செவ்வாய், 3 மார்ச், 2015

ஆபத்துக்குப் பாவம் இல்லைதான் என்றாலும், இது தவறு....


 கோபி, ஒடிஸா மாநிலத்தில் ஜெகத்சிங்க்பூர் அருகே, பிஜாங்கிலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிபவர்.  5 மருத்துவர்கள் பணி புரிய வேண்டிய அங்கு, 3 மருத்துவர்கள் மட்டும் உள்ளதால், மருத்துவமனையில் மருத்துவர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டுதான் மருத்துவம் பார்க்கிறார்கள். இருந்தாலும், கடந்த வாரம் பௌலாங்க் எனும் கிராமத்தைச் சேர்ந்த அமிதா என்பவர் ஒரு ஆண் குழந்தையைப் பெற்ற போது அவருக்கு மருத்துவ உதவி வழங்க அச்சமயம் அங்கு மருத்துவர் இல்லை. ஆனால், திறமை வாய்ந்த ஒரு செவிலித்தாய், அச்சமயம் அங்கு இருந்ததாலும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லாததாலும் பிரச்சினை இல்லாமல் அமிதாவின் பிரசவம் நடந்தது. 


ஆனால் அதன் பின் ஏற்பட்ட, ரத்தப் போக்கு, தனியே தையல் போடக் கூடிய தைரியத்தை அவரிடமிருந்து அபகரித்தே விட்டது.  செய்வது அறியாது திகைத்து நின்ற அவருக்குத் தைரியம் சொன்ன கோபி, அத்துடன் இல்லாமல் அவருடன் சேர்ந்து தைத்து (அவரே தனியாகத் தையல் போட்டதாகவும் சொல்லப்படுகிறது!) எப்படியோ ரத்தப் போக்கை நிறுத்தி, அவரின் உயிரைக் காப்பாற்ற உதவியிருக்கிறார். ஆபத்தைத் தவிர்த்து, அமிதாவின் உயிரைக் காப்பாற்றிய கோபியை அப்போது எல்லோரும் பாராட்டினாலும், துப்புரவுத் தொழிலாளியின் இச் செயலுக்கு எதிராக அமிதாவின் வீட்டார்களே மறு நாள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் புகார் கொடுத்து விட்டார்கள். அதன்பின், அமிதாவைப் பரிசோதித்த மருத்துவர் கொடுக்கப்பட்ட சிகிச்சையும், இடப்பட்டத் தையலும் சரியாகத்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி அமிதாவின் உறவினர்களிடம் பயப்பட ஒன்றுமில்லை என்று தைரியம் அளித்திருக்கிறார். 

இறையருளால் கிருமித் தொற்று எதுவும் அமிதாவுக்கு ஏற்படாமல் இருந்தால் சரி. தனக்கு எதிரான நடவடிக்கைக்குப் பயந்து கோபியும், செவிலித்தாய் தான் தையலிட்டார் என்றும், தான் அவருக்கு உதவி மட்டுமே செய்தேன் என்றும் சொல்லி இருக்கிறார். எனவே கோபிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லைதான்.  ஆனாலும், இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க ஒடிசா மாநில மருத்துவத் துறை தேவையான மருத்துவர்களை அச் சுகாதார மருத்துவமனைக்கு அனுப்பி மீண்டும், கோபி இது போல் ஆபத்துக்காத்தானாக மாறி ஒரு பிரசவம் பார்க்கவோ, தையலிடவோ, அறுவைச் சிகிச்சை செய்யவோ வேண்டிய சூழல்கள் ஏற்படாமல் தவிர்ப்பார்கள் என்று நம்புவோம். இது போன்று எத்தனை கிராமங்களோ?! இந்தியா வல்லரசு நாடாகிவிடும்?!

பின் குறிப்பு:  அடுத்த பதிவு ஆவியின் குறும்படத்தில் எங்களின் அனுபவம்.  இன்னும் எழுதி முடிக்காத காரணத்தால் அடுத்த பதிவு.

படங்கள் : இணையம்.

38 கருத்துகள்:

  1. அப்பப்பா...நினைக்கவே பயமா இருக்கே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரி! மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்! சகோதரி!

      நீக்கு
  2. ///துப்புரவுத் தொழிலாளியின் இச் செயலுக்கு எதிராக அமிதாவின் வீட்டார்களே மறு நாள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் புகார் கொடுத்து விட்டார்கள்.///

    நல்லது செய்து உயிரை காப்பாற்றியவர்கள் மீதே புகாரா? இதனால்தான் பலபேர் உதவி செய்யவே முன் வரமாட்டேங்கிறார்கள்.. உயிரை காப்பாற்றியவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு அதன் பின் அவர்கள் சிகிச்சையில் தவறு ஏதும் இருந்தால் அதை சரி செய்ய ஏற்பாடு செய்யவேண்டும் அதுதான் நியாயம் அதைவிட்டு விட்டு குற்றம் சொல்வதாக நியாயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே! ஆனால் ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம்தான் காரணமோ?!! மிக்க நன்றி தமிழா!

      நீக்கு
  3. பட்டறிவு இருப்பினும் பொறுப்புணர்வு வெளிப்படினும் துறை சார் அறிஞர்கள் கையாள வேண்டிய செயலை அடுத்தவர் கையாள முற்பட்டால் ஆபத்து

    சிறந்த விழிப்புணர்வுப பதிவு

    பதிலளிநீக்கு
  4. மேலை நாடுகளில் அநேக பிரசவங்கள் அனுபவம் மிக்க செவிலித்தாய் மூலமாகத்தான் பார்க்கப்படுகிறது. அவர்களை மிட் வொய்ஃப் (mid-wife) என்று தான் அழைக்கிறார்கள்.

    நல்லதுக்கே காலம் இல்லை என்று சொல்லுவார்கள். அது இவர்களின் விஷயத்திலும் உண்மையாகி விட்டது.

    குறும்படத்தில் நடித்த அனுபவத்தை சீக்கிரம் எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறேன். இன்னும் நான் அந்த குறும்படத்தை பார்க்கவில்லை. விரைவில் பார்த்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம் அங்கு நல்ல பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இங்கு அப்படி எல்லோரும் இல்லையே!

      மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  5. உதவினாலும் பிரச்சனை தான் இந்தக் காலத்தில்... முதலில் சந்தேகப் பிசாசு வரும்...

    பதிலளிநீக்கு
  6. பிறகு விரிவாக பேசுகிறேன் இப்போதைக்கு தம +1

    பதிலளிநீக்கு
  7. //..துப்புரவுத் தொழிலாளியின் இச் செயலுக்கு எதிராக அமிதாவின் வீட்டார்களே மறு நாள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்து விட்டார்கள்..//

    சட்டம் - தர்மம் இவை இரண்டுக்கிடையே நல்லது செய்து உயிரை காப்பாற்றியவர் சிக்கிக் கொண்டாரோ!..

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்
    அண்ணா.

    ஒரு வரை காப்பாற்றினால் இந்த காலத்தில் பல பிரச்சினைகள் உருவாகுவது நிஜந்தான்... அனுகூலம் பிரதி கூலம் என்ற வார்த்தைக்கு கருத்து தெரியாத காலம்... பகிர்வுக்கு நன்றி த.ம 3
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறுகதைப்போட்டியின் வெற்றியாளர்கள்..-2015:                         

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தம்பி ரூபன் தங்களின் கருத்திற்கு!

      நீக்கு
  9. அனுபவத்தால் தாதியாக செயல்பட்டதைப் பாராட்டத்தான் வேண்டும்

    பதிலளிநீக்கு
  10. //கோபி இது போல் ஆபத்துக்காத்தானாக மாறி ஒரு பிரசவம் பார்க்கவோ, தையலிடவோ, அறுவைச் சிகிச்சை செய்யவோ வேண்டிய சூழல்கள் ஏற்படாமல் தவிர்ப்பார்கள் என்று நம்புவோம்.
    //

    நம்புவோம் அதானே வாழ்க்கை .... ஆனா அரசு செய்யுமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜா வாங்க மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்! நம்புவோம்! வேற்?

      நீக்கு
  11. இந்தியா வல்லரசு நாடு என பீற்றிக் கொ(ல்)கிறோம் மானக்கேடு.
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  12. சமயோசிதமாக, காலத்தே உதவி செய்தவரின் தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள அய்யா,

    ஆபத்துக்குப் பாவம் இல்லைதான் என்றாலும், இது தவறுதான் என்பதும் உண்மைதான். இருந்தாலும் சில அவசர காலத்தில் உடனடியாக செய்ய வேண்டியவற்றை உயிரைக் காப்பாற்ற உடனே செய்ய வேண்டியதுதான் மனிதாபிமான செயலாகும். அதைத்தான் செவிலியரும் கோபியும் செய்திருக்கிறார்கள். ‘பாவத்திற்கு உழுத மாட்டைப் பல்லைப் பிடிச்சுப் பார்த்தானாம்’ என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வந்தது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  14. காலத்தே செய்த உதவியை பாராட்டத்தான் வேண்டும்

    பதிலளிநீக்கு
  15. அவரின் செயல் பாராட்டப்பட வேண்யிதே. அனுபவக்கல்வி போல் கற்றத்தர பிற ஆசான் தேவையில்லை. அந்த நேரத்தில் வேண்டியது முதல் உதவியே,,,,,,,,,,,,,,,, பிறகு தான் அனைத்தும். இந்த செயல் செய்தது யார் என தெரியாமல் இருந்து இருந்தால் சரியாகத்தான் செய்யப்பட்டது என்பர். தெரிந்த பின் தவறு என்பது, மனித மனம் அப்படி.

    பதிலளிநீக்கு
  16. அன்றே கருத்துரை அளித்திருந்தேன் காணவில்லை ஏனோ?.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே! தங்கள் கருத்துரை காணாமல் போனதற்கு வருந்துகின்றோம்? இங்கு பதிவாகி இருந்ததா? எப்படி போனது தெரியவில்லையே நண்பரே! பார்க்கிறோம்....

      நீக்கு
  17. உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்னும் இடத்தில் எதுவும் தவறில்லைதான்.
    ஆனால் சம்பந்தப்பட்டவர்க்கு ஏதும் நேர்ந்தால் தன்னை உண்டு இல்லை என்றாக்கிவிடுவார்களே என்ற தயக்கம் இன்றிச் செயல்பட்ட அந்தப் பெண்மணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    நன்றி ஆசானே!

    பதிலளிநீக்கு
  18. நல்லது செய்ஞ்சாலும் குற்றமாய்யா :)

    பதிலளிநீக்கு
  19. எதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டு நில்லாமல் மனித நேயத்தோடு செய்த உதவியை பாராட்டவே வேண்டும். இந்த நிலைக்கு காரணமான அரசை தண்டிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு