கடந்த வருடம் டெல்லி மிருகக் காட்சி சாலையில், புலி சுதந்திரமாகத்
திரியும் வேலிக்குள் பலர் தடுத்தும் கேளாமல், குதித்த ஒரு மனிதர், புலியால்
கொல்லப்பட்ட ஒரு சம்பவத்தைப் பற்றிக் கேட்டு வேதனித்தோம். விலங்குகள்
அப்படித்தான். விவேகமுள்ள மனிதன் தான்
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சமாதானம் சொல்லி, சிறிது நாட்கள் அதைப்
பற்றிப் பேசினோம். இனி அப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என சில
தீர்மானங்களை, அது போன்ற மிருகக் காட்சிச் சாலையில் பணிபுரியும் ஊழியர்கள்
எடுக்கவும் செய்தார்கள். பின் அதை
எல்லோரும் மறந்தே போனோம்.
அது போல், வனவிலங்குகள்
சரணாலயத்தின் அருகில் வாழ்பவர்களும், மிகவும் ஜாக்கிரதையாகத்தான் வாழ்ந்து
வருகின்றார்கள். ஆனால், பெருகி வரும்
வனவிலங்குகளின் எண்ணிக்கையும், உள் வனத்திலும் கடந்து செல்லும் மனிதர்களின்
தொந்தரவால், மற்ற பாகங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் விலங்குகளுக்கு ஏற்பட்டதாலும்,
வனத்தை ஒட்டி வாழும் மனிதர்களும் அவர்களது கால்நடை மற்றும் குழந்தைகளும், வன
விலங்குகளால் தாக்கப்படுவதுண்டு. இடையில், உயிர் சேதங்களும் ஏற்படுவதுண்டு. அவையும்
இது போல் சில காலங்கள் பேசப்பட்டு பின் எல்லோரும் மறந்தே போகிறார்கள்தான்.
அப்படி எல்லோராலும் சில
காலம் பேசப்படுவேன் என்ற எண்ணமே இல்லாமல் கடந்த திங்கள் அன்று (09-02-2015) மாலை கேரளா,
வயநாடு, முத்தங்கா வன விலங்கு சரணாலயத்தை ஒட்டி உள்ள தன் கிராமத்திலிருந்து 5.30
க்கு தனியே நூல்புழா, மூக்குத்திக் குன்னு, குத்தூர் சுந்தரத்து பாஸ்கரன் தன் 62
வருட வாழ்வில் வனவிலங்குகள் தன்னைத் தாக்காததால், இனியும் தன்னைத் தாக்காது என்ற
தைரியத்தில் நடந்து போயிருக்கின்றார்.
இரவு வீடு திரும்பாததால், மறுநாள் காலை அவரது மகனும், கிராமத்தினரும்,
அவரைத் தேடி ஒற்றையடிப் பாதை வழியே செல்ல, ஓரிடத்தில் அவரது ஒரு செருப்பும்,
வேறொரு இடத்தில் அவரது அலைபேசியும் கிடைத்திருக்கிறது. அவர்களது தேடல்களில் ஓரிடத்தில்
ஒரு கால் மட்டும் இருப்பதைக் கண்டு நிலைகுலைந்து போனார்கள். அதை அடுத்துள்ள எல்லா
இடங்களையும் அதன் பின்னும் தேடி இருக்கின்றார்கள். அங்கிருந்து செங்குத்தான ஒரு குன்றின் மீது
ஏறிப் பார்க்க அங்கு கண்டதோ அவர்களது மரணம் வரை அவர்கள் மனதை விட்டு அகலாத ரத்தத்தை
உறைய வைக்கும் ஒரு காட்சி!-பாஸ்கரனின் தலை பாகம் மட்டும் தரையில். மற்ற உடல் பாகங்களை
அப்பகுதியில் ஓரிருவர் கண்டதாகச் சொல்லப்பட்ட ஒரு புலி தனது உணவாக்கி இருந்தது.
முத்தங்கா வன விலங்கு சரணாலயத்தில் முதன் முறையாக ஒரு புலி மனிதனைக் கொன்று அவரது
உடலை உணவாக்கி இருக்கின்றது. வன விலங்குகளின் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள்,
அந்தப் புலியைக் குற்றம் சொல்லாமல் இருக்க ஏராளமான, வலுவானக் காரணங்களைச்
சொன்னாலும், ஒரு பாவமும் அறியாத பாஸ்கரனின் மரணம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
அந்தப் புலிக்கு கிராமத்தை ஒட்டி உள்ள அந்த வனவிலங்கு சரணாலயத்தில்
வாழ சுதந்திரம் இருக்கிறதோ, அதே போல் பாஸ்கரனுக்கும் வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டி
உள்ள கிராமத்தில் வாழ அதிகாரம் இருக்கின்றது.
மனிதரையும், விலங்கையும் காப்பாற்றி ஒருவருக்கொருவர் உணவாகாமல் இருக்க
அரசும், வன இலாக்காவும், இந்த சமூகமும் தான் தேவையானவற்றைச் செய்து அவர்கள்
இருவரையும் காக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதால் தானோ என்னவோ, சுல்தான்பத்தேரி
தாசில்தார், பாஸ்கரனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க அரசிடம்
வேண்டியிருக்கிறார். இது போன்ற சம்பவங்கள்
நடக்காமல் இருக்க அரசும், சமூகமும் என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து
இது போல் உயிர் சேதம் இனியும் உண்டாகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோம்.
பின் குறிப்பு 1: கீதாவின் “சாதி
பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா அம்மா” என்ற இடுகை இட ஒதுக்கீடுக்கு எதிரானது
என்று வாதித்தது போல், இவ் விடுகை வனவிலங்குகளுக்கும், சரணாலயத்திற்கும் எதிரானது
என்று பதிவர் நண்பர்கள் யாரும் வாதிக்க இடம் கொடுக்கக் கூடாது என்று மிகவும்
கவனத்துடன் எழுதப் பட்ட இடுகை இது. (பயந்து
கொண்டே! தோழி கீதாவே என்னிடம் சண்டைக்கு வரலாம்!!! சென்னையில் அவர்தானே எங்கள்
இடுகைகளைப் பதிவேற்றம் செய்பவர். அதனால், இந்தப் பதிவை அவருக்கு டிக்டேட் செய்யும்
போதே, அவர் என்னைத் திட்டிக் கொண்டேதான் டைப்பினார். “வரலாம்” இல்லை....வந்தே
விட்டது!!!)
பின் குறிப்பு 2: “சாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா அம்மா”
என்ற இடுகைக்கு வந்த பின்னூட்டக் கருத்துகளுக்கு, கூகுள் க்ரோமில் பிரச்சினை
ஏற்பட்டிருப்பதால், கூகுள் கணக்கு என்று மட்டுமே வருவதாலும், எங்கள் ப்ளாகர்
கணக்கு வராததாலும், பதில் கொடுக்க முடியாமல் இருக்கின்றோம். மட்டுமல்ல எந்தத் தளத்திலும் எங்களால்
பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. கூகுள் + ம் செய்து பகிர முடியவில்லை. அதனால்
அந்த இடுகைக்கான பதில்களை ஒரு இடுகையாக அடுத்துப் பதிவு செய்கின்றோம். தயவு செய்து நண்பர்கள் எங்களை மன்னிக்க
வேண்டித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இப்போது இட்ட இடுகைக்கும் எங்களால் பதில் கொடுக்க முடியுமா என்று
தெரியவில்லை. இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோர்ரிலும்
முயன்று பார்த்துவிட்டோம். முடியவில்லை. ப்ளாகரின் கூகுள் கணக்கு வரவில்லை. இடுகைகள் மட்டுமே இட முடிகின்றது. சரி செய்ய
முயன்று கொண்டிருக்கின்றோம்.
"காடேறி நாட்டை விரிவாக்கிய காலம் போய், நாடேறி காட்டை விரிவாக்கும் விலங்குகளின் காலம்" பதிவினை கண்ணுற்றேன்! சொல்லிய பாங்கு அழகு!
பதிலளிநீக்குகுறிப்பாக சமூகத்தில் உயிர்களுக்கு உகந்த பாது காப்பு அவசியம் வேண்டும் என்பதை
இந்த பதிவின் மூலம் தெளிவு படுத்தியுள்ளீர்கள் அதுவும்,
(09-02- 2015) அன்று கேரளா, வயநாடு, முத்தங்கா வன விலங்கு சரணாலயத்தை ஒட்டி உள்ள நூல்புழா, மூக்குத்திக் குன்னு, குத்தூர் சுந்தரத்து பாஸ்கரனின் துயர சம்பவமான,
புலியால் அடித்துக் கொள்ளப்பட்ட கொடிய நிகழ்வு என்னும் உண்மை சம்பவத்தின் மூலம்! தங்களது ஆதங்கத்தை, ஆலைச் சங்காக ஓங்கி ஒலிக்கச் செய்து இருக்கிறீர்கள்.
மனித உயிரின் மாண்பினை பாது காப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் இந்த பதிவை பார்த்தாவது உரிய நடவடிக்கை எடுப்பார்களே ஆயின் அவர்கள் சமூக அக்கறை மிகுந்தவர்களாக கருதப்படுவார்கள்.
இல்லையாயின் வன விலங்கைவிட மிகவும் கொடிய சிந்தை படைத்தவர்களாகவே
பார்க்கப் படுவார்கள். உயிர் இழப்பு ஈடு செய்ய முடியாதது! அதே வேளை இழப்பீடு என்ற பெயரில் நஷ்ட ஈடு தந்து விட்டு சரி என்று மெத்தனமாகவும் இருக்கக் கூடாது!
உடனடியாக இது போன்ற நிகழ்வுகள் இனி நிகழா வண்ணம் மக்கள் அரசு
சிக்கல் இல்லாது சிறந்து செயல் பட வேண்டும். இல்லையாயின், இது போன்ற நிகழ்வுகள் தொடருமேயாயின் ...
""காடேறி நாட்டை விரிவாக்கிய காலம் போய், நாடேறி காட்டை விரிவாக்கும் விலங்குகளின் காலம்" வருமேயாயின், உங்களுக்கு ஓட்டுப் போட வாக்குச் சாவடிகளுக்கு வன விலங்குகள் மட்டுமே வர வேண்டிய நிலை வரும்! சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பீராக!
ஆசானே! ஒரு சிறு விண்ணப்பம்!
தங்களது இந்த பதிவில்...." பெருகி வரும் வனவிலங்குகளின் எண்ணிக்கையும்" என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தோமேயாயின் வனவிலங்குகளின் எண்ணிக்கை அரிதாகிக் கொண்டே வருவதாக எனக்குத் தெரிகிறது. மேலும், சென்ற பதிவிற்கு வந்த பின்னூட்டங்களுக்கு , ஆராய்ந்தறிந்து மிகவும் நல்ல பதிலை நிச்சயம் தருவீர்கள் என்று எண்ணுகிறேன். நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கு! வருகின்றோம் தங்களின் பதிவிற்கு. அது தமிழ் எழுத்துருக்கள் இந்த வேறு கணினியில் சரியாக வருவதில்லை ஆதலால் வாசிக்க மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. எங்கள் கணினி சரியாக்க முயற்சி.
நீக்குவணக்கம்!
பதிலளிநீக்குஇன்றைய எனது பதிவு ""மாங்கல்ய(ம்) மந்திரம் " (சிறுகதை)"
படித்து கருத்துரை தருமாறு வேண்டுகிறேன்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
வருகின்றோம் தங்களின் பதிவிற்கு. அது தமிழ் எழுத்துருக்கள் இந்த வேறு கணினியில் சரியாக வருவதில்லை ஆதலால் வாசிக்க மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. எங்கள் கணினி சரியாக்க முயற்சி.
நீக்குத .ம .1
பதிலளிநீக்குபாவம் அந்த மனிதர் :( .விரிவான பின்னூட்டம் பிறகு வருவேன்
மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு!
நீக்கு//...இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசும், சமூகமும் என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து இது போல் உயிர் சேதம் இனியும் உண்டாகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோம்!..//
பதிலளிநீக்குநாமும் அவ்வாறே நம்புவோம்!..
பாஸ்கரன் அவர்களின் மரணத்திலிருந்து அவருடைய குடும்பத்தினர் மீண்டு வர வேண்டுகின்றேன்!..
மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு!
நீக்குமனதைக் கலங்கச்செய்யும் பதிவு.
பதிலளிநீக்கு//அந்தப் புலிக்கு கிராமத்தை ஒட்டி உள்ள அந்த வனவிலங்கு சரணாலயத்தில் வாழ எப்படிச் சுதந்திரம் இருக்கிறதோ, அதே போல் பாஸ்கரனுக்கும் வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டி உள்ள கிராமத்தில் வாழ அதிகாரம் இருக்கின்றது. மனிதரையும், விலங்கையும் காப்பாற்றி ஒருவருக்கொருவர் உணவாகாமல் இருக்க அரசும், வன இலாக்காவும், இந்த சமூகமும் தான் தேவையானவற்றைச் செய்து அவர்கள் இருவரையும் காக்க வேண்டும்.//
ஆமாம். அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு!
நீக்குமனிதன் காட்டுக்குள் என்று நுழைந்து காடுகளை அழிக்கத் தொடங்கினானோ... அன்றிலிருந்து இந்த வகையான அவலங்கள் ஆரம்பித்து விட்டது
பதிலளிநீக்குபசுமையை அழித்துக்கொண்டு இருக்கின்றான் விவசாயம் இல்லை இதற்க்கு அடிப்படை காரணம் மழை அவரவர்கள் இடத்தில் அவரவர் இருந்தால் எல்லாம் நலமே...
கில்லர்ஜி
தமிழ் மணம் 2
மிக்க நன்றி கில்லர் ஜி ஆம் மநிதன் சுய நல வாதிதான்.
நீக்குமிகவும் வேதனையான விஷயம். மிகவும் கொடூரமான மரணம். என்ன சொல்ல?
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குதங்களின் கருத்திற்கு!
வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்க நாள் குறைந்து கொண்டே வருகின்றது நண்பரே. காரணம் மனிதர்கள்தான்.
பதிலளிநீக்குநாம்தான் காட்டை அழித்து நகரங்களை உருவாக்கி, அதன் வாழிடங்களில் குறுக்கிட்டு வருகின்றோம். வேட்டையாடி அழித்து வருகின்றோம். எனவே மாற வேண்டியவர்கள் மனிதர்கள்தான்.
டெல்லி மிருகக் காட்சி சாலை விபத்தில் கூட, அப்புலி அம்மாணவரை தாக்கவே இல்லை என்று படித்தேன். மேலிருந்து பார்த்தவர்கள், அம் மாணவரைக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு கற்களை எறிந்ததால், கற்களிடமிருந்து, அம்மாணவரைக் காக்கவே, அவனைக் கவ்வி வேறொரு மறைவான இடத்திற்கு இழுத்துச்சென்றிருக்கிறது. மனிதனின் தோல் மென்மையானதால். பல் பதிந்ததாலும், பயத்தினாலுமே அவர் இறந்ததாகப் படித்தேன்.
தம +1
வனவிலங்குகள் குறைவது சரிதான் நண்பரே! ஆனால் ஒரு சீசனில் இவை இனப்பெருக்கம் செய்து பெருகும் போது அதைப் பாதுகாக்க வேண்டும். அதையும் அரசு செய்வதில்லை. மனிதன் சுயநலவாதி என்பது சரியே!
நீக்குஆம் அந்தப் புலியைக் குற்றம் . குற்றம் சொல்ல முடியாதுதான். நீங்கள் சொல்லி இருப்பது மிகவும் சரியே
நீக்குகாடுகளை அழித்தால் விலங்குகள் ஊரில் புகத்தான் செய்யும்! மேலும் விலங்குகள் குணம் கொன்று தின்பது நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! துணிச்சல் என்று மூடத்தனத்தில் செயல்பட்டால் பாதிப்பு நமக்கே!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ் நண்பரே தங்கள் கருத்திற்கு!
நீக்குச்சும்மா நச் பதிவு தம + 1
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கு!
நீக்குஅவர் பயந்து பயந்து தள்ளி விடும் போது, நினைத்தாலே உடம்பெல்லாம் நடுங்குகிறது...
பதிலளிநீக்குமற்றபடி 1 & 2 சகோதரியிடம் பேசி விட்டேன்... தீர்வு காண முயற்சிக்கிறேன்.... நன்றி...
ஆமாம் டிடி எவ்வளவு பயந்துருப்பாரூ அவரு. ஆனால் அவர் ரிஸ்க் எடுத்திருக்க வேண்டாம் என்றும் தோன்றுகின்றது இல்லையா ?
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு தேவை.... மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி அண்ணா.த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கு!
நீக்கு****சாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா அம்மா” என்ற இடுகைக்கு வந்த பின்னூட்டக் கருத்துகளுக்கு, கூகுள் க்ரோமில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதால், கூகுள் கணக்கு என்று மட்டுமே வருவதாலும், எங்கள் ப்ளாகர் கணக்கு வராததாலும், பதில் கொடுக்க முடியாமல் இருக்கின்றோம். மட்டுமல்ல எந்தத் தளத்திலும் எங்களால் பின்னூட்டம் கொடுக்க முடியவில்லை. கூகுள் + ம் செய்து பகிர முடியவில்லை. அதனால் அந்த இடுகைக்கான பதில்களை ஒரு இடுகையாக அடுத்துப் பதிவு செய்கின்றோம். தயவு செய்து நண்பர்கள் எங்களை மன்னிக்க வேண்டித் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.***
பதிலளிநீக்குநீங்க ஒவ்வொருவருடைய பின்னூட்டத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லனு நான் நினைக்கிறேன். உங்க நிலையில் இருந்து நீங்க அனுபவித்ததை பகிர்றீங்க. அது ஒரு சிலருக்கு ஆறுதல் தரலாம். இன்னும் ஒரு சிலர்ஆதை வேறு கோணத்தில் பார்க்கலாம். இதெல்லாம் ரொம்ப சாதாரணமாக எல்லோருக்கும் நடப்பதுதான். ஒரு சில நேரங்களில் விவாதிக்கிறவங்களுக்கு பதில் சொல்லுவது கஷ்டம். ஒருவருக்கு "யெஸ்" சொன்னால், இன்னொருவருக்கு "நோ" சொன்னதாக ஆகும். இருவருமே நல்ல நண்பர்கள் இருவரும் வேண்டும் என்கிற சூழலில் யாருக்கு "யெஸ்" சொல்வ்வதென்பது பிரச்சினை. :)
இதுபோல் சூழலில் நீங்க ஒருவருக்கும் பதில் சொல்லாமல் விட்டுவிடுவதில் தவறதுவும் இல்லை. அதற்காக வருத்தப் படவோ, மன்னிப்புக்கேக்க வேண்டிய அவசியமோ இல்லை என்பது என் கருத்து.
It is impossible to make everyone happy in the blog world or in the real life. Sometimes we just have to move on to next blog, imho. Take it easy!
ஒரு சில நேரங்களில் விவாதிக்கிறவங்களுக்கு பதில் சொல்லுவது கஷ்டம். ஒருவருக்கு "யெஸ்" சொன்னால், இன்னொருவருக்கு "நோ" சொன்னதாக ஆகும். இருவருமே நல்ல நண்பர்கள் இருவரும் வேண்டும் என்கிற சூழலில் யாருக்கு "யெஸ்" சொல்வ்வதென்பது பிரச்சினை. :)//
நீக்குவருண் வாங்க! சரிதான் நீங்கள் சொல்லுவது. எல்லோருமே எங்கள் இனிய நண்பர்கள் ஆனதால் தான், அப்படி ஆகிப் போனது. உங்கள் கருத்தை ஏற்கின்றோம். அதுவும் அந்த இறுதி வரிகள் மிகவும் உண்மையே!
Thanks a lot Varun...
பாவம்...
பதிலளிநீக்குஇப்படி ஒரு கோரச்சாவு..
தாங்கள் கூறியிருப்பது போல அரசுதான் இதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்...
பின்னூட்டப் பிரச்சினை விரைவில் தீரட்டும் துளசி சார் / கீதா மேடம்,
ம்ம்ம் ஆம் நண்பரே! சாவுதான்...ஆனால் அந்த மனிதரும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாமோ?! மிக்க நன்றி! நண்பரே!
நீக்குதாக்கப்பட்டவர் நிலை மிகமிகக் கொடுமையானது. மிகவும் வருந்துகிறேன்.
பதிலளிநீக்குவிலங்குகளுக்கு பசித்தால் யார்?, என்ன? என்று யோசிக்கத் தெரியாதே. எல்லாமும் உணவாகத்தானே தெரியும். அதனால் வந்த பிரச்சினைதான். ஆனால் நமக்குத் தெரியுமே, எங்கெல்லாம் போகலாம், எங்கெல்லாம் போகக் கூடாது என்று. வனவிலங்குகள் உள்ள பகுதியில் மனித நடமாட்டம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கடமை.
பதிவைப் படித்ததும் மனதில் வந்தது இதுதான்.
மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு!
நீக்குவிலங்குகள் தம்மை அடிமைப்படுத்த நினைக்கும் மனிதரை அடித்துவிடுவது இயல்புதான். மனிதரே மனிதரை அடித்துச் சாப்பிட நினைப்பதை என்ன சொல்வது? இதுபற்றி, “ஐந்து பெரிது, ஆறு சிறிது” எனும் கவிஞர் வைரமுத்துவின் கவிதையைப் படிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். நீங்களும் சொன்னது போல, இந்த உங்களின் பதிவிற்கும் உங்கள் தளத்தின் முந்திய பதிவிற்கும் தொடர்பில்லாதது போலவே, எனது இந்தப் பின்னூட்டத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை என்பதையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா
பதிலளிநீக்கு“மனுசனை மனுசன் சாப்பிடுறான்“டா! தம்பிப்ப பயலே – இது மாறுவதெப்போ? தீருவதெப்போ நம்ம கவலே!“ இதை, சகோதரி கீதா! உங்கள் மகனுக்குச் சொல்லி வையுங்கள். நன்றி, வணக்கம்.
மிகச் சரியான கருத்து ஐயா! ஆம் மனிதனும் சுய நலவாதி ஆகின்றான் . மனிதனை மனிதனே அடிப்பதும்...ஆம் மிக மகிய வேதனையான விஷயம். 6 அறிவு 6 அறிவை அடிக்கின்றது. பல சமயங்களில் 5 அறிவு 6 அறிவைக் காப்பாற்றவும் செய்கின்றது. என்ன ஒரு விந்தை இல்லையா அயா!
நீக்குகீதா: ஆம் ஆயா அதை நான் அடிக்கடி என் மகனிடம் சொல்லுவதுண்டு. நாங்கள் இருவரும் இது போன்ற பல விஷயங்கள் பேசுவதுண்டு ஐயா!
மிக்க நன்றி ஐயா!
இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசும், சமூகமும் என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து இது போல் உயிர் சேதம் இனியும் உண்டாகாமல் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோம்.//
பதிலளிநீக்குஆம் அவ்வாறே நடக்கட்டும் என நம்பி இருப்போம்.
மிக்க நன்றி சகோதரி தங்களின் கருத்திற்கு!
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குகாடேறி நாட்டை விரிவாக்கிய காலம் போய், நாடேறி காட்டை விரிவாக்கும் விலங்குகளின் காலம்!
மனிதரையும், விலங்கையும் காப்பாற்றி ஒருவருக்கொருவர் உணவாகாமல் இருக்க அரசும், வன இலாக்காவும், இந்த சமூகமும் தான் தேவையானவற்றைச் செய்து அவர்கள் இருவரையும் காக்க வேண்டும் என்ற தங்களின் கருத்து மிகவும் வரவேற்கப்படவேண்டியது.
சமீபத்தில் யானைகள்கூட மனிதர்களை மிதித்து கொன்ற செய்தி வந்திருந்தது.
நாட்டில் யானைகளுக்குகூட முகாம்கள் நடத்தப்படுகின்றன. மனிதர்கள் இன்னும் ‘முள்வேலி’ முகாமுக்குள் மூழ்கிக்கிடக்கின்ற அவலநிலை!
மாக்களைப்பற்றிக் கவலைப்படும் பொழுது... மக்களை மறக்கலாமோ?
நல்ல கருத்தை சொல்லியதற்குப் பாராட்டுகள்!
நன்றி.
நாட்டில் யானைகளுக்குகூட முகாம்கள் நடத்தப்படுகின்றன. மனிதர்கள் இன்னும் ‘முள்வேலி’ முகாமுக்குள் மூழ்கிக்கிடக்கின்ற அவலநிலை!
நீக்குமாக்களைப்பற்றிக் கவலைப்படும் பொழுது... மக்களை மறக்கலாமோ? //
ஆம்! நல்ல கருத்து. மிக்க நன்றி ஐயா!
மிருகங்கள் வாழ்ந்த இடத்தை மனிதன் சுயநலத்திற்காக ஆக்கிரமித்துக் கொண்டே போவதால் ...வந்தேறிகள் ஆன மனிதர்களைக் கடித்துக் குதற ஆரம்பித்து விட்டன !
பதிலளிநீக்குத ம+! காலையிலேயே போட்டாச்சே :)
வாங்க ஜி! சரியாச் சொன்னீங்க. அவர்கள் வழியில் நாம் புகும் சூழல் ஆகியதால்தானே. இப்படி! மிக்க நன்றி ஜி!
நீக்குஅசட்டு தைரியம்.
பதிலளிநீக்குஆம்! சரிதான் நண்பரே! மிக்க நன்றி நண்பரே!
நீக்குகொடுமையான விஷயம்.....
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட் ஜி!
நீக்கு