சனி, 12 மார்ச், 2016

நட்பின் அணிகலனாம் நன்றி மறவா டிண்டிம்!

இது ஒரு அற்புதமான நிகழ்வு. மனதைத் தொட்ட நிகழ்வு. இதை வாசித்த போது, உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்ற பகிர்ந்துள்ளேன். ஒருவேளை நீங்கள் ஊடகங்களிலோ, சமூக வலைத்தளங்களிலோ வாசித்திருக்கலாம். என்றாலும் நீங்கள் ரசிப்பீர்கள் என்ற எண்ணத்துடன் பகிர்ந்துள்ளேன்.

ப்ரேசிலின் ஒரு தீவுக் கிராமமான ரையோ டி ஜனைரோவைச்  ( Rio de Janeiro) சேர்ந்தவர், 71 வயதான ஜோஆஒ பெரைரா டி சுஸா (Joao Pereira de Souza).  பகுதி நேர மீன் பிடிக்கும் தொழில் செய்பவர்.
When Mr de Souza first discovered the tiny penguin he was worried the starving creature would die
2011 ஆம் வருடம் ஒரு நாள், கடற்கரையில் பாறைகளுக்கிடையில் ஒரு குட்டிப் பெங்க்வின் உடல் முழுவதும் எண்ணையுடன், பசியில் வாடிக் கிடந்திருப்பதைக் கண்டிருக்கிறார் டி சுஸா.

டி சுஸா குட்டியை எடுத்துக் கொண்டுச் சென்று அதன் இறக்கைகளைச் சுத்தப்படுத்தி, தினமும் அதன் உணவான மீன் அளித்து, நன்றாகக் கவனித்து மீண்டும் நல்ல உடல்நிலை பெறச் செய்திருக்கிறார். எண்ணெயினால் ஏற்பட்டக் கறுப்பு நிறப் படிமானத்தினைச் சுத்தப்படுத்த ஒரு வாரம் ஆகியிருந்திருக்கிறது. பெங்க்வினிற்கு டிண்டிம் என்று பெயரும் சூட்டியுள்ளார். டிண்டிம் ஆண் பெங்க்வின்.
Although Dindim goes off to breed for four months of the year, he spends the rest of his time with Mr de Souza
டிண்டிம் நன்றாக உடல் நிலை தேறியவுடன் அதனை மீண்டும் கடலிற்குள் விட்டிருக்கிறார். ஆச்சரியம். நான்கே மாதங்களில் அது மீண்டும் அவரை எங்கு அது சந்தித்ததோ அந்த இடத்திற்கு வந்திருக்கிறது. அதற்கு உணவளித்து மீண்டும் கடலில் விட்டாலும் அது செல்லாமல் அவருடன் வீட்டிற்குச் சென்றிருக்கிறது. அவர் இதை எதிர்பார்க்கவில்லை.
Dindim will not allow any human but Mr de Souza to pet him - if they try he tends to peck them away
இப்படியாக டிண்டிம் 8 மாதங்கள் டி சுஸாவுடன் தங்கிவிட்டு, இனப்பெருக்க காலம் வரும் சமயத்தில் தன் கோட் ஆன இறக்கைகளை மாற்றிவிட்டு மறைந்துவிடுமாம். அர்ஜெண்டைனா, சிலி கடற்கரையைத் தாண்டிச் சென்று விடுகிறதாம். 4 மாதங்கள் கழிந்த பின் மீண்டும் இவரைத் தேடி வந்துவிடுகிறதாம். இப்படி கடந்த 4 வருடங்களாக இந்த நிகழ்வு நடந்து கொண்டிருக்கின்றதாம்.
இப்படி 5000 மைல்கள் அது நீந்திக் கடந்து வருவதாக கணிக்கப்பட்டிருக்கிறது. இதோ டிண்டிம் நீந்திக் கடக்கும் பாதை.

டி சுஸா டிண்டிமை தன் குழந்தையைப் போல நேசிப்பதாகவும், டிண்டிமும் அவரை நேசிப்பதாகவும் நம்புகின்றார்.

ஆம்! டிண்டிம் நேசிக்கவில்லை என்றால் மீண்டும் அவரைத் தேடி வருமா அந்தக் குழந்தை?!!

ஜூன் மாதம் வந்து இவருடன் 8 மாதங்கள் அதாவது ஃபெப்ருவரி வரை இருந்துவிட்டு ஃபெப்ருவரியில் போய்விடுகிறான். ஒவ்வொரு வருடமும் அவன் அன்பு கூடிக் கொண்டு வருகிறதாம்.

டி சுஸாவைப் பேட்டி கண்ட உயிரியல் வல்லுநர், “இப்படியான ஒரு நிகழ்வை இதுவரைக் கண்டதில்லை” என்று சொல்லியிருக்கிறார். டிண்டிம், டி சுஸாவையும் பெங்க்வின் என்று நினைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
The unlikely duo are all but inseparable and enjoy spending time with one another on the Brazilian island
டி சுஸாவைக் கண்டதும் பைரவரைப் போல வாலை ஆட்டுகிறானாம், சந்தோஷத்தில் குரலெழுப்புகின்றானாம். டி சுஸாவைத் தவிர வேறு எவரையும் தொட அனுமதிப்பதில்லையாம் டிண்டிம். டி சுஸாவின் மடியில் அமர்கின்றானாம். அவர் அவனைக் குளிப்பாட்டவும், உணவளிக்கவும், அவனைத் தூக்குவதற்கும் அனுமதிக்கின்றானாம்.

பெங்க்வின்கள் மனிதர்களின் நல்ல நண்பர்கள். நன்றி மறக்கும் 6 அறிவு மனிதர்கள்! பிறப்பினால் சிற்றறிவு, ஆனால் 6 அறிவையும் மிஞ்சும் இந்த டிண்டிம் பெங்க்வின் தன்னைக் காப்பாற்றிய மனிதரை மறக்காமல் நன்றி உணர்வுடன் ஒவ்வொரு வருடமும் வந்து அவருடன் 8 மாதங்கள் தங்கி அன்பு பாராட்டுகிறான், கற்காமலேயே திருக்குறள் அறிந்த இந்த டிண்டிம் பெங்க்வின்.

ரசித்தீர்கள்தானே டிண்டிமை!!?

-----கீதா

படங்கள் : நன்றி டிவி க்ளோபோ-இணையம்.




54 கருத்துகள்:

  1. வாவ்...
    இப்பத்தான் வாசிக்கிறேன்...
    என்ன பாசம்...
    அவைகளுக்கு இருக்கும் பாசம் நேசம் எல்லாம் நம்மிடையே இல்லையே கீதா மேடம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் குமார்! ரொம்ப அழகான பாசம் இல்லையா. ம்ம்ம் மனிதர்களிடம் மிஸ்ஸிங்க்..மிக்க நன்றி குமார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

      நீக்கு
  2. ஸ்வீட் டிண்டிம் ..பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் ..ஐந்தறிவு ஜீவன்களிடம் ஆறறிவு நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் வாழ்க இருவரது நட்பும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சல். உங்களுக்குப் பதில் கமென்ட் போட்டு போட்டுப் போகாமல் இதோ இப்போதுதான் போகும் என்று நினைக்கிறேன்..

      ஆம், 5 அறிவு ஜீவன்களிடம் 6 அறிவு நிறையவே கற்றுக் கொள்ளலாம். ஆம் வாழ்த்துவோம் இருவரது நட்பயும்..

      நீக்கு
  3. ஐந்தறிவான பறவைக்கெல்லாம் அன்பும் பாசம் புரிகிறது ,ஆறறிவான மனிதனுக்கு ......:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைச் சொல்லுங்க பகவான் ஜி! மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும் ஜி

      நீக்கு
  4. பதில்கள்
    1. மிக்க நன்றி நம்பள்கி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

      நீக்கு
  5. நெகிழ வைக்கும் நிகழ்வு. நானும் படித்தேன். மனிதர்களுக்கு மட்டும்தான் கடவுள் நன்றியைக் குறைவாகப் படைத்திருக்கிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம். ஹும் என்ன செய்ய..இறைவன் கொடுத்திருக்கும் அந்த 6 வது பகுத்தறிவை மனிதன் உபயோகப்படுத்துவது குறைவாக இருப்பதால்தான்...ஒரு வேளை அந்தப் பகுத்தறிவு இல்லாததால் தான் அவை எல்லாம் மனிதனை விட உயர்வானதாக இருக்கின்றனவோ..

      நீக்கு
  6. பாசம் வென்றுவிட்டது ஐந்தறிவு சுயநலம் இல்லாதது ஆனால் 6 அறிவு ! அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் தனிமரம் நேசன். மிக்க நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

      நீக்கு
  7. அருமையான பதிவு
    மனதை சிலிர்க்க
    வைத்த டிண்டிம்....
    தொடரட்டும் டிண்டிம்
    நட்பு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசஃப் தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்.

      நீக்கு
  8. எனது கவலை எல்லாம் அந்த மனிதர் வயதானவராக இருக்கிறார் தீடிரென்று இறந்து போனால் இந்தே பெங்குவினுக்கு எப்படி தெரியும் அல்லது புரியும் இந்த பெங்குவினிற்காகவது இந்த மனிதர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! உங்களுக்கும் தோன்றியதா!! ஆச்சரியம்! எனக்கும் இந்த நிகழ்வை வாசித்ததும் நானும் மகனும் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது தோன்ற இருவரும் அதை நினைத்து வருந்தினோம். பதிவில் குறிப்பிட விடுபட்டுவிட பதிவு வெளியான பிறகும் பதிவில் இறுதியில் சேர்த்துவிடலாம் என்று நினைத்து அப்படியே உறங்கிவிட்டேன். இப்போது இதற்கான விரிவான பதில் அடுத்த பதிவாகிறது.

      மிக்க நன்றி மதுரைத் தமிழன்

      நீக்கு
  9. நிச்சயம் ஆச்சரியம்தான்
    பகிர்ந்து அறியத் தந்தமைக்கு
    நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  10. அன்றைக்கு - செல்ஃபி எடுக்கிறேன் பேர்வழி என்று டால்பின் குட்டியைக் கொன்று தீர்த்த முட்டாள்களின் மத்தியில் - திரு. டி ஸோஸா அவர்கள் பன்மடங்கு உயர்ந்து விளங்குகின்றார்..

    டி ஸோஸா - டிண்டிம் நட்புடன் வாழ்க பல்லாண்டு!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா மிக்க நன்றி துரை ராஜு ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். வாழ்த்துவோம்

      நீக்கு
  11. வணக்கம் எனக்கென்னவோ இது நல்ல மனிதநேயமுள்ள ஆறறிவு மனிதனை பிரம்மன் கடைசி நொடியில் பெங்க்வின்னாக மாற்றி விட்டானோ என்று தோன்றுகின்றது
    தமிழ் மணம் 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் என்னது மனிதனையா...!!! ஜி அவை நம்மைவிட புத்திசாலிகள். வெளிப்படுத்துவது உடல் மொழிகளினால். அன்பு உட்பட. அவை வளர்ந்தாலும் குழந்தைகள்தான். அவ்வளவே. மிக்க நன்றி கில்லர்ஜி வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  12. படித்திருக்கிறேன் . நாலு வரிச் செய்தியாக மட்டுமே .
    விவரமான பதிவிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அபயா அருணா வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  13. இந்த நிகழ்ச்சியைப் படிக்கச்சொன்னபோது

    "இதில் என்ன அதிசயம் இருக்கிறது ? நீங்களும் தான் கரெக்டா தினம் தினம் அதே நேரத்திற்கு சமையல் அறைக்கு தட்டை எடுத்துக்கொண்டு வருகிறீர்கள். " என்கிறாள் இல்லத்தரசி.

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹாஹ் மிக்க நன்றி சுப்புத்தாத்தா வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  14. பதில்கள்
    1. மிக்க நன்றி வலிப்போக்கன் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  15. நல்ல பகிர்வு. முகப்புத்தகத்திலும் இது பற்றி படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  16. வணக்கம்
    6 அறிவு மனிதனை விட 5அறிவு எவ்வளவு பாசம் என்பதை அறியமுடிகிறது சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்குநன்றி த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் தம்பி வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  17. படிக்கப் படிக்க மனம் நெகிழ்கிறது சகோதரியாரே
    விலங்குகளின் அன்பிற்கு ஈடுஏது
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ. ஆம் அவற்றின் அன்பிற்கு ஈடு இல்லைதான்

      நீக்கு
  18. ஒரு நல்ல பகிர்வு. முதன்முதலாக வாசிக்கிறேன் சில நேரங்களில் பகுத்தறிவுக்கு ப் புரியாத நிகழ்வுகளும் நடக்கின்றன வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

      நீக்கு
  19. பதில்கள்
    1. மிக்க நன்றி முஹம்மது நிஹாமுத்தீன் தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்

      நீக்கு
  20. அன்புள்ள சகோதரி,

    பறக்கத் தெரியாத பறவை...

    மறக்கத் தெரியாத நன்றியால்

    மனதைக் கொள்ளை கொண்ட

    ஆண்குயினான பென்குயின்...!

    நன்றி.

    த.ம. 12

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மணவை சகோ தங்களின் அருமையான வார்த்தையாடல் பின்னூட்டத்திற்கும், வருகைக்கும். ரசித்தோம் ஆண்க்யினான பெங்க்யின்...

      நீக்கு
  21. டிண் டிண்..மட்டுமல்ல..சில வளர்ப்புநாய்களும் இதைப்போல் இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்...
    கடவுள்கள் ஏன் மனிதனை விடுத்து இவைகளை வைத்துக்கொண்டிருக்கின்றன எனப்புரிகிறது.

    எழுதிய விதம் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் செல்வா உண்மைதான். மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  22. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள், அன்புடன் போற்றி பாதுகாத்தவரை தேடி வருவது அன்பால்.டி ஸோஸா - டிண்டிம் அன்பு வாழ்க!
    அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ கோமதி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...

      நீக்கு
  23. ஐந்தறிவு என்று இனி சொல்லவேக் கூடாது போல கீதா.. விலங்குகளும் பறவைகளும் அன்பில் நெகிழ வைக்கின்றன..பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் க்ரேஸ் அவை அனைத்தும் நல்ல தோழமையுடன் அன்புடன் இருக்கின்றன. சிங்கம் புலிகள் கூட மனிதருடன் விளையாடும் காணொளிகள் நிறைய இருக்கின்றன...மிக்க நன்றி க்ரேஸ் வருகைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  24. பெங்குவின் அன்பு நெகிழ வைக்கிறது.மிருகங்கள் காட்டுவது எதிர்பார்ப்பில்லா அன்பு தான் நல்லதொரு செய்தியைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  25. வாயில்லாப் பிராணிகளின் அன்பு நெகிழ வைக்கும். அந்த மனிதர் பல்லாண்டு வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு