நண்பர்/சகோ மீராசெல்வகுமார் அவர்களின்
அழைப்பிற்கிணங்க நாங்களும், முத்துநிலவன் ஐயா/அண்ணாவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட
இந்தத் தொடர்பதிவில் எங்கள் ரிலே டார்ச்சுடன் இணைந்துவிட்டோம். மிக்க நன்றி செல்வா!
நாங்கள் தொடரும் வலைத்தளங்களை எங்கள்
தளத்தின் வலது புறம் மிளிர்ந்து கொண்டிருப்பதால் பதிவில் தனியாகத் தரவில்லை. ஒவ்வொரு
பதிவரும் ஒவ்வொரு விதத்திலும் அழகாக எழுதுபவர்கள்.
இங்கிருந்தும், வெளிநாட்டிலிருந்தும்
எழுதுபவர்களில் அரசியல் கட்டுரைகள் நையாண்டி, கலாய்த்தல் என்று தாக்குபவர்கள், சுற்றுப்புறச்சூழல்,
விலங்குகள் பற்றிச் செய்திகளும், விலங்குகள் பற்றிக் கட்டுரை தகவல் விவரணங்களும்
அழகுற எழுதுபவர்கள், மரபு, புதுக்கவிதை என்று கலக்குபவர்கள், தமிழில் நாம்
பிரமிக்கும் வகையில் எழுதுபவர்கள், விழிப்புணர்வுக் கட்டுரை எழுதுபவர்கள்,
நகைச்சுவையில் நகைக்க வைப்பவர்கள், திருக்குறளாலும் திரை இசையாலும் கவர்பவர்,
இசையைப் பற்றியும், பாடல்கள் பல பற்றியும் நுணுக்கமாக எழுதுபவர்கள், பயணக்
கட்டுரைகளால் நம்மை பல ஊர்களுக்கு அழைத்துச் செல்பவர்கள்..
பல்சுவையில் சுவைபட எழுதுபவர்கள்,
திரைப்படங்கள் பற்றி பாங்குற விமர்சிப்பவர்கள், இலக்கியச் சுவையில் எழுதுபவர்கள்,
மொக்கையையும் ரசிக்கும் வகையில் தருபவர்கள், வித்தியாசமான சிந்தனைகளுடன்
பாசிட்டிவ் செய்திகளை உலகறிய வைப்பவர்கள், ஆன்மீகம் பேசுபவர்கள், கதைகள், தொடர்கள்
என்று எழுதுபவர்கள், அறிவியல் கட்டுரைகள், தகவல்களஞ்சியம் தருபவர்கள், வீறு
கொண்டெழுந்து சமூகத்தைச் சாடிக் கருத்துகளை முன்வைப்பவர்கள் என்று ஒவ்வொருவரும்
தங்கள் திறமையில் தனித்தன்மையுடன் ஒளிர்கின்றார்கள். புகழ்பெற்ற எழுத்தாளர்களும்
இருக்கின்றார்கள். பலபுத்தகங்கள் படைத்தவர்களும் இருக்கின்றார்கள்
எனவே இவர்கள் எல்லோரையுமே நாங்கள்
குறிப்பிட விரும்புகின்றோம். தளத்தின் வலப்பக்கம் பார்க்க. இவர்களில் மூவரை இங்குச் சொல்ல விழைகின்றோம்.
திருப்பதி மகேஷ் எனும் இளைஞர். எங்கள்
நண்பர். தாய்மொழி தெலுங்கு. ஆனால், தமிழ்நாட்டில் படித்தமையால் தமிழில்
எழுதிவருகிறார். கண்பார்வையற்றவர். ஆனால், அவரிடம் நாங்கள் சாதாரணமானவர்களிடம்
பேசுவதைப் போலத்தான் பேசுவோம். அந்தத் திரைப்படம் பார்த்தீர்களா, இந்தப் புத்தகம்
வாசித்தீர்களா என்று. அவரும் தனக்குப் பார்வை இல்லை என்பது போல் பேசவேமாட்டார். நேர்மறைச்
சிந்தனையுடைவர். திரைப்படத்தில் யார் எப்படி வருகின்றார்கள், எப்படி முகபாவங்கள்
காட்டுகின்றார் என்பது வரை துல்லியமாகச் சொல்லி ரசிப்பவர். தன்னைச் சந்தோஷமாக
வைத்துக் கொள்பவர். எப்போதுமே மகிழ்வாகப் பேசுபவர். அறிவுத் தேடல் உடையவர். அவரைப்
பிரமிப்புடன் பார்க்கின்றோம். http://tirupatimahesh.blogspot.com/
அடுத்து சாளையக்குறிச்சி வெற்றிவேல்.
இவரும் இளைஞர். இலக்கிய நடையில் அழகுற எழுதுபவர். கடித இலக்கியம் படைப்பவர். இந்த இளம்
வயதில் சரித்திரப் புதினம் எழுதியிருக்கிறார். பல கல்வெட்டுகள்,சரித்திரம்
ஆராய்ந்து. “வானவல்லி” 4 பாகங்கள். இராஜராஜச் சோழனுக்கும் முன்பு 2500
ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த சோழநாட்டைப் பற்றிய கதை. சரித்திரநாவல் எழுதும்
அளவிற்குத் திறமைபடைத்தவர். வானவல்லி இம் மாதக் கடைசியில் வெளியுலகைப் பார்க்க இருப்பதாகச்
சொன்னார். வாழ்த்துவோம் அவரை. http://iravinpunnagai.blogspot.com/
அடுத்து புதுகை ஜெயசீலன். இறுதிவருடப் பொறியியல் மாணவர். அரசியல் கட்டுரைகள், திரைவிமர்சனம், கதை, அறிவியல் கட்டுரைகள் என்று அழகுற எழுதுபவர். அவரது துறையிலும், எழுத்துலகிலும் அவர் சாதனை புரிய வாழ்த்துவோம். http://pudhukaiseelan.blogspot.in/
தொடர்பவர்களில் ஒருசிலரைப் பல மாதங்களாகக் காணவில்லை,
ஒரு வருடம் என்றும் சொல்லலாம். ஒரு சிலர் அவ்வப்போதுக் காணாமல் போனாலும் இடையில்
வந்து எட்டிப் பார்த்துவிடுகின்றனர். தமிழ் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் நாம்
அறிந்திராதப் பாடல்கள், விளக்கங்கள் பலவற்றைச் செந்தமிழில் அழகுபடத் தந்த விஜு
அவர்களைச் சமீபகாலமாகக் காணவில்லை. வேலைப்பளு போலும். அவர் மீண்டும் வருவார் என்று
காத்திருப்போம்.
இந்தப் பதிவை எழுதிவரும் இந்தத் தருணத்தில், நாங்கள்
சமீபத்தில் கண்ட வலைத்தளங்களை இங்கு பகிர நினைத்து எழுதத் தொடங்கிய வேளையில்,
இந்தச் செய்தி கலங்கடித்தது. நம் அனைவரது
மதிப்பிற்குரிய, அன்பிற்குரிய ஆன்மீகத் தென்றல், திருமதி இராஜ ராஜேஸ்வரி அவர்கள்
9-2-2016 அன்று இறைவனடிச் சேர்ந்ததாக அவரது வலைத்தளம் “மணிராஜ்” ல் அவரது மகன்கள்
மற்றும் மகள் அறிவித்திருக்க மனம் கலங்கிவிட்டது. பிறிதொரு சமயத்தில் பிற
வலைத்தளங்களைப் பகிர்கின்றோம். பொருத்துக் கொள்க.
பல ஆன்மீகப் பதிவுகள், பல திருத்தலங்களைப்
பற்றியும், விழிப்புணர்வுப் பதிவுகள் என்றும் அழகான தமிழில் எழுதிவந்தவர் சகோதரி இராஜராஜேஸ்வரி உடல்நலக் குறைவால் இருந்தார் என்பது அறிந்திருந்தோம். இப்போது
இறைவனடியில். சகோதரி அவரது ஆன்மா சாந்தியடைய நாம் பிரார்த்திப்போம். http://jaghamani.blogspot.com/2016/03/blog-post_92.html
வலைப்பதிவர் சகோதரி ராஜராஜேஸ்வரியின் பிரிவுச் செய்தி கேட்டு துணுக்குற்றேன். அவரது குடும்பத்தினர்க்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். செய்தியைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றியும் வணக்கமும்.
பதிலளிநீக்குநல்ல பதிவர்கள் அறிமுகம்... வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநானும் இப்போதுதான் இராஜராஜேஸ்வரி அம்மாவின் மரணம் குறித்து அறிந்தேன்... ரொம்ப வருத்தமா இருக்கு... அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
வணக்கம் இராஜேஸ்வரி அம்மாவின் ஆத்மா என்றும் இறையடியைச் சேர்ந்திருக்க வேண்டி வணங்குகிறோம்
பதிலளிநீக்குஓம் சாந்தி சாந்தி !
சக பதிவரின் சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் மறைவு குறித்த செய்தி அறிந்து மனம் வாடுகிறது,
பதிலளிநீக்குஅன்னாரது ஆத்மா இளைபாருதலுக்காக இறைவனை பிரார்த்திக்கின்றேன்,அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலியை உங்களின் தளம் வாயிலாக சமர்பிக்கின்றேன்.
மிக மிக மிக மிக அதிர்ச்சியான செய்தி. அவர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குதினம் தினம் பதிவுகள் எழுதி நம் அனைவருக்கும் பல ஆன்மீகத் தகவல்களைத் தந்தவர் திருமதி இராஜராஜேஸ்வரி. அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகளும்....
பதிலளிநீக்குமணிராஜ் ஜகமணி வலைத் தளத்தில்
பதிலளிநீக்குதிருமதி ராஜேஸ்வரி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்
என்னும் செய்தி கேட்டு வாடினேன்.
கடந்த பல ஆண்டுகளாக, ஒவ்வொரு நாள் அதி காலையிலும்
அவரது தளத்திற்குச் சென்று அங்குள்ள செய்திகளைப் படிப்பதும்
பாடல்களைப் பாடுவதுமே எனது வழக்கமாக இருந்தது. சில மாதங்களாக அவரது தளத்தில் இடுகை ஒன்றும் இல்லையே என்று நினைப்பு இருந்து வந்த நேரத்தில், இப்படி ஒரு செய்தி எனது நெஞ்சினை கனக்கச் செய்தது. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஆன்மீக உலகில் அவர் அன்னை எனத் திகழ்ந்தார். அவர் செய்த பணியினை அவரது செல்வங்கள் தொடர அன்னை அருளட்டும்.
சுப்பு தாத்தா.
தினந்தோறும் பதிவுகள் வழங்கியவர்..
பதிலளிநீக்குநல்ல பல ஆன்மீகத் தகவல்களைத் தந்தவர்..
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களது ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.
மதிப்புக்குரிய பதிவர் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களின் மறைவுபற்றி அறிந்து அதிர்ந்தேன். மனமார்ந்த அஞ்சலிகள்.
பதிலளிநீக்குபதிவர் திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களின் அறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி
பதிலளிநீக்குதிருமதி இராராவின் மறைவுச் செய்தி அறிந்ததும் அவர் எண்ணைத் தொடர்பு கொண்டு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன் திருமதி இராராவை நான் ஜீனியஸ் என்றே அழைப்பேன் அவரது நினைவுகள் நிலைக்கும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவர்கள் பற்றி அறியாததால் இனி அறிய முற்படுவேன்
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு, அம்மா திருமதி ராஜேஸ்வரி அவர்களின் மறைவுக்கு எம் ஆழ்ந்த அஞ்சலி.தொடருங்கள்.
பதிலளிநீக்குதிருப்பதி மகேஷ் அவர்களின் பதிவுகளைப் படிக்கையில் உண்மையிலேயே பிரமிப்புதான். சாளையக்குறிச்சி வெற்றிவேல், புதுகை ஜெயசீலன் ஆகியோர் பதிவுகள் சென்று பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குஆன்மீகப் பதிவர் திருமதி இராஜ ராஜேஸ்வரி மறைவை உங்கள் பதிவின் மூலம்தான் முதன்முதல், தமிழ்மணம் வழியே தெரிந்து கொண்டேன். அதிர்ச்சியான செய்தி. அன்னாரது ஆன்மா அமைதி அடையட்டும்.
பதிவர் இராஜேஷ்வரி அம்மாவின் பதிவுகளை நானும் படித்திருக்கிறேன் ஐயா.அவர்களின் ஆத்மாக்கு அஞ்சலி.
பதிலளிநீக்குதிருமதி. ராஜராஜேஸ்வரி அம்மாள் அவர்களின் ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குதங்களது பதிவர்களின் அறிமுகம் சிறப்பு வாழ்த்துகள்.
ராஜராஜேஸ்வரி அம்மா அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிலளிநீக்குபதிவர் அறிமுகம் சிறப்பு!
சகோதரி இராஜராஜேசுவரி அவர்களின் இழப்பு ஈடு செய்ய இயலாதது.
பதிலளிநீக்குஅவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கின்றேன்
வணக்கம்
பதிலளிநீக்குதிருமதி ராஜாஜேஸ்வரி அம்மாவின் ஆன்மா சாத்தியடைய பிராத்திப்போம்... தாங்கள் சொல்லி பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கயல் விழி என்று ஒரு முன்பு பெண் எழுதுவார் அவரும் மகேஷும் நண்பர்கள் காமெடியாக எழுதுவாங்க
பதிலளிநீக்குமஹேஷ் வெற்றிவேல் இருவரும் நான் அறிந்த பதிவர்கள் .ஜெயசீலன் புதியவர் தொடர்கின்றேன் அவரது வலைப்பூவையும்
இராஜேஸ்வரி அக்கா அவர்கள் தொடர்ந்து தவறாமல் எனது வலைபதிவுகளுக்கு வருகை தந்து பின்னூட்டமிடுவார் ..ரொம்ப அன்பானவங்க ..அவரது இழப்பு அதிர்ச்சியான தகவல் கோபு ஐயா வலைப்பூவிலும் பார்த்தேன் :( எனது அஞ்சலிகள் .அன்னாரது ஆன்ம சாந்திக்கு பிரார்த்திப்போம்
பதிலளிநீக்குமிகவும் கவலையான செய்தி.
பதிலளிநீக்குவருந்துகிறேன்.
அறிமுகங்களைக் கண்டேன். அருமை. இராஜராஜேஸ்வரி அவர்களின் மறைவு பேரிழப்பு. அவரது எழுத்துக்களால் என்றும் அவர் நம்முடன் இருப்பார்.
பதிலளிநீக்குராஜியின் மறைவு அதிர்ச்சி. ஹ்ம்ம்.
பதிலளிநீக்குதிருப்பதி மஹேஷ் என் வலைத்தளம் படித்துப் பின்னூட்டமிட்டபோது அவரது பதிவு சென்று படித்து ஆச்சர்யமுற்றேன். பாசிட்டிவ் மனிதர். மற்றவர்களையும் படிக்கிறேன்
நன்றிகள்....உங்கள் பார்வையில் பட்ட பதிவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஆழ்ந்த இரங்கல்கள்....
பதிலளிநீக்குதம 4
மனத்திற்கு மிகவும் வருத்தமான செய்தி ...அருமையான செய்திகளை பகிர்ந்தவர் இன்று நம்மிடம் இல்லை .. ...
பதிலளிநீக்குநான் வலைப்பூ ஆரம்பித்த பொது ,அடிக்கடி வந்து கருத்துரை தந்த திருமதி .ராஜேஸ்வரி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி (:
பதிலளிநீக்குநான் வலைப்பதிவு தொடங்கி முதல் பதிவை இட்டவுடனே அழையாமலே வந்து கருத்திட்டவர் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்கள். அவர் மறைந்து விட்டார் என்பதை அறிந்து திகைக்கிறேன்! உண்மையிலேயே வேதனையான செய்தி!
பதிலளிநீக்குநல்லது எங்கே இருந்தாலும் போற்றி ஊக்குவிப்பதல்லவா நல்லாசிரியனின் ஆதாரமான பண்பு? அதனைத் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வருகிறீர்கள். - இராய செல்லப்பா.
பதிலளிநீக்குவெகுநாளாக நண்பர் விஜூவும், சிலவாரங்களாக தங்கை மைதிலியும் எழுதவில்லை. இருவருமே மிக அரிய படைப்புகளைத் தந்தவர்கள் என்பதால் கவலையாக உள்ளது. இவர்களைப் போலும் நல்ல படைப்பாளிகளை உற்சாகப்படுத்தவே இந்தத் தொடர்பதிவு உதவுமென்று நினைத்தேன். உங்களைப் போல் இதைப் புரிந்து தொடர்ந்தவர்களால் ஓரளவு பயன் கிடைத்து வருகிறது. ஆனால் இன்னும் பலரும் தொடரவேண்டும் தொடர்வோம்.
பதிலளிநீக்கு