்னார்  மணி வாத்தியார்.

அப்போதுதான், மூவருக்கும் ஒரு உண்மை புரிந்திருக்கிறதுடீச்சரின் அப்பா இறந்த அன்று, மணி வாத்தியார் வந்ததும், நீண்ட நேரம் அப்பாவும், மணிவாத்தியாரும் பேசியதும், இக்கடிதத்தைப் பற்றித்தான் என்று தெரிந்திருக்கிறது. அப்படியென்றால், அந்தக் கடிதம்தான் அப்பாவின் உயிர் பிரியக் காரணமாயிருந்திருக்கிறது என்பதும் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது!
அக்கடிதத்தை, வாசித்த இவர்களுக்கும் வருத்தம்தான்ஆனால், அந்த வருத்தம் அவர்கள் எதிர்காலத்தை இருட்டாக்கும் அளவுக்குப் பெரிதல்ல என்று தோன்றியிருந்திருக்கிறதுஇப்போது அவர்கள் வாழும் அவர்களது வாழ்க்கை, அவர்களுக்குப் பழக்கப்பட்டு விட்டது. அவர்கள், வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள், நிகழ்வுகள் ஏற்பட்டாலும், அதைத் தாங்கும் சக்தியும், எதிர்கொள்ளும் திறனும், எதையும் தாங்கும் இதயமும் உடையவர்களாக மாறி இருந்தார்கள்!  

மாதவியும், இந்துவும், முரளி இல்லாத வாழ்க்கையை, இத்தனை காலம், வாழ்ந்து பழகி விட்டதால், முரளி இல்லாமல் இனி மரணம் வரை வாழ வேண்டியிருக்கும் என்று கேட்ட போதும் கூட, கதற வேண்டிய அவசியம் இல்லாமல் மனம் இரும்பாகிப் போயிருந்திருக்கலாம்! எந்த எதிர்பாராத திருப்பங்களும் அவர்களை ஒன்றும் செய்யாது என்பதுதான் உண்மையாகியிருக்கலாம்!   போதாததற்கு, முரளியை  மனதிலிருந்து வேரோடு பிடுங்கி எறிய அக்கடிதம் அவர்களுக்கு உதவி இருக்கலாம்!

இப்படி இருக்க, காலச் சக்கரத்தின் சுழற்சியில் வருடங்களுப் பிறகு முரளி இந்தியாவுக்குத் திரும்பி, தன் தாய் மற்றும் சகோதரனின் மரணத்திற்குப் பிறகு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினாலும், ஒருவேளை, மனதில் எங்கேயோ ஒரு மூலையில் குற்ற உணர்வு உறங்காமல் விழித்திருந்திருக்க வேண்டும்!

அதனால்தான் மாதவியின் அலைபேசி எண்ணை தெரிந்துகொண்டுத் தொடர்ச்சியாக அழைத்திருந்திருப்பானோ?


அடுத்த பகுதியில் நிறைவு பெறுகிறது.


49 கருத்துகள்:

  1. அடடா நான் நினைச்ச மாதிரியே அந்த 18,000 தான் காரணமாகி விட்டதே ..ஆனாலும் முரளி செய்தது நியாயமா ?அந்த பெண்ணும் குழந்தையும் என்ன பாவம் செய்தார்கள் ? அப்பா செய்த தவறுக்கு ஒரு அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை சூறையாடலாமா....
    ஆனாலும் அந்த பெரியவர் சரியாகத்தான் செய்திருக்கிறார் அக்கடிதம் முதலில் கிடைத்திருந்தா மூன்று பெண்களும் துவண்டிருப்பார்கள் எதிர்காலத்தை நினைத்தே ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! சகோ ஏஞ்சல்! நியாயமா இல்லை மாதவியின் முடிவு என்ன என்று அடுத்த பகுதியில் தெரிந்துவிடப் போகிறதே! நீங்கள் சொல்லியிருக்கும் அந்தக் கருத்துதான் கடிதம் குறித்தது தான் என் மனதிலும் எழுதும் போது தோன்றியது அதான் அதை அப்படியே சொல்லிவிட்டேன்...

      மிக்க நன்றி ஏஞ்சல் சகோ! கருத்திற்கு

      நீக்கு
  2. "ஆண்கள் இல்லாத வீடு என்றால் வக்கிரபுத்தி உள்ள ஆண்களுக்குத் தைரியம் வந்து, பெண்களைத் துன்புறுத்த தயாராகிவிடுகிறார்கள் போலிறுக்கிறது! காவல் துறையில் புகார் கொடுத்தால் நியாயம் கிடைத்துவிடுகிறதா என்ன? அதெல்லாம் நம் நாட்டில் ஏமாற்றம் தரும் எதிர்பார்ப்புக்கள்தான். பணமும், அரசியல் செல்வாக்கும், ரௌடித்தனமும், பெண்களுக்கு நீதி கிடைக்கத் தடையாக இருக்கின்ற சம்பவங்கள் தானே நாடெங்கும் நடக்கின்றன! பெண்ணுரிமை, பேச்சிலும், எழுத்திலும் மட்டுமே! உயிர் வாழும் அவல நிலைக்கு என்று மாற்றம் வருமோ? என்றெல்லாம் எனக்குத் தோன்றியது!" என நாட்டு நிலைமையைப் படம் பிடித்துக்காட்ட முயன்றிருக்கிறீர்கள்.
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கு! பாராட்டிற்கும்

      நீக்கு
  3. கதை நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு கடந்து போக முடியவில்லை....

    வேதனை நிறைந்த வாழ்க்கை....

    பெண்களின் தனிமையை பயன்படுத்திக் கொள்ளத் துடிக்கும் மனிதர்கள்...

    என வாசிக்க வாசிக்க ரொம்ப கஷ்டமாயிருச்சு...

    சில பல காரணங்கள் அதிக எழுதவும் நேரமில்லாமல் வாசிப்பதும் குறைந்து விட்டது....

    ரொம்ப நாளைக்குப் பிறகு இன்று இங்கு வந்திருக்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! குமார்! எத்தனையோ பெண்களின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. சிலர் தங்கள் வாழ்க்கையைத் தைரியமாக முடிவெடுத்து வாழ்ந்து வருகிறார்கள்...மாதவி எப்படி என்பதை அடுத்த பகுதியில் தெரிந்து கொண்டுவிடலாம்...

      பரவாயில்லை எதங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ வாருங்கள் குமார்..

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
  4. என்னாதூஊஊஊஊ மாதவி முரளியைச் சேர்த்துக் கொண்டாவோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இந்தப் பெண்களே இப்படித்தான், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புறு:)சன் என அனைத்தையும் பொறுத்துப் போவதனால்தான்... ஆண்கள் சிலர் இப்படி துணிந்து தவறு செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! என்ன செய்ய பல மாதவிகள் இருக்கிறார்களே!! சரி அடுத்த பகுதியில் முடிந்து விடுகிறதே பாருங்கள்!!

      மிக்க நன்றி சகோ அதிரா

      நீக்கு
  5. இல்ல முரளி உண்மையில் கடித்தத்தில் எழுதியதைப்போல இன்னொரு திருமணத்துக்குப் பெண் தேடியிருப்பார், ஆனா மாதவியின் நல்ல குணத்தால் அவருக்குப் பெண் கிடைக்கவிடாமல் கடவுள் தடுத்திருப்பார்... அதனால வேறு வழியின்றி திரும்ப வந்து ஒட்டியிருப்பார்ர்ர்ர்ர்.....

    சொல்லிட்டேன் முரளியை என் கையில் ஒப்படையுங்கோ:) நான் தீர்ப்பு வளங்கப் போறேன்ன்ன்ன்:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக முரளியை உங்கள் கையில் ஒப்படைக்கிறேன்...அதுசரி முரளியை தேம்ஸில் தள்ள நீங்கள் அங்கு ஒளித்துவைத்திருக்கிறீர்கள் என்று கீதா சொன்னாரே அப்போ....நீங்களே தீர்ப்பு வழங்கிடுங்க

      நீக்கு
  6. ///அதனால்தான் மாதவியின் அலைபேசி எண்னைத் தெரிந்துகொண்டுத் தொடர்ச்சியாக அழைத்திருந்திருப்பானோ?
    ///
    புரியவில்லையே எனக்கு. முரளி மாதவியோடுதானே இப்போ வாழ்ந்து வருகிறார் எனச் சொன்னீங்க... பிறகு எதுக்கு “நம்பரைத் தெரிந்துகொண்டு”... எனச் சொல்றீங்க... மனைவியின் நம்பர் தெரியும்தானே கணவனுக்கு???..

    கடசி வரி எழுத்துப் பிழை திருத்தி விடுங்கோ.. எண்ணை.. என்பதை, எண்னை எனச் சொல்லி.. என்னை என வாசிக்க வைக்குது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்துப்பிழையை அதிரா(வே) சுட்டிக் காட்டியிருப்பது மிகுந்த மனமகிழ்ச்சியை உருவாக்குகிறது.

      :))

      நீக்கு
    2. மாதவி பெருந்தன்மையோடு முரளியை ஏற்றுக் கொண்டாள் என்று மட்டும் முடித்து விடாதீர்கள்! உண்மை அப்படி இருந்தாலுமே கூட கதையிலாவது மாற்றவேண்டும்!

      நீக்கு
    3. முடிவைப் பாருங்கள்! ஜானகி டீச்சர் என்னிடம் நிகழ்வுகளைச் சொன்ன போது எனக்கு விருப்பமில்லாதததாகத்தான் இருந்தது எனவே நான் எழுதும் கதையில் என் மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன். இறுதியில் உண்மையும் அதுவாகிப் போனது....

      ஏற்கனவே முடிவு எழுதித்தானே போட்டிக்கு அனுப்பினேன்....எனவே....அதே முடிவுதான்...அடுத்த பகுதியில் தெரிந்து விடும்.

      ஸ்ரீராம் ஒன்றி வாசிப்பதற்கு மிக்க நன்றி

      நீக்கு
    4. ஸ்ரீராம் அது என்ன அதிரா(வே)!!ஹஹஹஹ்ஹ்

      அதிரா ஓடி வாங்கோ கெதியா ஓடிவாங்கோ!!! இங்க பாருங்கோ ஸ்ரீராம் என்ன சொல்லியிருக்கார் உங்களைப் பத்தினு....இப்படிக் கண்டுக்காம இருப்பாங்களோ....

      கீதா

      நீக்கு
    5. ஸ்ரீராம், இந்தக் கதை மார்ச் 8 பெண்கள் தின போட்டிக்காக அனுப்பப்பட்டது......எனவே முடிவைப் பாருங்கள்...எனக்குத் தோன்றிய முடிவுதான்....இல்லை என்றால் கீதா என்னை சும்மா விட்டிருப்பாரா....அவர்தானே டைப் பண்ணி அனுப்பியது.....என்னிடம் சண்டை போட்டு ஒருவழி பண்ணியிருப்பார்......ஹஹஹ

      நீக்கு
    6. அதிரா சகோ மிக்க நன்றி எழுத்துப் பிழையைச் சுட்டிக் காட்டியமைக்கு. துளசியின் கதையை நான் தானே டைப்பினேன்...இப்போது அந்த ஃபான்டை மாற்றி இங்கு மீண்டும் டைப்பியதால் எழுத்துப் பிழை..வந்துவிட்டது அர்த்தத்தையும் மாற்றியிருக்கிறது...மாற்றி விட்டேன்...மிக்க நன்றி..

      கீதா

      நீக்கு
    7. ///
      ஸ்ரீராம்.25 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 7:41
      எழுத்துப்பிழையை அதிரா(வே) சுட்டிக் காட்டியிருப்பது மிகுந்த மனமகிழ்ச்சியை உருவாக்குகிறது.

      :))////

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர் பார்த்ததுமே எனக்குப் புரிஞ்சுபோச்சுக் கீதா:), ஆனா சகோ ஸ்ரீராம் ரொம்ப நல்லவர், அமைதியானவர் என்பதனால பேசாமல், காகா போகிறேன்:). மீ ரொம்ப நல்ல பொண்ணு பார்த்தீங்களோ:)

      நீக்கு
  7. நான் நினைத்ததுபோல் வேதனையான நிகழ்வுகளே

    நேற்றே இரண்டாவது நபராய் செல்லில் நீண்ட கருத்துரை எழுத கடைசியில் இணையம் துண்டிப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி மொபைலில் கருத்து அடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும். அதனால்தான் கருத்துகள் நான் தமிழை ஆங்கிலத்தில் அனுப்ப சென்னையிலிருந்து வெளியாகிறது...அதனால் என்ன ஜி!!

      முடிவைப் பாருங்கள் வேதனையா இல்லையா என்று...மிக்க நன்றி ஜி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  8. தொடர்கிறேன். பெரும்பாலான ஆண்களின் வீரத்தைக் காட்ட பெண்கள்தான் அகப்படுகிறார்கள். முரளி போன்றவர்கள் தங்கள் காம இச்சைக்கு மாற்றுப்பெயரும் வைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! உண்மைதான் ஸ்ரீராம்! பெண்களுக்கு நீதியும் கிடைப்பதில்லையே.

      மிக்க நன்றி கருத்திற்கு

      நீக்கு
    2. யேஏஏஏஏஏஸ்ஸ்ஸ் பெண்களுக்கு நீதி கிடைக்கோணும் .... இதுக்காக நான் போராடப்போறேன்ன்ன்ன் என்னை யாரும் தடுக்காதீங்கோஓஓஓஒ:)

      நீக்கு
    3. ஆ! மக்களே அதிரா போராடப் போறாங்களாம் பெண்களுக்காக...அதுவும் இப்போ அன்னையர் தினம் வேற வருது...தேம்ஸ் கரைல பந்தல் போட்டுருக்காங்களாம்....மதுரைத் தமிழனுக்கு அதிராவின் வீர முழக்கம் கேக்கலை போல...ஹைஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  9. துளஸிஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் தங்களின் வாழ்த்திற்கு

      நீக்கு
    2. எனக்கும் என் பேசனல் செக்கடட்றி மூலம் தகவல் கிடைச்சுது இன்று துளசி அண்ணனுக்குப் பிறந்தநாள் என... ஆனா பாருங்கோ கீதா சொல்லவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்... பொறாமைதானே:) ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்கோ:)

      நீக்கு
    3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துளசி அண்ணன்.

      நீக்கு
    4. மிக்க நன்றி அதிரா சகோ வாழ்த்திற்கு

      நீக்கு
    5. அதிரா அஹஹஹ் யாரது உங்கள் பெர்சனல் செக்ரட்டரி??!! சரி சரி...துளசிக்கே நினைவில்லை அப்புறம்ல எனக்கு!! நினைவிருக்கும்...ஹஹஹ் சரி சரி கிழிச்சு அதிரா வீட்டுப் பின்பக்கம் போட்டாச்சு!!!

      கீதா

      நீக்கு
    6. அந்த பெர்சனல் செகரெட்டரிக்கு இன்னும் ஒன்றரை வருஷமா சம்பள பாக்கி இருக்காம் கீதா ..இவங்க அரியர்ஸ் எல்லாம் சேர்த்து கொடுத்தாதான் இனிமே அவங்க வேலை கன்டின்யூ செய்வார்களாம் எனக்கு காற்று வழியே சேதி வந்துச்சி

      நீக்கு
    7. பாருங்க :) கீதா பேப்பரை கிழிச்சு போடாதீங்க இனிமே ,,ஒரு மினி பேப்பர் shredder வாங்கி அதில் பீஸாக்குங்க ..நீங்க போட்ட துண்டு சரியா அந்த செகரட்டரி வீட்லயே பறந்து போய் விழுந்திருக்கு .

      நீக்கு
    8. ஏஞ்சலின் என்னாது அதிரா தன் செக்ரட்டரிக்கு சம்பள பாக்கி வைச்சுருக்காங்களா... இதுக்கு நடுல பெண்களுக்கான அநீதிக்கு எதிராகப் போராடப் போறாங்களாமெ..ஹஹஹ்ஹ..

      கீதா

      நீக்கு
  10. பெண்களுக்கு எதிரி பெண் எழுத்தாளர்கள் தானோ? அதனால் தான் இவ்வளவு சோகமான முடிவை இக்கதை யில் பெண்களுக்குத் தருகிறாரோ கீதா அம்மையார்? எனிவே, இன்னும் ஒரு அத்தியாயம் பாக்கி இருக்கிறதே, என்ன நடக்குமோ பார்க்கலாம்.

    - இராய செல்லப்பா நியூ ஜெர்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் இது துளசி எழுதிய கதை. நான் அல்ல...எனக்குப் பிடித்த முடிவு! நான் மிகவும் விரும்பிய முடிவு சார்..

      கீதா

      நீக்கு
    2. செல்லப்பா சார் மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...கீதா உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன்.

      மிக்க நன்றி சார்

      நீக்கு
    3. ////
      இதற்கு ஏஞ்சல், அதிரா ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்...ஹிஹிஹி

      கீதா///
      எதுக்கும் முடிவு வரட்டும்... கீதாக்கு நீச்சல் தெரியுமோ?? இல்ல சும்மாதான் கேட்டு வைக்கிறேன்:)

      நீக்கு
  11. அன்பின் துளசிதரன் அவர்களுக்கு.

    நலம் என்றென்றும் நிறையட்டும்..
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஐயா தங்களின் வாழ்த்திற்கு

      நீக்கு
  13. இங்கேயும் வாழ்த்துகிறேன் .. பிறந்தநாள் நல்வாழ்த்துகள் துளசி அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சலின் சகோ தங்களின் வாழ்த்திற்கு

      நீக்கு
  14. சுவராஸ்யாமாக செல்கிறது கதையை தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓகே ஒகே தமிழன்!! தொடருங்கள்...அடுத்த பகுதியில் முடிஞ்சுருச்சு! மிக்க நன்றி மதுரைத் தமிழன்

      நீக்கு
  15. நல்ல பழிவாங்கல்! அதுவும் வாழ்க்கையோடு! :(

    பதிலளிநீக்கு
  16. மீண்டும் ஒரு முறை எல்லப் பதிவுகளையும் வாசித்தபின் கருத்திடுகிறேனே

    பதிலளிநீக்கு