அவிஜித் ராய் அவரது மனைவி ரஃபீதா அஹமது பன்னா
இரத்தத்தில் குளித்து, தரையில் விழுந்து கிடக்கும் அவிஜித் ராய்,
உடலெங்கும் சிதறிய இரத்தத்துடன், உதவிக்காகக் கெஞ்சும் அவரது மனைவி “ரஃபீதா அஹமது
பன்னா” – இதைக் கண்டு பதறிப் போகும் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் எண்ணம், “இறைவன்
பெயரால் நடத்தப்படும் இது போன்ற கொலைகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், ஒன்று
இறைவனைப் பற்றியோ, மதங்களைப் பற்றியோ பேசாமலோ, எழுதாமலோ இருக்க வேண்டும். இல்லையேல்,
அப்படிப் பேசவோ எழுதவோ வேண்டியச் சூழல் வந்தால், பிரச்சினைகள் வராதவிதத்தில்
கவனமாகக் கையாண்டு பேசியும், எழுதியும், அவர்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள
வேண்டும்,” என்பதாகத்தான் இருக்கும்.
பங்களாதேஷில் பிறந்து,
அமெரிக்காவின் குடியுரிமையுடன் அங்கு வாழ்ந்து வரும் அவர் பங்களாதேஷில், ஒரு
புத்தகக் கண்காட்சியில் பங்கெடுக்க வந்த போதுதான் இப்படிக்
கொல்லப்பட்டிருக்கிறார். புத்தகங்களிலும்,
பதிவுகளிலும் வந்த அவரது கருத்துக்கள், மதத் தீவிரவாதிகளின் எதிர்ப்பை மட்டுமல்ல,
அவர்களது கொலை மிரட்டலையும் தேடித் தந்திருக்கிறது. அதைப் பொருட்படுத்தாமல், தன் சொந்த நாட்டிற்கு
வந்ததால் தான் அவருக்கு இந்தக் கதி. இதை எல்லாம்
காணும் எழுத்தாளர்கள், மேற் சொன்ன படிச் சிந்தித்துத் தங்களை மாற்றிக்
கொள்ளாவிட்டால், அவர்களுக்கும் அபிஜித்ராய்க்கு ஏற்பட்டது போன்று ஏற்படலாம் எனும்
மிரட்டலும் இச்சம்பவத்திற்குப் பின்னணியில் உண்டுதான். ஆனால், எழுத்தாளர்களைக்
கொன்றாலும் அவர்களது எழுத்துக்கள் சாகாமல்
உயிர் வாழும் என்பதுதானே உண்மை!
தஸ்லிமா நஸரீன் ஹுமாயூன் ஆசாத்
சுதந்திரமாக
எழுதுபவர்களுக்கு, பங்களாதேஷ் வாழத் தகுந்த நாடல்ல என்று தஸ்லிமா நஸ்ரின் உட்பட பல
எழுத்தாளர்களும் கூறியிருக்கிறார்கள். “முக்தோமன”
எனும் வலைத்தளத்தை நடத்தும் அவிஜித், “பிஸ்வாசர் வைரஸ்” (மத நம்பிக்கையின் வைரஸ்) “சூன்யோ
பேகே”, “மஹா பிஸ்வா” (சூன்யத்திலிருந்து பிரபஞ்சத்தை நோக்கி) எனும் புத்தகங்களை
எழுதி எல்லோரது பாராட்டையும் பெற்றவர். ரகமாரி.காம்
எனும் இணையதள புத்தகக் கடையிலிருந்து, மத தீவிரவாதிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து,
அவரது இவ்விரு புத்தகங்களும் கடந்த வருடம் நீக்கப்பட்டது. கொலை மிரட்டல் இருந்தும்
அதைப் பொருட்படுத்தாமல் அவிஜித் தன் மனைவியுடன் இப்புத்தகக் கண்காட்சிக்கு வந்தது
எல்லோருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு இது போல் ஒரு புத்தக்க்
கண்காட்சியின் போதுதான் பங்களாதேஷின் பிரபல எழுத்தாளர் “ஹுமாயூன் ஆசாதும்
தாக்கப்பட்டு உயிரழந்தார். இப்படி எழுத்துச் சுதந்திரம், மதத் தீவிரவாதத்தால்
விழுங்கப்படும் நிலை பங்களாதேஷ் போன்ற சில நாடுகளில் இக்காலகட்டத்திலும் ஒழியாமல்,
காட்டுத் தீ போல் உலகெங்கிலும் பரவிக் கொண்டிருப்பதை நினைக்கையில், எதிர்காலத்தில்
எழுத்துலகத்தை இருள் கவ்வி விடுமோ என்ற பயம் வளர்கின்றது. அன்பையும், கருணையையும்,
பக்தியையும் வளர்க்க வேண்டிய மதம் இப்படி வெறுப்பையும், விரோதத்தையும் வளர்த்து,
கொலைகளில் சிக்கி உயிரழக்கும் இந் நிலை மாற எல்லாம் வல்ல இறைவன் தான் ஒரு வழி
காண்பிக்க வேண்டும்.
படங்கள்:நன்றி: கூகுள்
மற்ற நாடுகளில் நாத்திகராய், இருப்பது எளிது. ஆனால் இஸ்லாமியர் பெரும்பான்மையான நாடுகளில் கத்திமேல் வாழ்வது போன்றதே. தற்போது நம் நாட்டிலும் இது போன்ற ஜாதி மத அடையாளம் தாங்கிய கிறுக்குகள் பெருமளவில் வளர்ந்து வருகின்றனர் என்பது கவலையான செய்தி. மதவாதிகள் தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை இது போன்ற கோழைத்தனமான கொடூரங்கள் உணர்த்துகின்றன
பதிலளிநீக்குவாங்க தமிழானவன்....ஆம்! சரியான கருத்து! மிக்க நன்றி நண்பரே! தங்களின் அழகான கருத்திற்கு....முதல் வருகைக்கும்!
நீக்குஇங்கு மட்டும் என்ன வாழ்கிறது ?நம்ம பெருமாள் முருகனை பாடாய் படுத்தியவர்கள் என்ன மிதவாதிகளா ?
பதிலளிநீக்குத ம 1
அதைச் சொல்லுங்க ஜி! ரொம்பச் சரியே! மிக்க நன்றி ஜி! தங்கள் கருத்திற்கு...
நீக்குதங்களுக்கு எதிரான கொள்கையும் கோட்பாடும் கொண்டவர் என்றாலும் அவரை துன்புறுத்தக்கூடாது. என்பதே காந்திய கொள்கை. அதுவே நம் உண்மையான கலாச்சாரம். இதை பாரதத்தை தவிர வேறெங்கும் காண இயலாது. உயிர் தின்று வாழும் பிறவிகளை என்ன்வென்று சொல்வது.
பதிலளிநீக்கு// இதை பாரதத்தை தவிர வேறெங்கும் காண இயலாது. //
நீக்குஎன்ன சார் ...இப்படி சொல்லீட்டீங்க ........!!
நண்பர் அன்பே சிவம்.....என்னங்க நாம அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்று கற்பிக்கப்பட்டாலும் யதார்த்தம் அதுவல்லவே.....நம் நாட்டிலும்?!!
நீக்குதருமி சார் சொல்வது சரிதானே!
அடப்பாவமே.. அவர் அடிபட்டுக் கிடக்கின்றார் என்றல்லவா - நினைத்தேன்..
பதிலளிநீக்குஅந்த நாட்டில் இருந்து தான் - தாய் மொழிகளுக்காக தினம் உருவானது..
என்ன கொடூரம் இது.. மனம் பதைக்கின்றது..
அபிஜித் ராய் அவர்களின் ஆத்மா அமைதி பெறட்டும்..
அந்த நாட்டில் இருந்து தான் - தாய் மொழிகளுக்காக தினம் உருவானது// இந்தத் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா!
நீக்குமிக்க நன்றி தங்கள் கருத்திற்கும்!
காட்டு மிராண்டித்தணம் 6அறிவு இல்லாதவர்கனின் செயல். வேறென்ன சொல்ல முடியும்
பதிலளிநீக்குதமிழ் மணம் 2
மிக்க நன்றி நண்பர் ஜி! தங்கள் கருத்திற்கும், மொய் க்கும்!
நீக்குஆசானே வணக்கம்.
பதிலளிநீக்குதங்களது பதிவுகளைத் தொடர்ந்துதான் இருக்கிறேன்.
கருத்துரிமைக்காக எல்லா இடங்களிலும் மேற்கோளாகக் காட்டப்படும் வால்டேரின் வரிகள்தான் இவை,
“I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it.“
எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய சமூகப் பொறுப்பையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும் என்றாலும் கருத்திற்கு மறுப்பு கருத்தாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய இது போன்ற வன்முறையில் ஈடுபடுவதைக் காணும் போது..............................
நெஞ்சம் பதைபதைக்கத்தான் செய்கிறது.
படக்காட்சி...........................
தாங்க முடியவில்லை.
உலகின் கவனத்தை இது போன்ற பல்வேறு செயல்களின் மூலம் காட்ட நினைப்பவர்கள் இறைவனின் பெயரால் இதைச் செய்வதுதான் கொடுமையிற் கொடுமை!
நெஞ்சுலுக்கும் ஒரு பதிவு ஆசானே!
த ம 3
மிக்க நன்றி ஆசானே! தங்களின் வலுவான கருத்திற்கு. அருமையான பின்னூட்டக் கருத்து.
நீக்குஇஸ்லாமிய நாடுகள் என்று மட்டுமில்லை, பத்திரிகையாளர்கள் - எழுத்தாளர்களுக்கு உலகம் முழுவதுமே ஆபத்தாகத் தான் உள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட ரஜநி திரணகம, பரநிருபசிங்கம் தேவகுமார், ராஷ்மி முகமது, றெலாங்கி செல்வராஜா, பாலநடராஜ ஐயர், இந்திகா பதினிவாசன் போன்றோரும், இலங்கை அரசாங்கத்தால் கொல்லப்பட்ட தாரகி சிவராம், மயில்வாகனன் நிமலராஜன், சுபாஷ் சந்திரபோஸ், செல்வராஜா ராஜீவர்ணம், ஐயாத்துரை நடேசன் என பல தமிழ் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களை தமிழ் கூறும் நல்லுலகம் பேசுவதும் இல்லை, எழுதுவதும் இல்லை. ...
பதிலளிநீக்குதமிழகம், இந்தியா உட்பட உலகம் முழுவதும் குறிவைக்கப்படும் எழுத்தாளர்களைப் பாதுகாக்கவும் அவர்களது குரல் வளையை நசுக்க நினைக்கும் பயங்கரவாத சக்திகளினை அழிக்கவும் நாம் இதுவரை என்ன செய்துள்ளோம்...
மிக வருந்தத்தக்கச் செயல்கள்! அதை இங்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! தங்களின் முதல் வருகைக்கும் மிக்க நன்றி! தொடர்கின்றோம் நண்பரே! தங்களையும்!
நீக்கு
பதிலளிநீக்குபதிவர்கள், படைப்பாளிகள் சிந்திக்க உதவும்
சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
அரசியல், சமயம் சார்ந்து எழுதுவோர்
சற்றுச் சிந்திக்க வேண்டும்
சவுக்கு (இணையதளம்) இற்கு
நடந்தது தெரியாதா?
படிக்க:
http://ta.wikipedia.org/s/4kq
மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு!
நீக்குபடத்தைப் பார்த்துத் திகைத்து விட்டேன்..என்ன ஒரு கொடுரம்! :(
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு! கொடூரம்!
நீக்குமத நம்பிக்கை அவரவர் உரிமை என்றாலும் அடுத்தவர் மதத்தை இழிவு படுத்தும் அவசெயலால் தங்கள் மதத்தின் நற்பெயரே பாழாக்கபடுவதை எல்லோரும் உணரவேண்டிய காலமாக இந்த கலிகாலம் விளங்குகின்றது - விளக்குகின்றது.
பதிலளிநீக்குஅருமையான பதிவு அவசியமான நேரத்தில்
வாழ்த்துக்கள்.
நட்புடன்
கோ
மிகச் சரியே நண்பரே! தங்களின் அழகிய கருத்திற்கு. ஆம் நம் சமூகத்தில் இறைவனின் பெயர் சொல்லி செய்யப்படும் இந்தச் செயல்களால் ஒரு மதத்தில் சொல்லப்படும் நற்கருத்துக்கள் கூட பின் தள்ளப்படுகின்றது.
நீக்குமிக்க நன்றி தங்களின் கருத்திற்கு!
அடக் கொடுமையே...
பதிலளிநீக்குஅன்பு, கருணை, பக்தி - இவையெல்லாம் என்னவென்றே அவர்களுக்கு தெரியாது...
அதைச் சொல்லுங்க டிடி! என்னத்தச் சொல்ல...மிக்க நன்றி டிடி! தங்களின் கருத்திற்கு!
நீக்குகொடுமை ஐயா
பதிலளிநீக்குதமிழ் நாட்டில் மட்டும் என்ன சுதந்திரம் வாழ்கிறது
தம +1
ஆம் நம் நாட்டிலும் இப்படித்தான்....வேறு என்ன சொல்ல. மிக்க நன்றி நண்பரே தங்களின் கருத்திற்கு!
நீக்குபடத்தைப்பார்க்கும் போது மனது மிகவும் கஷ்டபடுகிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு!
நீக்குஇனி எழுத்து சுதந்திர போராட்டங்கள் பெருமளவில் நடக்குமோ என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்கும்ம் அதுவும் நடக்க வாய்ப்பு இருக்கின்றது பின்னே இப்படி சமூகம் போனால்....
நீக்குமிக்க நன்றி சகோதரி!
கடவுளை கண்டுபிடித்தவன் முட்டாள்
பதிலளிநீக்குகடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி--நான் சொல்லலைங்க. பெரியார் சொன்னது.ஹ்ம்ம்ம்:(((
மிக்க நன்றி சகோதரி மைதிலி! தங்களின் கருத்திற்கு.....சரிதானே!
நீக்குபடத்தைப்பார்க்கும் போது மனது மிகவும் பதைக்கின்றது.இஸ்லாமிய நாடுகள் என்று மட்டுமில்லை, பத்திரிகையாளர்கள் - எழுத்தாளர்களுக்கு உலகம் முழுவதுமே ஆபத்தாகத் தான் உள்ளது.அருமையான பதிவு .
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி! தங்களின் கருத்திற்கு! ஆம் உலகம் முழுவதுமேதான்!
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குஅச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!, இவ் எழுத்தாளர்களுக்கு!!!.....பார்க்கின்ற பொழுது மிகுந்த அச்சம் எழுகிறது...! அவிஜித் ராய், உடலெங்கும் சிதறிய இரத்தத்துடன், உதவிக்காகக் கெஞ்சும் அவரது மனைவி ரஃபீதா அஹமது பன்னா மீது இரத்தச் சிதறல்கள்... கொடுரத்தின் மனிதத் தன்மையற்ற செயல்... கண்டு மனம் பதைபதைக்கிறது!
இறைவன் பெயரில்... மதத்தைச் சொல்லி... இறைவன் இல்லை என்பது இதிலிருந்து தெரியவில்லையா?
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
தஞ்சல் அறிவார் தொழில்.
நன்றி.
த.ம. 6
மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கும்! அதற்கு ஏற்ற குறள் ஒன்றை இங்கு பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குஇறைவன் கருணையும் காட்ட மாட்டான், ஒரு ***ம் காட்ட மாட்டான்...
பதிலளிநீக்குநம்மளும் "புதைக்கப் படவில்லை, விதைக்கப் படுகிறார்கள்." என போகிற போக்கில் அடிச்சு விட்டுட்டு போயிடுவோம்...
இனி எழுதுபவர்கள் தான் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து உயிரைக் காப்பற்றிக் கொள்ள வேண்டும்.., இல்லன்னா செவ்வாய் கிரகத்திலிருந்து எழுதலாம்..., அதுவும் முடியலன்னா வேற ஏதாவது தெரிஞ்ச வேலையைப் பாத்துக்கிட்டு உயிரோடு இருக்கலாம்...!!
ஹை! வாங்க மலர்வண்ணன்! எவ்வளவு மாதங்களாயிற்று! மிக்க மகிழ்ச்சி! நன்றி கருத்திற்கும். ஹஹஹ தங்களின் நகைச்சுவையை நாங்கள் ரசித்திருக்கின்றோம் இதோ இப்போதும் இந்தக் கருத்தில் கூட.....
நீக்குரொம்ப சந்தோஷம்....வாங்க வந்துக்கிட்டுருங்க மலர்!
மதவெறியினை என்றுதான் அவர்கள் விட்டு பொதுவில் எல்லாவற்றையும் விமர்ச்சிக்கும் நிலைக்கு வருவார்களோ தெரியாது
பதிலளிநீக்கும்ம்ம் நடக்குமா ?!! அதுவும் இந்த உலகில்....நடக்கும் என்று கனவு காண்பது ஒரு ஐடியல் உலகமோ....மிக்க நன்றி நண்பரே!
நீக்குபேஸ் புக்கில் பார்த்து திகைத்து விட்டேன். என்ன கொடூரம்....மதப்பித்து ஏறிப்போன (மதம்பிடித்து) மதவாதிகளை... என்ன சொல்றது...
பதிலளிநீக்குமிக்க ந்னன்றி சகோதரி! தக்னளின் கருத்திற்கு!
நீக்குமிகவும் கொடூரமான செயலாக இருக்கிறது! எழுத்துச்சுதந்திரம் இல்லாத நாட்டில் இருப்பது மிகவும் வேதனையான விஷயம்!
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பர் சுரேஷ்! தங்களின் கருத்திற்கு!
நீக்குஇன்றுள்ள அரசியல் சூழ்நிலை மதவெறிக்கே வித்திடுகிறது !எழுத்து சுதந்திரம் என்ப தெல்லாம் இனி அரிதே!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்!
நீக்குஎழுத்தாளர்களின் கருத்துக்கு உடன்பாடில்லை என்றால், வன்முறை மூலமாகத்தான் அந்த எழுத்தாளருக்கு பதில் கூற வேண்டும் என்றால், எழுத்தாளார்களிடமிருந்து வித்தியாசமான சிந்தனைகளை எதிர்பார்க்க முடியாது.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! மிக நல்ல கருத்துப் பகிர்தல்! மிக மிகச் சரியெ! மிக்க நன்றி!
நீக்கு
பதிலளிநீக்கு"சுதந்திரமாக எழுதுபவர்களுக்கு, பங்களாதேஷ் வாழத் தகுந்த நாடல்ல என்று தஸ்லிமா நஸ்ரின் உட்பட பல எழுத்தாளர்களும் கூறியிருக்கிறார்கள்."
ஆசானே!
வளர்ந்த நாடான பிரான்சு தேசத்தில் நடந்ததை ,
சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வினை (Je suis charlie) நினைவுக்கு கொண்டு வந்தது இந்த பதிவு!
மதம் என்பது மாண்பினை தர வேண்டும்
வதம் செய்யாது மகிழ்வினை பெற வேண்டும்!
எழுத்துக் சுதந்திரம் தொழுகை வடிவில் எழுகை பெற வேண்டும்.
நட்புடன்,
புதுவை வேலு
இது மதவெறியர்கள் இருக்கும் எந்த நாட்டிலும் நடக்கும் ஒன்றுதான் இல்லையா ஐயா! அதைப் பற்றித் தாங்கள் எழுதலாமே ஐயா!
நீக்குமிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் தகவலிற்கும்!
மதவெறியர்களுக்கு மனித உயிர் என்றால் அத்தனை எளிதாகிவிட்டதா? எந்த மதத்தில் இப்படி மனித உயிரை பலவாங்கச்சொல்லியிருக்கிறது? சிந்திக்கும் திறன் கொண்ட மனிதர்களே இப்படி என்றால் என்ன செய்வது?
பதிலளிநீக்குபடங்களைப்பார்த்துப் பதறிப்போனேன்.